stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தின் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! Jan 28, 2026 - 02:31 PM யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியில் வசிக்கும் வைத்தியர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், யாழ்ப்பாணப் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதன் காரணமாக அப்பகுதியில் காற்று மாசடைவு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து காற்று மூலமாக அடித்து வரப்படும் கழிவுகள் காரணமாகவும் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவின் தன்மையைக் காட்டும் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி, இந்தக் காற்று மாசடைவு காரணமாக நோய் நிலைமைகள் தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் உத்தரவிட்டது. இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள யாழ்ப்பாண மாநகர சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து ஏன் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறான பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இவ்வாறான விடயங்களை வழக்குகள் மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkxsptxy04j8o29n1phy2xpz
-
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 28 Jan, 2026 | 03:24 PM உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்கள் பாடசாலை பாடத்திட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், அவை பிள்ளைகளின் நடத்தையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற "உணவுத் துறையில் சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் (2024-2027)" என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் 'குளோபல் கேட்வே' (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்: கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது 'சுழற்சி பொருளாதாரம்' (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும். இன்று நாம் 'Circular Economy' என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார். இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். 'எதனையும் வீணாக்காதிருத்தல்' என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது. இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும். சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸே (Dr. Johann Hesse), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் கார்மென் மொரேனோ (H. E. Carmen Moreno), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237251
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உயர் பதவிகளில் அமர்வது இன்னும் உங்கள் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரிவது தான் ஆச்சரியமான விடயம். இப்படியான பின்னணியில், ஒற்றை எஞ்சின் செஸ்னாவை ஓட்டி விட்டு "முதல் தமிழ் விமானி" என்பதும், உள்ளூராட்சி சபையில் தவிசாளர் பதவியைப் பெற்று விட்டு, "மாநில முதல்வர்" என்று பெருப்பிப்பதும் நகைப்பிற்குள்ளாக்கப் படுவது நடக்கும் தானே? தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த (உங்கள் பாசையில்) "மோட்டுச்" சிங்களவர்களும் வெளிநாடுகளில் உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல ஆய்வுப் பல்கலைக் கழகமான Caltech இன் அடுத்த தலைவர் ஒரு இலங்கை சிங்களவர்! California Institute of TechnologyRay Jayawardhana Appointed Caltech's Tenth PresidentThe Johns Hopkins University provost, renowned astrophysicist, and award-winning author will begin as the Institute's leader on July 1, 2026.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம். கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான். அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம். அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!
- Today
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலி!!!
-
அறிமுகம்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
-
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
உள்ளேன் ஐயா😂
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் 19 வயது தலைமை மாணவ தலைவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு ஆசிரியர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள வீடியோ கடந்த வாரம் கசிந்துள்ளது, இதனால் நான்கு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அதே நேரம் அந்த மாணவனது மாணவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அவரது நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடசாலையின் Head Prefect. படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டில் வீரன், ஆசிரியர்களுக்குப் பிடித்தமான கீழ்ப்படிதலுள்ள மாணவன். சுருக்கமாகச் சொன்னால் "Perfect Gentleman". 2025-2026 ஆம் ஆண்டின் அந்தத் தலைமைப் பதவியை அவன் ஏற்கும் போது முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டியது. ஆனால் அந்தப் புனிதமான சீருடைக்குள்ளே ஒளிந்திருந்த மற்றொரு முகம் யாருக்கும் தெரியாது. அது அவனுடைய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எப்படி காலம் மாறிவிட்டது என்று பாருங்கள், புனிதமான ஆசிரியர்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு ஆசிரியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துயுள்ளார்கள். Crimenews
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 3 நண்பர்கள் இதுவரைக்கும் எனக்கு இவ் வீடியோக்களை அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துக் கொள்கின்றேன். அதில் ஒருவர் இந்த சம்பவம் நிகழ்ந்த நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் (சிங்கள நண்பன்).
