Jump to content

பெரியார் உண்மையில் என்ன சொன்னார்?


Recommended Posts

பதியப்பட்டது

இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால்.

ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான்.

அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை.

பகுத்தறிவு

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளிநாட்டான் கூறவேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பொது அறிவு வளர உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்படவேண்டும்.

(வ¤.6.12.47;1:3)

உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால¢மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.

(வ¤.22.5.61.1:பெ.செ.)

மற்ற நாட்டில் எல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு, அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாகக் கொள்வான். இந்த குப்பைக் கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம், இவைகளைத்தான் நம்புகிறான்.

(வ¤.10.7.61;3:2)

சிந்தனை அறிவு ஒன்றுதானே உண்மையறிவாகக் கருதப்படக்கூடியது? வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அப்படியானால், படித்த மேதாவிகள், பட்டதாரிகள், விஞ்ஞானப் பாடத்தில் பட்டதாரிகள், கல்லைக் கடவுள் என்று நம்பி அதன் காலில் விழுந்து வணங்குவார்களா? மகா விஞ்ஞானம் படித்த மகோன்னதப் பண்டித நிபுணர் என்பவர்களெல்லாம் பாபவிமோசனத்திற்காகத்தான் தீர்த்தமென்று சேற்று நீரை வாரித் தெளித்துக்கொள்வார்களா? அவர்கள் படித்த அறிவியலுக்கும் இந்தச் சாணி மூத்திரக் கலவைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

(பெ.சி.மி.102)

இராமாயணத்திலும், பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

(பெ.ச¤.மிமி;651 - 2)

ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்ந்துப் பாருங்கள். அவன், (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்,

(பெ.சி.மிமி;971)

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

(கு.4.5.30;10:4)

நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.

(கு.26.2.33;8:4)

மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கலவையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.

(கு.25.5.35;15:2-3)

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தில் பேராலோ மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலோ நடத்தப்படக் கூடாது.

(கு.29.9.40;1:4)

மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல, பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.

(கு.23.11.46;7:2)

வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப்போட்டித் தொல்லை எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.

(வ¤.5.2.51;3:1)

மன¤தன¢தனது சமூகததை வஞச¤த்துப¢பொருள் சேர்த்துப் பகுத்தற¤வுள்ள தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்றுசொல்லுக¤றான். ஆனால் மிருகம, பட்ச¤ ஆகியவைகள் பகுத்தற¤வு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றன. அவற்றைப் பற்றி கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

(வி.19.2.58.மி;பெ.செ.)

இரண்டாயிரம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய் எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அழுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.

(வ¤.12.1.61;பெ.செ.)

கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

(வ¤.3.4.61;3:5)

பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

(வ¤.14.6.61;1.பெ.செ.)

குருட்டு நம்பிக்கையை அறவே விட்டுப் பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதானால் ஒரு மதமும் நிலைக்காது.

(வ¤.15.10.62;2:பெ.செ.)

பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான். பின்பற்றமாட்டான்.

(வ¤.17.10.62.2.பெ.செ)

நம் மக்கள் பக்குவமடைய மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

(வி.30.1.68;2:3)

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.

(கு.9.12.28;11:2)

பகுத்தறிவு மூலம் மனிதனின் ஆயுசு வளர்ந்ததோடு மனிதனின் சாவு எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.

(வி.4.10.67;2:6)

அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருத்துக் கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுகிறானே, அதுதான் அறிவின்தன்மை.

(வி.13.9.68;2:3)

சிந்தனாசக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனைவிட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

மனிதனிடமுள்ள வேறு எந்த சக்தியைக்காட்டிலும் பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா உயிர்களினின்றும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான் அவன் மனித்தன்மை பெற்றியங்குவதாக நாம் கூறமுடியும். பகுத்தறிவை உபயோகிக்காதவன் மிருகமாகவே கருதப்படுவான்.

(கு.1.5.48;5:3)

இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம் என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால், இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராய முடியாமல்போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப்பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான் எனது கருத்து.

(வி.3.11.67;2:2)

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

(5.11.67;பெ.செ.)

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?

(வி.5.11.67;2:2)

எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்.

அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.

(வி.27.11.69;3:4)

அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!

(கு.30.10.32;9)

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?

(கு.1.11.36;5:1)

மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும்.

(வி.6.12.47;1:3)

ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.

(கு.1.5.48;12:2)

இன்று நமக்கு வேண்டியது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும். அறிவு ஆட்சி செய்தல் வேண்டும்.

(வி.7.3.61;3:2)

மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.

(வி.14.3.61;3:1)

உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல, உங்கள் அறிவுதான். நீங்கள், நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள்.

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.

(வி.16.8.69;2:1)

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

(பெ.பொ:8)

மனிதன் நம்பிக்கைவழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை பெறமுடியும்.

(வி.13.8.61;3:5)

உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன்னோர் சொல்லித் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய - கண்டுபிடிக்க முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.

(வி.13.1.63.2:பெ.செ)

உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும்.

(வி.16.12.69;3:6)

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

(கு.20.1.35;10:4)

விடுதலை மற்றும் உண்மை இதழ்களிலிருந்து.

அறிவியல்

இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.

(கு.13.8.33;10:4)

இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள். தீ உண்டாக்கச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்;இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!

(வி.2.3.61:பெ.செ.)

கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். கண்காட்சிச் சாலையின் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவருவதற்குள் ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக் கொண்டுவிடுவான். அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டுகளித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்புப் பெறுகிறான். பல அதிசயக் கருவிகளைக் கண்டு அக மகிழ்கிறான். சுருங்கக் கூறின் கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெற வேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான்.

(வி.13.1.63:2:4)

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப்பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக்கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.

