Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காய்கள் நகர்த்தும் காங்கிரஸ்! ஐ.நாவில் அரங்கேறப் போகும் இலங்கை எதிர்ப்பு நாடகம்...!

Featured Replies

ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த போதே....

பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்து வைத்திருந்த இலங்கை பேரினவாத அரசு காங்கிரசு கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறிய உடனேயே.. மீண்டும் தனது கோரத் தாக்குதலை தொடங்கியது. மே மாதம் 16 ஆம் தேதி 2009ல் பாரளுமன்றத்திற்கான முடிவு தெரிந்த உடனேயே இலங்கைக்கு க்ரீன் சிக்னலை ஆளும் காங்கிரஸ் அரசு கொடுக்க திட்டமிட்ட படி மே 17,18,19 களில் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டனர் தமிழர்கள்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும், திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பாரம்பரிய தமிழர் கட்சியோடு கூட்டு வைத்திருப்பதால் தமிழர் நலம் பேணப்படும் என்ற ஆசையாலும், பாரதிய ஜனதா என்ற மதவாதக் கட்சியின் மீது இருந்த நம்பிக்கையின்மையினாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களின் வாய்களுக்கு வாய்க்கரிசியைப் போட்டுவிட்டு உற்சாகமாய் பதவியேற்றுக் கொண்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு...

மே 13 ஆம் தேதி பராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை காங்கிரஸ் கூட்டணி அரசு காக்கும் என்ற மாயை உண்டாக்க ஒரு நாடக உண்ணாவிரதம் ஏப்ரல் 27ல் அரங்கேற்றப்பட்டு..... தேர்தல் முடிவு வரும் வரையில் காத்திரு இலங்கையே என்று ஒரு ரகசிய கட்டளை இடப்பட்டு மே 13ல் தேர்தல் முடிந்து 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன்....ஆட்சியிலேறிய காங்கிரஸ் கொடுத்த சமிஞையை கண்டு கொலை வெறித் தாக்குதலை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது கபட இலங்கை அரசு...!

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது நாடகத்தை முன்னின்று நடத்திய அதே தமிழ்த் துரோகி ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்னும் கட்சி தடமில்லாமல் போய்க்கொண்டிருப்பதை கண் கூடாக கண்டு, மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி தலையெடுக்க வைப்பது? அப்படி வைத்தால் தானே மிச்சமுள்ள தன் வாழ்நாளின் பிழைப்பு ஓடும் என்று ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் மேலிடத்திற்கோ தனது கோரப்பற்கள் தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டதே இனி என்ன செய்வோம் என்று திருடன் கையில் தேள் கொட்டியது போல செய்வதறியாது விழி பிதுங்கி தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் வரப் போகிற நாடளுமன்றத் தேர்தலில் நாம் அம்பேல்தான் என்ற முடிவுக்கு வந்தேதான் விட்டது.

இப்படியன சூழலில் அமெரிக்கா உதவியுடன் ஐ.நாவில் நிறைவேற்றப்பட உள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய தீர்மானத்தைப் பற்றி பரபரப்பாகவே நாம் பேசிக் கொண்டும் ஆங்காங்கே படித்துக் கொண்டும் இருக்கிறோம். உணர்ச்சியின் உச்சத்தில் உலக நாடுகள் எல்லாம் ஆதரிப்பதோடு இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நம்மைப் போன்றவர்களுக்கு தெளிவாகத் தெரியாது ஆனால் ஆளும் இந்திய அரசுக்கும், மெளனமாய் வேடிக்கைப்பார்க்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாய்த் தெரியும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதால் தமிழரின் ஆதாரக் குரலான தனித் தமிழ் ஈழம் என்பதை பெற முடியாது. அதுவுமில்லாமல் சர்வ தேச சமுதாயம் விவாதிக்கபோவது போர்குற்றங்களை விசாரிக்க சிங்கள பேரினவாத அரசு நியமித்த நல்லிணக்க குழு என்னும் கொலைகாரன் நியமித்த கொலைகாரக் குழு கொடுத்திருக்கும் அறிக்கையின் முடிவுகளை செயல்படுத்தக் கூறியும், மேலும் தெளிவாக விசாரிக்கக் கோரியுமே இவர்கள் நிறைவேற்றப் படும் தீர்மானம் கோரப்போகிறது...!

