Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

நடந்த சம்பவங்களை வைத்து ஈழத்துடனான உறவை இந்தியா அணுகக் கூடாது. யுத்தம் புரிந்து, இன்றளவும் ஒருவித முறுகல் நிலையிலேயே இருக்கின்ற பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை செய்ய இந்தியாவால் முடியும் போது ஈழத்துடன் ஏன் முடியாது? அவ்வாறு முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன ?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... பாகிஸ்தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு... அதனுடன் ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட்டால் கூட செல்லும்....

இந்தியா எதுவாக இருந்தாலும் இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் ஈழம் விஷயத்தில் இறங்க முடியாது....

உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.... இன்னமும் ஈழம் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.....

உங்களது ஓவர் கான்பிடன்ஸால் உங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை என்று முரட்டுத்தனமாக செயல்படுகிறீர்கள்.......

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply

உங்கள்புரிந்துணர்வுக்கு நன்றி எமக்கு தமிழக தமிழர் மீது பாசம் இருக்குதான் அதுக்காக எமது முதுகில குத்திய (இந்திய படை செய்ததை சொல்லுறன் நான் நேரே பாத்தாலும்புரியிற வயதில்லை ஆனால் எனதுபெற்றோர் அயலவர் என பாதிக்கப்பட்டவர் பலரிடம் கேள்விப்பட்டிருக்கிறன்) இந்தியாக்கு என்னால எப்படி சப்போட் பண்ண முடியும்

ஸாரி பாலாஜியை மறந்துட்டன் உங்களால தமிழருக்கு இந்திய அணியில போதிய இடமளிக்கபட்டிருக்கு என்று சொல்ல முடியுமா என்னை பொறுத்தவரை இல்லை எண்டுதான் சொல்லுவன்

இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமான காரியம், உள்ளுர் போட்டியில் நன்றாக விளையாண்டால் தாம் இடம் கிடைக்கும். சில் ஆண்களுக்கு முன் சீராம், பதானி( வட நாட்டவர் தான், ஆனால் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்) ,குமரன் என்று பல பேர் இடம் பிடித்தனர்.ஆனால் சரியாக விளையாடாம்ல் நீக்க பட்டு விடுகின்றனர்.அமைதி படை சோகம் எனக்கும் தெரியும்.அது எதிர்பாரமல் நட்ந்தது. அமைதி படை காலத்தில் நானும் சிறுவன் தான். என்க்கு அது என்ன அக்கிரம் செய்த்தது என்று சில வருடங்களுக்கு முன்னர் தான் தெரியும்.இன்னும் பல பேருக்கு அமைதி படையின் இன்னொரு முகம் தெரியாது. :cry: :cry:

  • தொடங்கியவர்

அமைதிப்படை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.... அதற்காக நாங்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சமா?

ஆனாலும் அதே பழம் பஞ்சாங்கத்தையா நாங்கள் இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறோம்....

கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை?

என்ன லக்கி நான்ஒண்டும் தெரியாம எழுதுறன் எண்டீங்க எனக்க இந்திய அணி பற்றி தெரியாட்டி அது அவமானமில்லை உங்கட நாடு பங்களாதேஸ்அமைய உதவிய போது அது அங்கீகரிக்கப்பட்ட நாடாகவா இருந்தது இப்படித்தான் உங்கட நாட்டு வரலாறே தெரியாம இருக்கிறீங்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி எழுதியது:

அடுத்தது(தயவு செய்து இந்தக் கேள்விக்கு கேலியாக பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இதுவும் ஆராயப்பட கூடிய விடயம் தான்..) தனக்கருகில் பலம் பொருந்திய ஒரு அமைப்பு இருப்பதை இந்தியா விரும்பவில்லையா?

இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?

இல்லை.. லக்கி! விடுதலைப் புலிகளின் விமானப்படையையும் இந்திய பாதுகாப்பையும், புலிகளின் கடற்படையையும் இந்திய பாதுகாப்பையும் தொடர்பு படுத்தி இந்திய இராணுவ ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்று இதுவரை அறிவித்துள்ளதா?