(கு.11.8.29:10:2)

சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘‘எடிசன்’’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.

(பெ.சி.மிமி: 1220)

உணவுத்துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயக்க வைத்தோம், பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற் கேற்றாற்போல் மாற்றி ஓடச்செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச்செய்யாமல் மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஓன்றைக் கண்டுபிடித்து (சிறிய உணவு) அதைக் கொண்டே மனிதனை இயங்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.

(பெ.ந.வா.நே.;8)

மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண் பெண் உறவிக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

(கு.30.1.36:15)

கல்வி

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.

(கு.29.7.31;8:1)

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடமையைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமாக காரியமாய் இருக்கிறது.

(கு.22.11.36;19)

ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்தவேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெறவேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.

(கு.26.12.37;10:3)

கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

(வி.7.11.55;3:3)

ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

(கு.1.5.27;6:1)

எப்படியிருந்தாலும் புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போலாகும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. எனவே, பண்டிதர்களைக் கிட்டச் சேர்க்கும் காரியத்தில் மிக விழிப்போடு இருக்கவேண்டும்.

(கு.18.5.30;14)

ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதளவாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

(கு.12.2.44;9)

ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

(வி.5.10.60;பெ.செ.)

பெருமைமிக்க ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை மதவாதிகளாக்க வேண்டுமென்று கருதுவதைவிட, அறிவாளிகளாக்க வேண்டுமென்று பாடுபடவேண்டும்

(வி.16.12.69;3:6)

நாட்டில் சாதியின் பேரால் ஒருவன் எதற்காக இழிமகனாகவும், இழிதொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்துவிட்டால் இழித்தொழிலுக்கென்று ஒரு சாதி இருக்க முடியுமா? படிப்பின்மையால்தானே இவர்கள் இழிதொழிலைச் செய்ய வேண்டியிருக்கிறது? அதனால்தானே இழிமக்களாகவும் கருதப்படுகின்றனர்?

(வி.12.6.61;பெ.செ.)

சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.

(வி.21.7.61;3:4)

இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல: பள்ளிக்கூடம்தான். அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையான கல்விக்கூடங்கள்தான் இன்று நமக்கு மிக மிகத் தேவை.

(வி.6.7.68;3:5)

நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.

(வி.26.7.68;3:1)

பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவது ஒரு துறையில் விளக்கத்தையும்தான் உண்டாக்க உதவும். வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல துறைகளிலும் ஞானத்தையும் உண்டாக்கும்.

(கு.6.3.38:8:1)

நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு அவை அடங்கியனவே.

இத்தகைய நிறுவனங்களால் படிப்பின் பயன் முழுமையாகக் கிடைத்துவிடாது, இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவன படிப்பகங்களேயாகும்.

(வி.8.1.61;2:5)

சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை என்றே கூறலாம்.

(கு.19.7.31:3)

நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்சிச்யும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.

(கு.22.8.37;10:3)

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.

(வி.25.1.47;3:3)

பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்குமுறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.

(வி.1.3.56;3:3)

நாட்டை நல்லமுறையில் வளப்படுத்த நான் நாட்டின் அதிகாரியாக இருந்தால், அதிக வரி போடுவேன். ஏழைகளிடத்தில் எவ்வளவுதான் கையில் கொடுத்தாலும் அதை உடனே செலவு செய்து விடுகிறார்கள். ஆகவே அவர்கள் கையில் பணம் கொடுக்காமல் வரியாகப் பிடித்து அவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.

(வி.23.7.56;3:5-6)

மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயும் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(வி.17.3.68;2:3)

பாரதிதாசன் அவர்களது பாடல்களை வகுப்புக்குத் தகுந்தபடி தொகுத்துப் பாடமாக வையுங்கள்: ஐந்தாண்டு அறிவு ஓர் ஆண்டில் தோன்றிடும்.

(வி.23.5.68;2)

பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருந்ததல். இவைகள் நமக்குக் கடவுளைவிட மேலானவை.

(வி.27.9.55;3:3)

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது.

(வி.5.10.61;பெ.செ.)

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது.

(வி.9.4.62;பெ.செ.)

மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்.

(வி.17.5.62;பெ.செ.)

முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்.

(வி.15.7.62;பெ.செ.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விஸயம் நாரதர் சார் தொடருங்கோ

Posted

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

(கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான்.

(கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்.

(கு.8.2.31;12:2-1)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

(கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

(கு.16.6.35;7:3)

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

(வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

(கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும்.

(வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.

(வி.5.4.61;1:பெ.செ.)

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது.

(வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்?

(பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

(வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.

(கு.5.6.48;14:2-3)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள்.

(கு.29.9.40;15:3)

பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும்.

(வி.15.6.43;1:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.

(வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

(கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?

(கு.3.11.29;8)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும்.

(வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.

(பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.

(கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.

(கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?

(பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.

(கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?

(வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி.

(கு.12.8.28;10:2)

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்: எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது.

(கு.16.6.35;8:2)

மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்.

(கு.6.4.30;10:9)

பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும்.

(கு.12.2.28.13.3)

ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா?

(கு.12.8.28;10:1-2)

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.

(கு.8.3.36;14:3)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம்.

(கு.27.10.40;3:3)

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது.

(வி.26.5.58;1:பெ,செ.)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும்.

(வி.21.3.50;பெ.செ.)

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்க

Posted

சாதி ஒழிப்பு

சாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?

(கு.2.6.35;11)

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழி மக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாத்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?

(கு.23.6.35;12)

கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது.

(கு.18.12.43;3)

சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்கள் என்றும் இழிமக்களென்றும் கருதும் மதங்களும் , புராணங்களும் சட்டங்களும் இருக்கமுடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்.

(வி.22.2.61;1)

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.

