Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி

Featured Replies

பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி

பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரியரும் ஆவர்.

துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும்.

இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர், நான்காவதாக ஒருவர் மோசமாக காயம் அடைந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான அனைவருமே இனச் சிறுபான்மை பின்னணி கொண்டவர்கள். சம்பவம் நடந்த இடத்தைச் சென்று பார்த்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சர்கோஸி, நடந்தது ஒரு பெருந்துயரம் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். பிரஞ்சு குடியரசு மீதே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது என்று அவர் குறிப்பிட்டார்.

kp-2.jpg

http://www.alaikal.com/news/?p=100225

Edited by akootha

  • தொடங்கியவர்

அமெரிக்காவிலும் யூத ஆலயங்கள் பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

பிரான்சிய கொலைஞன் கடும் வலதுசாரி போக்குடையவன்

பிரான்சில் தொடர் கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியுள்ள சீரியல் கொலைஞன் ஒரு கடும் வலதுசாரி போக்குக் கொண்டவன் என்று சற்று முன்னர் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நபர் நாஜி பின்னணி கொண்டவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவருடைய தாக்குதல் சிறுபான்மை யூதர்களை நோக்கி இடம் பெற்றதால் இவர் நாஜி அடிப்படை வாதத்தால் சன்னதமேற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நோர்வேயில் கடும் வலதுசாரி தூய்மை வாதத்தால் கவரப்பட்டு, கடந்த ஆண்டு யூலை மாதம் ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் 76 பேரை கொலை செய்தது போலவே இவனுடைய ஒன்வொரு செயல்களும் இருப்பதாக நோஸ்க் பயங்கரவாத பிரிவு ஆய்வாளர் காமூஸ் தெரிவித்துள்ளார். பொது மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி சகட்டுமேனிக்கு இவன் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளான். இதுபோலவே நோஸ்க் பயங்கரவாதி ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கும் செய்துள்ளான்.

இந்த அடிப்படை ஆதாரங்களோடு, மேலும் பல புதுவிதமான கருவிகள் சகிதம் கொலைஞனைத் தேடி பிரான்சிய போலீசார் வலை விரித்துள்ளனர். தெற்கு பிரான்சில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுமார் 100 போலீசார் தேடுதலை நடாத்தி வருகிறார்கள். பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸி தேர்தல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொலையாளியை பிடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். சீரியல் கொலைகளை புரிந்த சந்தேக நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்போக அனுமதிக்க முடியாது என்று அவர் கோபமாக தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியர், அவருடைய 5 – 4 வயதுகளுடைய இரண்டு பிள்ளைகள், கொல்லப்பட்ட பாடசாலை அதிபரின் ஏழு வயது மகள் ஆகியோருக்கு இன்று பாடசாலையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே கொலையாளி பிரான்சில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று பிரான்சிய படையினரை சுட்டுக்கொன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுபோல ஆப்கான் கந்தகார் பகுதியில் கடந்த 11ம் திகதி துப்பாக்கியுடன் நுழைந்து குழந்தைகள், பெரியவர் பேதமின்றி 16 பேரை கொன்ற அமெரிக்க சார்ஜன்ட் தர படையினன் தற்போது அமெரிக்க கன்சாஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு நடந்த சம்பவங்கள் எதுவுமே நினைவில் இல்லை என்று கயிற்றை திரித்துவிட்டுள்ளார்.

அதேவேளை ஆப்கானில் நிற்கும் டேனிஸ் படையினர் தாம் கைது செய்யும் சந்தேக நபர்களை ஆப்கான் இராணுவத்தின் சித்திரவதை முகாமான என்.டி.எஸ்சிடம் தொடர்ச்சியாக ஒப்படைத்து வந்ததாக இன்று வெளியான மனித உரிமைகள் அறிக்கை தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஐ.நாவுடன் பேசுவதாகவும், அதன் பின்னர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டேனிஸ் படைத்துறை அமைச்சர் நிக் காக்கரப் தெரிவித்தார்.

