Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்

Featured Replies

இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இப்போது மேலதிகமாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

"இந்த விசாரணைகள் மூலம் சர்வதேச நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது; அவர்களை இதில் யாரும் குறி வைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே நாம் இந்த அரசு மாறும்வரை பொறுத்திருக்கவேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால்தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டுவரலாம்", என்றார் ஜான் ஹோம்ஸ்.

சர்வதேச சமூகம் அமைதியாக இல்லை

ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடமுடியுமா என்று கேட்டதற்கு, சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடவில்லை என்றார் ஜான் ஹோம்ஸ். "ஐநா மன்ற வல்லுநர் குழு இது தொடர்பில் தனது அறிக்கையை சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சேனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம்தான். ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் இதை ஒரு முறை ஆராய்ந்திருக்கிறது. எனவே சர்வதேச கவனம் இதில் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்” என்றார் ஹோம்ஸ்

ஆனால் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இவர் கூறும்ப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்ட்டபோது, சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா மன்றம் சரியாகத் தலையிடவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே என்று அவரிடம் பிபிசி கேட்டபோது, ஒரு இறையாண்மை பெற்ற அரசை, ஐநா மன்றம் , அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த முடியாது என்று விளக்கமளித்தார் ஜான் ஹோம்ஸ்.

"இலங்கை விவகாரத்தில் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்படுவதற்கு தயாராக இல்லை. எனவே ஐ.நா மன்றத்தின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார் ஜான் ஹோம்ஸ்.

மேலும் ஐ.நா மன்றம் பொதுமக்கள் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப் பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வற்புறுத்திக்கொண்டிருந்ததாக கூறிய ஜான் ஹோம்ஸ், இலங்கை அரசோ அந்தப்பகுதியில் சாதாரணப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறினார்.

அதேசமயம், ஐநா மன்றாம் விடுதலைப்புலிகளிடமும், சாதாரணப் பொதுமக்களை விடுவியுங்கள் என்று கூறிக்கொண்டிருந்ததாவும் தெரிவித்தார். "ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை. சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்படிருந்தார்கள். ஐ.நா மன்றம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல" என்றார் ஜான் ஹோம்ஸ்.

இது ஒரு புறமிருக்க, போர் முடிந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், அங்கே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனித நேய உதவிகள் கூட சரியாகத் தரப்படவில்லை. இந்த சிறிய விஷயத்தில் கூட ஐ.நா மன்றமோ சர்வதேச சமூகமோ தமிழ் மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிபிசி கேட்டதற்கு பதிலளித்த ஜான் ஹோம்ஸ், “ஐ.நா மன்றம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது, ஐநா மன்றம்தான் அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது. அங்கே அவர்கள் சுந்தந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பிவிட்டார்கள்", என்று தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/03/120315_johnholmsun.shtml

  • தொடங்கியவர்

ஐ.நா. பிரதிநிதியாக இருந்த இந்த ஜோன் ஹோம்ஸ் தமிழர் படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரி. இவர் நேற்றைய சனல் நாலு ஆவணப்படத்திலும் குறை கூறப்படுகின்றார். ஐ.நா. கொடுத்த பாதுகாப்பு வலய ஜி.பி.எஸ். தகவல்களையே பயன்படுத்தி படுகொலை செய்தது சிங்களம்.

மேற்குலகம், ஐ.நா ஆட்சி மாற்றத்தை விரும்பலாம். ஆனால், அடுத்தவனும் ஒன்றையும் தரமாட்டான். நாம் எம்மை பிரிந்துபோக கேட்பதே நன்று, அதுவே குறைந்தது ஒரு சுயாட்சியை என்றாலும் தரும்.

சாத்தான்களின் அரசாட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யாவையும்,சீனாவையும் உறுப்புரிமையில் இருந்து தூக்க முடியாமல் இந்த உலகால் முடியாதா ???????????????/ முடியும் என்ற ஓர் சொல்லை எப்போது ஓர் நாடு .அல்லது அரசாங்கம் கூறுகின்றதோ அப்போதுதான் இந்த உலகம் உண்மையான விடிவின் சூரியனை அனுபவிக்கும்.........................அத்துடன் இந்தியாவும் சுக்குநூறாக வேண்டும்.........

இலங்கை விவகாரத்தில் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்படுவதற்கு தயாராக இல்லை. எனவே ஐ.நா மன்றத்தின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார் ஜான் ஹோம்ஸ்.

  • தொடங்கியவர்

இந்த ஐ.நா. ஒரு செல்லாக்காசு. சீனாவையும் உருசியாவையும் மீறி இந்த அமைப்பால் ஒன்றும் செய்யமுடியாது. எனவே நிலைமையை எமக்கு சாதகமாக மாற்ற அரச சார்பற்ற அமைப்புக்கள் ஊடாக முயலும் அதேவேளை தமிழர் தரப்பு அழுத்தம் தர வேண்டியதும் சேர்ந்து வேலை செய்யவேண்டியதும் (அவதானமாக) அமெரிக்காவுடனும் அதன் நண்பர்களுடனும் தான்.

