stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு வழியாக 5ம் பக்கதிலாவது கருத்து சரியானது என்பதை ஒத்து கொண்ட அளவில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்த சில low profile, கண்ணை குத்தாத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுள்ளேன். இலண்டன் கோவில்கள் சிலது கூட மலையகத்தில் திட்டங்கள் செய்துள்ளனர். யார் செய்வது? தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிகெட்டு, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் என்கிறார் பாரதி. அந்த நிலைதான் இப்போ நமக்கும். உங்களை போலவே எனக்கும் விடை தெரியவில்லை. ஆனால் -கொள்கை அளவில் கூட இது நல்ல விடயம் என ஒரு கருத்துகளத்தில் கூட இப்படி தொண்டை தண்ணி வத்த கத்த வேண்டி உள்ள போது…. நடைமுறையில் இந்த இனம் இந்த வேலைக்கு சரிப்பட்டு வராது என்றே எண்ணுகிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நம்மில் ஒற்றுமை நீங்கினின் அனைவர்கும் தாழ்வு… நன்றிது தேர்ந்திடல் வேண்டும்… இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கேது வேண்டும். ஆனால் இந்த சக்கு மூளைகளுக்கு இத்தனை இழப்பு, தியாகம், கொடுமைக்கு பின்னும் வரவில்லை எனில், இந்த ஞானம் எப்போதும் வரும் என நான் நம்பவில்லை. இவர்களுக்குரிய பாடல்… எப்பா ஞானம்.. சீதாவ காணம்… பொழுது விடிஞ்சா போக போது மானம்😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அடடே சாதா காவடியை சொன்னால், தூக்குகாவடிக்கு கோவத்தை பாரேன்😂. நான் சுமந்திரனை மிக கடுமையாக இதே யாழில் பல வருடங்களாக விமர்சிக்கும் ஒருவர். ஆனால் அனுர மேல் ஒரு தூசிபட்டாலும் உடனே ஓடி வந்து காவடி தூக்கும், இப்போதும் தூக்கும் நபர் நீங்கள். அனுரவின் ஈரச்சாக்கு அரசியல் இனத்தை நீண்ட கால நோக்கில் படுகுழியில் தள்ளும் என அறிந்தும், அதை ஆதரிக்கும் கோடாலிகாம்பு நானில்லை.
-
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -
ஒரு அமைப்பிலே இருந்து விலகும் போது கணக்கு வழக்குகளை தரவில்லை என்று சொல்வதும் பல தடவைகள் கெஞ்சிக் கேட்டும் தரவில்லை என்ற போதும் கதை தடுமாறி விட்டது. சட்டபடி நடவடிக்கை எடுத்தால் விடயம் சரியாகி விடும். அதுவும் சுவிஸில் நடப்பதாக கதை இருப்பதால், கதையோடு ஒன்ற முடியவில்லை.
-
வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்
இடையிலுள்ள. 0. ஒன்றை. மட்டும். எடுத்து. பின்னுக்குப். போட்டு. வாசித்துப் பாருங்கள. சரியாக. இருக்கும்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அதுபாருங்கோ…ஜெப்பணீஸ்க்கு மிகவும் பிடித்தமான டவுசர், சேர்ட் போட்டு அரச அலுவலகங்களில் இருந்து பிளேன் டீ குடிக்கும் வேலைக்குத்தான் வேலையில்லா திண்டாட்டம்😂. மேசன், முட்டாள், விவசாய வேலை, என பல வேலைகளுக்கு வேலையாள் இல்லா திண்டாட்டம். கேட்டுப்பார்த்தேன் - பல முட்டாள்கள் கனடாவில் செட்டில் ஆகி விட்டார்களாம்😂.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதோ இன்னொருவர் நீ செய், நான் செய்கிறேன் என மடைமாற்றுகிறார்😂. நான் உங்கள் எவரையும் காணியை கொடுங்கள் என சொல்லவில்லை. இப்படியான நகர்வு ஒரு நல்ல நகர்வு என கொள்கை அளவிலாவது ஏற்று கொள்ளுங்கள் என்கிறேன். ஆனால் அதற்கு உங்கள் மையவாதம் விடுகுதில்லை. ஆகவே இப்படி மடை மாற்றுகிறீர்கள். இன்னொரு டிசைன் மடைமாற்று. வடக்கில் கடைசி ஏழை இருக்கும் வரை இப்படி மடைமாற்றி கொண்டே இருக்கலாம். நாம் கீழ்தரமான யாழ் மையவாதிகள் என வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டி வராது. மடைமாற்று 3rd prototype😂
- Today
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?
