24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா. வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும். @புலவர்
- Today
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
விக்கி பதிவில் உள்ளதை சொன்னேன். மற்றும்படி எனக்கு உண்மை/பொய் தெரியாது. பனை வள அபிவிருத்தி சபையில் பொறுப்பான பதவியை நித்தியானந்தா வகித்துள்ளார். டக்லசின் பெயரின் ஒரு பகுதியும் நித்தியானந்தா என உள்ளது. நித்தியானந்தா என்பது குடும்ப பெயரோ தெரியாது. கொழும்பு இந்துவில் கற்கும் காலத்தில் நித்தியானந்தா இல்லத்திலேயே டக்லஸ் வாழ்ந்ததாக விக்கி பதிவில் உள்ளது. இறுதி போருக்கு சில வருடங்கள் முன் யாழ் மாவட்டத்தில் பெருமளவு விடுதலை புலிகள் அமைப்பு ஆதரவாளர்கள், அனுதாபிகள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதன் பின்னால் இராணுவ புலனாய்வு அமைப்பும் ஈ பி டி பி யும் உள்ளதாக அப்போது கூறப்பட்டது. தமக்கு போட்டியாக தேர்தலில் நிற்கக்கூடியவர்களை ஈ பி டி பி போட்டு தள்ளியதோ என எண்ணத்தோன்றுகின்றது. இது பின்னாளில் ஈ பி டி பி அமைப்பு தேர்தலில் அதிக வெற்றியை அடைய வழி வகுத்ததோ தெரியவில்லை.- சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!
சிங்களம் எழுதி கொடுத்து செய்தி போடுவது போல் உள்ளது நேரம் இருப்பவர்களுக்கு மட்டும் .https://www.usnews.com/news/best-countries/sri-lanka- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
இது அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகம் நிகழக் கூடிய ஒரு ஆபத்துத் தான். ஜோர்ஜியாவின் தலை நகரான சவன்னாவில் சில ஆண்டுகள் முன்னர் ஒரு இந்திய வயோதிபர் காலை நடைப் பயிற்சி சென்ற போது "சந்தேகத்திற்கிடமானவர் திரிகிறார்" என்று யாரோ பொலிசைக் கூப்பிட பொலிஸ்காரர் வந்து அவரிடம் உரையாட முயல்கிறார். வயோதிபருக்கு ஆங்கிலம் தெரியாது, அவர் சிரித்து விட்டு தொடர்ந்து நடக்க, அந்தப் பொலிஸ்காரர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்திக் கைது செய்ததில் அவரது கழுத்தெலும்பு பாதிக்கப் படுகிறது. பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த அவரது குடும்பம் நகர நிர்வாகம் மேல் வழக்குப் போட்டு சில மில்லியன்கள் நட்ட ஈடு பெற்றார்கள் என நினைக்கிறேன். ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது. இது எங்கள் தென்னாசியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபாடானது தான், ஆனால் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது பாதுகாப்பிற்கு அவசியம். "வெள்ளையின மீட்பர்கள்" வந்து இது போன்ற நிறவாதம் பார்க்கும் இளம் தாய்மாருக்கு உதவுவார்கள். இந்த ஆசியரை 2 மாதங்கள் சிறையில் வைக்கச் செய்த அதே பெண்ணுக்கு, சில நிமிடங்களில், இன்னொரு வெள்ளையின ஆண் அவரது வண்டிலைத் தொட்டு உதவும் வீடியோவையும் வால்மார்ட் சேர்த்தே வெளியிட்டு உதவியிருக்கிறது. எனவே தான், தென் மாநிலங்களில் வசிக்கும் பிறவுண் மனிதர்கள், வெள்ளையின மீட்பர்களை உதவ அனுமதித்து விட்டு வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்க வேண்டுமென்கிறேன்😇.- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டிலேயே செய்யலாம் சோம்பா பொடி..- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
படம்: வானத்தை போல இசை:S.Aராஜ் குமார் பாடியோர்: ஜெயசந்திரன்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்று நமதுள்ளமே.. படம்: தங்க பதுமை இசை: விசுவநாதன் -ராமமூர்த்தி பாடியோர்: TMS & சுசீலா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் ஏற்கனவே சில எறும்புகளைப் கண்காணிக்கிறார். அதற்குள் திறமையானதை தெரிவு செய்வார். ஆள் புலனாய்வு பிரிவு தெரியும் தானே.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@புலவர் , 41 வது கேள்வியில் இருந்து 69 வது கேள்விவரையான பதில்களைத் திரும்பத் தரவேண்டும். உங்கள் பதில்கள் என்ன என்றே புரியவில்லை! அல்லது முதலில் இருந்தே தரலாம். எனவே மீள ஒருதடவை முயற்சியுங்கள்.. @வீரப் பையன்26 , @செம்பாட்டான் , ஐயாவுக்கு உதவி செய்யுங்கோ 😬- ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
ஆழ்ந்த இரங்கல்கள்.- மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஹம்பி..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
ஆத்மா சாந்தியடையட்டும் 🙏- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
