Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின் தொடாச்சியான இராஜதந்திரமே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின்தொடாச்சியான் இராஜதந்திரமே

இலங்கையானது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டபின் (சுதந்திரம் என்ற வார்த்தை பாவிக்கமுடியாது. ஏனெனில் எல்லா மக்களும் சுதந்திரத்துடன் வாழவில்லை) சிங்கள மக்களின் மேலாண்மை அதிகாரத்தால் தமிழ்பேசும் மக்களிள் அடிப்படை உரிமைகள் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டது. அரசியலமைப்பு அதிகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

பண்டாரநாயக்கவினால் சிங்களம் மட்டும் அரசமொழி என்ற சட்டம் அமூல்படுத்தப்பட்டது. 1957 களில் தமிழ் அரசியலாளர்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது தாக்கப்பட்டும், அவர்கள் வாய்களில் சிறுநீர் கழித்தும், பின்னர் கொழும்பு வாழ் தமிழர்கள் அடித்தும் நொருக்கப்பட்டார்கள்.

தமிழர்களும் எங்களுக்கு இந்தியா உதவும், இந்தியா என்றும் எங்கள் பக்கம் என்ற ஒரு அசையாத மாயை நம்பிக்கையில், சிங்களம் பிரச்சனை கொடுக்கும் போதெல்லாம் தமிழ்நாடு சென்று பேசுவது இதற்கு இந்தியா கண்டனமும் பின்னர் சிங்கள அரசுடன் பேசுவது என்ற தோரணையில் காலம்தான் நகர்ந்தது. ஆனால் தமிழர்களுக்கு எந்தவித அடிப்படை உரிமைகளுக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் இருந்த உரிமைகளை சிறிது சிறிதாகப் பறித்தது சிங்களம்.

ஆண்டுக்கு ஆண்டு தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழன் எல்லாவற்றையும் இழந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பிற்கு அகதியாகச் சென்றான். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்பிரச்சனைபற்றி இந்தியாவை வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நிகழ்த்தினாலும் அந்தப்பேச்சுவார்த்தைகள் நுனி நாக்கிலே தடவிய இனிப்புப்போல தான் நடந்து கொண்டிருந்தது.

தமிழருக்குரிய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்று இந்தியாவோ அல்லது இலங்கைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களோ அடி ஆழ்மனதில் இருந்து எண்ணவில்லை என்பதே யதார்த்தம்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. அதாவது இந்தியாவை எடுத்துக்கொண்டால்

இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை: இந்தியாவிற்குத் தெற்கே உள்ள ஒரே ஒரு நாடு இலங்கை. இலங்கையால் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாது எனினும், வெளியுலக வல்லரசுக்கள் தங்கள் இராணுவ அல்லது இலங்கைப் பொருளாதாரவிருத்திக்கு உதவி செய்வதால் இலங்கையில் தங்கள் இருப்பிடத்தை நிலையாக்கிவிடலாம். இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். நிச்சயமாக. இதனால் இலங்கை அரசை இந்தியா ஒரு நாளும் பகைக்காது. இதனால் தான் கச்சதீவு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இக்கட்டான காலங்கள் அதாவது சேகுவாரா இயக்கம் தலையெடுத்தபோதெல்லாம் இந்தியா தான் படை அனுப்பி அவர்களை அழித்தது.

இந்தியா ஒருபுறம் நட்புப்பாராட்டினாலும் மறுபுறம் இலங்கையில் நிலையான அமைதியை முழுமையான அமைதியைக் குழப்பிவிடுவதிலும் குறியாகவே இருந்துள்ளது. அது தான் தமிழர்களின் பிரச்சனைக்கு ஆதரவாக இருந்த தமிழர்கள் மூலம் கிளர்ச்சிகளை உருவாக்குவது. தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று ஒரு நாடகக்குரல் கொடுப்பது. ஆனால் இந்தியா பெரிய நாடு என்பதால் இலங்கையும் இந்தியாவைச் அச்சுறுத்தNவுண்டிய வகையில் அச்சுறுத்தியே வந்தது. அதாவது பாகிஸ்த்தானுடனான இணைபிரியாத நட்பு. இந்தியாவின் பங்காளதேஷ் உடைப்பில் பாகிஷ்த்தான் விமானங்களுக்கு இலங்கையில் எண்ணை நிரப்ப அனுமதித்தமை. இதனால் இவர்களின் உறவு என்றும் நிலையானது. சீனாவுடனான பரஸ்பர உறவு என்பனவற்றால் இந்தியாவின் உள்ளார்ந்த பகைமையுணர்வை இலங்கை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. வெளிப்படையாக நட்புப்பாராட்டினாலும் இந்தியாவின் உள்ளகத்தின் இருப்புப்பற்றி இலங்கை அரசாங்கம் தெளிவாகவே இருந்திருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு அந்தத் தெளிவு இல்லை.

இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் பிரிவுபட்ட இலங்கைக்கு இடமில்லை. அஃதோடல்லாமல் இலங்கையை தன் ஆளுமைக்கு கட்டுப்படுத்தி வைத்திருப்பதே நேரு காலத்திலிருந்து இந்தியா கடைப்பிடித்துவரும் வெளியுறவுக்கொள்கை. அல்லது இலங்கையை ஒரு மாநிலாகத் தன்னாட்சிக்குள் கொண்டுவருவது. எது எப்படி இருப்பினும் பிரிவுபட்ட இலங்கை, இலங்கை மீதான இந்திய அழுத்தங்களுக்கு ஒருகாலும் ஈடுகொடுக்காது. பிரிவுபட்ட இலங்கையால் இந்தியாவிற்கு கூடுதலான அச்சுத்தல் தான் வரும். என்பதும் இத்துடன் தனிஈழம் என்பது அமையுமானால் தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் வைத்திருக்கமுடியாது என்பதும் இந்தியாவிற்கு பாரியதொரு பிரச்சனையாக இருந்தது. மொத்தமாகப் பார்த்தால் இந்தியா ஒட்டுமொத்த இலங்கையையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பதிலே தான் அன்று தொட்டு இன்று வரையும் இனிமேலும் குறியாக இருக்கும்.