- “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்!
செல்லக் குட்டிக்கு செல்லக் ‘கடி’ ஓகேயா கிருபன்?🥰- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல். அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது. ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள். ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம். மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்? “இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’- டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்
டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல் 18 Dec, 2025 | 02:04 PM ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும், அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தெளிவான தகவல் தொடர்பாடல் அவசியம் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தற்போது முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் தங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கான நிவாரணம், மீள்குடியேற்றம், நிரந்தரத் தீர்வுகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், மக்களிடையே அச்சம் மற்றும் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் ”தமிழ் மொழியில், உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வெளியிடப்பட வேண்டும்“ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக ஆளணி நியமனம் தேவை தோட்டப்பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் மிக அதிகமான சனத்தொகையை கொண்டுள்ள நிலையில், ஒரே கிராம சேவையாளருக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொறுப்பாக இருப்பது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் பேசும் மேலதிக அரச உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமித்து, நிவாரண விண்ணப்பங்கள், சேத மதிப்பீடு மற்றும் சிபாரிசு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணத் தகுதிகளில் நெகிழ்வு அவசியம் காணி உரிமை இல்லாமை காரணமாக தோட்ட மக்களுக்குப் பயிர் சேதம், கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான இழப்பீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால், மலையக மக்களின் தனித்துவமான நிலைமைகளை கருத்தில் கொண்டு விசேட சுற்றுநிருபங்கள் மற்றும் நெகிழ்வான தகுதி நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு – அரச பொறுப்பு டிட்வா பேரிடரால் தோட்டப் பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள், பாலங்கள், வடிகால்கள், பாதுகாப்புச் சுவர்கள், முன்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சமூக உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவை பெரும்பாலும் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால், மீள்கட்டமைப்பு தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும், இப்பணிகளை நேரடியாக அரச பொறுப்பில் எடுத்துக் கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும்** என கோரப்பட்டுள்ளது. காணி மற்றும் வீட்டு உரிமைக்கு நிரந்தரத் தீர்வு மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடு நிர்மாணத்தில் காணி உரிமை இல்லாமை முக்கிய தடையாக இருப்பதாகவும், இதற்கான தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடி தீர்மானங்களைப் பெற அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/233717- "மூன்று கவிதைகள் / 15"
