Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர்

Featured Replies

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர்

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இந்தியா தற்போதைக்கு முடிவெடுக்காது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்க இலங்கை கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் ஜெனீவா பிரேரணையின் போது இந்தியா தமக்கே ஆதரவளிக்கும் என்று இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் வைத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், உடனடியாக புதுடில்லி நிர்வாகம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்காது என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், இந்தியாவுக்கு வழங்கிய பல உறுதிமொழிகளை அது நிறைவேற்றவில்லை.

பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் ஒரு ஜோக்கரைப்போல நடந்துகொள்கிறது.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை காப்பாற்றப்படவில்லை.

மறுபுறத்தில் அவர் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் அதிகப்படுத்தி வருகிறார். இது இந்திய பாதுகாப்புக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இந்தியாவிடம் உள்ளது.

இதன்காரணமாக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முடிவெடுத்து அதன் மூலம், பிரேரணை தோற்கடிக்கப்படுமானால் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு இன்னும் வசதி வாய்ப்புகளை இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார் என்று அச்சமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்தவேளையில் தமிழர் பிரச்சினைக்காக இலங்கையில் வைத்து சீனாவுடன் முரண்பட இந்தியா விரும்பவில்லை.

எனவே, ஜெனீவா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறப்படும் மார்ச் 23 ஆம் திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பாகவோ அல்லது சிங்கள மக்களுக்கு வாய்ப்பாகவோ முடிவுகளை மேற்கொள்ளாது தமது நாடு நலன் சார்ந்த முடிவையே இந்த விடயத்தில் எடுக்கும் என்று அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவரையில் இலங்கை அரசாங்கம், இந்தியா தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்களை மாத்திரமே கொண்டிருக்கமுடியும் என்றும் தமிழ் அரசியல் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmqyCRdPcgp3.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் ஒரு ஜோக்கரைப்போல நடந்துகொள்கிறது

சிங்களவரை பொருத்தவரை இந்தியா ஒரு ஜோக்கர் தான்,,,,

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர்

------

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை காப்பாற்றப்படவில்லை.

மறுபுறத்தில் அவர் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் அதிகப்படுத்தி வருகிறார். இது இந்திய பாதுகாப்புக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இந்தியாவிடம் உள்ளது.

இதன்காரணமாக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முடிவெடுத்து அதன் மூலம், பிரேரணை தோற்கடிக்கப்படுமானால் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு இன்னும் வசதி வாய்ப்புகளை இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார் என்று அச்சமும் இந்தியாவிடம் உள்ளது.

------

இதேவேளை இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பாகவோ அல்லது சிங்கள மக்களுக்கு வாய்ப்பாகவோ முடிவுகளை மேற்கொள்ளாது தமது நாடு நலன் சார்ந்த முடிவையே இந்த விடயத்தில் எடுக்கும் என்று அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவில், சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள்.... அதிகரித்து வருவதை உலகமே அறியும்.

இந்த விடயத்தில்... இனியும் கண்ணை மூடிக் கொண்டிருக்குமானால், இந்தியாவுக்குத்தான் நட்டம்.

இந்தியா தனது நாடு, நலன் சார்ந்த முடிவு எடுக்க விரும்பினால்.... தமிழீழத்தை பிரித்துக் கொடுக்க, ஐ.நா.வை வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவின் தென்பகுதிக்கு, பாதுகாப்பான நாடாக தமிழீழம் மட்டுமே சரியான தெரிவு. ஸ்ரீலங்காவை நம்பி, இந்தியா மோசம் போகக் கூடாது.

இனியாவது, இந்தியா சாதுரியமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி

இந்தியாவை நம்ப முடியாது தான் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தலும் தனது நட்புநாடுகலை எதிராக வாக்களிக்குமாறு செய்து தீர்மானத்தை த்தோல்வியில் முடிய பன்னிவிடுவார்கள்.

யாரை நாம்பினாலும் வட*****************னை நம்பலமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடுமானால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது துல்லியமாகத் தெரியும்வரை இந்தியா மதில்மேல் பூனையாக இருக்கப்போகிறது.வெல்லுகிற குதிரையில் பணம் கட்டவே இந்தியா விரும்பும்.இந்த மௌனம் சிறிலங்காமீது குற்றம் இருப்பதை இந்தியா மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம்.ஆனால் மேற்கு நாடுகள் போல் வெளிப்படையாகச் குற்றம் சொல்வதற்குத் தயங்குகிறது.காரணம் குற்றத்தில் தானும் ஒரு பங்காளி என்பதால் இந்தத் தயக்கம்.இறுதியில் எதிராக வாக்களித்தால் தான் செய்த குற்றங்களை மறைக்கப் பார்க்கிறது.ஆதரவாக வாக்களித்தால் வேறு வழியின்றி வெல்லுந்தரப்போடு ஒட்டிக் கொண்டு தான் மனித உரிமைவாதி என்று உலகுக்கு காட்டிக் கொள்கிறது.நடுநிலைமை வகித்தால் தான் பங்கேற்றுச் செய்த குற்றத்தை வெட்கமில்லாமல் ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம்.(இங்கு சிறலங்காவுக்கு ஆதரவான நாடுகள் பல இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது.)ஆக தமிழர் நலன்கருதி இந்தியா எந்த முடிவையும் எடுக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.