தற்போது இந்தோனீசியா சென்றுள்ள ஐ.நா செயலர் பான் கி மூன் சிரியா பிரச்சனைக்கே தற்போது ஐ.நா முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க முடியாதவாறு உலக வல்லரசுகள் பிளவுபட்டு நிற்பது கவலைக்குரிய விடயம் என்றும் கூறினார். வீட்டோ பாவித்த சீனா, ரஸ்யா இரண்டும் தற்போது முக்கியமான புள்ளிக்கு தம்மை நகர்த்தியிருப்பதால் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேறும் பணி மறுபடியும் சபையேறவுள்ளது. சிரியாவில் நடைபெறும் கொலைகளை தடுக்க முன்னுரிமை அளிக்க உலக சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இது இவ்விதமிருக்க பின்லாந்து நாட்டு சிரிய தூதரகத்திற்கு அருகில் மோதல்கள் வெடித்த காரணத்தால் தூதுவராலய அதிகாரிகள் தற்போது லெபனானுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் அங்கிருந்து, பின்லாந்து புறப்படுகிறார்கள். அதேவேளை உள்ளுர் ஊழியர்கள் தூதரகத்தின் அன்றாட கருமங்களை கவனித்து வருகிறார்கள்.

மறுபுறம் ஈராக்கில் மறுபடியும் வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் வீறு கொண்டுள்ளன. இரண்டு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் முறையே 23 – 29 பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் 70 பேர்வரை படுகாயமடைந்தனர், நான்கு நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் புத்தெழுச்சி பெற்றுள்ளன.

http://www.alaikal.com/news/?p=100389

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் மனநிலை சரியில்லை என்று சொல்லி, விடுதியில் சேர்த்துவிடுவார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியில் மனநிலை சரியில்லை என்று சொல்லி, விடுதியில் சேர்த்துவிடுவார்கள்..! :rolleyes:

அவனுக்கு அங்கே இராஜபோக வாழ்க்கை. :D

ஈரானுக்கு எதிராக ஆதரவு எடுக்க இப்படியான தாக்குதல்கள் உதவலாம் என்று நான் நினைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானுக்கு எதிராக ஆதரவு எடுக்க இப்படியான தாக்குதல்கள் உதவலாம் என்று நான் நினைத்தேன்.

இதைவிட இன்னும் ஒருசில சம்பவங்கள் நடாத்தப்படும் காணத்தவறாதீர்கள்.ஆனால் அடி நிச்சயம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயும் இங்கேயும் தமிழ் யெகோவா மூப்பர்கள் சூட்கேசுகளுடனும் புத்தகங்களுடனும் அலைச்சல்.......

இன்று இந்த தாக்குதலைச்செய்த அல்யீரியாவில் பிறந்த ஆனால் பிரெஞ்சு குடியுரிமையுடைய 24 வயதுடைய பயங்கரவாதி காவல்துறையினரால் ஒரு மாடிவீட்டில் வைத்து சுத்தி வளைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருகிறது. உயிருடன் பிடிக்கவேண்டும் என்று யனாதிபதி உத்தரவு இட்ட நிலையில் காவல்துறையினர் சிலர் காயமடைந்த நிலையிலும் பொறுமை காத்துவருகின்றனர்.

Une opération du RAID a débuté dès 3h30 dans le quartier de la Croix-Daurade à Toulouse pour interpeller le suspect des tueries de Toulouse et de Montauban.

- Le suspect s'appellerait Mohammed Merah, c'est un Français d'origine algérienne de 24 ans.

- Il a effectué des séjours en Afghanistan et au Pakistan, dit "être un moudjahidine", "appartenir à Al-Qaida" et "avoir voulu venger les enfants palestiniens et s'en prendre à l'armée française".

- Il est "bavard" selon Claude Guéant, a "beaucoup expliqué son itinéraire", aux policiers du Raid, et aurait également appelé une journaliste de France 24 pour revendiquer les meurtres.

- Les négociations, entamées avec le Raid après une première tentative d'assaut où deux policiers ont été blessés, sont interrompues, a dit Claude Guéant.

- Sa mère, son frère et sa belle-soeur sont en garde à vue depuis le début de la matinée.

Le fil des événements en direct :

