Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அல்லாவை செல்லாக் காகாசாக்குவதில் பாகிஸ்தானும் முன்னணியில்.
  3. காணாமல் போன இரண்டாவது விமானப்படை விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. காணாமல் போன அமெரிக்க விமானப்படை வீரரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை ( C-130 ) சுட்டு வீழ்த்தி உள்ளதாக ஈரான் அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
  4. இதில் வரும் திருநாவுக்கரசு என்பவர் புங்குடுதீவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இலங்கை வடபகுதி சர்வோதய சங்கத்தின் தோற்றுவிப்பாளரான இவர் தனது கடைசி காலத்தில் அவரது சுவாமிகள் அருளிய வழியில் சுவாமிகளின் அதே மரநிழலில் இளைப்பாறியதாக அறிய முடிந்தது.
  5. தவத்திரு யோகர் சுவாமிகளின் பாதங்களே சரணம் ..........! 🙏 நன்றி சிறியர் .......!
  6. சுமே அவர்களுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌 ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... இதனை எவர் எப்போது சொல்லி உங்களை வாழ்த்தியிருப்பார்கள்? ஞாபகம் உள்ளதா??🤔
  7. இதுவரை காலமும் திறந்திருந்த ஹர்மூஸ் நீரிணையை மூட வைத்ததே இந்த முட்டாள்தான், இப்போ திறக்க வேண்டுமென எச்சரிக்கிறார். யாரோடும் ஆலோசியாமல், தெரிவிக்காமல், தான்தோன்றித்தனமாக போரை தொடக்கி, அழிவை ஏற்படுத்தி நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டிட்டு, கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார். தாக்கித்தான் பாருங்களேன்! விடுக்கப்படும் எச்சரிப்பு ட்ரம்பின் பயத்தை காட்டுகிறது. இவரால் அமெரிக்காவுக்கு கீழிறங்கும் காலம், ஈரானை உயர்த்தி விட்டிருக்கிறார்கள். நெஞ்சிலே செருக்குற்றவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். அமெரிக்காவிலுள்ள ஒரு சில முட்டாள்கள் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துள்ளார்கள் இந்த முட்டாளை தெரிவு செய்து. ஒருபக்கம் வென்றுவிட்டோம் என்கிறார், மற்றொரு பக்கம், போர் என்றால் அழிவுகள் இருக்கத்தான் செய்யும் என்று சாதாரணமாக சொல்கிறார்.
  8. Today
  9. சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்: இன்று நண்பகல் 12:13 மணிக்கு 8 பகுதிகளில் தாக்கம்! Published By: Digital Desk 1 05 Apr, 2026 | 10:26 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல் 12:13 மணியளவில் தொட்டந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமெட்டிய, உஸ்ஸன்கொட ஆகிய பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த காலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/242769
  10. இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இரான் கூறுகிறது. அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான சிஎன்என் இந்தச் சம்பவம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், "இரானுடனான போர், அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதிய மற்றும் மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இரான் வான் பரப்பில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக முதலில் தகவல் வந்தது எனக் கூறப்பட்டுள்ள அந்தச் செய்தியில் வெள்ளியன்று மேலும் ஒரு அமெரிக்க போர் விமானத்தை இரான் இலக்கு வைத்ததாக தகவல் கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அமெரிக்கா ராணுவ மேலாதிக்கம் கொண்டுள்ள ஒரு மோதலில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்த சமச்சீரற்ற போரின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அதன் செலவினங்கள் அமெரிக்க பொதுமக்களால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிட்டது," என்று சிஎன்என் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், "இந்தச் சம்பவங்கள், இரான் மீது முழு வான் மேலாதிக்கம் கொண்டிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருவதை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த மாதம் முழுவதும் அமெரிக்கா கட்டமைத்து வந்த ஊடுருவ முடியாத பாதுகாப்பு என்கிற பிம்பத்தையும் உடைத்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அமெரிக்க ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது" பட மூலாதாரம்,STATE MEDIA படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவும் இந்த சிதறல் புகைப்படம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க போர்விமானத்தைச் சேர்ந்தது தான் எனக் கூறும் வல்லுநர்களிடம் பிபிசி வெரிஃபை பேசியுள்ளது. இரானின் கூற்றைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ள என்பிசி நியூஸ், "சமீபத்திய மோதலில் இரானுக்குள் ஒரு அமெரிக்க விமானம் விழுந்திருப்பது இதுவே முதல்முறை. இரானின் வான்பரப்பு மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது" மேலும் அந்த செய்தியில், "இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்வதற்கு இரானுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இந்தப் போரில் டிரம்ப் வெற்றியை