Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோசப் கொனி (Joseph Kony 2012)

Featured Replies

சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு குற்றவாளியைக் கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இளம் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் முன்னெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பல ஆயிரக் கணக்கான சிறுவர்கள் பாதுகாக்கப் படவேண்டும்!

  • தொடங்கியவர்

ஏற்கெனவே இணைத்திருப்பதை நான் கவனிக்கவில்லை. நன்றி உங்கள் இணைப்பிற்கு அபராஜிதன் :)

ஏற்கெனவே இணைத்திருப்பதை நான் கவனிக்கவில்லை. நன்றி உங்கள் இணைப்பிற்கு அபராஜிதன் :)

இல்லை குட்டி நான் இணைச்சது ஆங்கிலத்தில் இருந்தது இதை பார்க்கிறவை அதையும் பார்க்கட்டுமே என்பதால் அதன் இணைப்பை இங்கு கொடுத்தன்.:).

Five factors that made the Kony2012 video go viral

1. Tell them a secret

Kony2012 has an almost conspiratorial cant, suggesting (despite coverage over the years in major media outlets) that some people have tried to keep Joseph Kony under the radar. “The problem is, 99 per cent of the planet doesn’t know who Kony is,” says the video’s voiceover. “If they knew, Kony would have been stopped long ago.”

2. Tap celebrities

The video makers went all out on that score, urging viewers to target 20 celebrities each to help raise awareness. Many celebs duly did their part, including Justin Bieber (18 million Twitter followers) and Oprah Winfrey (9.6 million). The attention paid off.

3. Everyone loves kids

Four hundred twenty-seven million viewers can’t be wrong. The most popular non-commercial video on YouTube, Charlie Bit My Finger, is a 56-second slice of real life with kids: three-year-old Harry yelps out in pain as his younger brother Charlie chomps on his finger and doesn’t let go. Some of the most popular YouTube videos play off the natural charm of the under-10 set, including last year’s pint-sized Darth Vader Super Bowl spot, the Volkswagen commercial The Force.

4. Don’t underestimate people’s attention spans

At a staggering 30 minutes long, the video is an epic of mass proportion, as far as viral videos go. But it’s not without precedence. Randy Pausch’s 2007 inspirational video, The Last Lecture: Really Achieving Your Childhood Dreams, has racked up more than 14 million YouTube clicks – and spawned a bestselling book – despite running more than 75 minutes.

5. Ask people to join a movement

Marketers don’t just want you to buy their product any more; they want you to join a movement. Occupy Wall Street put a brand on the disenchantment of millions. The project known as It Gets Better, which sought to raise the self-esteem of gay, lesbian and transgender youth, caught fire in the fall of 2010 in part because many in the general public were upset about a rash of suicides within the LGBTQ community.

http://www.theglobeandmail.com/news/world/five-factors-that-made-the-kony2012-video-go-viral/article2365293/

இப்படி ஒரு படத்தை யாராவது புலம்பெயர் தமிழர்கள் எடுக்கவேண்டும்.

அதற்கு என்னாலான பொருள் உதவிகளை நான் வழங்க தயாராக உள்ளேன்.

இவர் ஒரு அரச எதிர்ப்பாளாராகவும், கெரில்லாத் தலைவராகவும் இருப்பதால் தான் இவ்வளவு பேரும் எதிர்த்து தங்கள் முகங்களின் மீது இருக்கும் அழுக்கை மறைக்கின்றனர். இவரே ஒரு அரசுத் தலைவராகவும் வல்லரசுகளின் ஆதரவானவராகவும் இருந்தால் இந்த வீடியோவும் பத்தோட ஒன்றாக கவனிக்கப்பட்டு இருக்கும்

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை அப்பட்டமாகக் காட்டிய சனல் 4 இன் வீடியோ உலக அரங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதன் காரணமும் இலங்கை மேற்கினது செல்லப் பிள்ளை என்பதால் தான்.