தற்போது கிடைத்த தகவல்படி

பேச்சுவார்த்தை முறிவடைந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

பிரான்ஸ் படுகொலை சந்தேக நபர் கைது

பிரான்சில் உள்ள ரொலூஸ் நகரத்தில் 3 யூதப்பிள்ளைகளையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற கொலை வெறியாட்டத்தில் சம்மந்தப்பட்ட 24 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் பிரான்சிய குடியுரிமை உள்ளவர் ஆனால் வடக்கு ஆபிரிக்க நாடான அல்ஜீரிய பின்னணி கொண்டவர். இவருடைய பெயர் முகமட் மார்ச். மேலும் இந்த நபர் அல் குவைடா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று பிரான்சிய போலீசார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வீடுவீடாக தேடுதல் நடாத்திய போலீசார் மேற்கண்ட நபருடைய வீட்டை சோதிக்க முற்பட்டபோது இவர் வெளியே வரமறுத்தார். இவரை கட்டாயமாக கொண்டுவர நடந்த பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாமல் போகவே வன்முறையில் கைது செய்ய எத்தனிக்கப்பட்டது. அத்தருணம் அவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை சன்னல் வழியாக வெளியே வீசினார். ஆனால் அவரிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கியும் இருந்துள்ளது. ஆறு முதல் ஏழு துப்பாக்கிச் சூடுகள் இடம் பெற்றன. இரண்டு போலீசாருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார், இவருடைய வீடு தற்போது அக்குவேறு ஆணி வேறாக சோதனையிடப்படுகிறது. இவரை பார்ப்பதற்கு இவருடைய தாயாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நபர் ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு சட்டவாட்சி செத்துப்போன ஆப்கான் – பாகிஸ்தான் எல்லை வழியாக பயணித்து வந்த அனுபவமுடையவராகும். இவர் ஆப்கானில் ஒரு தடவை கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பிரான்சில் பல சிறிய குற்றங்களில் சம்மந்தப்பட்டுள்ளார். ரொலூஸ் பாடசாலை படுகொலையை தனது இணையத்தில் போட்டுள்ளார். பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய யூதர்கள் கொல்வதால் கோபமடைந்து யூத பாடசாலை மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவருடைய கணினியில் பரிமாறப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து, இவருடைய ஐ.பி கணினி இலக்கம் மூலம் போலீசார் இவரைத் தேடிப் போயுள்ளார்கள். இவர் கணினி விளையாட்டுக்கள் உள்ள இடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுடும் விளையாட்டை அடிக்கடி விளையாடுவதாக சிலர் போலீசாருக்கு போன் செய்திருந்தனர்.

இந்த நபர் பற்றிய சந்தேகம் சுற்றாடலில் இருந்தவர்களுக்கு ஏற்கெனவே இருந்திருக்கிறது. இவர் தனது ஸ்கூட்டரின் இலக்கத்தகடைக் கழற்றிவிட்டு சென்று இந்தக் காரியத்தை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை பிரான்சிய இராணுவத்தினர் மூவர் கொல்லப்பட்ட பின்னணிக்கும் இவருக்கும் இடையே உள்ள தொடர்பு யாது என்பதை போலீசார் இதுவரை உச்சரிக்கவில்லை. கடும் போக்கு நபர் என்று ஆய்வாளர்கள் கூறியது போல இவர் அல் குவைடா கடும்போக்குவாதத்தினால் தூண்டப்பட்டவர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதேவேளை யூத பாடசாலையில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் இன்று இறுதிக்கிரியைகளுக்காக இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதேவேளை இன்று அதிகாலை 05.45 மணிக்கு பாரீசில் உள்ள இந்தோனீசிய தூதரகத்தின் முன்னால் பாரிய வெடிகுண்டு வெடித்து கட்டிடம் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மூன்றுபேர் ஒரு பெட்டியை தூதராலயத்தின் அருகே வைத்து சென்றதை தாம் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். வெடித்த குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்று போலீஸ் கூறுகிறது. கடந்த சில தினங்களாக பிரான்ஸ் கதிகலங்கியபடி இருக்கிறது. பிரான்சை செங்கன் உடன்படிக்கையால் விலத்தி, பிரான்சிற்குள் வரும் வெளிநாட்டவரை தடுக்க வேண்டும் என்று பிரான்சிய அதிபர் ஸார்கோஸி தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள வேளை இந்த நிகழ்வுகள் நடப்பது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய விடயமாகும்.

இதுபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் இருந்து புறப்பட்டு சுவிஸ் வந்த பேருந்து சுரங்கவழி சுவருடன் மோதிச் சிதறியது தெரிந்ததெ. இந்தச் சம்பவத்தில் மரணித்த 22 பெல்ஜிய நாட்டு பிள்ளைகளுக்கும் இன்று இறுதிக்கிரியைகள் நடக்கின்றன. இந்த நிகழ்வில் சுமார் 9000 பேர் கலந்து கொள்கிறார்கள். அந்த நகரமே ஸ்தம்பித நிலையில் உள்ளதாக டேனிஸ் செய்தியாளர் கூறுகிறார்.