இப்படியான சூழலில் சில கேள்விகளை உங்களுக்காக இந்தக் கட்டுரை முன் வைக்கிறது...

1) போர்க்குற்றம் செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டால் என்ன மாதிரி நெருக்கடிகள் ஏற்படும் என்று ஏன் நாம் ஒருவர் கூட ஆய்வு செய்யவில்லை?

2) இந்த தீர்மானம் நிறைவேறினால் தமிழ் ஈழ அரசு அமைய என்ன வாய்ப்புகளை சர்வதேச சமுதாயம் நமக்கு கையளிக்கப் போகிறது என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை?

3) அத்தனை பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை கொன்றழித்த மாபாவிகளுக்கும் உடன் துணை புரிந்தோர்களுக்கும் என்னவிதமான தண்டனையை இந்த சர்வதேச வல்லாதிக்க நாடுகள் கொடுக்கப் போகின்றன?

இதற்கெல்லாம் பதில் எந்த தமிழனுக்காவது தெரியுமா? தெரியாதுதானே...? இந்திய ஊடகங்களின் தொடர் பரப்புரைகளால் நாம் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மறந்து இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமமே எழுப்பி வருகிறோம்? அப்படி ஆதரிக்காவிட்டால் ஆளும் காங்கிரஸ் தமிழர் விரோதகட்சியய் பார்க்கப்படும்....என்று மிரட்டியும் கொண்டிருக்கிறோம்...

நயவஞ்சக காங்கிரசுக்குத் தெரியும் இந்த தீர்மானத்தை நாம் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் இலங்கைக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை என்று...இருந்தாலும் இந்த நெருப்பினை ஊதி ஊதி இந்தியாவில் குறிப்பாய் தமிழர்கள் மத்தியில் பெரிதாக்கிய இந்த குள்ள நரி காங்கிரஸ்.....தாங்கள் இலங்கைக்கு எதிராக நடக்கமாட்டோம் என்பது போல ஒரு தோற்றத்தை எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் ப்ரணாப் முகர்ஜிக்கள் மூலம் பாரளுமன்றத்தில் அரங்கேற்றியது.

அதே நேரத்தில் இந்திய ஊடகங்களை குறிப்பாக தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கான பிடியை மெல்ல தளர்த்தி விடவும் செய்து இது வரையில் இந்தியாவில் வெளியிடப்படமல் இருந்த கிட்டத் தட்ட தடை செய்து வைக்கப்பட்டிருந்த சானல் 4ன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற காணொளிகளை பரப்பிக் கொள்ள அனுமதியும் கொடுத்ததை அடுத்து தமிழக தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தமிழர் ஆதரவுப் போக்கினை உணர்சிப் பூர்வமாக ஆனால் ரொம்பவே காலம் தாழ்த்தி காட்டிக் கொள்கிறோம் என்ற வெட்கம் இலலமல் காட்டி கொண்டன.

இதன் தொடர்ச்சியாக திமுகழக எம்.பிக்கள் யாருமே எதிர்பாராத விதமாக இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று புலிப்பாய்ச்சல் பாய்ந்தனர். இதன் பின்ணயில் இருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி அரசியலும், காங்கிரஸ் கட்சியின் இராஜ தந்திர நடவடிக்கையையும் எம் மக்கள் அறிந்திருக்கவில்லை...!

இதோ....மார்ச் 23 மூன்றில் அமெரிக்கா கொண்டுவரபோகும் தீர்மானம் ஐ.நாவில் அரங்கேறப்போகிறது....! காங்கிரசும் திமுகவும் திட்டமிடப்பட்ட நாடக காட்சிகளின் மூலம் காய் நகர்த்தும் வேலைகளை தொடங்கி விட்டன...

இனி இந்தக்கட்டுரை கூறப் போவது எதுவும் நிகழாவிடில் நானும் உங்களோடு சேர்ந்து மிகவும் சந்தோசப்படுவேன் ஆனால் நடந்து விட்டால்.....துரோகிகளை, அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது.

தந்திரம் 1

மார்ச் 20 ஆம் தேதி கூடும் திமுக உயர்நிலைக் குழுவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிடில் திமுகழகம் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று முடிவெடுக்கப்படும்.( ஏற்கெனவே இந்தியா ஆதரிக்கும் என்ற தகவல் கிடைத்ததன் பேரில்)

இந்தியா ஆதரவு தெரிவித்தவுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க திமுக தான் காரணம் என்று மக்களிடையே பரப்புரை செய்து தங்களின் தமிழர் ஆதரவு போக்கினை வலுப்படுத்திக் கொள்வதோடு காங்கிரசடோன உறவை தொடரவும் இந்த தீர்மான ஆதரவு நிலைப்பாட்டையே காரணமாய்ச் சொல்லும்.