(வி.13.11.61;1:பெ,செ.)

நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள், ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதிநோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.

(வி.25.7.62;1:பெ.செ.)

பிறவியால் கீழ்-மேல், உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க வேண்டும்.

(பெ,ஒ,வா.நெ;29)

மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியைவிட்டுத் தள்ளுவதில்லை. ஆனால் சாதியைவிட்டுச் சாதி சாப்பிட்டால் கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.

(கு.20.12.36;14:4)

ஓரிடத்தில் உப்பு நீர்க் கிணறும், நல்ல தண்ணீர்க்கிணறும் உள்ளது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி அனுபவிக்கவேண்டும். உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும். இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனைதரும் அளவுக்குச் சாதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும் மற்ற பலர் வேதனைப்டுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள் இந்நாட்டை விட்டு அகலும்வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்.

(வி.30.3.56;3:6)

நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் சாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு, சாதியால் தானே, இதை சிந்திக்க வேண்டாமா?

(வி.8.7.61;3-4:6-5)

சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே, அது வகுப்புத் துவேஷம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

(வி.24.5.61;1:பெ.செ.)

சாதி எனும் வார்த்தையே வடமொழி. தமிழில் சாதி என்பதற்கு வார்த்தையே இல்லை. என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டுமே கேட்பார்கள், பிறக்கும்போது சாதி வித்தியாசத்தை, அடையாளத்தைக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. மனிதரில் சாதி இல்லை. ஒரு நாட்டிலே பிறந்த நமக்குள் சாதி சொல்லுதல் குறும்புத் தனம்.

(வி.15.9.57;3:1-2)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிக நல்ல முயற்சி நாரதரே. மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வேகமாகப் போகாமல் மெதுவாகப் போங்கள். எல்லோரும் பொறுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

Posted

நல்லதொரு விடயம் நல்லொதொரு முயற்ச்சி தொடருங்கோ..நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு பகுத்தறிவு பேசும் பெரியார் திராவிடக் கழகம் என்று வகுப்புவாதக் கட்சியை ஏன் அமைத்தார்? வட இந்தியாவில் எவராவது ஆரிய கழகம் என்று கட்சி அமைத்து பகுத்தறிவுவாதம் புகட்டினரா?

அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக (சமூகக் காரணம் அங்கு முன்னிலை பெற்றதாக இருக்கவில்லை) தாழ்த்தப்பட்ட மக்களை பெண்களை இலக்கு வைத்து எழுந்த பெரியாரின் இந்தச் சிந்தனைகள்... காங்கிரஸ் மற்றும் இந்துத்துவக் கட்சிகளின் இருப்பை எழுச்சியைச் சமாளிக்க என்று சொல்லப்பட்டவை என்பதனாலோ என்னவோ பெரியாரை மூச்சுக்கு முன்னூறு தரம் உச்சரிப்பவர்கள் எவரும் பெரியார் கொள்கைகளை முழுமையாக அமுல் படுத்தக் கூடிய நிலைகளில் இருந்தும் அமுல்படுத்த முனையவில்லை.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் பாரதி சமூக எழுச்சி வேண்டிக் கையாண்ட அதே பெண் விடுதலைக் கருத்துக்களை தனது அரசியல் எழுச்சிக்காக பெரியார் பயன்படுத்தியதே அவரின் பகுப்பறிவு (பகுத்தறிவல்ல) வாதம். இன்று பெரியாரைக் கருணாநிதி என்ற வேஷம் போடு அரசியல் குள்ள நரி ஆதரிக்கிறது என்பதற்காக ஆதரிப்போர் பலர். எல்லாம் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எழுந்த சமூகச் சிந்தனைகள். அரசியல் முடிந்ததும் அவை கைவிடப்படும் மேடைப் பேச்சுக்குரிய சிந்தனைகளாகி குறுகிய வட்டத்துக்குள் அடக்கப்பட்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. அதனால் தான் என்னவோ..சாதியச் சான்றிதழ்களை கேட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. சாதி ஒதுக்கீடுகள் என்று சாதிப்பாகுபாடு ஒழிந்த பாடில்லை. சாதிக் கட்சிகளின் உருவாக்கமும் கூட்டணி அமைப்பும் நின்றபாடில்லை. கோயில்கள் குறைந்த பாடில்லை. அதைக் கூட அரசியலாக்கக் கூடியவர் பெரியாரின் நாத்திக வாரிசு கருணாநிதி. காஞ்சிக்காமகோடிகள் விவகாரத்தில் காஞ்சிக்காமகோடிகளுக்காக குரல் கொடுத்த கருணாநிதியை மறக்க ஏலுமோ..நல்ல நாத்தியகமும் பெரியார் கொள்கையும். எல்லாம் பேச்சளவில் தான். தமிழகம் உருப்படாததற்கு பெரியாரின் அரசியல் வாரிசுகள் தான் முதற்படி.

பெரியாரின் கொள்கைகளை உச்சரிக்கும் கருணாநிதி ஏன் சதா மஞ்சள் துணியும் கூலிங்கிளாசும் அணைந்து கொண்டிருக்கிறார். மஞ்சள் துணிக்குப் பின்னாலும் கூலிங்கிளாசுக்குப் பின்னாலும் மூடநம்பிக்கைகளே இல்லை எங்கிறாரா? அல்லது தமிழ் நாட்டில் எப்பவுமே சூடு அதிகம் எங்கிறாரா? :D

இஸ்லாம் கிறிஸ்தவம் என்று அவைக்குள்ளும் பிரிவினைகள் பாகுபாடுகள் இருந்தனதான். சமூகப்பிரிவினைகள் இருந்தனதான். கிறிஸ்தவர்கள் மத்தியிலும் சாதியக் கூறுகள் இருந்தன. ஆனால் பெரியார் என்ற பூதக்கண்ணாடிக்கு தெரிந்ததெல்லாம் இந்துத்துத்துவ எதிர்ப்பின் பின்னணியில் அமைந்த இந்துக்கடவுள்கள் இந்துக்கள் மத்தியில் நிலவிய தலித்தியம் மட்டும் தான். பெரியாரின் வசைக்குள் சிக்கிக் கொண்டதில் சைவக் கடவுள்களான சிவபெருமான் முருகன் கூட விதிவிலக்கில்லை. திராவிடக் கடவுளாக திராவிடர்கள் சொல்லிக் கொள்ளும் முருகன் கூட பெரியாரின் வசைக்கு இலக்கானது திராவிட பகுத்து அறிவு வாததின் உண்மைத் தோற்றத்தையும் அதன் குறுகிய வட்டத்தையும் வெளி உலகுக்குக் காட்டியது.