அறிவித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறக்கவில்லை என்றால் இந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அச்சுறுத்துவதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு புதிய படைகளை அனுப்பியுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இரான் கூறுகிறது என்றும் இது இரான் வான்பரப்பு மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆதிக்கம் பற்றிய தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது. "இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு நடவடிக்கையின் முதன்மையான நோக்கம் என்பது இரானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழிப்பது மற்றும் பலவீனப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதும் பதில் தாக்குதல் நடத்தும் திறனை இரான் தக்கவைத்துள்ளது" என்றும் என்பிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... "டிரம்ப் நிர்வாகம் மீது எழும் கேள்விகள்" சேதமடைந்ததாகக் கூறப்படும் அமெரிக்க போர் விமானத்தின் புகைப்படத்தை இரானிய அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது. ஆனால் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் ஃபாக்ஸ் நியூஸ் கூறுகிறது. ஒரு போர்க்களத்தில் வான்பரப்பை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்தே இல்லை என அர்த்தமாகாது என வல்லுநர்கள் கூறுவதாக குறிப்பிடும் ஃபாக்ஸ் நியூஸ், விமானப்படையின் எஃப்-15இ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இரான் வான் பரப்பின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் கோரி வருவது பற்றி கேள்விகளை எழுப்புவதாகவும் பதிவு செய்துள்ளது. "வரலாற்று ரீதியாகவும் பார்த்தால் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நான்கு வார சண்டைக்குப் பிறகு ஒரு போர் விமானத்தை இழப்பது என்பது அசாதாரணமானது அல்ல," என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் டெப்டுலா வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். "இது, நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும், எந்த தடையும் இல்லாமல் உங்கள் வேலையை செய்வதற்கான திறன் உங்களுக்கு இருப்பதையே உணர்த்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்றுப்படி, ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்மில், 43 நாட்கள் சண்டையின்போது கூட்டணி படைகள் தினமும் ஒரு விமானத்தை இழந்துவந்தன. 1990-இல் குவைத் மீதான இராக்கின் தாக்குதலுக்குப் பிறகு இராக்கிற்கு எதிராக ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம் தொடங்கப்பட்டது. "டிரம்புக்கு அரசியல் சவாலாக மாறலாம்" பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கோப்புப் படம் இரானின் திறன்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தொடர்ந்து கூறி வந்ததாக ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு அமெரிக்க ராணுவத்தால் அழிக்கப்பட்டது என அவர் கூறியதாக ஏபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை, இரான் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானமான எஃப்-15இ சுட்டு வீழ்த்தப்பட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் கூறுவது அவரின் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், "காணாமல் போன அமெரிக்க வீரரைத் தேடுவது அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் ஆபத்தான தருணமாக மாறிவிட்டது. இது காணாமல் போனவரை மட்டுமல்லாது அவரை மீட்கும் பணியில் உள்ள குழுவினரையும் இரானிய தாக்குதல் ஆபத்தில் நேரடியாக இட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மோதலில் எதிரியின் பகுதிக்குள் அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் இந்தச் சம்பவம் டிரம்புக்கு அரசியல் ரீதியாக சவாலாக மாறலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form "இரான் போரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாது தனது ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த வாரம் நிகழ்த்திய உரையில் போர் 'அதன் முடிவை நெருங்கி வருவதாக' டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளை அந்தக் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றன," என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சண்டைக்கு நடுவே தேடுதல் மற்றும் மீட்பு பணி என்பது அமெரிக்க ராணுவத்தின் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளுள் ஒன்று. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டர்களும் விமானமும் தரைக்கு மிகவும் நெருக்கமாக பறக்கும். இதில் எதிரியின் தாக்குதல்களுக்கு இலக்காகும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். "இது மிகவும் ஆபத்தான பணி," என்கிறார் விமான மீட்பு பணிகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அமெரிக்க தளபதியாக ஜேம்ஸ் ஸ்லிஃப். "எதிரி நிலப்பரப்பில் ஒருவர் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவரை பாதுகாப்பாக மீட்டெடுப்பது கடினமானது." என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "தகவல் முழுமையாக இல்லையென்றாலும் இத்தகைய பணிகள் உடனடியாக தொடங்கப்படுகின்றன. ஏனெனில் அந்த வீரர் பிடிக்கப்பட்டால் எதிரி அதனை பரப்புரைக்காக பயன்படுத்தலாம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0wrve5gx0o