ஆம்! இலங்கை துண்டாடப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று பலதடவைகள் சொல்லியிருக்கிறது. இலங்கை துண்டாடப்பட்டாலே ஈழம் அமையும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்

இலங்கையைப் பொறுத்தவரை இன்று வரை இலங்கைக்கு ஒரு அரசு உண்டு.... இந்தியா அந்த அரசுத் தரப்பு அதிகாரிகளோடு தான் எந்த பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ள முடியும்....

ம்.. நோர்வே புலிகளோடு தொடர்பு கொள்கிறது.யப்பான் தொடர்பு கொள்கிறது, ஐரோப்பிய நாடுகள் தொடர்பு கொள்கின்றன.. தென்ஆபிரிக்கா தொடர்பு கொள்கிறது.. ம்.. இந்தியாவால்த்தான் முடியவில்லை.. பரவாயில்லை.. அதன் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம்..

பாகிஸ்தான் பல விஷயங்களில் எங்களுக்கு எதிராக இருந்தாலும், உலகால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் அங்கு இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.....

உங்கள் கருத்துப்படி தமிழீழம் அமைந்தால் கண்டிப்பாக இந்தியா புலிகளோடு தொடர்பு கொள்ளும் என்று நாம் நினைக்கலாமா, யாருக்கு தெரியும் முதல் வாழ்த்துச் செய்தியே இந்தியாவிடமிருந்து வரலாம்..

  • தொடங்கியவர்

என்ன லக்கி நான்ஒண்டும் தெரியாம எழுதுறன் எண்டீங்க எனக்க இந்திய அணி பற்றி தெரியாட்டி அது அவமானமில்லை உங்கட நாடு பங்களாதேஸ்அமைய உதவிய போது அது அங்கீகரிக்கப்பட்ட நாடாகவா இருந்தது இப்படித்தான் உங்கட நாட்டு வரலாறே தெரியாம இருக்கிறீங்களே

பங்களாதேஷை பொறுத்தவரை இந்தியாவிற்கு அங்கிருந்து வந்த அகதிகளால் பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.... மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்கள் எப்போது பார்த்தாலும் இந்திய எல்லை மீது பறந்து பங்களாதேசுக்கு சென்று கொண்டிருந்தது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.... மேலும் பாகிஸ்தான் கிழக்கில் இருந்தும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததை இந்தியா விரும்பவில்லை....

இலங்கையைப் பொறுத்த வரையில் விடுதலைப்புலிகளை விட இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது.... தேவை ஏதும் இல்லாமல் இங்கே மூக்கை நுழைக்க இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல.....

அமைதிப்படை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.... அதற்காக நாங்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சமா?

ஆனாலும் அதே பழம் பஞ்சாங்கத்தையா நாங்கள் இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறோம்....

கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை?

பழய பஞ்சாங்கம் எண்று நீங்கள் சொல்வது பலபேரின் வாழ்க்கையை பிரட்டிப்போட்டவிடயம்..... அதன் தாக்கத்தால் எத்தனை குடும்பங்கள் இண்றும் இன்னலுக்குள் இருக்கிறது தெரியுமா...??? மறக்கவேண்டியது இருக்கிறது... மரத்தால் விளுந்தவனை மாடு மிதித்த கதையாக இண்றும் இலங்கையின் இராணுவத்துக்கு இந்தியா ஆதரவு கொடுத்து பயிற்றுவிக்குமானால், எப்படி நாங்கள் அளிவில் இருந்து மீள்வது...???

இந்தியா...! எங்களின் மனங்களில் அன்பை விதைக்கவில்லை மாறாக அளியாத வலியைத்தான் விதைத்து வருகிறது. அதுக்கான பலன்தான் இண்று நாங்கள் எதிர்ப்பது. நாளை அது வினையாக அமையலாம்.... எல்லாம் இந்தியாவின் கையில்த்தான் உள்ளது. எங்களின் கையில் ஒண்றும் இல்லை விரல்களைத்தவிர..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது ஓவர் கான்பிடன்ஸால் உங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை என்று முரட்டுத்தனமாக செயல்படுகிறீர்கள்.......

