Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு மலேசியா ஆதரவு! கொந்தளிக்கும் மலேசியத் தமிழர்கள்

Featured Replies

meeting_28022012.jpg?w=500&h=172

http://ungeneva.wordpress.com/

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மலேசியா கொண்டிருக்கும் எனும் செய்தி, மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மலேசியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மலேசியத் தமிழர்களின் அவமதிக்கும் செயலென தெரிவித்துள்ளதோடு, மலேசியாவில் உள்ள 20 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதனை மலேசியா மறந்ததுவிடக்கூமாது என தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான என். ஐயங்கரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக அமையும் என தெரிவித்துள்ள என். ஐயங்கரன், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ஆதரவாக மலேசியா செயற்படும் என்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் மலேசியாவின் தமிழ் அறவாரியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்சந்திப்பிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்தார்.

http://youtu.be/Oe3ttWjyv-I

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா, தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, செனட்டர் இராமகிருஷ்னன், சுவாராம் மலேசிய மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், டாக்டர் குணலட்சுமி மற்றும் ரவி ஆகியோர் இச்சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தமிழர் படுகொலை குறித்து சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க வேண்டும் கூட்டாக இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாம் பாலஸ்த்தீனர்களின் உரிமைக்கும், பர்மியர்கள் உரிமைக்கும் போராடுகிறோம், இதில் தமிழர் உரிமை மட்டும் சோரம் போக வேண்டுமா? இது மலேசியத் தமிழர்களை அவமதிப்பதாக உருவாகும், மனித உரிமை அடிப்படையில் இலங்கையின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

இதேவேளை சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மலேசியா எடுத்திருப்பது குறித்து விவதிக்க மலேசியாவின் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என மலேசியாவின் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் நா.கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மலேசியத் தமிழர்களுக்கு துணையாக, அதாவது பாரிசன் அரசுக்கு நெருக்குதல் அளிக்க எதிர்கட்சிகள் முன்வரேவேண்டும். எதிர்கட்சித் தலைவர்கள் நமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல் தங்கள் கை வசம் இருக்கும் நான்கு மாநில சட்டமன்றங்களையும் அவசரமாக கூட்ட வேண்டும். அந்த அவசர கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை அங்கீகரித்து ஏற்று கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அந்த சட்ட மன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி மூலம் : செம்பருத்தி மலேசியா

மாதகலில் சீனா செய்யும் முதலீடு( இந்தியாவுக்கான ஆப்பும் கூட) மலேசிய நிறுவனம் ஊடாகத்தான் செய்யப்படுகின்றது. இதற்காக மலேசியா சிங்களத்தை ஆதரிக்கின்றது.

எனவே, மலேசியா வாழ் தமிழர்களில் முதலீட்டாளர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என பலம்மிக்கவர்கள் பலமான நிலையில் ஒரு அணி கொண்டு அணுகினால், மலேசியாவின் நிலைப்பாட்டை மாற்றலாம்.

மாத்தருக்கு மலையாள உறவு இருப்தால் பொதுவாக அவர் இந்தியாவின் பக்கம் சரியக் கூடும். இது சீனாவுடன் தொடர்புடைய ஒரு கம்பனியாக இருக்கலாம். உண்மை தெரியாது.

மலேசியா, போரின் இறுதியில் தான் வேணுமானால் மத்தியஸ்த்தம் செய்யமுடியும் என்றது. மலேசியாவுக்கு உள்நாட்டு நடவடிக்கைகள் பிரச்சனையாக இருந்தாலும் நடுவுநிலைமை காத்திருக்கலாம். மலேசியா மீது சீனா இலங்கைக்காக அழுத்தம் கொடுத்திருக்காது. இங்கே வீம்பில் இறங்கியிருப்பது இத்தியாவாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதகலில் முதலீடு செய்யும் மலேசியா கம்பெனி சீனாவின் முதலீடே என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன். செய்தியின் ஆதாரத்தை கண்டு பிடித்தால் பிறகு இணைகிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.