பின்னர் தமிழர் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தைகள், பண்டா செல்வா ஒப்பந்தம், என்ற பலவாறாக ஒத்துக்கொள்ளப்பட்டபோதிலும் அரசாங்கம் எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. அதை இந்தியா கட்டிக்கேட்டதும் இல்லை. எல்லாம் கிழித்தெறியப்பட்டநிலையையே அரசாங்கம் கடைப்பிடித்தது. பின்னர் தமிழ்த்தலைமைகள் தனி ஈழம் ஒன்றே முடிந்தமுடிவு என்பதில் உருவாகி தமிழீழவிடுதலைக் கூட்டணி உருவாக்கம் பெற்றது.

இலங்கைத்தமிழ்த்தலைமைகளும் இந்தியாவின் ஆட்டத்திற்குத்தான் தாளம் போட்டார்கள். அத்துடன் தமிழ்த்தலைமைகள் தமிழர் பிரச்சனையை தங்கள் வசதிவாய்ப்புகளுக்குச் சாதகமாக்கித் தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள். சிங்கம் படிக்காதே என்று தமிழர்களுக்கு சிங்கள எதிர்ப்பு வெறியை உருவாக்கிக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அரசாங்கவேலையும், தங்கள் ப்pளளைகளுக்குச் சிங்களமும் கற்பித்து வெளிநாட்டுக்கல்வியும் பெறுவதிலே குறிக்கோளாக இருந்தனர்.

1983களில் தனித்தமிழீழம்; என்ற கொள்கைiயை முன்வைத்து அமோக வெற்றியீட்டிய கூட்டணி, தேர்;தல் முடிந்ததும் அது பற்றிய முன்னெடுப்புகளை துரிதப்படுத்தவில்லை. ஆனாலும் எழுச்சி கொண்ட இளைஞர்களின் தமிழீழக்கனவை இளைஞர்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை.

அப்பொழுது தமிழ் இளைஞர்களை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தியவர்களும் எங்கள் தமிழ் அரசியல் வாதிகள் தான்.

இந்தியாவும் தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஆயுதப் போராட்டத்தைத் தொடக்கிவிட்டால் அங்கு தொடர்ந்து பிரச்சனை இருக்கும். இதை வைத்துக் கொண்டே இலங்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கனவு கண்டது இந்தியா. மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வழங்கி பேராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதும், தமிழீழ இலக்கை நோக்கிய போராட்டமாகவும் அதை அடையவிடாமல் போராட்டத்தைக் காலம் காலமாக நகர்த்துவதால் தனது தெற்கின் பாதுகாப்பை வலுவாக வைத்திருக்கமுடியும் என்று இந்தியா கனவு கண்டது,

1972ம் ஆண்டு முதன்; முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்த போராளி தியாகி பொன் சிவகுமாரன். அத்துடன் இளைஞர்களின் போராட்டம் வலுவடையத் தொடங்கியது. பின்னர் இயக்கங்கள் உருவாகி போராட்டத்திற்கென இளைஞர்கள் இயக்க உறுப்பினர்களால் சேர்க்கப்பட்டு இந்தியாவிற்கு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

முதலில் உமாமகேஸ்வரனாலும், தலைவர் பிரபாகரனாலும் கட்டி எழுப்பப்பட்ட இயக்கம் 'புளொட்". அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் இயக்கம் இருபிரிவானது. இந்தியாவின் சொல்லுக்கெல்லாம் தலையாட்டிப்பாம்பாக இருந்த உமாவைப் பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை. பிரபா எல்ரீரீஈ என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார்.

தலைவர் பிரபாகரன் இந்தியாவின் சொல்லுக்கெல்லாம் தலையாட்டுபவர் ஆக இருக்கவில்லை. இதனால் இந்தியா தமிழ் இளைஞர்களைப் பல இயக்கப்பிரிவுகளாக உருவாக்க வழிவகுத்து பல இயக்கங்களை உருவாக்கித் தங்கள் கட்டுக்குள் இருக்கும் இயக்கங்களுக்கு தங்கள் உதவிகளை வாரி இறைத்தது.

இருந்தாலும் புலிகள் இயக்கத்தின் கட்டுக்கோப்பும் கடப்பாடும், செயல்திறன் வெற்றியும் இந்தியாவின் உதவிபெற்ற இயக்கங்களின் வளர்ச்சியைவிட வேகமாக வளரத்தொடங்கியது. இதனால் இந்தியாவின் கட்டுக்குள் அடங்காத புலிகள் இயக்கத்தை மற்றைய இயக்கங்களை வைத்து ஒடுக்கவேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டபோதும் அது இந்தியாவால் முடியாமல் போனது.

புலிகள் இயக்கம் இந்தியாவின் ஆயுதத்திலோ அல்லது பொருளாதார உதவியிலோ தங்கிப்போராட்டம் நிகழ்த்தமுடியாது என்று வெளிநாடுகளில் இருந்து ஆயுதக்கொள்வனவுகளை ஆரம்பித்தது. இதனால் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய புலிகளுக்கு இந்திய ஆட்சியாளர்கள் தொல்லைகளைக்கொடுத்து அடிபணியவைக்க முயற்சி செய்தபோது தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து பேராட்டத்தை நடத்துவது என்றும் தமிழீழ இலட்சியப்பாதையில் பயணிக்க ஒரே ஒரு இயக்கம் மட்டுந்தான் இயங்கவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். இந்தியாவின் உள் அரசியல் நோக்கங்களைத் தலைவர் பிரபாகரன் தெட்டத்தெளிவாக புரிந்திருந்தார். அதாவது இந்தியாவின் சொல்லுக்குக் கீழ் இருந்தால் தமிழீழக்கனவு என்பது இந்தியா தன்னைக்காக்க எங்களை பாவிக்கும் ஒரு ப+ச்சாண்டி ஆயுதம். எங்கள் இலட்சித்தை அடைய நாம் நம்காலில் நிற்கவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார்.

