24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்
நீதித்துறையில் புதிய யுகம்: மின்னணு வழக்கு தாக்கல் நடைமுறை ஆரம்பம் Published By: Vishnu 30 Mar, 2026 | 04:46 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு மாற்றத்தக்க யுகத்திற்குள் பிரவேசிக்கும் வகையில், இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து ஆவணங்களற்ற முறையில் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை உயர் நீதிமன்றத்தினால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த (e-filing) செயலி முறைமையானது, டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதற்கமைய, இந்த மின்னணு கோப்பு முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் இயங்கத் தொடங்கியதுடன், சட்டத்தரணிகள் இந்தச் செயலி மூலம் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஏராளமான வழக்குகள் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயல்முறையின் ஒரு முக்கிய கட்டமாக, 2026 மார்ச் 26 அன்று உயர் நீதிமன்றத்தின் பகிரங்க நீதிமன்றத்தில் காகிதங்களற்ற மின்னணு முறைமை அடிப்படையிலான முதலாவது வழக்கு விசாரணை நடைபெற்றது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதியரசர் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது இடம்பெற்றது. இந்த வழக்கு மேலும் சிறப்பம்சத்தைப் பெறுவதற்கு காரணம், இது 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்த 3 மில்லியன் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்காகும். வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கைப் பரிசீலிப்பதற்காக பாரம்பரியக் கோப்புகளுக்குப் பதிலாக, உயர் நீதிமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வழக்குக் கோப்பை நீதியரசர்கள் கணினி மூலம் பயன்படுத்தினர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றப் பதிவாளர் மனோதி ஹேவாவசம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டியதுடன், குற்றப்பத்திரிகையில் தனது டிஜிட்டல் கையொப்பத்தை இட்டு மின்னணு முறைமையில் வெளியிட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதனை அணுக வழிவகை செய்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணை 2026 மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் ஆவணங்களற்ற வழக்கு விசாரணை எனும் புதிய அனுபவத்தை இலங்கை மக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த புதிய செயலியானது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் “ஈ கோட்” திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். உயர் நீதிமன்றத்தினால் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரம் இது உருவாக்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டமைப்பை இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (இணையதள வடிவமைப்பு) உவிந்து அனுராத உருவாக்கியுள்ளார். உயர் நீதிமன்றத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி மூலம் மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் முறையை முன்னெடுக்க முடியும் என்பதுடன், எழுதுகருவிகளுக்காக செலவிடப்படும் பாரிய அளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணி மற்றும் செலவுகளைச் சேமிக்க முடியும். மேலும், இம்முறையிலுள்ள வசதி காரணமாக சட்டத்தரணிகள் பெருமளவில் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242263
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்? பெரம்பூர், திருச்சி கிழக்கை தேர்வு செய்ததன் பின்னணி பட மூலாதாரம்,TVK கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 29 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். அப்போது, தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது "நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக" கூறுகிறது திமுக. ஆனால் விஜயின் இந்த முடிவு "வியூக அடிப்படையிலானது" என த.வெ.க. விளக்கம் அளிக்கிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை குறிப்பிட்ட திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய் "தைரியமில்லாதவர்" என விமர்சித்தார். "பெரம்பூரை விட்டு விட்டு திருச்சி கிழக்கில் மட்டும் போட்டியிடத் தயாரா?" என அவர் விஜய்க்கு சவால் விடுத்தார். த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "ஜெயலலிதா உட்பட பல தலைவர்களும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்" என்று கூறினார். ஆனால் தற்போது, முதலமைச்சர் வேட்பாளர்களாக உள்ள மு.க.ஸ்டாலினோ எடப்பாடி பழனிசாமியோ இரு தொகுதிகளில் நிற்காததை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார். "ஜெயலலிதா, ராகுல் காந்தி, மோதி போன்றோர் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர், ஆனால் அப்படி நிற்பவர்களை நம்பிக்கையின்மை கொண்டவர்களாகவே நான் பார்க்கிறேன்." என்கிறார் குபேந்திரன். இதே கருத்தை வலியுறுத்துகிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமு மணிவண்ணன். "விஜய், தன்னைத் தானே மட்டுமே முன்னிறுத்தி தேர்தலில் களம் காண்கிறார். தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைப்பதை மட்டுமே அவர் முன்னிறுத்துகிறார்." என்கிறார். விமர்சனங்களுக்கு பதிலளித தவெகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "இது மிகவும் தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவு. இரு தொகுதிகளும் திமுகவின் வலுவான தொகுதிகள் என்பதால் அங்கிருந்து போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது." என்கிறார். "எங்களின் அரசியல் எதிரியின் வலுவான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்." என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார். பெரம்பூர் தொகுதி ஏன்? சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். வியாசர்பாடி, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், கொடுங்கையூர் என உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளும் இத்தொகுதிக்குள் வருகின்றன. இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சென்னையின் மையமான தொகுதியாக பெரம்பூர் இருப்பதாகக் கூறும், தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ், "அங்கு விஜய் நிற்கும்போது ஓர் அலை ஏற்படும். அதனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குகளை அதிகம் பெற்று திமுகவை தோற்கடிக்க முடியும்." என நம்புகிறார். தவெகவில் உறுப்பினராக சேர்வதற்கு உருவாக்கப்பட்ட செயலி மூலமாக இந்த தொகுதியில் அதிகமாக சுமார் 45,000 பேர் வரை அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்ததாக தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். படக்குறிப்பு,குபேந்திரன் திருச்சி கிழக்கு தொகுதி ஏன்? திருச்சி கிழக்கு தொகுதியிலும் தற்போது திமுக எம்எல்ஏவாக உள்ள இனிகோ இருதயராஜ் வேட்பாளராக உள்ளார். அதிமுக சார்பில் கே ராஜசேகரன் போட்டியிடுகிறார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியும் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக உள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாகவும் கருதப்படுகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெல்லமண்டி நடராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வென்றார். "கரூரில் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு அருகிலுள்ள திருச்சியிலிருந்து ஒரு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் அந்த தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்கிறார் ராமு மணிவண்ணன். விஜய் சிறுபான்மையினர் என்பதை அடிப்படையாக வைத்து அரசியல் காயை நகர்த்திவருவதாக கூறுகிறார் ராமு மணிவண்ணன். "அதை அவருக்கு பின்னால் உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர்." என்கிறார். ஆனால் மத சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து தொகுதிகளை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஃபெலிக்ஸ், "விஜயை சாதி, மத ரீதியாக அடையாளப்படுத்த முடியாது. அரசியலில் நுழைந்தவுடனே அவர் முதலில் செய்தது, அவரின் அம்மாவுக்காக சாய்பாபா கோவில் கட்டியதுதான்." என்கிறார். "தமிழ்நாட்டின் மையமாக விளங்கும் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதன் மூலம் டெல்டா பகுதிகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டு அப்பகுதிகளில் வெற்றிபெற முடியும்" என்றும் ஃபெலிக்ஸ் கூறுகிறார். சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவுக்கே ஆதரவு கிடைக்கும் என அக்கட்சியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நம்பிக்கை தெரிவிக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தேவாலயம் எப்போதும் அறிவாலயத்தை கைவிடாது" என்று கூறினார். படக்குறிப்பு,ராமு மணிவண்ணன் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி முறைகேடு வழக்கில் 2000வது ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவே, முதலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் அவர். