Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடம் !

Featured Replies

பாடம் !

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்டப்பட்டது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழும் வகையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தன் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் வசித்த பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்திடம் சரணடைந்த பலர் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டனர். ஒரு பாவமும் செய்யாத, பச்சிளம் குழந்தைகளும், இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு தப்பவில்லை. மனித உரிமைகளை மீறியதாக, விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இறுதிக் கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா., சபை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன் சார்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு, இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதற்கிடையே, இலங்கை அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. போர் நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என, அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு எதிராக புகார் தெரிவித்தன. தீர்மானம் என்ன: இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 19வது கூட்டத் தொடரில், இலங்கை மீதான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது. அதில், "இலங்கை தன் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; அதை மனித உரிமைகள் கவுன்சில் கண்காணிக்க வேண்டும்; ஓராண்டிற்குள் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்' என, மூன்று முக்கிய குறிப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

24 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று விவாதம் நடந்தது. 47 நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று பேசினர். ஒவ்வொரு நாட்டுக்கும், தலா மூன்று நிமிட அவகாசம் அளிக்கப்பட்டது. கியூபா சார்பில் பேசிய பிரதிநிதி, "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க முடியாது. இந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தினார். அமெரிக்கா, இதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இந்தியா வலியுறுத்தல்: ரஷ்யா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், தீர்மானத்துக்கு எதிராக பேசினர். "இந்த தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல். மனித உரிமைகளை மீறியதாக கூறி இத்தீர்மானத்தின் மூலம் இலங்கையை நிர்பந்தப்படுத்தக் கூடாது' என சீனா தெரிவித்தது.

நார்வே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், தீர்மானத்துக்கு ஆதரவாக பேசின. இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதிநிதி, "தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார். இலங்கையின் பாதை இனி மாறி தமிழர்களுக்கு கவுரவம் தர வேண்டும் என கூறப்பட்டது.

தீர்மானம் வெற்றி: இதன்பின், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 47 நாடுகள் உள்ள இந்த மனித உரிமைகள் கவுன்சிலில், நேற்று நடந்த ஓட்டெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிர்த்து 15 நாடுகளும் ஓட்டளித்தன. எட்டு நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்து விட்டன. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தன. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்த இலங்கை அரசு, தவறை உணர்ந்து, அதை திருத்திக் கொள்ளுமா என்பது தான், தற்போது எழுந்துள்ள கேள்வி. ஏனெனில், அங்கு நடந்த செயல்களை தற்போது ஐ.நா., தீர்மானம் வெளிச்சமாக்கியிருக்கிறது.

இலங்கை எதிர்ப்பு: ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் மீது இலங்கை அரசின் சார்பில் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிடுகையில், ""இறையாண்மை

கொண்ட நாடு சுயமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வன்முறையும், ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட இலங்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அமைதியும், ஸ்திரதன்மையும் நிலை நாட்டப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் மேம்பட கால அவகாசம் தேவை. எங்களுக்கு எதிரான தீர்மானம், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு உதவுவதாக அமைந்து விடும்,'' என்றார்.

ஆதரித்த நாடுகள்: ஐ. நா.,வில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த நாடுகள்: அமெரிக்கா, ருமேனியா, ஸ்பெயின், உருகுவே, சுவிட்சர்லாந்து, பெனின், மெக்சிகோ, நார்வே, போலந்து, பெரு, மால்டோவா, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், கேமரூன், சிலி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகள்.

எதிர்த்த நாடுகள்: பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, ரஷ்யா, மாலத்தீவு, சவுதி, கிர்கிஸ்தான், காங்கோ, தாய்லாந்து, ஈக்வடார், கியூபா, இந்தோனேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து ஓட்டளித்துள்ளன.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=432576

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரச்சனை பற்றி அவதூறாகவும், 40 0000க்கு மேற்பட்ட மக்கள் இறந்தபோதும் மௌனியா இருந்த தினமலர் இன்று தமிழர்கள் சார்பாக எழுதுவது என்பது வியப்புக்குரியவிடயம். பச்சோந்திப்பயலுகள்

  • தொடங்கியவர்

தமிழர் பிரச்சனை பற்றி அவதூறாகவும், 40 0000க்கு மேற்பட்ட மக்கள் இறந்தபோதும் மௌனியா இருந்த தினமலர் இன்று தமிழர்கள் சார்பாக எழுதுவது என்பது வியப்புக்குரியவிடயம். பச்சோந்திப்பயலுகள்

உண்மை ஆனால், மாற்றங்களை எமக்கு சாதகமாக பயன்படுத்தி உரிமைகளை வென்றெடுத்து பின்னர் பார்க்கலாம் இவர்களை.