புலிகள் இயக்கத்தின் போராட்டம் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்ற ரீதியில் வெற்றியை நோக்கி நேர்கோட்டில் நகர்ந்து கொண்டிருந்தது. இதனால் இந்தியா போட்ட மாயை வலை கழித்தெறியப்படுகின்றது. இ;ந்தியா மற்றைய தமிழ் இயக்கங்களை புலிகளுக்கெதிராகக் களத்தில் இறக்கி சகோதரயுத்தத்தைத் தொடக்கிவிட்டது. அதில் எல்லா இயக்கங்களையும் புலிகள் துடைத்தெறிந்துவிட்டார்கள். இருந்தும் எம். ஜி. ஆர் ஆதரவு பெற்ற புலிகள் இயக்கத்திற்கு இந்தியா மறுக்கமுடியாமல் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையும் வழங்கியது.

இந்த வேளையில் திருகோணமலையில் அமெரிக்கா வொயிஸ் ஒப் அமெரிக்கா என்ற நிறுவனத்தை நிர்மாணிக்க ஆரம்பித்தபோது இந்தியாவின் ஆலோசனையின் பெயரில் அந்த இடம் இயக்கங்களினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு நிர்மாணவேலை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு இந்தியாவின் உள்நோக்கம் என்ன என்பது புலனாகின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் வடமராட்சியில் 'ஒப்பரேசன் லிபரேசன் நடத்தப்பட்டபோது இந்தியா இலங்கை வான் எல்லையில் அத்துமீறி நுழைந்து உணவுப் பொட்டலங்கள் போட்டு இலங்கை அரசாங்கத்திற்குத் தன்னுடைய வலிமையைச் சொல்லாமல் சொல்லிக்காட்டியது. இதனால் ஸ்ரீ லங்கா பயந்துபோனது.

இருந்தும் பழுத்த அரசியல்வாதி ஜெயவர்த்தன என்னுடைய அரசியல் அனுபவம் தான் பாரதப்பிரதமர் ராஜீவ்வின் வயது. தன்னுடைய அனுபவ முதிர்ச்சியைக்காட்டவேண்டும் என்று சிந்தித்தார்;;. இதனால் ஜெஆர் ராஜீவ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு இலங்கை வந்த ராஜீவிற்கு இராணுவச்சிப்பாய் மூலம் அடிபோட்டு கையெழுத்திட்டு தமிழருக்கெதிரான இந்தியாவின் சதியை பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்தார்;.

இந்தியா தங்கள் பிரதமரை அவர்கள் நாட்டில் வைத்து அவமானப்படுத்தியதற்கு பழிவாங்க நினைக்காமல் பணிந்தே போனது. ஏனெனில் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையில் நுழைந்து அங்கே தங்கள் சிப்பாய்களை நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று கனவு கண்டதுதான்.

ஆனால் ஜெ. ஆரின் உள்நோக்கம் வேறாக இருந்தது. தமிழர்களையும் இந்தியாவையும் நிரந்தர பகையாளிகள் ஆக்குவதே. அந்த இராஜ தந்திரத்திட்டத்திலும் இலங்கை பெரு வெற்றியீட்டியது. பின்னர் இந்தியா இலங்கையைவிட்டு வெளியேறி அவமானத்தைத் தாங்கமுடியாது மௌனமாக இருந்து திட்டத்தைத்தீட்ட ஆரம்பித்தது. இங்கே தாம் கவனத்திற்கொள்ளவேண்டும். இந்தியாவானது தமிழர்களுடன் பகைத்தாலும் இலங்கை எப்படி நடந்தாலும் அவர்களுடன் பகைமை காட்டத்தயாரில்லை. அன்றும் இன்றும் என்றும் இலங்கை அரசுடன் பணிதலைத்தான் மேற்கொள்கின்றது.

பின்னர் ராஜீவ் கொலையின் பின் நிலைமை தலைகீழானது. ராஜீவ் கொலையின் பின்னணி வட இந்தியாவில் இருந்தும் தமிழ்நாட்டில் கொலை நிகழ்ந்தவுடன் புலிகள் தான் செய்தார்கள் என்ற முடிவு உடன் எடுக்கப்பட்டு அதற்கான ஆதாரங்கள் புலிகள் மேல் மேலதிகமாகச் சித்திரிக்கப்பட்டு மூலகர்த்தாக்கள் யார் என்பது உலகம் அறியாமலே முடக்கப்பட்டாலும் இன்னும் அதற்கான கேள்விக்கணைகள் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

பின்னர் 3ம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, பேச்சு வார்த்தையில் ஒரு நிலை எட்டியது போல உலகமேலாதிக்கக்காரர்கள் காட்டினாலும் மறைமுகமாக இந்தியாவினுடைய ஆலோசனைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதுதான் புலிகள் இல்லாது அமெரிக்காவில் இணைத்தலைமை நாடுகளும் இந்தியாவும் நடத்திய பேச்சுவார்ததை.

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல் புலிகளை எந்தப்பாடுபட்டாவது அழித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த இந்தியா உலகநாடுகளைத் தன்பக்கம் திருப்பி புலிகளை உலகப்போர்விதிகளையும் மீறி அழிப்பதற்கு உதவிசெய்தார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மை. தெற்காசிய அரசியல் இராஜதந்திரப்படி புலிகள் வலுவாக இருப்பதை அமெரிக்கா, சீனா, ரஷ்சியா போன்ற நாடுகளும் விரும்பவில்லை.

சிங்கள அரசாங்கத்தின் இராஜதந்திரத்திற்கு இவர்களின் பலவீனம் அவர்களுக்கு தமிழனை அழிக்கக் கிடைத்த மிகப்பெரும் பலமாகியது. இதை வைத்துக் கொண்டு அவர்களிடம் கிடைக்கும் உதவிகள் எல்லாம் பெற்று பெரும்போரை நடத்தி எவ்வளவு தமிழர்களை அழிக்கமுடியுமோ அவ்வளவு தமிழர்களை அழித்துத்தள்ளியது. இந்தப்படுகொலையின் போது உலகமே மௌனமாகப்பார்த்துகொண்டிருந்தது. ஏனெனில் அவர்களின் பங்கும் அளப்பரியது.

இருந்தாலும் சிங்கள அரசு ஒருபடிமேலே சென்று போருக்குப்பின் இலங்கையின் பாதுகாப்புக்கருதி போருக்குச்சமாந்திராமான முறையில் சீனாவை இலங்கையில் வலுப்படுத்தி இந்தியாவின் வண்டவாளம் இனிமேலும் இலங்கையில் இருக்கக்கூடாது என்றவகையில் சீனாவுடன் வலுவான கூட்டுறவு மேற்கொண்டது.