உண்மையில் சமூக பெண் விழிப்புணர்வு சாதிய எதிர்ப்புணர்வை மத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை பெரியார் விரும்பி இருந்தால் திராவிடம் என்ற பகுப்பு வாதத்துக்குள் நிற்காமல் அதைக்கடந்து நின்று செயற்பட்டிருப்பார். திராவிடம் என்ற பகுப்பு வாதத்துக்குள் நின்று பெரியார் எப்படி திராவிட நிலை கடந்த சிந்தனைகளை மக்களிடம் விதைக்க முனைந்தாரோ தெரியவில்லை. ஆக தமிழகத்தில் நிலவிய காங்கிரஸின் அரசியல் பலத்தை ஆட்டங்காணச் செய்ய திராவிட கழகம் என்ற பெயரில் தனது அரசியல் வங்குரோத்துத் தனத்தையே சமூக எழுச்சிக்கான குரலாக வெளிப்படுத்தி வேடிக்கை காட்டியவர் பெரியார்.

இன்றும் கூட அதுதான் தொடர்சியாகி உள்ளது. பெண்களின் கற்புப் பற்றி பேசியதற்காக குஷ்புவை சீர்திருத்தவாதியாக்கிய முட்டாள்கள் நாளை அவரை அரசியல்வாதியும் ஆக்குவார்கள். ஒரு பெண் தனது கருத்தைச் சொல்வதைக் கூட சீர்திருத்தவாதம் என்று கருதும் சமூகத்தில்..பெரியார் போன்ற சில சிந்தனையாளர்கள் அழகாக புகுந்து விளையாடி இருக்கின்றனர். என்னதான் பெரியாருக்கு மாலை போட்டு கொள்கைகளை பக்கம் பக்கமாக விபரிக்கினும்..இன்னும் பெண்நிலை வாதங்களையோ இந்துத்துவாவையோ தலித்தியத்தையோ கோயில்களையோ தேவாலயங்களையோ மசூதிகளையோ கடந்து தமிழகத்தில் என்ன இந்தியாவிலேயே அரசியல் செய்ய வழியில்லை என்பது மட்டும் புலனாகி உள்ளது. வாழ்க வளமுடன் பெரியாரின் அரசியல் சமூக பகுப்பறிவுச் சிந்தனைகள்.

பாரதியிடம் கொள்ளையடித்து இவ்வளவு பெண்ணிய சிந்தனைகளை விதைத்த அரசியல் சமூக பகுத்தறிவுவாதி மணந்தது என்னவோ 13 வயதுச் சிறுமியை. அதில் மட்டும் ஐயாவுக்கு பகுத்தறிவு கடந்தே போயிட்டுது. அதுமட்டுமில்ல அப்புறம் இந்தப் பகுத்தறிவுச் சிங்கம் தனது 72 வது வயதில் 26 வயதே ஆன மணியம்மையையும் மணம் முடித்து கருணாநிதி போன்ற 3 தரம் மணம் முடித்த சீடர்கள் உருவாக உதவி நின்றவர். :D:D

பெரியார் கண்ணகியை துரத்தி அடித்த மேதை. சீடனோ...தூக்கி எறிந்த கண்ணகிச் சிலைக்காக கண்ணீர் வடிக்கிறார்..என்னே கொள்கைகள்..அதுதான் பாரதி பாடிச் சென்றான் போல..வேடிக்கை மனிதர்கள் என்று..! :P

Posted

அடக்கப்படுபவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதையும் போராட்டத்தின் ஒரு வடிவமாகத்தான் பார்க்க வேண்டும்.

சில சான்றுகளை புறம்தள்ளி விட்டு 1983ஆம் ஆண்டிற்கு முதல் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்றும் வாதிட முடியும். அப்படி வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆரியர்களும் திராவிடர்களும் மோதல்கள் இன்றி குறிப்பிட்ட காலகட்டங்களில் வாழ்ந்திருக்க கூடும்.

முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.

பெரியர் திராவிட கொள்கையை தூக்கிப்பிடித்தது, சரியான தொலைநோக்குச் சிந்தனை அற்ற செயல் என்பது என்னுடைய கருத்து.

பெரியார்தான் முதன்முதலாக தனித்தமிழ் நாடு கேட்டார். ஆனால் அவர் அதை பின்பு திராவிட நாடு என்று மாற்றி விட்டார். அது தவறு என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இங்கே ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த தளத்திலே நானோ, மற்றவர்களோ இதுவரை ஆரிய இன மக்களுக்கு எதிராக எவ்விதமான துவேசம் மிகுந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

ஆகவே எங்களின் கருத்துக்களை "ஆரிய எதிர்ப்புக் கருத்துக்கள்" என்று திசை திருப்புவது தவறு.

சிலர் நினைப்பது போன்று இந்து மதம் தமிழனுடைய மதம் அல்ல என்று சொல்வதற்காக, இந்து மதத்தை பரப்பியவர்கள் ஆரியர்கள் என்கின்ற உண்மையை சொல்கிறோம்.

