24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர். இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ‘சிறைபிடிப்பு' : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பட மூலாதாரம்,Reuters 3 ஜனவரி 2026, 09:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,Reuters இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் கூறியது என்ன? வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார். மேலும், "இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன? வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (கோப்புப் படம்) மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். "அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை. "இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? காணொளிக் குறிப்பு,வெனிசுவேலாவை அமெரிக்கா தாக்கிய தருணம் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார். வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார். கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது. "என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார். நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images இதுவரை தெரிய வந்தது என்ன? வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவைக் கைது செய்யும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ எதிர்பார்ப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ கூறுகிறார். பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் திரட்டல் இதுவாகும், மேலும் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கிராண்ட் எழுதுகிறார். விடை தெரியாத 6 கேள்விகள் அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் எங்கு இருக்கிறார்கள் ? தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா? தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன? எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன? டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் (டிரம்ப் அறிவித்துள்ள செய்தியாளர் சந்திப்பில் இது பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்) முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது. "அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது" என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். "நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,லோபஸ் (வலது) 2014 முதல் மதுரோ (இடது) ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார். வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார். "அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0yd1vwy0ko
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக கூறுகின்றோம். நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம். அரியநேந்திரன் அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது. கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம். சிறீதரன் மீது குற்றச்சாட்டு அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார். அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஒழுக்காற்று விடயங்கள் அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார். அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. https://tamilwin.com/
- Today
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
4 வது நிமிடத்தில் இருந்து இன்றைய சனலில் சவுக்கு சல்லியர்கள் படத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி 👇
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
43-NAM 46-OMA 49-ITA 52-UAE 67-WI 70-IRE மற்றும் முடிந்தால் வினா 76க்கு அபிசேக் சரமா என்றும் வினா 78 க்கு வருன்சக்கரவத்தி என்றும் மாத்தி விடவும்.நன்றி.
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
எப்படியும் கட்டின விகாரையை எந்த சிங்கள அரசும் இடிக்கப் போவதில்லை. நயினாதீவு நாகவிகாரை பிக்கு பக்கத்தில் தான் உண்மையான விகாரை இருந்தது. அது தனக்குத்தான் சொந்தம் என்கிறார். ஆகவே அந்த விகாரையையும் புதுப்பித்து 2 விகாரைகள் வரத்தான் போகிறது. இதற்குள் அர்சுனா பொன்ற அரை லூசுகள் விகாரையை அகற்றப் போராடாமல் நல்லூர் கந்தசுவாமி கோவிலை இடிக்க வேணும் என்று புதுப்புரளியை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழ்மக்கள் அனுராவுக்கும் அர்ச்சுனாவுக்கும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது தமிழர் அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது.
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் பேசுபொருள் ஆக்கப்படக்குடாது என்று திட்டமிட்டு தமிழர்கள் தம் வரலாறு இருக்ககூடாது என்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தால் திரையரங்குகள் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தை உலகெல்லாம் பரந்து வாழும் இந்திய, ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெறச்செய்து நம்சக்தியை காட்டுவோம்.. இதற்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இனிமேல் இன்னுமொருவர் எமது வரலாற்றையும் தமிழர்கள் வாழ்வியலையும் பேசும்படங்களையும் எடுக்க வரும்பொழுது நம்பிக்கையையும் ஊக்கத்தைய்யும் துணிவையும் தரும்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ள ottp தாலத்தில் சென்று பார்த்து எம் ஆதரவை கொடுப்போம்.. தமிழரை, தமிழை பேசுபவர்களை வளர்த்துவிடுவோம்..