kony.jpg

இணையத்தை கலக்கும் KONY 2012 வீடியோ தொடர்பில் பல்வேறு மாற்றுக் கருத்துக்களும்

விமர்சனங்களும் எழுந்துள்ளன. திடீரென யூடியூப் தளத்தில் பிரபலம் பெற்ற இந்த வீடியோப் படத்தினை, 'புலப்படாத சிறுவர்கள்' ( Invisible Children)எனும் தன்னார்வ அமைப்பு உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அன்மைக் காலத்தில் இணையத்தின் வழி, அறிமுகமாகும் திடீர் புரட்சிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இன்றைய தகவல் தொடர்பு உலகில், மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வரும் இணையத்தின் வழியிலான பிரச்சாரங்கள், நடவடிக்கைகள் என்பது, விரைவானதும், ஆக்கபூர்வமானதாகவும் கருதப்படுகையில், இதன் மறு பக்கம் அதேயளவிலான ஆபத்துக்கள் நிறைந்தது என்கிறார்கள்.

இவ்வாறான இணையவழித் தொடர்பாடல்கள் மூலம் போராட்ட சக்திகளை ஒன்று திரட்டும் செயல் நடவடிக்கையை பெரும்பாலான போராட்ட அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்ற போதும், அதே வழிமுறைகளை போராட்ட மழுங்கடிப்புச் சக்திகளும், அரசுகளும், கூட பின்பற்றியே வருகின்றன. இன்னமும் சொல்லப் போனால் போராட்ட சக்திகளின் இணையவழிச் செயற்திறனிலும் பார்க்க, அதிகளவிலான செயற்திட்டங்களுடனும், பொருட்செலவுடனும், மிக நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும், செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அவ்வாறான கவர்சிகரமான செயற்பாடுகளுக்குள் இளைய சமூகம் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள் ஆர்வலர்கள்.

இவ்வாறான ஒரு ஆய்வுநிலையிலேயே தற்போது யூடியூப்பில் பிரபலம் பெற்றுள்ள KONY 2012 வீடியோ குறித்தும் கருத்துக்கள் எழுந்துள்ளன. உகண்டாவில் (Lord's Resistance Army) LRA எனும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துக் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவன் ஜோசப் கோனி (Joseph Rao Kony). இவனது தலைமையிலான இந்த அமைப்பின் நோக்கம் என்ன என்றால்? அந்த இயக்கம் உறுதியான கொள்கை எதனையும் கொண்டதில்லை என்பதாகவே பதில் கிடைக்கிறது.

உகண்டாவின் அகோலி இன மக்களுக்கு மறுக்கப்படும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த அமைப்பு, பின் கிறிஸ்தவ மதவாத தன்மையில் பத்துக்கட்டளைகளுக்கு அமைவான ஆட்சி அமைக்கப் போராடும் அமைப்பாகச் செயற்பட்டது என்கிறார்கள். உகாண்டா, சூடான், தெற்கு சூடான், கொங்கோ, ஆகிய நாடுகளின் இராணுவத்திற்கும், பொதுமக்களும் பெரும் அச்சுறுத்தலாக இரு தசாப்த காலங்கள் இயங்கிவந்த அமைப்பு, 2006ல் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நடவடிக்கைகளில் பின்னடைவு கண்டதாகக் குறிப்பிடப்படகிறது. இதன் செயல் திறன் மிக்கக் காலங்களில், அரசுகளுகளின் இராணுவங்களுக்கு எதிராக இருந்தது என்பதற்கும் மேலாக, பொதுமக்கள், குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தீவிரமாக இருந்தது என்பது இந்த அமைப்பின் மீது வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டு.