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தும் அவர் இவ்வாறு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மனுக்களையுமே தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... முடிவில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அந்தத் தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி 197 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி இழக்க நேரிட்டது. 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோன்று, 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி வதோதரா, வாரணாசி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cevkxvykenwo
-
ஏப்ரல் முதல் பெற்றோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை
ஏப்ரல் முதல் பெற்றோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 11:30 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து, ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தடையானது ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பித்து ஜூலை 31 ஆம் திகதி வரை நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிகிறது. ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், இது தொடர்பான தீர்மானத்தை உருவாக்குமாறு எரிசக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதும், விலையை நிலைப்படுத்துவதும் இந்த அதிரடி முடிவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உலகளாவிய எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவில் வசந்த கால விவசாயப் பணிகள் ஆரம்பிக் உள்ளதாலும், சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாலும் உள்நாட்டு பெற்றோல் தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சில பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மசகு எண்ணெய் சுத்திகரிப்பு அளவு கடந்த ஆண்டைப் போலவே நிலையாக இருப்பதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 50 இலட்சம் மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தத் தடையானது சீனா, பிரேசில் மற்றும் துருக்கி போன்ற ரஷ்ய எரிபொருளை நம்பியிருக்கும் நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். "மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகச் சந்தையில் நிலவும் குழப்பம் விலை மாற்றங்களுக்குக் காரணமாகிறது. அதேசமயம், ரஷ்ய எரிசக்திக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை இருப்பது சாதகமான விடயம்" என அலெக்சாண்டர் நோவாக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242289
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவிலுள்ள சிலர் நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். அந்த கேள்வி முட்டாள் தனமானது என்றும் அவர் கூறியுள்ளார். கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது செய்யாமல் விடலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. இதன் பொருள் நாம் சில காலம் கார்க் தீவில் இருக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார். அத்தீவின் ஈரானியப் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோது, அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றார். மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மேலதிகமாக 3,500 அமெரிக்கப் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். ஒரு ஒப்பந்தத்தை மிக விரைவாகச் செய்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார். ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு
அவர்கள் கொடுத்த சாப்பாட்டை தொப்பி அணிந்து கொண்டு இவர் சுவைத்திருப்பார்.
-
நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 10:55 AM நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேன்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும். இதன் காரணமாக நாளுக்கான சராசரி வெப்பநிலை 38- 42 பாகை செல்சியஸ் ஆக நிலவும். பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸ் இனை விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். 40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக இந்த அதிக வெப்பநிலை வெப்ப உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களும் அதிக வெப்பநிலையினால் அதிக நீரிழப்பு உள்ளவர்களும் இந்த அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இக் காலத்தில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுப் போட்டிகள் உட்பட்ட சகல செயற்பாடுகளையும் நிறுத்துவது சிறந்தது. அதிக வெப்பநிலை நிலவும் இந்த நாட்களில் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதன் நிலவும் என்பதனால் இந்த அதிக ஈரப்பதனும் ஆபத்தை உருவாக்கும் அதிக வெப்பநிலை நிலவவிருப்பதனால் அதிக ஆவியாக்கமும் ஆவியுயிர்ப்பும் நிகழும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, வட மத்திய வட மேல் மாகாணங்களில் அதிக அளவில் ஆவியாக்கம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஆவியுயிர்ப்பினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதனால் இந்த நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் பயிர்களுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்வது சிறந்தது. அதேவேளை வெப்பநிலை வெப்பச் சலன நிகழ்வை உருவாக்கும் என்பதனால் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் சில இடங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த வெப்பச் சலன மழை இடி மின்னலோடு இணைந்த மழை என்பதனால் இடிமின்னல் நிகழ்வுகள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/242286
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஷார்துல் தாக்கூர், ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தன (கோப்புப் படங்கள்) கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். வான்கெடேவில் நடந்த இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹர்திக் பாண்டியாவின் அணி. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அரைசதம் அடித்தனர். மும்பைக்காக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த இலக்கை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான். இந்தப் போட்டியில் அந்த அணியை வெற்றி பெறவைத்த 3 வீரர்கள் யார்? ஷார்துல் தாக்கூர்: கேகேஆர் பிடியைத் தளர்த்தினார் நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின்போது தான் முதல் முறையாகப் பந்துவீச வந்தார் ஷார்துல் தாக்கூர். மும்பைக்காரரான அவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதுவும் முதல் போட்டியே சொந்த மண்ணில். இதுவே அவருக்கு நெருக்கடியான தருணமாக இருந்திருக்கும். சொல்லப்போனால், அப்போது ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் நெருக்கடியில் இருந்தது. ஏனெனில், முதல் 5 ஓவர்களின் முடிவில் 68/0 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அந்த அணியின் முன்னணி பௌலர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு டி20 போட்டியின் ஆறாவது ஓவரை வீசுவது எப்போதுமே சற்று சிக்கலானது. ஏனெனில், பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் பேட்டிங் செய்யும் அணிகள் அதை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். இப்படி