Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுக்கள் சரியான திசையில் செல்ல இந்தியாவின் தலையீடு அவசியம்!

Featured Replies

பேச்சுக்கள் சரியான திசையில் செல்ல இந்தியாவின் தலையீடு அவசியம்!:

கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்

'சிறிலங்கா அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் சென்றுவிட்ட போதிலும் அதில் ஒரு அங்குல முன்னேற்றம் கூட ஏற்படவில்லை" என கொழும்பு வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், "சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் மூலமாக எந்தவொரு தீர்வையும் எட்டுவதற்கான மனநிலையில் இல்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்விடயத்தில் இந்தியா தலையிட்டு முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் இந்தப் பேச்சுக்களை தொடர முடியாத நிலைமை ஒன்று ஏற்படும்" எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அமைச்சரிடம் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

"இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் எனக் கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவதற்கான நடவடிக்கைகளைத்தான் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது, காணி அதிகாரம் தரமுடியாது, பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என்றுதான் கூறிவருகின்றார்களே தவிர வேறு எதனையும் கூறுகின்றார்கள் இல்லை" எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அமைச்சருக்குத் தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்காவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பின் மத்தியிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்றிரவு சந்தித்துப் பேசினார். இரா.சம்பந்தன் தலைமையில் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அரசுடன் நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக குறிப்பாகவும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக பொதுவாகவும் இந்திய அமைச்சருக்கு எடுத்துக்கூறியது.

சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராஜா மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குகொண்டார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவல் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

'சிறிலங்கா அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்கள் தொடர்பாகவே இந்திய அமைச்சருக்கு முக்கியமாக விளக்கிக் கூறினோம். இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் சிறிலங்கா ஜனாதிபதியும் அமைச்சர்களும் பல உறுதிமொழிகளை பல சந்தர்ப்பங்களில் கொடுத்திருக்கின்றார்கள். பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலைத் தருவதாகக் கூறினார்கள். இப்போது இந்த பதின்மூன்றாவது திருத்தத்தின் மைனஸ், மைனஸ் கூட இல்லை என்ற நிலைதான் இப்போது காணப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி ஒரு வருடம் சென்றுள்ள போதிலும் ஒரு விடயத்தையிட்டுக்கூட நாம் இதுவரையில் எந்தத் தீர்வையும் எட்டவில்லை. இந்த நிலையிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்திருக்கும் அரசாங்கம் அதற்குள் நாம் வரவேண்டும் என வலியுறுத்துகின்றது. அது நிச்சயமாக காலத்தைக் கடத்துவதற்கான இடமே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே இவ்விடயத்தில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்கவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொண்டோம்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் ஏற்பாட்டில்தான் ஆரம்பமாகியது. எனவே இதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்று இந்தப் பேச்சுக்களை சரியான ஒரு பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையாயின் இந்தப் பேச்சுக்களை மேலும் தொடரமுடியாத நிலை ஏற்படும் என்பதை இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்" என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கள நிலைமைகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை இந்திய அமைச்சர் வரும்போது காணப்பட்ட அதேநிலைதான் இப்போதும் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது, மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பன போன்ற விடயங்களையும் கூட்டமைப்பு இந்திய அமைச்சருக்கு விளக்கியது.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தான் சந்திக்க இருப்பதாகவும் அப்போது இவை தொடர்பாக அவருடைய கவனத்துக்கக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

http://www.pongutham...a4-9339cc021050

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு முன் இந்திய வெளிவிவகாரக்கொள்கையில் மாற்றம் வரவேண்டும். இல்லையேல் மீண்டும் .....???

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் வரை

அவர்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

சுரேஷ் பிறேமச்சந்திரனிடம், சம்பந்தனிடம் கொஞ்சக்காலம் மறைந்திருந்த இந்தியக் காட்டுமிராண்டிகளிடம் நக்கும் புத்தி மீண்டும் தலை தூக்கியுள்ளது!

அப்படியே போர்க்குற்ற விசாரணையும் சரியான திசையில் செல்ல உதவி கேட்டிருக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.