Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரியாத புதிராக குடாநாட்டின் வேலை வாய்ப்பு

Featured Replies

புரியாத புதிராக குடாநாட்டின் வேலை வாய்ப்பு

அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் “யாழ் மற்றும் வடக்கில் புதிராக விளங்கும் தொழிலாளர் சந்தை” எனும் தலைப்பிலான பகிரங்க பொது மன்றம் ஒன்று யாழ் பொது நூலகத்தில் இந்த மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்றது. இதன் பிரதான ஆய்வாளரான கலாநிதி.மு.சர்வானந்தா, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஆய்வு கட்டுரை ஒன்றினை ஒன்லைன் உதயனுக்காக வழங்கியிருந்தார். இதிலிருந்து சில பகுதிகள் :

அரசாங்க வேலையே வேண்டும்!

தனியார் பொறியியலாளர் நிறுவனம் ஒன்று அண்மையில் சில வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பங்களை யாழ்ப்பாணத்தில் கோரியிருந்த போது, அதற்கு எதுவிதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில்,

மாவட்டச் செயலாளர் இமெல்டா சுகுமாரின் கருத்திற்கு அமைய, விவசாய திணைக்களம் யாழ்ப்பாணத்தில் உள்ள 100 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரியிருந்த போது, சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.

இது யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் தொழிலாளர் சந்தையில் காணப்படும் இயல்புக்கு மாறான விடயமாக உள்ளது. தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு வெறுப்பு காணப்படுகின்றமை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, இது ஒரு தேசிய அடிப்படையிலான வியாதியாகவே உள்ளது. இது தொடர்பில், 2009 ஆம் ஆண்டு பேராசிரியர். சிறி ஹெட்டிகே மற்றும் சிலரை உள்ளடக்கிய குழுவினால் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்விலிருந்து நாடெங்கிலும் உள்ள (வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக) இளைஞர்களில் 70% ஆனோர் பொதுத் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதனையே விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் வேலை வாய்ப்புக்கான அளவற்ற விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடம் இருந்தே அதிகமாக வந்து குவிந்துள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 26,000 இளம் விதவைகளின் வாழ்வாதாரத் தேவைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறைவான வாழ்வாதார சந்தர்ப்பங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் என்பன குடும்பத்திற்குள்ளேயான வன்முறை, சமூக பதட்டங்கள் மற்றும் குற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன.விசேடமாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராகவே இவை அமைகின்றன. அத்துடன் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்பது தொடர்பில் முறையான திட்டம் ஒன்று இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அரசாங்க வேலையை எதிர்பார்ப்பது என்பது "யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தில் ஒரு பகுதி" என வேலை தேடும் பட்டதாரிகள் சார்பில் பேசிய இராஜ்குமார் இங்கு தெரிவித்தார். அரசாங்கத்தினால் ஆளணி திட்டமிடப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் அதிக அளவிலான வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை வாய்ப்பு என்பவற்றிற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக பொதுத் துறை வேலை வாய்ப்பு மீதான அதீத விருப்பம் உள்ளது.

http://184.107.230.1...news_more&id=23

Edited by akootha

  • தொடங்கியவர்

தரம் குறைந்த கல்வி

மறுபுறத்தில், பேராசிரியர். பாலசுந்தரம்பிள்ளையின் கருத்திற்கமைய, இலங்கை நிர்வாக சேவைகளுக்கான (SLAS) ஆட்சேர்ப்புக்காக அண்மையில் நடத்தப்பட்ட திறன்காண் பரீட்சையில் தோற்றிய 269 பட்டதாரிகளில் ஒரு தமிழ் பட்டதாரி கூட இடம் பெறவில்லை.

தமது இயலுமைக்கு அப்பால் உள்ள பொதுத் துறையில் வேலை வாய்ப்பினை யாழைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற (Unemployment) மற்றும் தகுதி குறைந்த (Underemployment) வேலையில் உள்ள இளைஞர்கள் (குறிப்பாக பட்டதாரிகள்) தேடிக் கொண்டிருக்கின்றமையே இங்கு வியப்பாக உள்ளது. அத்துடன் வேலை வாய்ப்பினை பெற முடியாத வகையில் பட்டதாரிகளை வெளியேற்றுவதாக உள்ளூர் பல்கலைக்கழகங்களின் தீவிரமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டாகவும் இது உள்ளது.

அரசியல் யதார்த்தம் மற்றும் நிர்வாக பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் இந்த வேலையற்ற பட்டதாரிகள் இறுதியாக பொதுத் துறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பொதுச் சேவையின் மதிப்பீடுகள் மற்றும் தரங்கள் மேலும் வெறுமையாக்கப்படும். இதனால், பட்டதாரிகளின் பலவீனமான தரம் மற்றும் பொதுத் துறையின் பலவீனமான மதிப்பீடுகள் மற்றும் தரங்களின் ஊழல் நிறைந்த சக்கரம் செல்வாக்குமிக்கதாக மாறும். இது உள்ளூர் மட்டத்திலும், அதற்கு அப்பாலும் தவிர்க்க முடியாத வகையில் மோசமான ஆட்சி முறைக்கு காரணமாக அமைகின்றது.