  11. நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் 05 Apr, 2026 | 11:30 AM நாடாளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (05) கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் உயிர்ப்பை நினைவுகூறும் முகமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுகின்றனர். மன்னார் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சனிக்கிழமை (04) இரவு நாடளாவிய ரீதியில் மக்கள் உயிர்த்த ஞாயிறு வழி பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது. இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (04) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையினை உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலியினை தொடர்ந்து நினைவு கூர்ந்தனர். மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலி புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்று பாஸ்காதிரி நீரில் நனைக்கப்பட்டு நீர் ஜெபிக்கப்பட்டு மக்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது. அத்துடன் 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசேட திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்துத்தடன் நண்பர்கள் ,குடும்ப உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய தினம் வழிபாடுகள் ஆலயத்தில் பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டது. ஆலயத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் விமானப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மலையகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் கிறிஸ்தவ பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் பிரதான ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை, ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நடைபெற்றது . சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற இந்த ஆராதனைக்கு, ஹட்டன் ஸ்ரீ குருச தேவாலயத்தின் தலைமை குருவான அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார் மேலும் நுவரெலியா புனித பிரான்சி சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றது அத்துடன் நானுஓயா புனித ரீட்டா அம்மாள் தேவாலயத்தில் பங்குத் தந்தை சற்குண ராஜா தலைமையில் உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளனர். மேலும், இராணுவம், காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் தேவாலயத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242751
  12. ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் Published By: Digital Desk 3 05 Apr, 2026 | 12:20 PM ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப் 05) மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. "கிளர்ச்சியாளர்கள்" எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது. கடந்த வாரம் இதே வழக்கின் கீழ் 18 வயதான அமீர்ஹொசைன் ஹதாமி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தண்டனைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலவந்தமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மேலும் 11 நபர்களுக்கு எந்த நேரத்திலும் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் தற்போதைய சூழல்அமெரிக்காவுடனான போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அடக்குமுறையாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/242785
  13. நன்றி விரிவான விளக்கம் மற்றும் நேரத்திற்கு. எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் சீமான் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா? அதேபோல எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் விஜய் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா???
  14. https://www.threads.com/@mohan.ka.rulz/post/DWvAHTYFUtp?xmt=AQF09du0obrnGcP4-RR0j1esZjdwtoF53KWkXYWuTH7qbhMYQSD_6Ix9OlI2eMjAoCFx7-A&slof=1
  15. ஒழுங்காக தடுப்பூசி செலுத்திய நம்பிக்கையில் விட்டிருக்கலாம்! என்றாலும் ஆபத்தான செயல் தான்.