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
தையிட்டி - அறுபது ஆண்டுகள் தாண்டிய நினைவுகள்.... தையிட்டி விகாரை குறித்து நிறையச் செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு புறத்தில், அவற்றில் பல தகவல்களின் அடிப்படையில், நிதானமானவையாகவும் உணர்ச்சிபூர்வமானவையாகவும் உள்ளன. இன்னொரு புறத்தில், எந்த விதமான சரியான தகவல்களையும் கொண்டிருக்காதவர்கள் என்ன சொல்கிறோம் என்று கூடப் புரியாமலே வெளிப்படுத்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மண்ணுடன் ஒரு நூற்றாண்டுக்கு மேலான தொடர்ச்சியான இணைப்புகளைக் கொண்டிருக்கும் தையிட்டி மக்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாடளாவிய மத நல்லிணக்கத்தையும் மனதிற் கொண்டு இந்த விடயம் அணுகப்பட வேண்டும். இவ்வாறு, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தையிட்டித் தொடர்ச்சியைக் கொண்ட குடும்பங்களின் மிக நெருங்கிய உறவாகவும் தலைமுறைகள் தாண்டிய நட்பாகவும் என்னால் உரிமையுடன் பேச முடியும். ஊர்ந்து - தவழ்ந்து - விழுந்து - எழுந்து - எண்ணும் எழுத்தும் அறிந்து - ஆரம்பக் கல்வி கற்று - எனது வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளைத் தையிட்டி மண்ணின் புழுதிக் காற்றை நுகர்ந்து வளர்ந்தவன் நான். மேலே போவதற்கு முன்னர் சுருக்கமாக சில புள்ளிக் குறிப்புகளைச் சொல்ல வேண்டும். + தையிட்டி மக்கள் யாரும் தாதுகோபத்தை (Dagoba அல்லது Stupa) (அல்லது விகாரையை) இடிக்குமாறு கேட்கவில்லை. தமது நிலத்தைத் தான் கேட்கிறார்கள். [பிற்குறிப்பு 1] + தையிட்டி விகாரைக்குக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமைக்காரர்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் தொடர்ச்சியான உறுதிகள் இருக்கின்றன. + இந்த நீடித்த தொடர்புகள் மற்றும் காணி உறுதிகளின் நம்பத்தகு தன்மை போன்றன, - நயினாதீவு நாகதீப விகாரையாலும் - யாழ்ப்பாணம் நாகவிகாரையாலும் - வடமாகாண ஆளுநர் அலுவலகத்தாலும் - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தாலும் - நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு போன்றவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. + எல்லாவற்றுக்கும் மேலாக, தையிட்டி திஸ்ஸ மகா விகாரையின் பிக்குவும் தனது கட்டடங்களை நகர்த்த ஒப்புக்கொண்டதோடு தான் வெளியேறவேண்டி வரத்தக்க வாய்ப்பையும் ஒப்பியிருக்கிறார். + கிட்டத்தட்ட எல்லாக் காணிகளும் உரிமைக் காணிகளாக உள்ளன. - தொண்ணூறுகளில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் காரணமாக ஆவணங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோக முடியாததால் இப்போது மூல ஆவணங்கள் கையில் இல்லாத ஓரிரு குடும்பங்கள் இருக்கின்றன என்று அறிகிறேன். 'கச்சேரியிலும்' உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெறமுடியாதிருக்கிறது. - உரிமைக்காரர்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் போனதால் ஓரிரு காணிகளுக்கு நேரடி உள்ளூர் உரிமைக்காரர்கள் அயலில் இருக்கமாட்டார்கள். - தமது காணிகளை மற்றவர்களுக்கு கையளிக்க முன்னரே இறந்தவர்களும் கொ*லப்பட்டவர்களும் சில காணிகளுக்கு 'உரிமையாளர்களாக' இருக்கிறார்கள் [பிற்குறிப்பு 2]. குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்த போது எனது முகவரி பொன்மகால், சாந்தா வீதி, காங்கேசன்துறை [பிற்குறிப்பு 3]. சமையலறையும் நான்கு அறைகளும் கொண்ட ஒரு வீடு அது. அப்போதெல்லாம் கிராமங்களில் பொது வழக்கத்தில் இல்லாத வகையில் வீட்டுக்குள்ளேயே குளிப்பறையும் கழிப்பறையும் வைத்து, கதவு போட்ட garage ஒன்றுடன் அந்த வீடு இருந்தது. மாமா பதிவுசெய்யப்பட்ட மருத்துவராக தூரக் கிராமங்களில் வேலை செய்தபோது, ஆரம்ப அறுபதுகளில் வீடு கட்டிய காலங்களில், அப்பா தான் மேற்பார்வை செய்திருந்தார். அம்மாவும் நானும் இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் அம்மாவின் தங்கையும் இருந்த அந்த வீட்டில், எனது ஒன்றுவிட்ட சகோதர்களும் தங்கியிருந்து காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் மகாவித்தியாலயத்தில் படித்தார்கள். நான்கு வயதில் அதே பாடசாலையில் நானும் சேர்க்கப்பட்டேன். எனது அந்த நான்கு சகோதரர்களும் அந்த வீட்டிலே இருக்கும்போதே பிறந்தார்கள். எனது ஒன்பதாவது வயது வரை அங்கு தான் எனது வாழ்க்கையின் அத்திவாரம் இடப்பட்டது. முன் வீட்டில் சிவகாமி, வடகிழக்கில் இரவி அண்ணை, அவருக்கு அடுத்த வீட்டில் முரளி என்று நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அளவெட்டிக்குப் போன பின்னரும் குடும்பமாகவும் தனித்தும் பல்கலைக்கழகம் போகும் வரை இந்த வீட்டுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன். மாமாவின் வீட்டுக்குப் பின்னால் தெற்காக உள்ள கலட்டி என்று சொல்லப்பட்ட திறந்த பெரிய வளவில் பட்டம் ஏற்றியிருக்கிறோம். கிறிக்கெற் விளையாடியிருக்கிறோம். ஓடும்போது கற்களிலும் முள்ளிலும் கால் வைத்துக் குருதி சிந்தியிருக்கிறோம். அந்த வளவும் தனது பராமரிப்பில் தான் இருப்பதாக மாமா சொல்லியிருக்கிறார், வீட்டிலிருந்து 150 - 200 மீற்றர் தூரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு முனி இருந்ததாக(!) சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நான் கண்டதில்லை! புளிய மரத்துக்கு மேற்கே கூப்பிடுதொலைவில் நாதோலை வைரவர் கோயில் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகளாக கோயில் பொங்கலும் குளிர்த்தியும் நடக்கும். ஊரவர்கள் இதற்காக வெளியிடங்களிலிருந்து வருவார்கள். இப்போது நாங்கள் வாழ்ந்த வீட்டுக் கழிப்பறை இருந்த பின் மூலையில் ஒரு பெரிய வீடு முளைத்திருக்கிறது. அதற்கு 'விகாராதிபதி வதிவிடம்' என்று பெயராம். திறந்த பெரிய வளவில் புளியமரம் இருந்த இடத்தில் வெள்ளையாக புதிய தாதுகோபம் ஒன்று எழுந்திருக்கிறது. இந்த வளவு 1961-இல் திருமணம் செய்த எனது மாமாவுக்கும் அத்தைக்கும் ஆரம்ப-அறுபதுகளில் சீதனமாக வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வளவும் இணைந்த தொடர் வளவுகளும் குடும்பங்களுக்கு நடு-முப்பதுகளில் (1936?) சீதனமாக வழங்கப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தலைமுறை விலைக்குக் கொள்வனவு செய்த காணிகள் இவை. எனது அம்மம்மாவின் தங்கைக்கு அதற்குள் நிலச் சொத்துகள் இருக்கின்றன. எங்கள் வீட்டுக்கு முன்னால், வடக்கிலும் வடகிழக்கு மூலையில் இருந்த திரு ஐயாத்துரை அவர்களது வளவுகளும் கிட்டத்தட்ட இதே வரலாறு கொண்டவை என்று அறிந்திருக்கிறேன். அவர்களது திகதிகள் கொஞ்சம் முன்னால் போய், 1920களுக்கு முன்னால் வரை இருக்கக்கூடும். எங்கள் வீட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் ஒரு 'பாஞ்சாலை' இருந்தது. பார்க்கும்போது அஃது ஒரு மணிக்கோபுரம் மாதிரி இருந்தது. அந்த இடத்துக்கும் தென்கிழக்காக முருத்தனை என்று ஒரு குறிச்சியில் எங்கள் உறவினர்கள் இருந்தார்கள். இந்தப் பாஞ்சாலையைத் தாண்டித் தான் முருத்தனைக்குப் போகவேண்டும். சிறுவனாக நான் போகும்போது இந்த இடத்திலிருந்து கொஞ்சம் விலகித் தான் நடப்போம். அங்கிருந்த மணிக்கோபுரத்தைச் சுற்றி உடைந்த அறைகளும் சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. சிறுவனாக இருந்த காலத்தில் போகக் கூடாது என்று அம்மா சொல்லியிருந்த இடத்துக்கு வளர்ந்த பின்னர் போக முடிந்தது. அந்த இடத்தின் உண்மையான பெயர் பன்சல (துறவிகளின் வாழுமிடம்) அல்லது பன்சலை (பர்ணசாலை என்பது இலைகளால் ஆன இடம் என்று பொருள் கொள்ளும்) என்று எனது பதின்ம வயதில் தான் தெரிய வந்தது. மணிக்கோபுரத்தின் உச்சியில் ஒரு தாதுகோபம் போன்ற வடிவம் இருந்தது. ஆமணக்கு - பூநாறி மரங்களுக்கு ஊடாக நில மட்டத்துக்குக் கீழே தெரிந்த தளத்தில் உடைந்த போத்தல் ஓடுகள் சிந்திக் கிடந்தன. ஒரு வகையில் தங்கள் சிரமமான கழிவுகளை வீசும் இடமாகவே அயலில் வாழ்ந்த மக்களுக்கு அந்தப் பாழடைந்த பன்சலை உதவியது. தரவுகள் மற்றும் செய்திகளின் படி, இந்தப் பன்சலைக்கான 20 பரப்பு அல்லது 1.25 ஏக்கர் காணி 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் , ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் காலத்தில், பிராமணவத்த தம்மகீர்த்தி திஸ்ஸ தேரோ (நயினாதீவு) மற்றும் களுத்துறை பண்டிதசீல தரதிஸ்ஸ தேரோ (காங்கேசன்துறை) ஆகியோர் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் உள்ளன. பதிவுகளின்படி, இந்தக் காணி இருந்த குறிச்சி உளுத்தங்கலட்டி என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்தக் காணியின் உறுதியில் கிழக்கு எல்லை [கலைவாணி] வீதி என்றும் மற்றைய எல்லைகள் தமிழர்களின் காணிகள் என்பதும் குறிக்கப்பட்டிருந்தன. பிக்குகள் குடியமர்ந்த பின்னர் இந்த இடம் புத்த கோயிலடி என்றும் சிங்களக் கலட்டி என்றும் அழைக்கப்பட்டதாம் [பிற்குறிப்பு 4]. இந்தப் பன்சலைக்குப் பொறுப்பாக இருந்த பிக்கு மிகவும் சாந்தமானவர் என்று எனது அம்மாவின் தங்கையின் கணவர் எழுபதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்கள் பதின்ம வயதில் பிக்குகள் நடாத்திய வகுப்புகளில் தானும் சில உறவினர்களும் சிங்களம் கற்றோம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அன்பான உபசரிப்பும் பாற்சோறும் பழங்களும் தங்களுக்கு அமிர்தமாக இருந்தன என்றும் அவர் நினைவுகூர்ந்தார். 1956 கலவரங்களின் பின்னர் தமிழர்கள் பன்சலைக்குப் போகத் தயங்கினார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே பிக்குகள் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாகவும், கள்வர்கள் கதவுகள், ஓடுகள் என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார். பிறகு மழையும் உள்ளே முளைத்த செடிகளுமாக அந்த இடம் 'உடைந்த கண்ணாடி - பீங்கான் வீசும் இடம்' ஆயிற்று! நான் பல்கலைக்கழகம் போகும்வரை பன்சலையில் இருந்த மணிக்கோபுரம் பின்னர் சாய்க்கப்பட்டதாக அறிந்தேன் [பிற்குறிப்பு 4]. அதே வேளை, பிந்திய எழுபதுகளில் காங்கேசன்துறையில் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் ஒரு 'புதிய' பௌத்த வழிபாட்டிடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடவேண்டும். எனது நண்பர்கள் சிலர் அங்கே சிங்களம் கற்றதையும் அறிந்திருக்கிறேன். அந்த விகாரை குறித்தும் யாராவது விபரமாக எழுதினால் நல்லது. காங்கேசன்துறை மக்கள் பிந்திய எண்பதுகளில் இடம்பெயர ஆரம்பித்தார்கள். தொண்ணூறில் பெரும்பாலான கரையோர மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்படியே, தையிட்டிப் பிரதேசம் மக்கள் இல்லாத கிராமமாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமிழ்ந்து புதைந்தது! தற்போதைய ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது பழைய விகாரை இருந்த இடத்தில் விகாரை ஒன்று கட்டுவதற்காக அத்திவாரக்கல் நாட்டப்பட்ட்து. ஆனாலும், அங்கே கட்டடம் ஒன்றும் எழுப்பப்படவில்லை. பின்னர் சில சூக்குமமான விடயங்கள் நடந்தன. முதலியார் செ இராசநாயகம் எழுதிய நூல்களையும் சில வரலாற்று ஆவணங்களையும் காட்டி காங்கேசன்துறையில் அல்லது தையிட்டியில் ஒரு பெரிய பௌத்த வளாகம் இருந்ததாக உரிமைகோரல்கள் நடந்தன. அப்போது (2016 - 2017) பதக்கட வேகடபொல விமலஞான தேரோ என்ற ஒரு புதியவர் வந்து இறங்கி, தாமே திஸ்ஸ விகாரையின் பொறுப்பாளர் என்று அறிவித்தார். யாரோ 1940களில் வாங்கி ஆரம்பித்த பன்சலை இருந்த இடம் தான் பழைய தேவநம்பிய தீசன் காலத்து திஸ்ஸ விகாரை என்று அவரும் அவரது சகாக்களும் சொல்லிக்கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தைக் கையகப்படுத்துவது அவர்களது முதன்மை நோக்கமாக இருந்தது என்று தையிட்டி மக்கள் சொல்கிறார்கள். இவ்வாறான ஒரு 'விஸ்தரிப்பு வாதம்' தமக்கு உடன்பாடானது அல்ல என்பதோ அல்லது தமது கட்டுப்பாட்டுக்கு வெளியே இது போய்விடும் என்ற உணர்வோ, அதே அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், நயினாதீவு நாகதீப விகாராதிபதி இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க மறுத்தார். நாகதீப விகாராதிபதி தனது 20 பரப்பு காணியில் இந்த முயற்சியை அனுமதிக்க மாட்டார் என்று தெரிந்த போது, வெறுமையாக இருக்கும் காணியை அம்பாளிப்பதே வழி என்ற தீர்மானத்தை வந்தவரும் அரச கட்டமைப்புகளும் இணைந்து எடுத்தனர். தொண்ணூறு இடப்பெயர்வுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட நான்கு குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு - எட்டு ஏக்கர் காணியை வேலி போட்டு தமது எல்லை என்று இவர்கள் வைத்துக்கொண்டார்கள் [பிற்குறிப்பு - 5]. அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே 2018-ஆம் ஆண்டில் விகாரை ஒன்று கட்டுவதற்காக இன்னொரு அடிக்கல்லை நாட்டினார். இந்தத் தடவை கிட்டத்தட்ட எங்கள் வீட்டுக்கு நேர் தெற்கே 300 - 350 மீற்றர் தூரத்தில் - முனி இருந்த புளியமரம் இருந்த இடத்தில் - சாக்கிய முனிக்கான புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் இடப்பட்டது. தாதுகோபத்துக்குக் கிழக்காக ஓர் அரசமரமும் நடப்பட்டது [பிற்குறிப்பு 6]. நல்லாட்சிக்கால அரசாங்கம் (மைத்திரி - ரணில்) காலத்தில் கட்டுமங்கள் தேக்கம் பெற்றிருந்தன [பிற்குறிப்பு 7]. இராணுவத்தின் நேரடி உதவியுடன் தாதுகோபம் கட்டப்பட்டது. கட்டப்படும் இடம் கடுமையான பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் [பிற்குறிப்பு 8]. கட்டி முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் விகாரைக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. ஜூலை மாதம் முதலாம் திகதி 2019 அன்று தமிழ்நெற் செய்தி ஒன்றில் வலிகாமம் வடக்கு சண்முகலிங்கம் சஜீவன் தாதுகோபம் கட்டும் இடத்துக்குப் போனதும் அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் பற்றிய செய்திகளும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் அவரது குரல் பதிவும் உள்ளன [பிற்குறிப்பு 9]. அன்றிலிருந்தே மக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த விகாரைக்கும் நிலக் கையகப்படுத்தலுக்கும் எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள். அப்போது இருந்த அரசுக்கு எதிரான பயமும் எல்லோருக்கும் தொல்லையாக வந்த கொரோனா பெருந்தொற்றும் இந்த தாதுகோபம் எழுவதற்கு வசதியாக இருந்திருக்கின்றன. மக்கள் வீட்டுக்கு வெளியே போவதற்கு அனுமதி இல்லாத காலத்தில் கனரக வாகனங்கள் உள்ளே போய் வந்ததை அவர்கள் 'இராணுவ முகாம் பலப்படுத்தப்படுகிறது' என்று எடுத்துக்கொண்டார்கள். அயலில் உள்ள வீடுகளைத் திருத்துவதற்குப் பறிக்கப்பட்டிருந்த கட்டடப் பொருட்களும் காணாமற் போனதாக உள்ளூர் மக்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். காணி தனிப்பட்டவர்களினுடையது என்று தெரிந்து கொண்டாலும், 2022-ஆம் ஆண்டில் முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வாவினால் தாதுகோபத்தின் கலசம் வைக்கப்பட்டது. எனது மாமாவின் காணி அவரது மகனுக்கு எழுதப்பட்டு இப்போது உரிய சட்ட அதிகாரங்களோடு அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஓர் அவுஸ்திரேலியனாக, உணர்வுபூர்வமான இணைப்பைத் தவிர, என்னை உருவாக்கிய நிலம் மற்றும் சூழல் என்பது தவிர, எனக்கு ஏதும் அங்கே உரித்து கிடையாது. ஆனாலும், இதற்காக சட்ட நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படவில்லை என்று மூத்த சட்டவாளர்களிடன் விசாரித்திருந்தேன். பல சவால்கள், + உயர்பாதுகாப்பு வலயம் + அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கான இடம் + கொரோனா காலத்தில் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் - ஒன்றுசேர்க்கும் சவால்கள், + இந்த வழக்குகள் காணிக்குக் காணி தனித்துப் போடப்பட வேண்டிய தேவை + வழக்குகளுக்கு எடுக்கப்போகும் காலம் + எல்லைகளும் வேலிகளும் இல்லாத நிலைமை, இப்படி. ஆனால் காணிகளின் உரிமை யாருக்கு என்பதில் எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளூர் மக்கள் சிலரும் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் விகாரை வளாகத்துக்கு அண்மையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில உரையாடல்களில் காணப்பட்ட 'சட்டவிரோதக் கட்டடம்' என்ற சொற்பதமும் 'அகற்றப்படவேண்டும்' என்ற சொற்பதமும் "இவர்கள் விகாரையை உடைக்கச் சொல்லுகிறார்கள்" என்ற தொனியில் வெளியே பேசப்பட்டன. தையிட்டிக் காணி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து எல்லோருடனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆளுநருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் காணி உறுதிகளின் மூலப் பிரதிகள் காட்டப்பட்டன. நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாராதிபதிகளுக்கு உறுதிகளைக் காட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். நயினாதீவு நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ 2025 ஆரம்பத்திலே தாம் தையிட்டி மக்களுடன் நிற்பதை வெளிப்படையாகவே சொன்னார். 