இந்தக் குற்றாட்டுக்கள் பரவலாக அனைத்துத் தரப்பிலும் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த அமைப்பின் தலைவன் ஜோசப் கோணி கைது செய்யப்பட வேண்டும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், பாதிப்புக்குள்ளான சிறுவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் இருபதாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வரும் இந்தக் கொடுமைக்கு திடீரென முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், அதனை நிறைவேற்றுவதற்கான காலமாக இந்த ஆண்டைக் குறிப்பிட்டதும், இந் நடவடிக்கைக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனும் கோஷம் முன்வைக்கப்படுவதும், பிரபலங்களின் திடீர் பிரச்சாரமும் இந்நடவடிக்கைளில் பலத்த சந்தேகங் கொள்ள வைக்கின்றது என்கிறார்கள்.

இவ்வாறு எழுப்பபட்ட சந்தேகங்கள் தொடர்பான ஆய்வில், புலப்படாத சிறுவர்கள் ( Invisible Children)அமைப்பின் நடவடிக்கைகள் எடுத்து நோக்கப்பட்ட போது, அதன் நடவடிக்கைகளும், நிதிநடவடிக்கைகளும் பலத்த சந்தேகத்துக்கு உரியவகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் மீதான கொலை, பாலியற் கொடுமைகள், தொடர்பான விடயங்களை முன்னிறுத்தி, இந்த அமைப்பு மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளும், அதன் மூலமான நிதி திரட்டலும், வணிக நோக்கிலானது எனவும், திரட்டப்படும் நிதி அமெரிக்காவிலேயே பெருமளவில் செலவிடப்படுவதாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலிடப்படுவதாகவும், கூறப்படுகிறது.

மேலும் இப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கும் தன்னார்வ அமைப்பின் நோக்கம் அரசியற் பின் புலம் கொண்டதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்கப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டை வலியுறுத்தும் வகையில் இந்த அமைப்பின் பிரச்சாரம் இருப்பதையும், அவ்வாறான ஒரு நோக்கில் அமெரிக்க அரசின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் அவதானிகள் குறிப்பிடுகின்றார்கள்.

உகாண்டாவில் இடி அமீனுக்கு பின் இன்னுமொரு கொடியவனின் கதை எனப் பிரச்சாரம் செய்யப்படும் இந்த வீடியோவிற்கு அமெரிக்க அதிபரும், வெள்ளை மாளிகையும் கொடுக்கும் முக்கியத்துவமும், இது தொடர்பில் அமெரிக்கப் பிரபலங்கள் கொண்டிருக்கும் ஆர்வமும், ஜோசப் கோனியின் பெயரில், ஆப்பிரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளில் அமெரிக்கா இராணுவத்தைத் தரையிறக்கும் அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதை உறுதி செய்வதாகக் கூறுகின்றார்கள்.

மேலும், அமெரிக்காவின் வலைப்பின்னற் சந்தை உத்தியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்கப் பின்னணியில் முன்பு பல்வேறு திட்டங்களுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கின்ற போதும், தற்போது மனிதநேயப் பணியொன்றில் அவ்வாறான முயற்சி உள்வாங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் மனித நேயப்பணிகள் குறித்த செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவு, பிரிவினைகள், குழு மோதல், நிலையற்ற அரசுகள் எனக் குழம்பிக் கிடக்கும், ஆப்பிரிக்காவிற்குள் அமெரிக்காவின் பிரவேசம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்குமே அன்றி அம்மக்களுக்கு தீர்வு தாராது எனக் கூறும் சமூகஆர்வலர்கள், இணையத்தில் இந்த விடீயோவின் பிரபலமும், அதன்பால் ஈர்க்கப்படும் இளைய தலைமுறையினர் குறித்தும் கவலை கொண்டுள்ளார்கள் அரசியற், சமூக அக்கறையாளர்கள்

http://www.4tamilmedia.com/special/news-review/3923-kony-2012

இந்தப்படம் பற்றிய முகநூல், குறுஞ்ச்செய்தி, பின்னூட்டங்கள் ..

இவற்றிற்கு இடையே எனது சனல் நாலை பற்றிய தரவுகளையும் செருகிவிடலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.