Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரட்டலுக்குப் பயந்தே ஜெனீவா கூட்டத்தைக் கைவிட்டதாக கூட்டமைப்பு புலுடா! (செய்திப்பார்வை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-sampantha-100x100.jpg

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றன.

நேற்று நண்பகல் கொழும்பு ஊடகம் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் பங்கேற்காது என்ற விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த தகவல் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயம் தொடர்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றார்.

ஜெனீவா செல்வது தொடர்பில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றதே, இந்த தீடீர் முடிவினை தற்போது எடுப்பதற்கான காரணம் என்ன? என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஜெனீவா கூட்டத் தொடருக்கு கூட்டமைப்பு செல்வதை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை. அவ்வாறு செல்வதால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுவதில் சிக்கல் எழுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கூட்டமைப்பு பயணிக்கின்ற பொழுது சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கூட எடுக்கும் நிலை தோன்றலாம் என்று சுமந்திரனால் காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வாறு எதிர் நிலை எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்கப்பட்ட போது சுமந்திரன் அதற்கு சுமந்திரனால் பதில்வழங்கப்பட்டிருக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இதேவேளை கிழக்கில் இருக்கின்ற மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் புலத்தில் இருக்கின்ற இலத்திரனியல் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருக்கின்றது. அதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஊடகங்கள் மூலமே இம் முடிவு எட்டப்பட்டிருப்பதை தான் அறிந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது, தெரிவுக்குழு விவகாரத்திற்கு பெயர் வழங்கக்கூடாது, ஜெனீவாவிற்கு செல்லவேண்டும் போன்ற முடிவுகளில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது.

நேற்றைய முடிவு எடுக்கப்பட்ட போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்தின், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவில் இருந்ததாகவும் நாட்டில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் ஆலோசிக்கப்படாமலேயே முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

ஜெனீவா செல்லாமல் விட்டமைக்கு, கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட மிரட்டலே காரணம் என்று செய்திகளை வெளியிடுமாறு சில ஊடகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதன் மூலம் தம் மீது ஏற்பட்டிருக்கின்ற அவப்பெயரை நீக்கிக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தக் கருத்து நகைப்பிற்கு இடமானது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உலக அரங்கினை எட்டியிருப்பதன் அடிப்படை பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்க்கொடையே என்பதை கூட்டமைப்பினர் மறந்திருக்க வாய்ப்பில்லை.அச்சுறுத்தல்களுக்குப் பயந்து இழந்து போன தமிழ் உயிர்களின் பெறுமதியை மறந்து உயிர்ப்பிச்சை தேடுபவர்கள் எமது இனத்தின் தலைவர்களாக இருப்பார்களா? என்பது சந்தேகமானது என்றால் கொழும்பில் உள்ள மூத்த அரசறிவியலாளர் ஒருவர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் மௌனம் சாதிப்பதன் மூலம் சம்பந்தர், சுமந்திரனின் முடிவினை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

http://www.saritham.com/?p=51885

சம்பந்தன், அதைவிட பச்சோந்தி சுமந்திரன் - இருவருக்கும் தமிழ் கூட்டமைப்பில் இருக்கும் அருகதை இல்லை!

முடிவு மாத்திரமே இப்பொது தெரியும்... விளைவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கூட்டமைப்பின் பிரசன்னம் அங்கு பெரிதாக எதையும் செய்துவிடாது.

ஒருவேளை பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் அது கொட்டமைப்புக்கு ஆசுருத்தலை விட அரசியல் பின்னடைவையே கொடுக்கும்.

உலக நாடுகளின் வார்த்தகிகளை நம்பி ஏமாறாமல் தற்காப்பு அடுப்பது நல்லது..

இது கூட்டமைப்பின் நல்ல முடிவுதான். பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்மந்தரினதும் , சுமதிரனதும் செயற்பாடுகள் திசை மாறி தான் போகிறது . அருமையான சந்தர்பங்களை நழுவ விடுகிறார்கள் . இதுதான் எமது இனத்தின் சாபம் . வெண்ணை பொங்கும்போது தாளியை உடைகிறார்கள

Edited by sudalai maadan

கருணாநிதிக்கும் சம்மதனுக்கும் பெரிய வித்தியாசத்தை காண முடிய வில்லை . 2009 இன் நடுபகுதிகளில் எப்படி கருணாநிதி எங்களை ஏமாற்றினரோ, அதே போல்தான் சம்மதணும் இன்று ... தனக்கு பின் தனது வாரிசாக சுமதிரனையும் தெரிவு செய்துவிட்டார் ..,,,, என்ன செய்யலாம் இந்த புல்லுரிவிகளை....

சம்பந்தர் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களின் பிரதிநிதி. அவர் மக்களுக்கு அவர்களின் அரசியல் தேவைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் இந்த இடத்தில் அவரின் முடிவை அவர் எவ்வாறு மக்களுக்கு விளங்கவைக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நிச்சயமாக இலங்கை அரசு சம்பந்தப்பட்ட விடையங்களில் அவர் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. தமிழ் பத்திரிகை செய்திகளை வைத்து தாமே துள்ளும் தமிழ் பத்திரிகைகள் தங்களை மக்கள் சுயநலமிகள் என்ற எண்ணம் வைக்க விடாமல் நடந்து கொள்ள வேண்டும்.

சரிதம் இரண்டு காரணங்களை வெளியிட்டிருக்கு.

1. கூட்டமைப்பு போவதால் தமிழருக்கு இலங்கை அரசால் ஆபத்து ஏற்படலாம்- சம்பந்தர் அறிக்கை.

2..கூட்டமைப்பு போவதை அமெரிக்கவும் இந்தியாவும் விரும்பவில்லை- சுந்திரனின் வாய்மொழிப்பதில்

முதலாவது முழுமை இல்லாதது. கடந்த காலத்தில் இலங்கை அரசு பலவகைத்தொல்லைகளைக் கொடுத்தது. சம்பந்தர் இவை எல்லாவற்றையும் இலங்கை அரசு திரும்பவும் செய்யகூடும் என்று சந்தேகிக்கிறாரா, இல்லை பிரதாணமாக ஒன்றை சொல்லி மிரடப்பட்டிருக்கிறாரா என்பதை அறிய தமிழ் மக்கள் ஆவல். சம்ப்ந்தரின் வார்த்த்களை சந்தேகிப்பவர்கள் குறைவு.

இரண்டாவது முழுமையானது. இந்தியாவும் அமெரிக்காவும் தடுக்கின்றனவாயின் எந்தவகையில் சிந்தித்துப்பார்த்தாலும் அங்கே போவது நல்லதல்ல. ஆனால் சுமந்திரன் வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கேள்வியே? இலங்கையிடமிருந்து பாதுகாக்க இப்படி ஒரு பொய்யை சொல்லிகிறாராயின் அவர்கள் சம்பந்த பட்ட நாடுகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவுக்குப் போகப்போகிறார்கள் என்பதால் அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஆனால் அமெரிக்காவின் விடையத்தில் கண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் உடனே காட்டிகோள்ளாவிட்டாலும் கட்டாயம் சேர்த்துவைத்து விடுவார்கள். இப்படி ஒரு பதிலை வெளிவிடவா என்பதைப்பற்றி சுமந்திரன் அமெரிக்காவுடன் கலந்து ஆலோசித்திருக்கவேண்டும். அவர்கள் சலிக்கதக்க எதையும் சுமந்திரன் செய்யக்ககூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.