விசம் கக்கும் பாம்பு எமக்கு என்றும் ஆதரவு தரப் போவதில்லை. நடைமுறையில் தமிழருக்கு பயன் தரக் கூடிய வகையில் எழுதப்பட்டு இருந்த பிரேரணையை நடைமுறைப் படுத்த முடியாததாக மாற்றி தமிழருக்கு ஆதரவு செய்வதைப் போல் மக்களை ஏமாற்றி சிங்கள அரசுக்கு நன்மை செய்துள்ள இந்திய ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு பார்ப்பன விசப் பாம்பு தினமலர்.

அதனை தின மலம் என்று தான் தமிழனாட்டில் தமிழர்கள் விழிப்பார்கள்.

  • தொடங்கியவர்

எங்களுக்கு பல எதிரிகள் உள்ளனர். ஆனால் முதன்மை எதிரி, எமது உரிமைகளை இராணுவ பலம் கொண்டு அக்கும் சிங்கள அரசியல்வாதிகள், அரசியல் உரிமைகளை மறுக்கும் அரசியல்வாதிகள்.

எமக்கு இரு சில நண்பர்களே உள்ளனர். எமது பலம் மிகச்சிறியது.

எனவே, மேலும் நண்பர்களை சேர்க்காவிட்டாலும் எதிர்ப்புக்களை குறைப்பதிலும், எமது முதன்மை எதிரியிடம் இருந்து உரிமைகள், சுதந்திரத்தை பெறுவதிலுமே முதல் கவனம் இருக்கவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.. ஐக்கிய அமெரிக்க இலங்கை பாதுகாப்பு விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது

அசோசியேட்டட் பிரஸ் -

ஐக்கிய அமெரிக்க வான்வழி மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்கள் ஏற்றுமதியும் அனுமதிக்க பாதுகாப்பு விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

புதிய விதிவிலக்குகள் போன்ற ஆயுதமற்ற ரோந்து படகுகள், ஒளி விமானம், கேமராக்கள், மற்றும் தொடர்புடைய கூறுகளாக உபகரணங்கள், ஒரு வழக்கு மூலம்-வழக்கு அடிப்படையில், ஏற்றுமதி அனுமதிக்கும்.

US eases restrictions on Sri Lanka defense sales

Associated Press – 13 hrs ago

WASHINGTON (AP) — The U.S. has eased restrictions on defense sales to Sri Lanka to allow exports of equipment for aerial and maritime surveillance.

The State Department enacted the changes Thursday, just as the U.N. Human Rights Council urged Sri Lanka to investigate allegations of war crimes during its civil conflict that ended in 2009.

The department said the two developments were unrelated.

It may, however, help ease strains in the bilateral relationship. The U.S. proposed the resolution approved by the U.N. human rights body.

The export restrictions date back to the start of the civil conflict in the 1980s. The new exceptions allow exports, on a case-by-case basis, of equipment such as unarmed patrol boats, light aircraft, cameras, and related components.

http://news.yahoo.co...-221007737.html

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனை பற்றி அவதூறாகவும், 40 0000க்கு மேற்பட்ட மக்கள் இறந்தபோதும் மௌனியா இருந்த தினமலர் இன்று தமிழர்கள் சார்பாக எழுதுவது என்பது வியப்புக்குரியவிடயம். பச்சோந்திப்பயலுகள்

இப்போது எழுதுகின்றார்கள் என்றால் பின்னணியில் எதோ ஒரு நரித்தனம் இருக்கும்.

சிலவேளை இப்படியொரு சிந்தனை இருக்கலாம் ஈழத்தமிழர் விடயத்தை மேற்குலகம் கையில் எடுத்து தீர்க்குமேயானால் இதைவிட வேறு என்ன அவமானம் இந்தியாவுக்கு வேண்டும் என்பதை நோக்காககொண்டு மாறியிருக்கலாம் ரோ பத்திரிக்கை தினமலர்.

  • தொடங்கியவர்

Lose-Lose deal

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில், போரின்போது இலங்கை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொண்டதாக அந்நாட்டைக் கண்டித்து, அந்நாடு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சில நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.