'தாதுகோபம் அப்படியே இருக்கட்டும். அதற்கு மாற்றீடாக நாம் எமது 20 பரப்பு காணியை கொடுக்கிறோம்' என்று நயினாதீவு தேரோ சொன்னார். ஒரு படி மேலே போய் 'அந்த விகாரையை தமிழ் மக்களே பராமரிக்கட்டும்' என்றும் சொன்னார். யாழ்ப்பாண விகாரை தையிட்டி மக்களுக்கு நீதி அமைச்சுடனும் பௌத்தசாசன அமைச்சுடனும் கூட்டங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது. உறுதிகளைக் காட்டுங்கள் என்று கேட்ட நீதி அமைச்சர் உறுதிகளைப் பார்த்தவுடன் மௌனமாகிப் போனார். எனது தொடர்புகளுக்கும், 'நான் வளர்ந்த மண்' என்ற உரிமையோடு சில கருத்துகளைச் சொல்ல முடிந்தது. செயமதிப் படங்களை வைத்துக்கொண்டு கலாநிதி குமாரவேலு கணேசன் தயாரித்த ஒரு முன்மொழிவை அனுப்ப முடிந்தது. இப்போது தாதுகோபம் இருக்கும் இடத்தையும் அரசமரம் இருக்கும் இடத்தையும் பெட்டி அடித்து நேரடியாக கலைவாணி வீதி வரை எடுத்துச் செல்வதானால் 24 பரப்பு - அல்லது 1.5 ஏக்கர் - நிலம் உள்ளடக்கப்படும். நயினாதீவு நாகதீப விகாரையின் 20 பரப்பு காணியையும் மனதில் வைத்து விகாராதிபதியுடன் இணைந்து இந்த 24 பரப்புக் காணியின் உரிமையாளர்களுடனும் பேசி ஒரு சமரசத் தீர்வுக்கு வருவதே நல்ல வழி என்பது இந்த முன்மொழிவின் சாரம். இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் [பிற்குறிப்பு 10]. மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் விகாரை தனியார் காணிகளில் அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்கப்படும் என்று சொன்னார். வலிகாமம் வடக்கு பிரதேச சபை "இது ஒரு சட்டவிரோதக் கட்டடம்" என்று அறிவித்தல் பலகை ஒன்றை நாட்ட எடுத்த முயற்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இணைந்து கலந்துகொண்ட முயற்சி வன்மையான கைதுகளுடனும் மருத்துவநிலைய அனுமதிகளுடனும் முடிந்திருக்கிறது. ஒரு புறத்தில் தையிட்டி விகாராதிபதியுடன் பேசி தீர்வு ஒன்றைத் தேட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மறுபுறத்தில் 'தையிட்டியில் ஒருத்தனுக்கும் காணி உறுதி இல்லை' என்று சொன்னது தையிட்டி மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நயினாதீவு தேரோவும் யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த தேரர்களும் இது மக்களின் காணி என்றும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஒரு வகையில் உணர்வூட்டப்பட்டிருக்கும் சிங்கள மக்களிடம் இந்தச் செய்தியைப் பக்குவமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்போது, ஆண்டின் இறுதி நாளன்று, தையிட்டி காணி உரிமையாளர்கள் மாவட்டச் செயலாளருடன் பேசியிருக்கிறார்கள். கட்டம் கட்டமாக காணிகள் விடப்படலாம். விகாராதிபதியின் வீடு மற்றும் கட்டுமானங்கள் நகர்த்தப்பட வேண்டிய தேவையும் இருப்பதால் எல்லாம் முடிவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என்ற வகையில் மாவட்டச் செயலாளரின் முன்மொழிவு இருக்கிறது. தையிட்டி விகாராதிபதியின் கருத்துகளும் வரவேற்கத்தக்க வகையிற் தெரிகின்றன. எமது ஆவணங்களை உயர்மட்டக் குழுவிடமும் அமைச்சுகளிடம் கொடுத்திருக்கிறோம். இது எமது காணி இல்லை என்றால் நான் வெளியேறத் தயார் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தை முதல் வாரத்தில் தையிட்டி விகாராதிபதியைச் சந்திப்பார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் ஜனவரி மூன்றாம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடாத்த தையிட்டி மக்கள் விரும்புகிறார்கள். பொதுப் போராட்டமாக கட்சி வேறுபாடுகள் இல்லாது எல்லோரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பெருமளவு மக்களும் கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற - உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் ஒன்றாக நல்லதொரு தீர்வு நோக்கிய முயற்சியாக நிறைவு பெறுவதாக! நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் எனது அம்மாவின் தங்கையின் மறைவுக்காக அவரசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேர்ந்தது. தையிட்டி வீட்டில் எனக்கு இரண்டாவது அம்மாவாக என்னை உருவாக்கிய அவரது இறுதிச் சடங்கின் மாலையில் தையிட்டி போனோம். கலட்டிக் காணியாக நாங்கள் ஓடி விளையாடிய மண்ணில் மண் நிரப்பி நன்றாக நிலத்தடி நீர் இறைக்கப்பட்ட மரங்களுக்கு மத்தியில் தாதுகோபமும் அரச மரமும் மற்றைய கட்டுமானங்களும் உள்ளன. இருநூறு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மணல் நிரப்பிய பெரிய வளாகம் ஒன்றும் முன்னால் உள்ளது. நாங்கள் ஊஞ்சல் ஆடிய மாமரங்களுக்கும் இளநீர் குடித்த தென்னைகளுக்கும் கீழே வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளுக்கு