சிலருக்கு இது கசப்பாக இருந்தாலும், எனக்கும் கூட கசப்புத்தான், எமக்குள்ள ஒரே வழி அமெரிக்கா தான். ஜப்பானுக்கு கூட அணுக்குண்டு போட்டவர்கள் அமெரிக்கர்கள். ஆனால் அதே ஜப்பானை ஒரு பொருளாதார பலமாக மாற்ற உதவியதும் இன்று அதன் அரசியல்/பாதுகாப்பு நண்பனும் அமெரிக்கா தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்

இது திமுக vs அதிமுக போலவே இருக்கப்பா சான் கோம்சு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி மாறி என்ன பிரயோசனம்? 

குழந்தைகளை வன்புணர்ந்து கொல்வோர் ஐந்து இலட்சம் பேர் தமிழர் தாயகத்தில் இருந்து எப்போது விலகுவர்? 

எமது வழக்கு 1948 இல் தொடங்குகிறது. இது கொம்ஸ் மழுப்ப பார்க்குமாப்போல் 2009 இல் தொடங்கவில்லை. எமது சுதந்திரத்தை 1600 களில் பறித்த ஐரோப்பியர் நம்மை தமது நண்பர்களுக்கு அடிமைச்சீட்டு எழுதி கொடுத்து விட்டார்ரகள். இதை G.G.பொன்னம்பலம் முழுதாக எதிர்த்தவர். 1971 S.J.V அரசியல் அமைப்பை எதிர்த்து பாரளுமன்றத்தை விட்டு வெளியேறியவர். 1977ல் அமிர்தலிங்கம் முழுதாக எதிர்த்தவர். அதாவது எமக்கும் இலங்கைக்கும் தொடர்பு இல்லை. நாம் அதை எந்த நேரத்திலும் ஏற்கவில்லை.

சீனாவோ, ருஸ்சியாவோ 1948ல் இலங்கை எம்மை கைப்பற்ற உதவியவர்கள் அல்ல. எனவே அவர்களை சேர்த்து இலங்கையில் ஆட்சி மற்றம் செய்ய முயல தேவை இல்லை.

இலங்கை ஐ.நா வுடன் எதற்கும் ஒத்து போகலாம் மறுக்கலாம் நாம் அதற்கு பாடல்ல. எப்படி இலங்கை இறமை உள்ள நாடகவும் அங்கே ஐ.நா தலை இடமுடியாது என்றும் கொம்ஸ் விளங்கப்படுத்துகிறோ அதேமாதிரி இறமை உள்ள தமிழீழம் மீதி இலங்கை தலையிட முடியாது. 1948ல் இலங்கை தமிழீழதை பிடிக்க இங்கிலாந்து உதவியது. U.N.நாம் இறமை உள்ள நாடு என்று தடுக்க வில்லை. எம்மால் நாம் பெற்ற சுதந்திரத்தை 2009 ல் இலங்கை பிடிக்க இந்தியா திரும்ப உதவிய போது U.N. தடுக்கவில்லை. நாம் U.N. னை இலங்கையின் இறமையில் தலையிட சொல்லவில்லை. எமது இறமையை இலங்கை மறுக்கும் போது U.N.அதை தடுக்க வேண்டும். அது ஐ.நாவின் அடிப்படைக்கடமை.

தற்போதைய அரசை தெரிந்தெடுத்தவர்கள் இலங்கையர். நாம் இந்த அரசை தெரியவில்லை. நாம் இலங்கை அரசை மற்றவேண்டும் என்று ஐ.நா.விடம் கேட்க வர்வில்லை. இலங்கையர் அதை மாற்றும் படி கேட்டால் அது இலங்கை, ஐ.நாவிற்கு கொண்டுவரும் வழக்கு. இலங்கையர் அப்படி கேட்கவில்லை. அவர்கள் ஜனநாயக முறைப்படி தமக்கு ஒரு அரசை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஐ.நா எதற்கு அதை மாற்ற வேண்டும் என்பது நமக்கு விளங்காத புதிர். ஆனால் ஐ.நா சாக்கு போக்கு சொல்லாமல் நமது ஆட்சியை மீட்டு எம்மிடம் தரவேண்டியது கடமை. அதை மட்டும் செய்தால் எமக்கு அது போதும். இலங்கையில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை ஐ.நாவும் இலங்கையும் தீர்மானித்துக்கொள்ளலாம்.

Edited by மல்லையூரான்

சிந்திக்கவைக்கும் மிக அருமையான கருத்து மல்லையூரான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.