ஷார்துல் பந்துவீச வந்த தருணத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல். புற்கள் அதிகம் இருந்த வான்கெடே மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் 'ஸ்விங் & சீம் மூவ்மென்ட்' இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி பெரிய அளவில் இல்லாததால், பேட்டர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். இந்நிலையில், மும்பை பௌலர்கள் 'ஸ்லோ பால்கள்' வீசத் தொடங்கினார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த சீசன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஷார்துல் தாக்கூர் டிரேட் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்) ஷார்துல் தன்னுடைய முதல் பந்தை வீசியபிறகு, வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்கள் வீசுவதுதான் சரியாக இருக்குமென்று முடிவு செய்திருக்கிறார்கள். முந்தைய ஓவரில் (ஆட்டத்தின் 5வது ஓவர்) பும்ரா சுமார் 4 ஸ்லோயர் பால்கள் வீசினார். இப்போது ஷார்துலும் அதையே செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். ஷார்துல் அதையே அடுத்த பந்திலும் செய்து ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றி கொல்கத்தாவின் அதிரடிக்கு முதல் வேகத்தடையைப் போட்டார். ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது. 9வது ஓவரில் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷார்துல், அதன்பிறகு 14வது ஓவர் மீண்டும் பந்துவீச வந்தார். இம்முறை ஃபுல் லென்த்தில் 'கிராஸ் சீம்' பந்தை வீசினார். சற்று திரும்பிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே அதை சரியாக அடிக்காததால் கேட்சாகி ஆட்டமிழந்தார். ஆலன், கிரீன், ரஹானே என்று மூன்று பெரிய விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் வீழ்த்தி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸின் பிடியைத் தளர்த்தினார் ஷார்துல். இல்லாவிட்டால் கேகேஆர் இன்னும் பெரிய ஸ்கோரைப் பதிவு செய்திருக்கும். அது மும்பைக்கு ஆபத்தாக அமைந்திருக்கும். இப்படி அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. ஜஸ்ப்ரித் பும்ரா: வழக்கம்போல் நெருக்கடியை ஏற்படுத்தினார் ரன்மழை பொழியும் பெரும்பாலான டி20 போட்டிகளில் தன் சிக்கனமான ஸ்பெல்களால் மாற்றத்தை ஏற்படுத்துவது ஜஸ்ப்ரித் பும்ராவின் வழக்கம். உதாரணம், இதே வான்கெடே மைதானத்தில் மார்ச் 5ம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி. 40 ஓவர்களில் 499 ரன்கள் அடிக்கப்பட்ட அந்தப் போட்டியில் 8.25 என்ற எகானமியில் பந்துவீசினார் பும்ரா. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய சஞ்சு சாம்சன், "பும்ரா இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்று இவ்விருதை வாங்கியிருக்கமாட்டேன்" என்று கூறினார். காரணம், அவர் வீசிய சிக்கனமான ஓவர்கள். 16வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அது இங்கிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது. அப்படியொரு செயல்பாட்டைத் தான் நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் பும்ரா கொடுத்தார். 11 ஓவர்கள் முடிவில் 131/2 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அப்போது தன்னுடைய இரண்டாவது ஓவரைப் பந்துவீச வந்த பும்ரா அந்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முதலிரு பந்துகளையும் ஸ்லோயர் பால்களாக வீசிய அவர், அதன்பிறகு வேகத்தை அதிகப்படுத்தினார். ஆனால், முதல் பந்தைத் தவிர்த்து அனைத்து பந்துகளையுமே யார்க்கர்களாக வீச முயற்சி செய்தார். அதை சிறப்பாகவும் அரங்கேற்றினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் பும்ரா தான் (கோப்புப் படம்) கேகேஆர் அணியின் ரன் விகிதம் அப்போதுதான் குறையத் தொடங்கியது. அடுத்த ஓவரில் போல்ட்டும் 8 ரன்கள் மட்டுமே கொடுக்க, கேகேஆர் பேட்டர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுதான் ரஹானே ஆட்டமிழக்க காரணமாக அமைந்தது. இதன் பிறகு 18வது ஓவர் பந்துவீச வந்தார் பும்ரா. ரகுவன்ஷி - ரிங்கு சிங் இணை அதற்கு முந்தைய 3 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் எடுத்திருந்தனர். அப்படி அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். முதல் பந்தில் பவுண்டரி கொடுத்திருந்தாலும், அடுத்த 5 பந்தையும் சவால் தரும் வகையில் வீசினார். பின்னர் 20வது ஓவரிலும் அவர் 11 ரன்கள் மட்டும் கொடுக்க, ஒருவழியாக கேகேஆர் இன்னிங்ஸ் 220 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பும்ரா. இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் இவர் மட்டுமே. ரோஹித் ஷர்மா: பவர்பிளேவிலேயே ஆட்டத்தை மாற்றினார் 221 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது ரோஹித் ஷர்மா - ரியான் ரிக்கில்டன் கூட்டணி. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்தங்கவைத்தார்கள். இதில் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதில் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், கடினமான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தியைக் கூட அநாயசமாகக் கையாண்டார். பவர்பிளே முடியும்போதே அரைசதம் கடந்திருந்தார் அவர். வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பதம் பார்த்த ரோஹித், புல், டிரைவ், ஸ்கூப் என பலவகையான ஷாட்களையும் ஆடினார். அவருடைய முதல் பவுண்டரி ஒரு எட்ஜ் மூலம் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ஷாட்டும் மிகத் துல்லியமாக, அவரது பேட்டின் நடுப்பகுதியில் பட்டே பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாறியது. இந்த இன்னிங்ஸ் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், "ரோஹித் சர்மா தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் தன்னைத்தானே மறுவரையறை செய்துகொள்வது மற்ற வீரர்களுக்கு உண்மையிலேயே ஒரு உத்வேகம் அளிக்கும் விஷயமாகும். தனது உடல் தகுதிக்காக கடினமாக உழைத்து, 38 வயதில் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்திருப்பது, அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு மிகச்சிறந்த செயல்பாடு." என்று கூறியிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேகேஆர் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார் ரோஹித் ஷர்மா (கோப்புப் படம்) வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சனும் இதே கருத்தை முன்வைத்து, நீண்ட காலம் ஆடுவது எப்படி என்பதற்கு ரோஹித் பாடம் எடுப்பதாகக் குறிப்பிட்டார். இன்னிங்ஸ் தொடக்கத்தில் 11ஆக இருந்த மும்பையின் தேவைப்படும் ரன்ரேட், ரோஹித் அவுட் ஆகும்போது 9க்கு குறைவாக ஆனது. அந்த அளவுக்கு அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றிருந்தார் ரோஹித். ரிக்கில்டன் கூட இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்தார். ஆனால், பவர்பிளேவிலேயே அரைசதம் அடித்து அதிரடி தொடக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தது, வருண் சக்கர்வர்த்தி போன்ற கேகேஆர் அணியின் முன்னணி பௌலருக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடித்து அந்த அணியை அப்போதே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது போன்றவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjd8xlnknjdo
- Today
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு
இவருகிட்ட ஒரு அதிடைபடையே இருக்காம் ...போனால் தம்பர் அவுட்டு...அண்ணாச்சிக்கு ...ஆரோ பலமான நோன்புசாப்பாடு போட்டிருக்கினம்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
நல்ல காலம் .....நம்ம இனம் தப்பிச்சிடுத்து
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
இரண்டி நாள் போட்டிகளை பார்த்தபோதூ...தொடக்கம் முதல் இறுதிப் போட்டிவரை சூப்பராக இருக்கும்போல் தெரிகிறது ...முதல் தொகுதி போட்டிகளை ஆய்வு செய்து போட்டியில் பங்கு பெறுவது நன்றாக இருக்கும் ...கிருபன் சாமி கொலிடே போய் கெதியில் வாருங்கள் ... வினாக்கொத்தை அனுப்புங்கள்... போட்டி நடத்த முன்வந்ததிற்கு நன்றி.. முன்னாள் முதல்வரை சதி முயற்சியால் ..அடித்து விரட்ட முயற்சியோ...விடக்கூடாது வாருங்கள் உள்ளே
-
தமிழா நீ பேசுவது தமிழா?