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
இப்போதைக்கு இலங்கை கடவுச்சீட்டு.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
- அறிமுகம்
வணக்கம்.- பராசக்தி - சுப.சோமசுந்தரம்
பொதுவாக வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவது சவாலானதாகவே இருந்து வருகிறது. கப்பலோட்டிய தமிழன், சிவகங்கைச் சீமை போன்ற படங்களை இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தனித்துவமான இடத்தைப் பெற்றது. பந்துலுவின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, சக்தி கிருஷ்ணசாமியின் காலம் கடந்தும் நிலைக்கும் வசனங்கள், சிவாஜி கணேசனின் மேன்மையான நடிப்பும் வசன உச்சரிப்பும், மேலும் அந்தப் படம் வர்ணத்தில் வெளியானதும் அதன் வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தன. தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எடுத்துக்கொண்ட கருவைத் தெளிவாக முன்னிறுத்தாமல் கதை திசைமாறி எங்கெங்கோ பயணிக்கிறது. மேலும், நடிகர்கள் பாத்திரங்களாக மாறாமல், நடிகர்களாகவே திரையில் தோன்றுகிறார்கள். சில இடங்களில் நாங்கள் இப்பொழுது ‘மாஸ்’ சினிமாதான் பார்ககிறோம் என்ற நிலைக்கு எங்களைத் தள்ளி விடுகின்றது. உதாரணமாக, சிவகார்த்திகேயனை அடித்து வீழ்த்திய பிறகு “அவனை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரவி மோகன் கூறிவிட்டு ரயிலில் பயணிக்கிறார். ஆனால் அடுத்த கணமே அதே ரயிலில் சிவகார்த்திகேயன் தோன்றி சண்டை போடுவதைச் சொல்லலாம் “இப்போதைய தலைமுறைக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த தகவலை இந்தப் படம் வழங்கியுள்ளது” என்று பேராசிரியர் சு.ப. சோமசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனவரி 13ஆம் தேதி கொழும்பு Havelock Cityஇல் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது திரையரங்கின் நிலை அதற்கே சாட்சியாக இருந்தது. பத்தோடு பதினொன்றாக வந்துள்ள ஒரு திரைப்படமாகவே பத்தோடு பதினோராவது ஆளாக பராசக்தியைப் பார்த்துவிட்டு திரும்பினேன். எனக்குப் படம் பிடிக்கவில்லை. நான் சங்கியும் இல்லை நடிகனை தலைவனாக, கடவுளாக கொண்டாடுபவனும் இல்லை. ஆனால் ஒரு நடிகனை முன்னிறுத்தி அவர் மூலமாக ஆட்சிக்கு வந்ததுதான் திமுக. 67இல் திமுக வென்றபோது அமைச்சர்களது பட்டியலை எம்ஜிஆரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தவர்தான் அறிஞர் அண்ணா. எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளதாததால் ஆதித்தனாருக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போனதும் வரலாறு. பேராசிரியர் திமுக அபிமானி என்பது ஏற்கனவே நான் தெரிந்து வைத்திருக்கிறேன். சுபவீ வரிசையில் சுபசோ வையும் சேர்த்துக் கொள்ளலாம்.- IMG_9447.jpeg
- IMG_9458.jpeg
- IMG_9459.jpeg
- IMG_9460.jpeg
- இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
அமெரிக்கா அழுத்தத்தின் கீழ் ஈரானின் சபாஹர் துறைமுக ரிமத்தையும், விருத்தியையும் கைவிட்ட கிந்தியா. கனவில் இருந்து யாதாரத்துக்கு வரமுடியாத கிந்தியா.- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
🔥 பாடசாலையா? இல்ல… ஒழுக்கம் புதைக்கப்பட்ட அரங்கமா? ஒரு காலத்தில் ஒழுக்கம் கற்பித்த இடம் இன்று ஒழுக்கமே கேலி செய்யப்பட்ட இடம். கொழும்பு மருதானையில் உள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் நடந்த இந்த சம்பவம், ஒரு மாணவனின் வீழ்ச்சி மட்டும் அல்ல — 👉 முழு கல்வி அமைப்பின் முகத்திரையை கிழித்த சம்பவம். ⸻ 🎓 “Perfect Gentleman” – புனித வேஷத்தின் பின்னால் என்ன? 