சிங்கள அரசாங்கம் என்றும் இந்தியாவின் இலங்கை மீதான இம்சையினை ஈடுகட்டிக்கொண்;டுதான் வந்திருக்கின்றது. உண்மையில் சிங்கள அரசியல் வாதிகள் வல்லரசுக்கு எதிராக ஆயதம் தூக்கமால் தங்கள் பிடியை காப்பாற்றியது தான் உலகின் மிகப்பெரிய இராஜதந்திரம் என்று சொல்லவேண்டும்.

இன்று இலங்கை தன்னை இந்தியாவின் பிடியிலிருந்து முற்று முழுதாக மீட்டுள்ளது என்றே கூறவேண்டும். அத்துடன் தமிழனுக்கு இனிமேல் ஆயுதம் எடுத்துப் போராடும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரனுக்கு கிடைத்த ஆதரவுபோல் இனிமேல் யாரும் வரமுடியாது. இப்போதிருக்கும் தலைமைகள் உறுதியான தீர்மானத்தை எடுக்கக்கூடியவர்களும் அல்ல. பொதுசன ஆதரவும் முழுக்க முழுக்கக்கிடையாது.

தமிழரின் போராட்டத்தை அழித்த உலகமும் தமிழனுக்கு உரிய உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் எண்ணம் துளியளவேனும் இல்லை. எல்லோரும் பணத்தைவாரி இறைத்தாவது இலங்கையை எங்கள் கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்று போட்டா போட்டி போட்டு பணத்தை அள்ளிக் கொடுக்கின்றார்கள். சிங்கள அரசாங்கம் இவர்களின் பலவீனத்தைச்சாதகமாக்கி தங்கள் பெட்டிகளை நிறைக்கின்றார்கள். சிங்கள அரசாங்கம் நல்ல கூதல் காய்கி;ன்றது.

வெந்து வெதும்பி வாய்திறக்கமுடியாத அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழன் மத்தியில் மும்மொழித்திட்டத்தை எடுத்துக்கொண்டு அப்துல் காலாம் யாழ் சென்று மக்களின் வேதனையைத் தீராது மும்மொழித்திட்டம் பேசுகின்றார். இது நியாயமா?

மும்மொழித்திட்டம் நடைமுறைக்குமுன் தமிழரின் அடிப்படைப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பது அறிவாளி அப்துலுக்கு தெரியவில்லையா?

ஓரு தாய் மக்கள் என்று சொல்லுமளவிற்கு இலங்கையில் எல்லா இன மக்களுக்கும் சுதந்திரமில்லாதபோது ஏன் சுதந்திரதினக்கொண்டாட்டம். பெப்ரவரி 4 வெள்ளையன் வெளியேறிய நாள் என்பது தான் தகுந்த சொற்பதம்.

எரிமலை எப்போதும் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. சிலவேளை பெரிதாகச்சீற்றம் கொள்ளும். பின்னர்

அடங்கிவிடும். மீண்டும் சீற்றம் கொள்ளமுன் பிரச்சனைக்குத்தீர்வு அவசியம். சிங்களம் தீர்வு கொடுத்தாலும் இந்தியா கொடுக்கவிடமாட்டாது. இந்தியாவைச் சீற்றம் கொள்ளும்வகையில் இலங்கை அரசின் நடைமுறைகளில் மாற்றம் செய்வதே தமிழர்களுக்கு வேண்டிய இராஜதந்திரம். கடந்தகால நிகழ்வுகளிலிருந்து சிங்கள அரசிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் தமிழர்களுக்கு நிறையவே இருக்கின்றது. தமிழர்களின் பேராட்ட வியூகத்தில் பாரிய மாற்றங்கள் தேவை. இந்தியாவை நம்பிப் பர்ரக்கில் ஏறுவதைத்தமிழர்கள் நிறுத்தவேண்டும். சிங்களவன் உலகத்தையும் இந்தியாவையும் எப்படித்தன் கைக்குள் கத்தியின்றி, இரத்தமின்றி அடக்கினான். சிறிது ஆராயுங்கள் போராட்டவிய+கங்களில் பாரிய மாற்றங்கள் தேவை.

சிங்களவனின் இராசதந்திரம் என்று ஒன்று பலமாக உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைவிட தமிழர் மீது கிந்திய வெறுப்பு மிகவும் பலமானது. அதனால் சிங்களத்தின் இராசதந்திரம் சுலபமாக செயல்பட முடிகின்றது.

எனவே இதை எவ்வாறு நாம் முறியடிக்கலாம்?

இந்தக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒரு வழி:

இந்தியாவைச் சீற்றம் கொள்ளும்வகையில் இலங்கை அரசின் நடைமுறைகளில் மாற்றம் செய்வதே தமிழர்களுக்கு வேண்டிய இராஜதந்திரம்.

எனவே எமது அமைப்புக்களில் யாராவது இதை செய்யலாம்.

சிங்களவனின் இராசதந்திரம் என்று ஒன்று பலமாக உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைவிட தமிழர் மீது கிந்திய வெறுப்பு மிகவும் பலமானது. அதனால் சிங்களத்தின் இராசதந்திரம் சுலபமாக செயல்பட முடிகின்றது.

எனவே இதை எவ்வாறு நாம் முறியடிக்கலாம்?

இந்தக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒரு வழி:  

எனவே எமது அமைப்புக்களில் யாராவது இதை செய்யலாம்.

சிங்களத்தி ராஜதந்திரம் பலமானது அல்ல, அது இந்தியாவின் ராஜதந்திரமே, ஏன் என்றால் இந்தியாவுக்கு ஒன்று நல்லா தெரியும், தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பின் விளைவுகள் இந்தியாவில் எதிரொலித்து ஒரு கட்டதில் இந்தியா என்ற ஒரு நாடு காணாமல் போய் விடும் என்று தெரியும் அதனால் தான் இந்தியா எல்லா உதவிகளையும் இவங்களுக்குச் செய்யுது.