  16. இரானில் எஃப்-15 போர் விமானம் வீழ்ந்த இடத்தில் தேடப்பட்ட 2வது அமெரிக்க வீரரும் மீட்பு - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,CHRIS RADBURN/AFP via Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 5 ஏப்ரல் 2026, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் இரானும் அமெரிக்காவும் போட்டிபோட்டு ஈடுபட்டிருந்தன. இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது ட்ரூத் சோசியல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார். அந்த அதிகாரி எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இந்த நடவடிக்கையை நெருக்கமாக கண்காணித்த ஒருவர், தெற்கு இரானில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணி நடத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். இந்த மீட்பு பணியின்போது அமெரிக்க மற்றும் இரானிய படைகள் இடையே சண்டை நடைபெற்றதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. விமானத்திலிருந்து வெளியேறிய போது விமானி காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் முன்னதாக காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரான் ராணுவத்துடன் பொதுமக்களும் அமெரிக்க வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடித்து மீட்டு விட்டதாக டிரம்ப் உறுதி செய்வதற்கு முன்பாக இரானிய பொதுமக்களும் தேடுதல் பணியின் இணைந்திருந்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தென்மேற்கு இரானில் உள்ள மலைப்பகுதி நோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. வான் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக இரான் தகவல் காணாமல் போன அமெரிக்க வீரர் இருந்ததாக நம்பப்பட்ட பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உள்ளூர் ஆளுநர் ஒருவரை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, தென் மேற்கு இரானில் உள்ள போயர்-அஹமது மாகாணத்திலும் கோகிலுயேவின் மலைப்பகுதிகளிலும் நடந்த தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆளுநர் குற்றம் சுமத்தியிருந்தார். அதன் பிறகு மாகாணத்தின் துணை ஆளுநரான ஃபட்டா முகமது உள்ளூர் இரானிய ஊடகங்களிடம் பேசுகையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதல்கள் அமெரிக்க வீரர் மீட்புப் பணிகளுடன் தொடர்புடையதா என்பதில் தெளிவில்லை. அமெரிக்க டிரோன் வீழ்த்தப்பட்டதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் இரானிய ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தேடுதல் பணியின்போது அமெரிக்க டிரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஃபார்ஸ் செய்தி முகமை மற்றும் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை ஆகியவற்றை மேற்கோள்காட்டி அதன் செய்தித் தொடர்பு அலுவலகம் கொடுக்கும் தகவல்களின்படி, அந்த டிரோன் இரானின் தெற்கு இஸ்ஃபஹான் மாகாணத்தில் விழுந்தது. ஆனால் இந்த தகவல் அமெரிக்க தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன? இந்த தகவலை உறுதிபடுத்திய டொனால்ட் டிரம்ப், தனது பதிவில் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "அமெரிக்க ராணுவம் வரலாற்றில் மிகவும் சவாலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டது. இது மிகவும் மதிக்கத்தக்கவரும் மிகச் சிறந்த அதிகாரியுமான கர்னல் ஒருவருக்காக நடத்தப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது." எனத் தெரிவித்திருந்தார். தனது பதிவில், "இந்த தைரியமிக்க அதிகாரி இரானின் ஆபத்தான மலைகளில் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் இரானிய ராணுவம் தன்னை நெருங்கி வருவதை அவர் பார்த்து வந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தனியாக இருக்கவில்லை. முப்படைகளின் தளபதியான நான் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர், கூட்டு படை தளபதிகள் மற்றும் சக வீரர்கள் அவரது இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து மீட்புப் பணி திட்டமிடப்பட்டது." என்றார். பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,டிரம்ப் எனது உத்தரவின்பேரில் அவரை மீட்க, உலகின் மிகவும் நவீன ஆயுதங்களைக் கொண்ட விமானத்தை அமெரிக்க ராணுவம் அனுப்பி வைத்திருந்தது எனக் கூறுகிறார் டிரம்ப். அந்த வீரர் காயமடைந்துள்ளதாகக் கூறிய டிரம்ப் அவர் மீண்டு வருவார் என்றும் தெரிவித்தார். "நேற்று நாம் நடத்திய வெற்றிகரமான ஆபரேஷனைத் தொடர்ந்து இந்த மீட்புப் பணி நடைபெற்றது. ஆனால் மற்ற அதிகாரிகள் ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக நாம் பொதுவெளியில் அதனை தெரிவிக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார். எதிரியின் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடும் டிரம்ப், "எந்த அமெரிக்க வீரரையும் விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இந்த இரண்டு மீட்புப் பணிகளிலும் எந்த அமெரிக்க வீரரும் கொல்லப்படவுமில்லை காயமடையவுமில்லை. இது இரானிய வான்பரப்பு மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் அடைந்துவிட்டோம் என்பதை நிருபிக்கிறது." என்றார். அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன? வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்னட் டெபுஸ்மேன் ஜூனியர் வழங்கும் தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் மீட்புப் பணி வெற்றியடைந்ததைக் கொண்டாட தொடங்கிவிட்டனர். "எவரையும் கைவிடுவதில்லை என்பதே அமெரிக்க ராணுவத்தின் கொள்கையாக உள்ளது," என்றார் மத்திய கிழக்கிற்கான பாதுகாப்பு துணை உதவி செயலாளர் மிக் முல்ராய். "இன்றைய தினம் அந்த முக்கிய அர்ப்பணிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு." என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "அமெரிக்க ராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் அமெரிக்க மக்களின் நன்றிக்கு உரித்தானவர்கள்." என்றார். கடந்த கால மீட்பு நடவடிக்கைகள் 2009-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் போவி பெர்க்டால் என்கிற அமெரிக்க வீரர் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்க 2014-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகம் குவாண்டநாமோ விரிகுடா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 5 தாலிபன் சிறைவாசிகளை விடுவித்தது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form 1979-இல் அமெரிக்க ராஜதந்திரிகள் இரானால் 444 நாட்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் ராணுவ முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரான் மீதான சில பொருளாதார தடைகளை நீக்கியும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானின் சொத்துகளை விடுவித்ததன் மூலமும் தனது ராஜதந்திரிகளின் விடுதலையை அமெரிக்கா உறுதி செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c070pr14z7ro
  17. இந்தியாவுக்கு, பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை! இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின், சியால்கோட்டில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை இந்தியா ஏதேனும் போலித் தாக்குதல் நடத்த முயன்றால், எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நாங்கள் தாக்குதலை கொல்கத்தாவிற்கு எடுத்துச் செல்வோம். இந்தியா தனது சொந்த உளவாளிகளையோ அல்லது பாகிஸ்தானிய கைதிகளையோ பயன்படுத்தி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி, அதன் பழியை இஸ்லாமாபாத்தின் மீது சுமத்தக்கூடும் என்றும் அவர் கூறினார். எனினும், இந்தக் கூற்றை நிரூபிப்பதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், முன்பைப் போலவே இந்த அச்சுறுத்தல்களும் எந்தவித ஆதாரமும் இன்றிய போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியர தரப்பினர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகமாகவே உள்ளது. அந்தத் தாக்குதலில், பயங்கரவாதிகளால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், மே 7 முதல் 10 வரை இரு அண்டைய நாடுளுக்கு இடையே ஒரு குறுகிய, தீவிரமான இராணுவ மோதலைத் தூண்டியிருந்தது. https://athavannews.com/2026/1471022
  18. கேலிச்சித்திரம்..... வேறை லெவல். 😂 படத்தில் Second Aid Box என்று எழுதியுள்ளமை... ஓவியரின் கற்பனையின் மணிமகுடம். 🤣
  19. ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி! உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று (05) கொண்டாடுகின்றனர். இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது. உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும். மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார். தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர். தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகைமையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர். இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம். துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த இனிய உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள் – என்று கூறியுள்ளார். https://athavannews.com/2026/1470990
  20. கந்தப்பு வேலைப்பழு காரணமாக போட்டி நடாத்தா விட்டால் என்ன செய்வது.விஜைண்ணாவின் தவெக எத்தனை சதவீதம் எடுக்கும் என்ற உங்கள் கணிப்பைச் சொல்லிவிடுங்கள். விஜைண்ணா இந்தத் தேர்தலில் முதலமைச்சர் கனவில் இருக்கிறார்.நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி தேர்தல் முடிவுகளுக்கு அடுத்தநாள் படம் நடிக்க தயாரிப்பாளரைத் தேடுவார்.ஆனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசிப்பார்கள்.வடிவேலுவின் நிலைதான்
  21. டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்! ஹர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (04) விடுத்த எச்சரிக்கையை தெஹ்ரான் நிராகரித்துள்ளது. வொஷிங்டனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது சாத்தியமான தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இரண்டு அஈமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியர் ஒருவரை அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகள் தேடி வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் இந்த எச்சரிக்கை வந்தது. இது குறித்து சமூக ஊடகப் பதிவில், அவர்கள் (ஈரான்) மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ளது. நேரம் விரைந்து கொண்டிருக்கிறது – என்று எழுதி ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சாத்தியமான தாக்குதல்கள் உள்ளிட்ட தனது முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். எனினும், இந்த எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே அதனை நிராகரித்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாடி (Ali Abdollahi Aliabadi), நரகத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறக்கப்படும் என்று கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவுக்கு பதிலளித்தார். இதனிடையே, நேற்றைய தினமும் வளைகுடா நாடுகள், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் மேலும் பல ஏவுகணைகளை ஏவியது. இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் பல பகுதகிளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர், இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒரே இரவில் மேலும் பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1471009