📌 படிப்பில் கெட்டிக்காரன் 📌 விளையாட்டில் வீரன் 📌 ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை 📌 2025–2026 Head Prefect முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டிய அந்த நிமிடம், ஒரு நாடகத்தின் முதல் காட்சி தான் என்பதை யாருக்கும் தெரியவில்லை. அந்த புனிதமான சீருடை, 👉 ஒழுக்கத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட கவசமாக மாறியிருந்தது. ⸻ 📱 ஸ்மார்ட்போன் – புதிய குரு, புதிய தேவன் அவன் கையில் இருந்தது, 📵 புத்தகம் அல்ல 📵 ஒழுக்கம் அல்ல 👉 ஸ்மார்ட்போன். அதில் பதிந்திருந்தது, 👉 பாடங்கள் அல்ல 👉 மதிப்புகள் அல்ல 👉 ரகசிய உறவுகள். அந்த ரகசியங்கள் இன்று சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாணமாகி விட்டன. ⸻ 🧑🏫 “ஆசிரியர்கள்” – யார் இவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தது? ஒரு கேள்வி மட்டும் போதும்: மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டியவர்கள் மாணவர்களிடமே எல்லை மீறினால் அடுத்த தலைமுறைக்கு எதை கற்பிப்பார்கள்? சில ஆசிரியர்கள், 👉 பதவியை மறந்து 👉 பொறுப்பை மறந்து 👉 சீருடையை மறந்து ஒரு மாணவனின் அதிகாரத்தை அனுபவிக்கும் கருவியாக மாறியுள்ளனர். இது தவறு அல்ல… 👉 குற்றம். ⸻ 📹 வீடியோ கசிவு – குற்றவாளி யார்? “வீடியோ வெளியிட்ட நண்பன் தவறு” “சமூக ஊடகம் ஆபத்து” ஆம்… ஆனால் உண்மையான குற்றவாளிகள்? ❓ எல்லை மீறியவர்கள் ❓ கண் மூடி ரசித்த அமைப்பு ❓ காலம் காலமாக மறைத்த நிர்வாகங்கள் ⸻ 🏫 கல்வி அமைச்சு – எத்தனை அறிக்கைகள்? எத்தனை மறைப்புகள்? “விசாரணை நடக்கிறது” “அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” இந்த வார்த்தைகளை நாம் எத்தனை தடவை கேட்டிருக்கிறோம்? 👉 ஒவ்வொரு முறையும் 👉 ஒரு அறிக்கை 👉 சில நாட்கள் அமைதி 👉 பின்னர் மறதி. இந்த முறை அப்படியா? அல்லது உண்மையான நடவடிக்கையா? ⸻ ⚠️ இது ஒரு சம்பவம் அல்ல… எச்சரிக்கை! இது, ❌ ஒரு மாணவனின் தவறு மட்டும் அல்ல ❌ சில ஆசிரியர்களின் வீழ்ச்சி மட்டும் அல்ல 👉 முழு கல்வி அமைப்பு அழுக ஆரம்பித்திருப்பதற்கான சைகை. இன்று வீடியோ, நாளை என்ன? ⸻ 🧨 கேள்வி ஒன்று மட்டுமே மிஞ்சுகிறது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இனி யாரை நம்புவது? ஆசிரியர்களை தெய்வமாக பார்த்த சமூகம் இனி எதை போற்றுவது? ⸻ 📢 வதந்தி வேண்டாம். மறைப்பு வேண்டாம். கருணை வேண்டாம். 👉 உண்மை வேண்டும். நடவடிக்கை வேண்டும். பாடமாக மாறும் தண்டனை வேண்டும். யாழ்ப்பாணம்- Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி பட மூலாதாரம்,AARADYAA STUDIOS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'பிரேமம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் 'எக்கோ'. "சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்", "சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்", "நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்", என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின. மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படக்குறிப்பு,இயக்குநர் தின்ஜித் அய்யதன் 'எக்கோ' கதை உருவானது எப்படி? இத்திரைப்படத்திற்கு 'எக்கோ' (Eko) என பெயரிட்டது ஏன்? இதை நிறைய பேர், ஈக்கோ என சொல்கிறார்கள். இது எக்கோ (Echo) தான். அதாவது எதிரொலி அல்லது 'கர்மா', 'பூமராங்', என்பதைக் குறிப்பது போல. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது, அது நம்மை என்றாவது ஒருநாள் பின்தொடர்ந்து வரும் அல்லது அது வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்ற அர்த்தத்தில் தான் 'எக்கோ' என வைத்தோம். இதில் குரியாச்சன் கதாபாத்திரம் (நடிகர் சௌரப் சச்தேவா) தான் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளால் தான் தலைமறைவு வாழ்க்கைக்குள் செல்வார். அவரை பிற கதாபாத்திரங்கள் தேடி வருவதும் அதற்காக தான். மற்றபடி, 'Echo' என வைக்காமல் 'Eko' என தலைப்பு வைத்தது, வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக தான். இந்தக் கதை உருவானது எப்படி? பஹுல் ரமேஷ் (எக்கோ திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர்) வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒரு மலேசியப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கேரளாவிற்கு அழைத்து வந்து, வாழ்ந்து கொண்டிருந்தவர். அதிலிருந்து தான், ரமேஷுக்கு 'எக்கோ' கதை தோன்றியது. இந்தக் கதையை ரமேஷ் சொன்னபிறகு, நாய்கள் வளர்ப்பவர்கள் குறித்தும், புதிய நாய் இனங்களை தேடிச் செல்பவர்கள் குறித்தும் படித்தோம். பல நாய் இனங்கள் குறித்தும் அவற்றின் நடத்தைகள் குறித்தும் படித்தோம். அது கதை மேலும் விரிவதற்கு உதவியது. கோம்பை நாய்கள் பட மூலாதாரம்,AARADYAA STUDIOS திரைப்படத்தில் 'மலேசியாவைச் சேர்ந்த நாய்கள்' என ஒரு இனத்தைக் காட்டியிருப்பீர்கள், அவை உண்மையில் எந்த இனம்? அவை தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த கோம்பை நாய்கள். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களே நாய்கள் தான். மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று கதையில் சொல்லப்படுவதால், எந்த இனத்தை காட்டுவது என்ற குழப்பம் இருந்தது. நாய்களை திரையில் பார்க்கும்போது நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும், அதேசமயம் அவை வழக்கமான வெளிநாட்டு நாய்களைப் போலவும் இருக்கக்கூடாது. மற்றொரு பிரச்னை கன்டினியூட்டி (Continuity). எனவே நாய்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கமாகவும் தோன்ற வேண்டும். எனது நண்பரும் துணை இயக்குநருமான துரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் கோம்பை நாய்கள் பற்றிச் சொன்னார். தேனிக்குச் சென்று, கோம்பை நாய் வளர்ப்பவர்களை சந்தித்து பேசி, புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அப்போதே முடிவு செய்துவிட்டோம், கோம்பை நாய்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று. ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. ஒரு நாய்க்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கேட்டார்கள். எங்கள் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 8 கோடி தான். எனவே நாய்களுக்கு மட்டும் எங்களால் பல லட்சங்களை செலவழிக்க முடியாது. ஒருவழியாக 2 மாதங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாய்க்கு வாடகை 5000 ரூபாய் எனப் பேசி, 10 நாய்களை கொண்டு வந்தோம். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படப்பிடிப்பில் எவ்வாறு அவற்றை சமாளித்தீர்கள்? அதற்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து சொல்ல முடியுமா? நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர் ஒருவர் எங்களிடம் சொன்னது, 'நாட்டு நாய்கள் எனும்போது ஒன்றரை வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு சொல் பேச்சு கேட்டு நடக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடியும்.' எனவே 1 முதல் ஒன்றரை வயதிற்குள் இருக்கும் கோம்பை நாய்களையே தேர்ந்தெடுத்து 1 மாதம் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டது. திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய், மலாத்தி சேட்டத்தி கதாபாத்திரத்தை எட்டி உதைப்பது போல இருக்கும். அதற்கு நாங்கள் இரண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்திருந்தோம். ஒருவேளை ஒரு நாய், அதைச் சரியாக செய்யவில்லை என்றால் மற்றொரு நாய் செய்யவேண்டும் என்பதற்காக. இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சில சமயங்களில் அவை தங்களுக்குளே சண்டையிட்டுக் கொள்ளும். அவை சமாதானமடையும் வரை காத்திருந்து, பின்னர் காட்சிகளை எடுப்போம். இதெல்லாம் சவாலாகவே இருந்தது. இருப்பினும், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். பட மூலாதாரம்,Dinjith Ayyathan/Facebook 45 நாட்களில் முழு திரைப்படத்தையும் முடித்துவிட்டீர்களா? ஆமாம், அதற்கு காரணம் பட்ஜெட் தான். படத்தின் நாயகன் சந்தீப், மலையாள சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. 3 முதல் 5 கோடி பட்ஜெட் திரைப்படம் என்பது அவருக்கான அதிகபட்ச மார்கெட் (Market). ஆனால், இது 8 கோடி பட்ஜெட் திரைப்படம். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, செலவுகளில் மிகவும் கவனமாக இருந்தோம். அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்தோம். உங்களது முந்தைய திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம், இப்போது எக்கோ, இரண்டிலும் கதை நடக்கும் பகுதிகள் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், கதை சொல்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்பட்டிற்கும் அல்லவா? உதாரணத்திற்கு எக்கோ-வின் இறுதிக் காட்சியில் சேட்டத்தியும் பீயூஸும் அமர்ந்து பேசும் ஒரு பாறை. ஆம், குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகள் ஒரு கதைக்கு பெரும் பலமாக இருக்கும். உதாரணத்திற்கு, எக்கோ திரைப்படத்திற்காக நான் தேடியது காய்ந்த புல்வெளிகள் கொண்ட ஒரு மலை. அதன் உச்சியில் குரியாச்சன்- சேட்டத்தி வீடு இருக்கும் என்பது போல. அதற்காக இடுக்கியில் ஒரு பகுதியை முடிவு செய்து, படப்பிடிப்புக்கு அங்கு சென்றபோது, மழை காரணமாக அந்த காய்ந்த புற்கள் பசுமையாக மாறியிருந்தன. வேறு வழியில்லை என படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் திரைப்படத்தில் பார்க்கும்போது அந்தப் பசுமை கதைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதுபோல சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்கிறோம், சிலவற்றை இயற்கை முடிவு செய்கிறது. குரியாச்சனுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,AARADYAA STUDIOS எக்கோ திரைப்படத்தில் பல விஷயங்களை நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. உதாரணத்திற்கு நரேன் கதாபாத்திரம் ஏன் குரியாச்சனை தேடுகிறது? அதேபோல பல விஷயங்கள் வசனங்களாக அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும், அல்லவா? ஆம், அதற்கு காரணம் இது குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி பற்றிய கதை மட்டுமே. அதனால் தான் அவர்கள் தொடர்பான 'பிளாஷ்பேக்' மட்டும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும். நரேன், வினீத், அல்லது சந்தீப் கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னால் அது அவர்களுடைய கதையாகிவிடும். அவர்கள் குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி கதையின் ஒரு அங்கம் மட்டுமே. எல்லா கதாபத்திரங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கும், ஆனால் அதை சொல்லி திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்க வேண்டாம் என நினைத்தேன். அதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி-களின் வரவு காரணமாக மக்கள் உலகத் திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் குறித்த ரசனையும், எதிர்பார்ப்பும் மாறிவிட்டது. எனவே எதையும் நேரடியாக சொல்லவேண்டாம் என நினைத்தோம். 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என திரைப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளை பார்த்தீர்களா? ஆமாம், பார்த்தேன். ஏஐ (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை மிகவும் ரசித்தேன். திரைப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம் என எனக்கு முன்பே தோன்றியது. அதாவது, மலாத்தி சேட்டத்தி அந்தப் பாறையில் அமர்ந்து பைனாகுலர் மூலம், தொலைவில் உள்ள ஒரு பாறை இடுக்கைப் பார்க்கிறார். அந்த பாறை இடுக்கின் வாசலில் சில நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அது குரியாச்சன் அங்கு தான் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்திவிடும், எனவே இதை காட்சியாக வைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், என் குழு வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை, அந்தக் காட்சியை வைத்திருந்தால், மக்கள் இன்னும் திருப்தியாக உணர்ந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என்பதை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருந்தால், இந்தத் திரைப்படம் இன்னும் அதிகமாக மக்களால் கொண்டாடப்பட்டிருக்குமோ என்றும் தோன்றியது. மலையாள சினிமா அதன் யதார்த்தமான திரைப்படங்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அத்தகைய திரைப்படங்கள் இங்கு அதிகம் உருவாக முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தான். ஒரு கதையைச் சொல்லும்போது, அதில் பாடல்களை சேருங்கள், இந்தக் காட்சிகளைச் சேருங்கள், இவரை வைத்து எடுக்கவேண்டாம் என்றெல்லாம் இங்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் விதிப்பதில்லை. மக்களும் வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேசமயம், எல்லா