இந்தியா முக்கியமாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. பொதுவாக இந்தியா இலங்கையின் பக்கம் இருக்கும். ஆனால் இம்முறை தமிழகக் கட்சிகளின் இடைவிடாத நெருக்குதலால் இந்தியா வேறு வழியின்றி இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது. ஆனால் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கை இல்லாத காரணத்தால் இந்த வாக்களிப்பால் இந்தியாவுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதே சமயம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

திமுகவைத் திருப்திப்படுத்த என்று இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் இதற்காக திமுகவைத் தவிர யாரும் அரசைப் பாராட்டப் போவதில்லை. இலங்கை கோபித்துக்கொண்டுவிடக் கூடாதே என்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அவசர அவசரமாக வெளியிட்ட அறிக்கையைப் படிக்கும் எந்தத் தமிழுணர்வாளரும் இந்திய அரசை எப்போதும் திட்டுவதுபோலத் தொடர்ந்து திட்டுவார். அதே சமயம் அந்தக் கடிதத்தை சாதாரண சிங்களவர் யாரும் பார்க்கப் போவதே இல்லை. இலங்கை அரசோ, இந்தியா தன்னை முதுகில் குத்திவிட்டது என்று கோபத்தில் இருக்கும். எனவே இலங்கை அரசும் இலங்கையின் மக்களும் இந்தியாவை எதிரியாகப் பாவிப்பார்கள். சில வன்முறை நிகழ்வுகளும் நடக்கலாம்.

இந்திய அரசு எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கலாம். இலங்கையை ஆதரிப்பது என்ற முடிவை எடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வது என்று யோசித்திருக்கவேண்டும். உதாரணமாக திமுக ஆட்சியிலிருந்து விலகினால் அதற்கு பதிலாக என்ன செய்வது என்பதை யோசித்திருக்கவேண்டும்.

மாறாக, நிஜமாகவே மனம் உறுத்தி, மனித உரிமையை முன்வைப்பதாக முடிவெடுத்திருக்கலாம். அப்படியென்றால், தெளிவாக, ஆணித்தரமாக தன் வழியைத் தான் மாற்றிக்கொள்வதாகச் சொல்லியிருக்கலாம். முதலில் நாட்டு மக்களிடம் தன் வழிமாற்றத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல மாறப்போகும் புவி அரசியல் விளையாட்டில் எப்படிக் காய் நகர்த்துவது என்பதைத் தெளிவாக யோசித்திருக்கலாம்.

இப்படி இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல், எல்லோருக்கும் முன் ஜோக்கராக நிற்பதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

http://www.badriseshadri.in/2012/03/lose-lose-deal.html#comment-form

என்.ராமதுரை / N.RamaduraiMar 23, 2012 12:09 AM

இலங்கை சீனா பக்கம் சாயும். ஆகவே இத் தீர்மானத்தை இந்தியாஆதரிக்கலாகாது என்று ஒரு தரப்பினர் வாதித்து வந்தனர்.இந்த வாதம் அர்த்தமற்றது.ஏனேனில் இலங்கை ஒவ்வொரு பிரச்சினையிலும் ‘ சீனா பக்கம் போய் விடுவோம்’ என்று சொல்லி மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.

இந்திரா காந்தி இருந்தவரை சரியானதொரு கொள்கையைப் பின்பற்றி வந்தார்.அதன் பிறகு வந்த ம்த்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு இலங்கை அரசு, இந்திய அரசு, பிரபாகரன் கையாண்ட கொள்கை, தமிழக அரசியல் கட்சிகளின் போக்கு என பல காரணங்கள் உண்டு. அயர்லாந்துப் பிரச்சினை தீரப் பல ஆண்டுகள் ஆகியது போலவே இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.

கார்த்திMar 22, 2012 08:54 AM

சரியான கருத்து..

நம் வெளியுறவுக்கொள்கை பெரும்பாலும் வணிகம்,சுயலாபம்,ஆட்சியில் அமரும் கட்சிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது..இல்லை..மாற்றப்படுகிறது..

அடுத்த நாட்டின் உரையை வாசிக்கும் அறிவுள்ள அமைச்சர்களையும், Pornகளை சட்டசபையிலே பார்க்கும் பெற்றுள்ளது நம் நாடு..:(:(

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் சொன்ன கருத்து..

"உலகில் 80 நாடுகளில் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.ஆனால் ஒரு சிங்களவர் கூட அவ்வாறு இல்லை"..

  • கருத்துக்கள உறவுகள்

.. ஐக்கிய அமெரிக்க இலங்கை பாதுகாப்பு விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது

அடித்துவிட்டு அன்பைப் பொழிகிறது அமெரிக்கா..! இலங்கையின் முக்கியத்துவமும் விளங்குகிறது..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.