  22. இந்தியாவில் தேர்தல் கணிப்புகள் தாயக் கட்டைகள் உருட்டி விடுவது போல. மக்கள் கருத்து கணிப்புகளை எடுப்பவர்களை உருட்டி விடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்.............🤣. பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் மிகப் பிரபலமான தொழில்முறை தேர்தல் ஆலோசனையாளர். கோடி கோடியாகக் கொடுத்து அவரை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. சில தேர்தல்களில் அவர் வெற்றிகளைப் பெற்றும் கொடுத்தார். 'எல் கே ஜீ' என்று ஒரு தமிழ்ப்படம் கூட இந்த கதையுடன் வந்தது. இன்று விஜய்யின் அரசியல், தேர்தல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கின்றார். இவருக்கு முன்னால் பிரசாந்து கிஷோரே வருவதாக இருந்தது. இவர் மிகச் சரியாக கணக்கை மாற்றுவார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. பிரசாந்த் பீஹார் தேர்தலில் அவரே நின்றார். ஒரு கட்சி ஆரம்பித்தார் என்றும் நினைக்கின்றேன். அந்த தேர்தலில் தோற்றால் அரசியலை விட்டே ஒதுங்குகின்றேன் என்று சவால்விட்டார். படு தோல்வி அடைந்தார். அப்படி எல்லாம் அரசியலை விட்டே ஒதுங்க முடியாது, நான் ஏன் ஒதுங்க வேண்டும் என்று பின்னர் கேட்டார். ஆனால் அவர் சொன்னதில் சிரிப்பான விசயம் என்னவென்றால் பாஜக கூட்டணி மக்களுக்கு காசு கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டது என்பதே.................. அடப்பாவி, உன்னையெல்லாம் ஒரு தேர்தல் வித்தகன் என்று நினைத்து இருந்தார்களே................🤣. அம்பானியே தேவையான பணத்தை இறக்கியதாக கிசுகிசுத்தார்கள். எல்லா கட்சிகளும் பணத்தை இறக்குவார்கள், இது ஒரு விசயமே இல்லை............... எடப்பாடியார் கூட டெல்லியில் அம்பானியை சந்தித்து இருந்தார். தமிழ் நாட்டிலும் பணம் கொட்டப் போகின்றது, அம்பானியின் பணமோ, அதானியின் பணமோ அல்லது செந்தில் பாலாஜியின் பணமோ, இப்படி பல பணங்கள். திமுக -- 40 - 45 அதிமுக -- 30 -35 விஜய் -- 15 சீமான் -- 5 என்று நான் உருட்டிய தாயக் கட்டைகள் சொல்லுகின்றது. விஜய்க்கு 15 வீதம் கிடைத்தால் அது வரலாறு காணாத ஒரு விடயம். இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் ஐந்து வருடங்களின் பின் அவர் எதிர்பார்க்கும் திமுக எதிர் தவெக என்பது நிஜமாகும். அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.
  23. 87 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியா இராணுவம் பலாலி வீதி,காங்கேசன் துறை வீதி வழியாக செல் தாக்குதல்கள் செய்து கொண்டு வீதிகளில்,வீடுகளில் சென்ற இருந்த அப்பாவி பொதுமக்களை ( உ+ம் உரும்பிராய், கொக்குவில், குளப்பிட்டி சந்தி, யாழ் போதன வைத்தியசாலை) கொன்று குவித்து யாழ் நகரை கைப்பற்றினார்கள். நாங்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் அகதியாக இருந்தோம். தீபாவளி அன்று எங்களை போல அருகில் இருந்த இடங்களில் இருந்து தங்களது வீடுகள் பார்க்க சென்ற சிலர் இந்தியா படையினால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் நாங்கள் இருந்த கோயிலுக்கு பின்னால் இருந்த பாடசாலை மைதானத்தில் எரியூட்டபட்டது. கிட்டத்தட்ட கோயிலில் 45 நாட்கள் இருந்தோம். இடையில் இருமுறை சில மணித்தியாலங்கள் வீடுகள் பார்க்க மக்களை அனுமதித்தார்கள். வீடுகளில் இருந்த கைக்கடிகாரங்கள், சப்பாத்துக்கள், கமராக்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் களவாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் வீடுகள் பார்க்க அனுமதித்தார்கள். நாங்கள் இணுவில் கந்தசாமி கோவில் முன்வாசல் வழியாக செல்லும் வீதியூடாக காங்கேசன் துறை வீதி ( KKS Road) நோக்கி சென்று கொண்டிருந்தோம். வரிசையில் மக்கள் நிற்க இரு இந்தியா இராணுவத்தினர் ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொன்றாக போக விட்டனர். அதில் சிக்கிய இராணுவ வீரர் ஒரு சில இளம் பெண்களின் முன்பக்கத்து உடைகளுக்குள் கை வைத்து குண்டுகள் இருக்குதா என்று தேடி கொண்டு இருந்தார். வரிசையின் கடைசியில் இருந்தவர்கள் கவலையுடன் இருந்தார்கள். அப்பொழுது இரண்டாவதாக நின்ற இராணுவ வீரர் தமிழில் ஏன் இந்த வழியாக வருகிறீர்கள், கோயிலுக்கு வலது பக்கத்தின் வழியாக உள்ள வீதியின் ஊடாகவும் செல்லாம் என்று உரத்து கூறினார். உடனே நாங்கள் உட்பட பலர் வலது பக்க வழியாக உள்ள வீதியுடாக சென்றோம். அந்த வீதியில் ஒரு இராணுவ வீரர்களும் இருக்கவில்லை.