திரைப்படங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை தான். இருப்பினும், பிற மொழி திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடும்போது, 'வணிக அம்சங்கள்' தொடர்பான அழுத்தம் இங்கு குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS தமிழ் சினிமாவிலிருந்து வந்த பாராட்டுகள் தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் வந்தனவா? ஆம், நடிகர் ரவி மோகன் அழைத்துப் பேசினார். தனுஷ் 'எக்கோ' திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். சில இயக்குநர்களும் பேசினார்கள். கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் எக்கோ திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. அது நிறைவேறும் என நம்புகிறேன். என் முதல் திரைப்படம் தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. நான் 20 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். படித்தது எல்லாம் இங்கே தான். 'கிஷ்கிந்தா காண்டம்- குரங்குகள்', 'எக்கோ- நாய்கள்', உங்கள் அடுத்த திரைப்படம்? விலங்குகளை வைத்து தான் எடுப்பேன் என்று இல்லை. கதைகள் அவ்வாறு அமைந்தன. அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ep7g7244o- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
செஞ்சிலுவை கவி ஐயாவின் இலச்சினையில் வலது கை கீழே நீளும் இடத்தை ஒரு சிலுவையாக மாற்ற முடியும் என எண்ணுகிறேன். ஆனால் இது செஞ்சிலுவையாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த நிறத்தில் சிலுவை அமைந்தாலும் அது ஒரு மதத்தை குறிப்பதாக பார்க்கப்படும். செஞ்சிலுவை என்பது பொதுவான குறியீடு. அதை செ.சி.ச உரிமை கோரமுடியாது. கோராது. கோரினால் அதை எமக்கான மார்கெட்டிங்க்கு பாவிக்கலாம்😂. யாழ் நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் நிலைப்பாட்டை முற்றிலும் ஏற்கிறேன். ஆனால் இதை யாழ் நிர்வாகம் அல்லது யாழ்.கொம் நடத்தவில்லை எனபதை நாம் தெளிவுபடுத்தி “யாழ்.கொம் வாசகர்கள் முன்னெடுக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம்” என எம்மை அழைத்து கொள்வதிலும், இந்த திரியை பரப்புவதிலும் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா? வேணும் எண்டால் இந்த திரியிலும், பேனரிலும் “இது ஒரு வாசகர்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி மட்டுமே, இதில் யாழ்.கொம் எந்த பொறுப்புகூறலுக்கும் உரியவர்கள் அல்ல” என்ற disclaimer, பொறுப்புதுறப்பையும் போடலாம். வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்🙏- வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்
பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமாகாண ஆளுநர் வேதநாயகன் 28 Jan, 2026 | 04:13 PM (எம்.நியூட்டன்) போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (28) கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறி, உங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய ஜெயசேகரம் நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார். கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கின்றார் என்ற அடிப்படையில், இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு அவர் கிளிநொச்சியைத் தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள், என்றார். வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவியினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/237257- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இன்னமும் கொஞ்சம் யோசித்ததில். பேனர் ஏராளன் சொல்வது போல் பேனர் வைத்து - காணொளி, படம் எடுத்து பரப்புவது - நமபகதன்மை, மேலும் நிதி உதவி வருவதை உறுதி செய்யும். பேனருக்கான செலவுடன் ஒப்பிடும் போது அதனால் வரும் நன்மை பல மடங்காக இருக்க கூடும். ஆகவே இதை செய்யலாம் என எண்ணுகிறேன். இலச்சினை கவி ஐயாவின் இலச்சினை எனக்கு நன்றாக பிடித்துள்ளது. பேனர் வைத்தால் பேர் இலச்சினையும் தேவை என எண்ணுகிறேன். ஏராளன் பேனர் செலவு தோராயமாக எவ்வளவு? - அறிமுகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.