சிங்களத்தி ராஜதந்திரம் பலமானது அல்ல, அது இந்தியாவின் ராஜதந்திரமே, ஏன் என்றால் இந்தியாவுக்கு ஒன்று நல்லா தெரியும், தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பின் விளைவுகள் இந்தியாவில் எதிரொலித்து ஒரு கட்டதில் இந்தியா என்ற ஒரு நாடு காணாமல் போய் விடும் என்று தெரியும் அதனால் தான் இந்தியா எல்லா உதவிகளையும் இவங்களுக்குச் செய்யுது.

அப்படியானால் ஏன் பங்களாதேசத்தை இந்தியா பிரித்தது? இந்தியாவில் பாகிஸ்தானைவிட இல்லை பங்களாதேசத்தை விட கூடுதலாக இஸ்லாமியர்கள் வாழுகின்றனரே?

அப்படியானால் ஏன் பங்களாதேசத்தை இந்தியா பிரித்தது? இந்தியாவில் பாகிஸ்தானைவிட இல்லை பங்களாதேசத்தை விட கூடுதலாக இஸ்லாமியர்கள் வாழுகின்றனரே?

பாக்கிஸ்தான் ஒன்றாக இருந்தால் இந்தியாவுக்கு 2 பக்கமும் எதிரி நாடுகள், ஆனால் பாக்கிஸ்த்தானை உடைத்ததன் மூலம் தனது எதிரியை இரண்டாக்கி, வங்காள தேசத்தை தனது நண்பனாக மாற்றியது, இன்றைவரை வ்ங்காள தேசத்த்வர்கள் பாக்கிஸ்த்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களாக்வே உள்ளனர், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு....." என்று சும்மாவா கூறினார்கள்

பாக்கிஸ்தான் ஒன்றாக இருந்தால் இந்தியாவுக்கு 2 பக்கமும் எதிரி நாடுகள், ஆனால் பாக்கிஸ்த்தானை உடைத்ததன் மூலம் தனது எதிரியை இரண்டாக்கி, வங்காள தேசத்தை தனது நண்பனாக மாற்றியது, இன்றைவரை வ்ங்காள தேசத்த்வர்கள் பாக்கிஸ்த்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களாக்வே உள்ளனர், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு....." என்று சும்மாவா கூறினார்கள்

ஆனால் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால், ஒரு தேவை என்று வரும் பொழுது அவர்கள் ஒன்றுபட்டுவிடுவார்கள். அடுத்து இரு நாடுகளும் இன்று சீனாவுடன் சிங்களம் போல நெருக்கமாக இணைந்து வருகின்றது.இந்தியா ஒருநாள் உடைவது திண்ணம் அதற்கு அதன் இந்த வகையான கொள்கை முன்னெடுப்புக்களே அடிப்படைக்காரணம்.

ஆனால் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால், ஒரு தேவை என்று வரும் பொழுது அவர்கள் ஒன்றுபட்டுவிடுவார்கள். அடுத்து இரு நாடுகளும் இன்று சீனாவுடன் சிங்களம் போல நெருக்கமாக இணைந்து வருகின்றது.இந்தியா ஒருநாள் உடைவது திண்ணம் அதற்கு அதன் இந்த வகையான கொள்கை முன்னெடுப்புக்களே அடிப்படைக்காரணம்.

பிரபாகரனும் ஹிந்து ராஜீவும் ஹிந்து தானே? ஈரானும் முக்காடு சவுதியும் முக்காடு.

பிரபாகரனும் ஹிந்து ராஜீவும் ஹிந்து தானே? ஈரானும் முக்காடு சவுதியும் முக்காடு.

முக்காடுகள் இந்துக்களை விட பலமடங்கு ஒற்றுமை கொண்டவர்கள் என்பது கண்கூடு. இன்று சிரியாவில்கூட அவர்களின் அரபு லீக் காத்திரமான பாத்திரத்தை வகிக்கின்றது.

ஆனால் கிந்திய இந்துக்கள், ஆரியர்கள், திராவிடர்களை - குறிப்பாக தமிழர்களை அழிப்பதில் நீண்ட கொள்கையை கொண்டுள்ளார்கள்.தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் ஒன்றும் இல்லை. ஒருசில மாணவர்கள் அவுசில் கொல்லப்பட்டால், அதி உச்ச இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கின்றது. இது ஒரு உதாரணம். சிங்களவன் கொன்ற ஒவ்வொரு தமிழனின் உயிரிலும் கிந்திய கைகளும் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராஜதந்திர அடிப்படையில் எதிரியுடன் எதரி சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து கைகோர்ப்பதில் தவறில்லை. சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுக்கத் தமிழர்களும் சிங்கள அரசாங்கத்திற்கு அமோக ஆதரவை அளிக்கலாம். இந்தியாவிற்கு மிகவும் பிடிக்காத செயல். தமிழர்களின் ஆதரவு கிடைக்கும்போது அவர்களும் அதைச் செய்வது மேலும் அதிகமாகும். எது எப்பஎயோ தமிழீழம் என்பது ஒரு கனவாகத்தான் இருக்கின்றது, ஒன்றிணைந்த இலங்கைக்குள் தான் அரசியல் தீரு;வு என்று உலகமே அங்கீகரிக்காதபோது அது இப்ஆபாதைக்குச் சாத்தியம் இல்லை. எனவே அரசியல் சூழ்நலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் தழிழர்கள் எப்படியோ சிங்களவருடன் சேர்ந்து தான் வாழ்ந்து எங்கள் இருப்பைத்தக்க வைக்கவேண்டியுள்ளது. தக்கவைக்கும் நேரத்தில் எமது தனியுரிமைக்கான படிமுறைகளில் மாற்றங்களை ஸ்திரமாகக் கொண்டுவரலாம். தமிழர்கள் சீனாவின் .ராணுவக்கட்டமைப்பை யாழிலும் நிறுவ சிங்கள அரசாங்கத்திற்கு முழு ஆதரவு அளிப்பது.