ஆரியர்கள் பரப்பினார்கள் என்பதற்காக நாங்கள் இந்து மதத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்றைய இனங்களோ, அல்லது தமிழினமோ இந்து மதத்தை உருவாக்கி இருந்தாலும், அதை தூக்கி எறியுங்கள் என்றுதான் சொல்லி இருப்போம்.

காரணம், இந்து மதம் அத்தனை குப்பைகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் மிக முக்கிய பகுதியாக வர்ணாச்சிரம தர்மம் இருக்கிறது. அதற்குள் தாய்மொழி எதிர்ப்பு இருக்கிறது. இப்படி நிறையை இருக்கிறது இதை சீர்படுத்துவதற்கு பலர் முயன்றும் முடியவில்லை.

முடியாத நிலையில் சொல்கிறோம், தமிழினமே மதத்தை நம்பாதே, மனிதத்தை நம்பு.

இந்த விவாதத்தை இன்னும் ஒரு திசைதிருப்பலும் நடக்கிறது!

பெரியார் தேர்தலில் என்றுமே நிற்கவில்லை. பெரியாருக்கு தானாகவே சென்னை மாகாணத்தின் முதல்வர் பதவி தேடி வந்தது. அவர் அதை ஏற்கவில்லை. அவர் வாக்கு அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கு அவர் சொன்ன காரணம்: வாக்கு அரசியல் செய்தால், கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். சமரசங்கள் செய்ய வேண்டி வரும். அதனால் நான் வாக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்.

இதை மீறி வாக்கு அரசியலில் ஈடுபட்டவர்களை பெரியாரின் தொண்டர்கள் என்று உதாரணம் காட்டுவது தவறு. பெரியாரும் கலைஞரும் ஒன்றல்ல. நாம் ஒரு போதும் அப்படி சொன்னதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு எங்களின் கருத்தியல் தளமே புரியவில்லை என்று தெரிகிறது.

பெரியார் என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்த பெண்ணியம் பேசிப் பேசி பெண்களை வதைத்த வித்தகர் சொன்னால் என்ன எந்த தாடி வளர்த்த வள்ளல் சொன்னால் என்ன ஆரியர் திராவிடர் பாகுபாட்டியலை நாம் இந்திய உபகண்டத்துள் திணிப்பதை நிராகரிக்கின்றோம்.

தமிழர்களின் வரலாறு ஆரிய திராவிட பாகுபாட்டுக்கு அப்பால் நோக்கப்பட வேண்டியதாகிறது என்பதை தெளிவாக வலியுறுத்துகின்றோம்.

பூர்வீக வட இந்தியர்களும் தென்னிந்தியர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக சொல்லப்படுகிறதே தவிர அவர்கள் ஆரியரோ திராவிடர்களோ என்று சான்றுகளோடு சொல்லப்படவில்லை. சான்றுகள் என்பது ஆளுக்காள் எழுதிய கட்டுரைகளை அல்ல. நாங்கள் குறிப்பிடுவது புவியியல் பெளதீகவியல் மற்றும் தொல்பொருளியல் மரபியல் சான்றுகளை மட்டுமே...!

எனவே எமது அடிப்படைகளுக்கு அப்பாலான உங்கள் கருத்துக்களைப் பரிசீலிப்பது அநாவசியமானதாக உள்ளதால் அவற்றிற்குப் பதிலிறுப்பதிலும் பயனில்லை. :P

Posted

மொழியியல் ரீதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் ஒரு தனி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவைகள் ஒரு மொழியில் இருந்து கிளர்ந்தவை என்றும்..

சமஸ்கிருதம், லத்தீன், பழைய கெர்மானிக் மொழிகள், செல்டிக் மொழிகள் போன்ற மொழிகள் ஒரு மாழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்றும்...

மொழியியல் வல்லுனர்கள் நிறுவி இருக்கிறார்கள். இதற்கு முன்பு சமஸ்கிருதத்தில் இருந்துதான் அனைத்து இந்திய மொழிகளும் உருவானது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதை இந்த மொழியியல் வல்லுனர்கள் ஆதார பூர்வமான மொழியியல் சான்றுகள் மூலம் தகர்த்து விட்டார்கள்.

சமஸ்கிருதமும், தமிழும் வௌ;வேறு மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதை யாரும் இதுவரை மொழியியல்ரீதியாக தவறு என்று நிருபிக்கவில்லை.

இங்கே ஆரியம் என்ற பதம் தவறாக இருக்கலாம். திராவிடம் என்பதும் தவறாக இருக்கலாம்.

ஆனால் இன்று இந்து மதத்தில் தவர்க்க முடியாதபடி இருக்கின்ற சமஸ்கிருத மொழிக் குடும்பத்தினர் வேறு என்பதையும், அதன் மூலம் தமிழினம் இந்து மதத்திற்கு "மதம் மாறியது" என்பதையும் சொல்கிறோம்.

இதன் மூலம் இந்து மதம் குறித்து கட்டப்பட்டிருக்கு கற்பனைக் கதைகளை தகர்க்க முனைகிறோமே தவிர, சமஸ்கிருத மொழிக் குடும்பத்தினருக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்பையும் நாம் செய்யவில்லை.

இன்றைய உலக ஒழுங்கில் பாகுபாடுகளை நாம் வலியுறுத்தவில்லை. அது பொருத்தமானதும் அல்ல.

மதம் வேண்டாம், மனிதத்தை நேசி என்று சொல்கிறோம். மனிதம் என்பதில் ஆரியர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொழியியல் ரீதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் ஒரு தனி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவைகள் ஒரு மொழியில் இருந்து கிளர்ந்தவை என்றும்..

சமஸ்கிருதம், லத்தீன், பழைய கெர்மானிக் மொழிகள், செல்டிக் மொழிகள் போன்ற மொழிகள் ஒரு மாழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்றும்...