முதல் தடவையாக டூப் இல்லாமல் பாய்ந்து இருக்கிறார்.😅 பரவாயில்லை. தொடர்ந்து முயலட்டும்.- ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு ! 29 டிசம்பர் 2025 யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை. அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின. ரமணியின் ஓவியங்களை மேலும் ரசிக்கச் செய்தவர், எம்முடைய ஓவிய ஆசிரியர் கிருஷ்ணதாசன். ஒவியர் ரமணிக்கு நெருக்கமான அவர் வரையும் ஓவியங்களிலும், எழுத்துக்களிலும், ரமணியின் ஓவியப்பாணி வெளிப்படும். அவரது அதீதமான அவரது சிலாகிப்புக்களும், ரமணியின் ஓவியங்கள் மீதான எமது ரசணை அதிகமாவதற்கு ஒரு காரணமெனலாம். ரமணி வெறும் ஓவியர் மட்டுமல்ல தேர்ந்த ஒரு சிற்பியும் கூட என்பது பின்னால் நாம் தெரிந்து கொண்ட விடயம். யாழ் இந்துக்கல்லூரி ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை , தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, எனப் பல பெரியார்களின் உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர். அன்னாருக்கு எமது அஞ்சலிகள் ! https://4tamilmedia.com/menu-essay/culture/ramani https://www.facebook.com/share/p/1FqsnUuJCN/?mibextid=wwXIfr முகநூலில் இருந்து.. ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளேன். ஓர் ஆசானாக... ஆறாம் வகுப்பிலிருந்தே எனக்கு ஓவியத்தின் அரிச்சுவடியைக் கற்றுத் தந்தவர். வண்ணங்களோடும் கோடுகளோடும் நான் உறவாடக் காரணமானவர். ஒரு மாணவனாக அவரிடம் நான் கற்ற கலைப்பயிற்சிகள் என் வாழ்நாள் சொத்தாகும். அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக எமது பாடசாலையில் உருவாக்கப்பட்ட மில்லர் சிலைவடிப்பின் போது அவருக்கு ஒத்தாசையாக இருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பது என் வாழ்வின் பெரும் பாக்கியம். யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின. முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும், இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும். எனது பெருவிருப்பிற்குரிய குருநாதர் “ரமணி சேர்” அவர்களின் இழப்பால் துயருறும் கலையுலகத்தினருக்கும், எனது அருமை பள்ளித்தோழர்களான அவரது புதல்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கலை மேதையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி!- போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு கடும் தண்டனை! 29 Dec, 2025 | 12:14 PM மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் அது பாரிய குற்றச் செயலாகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (29) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் போக்குவரத்து விதிமீறல் என்பதற்கு மாறாக பாரிய குற்றச் செயல் என்ற ரீதியில் தண்டனை வழங்கப்படும் வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவது தான். எனவே, மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234657- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு Dec 29, 2025 - 03:03 PM மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னமும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் அறிவித்தல் படி 4 இலட்சத்து 56 ஆயிரம் பேர் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 82 சதவீத எனவும், 4 இலட்சத்து 672 பேர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாகவும் அதில் 3,262 பேருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலான தோட்ட மக்கள் விண்ணப்பித்த போதிலும் ஒரு சில செயலகங்களில் விண்ணப்பப்படிவம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாமையும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தோட்ட முகாமையாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த நிவாரணங்கள் பெறுவது தொடர்பான சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே, இது குறித்து பேரிடர் நிவாரண செயலணி கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த செயலணியின் ஏற்பாட்டாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். பாதிப்பு என்று வரும் போது அனைவருக்கும் பாகுபாடின்றி செயப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் இதன் போது பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். -மலையக நிருபர் சுந்தரலிங்கம்- https://adaderanatamil.lk/news/cmjqynuc10397o29nehtzeuow- 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 29 Dec, 2025 | 11:05 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 205 கிராம் ஹெரோயின், 379 கிராம் ஐஸ், 302 கிராம் கஞ்சா, 20,114 கஞ்சா செடிகள், 09 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 03 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 189 போதை மாத்திரைகள், 04 கிலோகிராம் 459 கிராம் 355 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 635 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், 740 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234648- போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Dec 29, 2025 - 01:02 PM இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்" என்றார். https://adaderanatamil.lk/news/cmjqublue038to29nasfq1twg- டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் 29 Dec, 2025 | 03:26 PM முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்க பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகவே முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234674- கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம். - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.