சீனாவின் முதலீடுகளை வடபகுதியில் அதிகரிக்க இடமளிப்பது. இநதியாவின் உற்பத்திகள் வாங்குவதைக் குறைப்பது. அப்ஆபா ஒட்டுமொத்த இலங்கையும் இந்தியாவிற்கு எதிராகிவிட்டது என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவது. சீனாவின் ஆதிக்கம் மேலாண்மை பெறச்செய்வதால் இந்தியாவும் சும்மா இருக்காது அமெரிக்காவும் சும்மா இருக்காது ஐரோப்பாவும் சும்மா இருக்காது. நிச்சயமாக அரசியல் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். நாங்ள் எப்படி அங்கு மனம் குலைந்து இருக்கின்றோமோ அதே மனக்குலைவுகள் இங்கு ஏற்படும். பின்னர் அதற்கேற்றவிதத்தில் காய்களை உருட்டவேண்டியது தான்

முக்காடுகள் இந்துக்களை விட பலமடங்கு ஒற்றுமை கொண்டவர்கள் என்பது கண்கூடு. இன்று சிரியாவில்கூட அவர்களின் அரபு லீக் காத்திரமான பாத்திரத்தை வகிக்கின்றது.

ஆனால் கிந்திய இந்துக்கள், ஆரியர்கள், திராவிடர்களை - குறிப்பாக தமிழர்களை அழிப்பதில் நீண்ட கொள்கையை கொண்டுள்ளார்கள்.தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் ஒன்றும் இல்லை. ஒருசில மாணவர்கள் அவுசில் கொல்லப்பட்டால், அதி உச்ச இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கின்றது. இது ஒரு உதாரணம். சிங்களவன் கொன்ற ஒவ்வொரு தமிழனின் உயிரிலும் கிந்திய கைகளும் உள்ளது.

உலகில் 100 கோடி முஸ்லீம் இருந்தும் 7 கோடி யூதனை என செய்ய முடிந்து, அதை cஇட எண்ணெய் வளம் இருந்தும் இவர்களாள் மேற்கை கட்டுப்படுத்த இயலவில்லை , மேற்கு சாதூர்யமாக இவர்க்ளை பிரித்து வைத்திருகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபு மக்களிடையே ஒற்றுமை இருந்தாலும், அரபு நாடுகளிடையே பகைமை உணர்வை நிர்வகிப்பதில் மேற்குலகம் வலுவாகச் செயற்படுகின்றது,. ஆட்சியாளர்களின் பிழையன்றி அரபு மக்களின் பிழையல்ல. ஆமற்குலகம் இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதுமே குடடையைக் குழப்பித்தான் முpன் பிடிக்கின்றது.

உலகில் 100 கோடி முஸ்லீம் இருந்தும் 7 கோடி யூதனை என செய்ய முடிந்து, அதை cஇட எண்ணெய் வளம் இருந்தும் இவர்களாள் மேற்கை கட்டுப்படுத்த இயலவில்லை , மேற்கு சாதூர்யமாக இவர்க்ளை பிரித்து வைத்திருகிறது

இதைத்தான் நாமும் கற்கவேண்டும். எம்மிடமும் இவர்களைப்போன்ற உணர்வும், ஒற்றுமையும், உழைப்பும், நாட்டுப்பற்றும் வேண்டும்.

இது வழமையான வாளைப்பழத்தில் ஊசி யேற்றும் முயற்சி.

இதோ வழமையான நச்சு வசனங்கள்

தமிழருக்குரிய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்று இந்தியாவோ அல்லது இலங்கைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களோ அடி ஆழ்மனதில் இருந்து எண்ணவில்லை என்பதே யதார்த்தம்.

தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றிக் கதைத்திருக்கும் கதை பச்சை நஞ்சு. இந்திரா காந்தியை J.R. பெண் பிசாசு என்று கூறியதால் அவர் நிச்சயாமக இலங்கைக்கு தக்க பாடம் புகட்ட இருந்தார். நமது போறாத காலம் ரஜீவ் வந்தார். இந்தியா எப்போதுமே தனது எல்லைகளைப் பாதுகாக்கமுடியாமல் தவிக்கும் நாடு. இந்திரா ஒருவர் மட்டும் தான் பாகிஸ்த்தானைப் பிரித்தார். அவ இல்லாமல் மாலைதீவை பிடிக்க இந்தியா ஆடிய நாடகம் உலக சரித்திரத்தின் பெரிய பகிடி.

வெளியுலக வல்லரசுக்கள் தங்கள் இராணுவ அல்லது இலங்கைப் பொருளாதாரவிருத்திக்கு உதவி செய்வதால் இலங்கையில் தங்கள் இருப்பிடத்தை நிலையாக்கிவிடலாம். இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். நிச்சயமாக. இதனால் இலங்கை அரசை இந்தியா ஒரு நாளும் பகைக்காது. இதனால் தான் கச்சதீவு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.

இந்தியாவுக்கு இலங்கை முழுவதையும் பிடிக்க வேண்டும் என்றது இடைக்கால ஆசை. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது வெளியுலக வல்லரசுகளின் தாக்கத்தால் எனபது நிரூபிக்க படாததொன்று. உண்மையில் ரஜீவ் காலத்தில் J.R. பிருத்தானியாவிடம் உதவி கேட்ட போது தச்சர் சொன்ன பதில், இலங்கை உதவி எடுக்க வேண்டிய நாடு இந்தியா மட்டும் எனபது தான். அதாவது மேற்குநாடுகள் தேவையில்லாமல் இலங்கைக்குள் உள்ளிடவில்லை.1963 இல் இலங்கை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தகவல்ப் பரிவர்த்தணம் செய்து போரை நிறுத்த உதவியது. இலங்கைக்குச் சீனாவிடம் இருந்த உறவு இந்தியா ஒரு நாட்டுக்கு மட்டும் தான் பயன் பட்டது. சீனா இலங்கையில் இன்று மாதிரி காலூன்றி இந்தியாவை மிரட்ட எந்தக்காலமும் முயன்றது கிடையாது. இது அம்பாந்தோட்டை துறை முகத்தின் பின் தோன்றி இருக்கும் புதிய உறவு. இந்தியா தெற்கே தனது அணு ஆராச்சிகளையும் மற்றைய திட்டங்களை போட்டதின் காரணம் இலங்கையூடாக சீனா காலூன்றலாம் என்றதை எதிர் பார்த்திருக்கத்தால் மட்டுமே. இன்றைய அணில் ஏறவிட்ட நாயின் நிலை மலையாளிகளால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவுக்குள் மூன்று லட்சம் மலையகத் தமிழர்கள ஏற்றதும், கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததும் இந்திரா காந்திக்கும் ஸ்ரீமாவுக்கும் இடையில் இருந்த நட்பின் பிராகரமேயன்றி ஒருவர் மீது ஒருவருக்கிருந்த சந்தேகத்தால் ஒருவரை ஒருவர் பலப்படுத்த முயன்றதால் அல்ல.