மறுபுறம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னார் மொறரேனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கடாபியின் உளவுப்பிரிவு தலைவர் லிபியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மொறரேனியா அதிபரை சந்திக்க சென்ற வழியில் பிடிபட்டதாக கூறியுள்ளார். லிபியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கும் இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இவர் தனியான சிறையில் அடைக்கப்பட்டு சர்வதேச விதிகளுக்கு அமைவாக நடாத்தப்படுவார் என்று லிபிய அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் லிபிய அதிகாரிகளுக்கு கடாபியை விட இவரே மிகவும் தேவைப்பட்ட பேர்வழி என்பதால் பல அசிங்கமான உண்மைகளை சித்திரவதை மூலம் தோண்டி எடுக்க வாய்ப்புள்ளது.

http://www.alaikal.com/news/?p=100455

Edited by akootha

இதைவிட இன்னும் ஒருசில சம்பவங்கள் நடாத்தப்படும் காணத்தவறாதீர்கள்.ஆனால் அடி நிச்சயம். :lol:

சண்டை நடக்கும் போது எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பார்க்கலாம் இருந்தாலும் இரான் அப்பாவிமக்கள் இறக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

ஈரானு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தார்கள்தான் ஆனால் ஈரான் ஓன்றும் நம் மாமனோ மச்சான் இல்லைத்தானே? இந்தியா கொடுத்தது தான் கோவம் வரும் அங்கு அழிவு வரும் போது தான் ஆனந்தமும் கூடும்., மற்றும் படி சண்டையை நேரடியாக ஒளிபரப்பினால் பார்க்கா ஆசையாக இருக்கும் என்பது என் ஆபிப்ப்ராயம். :lol::D

  • தொடங்கியவர்

இவர்தான் இந்த இஸ்லாமிய தீவிரவாதி. இந்த செயலால் மீண்டும் மேற்குலகத்தில் பிறந்த இஸ்லாமியர்கள் பற்றிய 'தீவிரவாத பிரச்சனை' ஒரு ஆராய்ச்சியாக உருவெடுத்துள்ளது.

web-france-raid_1387260cl-8.jpg

நான்கு யூதர்கள் இறந்தார்கள்.உலகத்தின் கவனம் முழுக்க இவர்கள்மீதுதான்.பிரான்ஸ் வெளி நாட்டுஅமைச்சரே அங்கு சென்றிருக்கின்றார். நாம்??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானுக்கு எதிராக ஆதரவு எடுக்க இப்படியான தாக்குதல்கள் உதவலாம் என்று நான் நினைத்தேன்.

எங்கட சர்கோசியும் யூதர் என்று பலருக்கு தெரியாது. 

Sarkozy is the son of Pál István Ernő Sárközy de Nagy-Bócsa[3] (Hungarian: nagybócsai Sárközy Pál [nɒɟ͡ʝboːt͡ʃɒi ʃaːrkøzi paːl] ( listen); in some sources Nagy-Bócsay Sárközy Pál István Ernő),[4] a Hungarian aristocrat, and Andrée Jeanne "Dadu" Mallah (b. Paris, 12 October 1925), who is of half Greek Jewish and half French Catholic origin.[5][6] They were married at Saint-François-de-Sales, Paris XVII, on 8 February 1950 and divorced in 1959.[7]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை நடக்கும் போது எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பார்க்கலாம் இருந்தாலும் இரான் அப்பாவிமக்கள் இறக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

ஈரானு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தார்கள்தான் ஆனால் ஈரான் ஓன்றும் நம் மாமனோ மச்சான் இல்லைத்தானே? இந்தியா கொடுத்தது தான் கோவம் வரும் அங்கு அழிவு வரும் போது தான் ஆனந்தமும் கூடும்., மற்றும் படி சண்டையை நேரடியாக ஒளிபரப்பினால் பார்க்கா ஆசையாக இருக்கும் என்பது என் ஆபிப்ப்ராயம். :lol::D

இரானிய பாரசீகருடன் நாம் திராவிடர் மூவாயிரம் வருடங்கள் போர் செய்தோம்.

"சிறி" என்ற வார்த்தையே ஈரானிய வார்த்தை. 

நமது முருகன் இவர்களை போட்டு தள்ளியவர். இவர்களின் பாசையில் எம்மை அரக்காஸ், ராட்ஜதாஸ் என்று எம்மை அழைத்தார்கள். 

இந்த உயர்சாதி(?!) பார்சிகள் உங்களை வீட்டுக்குள் விடமாட்டார்கள். 

திராவிடர் இந்த போருக்கு முழு ஆதரவு கொடுக்கவேண்டும்.  

sri means venerable in Persian.