தந்திரம் 2

munna-hazare-pc.jpg

ப. சிதம்பரத்தின் வற்புறுத்துதலின் பேரில் இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது என்று செய்திகள் வரும் (இதற்கு தூபம் போடும் வகையில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன).

தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போகாத போலியான ஒரு தீர்மானத்தை ஆதரித்ததை பெரிதாக விளம்பரம் செய்து தமிழ் நாட்டில் ப. சிதம்பரத்தை வைத்து தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை காங்கிரஸ் ஆடத்துவங்கும். ஈழத்தமிழர்களுக்காக இந்தியா ஐ.நாவில் இலங்கையை எதிர்த்ததை பரப்புரை செய்து தமிழர் ஆதரவு என்னும் அரசியலை அரங்கேற்றி மக்களை வளைக்கும். இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் முழு மூச்சாய் உதவி செய்யும்.

ஏற்கெனவே அலங்கோல ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவை வேரோடு சாய்த்தெறியும் திமுக பிரகாசமான எதிர்கால அரசியலில் இன்னும் வேகமாய் முன்னேறிச் செல்லும்...!

மக்களாகிய நாம் என்ன செய்வோம்...?

இந்த இராஜதந்திர அரசியலில் சிக்குண்டு அன்னை சோனியாவின் காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நாடு நலம் பெறும், நல்லாட்சி நடை பெறும், தமிழர்கள் வாழ்வார்கள்...(அதுதான் ஐ.நாவிலேயே இலங்கைக்கு எதிராய் வாக்களித்து விட்டார்களே..!!!) என்றெல்லாம் பேசிக் கொண்டு ஈழப்பிரச்சினையையும், அங்கே நிகழ்த்தப்பட்ட இன அழிப்பையும், வக்கிர கொலைகளையும் மறந்து விட்டு....

ஆளும் இந்திய (2013க்கு அப்புறமும்) காங்கிரஸ் நடத்தும் போலி நாடங்களைப் பார்த்து மகிழ்ந்தும், கொந்தளித்தும் கொண்டு ஆட்டு மந்தைகளாய்

' பாரத் மாத கீ ஜெ.....' என்று கோசம் போட்டுக் கொண்டு நம்து இந்திய தேச உணர்வை தொடர்ந்து காட்டிக் கொண்டிருப்போமே அன்றி....

" ஏண்டா நாய்களா.................கொத்து கொத்தாய் என் இனம் செத்து விழுந்தப்ப என்னாடா செஞ்சு கிழிச்சீங்க.....இப்ப வந்து ஆடுறீங்க, பரதேசிங்களா??????" என்று கேட்கவா போகிறோம்....

தேவா. சு

பின் குறிப்பு: ஆட்சிப் பொறுப்பில் ஏறியதிலிருந்து தமிழர் ஆதரவுப் போக்கு நாடக காட்சியமைப்புகளில் அதீத கவனம் செலுத்திக் கொண்டு தனது நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்களை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழக ஆளும் அதிமுக அரசு.....

பிரதமருக்கு கடிதங்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டும்...இலங்கையை எதிர்த்துக் கொண்டும் தனது ஈழ ஆதரவு வேசத்தை மிக கவனமாகவே போட்டுக் கொண்டிருக்கிறது..

கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக அறியப்பட்ட அதிமுக என்னும் பெருங்கட்சி, ஈழப் போரின் போது எந்தவித அழுத்தமான போராட்ட முன்னெடுப்புகளையும் எடுக்காமல், போர் என்றால் மனிதர்கள் மரிக்கத்தானே செய்வார்கள் என்று கூறிய சவுடால் பேச்சுக்களையும் நாம் மறக்கலாகாது...!

http://maruthupaandi.blogspot.in/2012/03/blog-post_18.html

நண்பர் தேவாவிற்கு நன்றி

தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் சிந்தியுங்கள்

Edited by ramathevan

சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு ஆடிய நாடகம்.உண்மையான முடிவு நாளை வெளிவரும்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ பக்சே கொஞ்சம் மான ரோசம் உள்ளவர் என்று நினைக்கிறேன்...உடனடியாக ராஜ பக்சே போரில் கிந்தியாவின் பங்கு என்ன ..? என்பதை தெள்ள தெளிவாக அறிவித்து விட வேண்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆரிய கூத்தை எவ்வளவு தடவை பார்ப்பது?  தமிழீழ காரியத்தில் கண்ணாய் இருப்போம். 