இந்த விடையம் தமிழர்களைப்பொறுத்தளவில் பாலா அண்ணையால் முடிவுகட்டப்பட்டுவிட்டது. யாரோ எதையோ பார்த்துவிட்டு வந்த மாதிரி திரும்பத்திரும்ப கிளற முயல்வது கபடத்தன்மை நிறைந்தது:-

ராஜீவ் கொலையின் பின்னணி வட இந்தியாவில் இருந்தும் தமிழ்நாட்டில் கொலை நிகழ்ந்தவுடன் புலிகள் தான் செய்தார்கள் என்ற முடிவு உடன் எடுக்கப்பட்டு அதற்கான ஆதாரங்கள் புலிகள் மேல் மேலதிகமாகச் சித்திரிக்கப்பட்டு மூலகர்த்தாக்கள் யார் என்பது உலகம் அறியாமலே முடக்கப்பட்டாலும் இன்னும் அதற்கான கேள்விக்கணைகள் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன

அதுதான் புலிகள் இல்லாது அமெரிக்காவில் இணைத்தலைமை நாடுகளும் இந்தியாவும் நடத்திய பேச்சுவார்ததை.

இந்தியா இதில் பங்கெடுக்கவில்லை. இந்தியா, சீனா ஆயுதங்கள் கொடுப்பதாககூறிக்கொண்டு கடைசி நேரத்தில்த்தான் நேரடியாகத் தலையிடத் தொடங்கியது. அது பிரியங்கா நளினியை சந்திததின் பின் ஏற்பட்ட மாற்றம். அமிர்தாஜ் எவ்வாறு புலிகளுக்கு கிடைத்த வீசா மறுக்கப் பட்டதென்று விரிவாக கூறவில்லை. இதில் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து என்று கூறுவது மிகைப்படுத்த பட்டதொன்று. இது சில அதிகாரிகளின் வெற்றியும் சில அதிகாரிகளின் தோல்வியும் தான் நடந்து முடிந்த விடையம்.

சிங்கள அரசாங்கம் என்றும் இந்தியாவின் இலங்கை மீதான இம்சையினை ஈடுகட்டிக்கொண்;டுதான் வந்திருக்கின்றது.

இதுதான் காட்டுரை ஆசியரின் மிகப்பெரிய கவலை. அதாவது இனிமேலும் இந்தியா இலங்கையை கொடுமைப் படுத்த சிங்களம் ஈடுகட்ட முடியாது. நீங்ககள் தமிழர்கள் தான் ஈடு கட்ட வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல வரும் வாதம். நன்றி இல்லாத சிங்களம் ஒவ்வொரு இடத்திலும் இந்தியா வலியவந்து சிங்களத்தை காப்பாற்றி முடிய இப்படி ஆட்களை வைத்து இந்தியாவை உள்ளாலே குடைந்து கொல்லப்பார்க்கிறது. அழகுதான்.

அத்துடன் தமிழனுக்கு இனிமேல் ஆயுதம் எடுத்துப் போராடும் எண்ணம் இல்லை.

அப்படி இருந்தாலும் பிரபாகரனுக்கு கிடைத்த ஆதரவுபோல் இனிமேல் யாரும் வரமுடியாது.

இப்போதிருக்கும் தலைமைகள் உறுதியான தீர்மானத்தை எடுக்கக்கூடியவர்களும் அல்ல. பொதுசன ஆதரவும் முழுக்க முழுக்கக்கிடையாது.

என்னத்தை சொல்ல. ஆசிரியர் தன்னைத்தான் காட்டிக்கொடுக்கிறார்.

உலகமும் தமிழனுக்கு உரிய உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் எண்ணம் துளியளவேனும் இல்லை.

இந்தியாவை ஒரு கைபார்த்துவிட்டு உலகிற்கு வருகிறார் ஆசிரியர். இருந்தாலும் இராசபகசாவின் சுதந்திரதினப்பேச்சு மற்றைய நாடுகள் சொல்லும் தீர்மானத்தை தான் இலங்கையில் அமூல்ப்படுத்த முடியாதென்பதே. மேலும் எதற்காக மார்சில் வர சொன்ன பீரிஸ் பிப்பிரவரியில் வர முயல்கிறாரோ தெரியாது.

இந்தியாவைச் சீற்றம் கொள்ளும்வகையில் இலங்கை அரசின் நடைமுறைகளில் மாற்றம் செய்வதே தமிழர்களுக்கு வேண்டிய இராஜதந்திரம்.

சிங்களத்திடம் தமிழர்களுக்காக பேசி ஒரு தீர்வும் காணமுடியாமல் தவிக்கிறார் சம்பந்தர். If can't beat them join them என்றுதான் ஆசிரியர் சொல்கிறார். அதாவது உங்களுக்கு இராஜதந்திரமில்லாததால், உங்கள் உரிமையை வெல்ல மாட்டீர்கள்; செய்யத்தக்கத்து சிங்களத்தை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற இந்தியாவை கோபப்படுத்துங்கள்.

அதாவது நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை; ஆகவே நீங்கள் இலங்கை அரசுடன் இணந்துவிட்டதாக உலகநாடுகள் எல்லாம் நம்பத்தக்கதாக காட்ட வேண்டும்.

அப்ஆபா ஒட்டுமொத்த இலங்கையும் இந்தியாவிற்கு எதிராகிவிட்டது என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவது.

எனவே நீங்கள் இனிமேல் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிக்காதீர். ஆனால் இனிமேல் செய்ய வேண்டியது:

இநதியாவின் உற்பத்திகள் வாங்குவதைக் குறைப்பது.

இலங்கை ராணுவத்தை ஈழத்திலிருந்து வெளியேற்ற முயலாதீர். பதிலாக சீனா ராணுவத்தையும் சேர்த்து அதை இன்னும் பலமாகுங்கள்.