  • தொடங்கியவர்

கொலையாளி கொல்லப்பட்டார்

31 மணி நேர சுற்றிவளைப்பு, தாக்குதலின் பின்னராக 23 வயதான கொலையாளி கொல்லப்பட்டார்.

http://www.theglobeandmail.com/news/world/french-shooting-suspect-dies-in-siege-sarkozy-vows-crackdown/article2377499/

http://www.theglobeandmail.com/news/world/french-shooting-suspect-dies-in-siege-sarkozy-vows-crackdown/article2377499/

யன்னல் ஊடாக சுட்டவண்ணம் பாய்ந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Retranché dans son appartement depuis 32 heures, le suspect est finalement mort ce jeudi.

Le suspect retranché à Toulouse, Mohamed Merah, soupçonné de sept meurtres, est mort après avoir résisté aux hommes du Raid qui progressaient jeudi dans son appartement, a-t-on appris de source policière.

Les échanges de tirs - 300 cartouches au total - ont fait trois blessés parmi les policiers, dont un «assez grièvement», d'après d'autres sources policières. Le suspect était porteur d'une sacoche au contenu indéterminé, selon ces sources.

Des rafales de tirs très nourries et des détonations avaient été entendues pendant cinq minutes jeudi peu après 11h30 près de l'appartement où était retranché depuis 32 heures Mohamed Merah et où les hommes du Raid sont entrés, ont constaté des journalistes de l'AFP.

Jeudi matin, le ministre de l'Intérieur Claude Guéant avait clairement redouté un décès de l'homme de 23 ans qui aurait tué sept personnes depuis le 11 mars à Toulouse et Montauban, alors que les autorités souhaitaient le prendre vivant pour pouvoir l'interroger et le juger.

Alors que la position de Merah s'était radicalisée depuis mercredi soir, et qu'il avait déclaré, selon le ministre, «vouloir mourir les armes à la main», M. Guéant s'était étonné jeudi sur RTL qu'il n'y ait eu aucune réaction du jeune homme après les diverses détonations que les policiers du Raid ont fait retentir près de son appartement depuis mercredi soir pour l'affaiblir.

Lire ici le récit des derniers évènements.

(AFP)

http://www.liberation.fr/societe/01012397600-toulouse-merah-est-mort-apres-avoir-resiste

இவருக்கு அல்கய்டாவுடனான தொடர்பு அறியப்பட்டு இருந்த போதும், பிரெஞ்சு உளவுத்துறை கவலையீனமாக இருந்தது தெளிவாகிறது. இவர் தான் குற்றவாளியாக இருக்கவேண்டும் என்று தெரிந்தபோதும், இருப்பிடம் பற்றி உடனடியாக கண்டுபிடிக்க முடியாததும் வருந்தகூடிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு நாடு மிகவும் மனிதாபிமானத்துக்கு பெயர் போனது. இதனால் தனிமனித விடயங்களில் பெரும் விட்டுக்கொடுப்புக்களைச்செய்கிறது. இதனை சிலர் தவறாக பாவிப்பதை தடுப்பது மிகவும் கடினமானது. ஆனாலும் இவர்களின் கண்களுக்குள் இருந்து எவரும் தப்பமுடியாது. ஆனால் முழுமையாக விசாரித்து உண்மையை உறுதிப்படுத்தும்வரை எவரையும் கைது செய்யவோ துன்புறுத்தவோ மாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலைத்தடுக்க விரைந்து போன இரு வெளிநாட்டு அமைச்சர்களில் பிரெஞ்சு வெளிநாட்டமைச்சரும் ஒருவர் என்பதிலிருந்தே நாம் இதை புரிந்துகொள்ளமுடியும் Eas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசுலாமிய மதம் புதிய உலக கோட்பாட்டுக்கு எதிரானது. சில அரபிய, பார்சி குடும்பங்களால் மேல் மட்டம் ஈராயிரம் வருடங்களாக ஆட்டுவிக்கப்படுகிறது.  ஊழல் எல்லா மசூதிகளிலும் புரையோடி போய் இருக்கிறது. 

முஸ்லிம் முயலை தூக்கும் நேரம் வந்துவிட்டது. ஷா வை தூக்கி முல்லா வந்தகாலம் தொட்டு வட்டம் போடுறம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் லகஷர் இ தொய்பா ஊடாக கொழும்பில் பயிற்ச்சி பெற்றவர்களில் ஒருவரா? 

Did the Sri Lankan Muslim paramilitary train French Muslim terrorst?

http://m.indianexpress.com/news/lashkar-trained-baig-in-colombo-gave-him-mo/679767/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.