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=23

  • தொடங்கியவர்

வடக்கின் அபிவிருத்தி அதிக வேலை வாய்ப்பினை தரவில்லை

விவசாயம் மற்றும் மீன் பிடியில் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், அதன் காரணமாக வேலை வாய்ப்புக்கள் பல உருவாக்கப்படவில்லை என பேராசிரியர்.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார துறையானது பாரிய எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் இயலுமை அற்றதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

60 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் மீண்டும் வேலை வாய்ப்பினை தேடி வரும் எண்ணிக்கை அதிகரிப்பதனால், வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கு குறைந்த வேலை என்பன யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=23

Edited by akootha

  • தொடங்கியவர்

வேலை வாய்ப்புக்களிற்கு ஒரு தடையாக உயர் சாதிக் கட்டமைப்பு

யாழ் குடாநாட்டில் வேறுபட்ட தொழில்களுக்கு மத்தியில் தொழிலாளர் நடமாட்டத்திற்கான நிறுவனஞ் சார் தடையாக சாதி அமைந்துள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மக்கள் புரியும் தொழிலின் அடிப்படையில் சாதி முறையானது அமைந்துள்ளது. உதாரணமாக, இந்துக் கோயில்களில் பூசகர்களுக்கான பணி ஒரு சாராருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து படிநிலை முறைமையில் உயர் சாதியாக இவர்கள் கருதப்படுகின்றனர். அதேவேளை, பனை மரங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் (கள் இறக்கல், பனம் பழம் மற்றும் தண்டினால் உருவாக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பனையோலைகளால் அலங்காரம் செய்தல், இன்னபிற) மற்றும் மீன் பிடி போன்ற தொழில்கள் இன்னொரு சாராருக்கு மட்டுமே உரியது என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தென் பகுதியிலும் இதே போன்ற சாதி அடிப்படையிலான தொழில்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, காலி மாவட்டத்தில் கறுவா மரங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில்களில் (கறுவாச் செய்கை, கறுவாப் பட்டை உரித்தல், இன்ன பிற) ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். பனை அபிவிருத்தி சபையின் தலைமைப் பதவிக்கு குறித்த ஒரு சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வர முடியும் என்ற அளவில் தொழில்சார் உரிமை காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தின் நிர்மாணத் துறையானது, யுத்தத்திற்குப் பிந்திய மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தியில் வளர்ச்சியடைந்து வரும் துறையாக உள்ளது. கொத்தனார்கள், தச்சு வேலையாட்கள், இன்ன பிற நிர்மாணத் துறை சார்ந்தவர்களின் பற்றாக்குறையினால் இது எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதிக் கட்டுப்பாடுகளின் காரணமாக ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்குள் பிரவேசிப்பது சிக்கலாக உள்ளது.

குறிப்பிட்ட தொழில்களின் இவ்வாறான தனி உரிமை பெற்றிருத்தலானது, குறித்த தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் போது, தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதில் தீவிரமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. எனவே, யாழ்ப்பாணத்தில் போட்டிக்குரிய சந்தையை உருவாக்க வேண்டுமாயின் சாதி அடிப்படையிலான தொழில் கட்டமைப்பின் "நிர்மாணப்பூர்வமான அழிவு" (கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின்) அல்லது "ஆக்கபூர்வமான அழிவு" (ஜோசப் ஸ்கும்பீட்டரின் வார்த்தைகளில் கூறுவதாயின்) என்பது தவிர்க்க இயலாத அம்சமாக உள்ளது.

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=23

  • தொடங்கியவர்

தொழிலாளர் சந்தையை சீரழிக்கும் வெளிநாட்டு பண அணுப்பல்கள்

நாளாந்த கூலி வீதங்கள் அல்லது மாதாந்த சம்பளங்களை சந்தையால் தீர்மானிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக அல்லது அப்பால் அதிகரித்து, தொழிலாளர் சந்தையை சீரழிக்கும் சிக்கலான அம்சமாக வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் என்பது சிறிது சிறிதாக உட்புகுத்தப்பட்டுள்ளது.

தனியார் துறையில் விளம்பரம் செய்யப்படும் தொழிலுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிக்காத போதும், நாள் முழுவதும் இளைஞர்கள் வீதியில் கையில் கையடக்கத் தொலைபேசியுடன் மோட்டார் சைக்கிள்களில் வீணாகச் சுத்தித் திரிவதனை காணக் கூடியதாக உள்ளதாக வர்த்தக பிரமுகர்கள் இந்த பகிரங்க மாநாட்டில் தெரிவித்திருந்தனர்.