நடுவில் எங்கள் வீடு கூரை இழந்து சுவர்கள் சிதைந்து பழைய நல்ல நினைவுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பலமான கோது போல இன்னமும் நிற்கிறது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளில் முன்வேலியின் கிளுவை மரத்தின் தடி ஒன்றில் சுற்றிய தேங்காய்நெய்ப் பந்தத்தை வைத்திருந்த தம்பி தவறுதலாகத் தொடையில் சுட்ட காயம் இருக்கும் இடத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். [பிற்குறிப்பு 11] குறிப்பு: இது ஒரு நினைவு மீட்டல் மட்டுமே. பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இதற்கெல்லாம் ஒரு சட்டப் பெறுமதியோ உரிமை கோரலோ கிடையாயது. முழுமையாக வாசித்தோருக்கு முழு நன்றி பாலா விக்னேஸ்வரன் 31 / 12 / 2025 பிற்குறிப்பு 1: அகற்றுதல் / இடித்தல் - சட்டவிரோத விகாரையை அகற்றுதல் என்பது அதை இடித்தல் என்று திரிபுபட்டமை வருந்தத்தக்கது. தாதுகோபம் (Dagoba அல்லது Stupa) என்பது வெண்மையான அந்தக் கட்டடத்தைக் குறிக்கும். விகாரை என்பது தாதுகோபத்துடன் சார்ந்த அரசமரம், தியான மண்டபம், ஓய்வுஅறைகள், நந்தவனம், வதிவிடம் எல்லாவற்றையும் அடக்கும். வளாகத்தின் அளவைச் சுருக்குதல் முதற்படி. அகற்றுதல் என்பது உரிய மென்னுணர்வுகளைப் புரிந்துகொண்ட மக்களின் சம்மதத்தோடு பக்குவமாகச் செய்யவேண்டிய பணி. விகாரை சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்காத நிலையில் யாரும் 'சிநேகபூர்மாக அகற்றுங்கள்' என்று கேட்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது. பிற்குறிப்பு 2: உரிமையாளர்கள் மறைவு - தமது அப்பாவின் சார்பிலும் நேரடி உறவினர் சார்பிலும் அவர்கள் அதே இடத்தில் இருக்கும்போதும் முதிர்ச்சி அல்லது வேறு சவால்கள் காரணமாக உரிமையுடன் கேட்க்கும் மற்றவர்களையே 'இது உன்னுடைய காணியா' என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி வீதியில் நிற்பவர்களும் கேட்கும் நிலைமை இருக்கிறது. தமது காணியை அடுத்தவருக்கு எழுதி வைக்காமல் இறந்து போனவர்களின் ஈடுபாடுகளும் முறையாகக் கையாளப்படவேண்டும். பிற்குறிப்பு 3: வீடுகள் - படம் 1 காட்டும் மஞ்சள் கட்டம் மாமாவின் வீடு. அளவீடுகள் பருமட்டானவை. பிற்குறிப்பு 4: படம் 1 காட்டும் நீலக் கட்டத்தில் வாழ்ந்த நடராஜா முரளிதரன் எழுதிய பத்தி பின்னூட்டத்தில் உள்ளது. சிங்களக் கலட்டி என்று இந்த இடம் குறிப்பிடப்பதாம். ஆனால் எண்கள் வீடுகளில் புத்த கோயிலடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிற்குறிப்பு 5: மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர் - தமிழ்நெற், தமிழ் காடியன் இணைப்புகள் பின்னூட்டத்தில் உள்ளன. பிற்குறிப்பு 6: புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் - தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. தாதுகோபத்துக்குக் கிழக்காக நாட்டப்பட்ட அரசமரமம் - படம் 1 பிற்குறிப்பு 7: தாதுகோபம், அரசமரம், வதிவிடம், மற்றைய கட்டுமானங்கள் - கலாநிதி குமாரவேலு கணேசனின் 'காலத்தைப் பதிவு செய்யும் காணொளி பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 8: தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் இராணுவத்தின் நேரடி உதவியுடன் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் - படம் 2 + படம் 3. தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 9: சண்முகலிங்கம் சஜீவன் 2018 முயற்சிகள் - 1 ஜூலை 2019 Tamilnet செய்தியில், அவரது குரல் பதிவும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் உள்ளன. பிற்குறிப்பு 10: கலாநிதி கணேசனின் முன்மொழிவு - ஒன்றும் நகராமல் இருந்த வேளையில், ஓர் ஆரம்பப் புள்ளியாக அதிகபட்ச விகாரை எல்லையாகச் சொல்லப்பட்ட விடயம் இது. இந்த அளவு நிலம் கொடுத்தால் அங்கே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்ற கருத்து ஒருபுறம். எட்டு ஏக்கரை வைத்திருக்கும் அவர்கள் 15 ஏக்கர் கேட்கிறார்கள். எங்கோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கவேண்டும். நிலைமைகளை contextualise பண்ணுவதற்கான ஒரு படம் இது. இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் என்றார் Dr கணேசன். படம் 4 அவர்களது வெளியையும் (ஊதா) அதிகபடச விகாரையின் அளவையும் (நீலம்) பழைய விகாரைக் காணியையும் (சிவப்பு - பருமட்டு) காட்டுகிறது. பிற்குறிப்பு 11: எங்கள் சிதிலமடைந்திருக்கும் வீடு - உள்ளேயும் படங்கள் எடுத்தோம். அவர்கள் தடுக்கவில்லை. எனக்கு எங்கள் வீடு (படம் 5) தானே முக்கியம்! https://www.facebook.com/vicky.vigneswaran
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது! 03 Jan, 2026 | 03:36 PM வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மார் ஏ லாகோவில் செய்தி மாநாடு நடைபெறும் என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235120
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
திஸ்ஸ விகாரை பிக்கு சொன்னாரே, அப்படி ஏதும் நடக்காது, அப்படி செய்யவேண்டாமென்று தான் கட்டளை பிறப்பித்துள்ளதாக, அது பொதுமக்களின் காணி என்று நிரூபிக்கப்பட்டால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக. அவர் சொன்னது பொய்யா அல்லது வேறொரு பிக்குவை இறக்கியிருக்கிறார்களா? இது விகாரை பிரச்சனையல்ல நாட்டில் ஒரு வன்முறை கிளப்ப வேண்டுமென்றே ஒரு கூட்டம் அலையுது, அவர்களை கைது செய்யும்வரை இது தொடரும்.