  24. டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு பதிலாக, இங்கே பலத்த எதிர்வினைகளும், களத் தளபதிகளின் கடுமையான அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. சில நேரங்களுக்கு முன்பு, காத்தம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி மேஜர்-ஜெனரல் அலி அப்தொலாஹி கூறியதாவது: ‘அமெரிக்க மற்றும் சயோனிய எதிரி எந்த வகையான தாக்குதலையும் மேற்கொண்டால், அமெரிக்க “தீவிரவாத படை” பயன்படுத்தும் அனைத்து அடிப்படை வசதிகளையும், சயோனிய ஆட்சியின் அடிப்படை வசதிகளையும், எந்த வரம்பும் இன்றி தொடர்ச்சியான மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படுத்துவோம்’ என்றார். அதற்கு முன்பும், காத்தம் அல்-அன்பியாவின் பேச்சாளர் எச்சரித்ததாவது: ‘உங்கள் தாக்குதல் விரிவடைந்தால், முழு பிராந்தியமும் உங்களுக்கு நரகமாக மாறும் என்பதை மறக்காதீர்கள்.’ மேலும், ‘இஸ்லாமிய குடியரசை தோற்கடிக்கலாம் என்ற உங்கள் மாயை, இப்போது நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சதுப்புநிலமாக மாறியுள்ளது’ என்றார். அதாவது, அவர்கள் அடிப்படையில் அதே வகையான பதிலடி, அதே அளவிலான சேதம், அதே வகை வசதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்—பிராந்தியத்திலும், இஸ்ரேலிலும்—நடக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். ஈரானுக்கு அந்த திறன்கள் உள்ளன, மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளோம் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். Al Jazeera‘We got him’: Trump confirms rescue of missing US officer...Iran says US-Israeli attacks on the Mahshahr Petrochemical Zone have killed five and wounded 170.முன்னாள் ஓமான் ஷூரா கவுன்சில் துணைத் தலைவர் இஷாக் பின் சாலிம் அல்-சியாபி, அமெரிக்கா “தகராறுகளை தீர்த்து, அனைவருக்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்தும்” பேச்சுவார்த்தைகளில் “துரோகம்” செய்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசு “வெளிப்படையான, வெறுப்பூட்டும், அநியாயமான தாக்குதலை குற்றமற்ற மக்கள்மீது நடத்துகிறது; அவர்களின் ஒரே ‘குற்றம்’ — மரியாதையுடனும் அமைதியுடனும் வாழ விரும்புவது!” என்று அவர் கூறியுள்ளார். “இப்போது அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் தடைகள் விதிக்க பல வலுவான காரணங்கள் உள்ளன!!!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமான் ஒரு நடுவராக செயல்பட்டது. அதன் பின்னரும் பல முறை நடுவராக செயல்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அதே அளவிலான வெற்றியைப் பெறவில்லை.
  25. கவிஞரே, நீங்கள் எந்த நடிகரினதும் ரசிகர் அல்ல என்பது எனக்கு நல்லதொரு விடயம். அதே போலவே நீங்கள் எந்த நாட்டின் தலைவர்களினதும் ரசிகர் இல்லை என்றே நினைக்கின்றேன். ஒருவரின் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அல்லது விவாதிப்பது எங்கள் தலையை நாங்களே சுவற்றில் மோதுவதற்கு சமம். தொடர்பில் இருக்கும் என்னுடைய நண்பர்களில் நான்கு பேர்கள் விஜய்யை ஆதரிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நால்வருமே ஏலவே விஜய்யின் சினிமா ரசிகர்கள். கோர்வையாக ஒரு காரணம் சொல்ல முடியாதவர்கள். நானும் அவர்களுடன் விஜய்யின் அரசியல் பற்றி எதையும் விவாதிப்பதில்லை; மெதுவாக சிரித்து மழுப்பி விட்டு ஈரான், உக்ரேன் என்று வேறு எதையாவது பேசிக் கொண்டிருக்கின்றேன். ட்ரம்பின் ரசிகர்கள், புட்டினின் ரசிகர்கள், கொமெய்னிகளின் ரசிகர்கள் என்று அங்கேயும் ஆள் பார்த்து நழுவ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. உங்களின் அனுபவத்திற்கும், தெளிவுக்கும் நீங்கள் விஜய்யிடம் எதையோ காண்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நான் விஜய்யிடம் அப்படி ஒன்றையும் இதுவரை காணவில்லை. ஏற்கனவே இரு கட்சிகள் தமிழக மக்களின் தலைகளில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாவதாக விஜய்யும் அதே குப்பையை, அல்லது அதை விட மோசமான குப்பையை கொட்டுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். இவர் ஒரு மாற்று கிடையாது என்பதை விடவும், இப்பொழுது இருப்பதை விடவும் சிறிதாவது நல்லதாக ஒன்று வருவதையும் இவர் இன்னும் நீண்ட காலத்துக்கு தடுத்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சேரனின் பெயரை நான் தவிர்த்திருக்க வேண்டும். சேரன் பிக்பாஸ் நிகழ்வில் நடந்து கொண்ட விதம் பற்றி அராத்து எழுதியிருந்த ஒரு ஆக்கத்தை நீங்களோ கோஷானோ படிக்கவில்லை போல............ தலைப்பாகை போய் விட்டது, ஆனால் என் தலை தப்பியது................ இங்கு ஒரு தமிழ்ச்சங்கத்தால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டது. அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே. செயற்குழு உறுப்பினர்கள் சிலர் என்னுடைய நண்பர்கள். பின்னர் இளையராஜா கேட்கும் தொகையும், வசதிகளும் எங்களால் முடியவே முடியாது என்று கைவிடப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் ஒருவர் இளையராஜாவுக்கு கொடுத்த முன்பணத்தால், அந்த நிகழ்வும் நடக்கவில்லை, வீடிழந்து போன கதையை நான் கேள்விப்பட்டிருந்தேன். அன்றைய சாதாரண பண்ணைபுரத்து ராசையா என்ன இன்று என்ன இப்படி கேட்கின்றாரே என்ற எண்ணம் எனக்கு அன்று வரவில்லை. ஆனால் மனிதர்கள் காட்டும் வெளித் தோற்றத்துக்கும், அகத் தோற்றத்துக்கும் இருக்கும் இடைவெளியை அந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியது. சேரன் மற்றும் பலர் பற்றி கீழே கோஷானின் பதிவின் கீழ் தொடர்கின்றேன்........... நீங்கள் சொல்லியிருப்பதும் அவ்வளவும் நடந்தவையே. இவர்களுக்கு அறம் நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என்பதும் சரியே என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் நித்தி சொன்னார், ஜக்கி சொன்னார், பிரேமானந்தா சொன்னார், சாயிபாபா சொன்னார் என்று சொல்லும் இந்தச் சாமிகளின் பக்தர்களிடம் எல்லாம் நீங்கள் முன்வைத்திருக்கும் அதே வாதத்தையே நான் இன்றும் முன்வைக்கின்றேன். சினிமா துறையில் இருக்கும் எவரிடமாவது இந்த அருகதைகள் இருக்கின்றதா என்ற கேள்வி அடுத்ததாக வருகின்றது. சினிமாத் துறையில் இருக்கும் எவர் மேலாவது இவை போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருக்கின்றதா என்றும் கேள்வி இருக்கின்றது. வரி ஏய்ப்பவர்களாக இருக்கின்றார்கள், பல தாரம் மணம் புரிபவர்களாக இருக்கின்றார்கள், பெண்களை ஏமாற்றுபவர்களாக இருக்கின்றார்கள். நடிகர் சிவகுமார் சுத்தமே என்று சொல்ல வந்தாலும், அவர் கூட அந்த ஒரு மனிதனின் கையில் இருந்த அலைபேசியை பறித்து எறிந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்பொழுது விஜய்க்கு வருவோம். வரி ஏய்ப்பது ஒரு விசயமே இல்லை. அதை எல்லோருமே செய்கின்றார்கள்; விஜய்யும் செய்கின்றார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கூட சினிமா மற்றும் அரசியல் உலகில் சாதாரணமே. எம் ஜிஆர், கருணாநிதி, கமல் என்று எல்லோரையும் சொல்லலாம். விஜய்யும் செய்கின்றார். ஆனால், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு கட்டிய மனைவியை 'வொர்த்தே இல்லை..............' என்று இதற்கு முன் எவரும் சொன்னதில்லை. ஒரு பெண்ணை இப்படி எவரும் இழிவு செய்ததில்லை. அப்படியான விஜய் பொதுவாழ்வில் இருக்கலாமா............... இவரிடம் அறம், நேர்மை, தூய்மை எனபன இருக்கின்றதா.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.