இப்பாடலைச் சிறிது முன்பே கேட்டதுண்டு. எத்தனை முறை கேட்டாலும், சிந்திக்க வைப்பது. பாட்டையும் பாடுபவரையும் ரசிக்க வைப்பது. யாழில் எனது பழைய பதிவு ஒன்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது :
- Yesterday
-
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
நாறி போன கிளி இனி சாம்பல் தான்🤣😂
-
யாழ் இணையம் 28 ஆவது அகவை
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர்களின் நினைவோடு, யாழ் இணையம் தனது 27 ஆவது ஆண்டை நிறைவு செய்து இன்று (30.03.2026) 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சவால்களையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் கடந்து, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான குடிலாக யாழ் இணையம் மிளிர்ந்து வருகின்றது. எமது கடமையும் சமூகப் பொறுப்பும்ஒவ்வொரு ஆண்டும் நாம் வலியுறுத்துவது போலவே, கருத்தாளர்களாகிய உங்களிடம் மேலதிகமான சமூகப் பொறுப்பினையும் சகிப்புத்தன்மையையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக: தகவல் நம்பகத்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI): இன்று ஊடக பலம் கொண்ட பெரும் சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான மற்றும் உண்மையற்ற செய்திகள், பொதுமக்களால் உண்மையானவை என நம்ப வைக்கப்படுகின்றன. தாங்களே உலகின் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை இத்தகைய சக்திகள் கட்டமைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒருதலைப்பட்சமான தகவல்களையே ஆதாரமாக வைத்து இங்கும் கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனுடன், தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உண்மை போன்றே தோற்றமளிக்கும் காணொலிகள் (Deepfakes), குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்குகின்றன. எனவே, இத்தகைய திட்டமிட்ட பரப்புரைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் இங்கே ஆதாரமாகப் பதிவிடும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சரிபார்க்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். பண்பான விவாதம்: கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். தனிநபர் தாக்குதல்களையும், வீண் மனஸ்தாபங்களையும் தவிர்த்து, ஆரோக்கியமான கருத்தாடல் தளமாக யாழ் களம் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மத மற்றும் உணர்வுப்பூர்வமான மதிப்பளிப்பு: மற்றவர்களின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் எமது கருத்துப் பதிவுகள் அமைதல் வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளும் மனிதாபிமானமும்இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழும் போர்களும், அதனால் ஏற்படும் மனித அவலங்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஒட்டுமொத்த உலகத்தையுமே ஒரு பதற்றமான சூழலுக்குள் தள்ளியுள்ளன. இத்தகைய நெருக்கடி காலங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுமே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். போரினால் சிதைக்கப்பட்ட ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், போரின் வலியை நாம் நன்கு அறிவோம். எனவே, இந்த 28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் இவ்வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பொருளாதார மற்றும் அறப்பணிகளில் கைகோர்ப்போம். உலகெங்கும் அமைதி நிலவவும், அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கவும் யாழ் இணையம் தொடர்ந்து ஒரு ஆக்கபூர்வமான தளமாக விளங்கும். தமிழ்த் தேசியமும் எமது பயணமும்தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, எமது வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியில் யாழ் இணையம் என்றும் உறுதியாக இருக்கும். தமிழக உறவுகளை எமது பலமாகக் கருதி, கட்சிப் பாகுபாடின்றி நாம் என்றும் நேசிப்போம். அதேவேளை, எமது விடுதலைப் போராட்ட வரலாற்றினைத் திரிபுபடுத்தி, தமக்கான அரசியல் பலத்தைச் சேர்க்க முயலும் சுயநலக் கட்சிகளை நாம் வன்மையாக எதிர்ப்போம். அத்தகைய சக்திகளைச் சுட்டிக்காட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் யாழ் இணையம் தனது முழுமையான ஆதரவினை வழங்கும். ஈழத் தமிழர்களைத் தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டிய விழிப்புணர்வு எமக்குத் தேவையாய் உள்ளது. புதிய தொடக்கம்இந்த 28 ஆவது ஆண்டில், இன்னும் அதிகமான புதிய உறுப்பினர்களை உள்வாங்க விரும்புகின்றோம். யாழ் இணையத்தின் பழைய உறுப்பினர்கள், உங்கள் சுற்றத்தாருக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் கருத்தாளர்களையும் உருவாக்க முன்வருமாறு வேண்டுகின்றோம். தமது உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்து களத்தை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும், ஆலோசனைகளை வழங்கும் நல்உள்ளங்களுக்கும், சுயமாகப் படைப்புகளை உருவாக்கித் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மண்ணோடும் மக்களோடும் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய், ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி, யாழ் இணைய நிர்வாகம் 30 மார்ச் 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம் 29 Mar, 2026 | 09:58 PM வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. வலுசக்தி வளங்களை மிகவும் அவதானத்துடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய "எல்-நினோ" வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். இதற்கமைய, இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு அங்கமாக, "இலங்கையைக் காப்போம் - ஒன்றிணைவோம் - ஒளியேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. இதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான அதிக பயன்பாட்டு நேரத்தில் (Peak Hours) மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தல் ‘’இலங்கையைக் காப்போம் ‘’ திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. எனினும், நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த சிக்கனம் தேவை என்பதை இது வலியுறுத்துகிறது. வலுசக்திப் பயன்பாடு குறித்து மக்களிடையே ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தானாக முன்வந்து ஒத்துழைக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/242258