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
அப்போ இவர் செய்த கொலைகள் எந்த வழக்கில்?
-
கருத்து படங்கள்
- தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!
தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை! தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது. மேலும் இன்று யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458192- மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இங்குள்ள இந்துார், கடந்த ஏழு ஆண்டுகளாக துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பகிரத்புரா பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. குழாயில் கசிவு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. . பகிரத்புராவில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதும், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அதனுடன் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, அப்பகுதிகளில் அரசு சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. பிற குழாய்களில் வரும் குடிநீரை காய்ச்சி பருகவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணமான குடிநீர், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குடிநீருடன் கழிவுநீர் கலந்திருந்தது உறுதியானது. அதில், குடலில் நோய்த்தொற்று உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும், ‘விப்ரியோ காலரே, ஷிகெல்லா, இ.கோலி’ பாக்டீரியாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித் துறை மண்டல பொறுப்பாளரும், இரண்டு உதவி பொறியாளர்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக இந்த பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை மேற்கோள்காட்டி, இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458213- சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான்இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. மேலும், தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் சீனா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். தாய்வானை சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும் அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதிய ஆண்டில் அறிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். https://athavannews.com/2026/1458169- வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலாவில் பாரிய வெடிப்பு சம்பவம்- பொதுமக்கள் அச்சம்! வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (0 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. https://athavannews.com/2026/1458227- கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 கிறிஸ்துமஸுக்கு புத்தாண்டுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அடைக்கலமும் ஆராதனாவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாண பொது நூலகத்தில் மீண்டும் சந்தித்தனர். ஆராதனா நூலகக் குறிப்புப் பகுதியில் நாட்டுப்புற தாளங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்; அடைக்கலம் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மீனவருக்காக ஒரு ஆட்கொணர்வு வழக்கைத் தயாரித்துக் கொண்டிருந்தார். வரலாற்றால் வடுக்கள் நிறைந்த, ஆனால் அதை மறைப்பதற்காகவே முழுமையாக புனர்நிர்மாணம் அரசால் செய்யப்பட்ட அந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகங்களைக் கற்றுக்கொண்டனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' இதைத்தான்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. அது பற்றியே முதலில் அங்கு பேசத் தொடங்கினர். அவர்களின் கலந்துரையாடலுக்கு இடையில், ஆராதனா, கிறிஸ்மஸ் ஈவை [christmas eve] நான் குழந்தைப் பருவத்தில் விளக்குகளாகவே பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களாக. பாடல்களாக. ஆனால் அன்று அது கேள்வியாக இருந்தது. இப்ப கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் முதல் முறை இந்த கிறிஸ்மஸ் ஈவுக்கு சென்றபின், அந்த கேள்வி மறைந்து விட்டது என்றாள். அடைக்கலம் ஒன்றும் பேசவில்லை. அவளை, அவளின் பேச்சை ரசித்தபடி மௌனமாக இருந்தான். பின் இப்ப கிறிஸ்மஸ் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான். அவள் சற்றும் தாமதிக்காமல், உடனடியாகவே, அவனின் கண்ணை பார்த்தபடியே, "இப்போது எனக்குத் தெரியும் — நான் கற்றுக் கொண்ட கிறிஸ்மஸ் பிறந்த நாளைப் பற்றி அல்ல. மனிதன் மனிதனாக நிற்பதைப் பற்றி" என்றாள். "நான் கேள்வி கேட்டே பழகவில்லை. வழிபாடு எனக்கு இசை. பாடல். நடனம். கண்கள் மூடி ஏற்றுக் கொள்ளும் அமைதி." என்று தன்னையும் கொஞ்சம் அறிமுகப் படுத்தினாள். இதுவரை அமைதியாக இருந்த அடைக்கலம், "நான் வழக்கறிஞராக மாறியது சட்டத்தை நேசித்ததனால் அல்ல. அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாததனால்" என்றான். "வடக்கில் ஒரு மனிதன் அவனுடைய நிலத்தில், அவனே விருந்தினன் ஆக்கப்பட்ட போது நான் சட்டப் புத்தகத்தைத் திறந்தேன்" என்று விளக்கமும் கொடுத்தான்." அன்று முதல் என் கிறிஸ்மஸ் ஒரு வழக்குக் கோப்பாகவே இருந்தது, அது மட்டும் அல்ல, நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆனால் நான் அங்கு நம்பிக்கையைத் தேடுவதில்லை. அமைதியை மட்டும் தேடுகிறேன்." என்று தன் கதையைச் சுருக்கமாக சொல்லி முடித்தான். ஆண் பெண்ணின் உடல் அழகைக் கண்டு கவரப்படுவது போல, பெண் ஆணின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, பாதுகாப்பு உணர்வு, அக்கறை போன்ற குணாதிசயங்களில் மயங்கி காதலிப்பதே பொதுவான கண்ணோட்டமாகும். அதில் ஆராதனாவும் ஒருவளே. என்றாலும், ஆராதனா தன் உணர்வுகளை வெளிக் காட்ட நினைத்தாலும் ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவளைத் தடுத்தது. பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும் .... இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல .... தொன்று தொட்டு வருகிறது. பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைக் கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது. யானையிடம் தலைவி சொல்கிறாள் ... "ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன் ... என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும். யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று. பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ? அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல், ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே, மெல்லமா போ " என்கிறாள். என்னவோ, அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல. எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து அப்படித்தான் ஆராதனா தன் மனதை மெல்லமா போக செய்து விட்டாள். அதனால், அடைக்கலத்துக்கு அவளின் நிலையை அறியமுடியவில்லை. அதன் பின் ஒரு முறை அடைக்கலத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றாள் - உள்ளே அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுடன் வெளியே காத்திருந்தாள், சட்ட பயத்தை [சட்டத்தின் மீதான அச்சம்] இலகுவான தமிழில் மொழிபெயர்த்தாள். மகன் காணாமல் போன அந்த வயதான பெண்மணியிடம், சமநிலையில் இருந்து, ஆறுதல் அளிக்கப் பேசுவதை அவன் பார்த்தான். அந்த தருணத்தில் அவனின் மனம் அவனுக்குச் சொன்னது, "அவளின் தனிப் பெருமை கொண்ட அழகை விட, அவள் பிறர் துயரத்தை தன் துயராக ஏற்கும் மனிதராக இருக்கிறாள்" என்று. அது அவனை மேலும் சிந்திக்க வைத்தது. அவள் செய்யும் இந்தச் செயல், அவன் வழக்காடும் வாழ்க்கையையும் பிரதிபலித்து, இருவரும் ஒரே உண்மையின் பக்கம் நிற்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நிமிடம் அவனுக்குச் சொன்னது: “இந்த பெண்ணுடன் நான் வாழ்க்கையைப் பகிர முடியும்.” அன்று மாலை, சோதனைச் சாவடியைத் தாண்டி அவர்கள் செல்லும் போது, ஆராதனாவின் மனம் காணாமல் போன தன் மகனைப் பற்றி பேசும்போது குரலே இல்லாமல் போன அந்த முதிய பெண்ணின் முகத்தில் இன்னும் இருந்தது. இரும்புக் கம்பிகளும் சீருடை ஒளிகளும் சூழ்ந்த அந்தச் சாலையில், அவள் திடீரென நின்று, “நாம் செய்கிற எல்லாம் சில நேரங்களில் பயனற்றது போல் தோன்றுகிறதா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவள் நம்பிக்கையால் அல்ல; அவள் சுமந்த பொறுப்பின் சத்தம். அடைக்கலம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் வருவதை நிறுத்தும் நாளில்தான் அது பயனற்றதாகும்.” அவன் நீதியை வெற்றியாக மாற்ற முடியாதவன் என்பதை அறிந்திருந்தான்; ஆனால் நீதி தேவைப்படும் இடத்தில் இருப்பதை விட்டுவிட மறுத்தவன். அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்—சோதனைச் சாவடியைத் தாண்டி, இரவுக்குள்—உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும், மனிதனை முற்றிலும் உடைய விடாமல் தடுக்க நிற்கும் மனிதர்களைப் போல. அப்பொழுது ஒரு பாடல் அவர்களின் காதில் ஒலித்தது; "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய் அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான் அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்! உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர் அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர் அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையுடன் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம் !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1970 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33112176718430882/?- வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் செய்திகள் வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql- டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்? கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளுக்கு அரச நிலங்கள் வாடகை செலுத்தப்படாமல் ஓதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை சுமார் நாலாயிரம் ஏக்கர் நிலங்களாகவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், முறையற்ற அரச காணிகள் மற்றும் மாதாந்தம் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகள் காணித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக எழுந்துள்ளன. இதனால் முன்னாள் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய வடமாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பின் தகவலின்படி, கடலட்டை பண்ணைகளின் நிலங்களை பிரதேச செயலகங்கள் வழியாக ஒதுக்குதல் செய்யாமல், முன்னாள் அமைச்சர் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகவும், இந்நிலையில் அதற்கு தொடர்புடைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது அரசு டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது விசுவாச அதிகாரிகளையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளது. https://www.samakalam.com/டக்ளஸ்-மீது-பாயும்-புதிய/- தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்!
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்! adminJanuary 3, 2026 தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம் , மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினரர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2026/225550/- யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்! adminJanuary 3, 2026 தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். சிகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை காவல்துறையினர் இடைமறித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், தையிட்டி விகாரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பேருந்து மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தமது நில உரிமையை மீட்டெடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதியுடன் உள்ளனர். https://globaltamilnews.net/2026/225560/- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
அண்ணர் அஞ்ஞாதவாசம் போய் விட்டு வந்திருக்கின்றார் போலும் தமிழீழம் மட்டுமே என்று கேட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒற்றை ஆட்சி ஸ்ரீலங்காவை ஏற்று கொண்டதோடு அவர் தான் நிரந்தரமாக இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு தேர்தலை இலங்கை முழுவதிலும் நடத்தபட வேண்டும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்- பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
2026 பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் Published By: Vishnu 03 Jan, 2026 | 03:52 AM புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் கோவையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நடைபெறும் நேரம் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடரும் என அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கல்விச் சீர்திருத்தச் செயன்முறை, 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235081- இறைவனிடம் கையேந்துங்கள்
"யாழ்ப்பாணத்து மண், வீரத்தின் அடையாளம்! எங்கள் குரும்பசிட்டி ஸ்ரீ முத்துமாரி - தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.