Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

கறுப்பன்

நன்றி உங்கள் பதிலிற்கு. ஆனால் நான் எதையும் முடிச்சுப் போடவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர்களிடமே தேசியம் பற்றியோ அல்லது நாட்டுப்பற்று பற்றியோ கேட்டுப் பாருங்கள். தேவைகளைப் பொறுத்து பிளந்து கட்டி விடுவார்கள். இதனையே நான் குறிப்பிட்டுள்ளேன்.

  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply

இங்கு அனைவரையும் பொருளாதார அகதிகள் என்று கூறி உண்மையாக அங்கு பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு வந்து அரசியல் அகதிகளாக வாழும் மக்களின் மனங்களை நோகடிக்காது இருப்பது நலம். நீங்கள் பொருளாதார அகதியாக வந்திருக்கலாம். ஆயினும் துன்பங்களை அனுபவித்தவர்களை நீங்கள் கூறும் வார்த்தைகள் காயப்படுத்தலாம். அவர்களின் துன்பங்களில் குருதிகளில் நீங்கள் பெருளாதார அகதிகளாக வந்து அரசியல் தஞ்சம் கோரியிருக்கலாம். உங்களில் சிலரிற்கு அத்தகைய துன்பங்கள் நேராமல் இருந்திருக்கலாம். ஆயினும் அதை அனுபவித்தவர்களிற்கு தெரியும் எப்படி கொடுமையான நிகழ்வுகள் அவை என்று. எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்.

மன்னிக்கவேண்டும் அருவி. யாருடைய குருதியில் குளிர்காய்ந்து விட்டு....

எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை விட எனக்கு வயசு குறைவுதான். ஆரம்ப பிரச்சினைகள் எதுவும் எனக்கு தெரியாது. ஏன் சண்டை தொடங்கியது என்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் விடுதலையை விரும்புவன். தேசியத்தை மதிப்பவன். ஆனால் கேள்வி புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி தாயகம் போவர்களா இல்லையா என்றால் அதிகமானோர் போகமாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்து.

இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.

விளக்கம் தேவை. விடுதலைப்போராட்டம் நடக்கின்ற நாட்டில் பிறந்தது என் குற்றமா???

:roll: :roll:

இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.  

விளக்கம் தேவை.  :roll:

இராணுவ அடக்குமுறைகளில் இருந்து இராணுவத்தால் பலவழிகளிலும் துன்பத்தை அனுபவித்து தம் குருதியைச் சிந்தி நடைப்பிணமாக இருந்த அதிலிருந்து விடுபட வெளியேறிய மக்களைக் குறிக்கவே அவ்வார்ததையைப் பிரயோகித்தோம். அவர்களின் பின்னால் ஏதோ ஒரு காரணததிற்காக வந்தவர்கள் தான் இன்று இவ்வாறு பொருளாதார அகதிகள் எனத் தம்மை விழிப்போர். அவர்கள் எப்படியாக அகதிநிலையை புலம்பெயர் நாடுகளில் கோரினார்கள். அற்றையவர்களிற்கு நடந்தவற்றை தமக்கு நடந்தவையாக காட்டிக்கொண்டனர். அவ்வாறனவர்களிற்காகவே அவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. ஒரு வார்த்தை சொன்னதற்காகவே அப்படி விளக்கம் கேட்கும் நீங்கள் அவர்களின் துன்பங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரம் செய்துவிட அவர்களை கீழே தள்ளும் நிலையில் இன்று இருக்கிறீர்களே.

அருவியில் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வசம்பு அவர்கள் கூறியமாதிரி சுயநலம் ஒன்றுக்காய் நாம் பல முகமூடிகளை அணிவது வழமை தான். அது நானாக தன்னும் இருக்கலாம். ஆனால் போர் முடிந்ததும் இங்கு இருப்பவர்கள் அங்கு போவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் அற்றது. வேண்டுமென்றால் நாம் அப்படி கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்துக்கு எமது நகரத்தில் இருந்து யாழ் சென்றவர்கள் மீண்டும் இப்படி ஒரு பயணத்தை இனி செய்யப்போவதில்லை என சலித்துக்கொள்கிறார்கள். இவர்களா அங்கு போய் நிரந்தரமாக இருக்கப்போகிறார்கள். நான் இப்படி ஒரு கேள்வியை எமது நகரத்தில் இருக்கும் பல தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் என்னை நையாண்டி செய்வதுபோல் சிரிக்கிறார்கள். முடிவு என்னவென்றால் யாரும் அங்கு போய் வாழ தயாராக இல்லை. சும்மா உதட்டளவில் தான் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள். தாயகம் தேசியம் என்று எல்லோரும் கதைக்கலாம் அப்படி உணற்சிவசப்பட்டு கதைப்பவர்களை பார்த்து ஒரு சிறிய கேள்வியை கேட்கிறேன். உங்களுக்கு அப்படி ஒரு தாய் நாட்டு பாசம் இருந்திருந்தால் ஏன் வெளிநாடு வந்தீர்கள் தாயகத்தில் இருந்து போராடி இருக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.

-

நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:

இங்கு கேட்ட கேள்வியே சுதந்திரம் கிடைத்தபின்னர் என்பதுதான். ஒரு சுபீட்ச்சமான நாட்டில் வந்து வசிக்க மாட்டோம் எண்று அதுவும் காணிநிலச்சொந்தக்காறர் சொல்லுவார்கள் என்பது வசம்பு ஊமையால் மட்டும்தான் நிறுவமுடியும்.

இங்கு சொல்வது இப்போதய நிலையில் ஈழத்துக்கு மக்கள் போவார்களா என்பது பற்றி இல்லை. சுபீட்ச்சமான எங்களின் தேசத்தைப் பற்றியது.

கரும்பு தின்னக் கூலி தருவதுபோல ஐரோப்பாபோல ஒருநாடு சொந்த நாடாக கிடைத்தால் அதுவும் எமது மொழி பேசுபவர்களாய் கிடத்தால் கசக்கும் என்பவர்களை என்ன சொல்ல.

எனது நாடு சுபீட்ச்சமாக எல்லா வாய்ப்பும் வசதியும் வளங்களும் உள்ள நாடு, அப்படி சுபீட்சமாகாது எண்று கனவுகாண்பவர்களிற்காக கவலைப்படுகிறேன்.

எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.

ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.

-

நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

உணர்வு என்பது மக்களின் மனங்களில் இருப்பது. அது எப்போதும் பொங்கி வருவது கிடையாது தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல. எனது நாட்டின் தலைவிதியை நிர்மானிப்பது வேற்று நாட்டானாய் இருக்கமாட்டான் நாம்தான்.

இங்கு வசம்பு ஊமையினால் சொல்லப்படும் கருத்தின் ஆளம் தெரிந்தா உளறுகிறீர்கள்.?

இங்கு வசம்பு ஊமை சொல்லும் கருத்தின் ஆளம் எதுவானால்.

(எதிர்கால வாதங்கள் இப்படி இருக்கும்)

*ஆகவே தங்களின் பணங்களை தேசியத்துக்கு வளங்குவது தேவை அற்றது.

*மக்கள் தேசியத்தில் ஆதரவானவர்களாய் நடிக்க தேவை இல்லை. ஆதரவு கொடுக்க வேண்டாம்.!

2. பல தோவைகளுக்கான முகமூடிதான் தேசியம்.

*அதாவது தேசியம் எண்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் தேசிய வாதிகளிடம் புலம் பெயர் மக்கள் அவதானமாக நடவுங்கள். உதவிகள் ஆதரவு வளங்காதீர்.

* தேசியம் பேசுவோர் பலபேர் உண்மையான தேசிய வாதிகள் கிடையாது உங்களின் உதவிகளை அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

இதையும் வந்து நீக்குமாறு வலைஞனை வேண்டுகிறேன். வாய்யா.

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

நீங்கள் சொல்வதை சொல்வது தவறாகுமா என்ன.? உங்களின் வேசத்தை கலைக்க வேண்டாம். ?

நீரும் பொறுமையாக இரும் ஐரோப்பாவில் உமது பிள்ளைக்கு இங்கு வெள்ளைக்காறன் என்ன பெயர் சொல்கிறான் எண்று அறிவீர் அப்போ வாரும் ஊருக்கு.

அகிலன் எழுதியது:

உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.

அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.

அறிந்ததனால் தானே எழுதுகிறோம். :P

நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??

நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??

கற்பனையின் எல்லையில் இருக்கிறீர். வேசம் போடுபவர்களை எப்படி போடுகிறார்கள் எண்று குறிப்பிடலாமே. கண்டமானத்துக்கு கல் எறிந்தால் எதாவது விழும் எண்ற நினைப்பா.?

மற்றயோரைச் சாட அவர்கள் எப்படியானவர் எண்று சொல்ல உமது விசேட தகுதி என்ன.?

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உமக்கு சொர்க்கம்தான்.

அகிலன்

உம்மைப்போல் ஒருமையில் பதிலெழுத எனக்கும் தெரியும். ஆனால் அப்படி எழுதி உமைப்போல் தாழ்ந்து போக நான் விரும்பவில்லை. என்னைக் களத்தில் தெரிந்தவர்களுக்குத் தெரியும் நான் சுவிசில் இந்நாட்டு மக்கள் என்னைக் கேவலமாக அழைக்கும் அளவிற்கு நான் வாழவில்லை. அப்படி ஒருவன் அழைக்க முற்பட்டால் அவனை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்தே தீருவேன். அடுத்தவனைப் பற்றி எழுதும் தங்களைப் போன்றோரே ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாது தரக்குறைவாக எழுதி பின் இது பற்றி எழுதுவது நல்ல நகைச்சுவை. நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.

வசம்பு என்ன மப்பா.? எங்கு ஒருமையில் எழுதி இருக்கிறது எண்று காட்ட முடியுமா.? முடியவில்லை எண்றால் பொய்யான குற்றச்சாட்டா.??????

நீர் வீரன் தான் ஐயா. :lol::lol::lol::lol:

(லக்கிலுக் சொன்னது. றிப்பீட்டு.)

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் மத்தியில் தாம் புலம் பெயர்ந்து வாழ்வதா அல்லது புலத்தில் வாழ்வதா என்பதில் வேறு வேறு கருத்துக்கள் காணப்படலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் பலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பாகப் பாவித்து எழுதப்பட்ட கருத்துக்களினால் தானே தவிர வேறில்லை. நானே அல்லது வேறு ஒருவரோ புலத்தில் வாழ்வதா அல்லது புலம் பெயர்ந்து வாழ்வதா என்பது எனது தனிப்பட்ட முடிவு. அதனை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக எனது அல்லது இன்னுமொருவரது சூழலை வைத்து அல்லது மன நிலையை வைத்து அப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப்பற்றிய முடிவு பற்றியே என்னால் கூறமுடியும். இன்று பல புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடம் இரு கருத்துக்களும் நிலவுகின்றன.

சிலர் தாயகம் சென்று வாழ ஆவலுடன் இருக்கிறார்கள். சிலர் இல்லை நாம் அங்கு செல்லவில்லை. அதைவிட நாம் தமிழருடன் இணைந்து வாழவே விரும்பவில்லை என்று தமிழர்கள் இல்லாத ஒரு சூழலைப்பார்த்து அங்கு வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி பல காரணங்கள் காணப்படலாம். புலம் பெயர்ந்து பல மாணவர்கள் தாம் தமது சொந்த தாய் மண்ணிற்கு போய் பணியாற்றவேண்டும் என்று விருப்புடன் இருக்கிறார்கள். இப்படியானவர்களையும் உங்கள் கருத்துக்களால் நீங்கள் காயமடைய வைக்கிறீர்கள். ஆதலால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களால் ஒரு சமூகத்தின் வாழ்வை அஸ்தமனமாக்காது தொடர்ந்து வளமான கருத்தாடலைத் தொடர்வது நன்மை பயக்கும்.

சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?

அகிலன்

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???

அகிலன்

அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.

இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???

மன்னிக்கவேண்டு அது ekalappai செய்த மாயம் m க்கு பக்கத்தில இருந்த n ஐ அழுத்தியதால் வந்த வினை மீண்டுமொரு மன்னிப்புக்கள் எனது எழுத்துப் பிழைக்காய்.

உமக்கு எண்று வந்திருக்க வேண்டும்.

மற்றது வசம்பு நான் ஓடி வந்து பதுங்கியது இங்கிலாந்தின் லண்டனில் தான் ஆனால் கடந்த 4 மாதமாக யாழ்ப்பாணம் வன்னி எல்லாம் திரிந்த பின் இப்போ எனது வியாபார நடவடிக்கைக்காக இன்னும் ஒரு நாட்டில் இருக்கிறேன். இப்போ காலை வேலை.

சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?

இன்று பொருளாதாரத்திற்குத்தான் இடம்பெயர்ந்தோம் என்று கூறுபவர்கள் இதற்குப் பதிலளிப்பார்கள் அகிலன்.

சிங்கப்பூர் ஒரு காலத்தில் இலங்கையைப்போல் வரவேண்டும் என்று ஏங்கியது. எம்மவர்கள் பலரும் தம் பொருளாாதாரத்தை மேம்படுத்த அங்கு சென்று வேலை செய்தார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் இங்கு படித்த மாணவர்கள் தமக்கென தகுதியான தொழிலை பெறக்கூடிய சூழ்நிலையில் இங்கிருந்து குளிரில் துன்பப்படுவதைவிட அநேகர் மீண்டும் சென்று வாழ்வார்கள் என்று நம்பலாம்.

அதைவிட இன்றைய சூழ்நிலையிலேயே அங்கு போய் வாழ எனக்கு அறிந்தவர்கள் பலர் தயாராய் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலே என்னை -

பள்ளன் பறையன் என்றார்கள்.

குறைந்த சாதி - தள்ளிப் போ

நானும் வெளிநாடு வந்தேன்.

இங்கே என்னை கறுப்பன், பாக்கி

என்றார்கள் - நானும்

முடியட்டும் சண்டை - போகிறேன்

ஊருக்கு என்றிருந்தேன்.

சண்டையும் நின்றது -

சமாதானம் என்றார்கள் - நானும்

கட்டினேன் பெட்டியை

ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு

அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்

கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே

எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!

விடுதலை வரி கட்டினீங்களா?

இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை

அங்கே என்ன வேலை? -

கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில

இங்கே என்ன செய்யிற நோக்கம்?

தெரிஞ்ச வேலை உது தானோ?

எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!

நாட்டுக்கு உங்களால என்ன பயன்?

ம்.... கேளாத கேள்விகள்...

கேட்டால் என்ன செய்வேன்?

ஜதார்த்தமான கவி ஜூட்.

ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?

எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.

நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.