மொழியியல் வல்லுனர்கள் நிறுவி இருக்கிறார்கள். இதற்கு முன்பு சமஸ்கிருதத்தில் இருந்துதான் அனைத்து இந்திய மொழிகளும் உருவானது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதை இந்த மொழியியல் வல்லுனர்கள் ஆதார பூர்வமான மொழியியல் சான்றுகள் மூலம் தகர்த்து விட்டார்கள்.

சமஸ்கிருதமும், தமிழும் வௌ;வேறு மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதை யாரும் இதுவரை மொழியியல்ரீதியாக தவறு என்று நிருபிக்கவில்லை.

இங்கே ஆரியம் என்ற பதம் தவறாக இருக்கலாம். திராவிடம் என்பதும் தவறாக இருக்கலாம்.

ஆனால் இன்று இந்து மதத்தில் தவர்க்க முடியாதபடி இருக்கின்ற சமஸ்கிருத மொழிக் குடும்பத்தினர் வேறு என்பதையும், அதன் மூலம் தமிழினம் இந்து மதத்திற்கு "மதம் மாறியது" என்பதையும் சொல்கிறோம்.

இதன் மூலம் இந்து மதம் குறித்து கட்டப்பட்டிருக்கு கற்பனைக் கதைகளை தகர்க்க முனைகிறோமே தவிர, சமஸ்கிருத மொழிக் குடும்பத்தினருக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்பையும் நாம் செய்யவில்லை.

இன்றைய உலக ஒழுங்கில் பாகுபாடுகளை நாம் வலியுறுத்தவில்லை. அது பொருத்தமானதும் அல்ல.

மதம் வேண்டாம், மனிதத்தை நேசி என்று சொல்கிறோம். மனிதம் என்பதில் ஆரியர்களும் இருக்கிறார்கள்.

காலங்காலமாய் ஆரியரை வைத்து கதை புனைந்தீர்கள். அதையே உலகம் இன்று ஆதாரங்களோடு நிராகரிக்க ஆரம்பித்துவிட்டது.

எனி மொழி வாரியான ஆதிக்கம் எழுந்தது என்று புலம்பப் போகின்றீர்கள். இந்துமதத்துள் சைவம் அடங்குகிறது. சைவம் தமிழர்களின் மதமாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தமிழர்களின் இன அடையாளத்துக்கு அவசியமான மதமாக சைவம் உள்ளது. இருந்தாலும் தமிழர்கள் இந்து மதப்பிரிவுகள் அனைத்தையும் அரவணைத்துச் சொல்லக் கூடிய நவீனத்துவக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதானது நவீன உலகியல் ஒழுங்கில் பல்லினத்துவ பல மதம் என்ற அங்கீகார வாழ்க்கையை அவர்கள் வாழ அனுமதிக்கும்.

அந்த வகையில் தமிழீழம் என்பது பல்லின பல மத நாடாக இருக்கும். மதமற்ற தமிழர்கள் மட்டும் வாழும் நாடாக நீங்கள் நினைப்பது போல கனவிலும் அமையாது.

புலம்பெயரிடத்தில் நீங்கள் மதத்தை விட்டால் என்ன குடும்பத்தை இழந்தால் என்ன ஓரினச்சேர்க்கை செய்தால் என்ன..யாரும் ஏன் எதற்கு என்று கேட்க எந்த அடையாளமும் இல்லாத அடிமைகள் தான்..புலம்பெயர்ந்த தமிழர்கள்... என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இதையும் வாசியுங்கள்..தெளிவுகள் பிறக்கும்..

http://www.uwf.edu/lgoel/documents/AMythof...ionsofIndia.pdf

Posted

தமிழீழம் முதலில் சாதிகள் அற்ற நாடாக இருக்குமா என்பதிலேயே எனக்கு பல சந்தேகங்கள் உண்டு. இதில் மதங்கள் இல்லாத நாடாக இருக்குமா? அப்படி எல்லாம் நான் கனவு காண மாட்டேன்.

கடவுள் பயம் இருக்கும் வரை மதங்கள் இருக்கும்.

மதத்தை மனித குலம் தளர்த்துவதற்கு சில நூறு ஆண்டுகள் பிடிக்கும்.

மதத்தை கைவிடுவதற்கு ஒரு ஆயிரம் ஆண்டாவது செல்லும்.

அந்த நிலை வருவதற்கு எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் உந்துதலாக இருக்கும். நாம் சொல்வது 10, 20 வருடக் கணக்கை இலக்காக கொண்டு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் முதலில் சாதிகள் அற்ற நாடாக இருக்குமா என்பதிலேயே எனக்கு பல சந்தேகங்கள் உண்டு. இதில் மதங்கள் இல்லாத நாடாக இருக்குமா? அப்படி எல்லாம் நான் கனவு காண மாட்டேன்.

கடவுள் பயம் இருக்கும் வரை மதங்கள் இருக்கும்.

மதத்தை மனித குலம் தளர்த்துவதற்கு சில நூறு ஆண்டுகள் பிடிக்கும்.

மதத்தை கைவிடுவதற்கு ஒரு ஆயிரம் ஆண்டாவது செல்லும்.

அந்த நிலை வருவதற்கு எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் உந்துதலாக இருக்கும். நாம் சொல்வது 10, 20 வருடக் கணக்கை இலக்காக கொண்டு அல்ல.

இதை நீங்கள் மட்டுமல்ல...மதங்கள் தோன்றிய காலம் தொட்டே சொல்லிக்கொண்டு வருகின்றனர். பிரபஞ்சத்தை ஆக்கி இயக்கும் சக்தியின் மூலம் எது என்பதற்கான விடைகிடைக்கும் வரை அது தளரவும் மாட்டாது. ஒழியவும் போறதில்லை.

இதைத்தான் சொல்வது கல்லில் நாருரித்தல் என்று. :D

Posted

மேற்குலகில் வாழுகின்ற நீங்கள் இதை உணராது இருப்பது ஆச்சரியம்.