தமது உறவினர்களால் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவதன் விளைவாக, வேலையற்ற மற்றும் தகுதிக்கு குறைவான வேலை புரியும் பெரும்பாலான இளைஞர்களின் அத்தியாவசியமான விடயங்களாக கையடக்கத் தொலை பேசிகளும் மோட்டார் சைக்கிள்களும் மாறியுள்ளன.

வராமலிருத்தல், உரிய நேரத்திற்கு வராமை, அடிக்கடி சுகவீனம் தெரிவித்தல் மற்றும் விரதங்களின் போது (கௌரி விரதம், கந்த சஸ்டி விரதம், இன்னபிற) விடுமுறை எடுத்தல் என்பன தனியார் துறை தொழில் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் சில தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளாக உள்ளன.

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=23

  • தொடங்கியவர்

முன்னால் போராளிகளின் வேலை வாய்ப்பு

சில தனியார் துறை தொழில் வழங்குனர்கள் சமூக பொறுப்புடைமையின் அடிப்படையில் முன்னாள் போராளிகளை தமது ஊழியர்களாக உள்வாங்கியுள்ளனர். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் அவ்வப்போது (மாதத்திற்கு 2 - 4 தடவைகள்) தாம் தொழில் புரியும் இடம் அல்லது வதியும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களுக்கு செல்ல வேண்டியுள்ளமையும் முன்னாள் போராளிகளை தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு இணைத்துக் கொள்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் முன்னாள் போராளிகள் முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்யுமாறு கோரப்படுகின்றனர். இதன் பொருட்டு, அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, குறித்த விடுமுறையினால் வராமலிருத்தல் தமது தொழிலில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துவதாக தனியார் துறை தொழில் வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தவிர, முன்னாள் போராளிகள் பணி புரியும் இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் வருகை தருகின்றமையும், சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பணி புரியும் ஊக்கத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக யாழ் இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இந்த பகிரங்க பொது மன்றத்தில் பங்குபற்றிய சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://184.107.230.1...news_more&id=23

  • தொடங்கியவர்

பாதுகாப்பு நிதியங்களில் உள்ள குறைபாடுகள்

மேலும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமாக நீண்ட கால பிரயத்தனத்தின் பின்னரே தனியார் துறை தொழில் உரிமையாளர்களினை தெரிவு அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு தொழில் திணைக்களம் முயற்சிப்பதாக தெரிகின்றது.

எவ்வாறாயினும், சில தொழில் வழங்குநர்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புக்களை கழிப்பதற்கு முயற்சித்தால், அந்த தொழிலில் இருந்து ஊழியர்கள் விலகி (தமது மொத்த சம்பளம் குறைவடைவதனால்), அவற்றை கழிக்காத தொழில் வழங்குநரிடம் இணைகின்றனர். இதனால், ஊழியர்கள் முறை சார் அமைப்பில் இருந்து, முறை சாரா அமைப்புக்கு செல்கின்றனர்.

தொகுப்பு

சுருக்கமாக கூறுவதாயின், பொதுத் துறை வேலை வாய்ப்பு மீதான மிகை விருப்பு, கல்வி அறிவின் மோசமான தரம் மற்றும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்ட வாழ்க்கைத் திறன்களின் மோசமான தரம், சாதி அடிப்படையிலான தொழில் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்தல் என்பன வடக்கில் வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை என்பவற்றுக்கான பிரதான காரணங்களாக உள்ளன.

இவற்றைத் தவிர, பிரதானமான அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி உபாயம் குறைந்தளவான வேலை வாய்ப்பு உருவாக்கத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், பொதுத் துறையின் வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்கள் செல்வச் செருக்குக் கொண்ட அதிகார வர்க்கம், அதிகரித்துள்ள இராணுவத்தினர் மற்றும் கடுமையான நிதி நிலைமை என்பவற்றினால் பூரணமாக உறிஞ்சப்பட்டுள்ளது.

உள்ளூர் தொழில் திணைக்களம் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கும் இந்த பகிரங்க பொது மன்றத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அத்துடன் தொழில் சந்தையில் தமக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் முன்னாள் போராளிகளிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதிநிதிகள் வருகை தராமையானது பகிரங்க பொது மன்றத்தின் பங்குபற்றனர்களுக்கு பிரதான குறைபாடாக இருந்தது.

ஆய்வு,

கலாநிதி.முத்துகிருஷ்னன்.சர்வானந்தா

பொருளாதார ஆய்வாளர்,

அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம்.

உதவி எழுதாக்கம்,

என்.சிவரூபன்.

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=23

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தொழிற்சாலை, அதனையொத்த சுய தொழில் செய்ய முனைந்தாலும்.....

ஒட்டுக் குழுவும், ராணுவமும் விட்டு வைக்குமா?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.