இல்லை! அவ்வாறு நமது சிலர் நடந்த கொள்வது வருத்தமளிக்கிறது. எமக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை. புலிகள் கூட உலக யதார்த்ததிற்கு ஏற்ப உலகின் அனைத்து நாடுகளோடும் ஒன்றித்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். அமெரிக்கா தொடர்பிலாகட்டும் இந்தியா தொடர்பிலாகட்டும் புலிகள் மிதமான அணுகுமுறையைதான் கையாளுகிறார்கள்

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துப்படி தமிழீழம் அமைந்தால் கண்டிப்பாக இந்தியா புலிகளோடு தொடர்பு கொள்ளும் என்று நாம் நினைக்கலாமா, யாருக்கு தெரியும் முதல் வாழ்த்துச் செய்தியே இந்தியாவிடமிருந்து வரலாம்..

நிச்சயம் செய்யும்....

அரசியலை பாடமாக எடுத்து படித்ததால் சொல்லுகிறேன்... இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை நுட்பமாக ஆராய்ந்தவர்களுக்கு தெரியும்... இந்தியா எல்லா நாட்டுடனும் நட்புடன் செல்லவே விரும்பும்...

ஈரானுக்கு எதிராக ஓட்டளித்தது கூட மனிதகுலநலன் கருதியே தவிர வேறல்ல.....

ஈழம் அமைந்தால் முதல் வாழ்த்து நிச்சயம் இந்தியாவுடையது தான்...

தமிழ்நாட்டிலும் அந்த நாள் தீபாவளி போல கொண்டாடப்படும்.....

  • தொடங்கியவர்

இல்லை! அவ்வாறு நமது சிலர் நடந்த கொள்வது வருத்தமளிக்கிறது. எமக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை. புலிகள் கூட உலக யதார்த்ததிற்கு ஏற்ப உலகின் அனைத்து நாடுகளோடும் ஒன்றித்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். அமெரிக்கா தொடர்பிலாகட்டும் இந்தியா தொடர்பிலாகட்டும் புலிகள் மிதமான அணுகுமுறையைதான் கையாளுகிறார்கள்

நான் அப்படி நினைக்கவில்லை... பொதுவாக பேச்சுவார்த்தைகளில் எல்லாம் கூட முரண்டு பிடிப்பது புலிகளின் வழக்கமாக இருக்கிறது..... எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே இறங்கி வர வேண்டும் என்று புலிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது....

இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.

அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.

இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.

அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.

http://thamizhsasi.blogspot.com/2005/11/1.html

வசம்பண்ணா

[

உங்கள் கருத்துக்களைப் பார்த்து உண்மையில் நீங்கள் லா தான் செய்கின்றீர்களோ என்ற சந்தேகம் எனக்குப் பல தடவைகள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் கள நாகரீகம் கருதி அதை நான் கேட்க முன்வரவில்லை. இப்போது நீங்கள் கேட்டதால் நான் குறிப்பிடுகின்றேன். ஆரம்பத்தில் நானும் இங்கே கழுவித்தான் பின்பு படிப்படியாக உயர்ந்து இப்போது ஒரு தொழிற்சாலையில் ஒரு குழுவிற்கு தலைவனாக நல்லதொரு நிலையில் இருக்கின்றேன்.

மேலும் உங்கு வைத்தியத்துறையில் படிக்கும் போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு தான் படிக்கின்றார்கள். அப்போது எப்படியான வேலைகள் செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை என்று எழுதியுள்ளீர்கள். நான் பல தடவை பிரித்தானியா வந்து போயுள்ளேன். நீங்கள் உங்கு கோவில்களுக்கு உண்மையில் சென்றுள்ளீர்களா??

உண்மைதான் நித்திலா நீங்கள் சொல்வது போல் நாம் எல்லோரும் இங்கு உண்மைகளைச் சொல்லித் தானே அகதி அந்தஸ்து பெற்றுள்ளோம். இவைற்றையெல்லாம் இந்த வருட சிறந்த நகைச்சுவையாக எடுக்கவா??

மற்றது எனது மூதாதையர் எல்லாம் இலங்கைப் பிரசைகள். அது போல் நானும் இலங்கைப் பிரசையென்றே எனது பிறப்ப அத்தாட்சிப் பத்திரத்திலுள்ளது. இதைவிட வேறு யாரிடமாவது ஏதாவது அத்தாட்சிப் பத்திரம் பெற வேண்டுமா என்ன??

ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் எமது கொள்கையில் திடமான நம்பிக்கையும் பிடிப்புமிருந்தால் எவரும் எம்மைக் கொச்சைப் படுத்திவிட முடியாது.

தல எழுதியது:

இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12ஏ லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

தல

இதற்கு ஏன் நீங்கள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி காலத்திற்கு சென்றீர்கள். சமீபத்திலும் கொல்கொத்தாவில் கங்குலிக்கு ஆதரவாக அங்கு கலகம் நடந்ததே.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நம்புகின்றேன் முன்பு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கான உதைபந்தாட்ட போட்டி யாழ் முற்றவெளியில் நடை பெறும். அப்போது இறுதிப் போட்டியின் போது அங்கு நடைபெறாத கலவரமா?? இவை எல்லாம் இரசிகர்களின் அதீத பற்றால் ஏற்படுபவை.

ஆனால் இங்கு நித்திலா என்ன இந்தியாவிற்கு ஆதரவான கருத்தா எழுதியுள்ளா??

நான்சட்டம் படிக்கிறனா எண்டு பார்க்க வீரும்பினா லண்டன் வாங்க நான் பிராக்டிஸ் செய்கிற இடம் படிக்கிற இடம் எல்லாம் கூட்டி போறன். :wink: :P

உண்மையில நீங்க ஈழத் தமிழரா என்பதில எனக்கு சந்தேகம் இன்னும் போகேல்லை சிறு வயதில புலம்வந்த எனக்கு இருக்கிற தாய் நாட்டு பாசம்கூட உங்களுக்கு இல்லையே பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வானத்தை விட உயர்ந்ததா எடுக்க வேணும் என்பது கூட தெரியாமல் இருக்கிறீங்க பாருங்க :roll: :roll:

லக்கி ராஜா போன்றவர்கள் தங்கட நாட்டில பாசம் வைத்துள்ளார்கள் ஏற்கலாம் அவை எங்கட நாட்டை பற்றிகதைக்கும் போது எங்களால பதில் கருத்து கூற முடியும் ஆனா எமது நாட்டவரே எமது நாட்டையும் மக்களையும் பற்றி குறைவாக கதைக்கும் போது :roll: :roll:

ஏன் வசம்பண்ணா உங்களுக்கு உங்கட நாட்டை இப்படி தாழ்த்தி கதைப்பதில என்ன சந்தோசம் கிடைக்குதோ தெரியேல்லை

(அடுத்ததா ஒரு சின்ன திருத்தம் நான் லா படிக்கேல்லை Law தான் படிக்கிறன் :wink: :P )

என்னை பொறுத்த வரை பிறந்த நாட்டுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாதவையோடு மேற்கொண்டு கதைப்பதில என்ன பிரயோசனம் :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது....

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி நினைக்கவில்லை... பொதுவாக பேச்சுவார்த்தைகளில் எல்லாம் கூட முரண்டு பிடிப்பது புலிகளின் வழக்கமாக இருக்கிறது..... எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே இறங்கி வர வேண்டும் என்று புலிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது

நாளை நடைபெற போகின்ற பேச்சுவார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அதாவது யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற இருக்கின்றன. யுத்தநிறுத்த விதிமுறைகளில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன.

1) இராணுவத்தோடு இயங்கும் துணைஇராணுவக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும்.

2)மக்களின் வாழ்விடங்களில் அவர்களது காணிகள் வீடுகளில் இராணுவம் உட்கார்ந்திருக்கிறது. மக்கள் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். அந்த இராணுவத்தினர் தமது பிரதான முகாம்களுக்கு திரும்ப வேண்டும் - (உங்களுக்காக ஒரு குறிப்பு - அவ்வாறு விட்டுப்போன இடங்களுக்கு புலிகளின் இராணுவம் செல்லமுடியாது)

இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏதோ புலிகள் முன்வைத்த அல்லது முன்வைக்கப் போகும் நிபந்தனைகள் அல்ல. இவை சரியாக 4 வருடங்களுக்கு முன்னர் புலிகளும் அரசும் செய்த உடன்படிக்கையில் இருதரப்பும் ஏற்றுக்கொண்ட விடயங்கள். ஆனால் 4 வருடமாகியும் இன்னமும் இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மக்களின் வீடுகிளிலிருந்தும் அவர்களின் வயல்களிலிருந்தும் இராணுவத்தை எழுந்த அவர்களுக்கான முகாம்களுக்குள் போகச்சொல்வது நிபந்தனையா? தவிர இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட விடயமும் தானே..