இந்தியா இதை ஆதரிக்கிறதா என்பது இருக்கட்டும்,. .ஆனால் இதன் மூலம் உண்மையில் தமிழர்களுக்கு நலன் கிடைக்குமா ?? இந்தியர்கள் இந்த தீர்மானத்தை எதிர்ப்பது போல் தெரியவில்லை. . அவர்கள் மறைமுகமாக இப்படி ஒரு நீர்த்துபோன தீர்மானம் வந்ததற்கு சந்தோஷத்தில் இருப்பது போலவே தெரிகிறது.

பேஸ்புக்கில் ஒருவர் எழுதி இருந்தார்.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவது இந்தியா அல்ல அமெரிக்கா இந்த உப்புச்சப்பில்லாத தீர்மானத்தை சிறிலங்கா குப்பையில் தூக்கியெறியும்.அமெரிக்கா அடத்த கட்டத்திற்கு நகரும்.இந்தியாவின் கையை விட்டு எமது பிரச்சினை போய் பல காலமாகி விட்டது.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவது இந்தியா அல்ல அமெரிக்கா இந்த உப்புச்சப்பில்லாத தீர்மானத்தை சிறிலங்கா குப்பையில் தூக்கியெறியும்.அமெரிக்கா அடத்த கட்டத்திற்கு நகரும்.

அமெரிக்கா இதை ஆரம்பமாகத்தான் பார்க்கிறது. முதலில் இதில் தமிழருக்கு என்ன இருக்கு என்று கேட்பதிலும் பார்க்க 100-150 பேரை களம் இறக்கி, கிடத்தட்ட 2 மாதங்கள் உழைக்கும் அமெரிக்காவுக்கு என்ன இருக்கிறது என்று கேட்டால் நிச்சயம், இது ஏதோ ஒன்றின் ஆரம்பமாகத்தான் இருக்க முடியும் என்பது விளங்கும். 2006 இந்த பேரவை வந்தபோது அமெரிக்கா(புஸ்)வால் இது கூத்தாடிகள் கூடி கும்மாளம் போடும் கழிசடை இடமாக கருதப்பட்டு புறக்கணிக்க பட்டிருந்தது. உதாரணத்திற்கு, பேரவை அங்கத்தவர்கள் 2009 இலங்கையை புகழ்ந்தது போன்ற அலுவல்களுடன், புஸ் போன்றவர்களை இங்கே வைத்து தண்டிக்க முடியுமா என்றும் பார்த்தார்கள். பிரச்சணை வந்து இங்கேயாரும் அங்கத்தவர் ஆகலாம். தண்டிப்பதில் 47 நாடுகளுக்கும் சம உரிமை. இதனால்த்தான் 2008,2009 காலங்களில் இலங்கை தன்னை இங்கே பாதுகாத்துக்கொண்டது மட்டுமல்லாது பல நாடுகள் தண்டிக்க படவேண்டும் என்றும் வாக்களித்தது. (இது இன்று இந்தியா இலங்கையை காப்பாற்ற ஆடும் நாடகமான - ஒரு நாட்டுக்கு எதிராக வாக்களிக்க கூடாது - என்ற கொள்கைக்கு எதிரானது) என்வேதான் கட்டாகாலிகளின் அட்டகாசம் பேரவையில் கூட. (அதேமாதிரி பாதுகாப்பு சபை வல்லவருக்கு மட்டும்.)