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில் 29 மார்ச் 2026 03:06 PM நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் https://jaffnazone.com/news/55916
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 147 இறுதி முடிவுரை: இலங்கை நாலாகமங்களின் முரண்பாடுகள் தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் ஆகிய நூல்கள் இலக்கிய ரீதியாகப் பெறுமதிமிக்கவை என்றாலும், அறிவியல் பூர்வமாக அவை 'மதச்சார்பு வரலாற்றுப் பதிவுகளாகவே' கருதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக எழுதப்பட்ட இந்நாலாமகம்கள், இலங்கையின் ஆதி குடிகளான இயக்கர்களையும் (வேடர்கள்), தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கடல்வழி வல்லமை மிக்க நாகர்களையும் மற்றும் ஆதித் தமிழர்களையும் திட்டமிட்டே வரலாற்றின் ஓரத்திற்குத் தள்ளின. பாளி நூல்கள் கட்டமைத்த காலவரிசைக்கு முன்னரே, தமிழர்கள் இலங்கையின் பிரிக்க முடியாத அங்கமாக வாழ்ந்தனர் என்பதை நவீன தொல்பொருள் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தின் 'நாகதீபம்' முதல் கல்யாணி (களனி) வரை பரவி வாழ்ந்த நாகர்கள், தமிழகத்தின் திராவிடப் பண்பாட்டுடன் மொழி ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருந்தனர். இதற்கான சான்றுகளாக உடுத்துறை தமிழ்-பிராமி 'நாகபூமி' காசு, அபய நாகன் போன்ற மெய்ப்பிக்கப்பட்ட அரசர்கள் மற்றும் மணிமேகலை காப்பியம் ஆகியவை திகழ்கின்றன. வெல்லாவெளி கல்வெட்டுகள் மற்றும் மாந்தை அகழ்வாராய்ச்சிகள், பாளி நூல்கள் எழுதப்படுவதற்கு முன்பே தமிழர்களும் நாகர்களும் இணைந்து ஒரு செழுமையான நாகரிகத்தைக் கட்டியெழுப்பியதை உறுதிப்படுத்துகின்றன. ஆதி இலங்கையில் புழங்கிய 'எளு' (Elu) மற்றும் தமிழ் வேர்ச்சொற்களுடன், பாளி மற்றும் சமஸ்கிருதம் கலந்த பின்னரே இன்றைய சிங்கள மொழியின் ஆரம்ப வடிவமே உருவானது என்பதையும் கவனிக்க. மிக முக்கியமாக, இந்நாலாமகம்கள் பல இடங்களில் புத்தரின் போதனைகளுக்கே முரணாக அமைந்துள்ளன. உயிர்க்கொல்லாமையை போதித்த புத்தரின் தர்மத்திற்கு மாறாக, 'தர்மத்திற்காகப் போர் புரியலாம்' என்றும், 'நம்பிக்கையற்றவர்களைக் கொல்வது பாவமல்ல' (ஒன்றரை மனிதர்கள் கோட்பாடு) என்றும் இவை சித்தரிக்கின்றன. புத்தரின் புனிதச் சின்னங்களை ஈட்டிகளில் ஏந்திப் போருக்குப் பயன்படுத்தியதாகக் கூறுவது புத்தரின் அமைதி வழிக்கு முற்றிலும் எதிரானது. இத்தகைய பதிவுகள் புத்தரின் உலகளாவிய தர்மத்தை ஒரு குறுகிய 'தேசியவாதக் கண்ணோட்டத்திற்கு' (Dhammadipa Nationalism) மாற்றின. எனவே, இந்த நூல்களை ஒரு முழுமையான வரலாற்று உண்மையாகக் கொள்ளாமல், தொல்பொருள் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே இலங்கையின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க உதவும்." Final Conclusion: The Dichotomy of the Sri Lankan Chronicles "While the Deepavamsa, Mahavamsa, and Culavamsa are invaluable literary monuments, a scientific audit reveals them to be theological narratives rather than objective histories. Written by Buddhist monks to legitimize a specific religious identity, these chronicles often marginalized or 'supernaturalized' the indigenous Yakkhas (Veddas), the seafaring Nagas—a proud clan who spoke Tamil as their mother tongue—and the Early Tamils were systematically marginalized in these historical records. Modern archaeological data confirms that long before the timelines constructed by Pali texts, Tamils lived as an inseparable part of the island’s fabric. The Nagas, who thrived from Nagamadeepa (Jaffna) to Kalyani (Kelaniya), were linguistically and culturally bound to the Dravidian heritage of South India. Concrete evidence for this includes the 'Nākapūmi' Tamil-Brahmi coin found in Uduthurai, historically proven kings like Abhaya Naga, and the descriptions in the Tamil epic Manimekalai. The Vellaveli inscriptions and the Mantai excavations confirm that Tamils and Nagas built a sophisticated civilization together long before the Pali chronicles were written. It is also important to note that the early form of the modern Sinhalese language itself emerged only after Pali and Sanskrit merged with the indigenous 'Elu' (Hela) and Tamil root words already prevalent in ancient Lanka. Crucially, these chronicles contain incidents that directly contradict the Buddha’s core teachings. While the Buddha preached absolute non-violence (Ahimsa), the Mahavamsa justifies the slaughter of thousands through the 'one-and-a-half people' doctrine, claiming the killing of 'unbelievers' was not a sin. Furthermore, depicting relics of the Buddha—a symbol of peace—being carried in war-spears violates the ascetic and pacifist nature of the Buddha's life. These narratives replaced universal Dhamma with a localized 'Dhammadipa' nationalism to serve political-monastic alliances. Therefore, these chronicles should be viewed as subjective religious interpretations that must be cross-referenced with archaeological facts to restore the true, shared, and pluralistic history of the island." மேற்கோள் அல்லது சான்றாதாரம் / REFERENCES 1. Dipavamsa: English translation by Hermann Oldenberg, 1879 2. Mahavamsa or the Great Chronicle of Ceylon, Translation by Wilhelm Geiger, Ph.D., 1912 and the 5th print 2018 3. The Rajavaliya or A Historical Narrative of Sinhalese Kings from Vijaya to Wimala Dharma Suriya 11: English Translation by B. Gunasegara, 1900 4. Asoka and the Decline of the Mauryas by Romilla Tharpar, Third Edition 5. The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003 6. ASHOKA, The Search for India’s Lost Emperor by Charles Allen, 2011 7. Tamils in Sri Lanka; A Comprehensive History (C. 300 B.C. to 2000 A.D.) by Dr. Murugar Gunasingham, 2008, ISBN: 978-0-646-49455-5 8. History of the Tamils, From the Earliest Times to 600 A.D. by P. T. Srinivasa Iyengar, AES Reprint 2012 (First Published 1929) 9. Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums 10. The article “Worship of Muruga or Skanda (the Katragam God)” By Late Sir Ponnampalam Arunasalam KT, M. A. CANTAB , Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, 1924, Volume XXIX, No. 77 11. The Dipavamsa and Mahavamsa and their Historical Development in Ceylon, in German by Wilhelm Geiger in 1905, and the English Translation by Ethel M. Coomaraswamy, in 1908 12. The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26 13. Date of Death of Buddha, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 14. The Day on Which Buddha Died, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914 16. Bones, Stones, And Buddhist Monks by Gregory Schopen 17. Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994 18. Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998 19. Ashoka in Ancient India by Nayanjot Lahiri 20. S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985 21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919 22. On the Chronicles of Ceylon By B. C. Law, original Calcuuta publication 1947, later reprinted with minor adjustments in Sri Lanka in 2017 23. The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017 24. The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006 25. Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake 26. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s) 27. Buddha and His Dhamma by Dr. B. R. Ambedkar, freely available on the net in memory of the great scholar, intellectual giant and a humanitarian 28. The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939 29. Illankayir(t) Tolliyalaivukalum Diradidak Kalaccaramum (In Tamil) by Thanapakkiyam Kunapalasingam, 2001, Mannimeghala Publication. (Archaeological Researches in Ceylon and the Dravidian Cultures) 30. The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English 31. The Journey of Man – A Genetic Odessy by Spencer Wells, 2001 32. Deep Ancestry by Spencer Wells, ISBN:0-7922-625-8 33. Peoples and Cultures of Early Sri Lanka by Dr. Siva Thiyagarajah, 2011, ISBN:1 85201 025 8 34. Peopling of Sri Lanka by Subramanian Visakan, 2010, ISBN: 1 85201 022 3 35. Mapping of Human History by Steve Olson, 2002 36. Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 37. Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909 38. Mahavamsa, translated into Tamil by ESPO, 2009, ESPO is a famous writer when I was young, he has some uncharitable comments about the Tamils of Tamil Nadu and Ceylon, but they are under legal and security constraints which is better not discussed 39. The History of Ceylon (Sri Lanka) Through Mahavamsa (in Tamil) by Dr. Kandiah Kunarasa B. A. Hons (Cey), M. A., Ph.D., SLAS, Former Registar – University of Jaffna, Divisional Secretary – Tellipalai 40. Mahavamsam, Ancient History of the Island of Ceylon (Mahavamsa translation into Tamil) by S. Sankaran, 1962, Mr. S. Sankaran must be from Tamil Nadu and the translation appears as though it is the original in easy style, this must be the first translation of Mahavamsa in Tamil 41. The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends 42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833 43. Tamils and Their Religions by Dr. Siva Thiagarajah B. Sc., M. B. B. S., Ph. D. 44. King Asoka and Buddhism, Edited by Anuradha Senivaratna, 1994, ISBN 955-24-0065-2 45. Asoka by Radhakumud Mookerji, 1928 46. Buddhist India by T. W. Rhys Davids 47. Ancient Coins and Measures of Ceylon by T. W. Rhys Davids நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] முற்றிற்று / Ended துளி/DROP: 2122 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 147 https://www.facebook.com/groups/978753388866632/posts/34586384894343383/?- சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்தக் கிளர்ச்சி பெரும் முரசொலிகளுடனோ, கொடியேற்றத்துடனோ தொடங்கவில்லை. அது ஒரு சிறிய 'இல்லை' என்ற சொல்லில் இருந்து முளைத்தது. சில கிராமங்கள் வரியாகத் தானியங்களைக் கொடுக்க மறுத்தன; கடலோர மக்கள் தங்களின் உழைப்பை அரசுக் களஞ்சியத்திற்கு வழங்க மறுத்தனர். காடுகளில் ஒதுங்கியிருந்தவர்கள் மெல்ல ஊருக்குள் திரும்பினர். அவர்கள் சண்டையிட வரவில்லை, என்ன நடக்கிறது என்று அமைதியாகப் பார்க்க வந்தனர். பழங்குடி மக்கள் தங்களைப் புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் அதிகாரத்திற்குப் பணியவில்லை. குடியேற்ற அதிகாரிகள் இதை ‘குழப்பம்’ என்றனர். அரசவையினர் ‘துரோகம்’ என்றனர். மடாலயங்களில் இருந்தவர்கள் இதனை ‘தவறான கலகம்’ எனத் தூற்றினர். அனுராதபுரத்திற்குத் தெற்கே, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் (வாவி) அருகே முதல் மோதல் வெடித்தது. வரி வசூலிக்க வந்த