மதத்தின் பெயரால் யுத்தங்கள் இங்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்தது. மக்களை அடக்குவதற்கு மதநம்பிக்கை பாவிக்கப்பட்டதும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

இன்றைக்கு அந்த மத நம்பிக்கை தளர்ந்து போய்விட்டது. மதம் பற்றியும் கடவுள் பற்றியும் அக்கறை அற்ற நிலையில்தான் இன்று பெரும்பாலான மக்கள் மேற்குலகில் வாழுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் துளிர்விட்ட மேற்குலகின் சிந்தனை மாற்றங்கள் இன்றைக்கு ஆசியாவிலும் வேர் பரப்புகின்றன.

சில நூறு ஆண்டுகளில் ஆசியாவிலும் மதநம்பிக்கை தளர்ந்து போகும்.

சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நான் என்னுடைய கருத்துக்களை சொல்கிற பொழுது நான் தனியாக இல்லை. நான் கொண்டிருப்பதற்கு ஒத்த கருத்துக்களை யாழ் களத்திலேயே பலர் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களிலும் பெரும்பாலானவர்களிலும் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, காது கொடுத்துக் கேட்கச் செய்கிறார்கள்.

இந்த நிலை ஒரு 15 வருடங்களுக்கு முன்பு இல்லை. அப்பொழுது எல்லாம் நாம் எங்களின் கருத்துக்களை தயங்கி தயங்கி சொன்னோம். இப்பொழுது பெருமையாக சொல்கிறோம்.

இது உண்மையா, பொய்யா என்று பகுத்தறிவுச் சிந்தனையை பரப்புபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குலகில் வாழுகின்ற நீங்கள் இதை உணராது இருப்பது ஆச்சரியம்.

மதத்தின் பெயரால் யுத்தங்கள் இங்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்தது. மக்களை அடக்குவதற்கு மதநம்பிக்கை பாவிக்கப்பட்டதும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

இன்றைக்கு அந்த மத நம்பிக்கை தளர்ந்து போய்விட்டது. மதம் பற்றியும் கடவுள் பற்றியும் அக்கறை அற்ற நிலையில்தான் இன்று பெரும்பாலான மக்கள் மேற்குலகில் வாழுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் துளிர்விட்ட மேற்குலகின் சிந்தனை மாற்றங்கள் இன்றைக்கு ஆசியாவிலும் வேர் பரப்புகின்றன.

சில நூறு ஆண்டுகளில் ஆசியாவிலும் மதநம்பிக்கை தளர்ந்து போகும்.

சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நான் என்னுடைய கருத்துக்களை சொல்கிற பொழுது நான் தனியாக இல்லை. நான் கொண்டிருப்பதற்கு ஒத்த கருத்துக்களை யாழ் களத்திலேயே பலர் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களிலும் பெரும்பாலானவர்களிலும் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, காது கொடுத்துக் கேட்கச் செய்கிறார்கள்.

இந்த நிலை ஒரு 15 வருடங்களுக்கு முன்பு இல்லை. அப்பொழுது எல்லாம் நாம் எங்களின் கருத்துக்களை தயங்கி தயங்கி சொன்னோம். இப்பொழுது பெருமையாக சொல்கிறோம்.

இது உண்மையா, பொய்யா என்று பகுத்தறிவுச் சிந்தனையை பரப்புபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

நீங்கள் எப்பவும் உங்களைப் பற்றிய அபரிமிதமான தோற்றத்தைக் காட்ட விளைகின்றீர்கள். மதம் தோன்றிய போதே நாத்தியக் கொள்கைகளும் தோன்றிவிட்டன. ஒருவேளை நீங்கள் வாழ்ந்த சமூகத்தில் அப்படி ஆட்கள் இருந்திருக்கலாம். எம்மைப் பொறுத்தவரை நாங்கள் மதத்தை மதித்தவர்களையும் கண்டுதான் வளர்ந்திருக்கிறோம் மிதித்தவர்களையும் கண்டுதான் வளர்ந்திருக்கின்றோம். உலகின் பிரபல விஞ்ஞானிகளே கடவுள் இல்லை என்ற கொள்கையில் இருந்து இறுதிக் கட்டங்களில் தாமாகவே விலகிக் கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் மத எதிர்ப்பை பிரச்சாரமாகக் கொள்ளலாம். அல்லது விளம்பரத்துக்காகச் செய்யலாம். ஆனால் உலகில் அறிவியலின் படி நிரூபிக்காத வரை கடவுளின் இருப்புபற்றிய சந்தேகத்தை எவரும் அழிக்க முடியாது. அதுவரை உங்கள் போன்றவர்களின் நாத்திய விளம்பரக்காட்டில் விட்டு விட்டு மழையடிக்கலாம். அதற்காக உலகம் உங்களின் பக்கம் என்று காட்ட நினைப்பது மிகவும் சிறுமைத்தனமான சிந்தனை. அதை விட்டுத் தள்ளுங்கள். முடிந்தால் அயன்ஸ்ரீன் போல சிந்தித்து அகிலத்தின் தோற்றம் இயக்கம் பற்றிய உண்மைகளைக் கண்டறியுங்கள்..போற்றலாம்.

சும்மா சிவபெருமான் கடவுள் இல்லை...சரஸ்வதி பார்பர்ணியச்சி..என்று ஆராய்ச்சி செய்வதை உங்கள் போன்றவர்கள் பெருமிதமாகக் கருதலாம். எம்மைப் பொறுத்தவரை அவை கணக்கில் எடுக்கப்படவே வேண்டாத வெறும் குப்பைகள் மட்டுமே. எமது இலக்கு என்பது பிரபஞ்சத்தின் தோற்றம் இயக்கத்தின் பின்னுள்ள முதலான சக்தி எது என்பதற்கான தேடலாக இருக்க வேண்டுமே தவிர..ஜேசு அல்லா சிவபெருமான் பொய் அல்லது உண்மை என்று சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டிருப்பதாக இல்லை. தேவைக்கு ஏற்றபடி மற்றவர்கள் உண்டு..இல்லை என்று சொல்லி அடிபட்டுக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன வந்திச்சு. இரண்டுமே அறிவியலை எட்டிப்பார்க்க விரும்பாத அறிவிலிக் கூட்டம் தான். :P

Posted

உலக அறிவியலின் படி கடவுள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றா?