சீனாவின் .ராணுவக்கட்டமைப்பை யாழிலும் நிறுவ சிங்கள அரசாங்கத்திற்கு முழு ஆதரவு அளிப்பது.

கண்ணை மூடிக்கொண்டு அவரமாக இதை செய்யுங்கள். ஏன் எனில் மேற்குநாடுகள், நோர்வேயை அனுப்பி இந்தியாவைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். ஆகவே இதை உடனே செய்யுங்கள். அதன் பின் உங்களை உலகம் ஆப்பிழுத்த குரங்கைப் பார்த்து நகைப்பது போல நகைத்தால் அதை பிறகு சுதாகரித்துக் கொள்ளளாம்.

பின்னர் அதற்கேற்றவிதத்தில் காய்களை உருட்டவேண்டியது தான்

எல்லாம் கற்ற இந்த அரசியல் ஞானி இலங்கைத்தமிழர்களுக்கு ராஜதந்திரம் வரையும் எல்லாம் கற்பிக்க வந்திருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் அவர் சொல்லிக்கொடுக்க மாட்டார். அது அவர் சிறுவதில் படித்த திருக்குறளான

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு"

Edited by மல்லையூரான்

பிரபாகரனும் ஹிந்து ராஜீவும் ஹிந்து தானே? ஈரானும் முக்காடு சவுதியும் முக்காடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனை சுட்டுக் கொல்லுங்கள் என்று இந்திய அமைதி காக்கும் படையினருக்கு உத்தரவிட்டு இருந்தார் ராஜிவ் காந்தி.

இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றுக் கொண்டு இருந்த காலம். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப் பகுதியில் பலாலியில் ஒரு பேச்சு இடம்பெறுவதாக இருந்தது. இப்பேச்சில் கலந்து கொள்ள பிரபாகரன் பலாலிக்கு வருவார் என்றும் இருந்தது.

இந்நிலையில் பேச்சுக்கு வருகின்ற பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ராஜிவ் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதாவது இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை ஆரம்பம் ஆகின்றமைக்கு முன்பாகவே இவ்வுத்தரவை பிறப்பித்து இருக்கின்றார்.

இந்திய அமைதிப் படை தளபதியாக இருந்தவர் லெப். ஜெனரல் தீபந்தர் சிங். இன்னொரு அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிக்கிரத் சிங்.

ராஜிவ் காந்தியின் உத்தரவு இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஜே. என். டிக்சிற் மூலம் தொலைபேசியில் ஹரிக்கிரத் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டது.

http://tamilcnn.com/moreartical.php?newsid=11828&cat=srilanka&sel=current&subcat=2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுடனான உறவு தமிழர்களுக்கு எதையும் பெற்றத்தரப்போவதில்லை என்பதும் தமிழீழம் என்ற ஒரு இலக்கைத்தமிழர்கள் அடைய இந்தியா விடப்போவதில்லை என்று தெரிந்தும் கூட தங்கள் பாதையை மாற்றி அமைக்க முயலவேண்டும்என்று ஒரு ஆலோசனை தான் கூறப்பட்டதே தவிர (கடந்தகாலக் கற்றுக்கொண்ட பாடங்களின்படி) மாற்றுங்கள் செல்லுங்கள் என்பதும் அவர் அவர் விருப்பம். கடந்த கால அனுபவங்களை வடிவாகப்படியுங்கள். தமிழர்கள் சிலரின் போக்கு கல்லெறிந்தவன் எங்கோ இருக்க கல்லுக்குத்தான் குழவி குத்துமாம். அறியாமை தான். கல்லுக்குக் குத்தும்போது பிரச்சனை தீரப்போவதில்லை என்பது யதார்த்தம்.

கமரூன் நாட்டிற்கு சென்றுள்ளார் பீரிஸ். இது ஆபிரிக்க கண்டத்தில் உள்ள முன்னைநாள் பிரெஞ்சு காலனித்துவ நாடு. 47 அங்கத்துவர்களை கொண்ட ஐ.நா. மனித உரிமைக்குழுவில் ஒரு நாடு.

பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள், பிரெஞ்சு மொழி கதைக்க கூடியவர்கள் ஊடாகவும், கமரூன் நாட்டு தூதுவர்களை சந்தித்து எமது பக்க வாதங்களை முன்வைக்கவேண்டும்.

இலங்கையை உடைக்க இந்தியா விடாது ஆனால் இந்தியாவை உடைக்க இந்தியா பார்த்துகொண்டா இருக்கப் போகிறது. மனதார நாங்கள் தமிழீழத்தை அடைய இந்தியா விடாது என்போர் எப்படி சிங்களத்திற்காக இந்தியாவை பலதுண்டுகளாக உடைக்க வேண்டும் என்று தங்கள் கருத்துகளில் எழுதியிருக்க முடியும்.

புஸ் காலத்தில் அமெரிக்கா தமிழருக்கு எதிராகத்தான் செயல் பட்டது. அதை வைத்து நிகழ்காலத்தை மயங்க பண்ணுவது சரித்திரம் படிப்பது ஆகாது.

இந்திரா காலத்தில் இந்தியாவுடனான தமிழரின் உறவு ஏன் திருப்ப வர முடியாது. மலையாளிகள் கையில் ஆடும் சோனியாவும், காங்கிரசும் எத்தனை காலம் பதவியில் இருக்க முடியும்?

எறிய முதல் எழுந்தோடிச்செல்லும் ஏவல் பேய்கள் குளவிகள் இருப்பதை தெரிந்து வைத்திராதது ஒன்றும் பெரிய ஏமாற்றம் இல்லை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகோதா சொன்னது போல் இலங்கைத்தமிழர்களில் புலம் பெயர் தமிழர்கள் பல மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள். அந்த அநத் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் அங்கு சென்று தமிழர்களின் பிரச்சனைகளை விரிவாக அவர்களுக்கு விளங்க வைப்பதால் தமிழருக்கு எதிரான அந்த நாட்டின் நடவடிக்ககளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கலாம்.

நோக்கம் ஒன்றை வைத்துக்கொண்டு பல பாதைகளில் நாங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.