அரசுப் படையினர், வலுக்கட்டாயமாகத் தானியங்களைப் பறிக்க முயன்றனர். பல ஆண்டுகளாக மழையே பார்த்திராத அந்த வறண்ட மண், அன்று மனித இரத்தத்தைப் பார்த்தது. சிவா அந்தப் போர்க்களத்தில் இருந்தான். அவன் வெற்றியை எதிர்பார்த்து கிளர்ச்சியில் இறங்கவில்லை; மாறாக, தன் மௌனம் அதிகாரத்தின் அநீதிக்குச் சம்மதமாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுதம் ஏந்தினான். சண்டை முடிந்தபோது பல உடல்கள் மண்ணில் கிடந்தன. அவர்களின் பெயர்கள் எங்கும் குறிக்கப்படவில்லை. அடுத்த நாள் காலையில் பிக்குகள் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் செய்ய வரவில்லை; மாறாக, நடந்தவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பதிவு செய்ய வந்தனர். ஓலைச்சுவடிகள் விரிக்கப்பட்டன. வார்த்தைகள் மிகவும் சாதுர்யமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன: தங்கள் நிலத்தைக் காக்கப் போராடியவர்கள் ‘கொள்ளையர்கள்’ என அழைக்கப்பட்டனர். அவர்களின் எதிர்ப்பு ‘சங்கத்திற்கு எதிரான வன்முறை’ என்று திரிக்கப்பட்டது. வரலாறு பல ஆண்டுகள் கழித்து எழுதப்படவில்லை; அது நடந்த அன்றே அதிகார வர்க்கத்தால் மாற்றியமைக்கப்பட்டது. கலினி இந்தச் செய்திகளைப் பிறர் சொல்லிக் கேட்கவில்லை; அவள் அனைத்தையும் நேரில் கண்ட சாட்சி. அவளது கணவன் அப்போது ஒரு மடாலயத்தில் வரலாற்றுப் பதிவேடுகளை எழுதும் பணியில் உதவியாளராக இருந்தான். ஒவ்வொரு மாலையும் அவன் அன்றைய பதிவுகளைச் சொல்லச் சொல்ல, கலினி மை தயாரித்துக் கொடுத்தாள்; ஓலைச்சுவடிகளை உலர்த்தினாள். ஆனால், அவள் கவனித்துக் கொண்டே இருந்தாள். பழைய ‘ஈழத் தமிழ்’ பெயர்களுடன் இருந்த கிராமங்களின் பெயர்கள் மெல்ல மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிக் கலப்புடன் புதிய பெயர்களாக உருமாறிக்கொண்டிருந்தன. ஒரு இனத்தின் அடையாளமும், நிலத்தின் வரலாறும் எழுத்துக்களாலேயே அழிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள். [வரலாற்றுத் தரவுகள் (Historical Context): காலம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை (பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிய காலம்). மொழி மாற்றம்: ஆதி இலங்கையில் புழங்கிய 'எளு' (Elu) அல்லது 'ஹெல' (Hela) என்றழைக்கப்படும் பிராகிருத மொழியுடன், பௌத்த வருகைக்குப் பிறகு பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்கத் தொடங்கின. இதன் விளைவாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் இன்றைய சிங்கள மொழியின் ஆரம்பக்கால வடிவம் (Old Sinhalese) உருவானது. அரசியல்: அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட மகா வம்சம் போன்ற வரலாற்றுப் பதிவுகள், பெரும்பாலும் மதச் சார்புடனும் அரச ஆதரவுடனும் எழுதப்பட்டவை. கிளர்ச்சி: இக்காலகட்டத்தில் (கி.மு. 300 - 100), வரிப்பளு மற்றும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பூர்வகுடிகளான இயக்கர் (வேடர்கள்) மற்றும் ஆதித் தமிழர்கள் இணைந்து செயல்பட்டதற்கான சான்றுகள் வாய்மொழி வரலாறுகளிலும் மட்டக்களப்பு 'வெல்லாவெளி' (Vellaveli) போன்ற ஆதிப் பிராமி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 'இயக்க' குலத் தலைவர்களும் 'தமெட' (Dameda/Tamil) வணிகர்களும் சமூக மற்றும் நில மேலாண்மையில் ஒருமித்துச் செயல்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.] ஒரு பெயர் என்பது வெறும் சொல் அல்ல; அது அந்த நிலத்தின் ஆதி நினைவு. அந்த மக்களின் மாறாத மரபு. ஒரு இடத்தின் பெயரை மாற்றினால், அந்த இடத்தின் வரலாறே சிதைக்கப்பட்டுவிடும் என்பதை கலினி உணர்ந்தாள். மடாலயத்தின் ஓலைச்சுவடிகளில், பழங்காலச் சிறு தெய்வக் கோயில்கள் “கைவிடப்பட்ட இடங்கள்” என்று குறிக்கப்பட்டன. அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் பதிவிடப்படவில்லை. “கைவிடப்பட்டது” என்ற ஒரு சொல், அந்த நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்ற பிம்பத்தை உருவாக்கியது. இதன் மூலம் அந்த இடங்களை அரசு எளிதாகக் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் “குழப்பங்கள்” எனத் திரிக்கப்பட்டன. புதிய ஆட்சி மட்டுமே “ஒழுங்கை நிலைநாட்டியதாக” எழுதப்பட்டது. தங்கள் மண்ணிற்காக நின்ற மக்கள், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். ஒரு இரவு, கலினி தன் கணவனிடம் மெல்லிய குரலில் கேட்டாள்: “அங்கே காலம் காலமாக வாழ்ந்த அந்த மக்களைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்?” அவன் தயக்கத்துடன் சொன்னான்: “அவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்... ‘தடைகள்’ (Obstacles) என்று.” “தடைகள்” — அந்த ஒரு சொல் கலினியின் இதயத்தை ஈட்டியாய் ஊடுருவியது. அவர்கள் பெயர்களோடும், கதைகளோடும் பதியப்படவில்லை; அவர்கள் வெறும் தடைகளாக மட்டுமே சுருக்கப்பட்டனர். ஒரு சமூகத்தைத் ‘தடை’ என்று முத்திரை குத்தினால், அவர்களை அந்த நிலத்திலிருந்து அகற்றுவது ‘தார்மீகமான செயல்’ போலத் தோன்றும். அவர்களின் வலியும் துயரமும் வரலாற்றின் பக்கங்களில் தேவையற்றதாகிவிடும். அப்போதுதான் கலினிக்கு ஒரு உண்மை புரிந்தது — இது வெறும் நிலத்துக்கான போர் அல்ல; இது நினைவுகளுக்கான போர். இது பெயர்களுக்கான போர். இது சொற்களால் கட்டமைக்கப்படும் அதிகாரம். அவளது அமைதி இனி கீழ்ப்படிதல் அல்ல; அது உள்ளுக்குள் கனலும் எதிர்ப்பு. அதே நேரத்தில், வெளியே ஒரு மௌனமான வெளியேற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிழைப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். மன்னார் (Mantai/ Mathoddam) கடற்கரையிலிருந்து அந்திப் பொழுதில் படகுகள் புறப்பட்டன. அந்த மக்கள் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தங்கள் நிலத்தின் ஆதிப் பாடல்களையும், குலதெய்வச் சிலைகளையும் மட்டுமே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கடலில் பயணிக்கத் தொடங்கினர். வரலாற்றுப் பின்னணி (Facts & Context): இடப்பெயர் மாற்றம் (Toponymy): இலங்கையின் ஆதிப் பெயர்களான 'எளு' (Elu) மற்றும் தமிழ் பெயர்கள் காலப்போக்கில் பாலி மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட சிங்களப் பெயர்களாக மருவின. உதாரணமாக, 'மணிநாகதீபம்' மற்றும் 'மாதோட்டம்' போன்ற பெயர்கள் பிற்காலப் பதிவுகளில் மாற்றமடைந்ததை மொழியியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாந்தை (Mannar): இது கி.