அது நிருபீக்கப்படாதவரை அதை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா?

ஆகவே கடவுளை முன் நிறுத்தும் சமயங்களையும் ஏற்று கொள்ள முடியாது அல்லவா?

இதனைத் தானே நாமும் கூறி வருகிறோம், இதில் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன?

உங்களுக்கு அறிவியல் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது அடிப்படை அறிவியல் அறிவு இருக்கிறது.உங்களுக்கு அனேகமானவை விளங்கும்.அவ்வாறு அடிப்படை அறிவு இல்லாத மக்களுக்கு அவர்களுக்கு விளங்கும் மொழியில் அவர்களுக்கு தெரிந்த கடவுட் கொள்கைகளில் இருந்து எடுத்துச் சொன்னால் தானே விளங்கும். அவர்களுக்கு அறிவியல் படிப்பிக்க அதற்கான நிறுவனங்கள் வசதிகள் வாய்ப்புக்கள் வேண்டும்.அவை ஏற்படுத்தப் படும் வரை இவ்வறான பிரச்சாரங்கள் அவர்களின் சிந்தனைய்த் தூண்ட அவசியமானவையாக இருக்கிறது.பரந்து பட்ட அறிவியல் அறிவு என்பது ஒரு நாளில் ஏற்பட்டுவிடாது.

Posted

Periyar E.V.Ramaswamy

பெரியார்

1879 - 1973

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

சுயமரியாதை

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.

மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.

சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.

நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.

"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

சமுதாயச் சீர்திருத்தம்

சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.

ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.

சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.

சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?

கல்வி

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது.

கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.

முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.

தமிழ்மொழி

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.

தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.

மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.

எழுத்துச் சீர்திருத்தம்

எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துக்களிலும் ``ஈ'' என்கின்ற எழுத்தானது ``இ'' எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.

இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அநேகம், வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே இப்போ தும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசிய ம் என்றும், அனுகூல மென்றும்பட்டால் அதைச் செய்யவேண்டியது த èன் அறிவுடைமை.

ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது - தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.

எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது புதிய எழுத்துக்களை சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

மொழியின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்தே ஒழிய வேறில்லை.

திருக்குறள்

திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அîதாடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.

குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவ·ர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.

கூட்டுறவு

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகம்.

நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.

மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.

கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-கு­கலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.

நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.

பொருளாதாரம்

கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.

மக்களக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ­க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.

செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.

நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.

http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நாரதரே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இன்னும் மெதுவாகப் போங்கள். பெரியாரின் ஒவ்வோரு கருத்தும் ஆழமாக நோக்கப் பட வேண்டியவை. மிக நல்ல பணியை நீங்கள் செய்கிறீர்கள். எங்களைப் போன்ற பெரியாரியவாதிகளுக்கு நன்றாக புரிகிறது. ஆனால் மற்றவர்கள் கருத்துக்கள் நீண்டிருந்தால் பொறுமையாக படிப்பார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுகிறது. பெரியாரின் கருத்துக்களை அனைவரும் நன்றாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி நாராரே உங்கள் பணி தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்

Posted

நண்பர்களே!

பெரியார் பற்றி தெரியாமலும், பெரியார் ஆற்றிய சுயமரியாதை பணியின் மீதுள்ள வெறுப்பிலும் பார்ப்பனீயவாதிகள் பெரியார் மீது சேறு வீசுவது வழக்கமானதே. பெரியார் உயிருடன் இருக்கையில், வேத சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதன் படி மேடைகளில் செருப்பு, கற்கள், மலம் என வீசி குழப்பங்களை உருவாக்கி அவரை பேச விடாது தடுக்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள் இந்த பார்ப்பனவாதிகள். இவர்களது மூதாதையர் செய்த இந்த வேதக்கொடுமைகளை கண்டு கலங்காது சுயமரியாதையில் நிமிர்ந்து நின்று மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுத்தந்தவர் தந்தை பெரியார். இன்று இணையத்தளங்களில் பெரியாரை பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பார்ப்பனீயம் தனது வழக்கமான நடைமுறைகளை கையாழுகிறது. இதுவும் அவர்கள் பெரியாருக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதலாம். இவர்கள் தவறான தகவல்கள் பரப்புகிற வேளை தானே, நம்மால் உண்மையை அறியவும், பரப்பவும் முடிகிறாது.

பெரியார் கடவுள் எதிர்ப்பாளர் என்ற ஒரு வளையத்தில் அடங்குபவரல்ல. பெரியாரைப் பற்றிய பெரும்பாலான பரப்புரைகள் கடவுளுக்கு எதிரி என்ற ரீதியில் தான் அமைகிறது. இது பெரியாரை முழுமையாக புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடு அல்லது அவரது சுயமரியாதை போராட்டத்தை வளரவிடாது பார்ப்பனீய அடக்குமுறையை வளர்க்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். பெரியார் எந்த கடவுளுக்கு எதிரி? அவரே பேசுகிறார் கேளுங்கள்...இனி பெரியாரின் குரல்

°°°°°°°°°°°

சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா?

°°°°°°°°°°°

(சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை)

நன்றி: கீற்று.காம்

பெரியாரின் பேச்சு (ஒலி ஒளி வடிவில்

http://video.google.com/videoplay?docid=6249903370246926377

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.