ஒபாமா வேண்டுமென்றேதான் இந்தமுறை அமெரிக்காவுக்கு அங்கத்தவம் கேட்டார். மனித உரிமைகள் பேரவையை கழித்து வைத்தால் சர்வதேச நாடுகளில் மனித்துவம் முன்னேறிவிடாது என்று நினைத்தார் ஒபாமா. அமெரிக்கா கடைசியாக மனித உரிமைகள் கவுன்சிலிலோ அல்லது கொமிசனிலோ எப்போது அங்கத்துவம் வைத்திருந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் ஒபாமா இங்கே 2010 இல் வ்ரும் போது பெரிய நம்பிக்கை வைத்து இணையவும் இல்லை. மனித உரிமைகள் சபையின் தலைகுத்துக்கறண போக்கை ஒபாமா 2009ல் அதன் இலங்கை சம்பந்தமான பிரேரணையையும் வைத்துத்தான் அளவிட்டிருக்க வேண்டும் என்பதும் எனது நம்பிக்கை. எனவே ஒரு வாதாடத்திற்கு கியூபா, இந்தியா, எகிப்து, ஈரான், லிபியா(இந்த முறை வாக்கு இல்லை) இந்தொனேசியா, சீனா போன்றவற்றுடன் சேர்ந்து பேரவைக்கு டிமிக்கி விடும் வல்லமையை இலங்கை, எவ்வாறு வளர்த்து வைத்திருக்கிறது எம்பதையும் ஆரம்பம் முதல் தெரிந்தும் வைத்திருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அதே நேரம் இலங்கை, விசாரணைக்கு, பாங்கி மூனிடம் சம்மதித்த காலம் தொடக்கம், விசாரணை சரியாக இல்லையாயின் இலங்கை சங்கடப்பட போகிறது என்பதை பிளேக் பலதடவைகள் இலங்கையிடம் கூறி தனது காலத்தில் விடையங்களை சரிசெய்து முடித்துவிடவும் முயன்றார். மோடையாத்தனங்களை ராஜதந்திரமாக காட்டி நடித்துவந்த இலங்கைக்கு பிளெக்கின் புத்திமதிகள் இறங்கவில்லை. இப்போது இங்கே ஒரு ஆரம்பம் ஏற்பட்டிருக்கு.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியவை:

1.பேரவை அமெரிக்காவின் இடம் அல்ல. இங்கே அலுவல்களை செய்யும் கஸ்டம் அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.

2. அமெரிக்கா தான் ஒரு பொருளாதார தடையை கொண்டு வந்தால் இலங்கை இறங்கி வரும். ஆனால் ஒபாமா அதை சர்வதேசம் செய்யட்டும் என்றுதான் பார்ப்பார். அதுதான் அமெரிக்காவின் தொலைநோக்கு கொள்கைகளுக்கு உதவும்.

3. இலங்கையை தண்டிப்பதோ, அல்லது அடுத்தபடியில் செய்யத்தக்க தமிழருக்கான தீர்வோ, அமெரிக்காவின் தொலை நோக்கான இலங்கை சம்பந்தமான கொள்கை இல்லை என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.

4. இலங்கையில் ஏற்படும் சின்ன ஒரு ஆட்சி மற்றம் மட்டும் அமெரிக்காவுக்கு தென்கிழக்காசியாவில் எந்த ஒரு பிடியையும் கொடுத்துவிடாது. 1950 கள் முடிவில் பண்டாரநாயக்கா தொடக்கம் இலங்கை, மேலை நாட்டு நாகரீகம், பண்பு, தொடர்புகளில் இருந்து விலகி, சீனா பக்கம் சரியதொடங்கி இப்போது மீளத்திரும்ப முடியாத நிலைக்கு சென்று விட்டது. இதற்கு ராசபக்சா தொடக்கமுமில்லை, தனிக்காரணமுமில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு பிரதான காரணி மட்டுமே.

எனவே அமெரிக்கா தனது அலுவல்களுக்கும் இதை ஆரம்பமாகவே பாவிக்க முடியும். அமெரிக்கா தனது அலுவல்களைத் தொடர வேறு பாதைகளையும் தேட வேண்டி வரும் என்பது தெளிவு. நாம் பொறுத்திருந்து அது என்ன என்பதை அவதானிக்கவும் வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவிடம் தமிழ் ஈழத்தின் அரை பாதி மக்கள் தொகை இருக்கிறது.

தமிழ் ஈழம் மேற்கு ஆதரவு நிலை எடுக்கும்.  

மொரீசியசில் இருந்து கணக்கு தளத்தை ஈழத்திற்கு மாற்றலாம். 

ஆயிரத்து இரு நூறு கிலோமீட்டர் ஈழ பீச்சில் ரேசொர்ட் கட்டலாம். 

ஈழ தமிழருக்கு துணிவும் கூட. 

தமிழ் ஈழம், வய் நோட்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.