பேச்சுவார்த்தைகளில் புலிகள் இதை வலியுறுத்துவார்கள்.. இதில் என்ன விட்டுக்கொடுப்பைச் செய்ய முடியும்?

  • தொடங்கியவர்

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்... இலங்கை இந்தியாவுக்கு எதிரி நாடே என்று வைத்துக் கொள்வோம்... ஆனாலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவதால் தான் திரிகோணமலையில் 20 வருடங்களுக்கு முன்பே வரவேண்டிய அமெரிக்க ராணுவ கேம்ப் இன்றும் வரவில்லை (அது வந்தால் புலிகளுக்கும் தலைவலி என்பது வேறு விஷயம்... இதற்காக புலிகள் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்) அது வந்து விட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் இடையூறாக இருக்கும்... இந்தியாவின் ஐஓசி டேங்க் திரிகோணமலையில் இருக்கிறது... அமெரிக்காவின் கேம்பால் அதற்கும் இடையூறு வரலாம்.... இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றே ஒன்று தான்... அது 'இந்திய மக்களை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்பது' என்பது தான்....

ராசீவ் மரணத்தை நாங்கள் மறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.... ஏன் அமைதிப்படையையும் அதுபோல் நீங்கள் மறந்து விடுங்களேன்......

அதிருக்கட்டும்... இந்தியாவின் ஆதரவைப் பெற இதுவரை புலிகள் ஏதாவது முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா என்ன? இந்தியா அழையா விருந்தாளியாக வந்து உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமா?

  • தொடங்கியவர்

புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்வதில் கூட காட்டிய பிடிவாதத்தை கணக்கில் கொள்ளுங்கள்... எனக்கு தெரிந்து ஜப்பான் இரு தரப்புக்கும் பொதுவான நாடு தானே... அங்கே கூட பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது ஐரோப்பாவில் தான் நடத்த வேண்டும் என்று ஏன் புலிகள் பிடிவாதம் பிடித்தனர்.... பேச்சுவார்த்தைக்கு முன்பே இலங்கைத் தரப்பை இது உசுப்பேற்றி இருக்காதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிருக்கட்டும்... இந்தியாவின் ஆதரவைப் பெற இதுவரை புலிகள் ஏதாவது முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா என்ன? இந்தியா அழையா விருந்தாளியாக வந்து உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமா

ம்.. பலதடவைகள்! அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ உதவி கேட்டது கூட இந்தியாவுடனான தமது உறவை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான். தவிர பல தடவைகள் இந்தியா தற்போதைய பேச்சுக்களில் நடுநிலைமையுடன் தலையிடுவதானால் தமக்கு ஆட்சேபனை இல்லயென புலிகள் அறிவித்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

காவடி....

சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்வதில் கூட காட்டிய பிடிவாதத்தை கணக்கில் கொள்ளுங்கள்... எனக்கு தெரிந்து ஜப்பான் இரு தரப்புக்கும் பொதுவான நாடு தானே...

உண்மையில் இலங்கை அரசுக் பேச்சுக்களை இலங்கையில் நடத்துவதுதான் விருப்பம். அவர்களை பொறுத்தவரை தமிழரின் பிரச்சனை உலகமயப்படுத்தப்படக் கூடாது என்பது தான் நோக்கம். தவிரவும் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடாத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்கள் மீது விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டியிருக்கும் என்ற பயமும் ஒரு காரணம். அதே நேரம் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத் தடையினை தளர்த்துகின்ற ஒரு நோக்குடனுமே ஐரோப்பிய நாடுகளை பிரஸ்தாபித்தார்கள். ஒரு இயக்கம் என்ற முறையில் உலகின் தடைகளிலிருந்து தாம் விலக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.

அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது

  • தொடங்கியவர்

உண்மையில் இலங்கை அரசுக் பேச்சுக்களை இலங்கையில் நடத்துவதுதான் விருப்பம். அவர்களை பொறுத்தவரை தமிழரின் பிரச்சனை உலகமயப்படுத்தப்படக் கூடாது என்பது தான் நோக்கம். தவிரவும் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடாத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்கள் மீது விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டியிருக்கும் என்ற பயமும் ஒரு காரணம். அதே நேரம் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத் தடையினை தளர்த்துகின்ற ஒரு நோக்குடனுமே ஐரோப்பிய நாடுகளை பிரஸ்தாபித்தார்கள். ஒரு இயக்கம் என்ற முறையில் உலகின் தடைகளிலிருந்து தாம் விலக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.....

கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை?

நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது.

இருந்தாலும் ராஜீவ் காந்தி பற்றி வருவதால் இதை எழுதுகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பெப்பரவரி 12ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன்.

அதிக நாட்களை சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது.

அப்போது ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன்.

இடங்களை பார்த்த பின் நான் கருத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.

அப்போது அம்பத்தூரிலிருந்து என்னோடு வந்த நண்பன் சொன்னான்.

"ராஜீவ் இங்க செத்ததாலதான் இந்த பகுதியே முன்னேறிச்சு.

வருடத்துக்கு ஒரு முறை நினைவு நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடக்கிறதால இந்தப் பகுதியின் வளர்ச்சி எதிர்பாராத ஒரு அதீத வளர்ச்சியாகிடுச்சு"

"சில கெடுதல்களில் கூட பல நன்மைகள்" என்றான் அடுத்தவன்.

நான் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....

ம்.. புலிகிள்ன கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழைகின்ற போது இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் தனியாக விசாரணை செய்யப்படுகின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் அணுகப்படுகின்றார்கள். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லையென்பதை நிங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய புலனாய்வுப் பிரிவு -இலங்கை அரசுடன் இணைந்து என்று சொல்ல முடியாவிட்டாலும்-- தனியாக தனது கடமையைச் செய்த கொண்டுதானிருக்கிறது. புலிகளும் ஒரு நாடு இதனை எவ்வாறு அணுகுமோ அவ்வாறு அணுகுகின்றார்கள்.

ஆனால் இந்திய மருத்துவர்கள் சுனாமியின் போது திருப்பியனுப்பபட்டது குறித்து நான் அறியவில்லை. சரியாகத் தெரியாமல் அந்த மருத்தவர்கள் உளவாளிகள் என்றோ, அல்லது புலிகள் அவ்வாறு செய்யவில்லை என்றொ நான் பேச முடியாது. அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை நேரடியாக செய்திருந்தது. மகிழ்ச்சி

  • தொடங்கியவர்

நான் சொல்லப் போவது இங்கே பொருத்தமோ எனக்குத் தெரியாது.

இருந்தாலும் ராஜீவ் காந்தி பற்றி வருவதால் இதை எழுதுகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பெப்பரவரி 12ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன்.

அதிக நாட்களை சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது.

அப்போது ராஜீவ் கொல்லப்பட்ட இடத்துக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன்.

இடங்களை பார்த்த பின் நான் கருத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.

அப்போது அம்பத்தூரிலிருந்து என்னோடு வந்த நண்பன் சொன்னான்.

"ராஜீவ் இங்க செத்ததாலதான் இந்த பகுதியே முன்னேறிச்சு.

வருடத்துக்கு ஒரு முறை நினைவு நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடக்கிறதால இந்தப் பகுதியின் வளர்ச்சி எதிர்பாராத ஒரு அதீத வளர்ச்சியாகிடுச்சு"

"சில கெடுதல்களில் கூட பல நன்மைகள்" என்றான் அடுத்தவன்.

நான் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

அஜீவன் அண்ணா,

சத்தியமாக நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.... யாரோ பாமரத்தனமாக சொன்னதை இங்கு சொல்கிறீர்களே, மற்றவர்கள் எப்படி பொருள்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.....

கண்டிப்பாக.. கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும்.. உங்களிடமிருந்து விளக்கங்களை நாமும் எங்களிடமிருந்து விளக்கங்களை நீங்களும் பெற்று புரிதலை ஏற்படுத்துவதுதான் வரியானதாக இருக்கும். வேலிச்சண்டை பிடிப்பதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்ல.. உண்மையில் எமக்கிடையில் வேலிகள் கூட இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.