"மூன்று கவிதைகள் / 15" 'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு' நீல நயனங்களில் நீண்டதொரு கனவு ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது! காலம் கனிந்து கைகூடிய காதல் கோலம் மாறி கூத்து அடிக்கிறது உலக வரையறை காற்றில் பறக்கிறது! கண்ணோடு கண் கலந்த அன்பு மண்ணோடு மண்ணாய் போனது எனோ? விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி வண்ண ஒளி பரப்பிய அவன் பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'பாரதி' "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!" "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும்! திமிர் பிடித்த கொள்கை வெறியன் அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. 'பருவக் கிளர்ச்சி' பருவக் கிளர்ச்சி ஆசை தூண்ட உருவம் மனதில் மோகம் தெளிக்க அருகில் இருந்தால் இன்பம் பொங்குமே! பருத்தி ஆடை இதம் தர பக்குவமாக இருவரும் சாய்ந்து இருக்க பகல் வேளையிலும் கனவு வருமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1944 ["மூன்று கவிதைகள் / 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/32884649584516931/?- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முதலில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கு சாட்டு சொல்ல இதை சொல்லியிருக்கலாம். பின்பு இதை இந்தியர்கள் -ஹிந்தியர்களும் தமிழர்களும் முகநூல் இணையதளங்கள் மூலம் பரப்ப அதை எங்களது ரஷ்ய விசுவாசிகள் பிடித்து கொண்டனர். இந்திய அரசு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சரி என்று சொல்லவில்லை இந்தியர்கள் தான்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நீங்கள் எல்லாம் சண்டை பிடியுங்கோ. ஒரு பத்தாயிரம் மலையக மக்களை வன்னிப்பகுதியில் குடியேற்றும் திட்டம் இருப்பதாக (அரசாங்கத்தரப்பில்) கேள்விப்பட்டேன்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ம், தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள், விகாரைகள். அதன் உரிமையாளர் சொந்தங்கள், வாடகை வீட்டில். எத்தனை ஆர்ப்பாட்டம், மீட்க முடிந்ததா? நீதிமன்றங்களினாலேயே முடியவில்லை. இதில மலையக மக்களை பாசத்தோடு அழைக்கிறார்களாம். என் காணியில் நான் குறித்த அனுமதி பெறாமல் எந்த கட்டுமானப்பணிகளும் செய்ய முடியாது. ஆனால் தனியார் காணியில் விகாரை, வியாபார நிலையம் அமைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. தாங்கள் காவடி தூக்கலாம் சுமந்திரனுக்கு, மற்றவர் உண்மையை சொன்னால் அது காவடி என்று தூக்கிக்கொண்டு வருவார். சொல்லாடல் வறுமை. தானே பகிடி விட்டு சிரித்து ரசிப்பார்.- “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்!
“ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்! 18 Dec 2025, 6:30 AM காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression). இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It): பொதுவாக நமக்குக் கோபம் வந்தால் அடிப்போம்; சந்தோஷம் வந்தால் சிரிப்போம். ஆனால், அளவுக்கு அதிகமான சந்தோஷம் வரும்போது மூளை குழம்பிவிடும். உளவியல் ரீதியாக இதை ‘டைமார்பஸ் எக்ஸ்பிரஷன்’ (Dimorphous Expression) என்று கூறுகிறார்கள். அதாவது, நாம் தாங்க முடியாத அளவுக்கு ஒரு பாசிட்டிவ் உணர்வை (Overwhelming positive emotion) உணரும்போது, அதைச் சமநிலைப்படுத்த (Balance) நம் மூளை அதற்கு எதிரான ஒரு உணர்வை வெளிப்படுத்துமாம். உதாரணத்திற்கு, அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதல்லவா? (Happy Tears). அதுபோலத்தான் இதுவும்! அந்த அன்பைச் சமாளிக்க முடியாமல், மூளை வெளிப்படுத்தும் ஒரு சிறிய ‘வன்முறை’ வடிவம்தான் இந்த ‘கடி’ மற்றும் ‘கிள்ளல்’. காதலில் இதன் அர்த்தம் என்ன? உங்கள் பார்ட்னரைக் கடிக்கத் தோன்றுகிறது என்றால், நீங்கள் அவர்கள் மீது பைத்தியக்காரத்தனமான அன்பில் (Crazy Love) இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பாதுகாப்பு உணர்வு: “இவங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்” என்ற உள்ளுணர்வின் (Instinct) வெளிப்பாடுதான் இது. டோபமைன் ரஷ் (Dopamine Rush): பிடித்தவர்களைப் பார்க்கும்போது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’ என்ற மகிழ்ச்சி ஹார்மோன், இந்தச் செயலைத் தூண்டுகிறது. இது நார்மல்தானா? நூறு சதவீதம் நார்மல்! சொல்லப்போனால், இது ஆரோக்கியமான உறவின் அடையாளம் என்று யேல் பல்கலைக்கழக (Yale University) ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் – உங்கள் அன்பு அவர்களுக்கு வலி மிகுந்ததாக மாறிவிடக்கூடாது. “செல்லக் கடி” ஓகே… “சதையைப் பிய்க்கும் கடி” நாட் ஓகே! அடுத்த முறை உங்கள் பார்ட்னரைப் பார்க்கும்போது, பற்களை நறநறவென கடிக்கத் தோன்றினால், தயங்காதீர்கள். அது வன்முறை அல்ல; அது அன்பின் உச்சம்! அன்பைக் கொட்டுங்கள்… (லேசாகக்) கடித்துக் காட்டுங்கள்! https://minnambalam.com/cute-aggression-psychology-science-behind-biting-squeezing-in-relationships-love-facts/ இப்படிச் செய்துவிட்டு ஏற்படும் பின்விளைவுகளுக்கு செய்தியை இணைத்த கிருபன் பொறுப்பல்ல!- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
கிறிஸ்தவ மதம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்டதாக இருக்கலாம். அது உண்மையா இல்லையா என்பது வேறு. ஆனால், பிரித்தானியா முஸ்லீம் நாடு அல்ல. அதை புகுத்தி சொந்தம் கொண்டாட விழைகிறார்கள். அகதிக்குழந்தைக்கு ஆசிரியர் சொன்னது தெளிவாக விளங்கியதோ அல்லது இட்டுக்கட்டியதோ தெரியவில்லை. வேறொரு நாட்டில் ஆசிரியர், எல்லோரும் ஒரு மதமாக இருந்தால் உலகில் பிரச்சனையே இல்லை என்றாராம். அதற்கு ஒரு முஸ்லீம் மாணவி அந்த ஆசிரியருக்கெதிராக முறைப்பாடளித்து, அந்த ஆசிரியர் வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டார். சிறுவர்களுக்கு முதலிடம் அளிக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களுக்கும் முறைப்பாடுகளுக்கும்முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் உள்ளன. மத, இந, மொழி பாகுபாட்டை வன்மையாக எதிர்க்கிறார்கள் மேலை நாடுகளில். இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் மேல் இவ்விதமான முறைப்பாடுகளை கொடுத்து தங்கள் தவறுகளை மறைத்து விடுகிறார்கள். அவர்கள் நாட்டு, குடும்ப பின்னணியது. இதுவே அவர்கள் நாட்டில் நடந்திருந்தால் என்ன தண்டனை? கொடுத்திருப்பார்கள்- அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம்
அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம் 18 Dec 2025, 9:48 AM பேரா. நா. மணி “முப்பது பேரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய மோட்டார் படகு 63 பேரை ஏற்றிக் கொண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடி புறப்பட்டது.” என்ற நாவலின் முதல் வரியே நெஞ்சில் படபடப்பை உருவாக்கி விடுகிறது. அடுத்து, “மண்டபத்தில் வாழும் மக்கள் உயிர் இருந்தும் உயிரற்றவர்களாக இருந்தனர்.” “இலங்கையிலோ ஒவ்வொரு வீதியிலும் உயிரின் பயம்.” “எந்த வீதியில் எந்த முகமூடி அணிந்தவன் நிற்கிறானோ? அவன் தலை அசைவைப் பொறுத்து நம் தலை தப்புவது இருக்கிறது.” என அடுத்து வரும் வரிகள் நம்மை நாவலுக்குள் சுருட்டி இழுத்துக் கொள்கின்றன. கதை வாசகனை தரதரவென இழுத்துச் செல்கிறது. நாவலைப் படித்து முடித்த பிறகும் வாசகன் அதிலிருந்து வெளிவர முடியாதபடி கட்டிப் போடுகிறது. இலங்கையின் தமிழ் மண் முதலில் இரத்தத்தில் நனைகிறது. பின்னர் அகதிகளாக செல்லும் இடமெல்லாம் கண்ணீர் நிறைகிறது. அகதிகளின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் நம் நெஞ்சத்தையும் கரைக்கிறது. அகதியானவர்களின் அகம், புறம் இரண்டையும் எழுத்துப் படிமமாக, காட்சிப் படிமமாக புரிந்துகொள்ளத் தக்கதாக ஜீவகுமாரனின் எழுத்து