Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய அரசைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருக்கிறது: பா.உ சுரேஸ் பிரேமசந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Suresh_Premachacdren_150TNA.jpg

இறுதிப் போரின் போது சுமார் 75,000ல் இருந்து 146,679 பேர் வரையானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வு கிடைக்க கனடிய அரசு பெரிதும் உதவ வேண்டுமெனதும் கனடிய மனித உரிமை மையத்தின் மாநாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து காணொளியூடாக உரையாற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

காணாமற் போணவர்களின் இந்த எண்ணிக்கை அப்போது முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த இமல்டா சுகுமாராலும், மன்னார் பேராயர் இராயப்பு யோசப் அவர்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது எனவும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு இதனைக் தனது அறிக்கையில் குறிப்பிடத்தவறிவிட்டது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

போரின் போதான கற்ககைள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது வன்னியில் இறுதிப் போரில் பலியான பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றிய குறிப்புக்களையோ, அங்கவீனர்களானவர்கள், காணாமல் போனவர்கள் போன்றோரின் விபரங்களைக் கொண்டிருக்கவில்லை.

canada_tamil_congrass_060212_400-001.jpg

canada_tamil_congrass_060212_352-006.jpg

சர்வதேசத் தலையீடு மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கு உறுதியானதொரு தீர்வை ஏற்படுத்த உதவும் எனவும் மகிந்த அரசானது பராளுமன்றத் தெரிவுக்குழு மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்றவற்றில் மூலம் சமர்பிக்க முயலும் தீர்வுகள் ஏதும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கனடிய அரசாங்கம் ஆக்கமானதொரு தீர்விற்காக வழிவகுக்கும் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், தமிழ்மக்களிடம் உள்ளதாகவும் கொள்கைவழி நிற்கும் கனடிய அரசு இதற்கு உதவ வேண்டுமெனவும் இந்த மாநாட்டினூடாக வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

canada_tamil_congrass_060212_345-005.jpg

canada_tamil_congrass_060212_420-002.jpg

சிங்கள பௌத்த மேலாதிக்கம் மேலோங்கியுள்ள இலங்கைத் தீவில் தென்பகுதித் தலைவர்கள் தமிழர்களிற்கு உரிமை கொடுத்தால் அவர்களால் பிரிந்து போய் விடுவார்கள் என்ற கற்பனா வாதத்தில் இருப்பதாகவும் இந்நிலையில் சர்வதேசத்தின் தலையீட்டுடனே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்றும் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட இந்த கற்கை மாநாட்டில் 24இற்கு மேற்பட்ட கனடாவின் சகல கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

canada_tamil_congrass_060212_317-004.jpg

canada_tamil_congrass_060212_275-003.jpg

இதேவேளை, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலமாகவுள்ள கியூபெக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியிலிருந்து கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அன்றைய தினம் இரவு கனடியத் தலைநகரில் இடம்பெற்ற சீனர்களின் புதுவருட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது,

தான் அன்று பிற்பகல் கனடிய மனிதவுரிமை மையம் என்ற அமைப்பு நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்டதை அவர்களிற்கு எடுத்தியம்பியதோடு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதவுரிமைக்காக அந்த மாநாடு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததோடு,

பாராளுமன்ற உறுப்பினர்களின் மதியவுணவறையில் கூட அந்த மாநாடே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பேசுபொருளாக இருந்ததாகவும், கனடிய அரசபொறிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஏனைய இனங்களும் கனடிய மனிதவுரிமை மையத்தின் ஒழுங்கமைப்பைப் பின்பற்றி, தங்களது செய்தி கனடியத் தலைவர்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டின் சிறப்பை தெளிவாக எடுத்தியம்பியது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய அரசியல்வாதிகள் தமிழ் ஈழ மக்கள் மீது காட்டும் அக்கறைக்கும், செலவிடும் நேரத்தையும் மனதில் வைத்து கட்சி உண்டியலிலும் காசு கொஞ்சம் போட்டால் பலன் இன்னும் கூடும். 

படங்களில் இளையவர்களைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத புத்துணர்ச்சி தோன்றுகிறது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இதேவேளை தாயகத்திலிருந்து குரல்கொடுத்து மாநாட்டிற்கு தாயகத்தின் நிலையை தெளிவுபடுத்தியதும் ஒருவித நல்ல சகுனமாகவே தெரிகிறது. நன்றிகளும் வாழ்த்துக்களும்

கனடிய அரசியல்வாதிகள் தமிழ் ஈழ மக்கள் மீது காட்டும் அக்கறைக்கும், செலவிடும் நேரத்தையும் மனதில் வைத்து கட்சி உண்டியலிலும் காசு கொஞ்சம் போட்டால் பலன் இன்னும் கூடும்.

ஓரளவுக்கு இந்த விடயத்தில் முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் அதிகமாக நம்மவர்கள் கட்சிகளில் இணைவதும் ஒரு சிறு பங்களிப்பு செய்வதும் மிக மிக முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களில் இளையவர்களைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத புத்துணர்ச்சி தோன்றுகிறது.

அண்ணா வாய்க்கு வாய் இளையோரை அரசியல் களத்திற்கு வர கூவினார். 

பொடிசுகள் கலக்குதுகள்.  இப்படியான செய்திகளை  படிக்கும்போது தமிழீழத்தின் சுதந்திரத்தில் நம்பிக்கை கூடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரளவுக்கு இந்த விடயத்தில் முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் அதிகமாக நம்மவர்கள் கட்சிகளில் இணைவதும் ஒரு சிறு பங்களிப்பு செய்வதும் மிக மிக முக்கியம்.

ராதிகா சிற்சபை ஈசனின் அரசியல் வெற்றியின் பின் அங்கு இளையோர் பலர் அரசியலில் கவனம் காட்டுகிறார்கள் என்று எனது கனடா நண்பர் கூறினார்.

நீங்கள் கூறியது போல் இன்னும் கொஞ்சம் ஊக்கம் காட்டலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதிகா சிற்சபை ஈசனின் அரசியல் வெற்றியின் பின் அங்கு இளையோர் பலர் அரசியலில் கவனம் காட்டுகிறார்கள் என்று எனது கனடா நண்பர் கூறினார்.hu

நீங்கள் கூறியது போல் இன்னும் கொஞ்சம் ஊக்கம் காட்டலாம்.

சின்ன திருத்தம். இளையோர் பலர் அரசியலில் குதித்ததால் தான் ராதிகா வெற்றி பெற்றார். கனடாவில் எம்மவர் பலர் குதிதுள்ளர்கள் அத்துடன் பல் வேறு கட்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். புதிய அமைப்புகளும் உருவாகி சிறப்பாகவும் செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.