Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட ரயில் சேவையாம் – அசோக் காந்தா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

asok.jpg

இலங்கை யாத்திரிகர்கள் சென்னையிலிருந்து இந்தியாவிலுள்ள சகல பௌத்த தலங்களுக்கும் பயணம் செய்ய வசதியாகவுள்ள ‘தம்ப திவ வந்தன’ என்னும் விசேட ரயில் சேவையை இந்திய ரயில்வே ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த ரயில் சேவை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் நடைபெற்ற இந்தியாவின் 63ஆவது குடியரசுதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் குடியரசு தினத்தையொட்டி விசேட விருந்துபசாரம் வைபவம் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் 2011ஆம் ஆண்டில் 70 சதவீத வளர்ச்சியை கண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்தியக் கம்பனிகள் இலங்கையில் 100 மில்லியன் டொலர் ரூபாவுக்கு மேல் முதலீடு செய்துள்ளன.

260 மில்லியன் டொலர் பெறுமதியான நன்கொடைத் திட்டத்தின் கீழ் 49,000 வீடுகளை திருத்துதல் அல்லது கட்டுதல் தொடர்பில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்ட அசோக் கே.காந்தா, இது இந்தியாவினால் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும் ஆகவும் பெரிய திட்டங்களில் ஒன்றாகும் எனவும் கூறினார்.

இந்த உதவித் திட்டங்கள் ஊடாக இரு நாடுகளுக்கும் இறுக்கான உறவு ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்நிகழ்வில் இலங்கை அரசு சார்பாக முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க சிறப்பு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=48886

  • கருத்துக்கள உறவுகள்

எவனோ வரி கட்டுகிறான்... இவன் வாரி இறைக்கிறான்.. இப்படியே போனால் இலங்கைக்காரன் சந்தானம் மாதிரி ஏண்டா காசு குடுக்கல என்று நக்கல் விடும் காலமும் வெகுதூரத்தில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் 2011ஆம் ஆண்டில் 70 சதவீத வளர்ச்சியை கண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்தியக் கம்பனிகள் இலங்கையில் 100 மில்லியன் டொலர் ரூபாவுக்கு மேல் முதலீடு செய்துள்ளன

என்கன்ட அழிவில் உங்கன்ட காட்டில மழைடா......சிங்களவன் இதை உணராமல் இருக்கும் வரை உங்களுக்கு நன்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப ஓவர இல்ல ....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வடக்கிலிருந்து, தெற்கு வரை உண்மையைத் தேடிக், கால்நடையாகவே அலைந்தவர் புத்தர்!

அவர் கொள்கைகளைத் தூர எறிந்து விட்ட இந்தியா, புத்தனை விற்பதற்கு மட்டும் முன்னிற்கு நிற்கின்றது!

இது தான் 'இந்தியாவின் தனித்துவம்'!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.