Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீல் 9,000 பொது மக்கள் கொல்லப்பட்டமையை நிராகரித்த இந்தியாவுக்கு வன்னிக்கொலையை விசாரிக்க அருகதையில்லை: சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ChampikaRanawaka_150MM.jpg

காஷ்மீரில் கொல்லப்பட்ட 9,000 சிவிலியன்கள் புதைக்கப் பட்ட இடம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இணங்காத இந்தியாவுக்கு எமது நாட்டில் பொமக்கள் கொல்லப்பட்டதாக கூறி சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கூறுவதற்கு எந்த அருகதையில்லையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு வரம்புமீறி செயற்பட்டு, பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய நிபுணர்களின் சபையின் ஏற்பாட்டாளர் ரொஷான் குணதிலகவினால் ஏற்பாடு செயப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் கற்றுக்கொள்ளாத பாடங்கள்' என்ற தலையங்கத்தினாலான கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளுடன் செய்துகொண்ட யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையால் நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடக்கம் இறுதிக் கட்ட யுத்த காலவரையிலான விடயங்கள் தொடர்பாக வி�ரணைகளை நடத்தி, அறிக்கை மர்ப்பிப்பதற்கான அதிகாரங்களை வழங்கியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.

இவ் ஆணைக்குழு சர்வதேச யுத்த சட்டங் களை அடிப்படையாகக் கொண்டு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை சிறப்பாக விவரணம் செய்துள் ளது.ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வரைய றையை மீறி, பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக சுயாதீன வி�ரணைகள் தேவையென்றும் படையினர் விசாரணை செய்யப்பட வேண்டுமென்றும், இலங்கையில் இனப்பிரச்சி னை இருப்பதாகவும், அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டுமென்றும் பௌத்தத்திற்கு முன்னுரிமை, பெரும்பான் மை இனம் சிறுபான்மையினருக்கு உரிமை களை வழங்குவதில்லை போன்ற பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

இவை எம் மீது சுயாதீன விசாரணை நடத்தவேண்டுமென்ற அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்திற்கு இடவதியை ஏற்படுத் திக்கொடுத்துள்ளது. அத்துடன் இப்பரிந்து ரைகள் தமிழ் இனவாதிகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் எம்மை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் சம்பந்தன், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேசத்திற்கு இடமளித்துள்ளது.

இப் பரிந்துரைகள் தொடர்பாக உள்ளக சுயாதீன விசாரணைகளை நடத்தவேண்டு மென இந்தியா, அமெக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் வலியுறுத்துகின்றன.

காஷ்மீல் 9,000 பொது மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்தவேண்டு மென்ற கோரிக்கையை நிராகத்த இந்தியா எவ்வாறு எம்மிடம் இதனை கோரமுடியும்?

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டுமெனத் தெவிக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 1,59,000 சிங்களவர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வெளிநாட்டில் உள்ள புலிகள் தொடர்பாக தகவல்களை ஆணைக்குழுவுக்கு வழங்கினோம். பரிந்துரைகள் கிடையாது. தற்போது எம்முன் இருப்பது இறுதி யுத்தத்தில் 40,000 சிவிலியன்கள் கொல்லப்பட்ட குற் றச்சாட்டாகும்.

இந்தப் பொய்யான குற்றச்சாட்டை சாட்சியங்களுடன் நிரூபிக்கவேண்டும். எனவே, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியில் வாழ்ந்த மக்கள் தொடர்பில் குடின மதிப் பீட்டைப் பெறவேண்டும். இதன் மூலம் எத்தனை பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

புலிகளோடு இணைந்து செயற்பட்டு இறந்தனர் என்பது தொடர்பில் அறியடியும்.

அத்துடன், புலிகளோடு இணைந்துசெயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செயப்பட்டு தண்டனைகள் வழங்கப் பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு நூற்றுக்கு 4 வீத மக்கள் பலமே உள்ளது. எமக்கு நூற்றுக்கு 90 வீத மக்கள் பலமுள்ளது. எனவே, கூட்டமைப்பின் இனவாதத்திற்கு அடிபணியாது ஓரணியில் திரளவேண்டுமென்றும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

-குளோபல் தமிழ் இணையம்-

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே...சம்பிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிஎன்றால் சிறிலங்கா குற்றம் செய்ததை ஒத்து கொள்கின்றதா ?

இந்திய படுகொலைகள், அதற்கான ஆதாரங்களை, ஒளிப்பதிவுகளை சம்பிக்க வெளியிடவேண்டும் !

இரண்டு கொலைகாரக் கும்பலையும் சர்வதேச நியமங்களுக்கமைய தண்டிக்க வேண்டும்.

இந்தியாவும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் யுத்த குற்றம் புரிந்துள்ளது அதற்காக இரு நாடுகளும் தண்டிக்கப்பட வேண்டியவையே ....

தீருடர்கள் பொலிஸ் உத்தியோகத்தில் இருக்கையில், யாரை யார் தண்டிப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.