மு. காலத்திலிருந்தே இலங்கையின் முதன்மையான சர்வதேசத் துறைமுகமாகவும், தென்னிந்தியாவையும் மேலைநாடுகளையும் இணைக்கும் கடல்வழி வணிக மையமாகவும் திகழ்ந்தது. இது 'மாதோட்டம்' எனத் தமிழ் இலக்கியங்களிலும் குறிக்கப்பபட்டுள்ளது. மதமாற்றமும் வரலாற்றுப் பதிவும்: 'மகாவம்சம்' போன்ற பௌத்த வரலாற்று நூல்கள், பௌத்தத்தைப் பரப்ப வந்தவர்களை நாகரிகத்தை நிலைநாட்டியவர்களாகவும், அங்கிருந்த பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களை "இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களாக" அல்லது "தடைகளாகவும்" சித்தரித்தன. இது ஒரு மதச்சார்பு வரலாற்றுப் பார்வையாகவே (Ideological Narrative) இன்று கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தின் தாக்கம்: பௌத்த மதப் பரவலோடு வந்த பாளி மற்றும் சமஸ்கிருத சொற்கள், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 'எளு' மற்றும் தமிழ் மொழிகளுடன் கலந்து, புதிய அதிகாரப்பூர்வ மொழிக் கட்டமைப்பிற்கு (Early Sinhala) வித்திட்டன. இது அரச நிர்வாகத்திலும் மதச் சடங்குகளிலும் மேலாதிக்கம் செலுத்தியது. அவர்கள் தங்கள் நிலத்தை இழந்திருக்கலாம், ஆனால் தங்கள் மொழியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. இடம்பெயர்ந்தவர்களில் சிலர் புத்தளம் (Puttalam) பகுதிக்குச் சென்று புதிய வாழ்வைத் தொடங்கினர். இன்னும் சிலர், ஆதித் துறைமுகமான மாந்தையில் இருந்து கடலைக் கடந்து தமிழகத்தின் பாண்டிய நாட்டு கடற்கரையை அடைந்தனர். அங்கு அவர்கள் அந்நியர்களாகக் கருதப்படவில்லை; ஒரே மொழி, ஒரே பண்பாடு மற்றும் இரத்த உறவு அவர்களைத் தாய்மையுடன் வரவேற்றது. புலம்பெயர்ந்த அந்த மக்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தங்களின் பழைய ஊர் பெயர்களைத் திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுத்தனர். "பெயர்கள் அழிந்தால், நம் அடையாளமும் வரலாறும் அழிந்துவிடும்" என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம், "ஒருகாலத்தில் நாம் அந்த நிலத்தில் வாழ்ந்தோம்..." என்று கதைகளைச் சொல்லத் தொடங்கினர். அது வெறும் கதையல்ல; அது ஒரு சமூகத்தின் இருப்பிற்கான சாட்சியம். இதற்கிடையில், வடக்கில் இருந்த சிவா இந்தச் செய்திகளைக் கேட்டான். வன்முறையும் திரிபுகளும் நிறைந்த அந்த இடத்தை விட்டு, அமைதி நிலவும் இடத்திற்குச் செல்ல அவன் விரும்பினான். அவன் கலினியை ஒரு மடாலயச் சுவருக்கு அருகே ரகசியமாகச் சந்தித்தான். "என்னுடன் வந்துவிடு, இங்கே இனி உண்மைகளுக்கு இடமிருக்காது" என்று அவன் அழைத்தான். ஆனால் கலினி மறுத்துவிட்டாள். அவள் சொன்னாள்: “உண்மையையும் நினைவுகளையும் சுமந்திருப்பவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டால், இங்கே அதிகாரத்தால் எழுதப்படும் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்ல யார் இருப்பார்கள்?” உண்மையைக் காக்க வரலாற்றில் இரண்டு வழிகள் எப்போதும் உண்டு. ஒன்று, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று அந்த உண்மையைப் பாதுகாப்பது. மற்றொன்று, ஆபத்தான இடத்திலேயே நின்று அந்த உண்மை சிதைக்கப்படுவதை எதிர்த்துச் சாட்சியாக வாழ்வது. கலினி அந்த இரண்டாவது சவாலான வழியைத் தேர்ந்தெடுத்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் எதையும் தந்து கொள்ளவில்லை. அவர்களின் பாதைகள் வேறானவை. சில காதல்கள் கூடி வாழ்வதன் மூலம் அர்த்தப்படும்; சில காதல்கள் பிரிந்திருந்தாலும் உயர்ந்த லட்சியத்திற்காக உயிர்வாழும். அன்று இரவு, அனுராதபுரத்தின் அரசவை வெளிச்சத்தில் அதிகாரப்பூர்வமான 'புதிய வரலாறு' ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது. அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஒரு அகதிக் குடியிருப்பில் ஏதோ ஒரு குடிசையில் முதல் விளக்கு ஏற்றப்பட்டது. ஒரு பக்கம் எழுதப்பட்ட வரலாறு (Written History); மற்றொரு பக்கம் சொல்லப்பட்ட நினைவுகள் (Oral Tradition). கலினியும் சிவாவும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், தாங்கள் இருவரும் அந்த நிலத்தின் 'உண்மையைக்' காப்பதாகவே நம்பினர். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): இலங்கை - தமிழக உறவு: கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்தின் பாண்டிய, சோழ அரசுகளுக்கும் இலங்கையின் பூர்வகுடிகளுக்கும் இடையே நெருங்கிய வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தன. மன்னார் வளைகுடா வெறும் கடல் அல்ல, அது இரு நிலப்பரப்புகளையும் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலமாகச் செயல்பட்டது. வாய்மொழி வரலாறு (Oral Tradition): 'மகாவம்சம்' போன்ற எழுதப்பட்ட அரச வரலாறுகள் ஒருதலைப்பட்சமான (Viharist perspective) மதக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தபோது, மக்கள் தங்கள் உண்மையான வரலாற்றை தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் 'கூத்து' வழியாகத் தலைமுறைகளைக் கடந்து பாதுகாத்தனர். புத்தளம் மற்றும் மன்னார்: இவை கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்துடனான வர்த்தகப் போக்குவரத்துகளுக்குப் பிரதான வணிக மையங்களாக (Trading Ports) விளங்கின. இவை வெறும் தங்குமிடங்கள் மட்டுமல்ல, தென்னிந்தியப் பண்பாடு இலங்கைக்குள் நுழைந்த முக்கிய வாயில்களாகவும் இருந்தன. மொழிப் பரிணாமம்: இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 'தமிழ்-பிராமி' (Tamil-Brahmi) கல்வெட்டுகள், அக்காலத் தமிழ் மற்றும் ஆரம்பக்கால சிங்கள மொழி ஆகிய இரண்டிற்கும் பொதுவான எழுத்து ஊடகமாக இருந்தன. இது இரு மொழிகளுக்கும் இடையிலான ஆதித் தொடர்பையும், சொற்கள் பரிமாறப்பட்ட விதத்தையும் உறுதிப்படுத்தும் வலுவான தொல்பொருள் சான்றாகும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 6 தொடரும் துளி/DROP: 2121 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/34586294014352471/? - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.