stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விளக்கேற்றி வைக்கிறேன்.. படம்: சூதாட்டம்(1971) பாடியோர்: சுசீலா விளக்கேற்றி வைக்கிறேன்.. படம்: சூதாட்டம்(1971) பாடியோர்: சுசீலா
-
பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு
பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு 23 Dec, 2025 | 06:39 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025 கல்வி ஆண்டின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நிறைவு செய்யும் தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை (23) புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தன. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்துக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 ஜனவரி 5 திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை 2025.12.09 கடிதத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு 2026 ஆண்டுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படுவதுடன், பரீட்சை திணைக்களத்தால் 2026 சுற்று நிரூபத்துக்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234232
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
ஏன் கொழும்பில் போய் தேடுவான்? ஐங்கரநேசனின் "தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்" பரிஸ்ரர் பட்டம் பெற்ற கஜேந்திரகுமார் பா.உ வின் கூட்டில் தான் இருக்கிறது. புலவரும், வாத்தியாரும் குத்தி முறிந்து இங்கே செய்ய முயல்வது "Don't Look Up" என்ற திரைப் படத்தில் சித்திரித்த மடை மாற்றும் வேலையை மட்டும் தான்😎! இவர்களுக்கு பழைய பூங்காவின் பாதுகாப்பிலும் அக்கறை இல்லை, சூழல் பாதுகாப்பிலும் துளி ஆர்வம் இல்லை!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பள்ளி செல்லும் குழந்தைகளான காலை உணவு..- நகைச்சுவைக் காட்சிகள்
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் சென்றவரின் தருணங்கள்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடகாலமே .. தேங்காய் மட்டைக்கு வந்த வாழ்வு- Today
- மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும்
மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minute கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது. மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன முற்றாக நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம். 1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றின் முழுமையான, மீளமுடியாத நிறுத்தம். மரணித்த நேரம் என்பது உயிர்ப்பித்தல் சாத்தியமற்றதாக மாறும் புள்ளியைக் குறிக்கிறது. 2. மூளை மரணம் அல்லது மூளைச்சாவு (Brain Death) : பல்வேறு காரணங்களினால் மூளை அதனுடன் இணைந்த மூளைத்தண்டு இறத்தல். இதயம் இயந்திரங்களால் தொடர்ந்து துடித்தாலும், மூளைத் தண்டு உட்பட அனைத்து மூளை செயல்பாடுகளின் நிரந்தர இழப்பு மீளமுடியாததாகக் கருதப்படுகிறது. 3. கல/மூலக்கூற்று மரணம்( Cellular/Molecular Death): ஆக்ஸிஜன் குறைந்து உடலியல் இறப்புக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்படும் தனிப்பட்ட செல்கள் மற்றும் திசுக்களின் மரணம். இரத்த ஓட்டம் முற்றாக தடைப்படும் இடத்து அதாவது ஓட்ஸிசன் இல்லாதவிடத்து மனித மூளையின் கலங்கள் 3 தொடக்கம் 7 நிமிடங்கள் முற்றாக இறந்து விடும், இருதய கலங்கள் 3 தொடக்கம் 5 நிமிடங்களில் இறந்துவிடும் அவ்வாறே தசைகளில் உள்ள கலங்கள் பல மணித்தியாலங்களில் இறக்கும். பல சந்தர்ப்பங்களில் உடற்கூராய்வு பரிசோதனைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் என்னிடம் வினவும் முக்கிய கேள்வி யாதெனில் தூக்கு மாட்டி 5 நிமிடத்தில் நாம் தூக்கு கயிற்றினை வெட்டி அகற்றி விட்டொம், நீரில் வீழ்ந்து சில நிமிடங்களில் தூக்கி விட்டொம் ஏன் இறந்து விட்டார் என்பதே ஆகும். அதற்பொழுது உங்களுக்கு விளங்கும் உடலில் முக்கிய அவயவங்களான மூளை மற்றும் இருதயம் போன்றவற்கு 5 நிமிடங்கள் இரத்தம் அல்லது ஓட்ஸிசன் முற்றாக தடைப்பட்டால் இறப்பு நிகழும் என்பது. மூளைச்சாவு, இச்செயற்பாட்டின்பொழுது சில சந்தர்ப்பத்தில் மூளையின் தண்டுவடம் (brainstem) உயிர்ப்பான நிலையில் இருக்கும் அதன் காரணமாக மூளை தண்டு வடத்தில் காணப்படும் சுவாச, இருதயத்தினை