வடிவெடுத்துள்ளது. முதலில் உயிர் பிழைத்தால் போதும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம். உயிர் பிழைத்த பின்னர், உயிருக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள் சிலிர்த்து எழுந்து விடுகின்றன. நமது உணர்வுகள் பண்பாட்டு விழுமியங்களில் வேர் பதித்து நிற்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக உணர்வுகளில் வேர் பதித்து வாழ்கின்றன பண்பாட்டு விழுமியங்கள். சில நேரங்களில் உயிரைவிட பண்பாட்டு விழுமியங்களே மேலானதாகக் கருதப்படுகின்றன. உயிருக்கு உணவு, உடை, தங்குமிடமும் கிடைத்த பின்னர் உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. அறிவை ஆளுமை செய்யும் அசுர பலமும் பண்பாட்டு விழுமியங்களுக்கு கிடைத்து விடுகிறது. வாழ்வையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அவை வாழ்வோடு பின்னிப் பிணைந்து விடுகின்றன. பண்பாட்டு விழுமியங்களை காக்கவே வாழ்கிறோம் என்பது வாழ்வின் பற்றுக் கோடாக மாறிவிடுகிறது. அதற்குள் சுகம் இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. நிம்மதி இருக்கிறது. பெருமிதம் இருக்கிறது. இவையெல்லாம் ஏதும் தெரியாமல், ஆனால் இவையெல்லாவற்றையும் வாழ்வோடு இணைத்து வடிவாக வாழ்ந்து வந்தது தங்கம்மா இராசையா குடும்பம். போரால் சின்னாபின்னமாகிவிட்ட குடும்பங்களில் ஒன்று தங்கம்மா இராசையா குடும்பம். பெயருக்கே இது ஒரு குடும்பம். இந்த குடும்பமும் ஒரு குறியீடே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போல் ஆயிரமாயிரம் குடும்பங்கள். அதன் ஓலத்தை தங்கம்மா இராசையா குடும்பத்தை முன்நிறுத்தி ஓர் இலக்கிய வடிவம் தருகிறார் ஜீவகுமாரன். தங்கம்மா என்ற தலைமகளின் நிறைவான, நிம்மதியான குடும்பத்தில் பிறந்தவள் வதினி. இலங்கையில் பற்றி எரிந்த தீயும் எறிந்த குண்டுகளும் வதினியையும் சிவராஜாவையும் நார்வே நாட்டிற்கு தூக்கி வீசுகின்றன. அகதிகள் படும் அக, புற கஷ்டங்களைத் தாண்டி, வதினியும் சிவராஜாவும் வேணி என்ற ஒற்றை மகளோடு பெருவாழ்வு வாழும் பாக்கியம் பெறுகின்றனர். தனக்குக் கிடைத்த வாழ்வை தனது பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு அழகுபடுத்திப் பார்க்க விரும்புகிறாள் வதினி. இது பண்பாட்டு மோதல்களமே — வதினியின் நார்வே வாழ்க்கை. தங்கம்மாவின் இரண்டாவது மகள் கோமதியின் வழியே அகதி வாழ்வின் வேறொரு பரிமாணத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜீவகுமாரன். கோமதி சுட்டிப் பெண்ணா? சூட்டிகையான பெண்ணா? அறிவாற்றல் நிறைந்தவளா? முறத்தில் புலியை, தமிழ் மங்கையை நினைவூட்டுபவளா? கருணையே வடிவான மதர் தெரேசாவா? எல்லாம் கலந்து கலவை அவள். அவளுக்கு வாய்த்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள்? ஏற்றம் பெறுகிறாள். ஏணியாக வாழ்கிறாள் — என்பதே இரண்டாவது சாரம். நாவலின் அவலச் சுவை நிறைந்த பாத்திரம் விமலன். அறிவில், சிந்தனையில், செயலில் தற்கால இளைஞர்களின் முன்னுதாரணம். அகதி என்ற ஒரு காரணம். இத்தனைக்கும் இந்தியாவில் அகதி. தமிழ்நாட்டில் உள்ள நம்மில் பலர் அகதிகளின் முகமைக் கண்டு மட்டுமே சப்புக் கொட்டி இருப்போம். அகதிகள் வாழ்வு, அவர்களில் பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம், அவர்கள் நொறுங்கிப் போகும் தருணங்கள் நாம் அறியாதவை. எத்தனை இருந்தாலும், “இந்தியா எங்கள் இரவல் தாய்நாடு” என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறவும், வாழவும் வைக்கும் இடமாக இந்தியா இருக்கிறது என்பதை பேசும் பாத்திரப் படைப்பு சகானா. தங்கம்மாவும் இன்னும் அநேக தாய்மார்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடத்தி வரும் பண்பாட்டு பாரம்பரியத்தின் கொழுப் பொம்மையாக பாவிக்கப்படும் பாத்திரம் வேணி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேணி “ஆளாகி விட்டாள். பெரிய மனுஷி ஆகிவிட்டாள். வயதுக்கு வந்து விட்டாள்…” என்று எந்தச் சொல்லில் அழைத்தாலும் அதுவே அபசகுணம். பெண்னை சிறுமைப்படுத்தும் பேதமை, மனித மாண்புகளுக்கு எதிரான செயல் — என்ற நார்வே கலாச்சாரத்தை சுவாசித்து வளர்ந்து வருபவள். இலங்கையிலிருந்து நார்வே சென்று படையெடுக்கும் பண்பாட்டு படையெடுப்பை நார்வே மண்ணின் மாண்பு எப்படி எதிர்கொள்கிறது என்ற சித்திரம் அது. இப்படித்தான் இந்தப் பெருங்கதையை புரிந்துகொள்ள முடிகிறது. அகதிகளின் அவலக் குரலை ஓர் காவியக் குரலாக மாற்றுவதில் ஜீவகுமாரன் வெற்றி கண்டிருக்கிறார். அவரது “நெடிய பனைகள்” வெறும் நாவல் அல்ல — அது யாழ்ப்பாணத்தின் வேரிழந்த மனிதர்களின் இரத்தச் சுவடுகளால் எழுதப்பட்ட ஒரு இனத்தின் வரலாற்று ஆவணம். பனைமரம் போல வறண்ட மண்ணில் வேரூன்றி வானைத் தொடும் உறுதியோடு நிற்கும் வாழ்க்கை சிதைந்து சின்னமாகி, மீண்டும் நிமிர்ந்து நிற்பதை காட்டும் காவியம். “பனையின் எந்தப் பாகமும் பயனற்றதல்ல” என்ற முதல் வரிகள், ஓர் உவமையாகக் கண்முன் நிற்கின்றன. தங்கம்மா இராசையாவின் குடும்பத்தில் ஒரு பிள்ளையும் வீணாகிப் போகவில்லை. ஒரு தந்தையின் உறுதி, ஒரு தாயின் தியாகம், ஒரு மகளின் கனவு — இவை அனைத்தும் நாவலில் மனிதத்தின் நிலைத்தன்மையை காட்டுகின்றன. எழுத்தாளர் ஒவ்வொரு உரையாடலிலும், ஒவ்வொரு சிறு நிகழ்விலும் ஒரு முழு சமுதாயத்தின் மனவியல் நிலையை வெளிப்படுத்துகிறார். வெளிநாட்டு நாகரிகங்களில் மனித விழுமியங்கள், ஜனநாயகம் புதைந்து கிடைப்பதாக சொல்லப்பட்டாலும், மனிதனை பொருளாதாரத்தின் கருவியாக மாற்றியிருப்பதை எழுத்தாளர் நுட்பமாக சித்தரிக்கிறார். “பணம், பணம், பணம் – அனைத்தும் அதுவே தீர்மானிக்கிறது.” இந்த வரிகளில் நவீன உலகின் நெறி நெருக்கடிகள் நம்மை நேரடியாகத் தாக்குகின்றன. ஜீவகுமாரனின் எழுத்து முற்றிய பனைமரத்தின் சேவுக்கு ஒப்பானது. துளிரும் துயரும் ஒன்றாக அதில் துளிர்கின்றன. அவரது மொழி எளிமையானது, ஆனால் அதன் ஒலியில் வலியும் அம்மண்ணின் பெருமையுடன் கலந்து நிற்கின்றன. அவரின் எழுத்து திரைக்காட்சிகளாக நம் கண்முன்பு விரிந்து, சினிமா போல நம்மை நுழைய வைக்கும் உண்மைத் தன்மை கொண்டது. “நெடிய பனைகள்” – ஒரு மரபின் மறு வாசகம். நாவல் முடிந்த பிறகு வாசகனின் உள்ளத்தில் ஓர் இனிமையான நெருப்பு தங்குகிறது. அது பனையின் நிழலோ, அகதியின் நம்பிக்கையோ அல்ல — அது மனித குலத்தின் உயிர்மூச்சு. “நெடிய பனைகள்” அகதியின் கண்ணீரை அரசியலாக அல்ல, மனிதத்தின் நிழலாகப் படைக்கிறது. அது யாழ்ப்பாணத்தின் வரலாற்றையும், தமிழினத்தின் மனஅழுத்தத்தையும், பெண்மையின் உள் சக்தியையும் ஒரே நேரத்தில் நமக்குக் காட்டுகிறது. இந்த நாவல் யாழ் மண்ணின் பனைமரம் போலவே காலத்தால் காய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை காய்ந்தாலும் நிமிர்ந்து நிற்கும். குறிப்பு: டென்மார்க் வி. ஜீவகுமாரனின் “நெடிய பனைகள்” இரா.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய 2025 ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்று ரொக்கப் பரிசாக ரூபாய். 25,000 பரிசு பெற்ற நாவல். நாற்கரம் வெளியீடு. கட்டுரையாளர்: நா.மணி கூடுதல் பேராசிரியர் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூரு. https://minnambalam.com/nedhiya-panai-novel-review/- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இது உண்மைதான், நான் கேட்பது நேட்டோ எனும் பழைய முறைமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிற்கு மாற்றீடாக நேரடியாக ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்க உறவு நிலை. ஆர்டிகல் 5 எந்த ஒரு மாற்றத்தினையும் உக்கிரேனுக்கு ஏற்படுத்தாது என்பது தற்போதுள்ள நிலையில் சரியாக உள்ளது அமெரிக்க ஐரோப்பிய தங்குதடையற்ற ஆயுத