கட்டுப்படுத்தும் பகுதிகள் வேலை செய்யும் இதன் காரணமாக குறித்த நபரின் இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசத்தினை மேற்கொண்டு கொண்டிருக்கும். ஆனால் மூளை மீள இயங்க முடியாதவகையில் இறந்திருக்கும். சில சந்தர்ப்பத்தில் மூளை தண்டுவடம் இறந்தால் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகளை நாம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம் சட்ட ரீதியாக (Transplantation Of Human Tissues Act (No. 48 of 1987)ஒருவரின் மூளை இறந்து விட்டால் அவர் சாவடைந்தவராகவே கருதப்படுவார். எனவே தான் மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் போன்ற அவயவங்கள் பெறப்பட்டு மற்றவர்களுக்கு மாற்றீடு செய்யப்படுகின்றன. எனவே மேற்படி செயற்பாட்டினை நாம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து பல்வேறுபட்ட உடல் அவயவங்கள் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்படும். தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் இவ்வாறு உடல் உறுப்புக்களை தானம் செய்யவதில் முன்னிலை வகிக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கண் (விழிவெண்படலம்) வழங்குவதில் முன்னிலை நாடாக திகழ்கின்றது. குறிப்பாக பௌத்த மதம் இவ்வாறான உடல் உறுப்பு தானங்களை ஊக்குவிக்கின்றது. சைவ மற்றும் ஏனைய மதங்களில் அவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லை. இதன் காரணமாக மேற்குறித்த மதத்தினரின் மூலம் உடல் உறுப்பு தானங்கள் மற்றும் இரத்த தானம் உட்பட குறைவாகவே நடைபெறுகின்றது. சைவசித்தாந்த கோட்பாடுகளும் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானமும் சைவ சித்தாந்த தத்துவத்தில் முக்கிய இடம் பெறுவது முப்பொருள்கள் ஆகும். அவையாவன பதி, பசு, பாசம் என்பனவே ஆகும். அந்த வகையில் பதியை அடுத்துள்ள நிலையில் உள்ளது பசுவாகும். பசுவானது ஆன்மா, ஆத்மா, உயிர், அனேகன், ஜீவன், ஜீவாத்மா மற்றும் சதசத்து என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உடலை இயக்கக்கூடிய கண்ணிற்குத்தெரியாதொரு சூக்குமப்பொருளே ஆன்மாவாகும். சித்தாந்திகளிக் கருத்துப்படி உடலை இயக்கும் சக்தியே ஆன்மாவாகும். சைவ சமயத்தின்படி, உடல் என்பது நிலையற்ற, அழிவுக்குட்பட்ட பொருள், அது ஆன்மாவைத் தாங்கும் ஒரு வாகனம். மாறாக, ஆன்மா என்பது நிலையான, அழிவற்ற, அழிந்துபோகாத ஒரு சாராம்சம். இது உடலை இயக்கும் சக்தி, அறிவின் இருப்பிடம், மற்றும் வாழ்வின் ஆதாரமாகும். எனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து சிறுநீரகம், ஈரல் … போன்ற உடல் அங்கங்களை அகற்றுவதினால் அவரின் ஆன்மாவினை நாம் அழிக்க முடியாது மாறாக உடல் அவயவங்களை அதாவது உடலை இயக்கும் சூக்கும சக்தியான ஆன்மாவினை நாம் வேறு உடலுக்கு மாற்றுவதன் மூலம் குறித்த நபரினை சில காலம் பூமியில் வாழ வழிசெய்யலாம் அதாவது இறந்தவரின் ஆத்மாவினை இன்னொருவரின் உடலில் வாழ வழிசெய்யலாம். உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வாமாக சிந்திப்போம். நன்றி https://tinyurl.com/c82yh7rb- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
தொல்லை இல்லை இரண்டு ஊர்லையும் ஓட்டலாம்..- ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
எங்களுக்கு பார்க்க அவருக்கு ஏதோ மண்டை பிரச்சனை போல உள்ளது. ஆனால், அவர் தெரிந்துகொண்டே பல விடயங்களை செய்கின்றார் என நண்பர் ஒருவர் கூறினார். முக்கியமாக சனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கருத்துக்களை இடக்கு முடக்காக சொல்கின்றாராம். இவர் யூரியூப்பில் காணொளி காண்பித்தால் அதை விரும்புவதற்கும், பாராட்டுவதற்கும் பலர் உள்ளார்கள். அர்ச்சுனாவை சுற்றியுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அர்ச்சுனா அளவுக்கு பொது அறிவு, சோசல் மீடியாவில் புகுந்து விளையாடக்கூடிய அறிவு, பரீட்சயம் இல்லாமையால் மற்றவர்களை முக்கியமாக இதர தமிழ் அரசியல்வாதிகளை அர்ச்சுனாவால் நல்லாய் வறுத்து எடுக்க முடிகின்றது. நேற்று ஒரு நண்பனுடன் நாட்டு விடயங்களை பற்றி கதைத்தபோது அர்ச்சுனா பற்றி குறிப்பிட்டு அவருடன் அழைப்பு எடுத்து கதைக்கலாமே என்று பகிடியாக சொன்னேன். ஐயையோ இவனுடன் கதைக்கபோனால் அவன் எனது போன் நம்பரை எடுத்து எல்லாரும் பார்க்கும்படி யூரியூப்பில் போட்டு விடுவான் என நண்பன் சொன்னான்.- புது வருட சிரிப்புகள்.
- இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் - இலங்கை வெளிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு! 23 Dec, 2025 | 04:19 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் செவ்வாய்க்கிழமை (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, 'திட்வா' சூறாவளியால் இலங்கை பாதிப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், 'சாகர் பந்து' நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234210- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன். நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன். இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம். இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது. ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது. சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம். சுமன் இதையாவது செய்தார்…. கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே? ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ட்ரம்பின் முடிவுகளால் பிளவடைய போகும் இலங்கை - திணறும் இந்தியா!
தமிழ் வின் இந்த ஆண்டின் சிறுவர் நகைச்சுவை இலக்கிய விருதை தட்டி செல்கிறது😂- இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்
Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது. அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர். அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது. அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் | Virakesari.lk- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்களுக்காகத்தான் இந்த ஒரு வசனத்தையும் அதில் எழுதியிருந்தேன் 😊- யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை!
Published By: Digital Desk 1 23 Dec, 2025 | 11:32 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளைப் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது. இந்தத்தடை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்படும் எனவும் பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது. உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளுக்கு பதிலாக வாழை இலைகள், தாமரை இலைகள், தேக்கு இலைகள் போன்ற இயற்கைப் பொருட்களையும், உணவுப் பொதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அலுமினியத் தகடு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது, நகராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் வணிக உரிமை பத்திரங்கள் இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை! | Virakesari.lk- 12 இந்திய மீனவர்கள் கைது
23 Dec, 2025 | 12:50 PM சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர். "தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது என்றும், படகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத நிலையில் டோக்கன் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன. 12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) என்பவர்கள் அடங்கியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து விடுவிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. 12 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பார்த்து... மொள்ளமாக..அடியுங்கோ! "மயிலிறகு" வேணுமென்டால் சொல்லுங்கோ, யால சரணாலயத்தில் என் நண்பர் தான் மிருக வைத்தியராக இருக்கிறார். எடுப்பிச்சுத் தரலாம்😎!- கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு
23 Dec, 2025 | 03:54 PM முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கூறுகையில், கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள். அந்த வகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர். எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது. இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன. ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும். இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன். அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர். இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஊழலை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறக்கூடாது. கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு | Virakesari.lk- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்கள் இருவரையும் போலவே "ரூம் போட்டு" யோசித்திருக்கிறார் போல சுமந்திரன்😂. அதனால் தான் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று நீதி மன்றங்களினாலும் மாற்றி எழுதப் பட முடியாத மாவட்ட நீதிமன்றில் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்!- “பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம்
23 Dec, 2025 | 04:53 PM ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் விசேட மீன்வகையான சூரை மீன் (tuna) இனத்திற்குரிய மீன்களைப் பிடிப்பதற்காக பலநாள் கடற்கலன் உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான இரையாக ஊசிக்கணவாய் மற்றும் பாலை மீன், சூடை, பறக்கும் மீன் போன்ற சிறிய மீனினங்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். மீன் வளங்களை பேண்தகு வகையில் நுகர்கின்ற முறையாக ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் பிடிக்கப்படுகின்ற மீன்கள் உயர்ந்த தரத்துடன் கூடியதாக அமைவதால், அதற்காக சர்வதேச சந்தையில் அதிக விலை உள்ளது. எமது நாட்டில் 2,200 பலநாள் கடற்கலன்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துவதுடன், அதற்காக வருடாந்தம் 8,000 மெற்றிக்தொன் இரை மீன்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், குறித்த அளவில் 4,000 மெற்றிக்தொன் மாத்திரமே உள்நாட்டில் விநியோகிக்கக் கூடியாதாகவுள்ளது. அதனால், தனியார் துறையின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து வரும் காலங்களில் இரைக்காக பாலை மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உள்நாட்டு உற்பத்தி பயன்பாட்டுக்கு வரும் வரைக்கும், பாலை மீன்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, பாலை மீன்கள் இறக்குமதி செய்வதற்கான புதிய இயைபு முறைக் குறியீட்டை (u;S Code) அறிமுகப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட மீன்பிடிச் சங்கங்கள் மூலம் தேவையான பாலை மீன்களை இறக்குமதி செய்வதற்கும், தற்போது நடைமுறையிலுள்ள இறக்குமதி வரி முறைமைக்குப் பதிலாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் பாலை மீன்களுக்கு 180/- ரூபா விசேட பண்ட வரியை அறிமுகப்படுத்தி, குறித்த வரியில் 130/- ரூபாவை பாலைமீன்களை இறக்குமதி செய்கின்ற மீன்பிடிச் சங்கங்களுக்கு வரிச்சலுகையாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. “பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.