உதவிகளால் இரஸ்சியாவினை தோற்கடிக்க முடியாது, அல்லது ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் கூறும் பொருளாதார தடை இரஸ்சியாவினை தோற்கடிக்காது ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க துருப்புகள் உக்கிரேன் போர் முனையில் நிறுத்தப்பட்டால் போரின் போக்கு மாறும், அவாறு படையினரை இரஸ்சியாவிற்கெதிராக பயன்படுத்தினால் உலக போர் ஏற்பட வாய்புள்ளது. ஐரோப்பாவோ அமெரிகாவோ தமது படையினரை பலிகொடுக்க தயாராக இல்லை, அதனாலேயே உக்கிரேனியர்களினது உயிர் பலியினை பயன்படுத்தி இரஸ்சியாவினை பலவீனமாக்கமுடியும் என இன்னமும் நம்புவதாலேயே தொடர்ச்சியாக போருக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு உத்தரவாதங்கள் காலவரையறைக்குட்பட்டதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை - ஜெலென்ஸ்கி Serhiy Sydorenko - 16 டிசம்பர், 17:19 வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 635 - பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் இதுவரை சில முக்கிய கூறுகளைத் தீர்க்காமல் விட்டுவிட்டன, அத்தகைய உத்தரவாதங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உட்பட. மூலம்: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தி ஹேக்கில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: சாத்தியமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து பல சுற்று விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், சில சிக்கல்கள் திறந்தே உள்ளன, குறிப்பாக உத்தரவாதங்கள் காலவரையின்றி இருக்குமா என்பது குறித்து ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். "இது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும், அல்லது சில உத்தரவாதங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவால் வரையறுக்கப்படுமா என்பதை என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை," என்று அவர் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினார். அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஒரு முக்கிய மற்றும் முக்கியமான தேவை என்னவென்றால், இந்த உத்தரவாதங்கள் "அமெரிக்க காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். மேற்கோள்: "காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட அத்தகைய உத்தரவாதங்கள் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்." மேலும் விவரங்கள்: விவாதத்தில் உள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவின் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார், இருப்பினும் இது என்னவாக இருக்கும் என்பது பற்றி அவர் விரிவாகப் பேசவில்லை. உத்தரவாதங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஆக்கிரமிப்பு மீண்டும் நிகழாது என்பதில் உக்ரைனுக்கு இன்னும் முழுமையான உறுதி இருக்காது என்று ஜெலென்ஸ்கி கூறினார். இந்த காரணத்திற்காக, பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் ஒரு தனி அம்சம், உத்தரவாதங்கள் இருந்தபோதிலும் ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலைத் தொடங்கினால் கூட்டாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது பற்றியது. மேற்கோள்: "புதிய ஆக்கிரமிப்புக்கு கூட்டாளிகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம். என்னை நம்புங்கள், நான் கூட்டாளிகளிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்கிறேன். ஆக்கிரமிப்பு இருந்தால், அமெரிக்கா எவ்வாறு பதிலளிப்பார்கள்? ஐரோப்பிய கூட்டாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள்? உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றும்? தடைகள், ஆயுதங்கள், கடலில், போர்க்களத்தில் பதில்கள் மற்றும் பல." மேலும் விவரங்கள்: கூடுதலாக, உக்ரைனின் பார்வையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பது ஒரு தனி பாதுகாப்பு உத்தரவாதமாகும், ஏனெனில் அது ஒரு புவிசார் அரசியல் முடிவு என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியுள்ளார். பின்னணி: கிறிஸ்துமஸ் போர் நிறுத்தத்திற்கான ஜெர்மனியின் கூட்டாட்சி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸின் அழைப்புக்கு கிரெம்ளின் பதிலளித்துள்ளது . அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்படும் தீர்வுகளை கிரெம்ளின் ஏற்க மறுத்தால், கூட்டாளிகளிடமிருந்து தான் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை ஜெலென்ஸ்கி முன்பே கூறியுள்ளார் . Ukrainska PravdaIt remains unclear whether security guarantees will be ti...Talks on security guarantees have so far left some key elements unresolved, including how long such guarantees would last.சிகப்பு எழுத்து வடிவில் செலன்ஸ்கி சில தரமான கேள்வியினை கேட்டுள்ளார், இது அமெரிக்க ஐரோப்பிய தரப்பினை சங்கடப்படுத்தும் நியாயமான கேஎள்விகள்.- இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?
இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை? Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு, முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்புகள் பேரழிவுகரமாகத் தோல்வியடைந்தன, இது 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளுக்கும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதற்கும் பங்களித்தது. இது எச்சரிக்கை இல்லாமல் வந்த கடவுளின் செயல் அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சோகம். தகவல் தொடர்பு முறையில் ஏற்பட்ட அமைப்பு ரீதியான தோல்விகள், தகவல்களைப் பரப்புவதில் உள்ள பாகுபாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ பதிலளிப்பு ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களை இயற்கையின் சீற்றத்திற்கு எதிராகப் பாதுகாப்பற்ற நிலையில் வைத்ததால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. எவ்வாறாயினும், எந்தவொரு வானிலை ஆய்வு நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை வெளியிடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இத்தகைய நிகழ்வுகள் மிகவும் நிச்சயமற்றவை மற்றும் கணிக்க முடியாதவை. சில சமயங்களில் அவர்கள் ஏழு நாட்களுக்கு முன்னதாக எச்சரிக்கை விடுகிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில் அதிக நிச்சயமற்ற தன்மை உள்ளது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட துல்லியம் என்பது மூன்று நாட்களுக்கு முன் மட்டுமே. அவுஸ்திரேலியாவிலும் நிலைமை இதுவே. புயல் கணிக்கப்பட்ட போதும், அதற்கு செவிசாய்த்தவர்கள் யார்? நவம்பர் 18ஆம் திகதிக்கும் 24ஆம் திகதிக்கும் இடையில், வானிலை ஆய்வு நிறுவனங்கள், டித்வா சூறாவளியாக மாறிய சுழற்சி பிறப்பை அடையாளம் கண்டு கண்காணித்தன. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) வளர்ந்து வரும் குறைந்த அழுத்த அமைப்பை அதிக அக்கறையுடன் கண்காணித்தது. சூறாவளி நவம்பர் 28 அன்று தரையிறங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகள் இருந்தன. பொதுவான வானிலை தரவுகள் இருந்தன. பிராந்திய அவதானிப்புகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் எப்படியோ, இந்தத் தகவல் திரட்சியை ஒரு பயனுள்ள நடவடிக்கையாக மாற்றத் தவறிவிட்டது. விஞ்ஞான ரீதியாக அறியப்பட்டதற்கும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதற்கும் இடையிலான இந்தத் துண்டிப்பு, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ வரலாற்றில் மிகவும் சேதத்தை விளைவித்த நிறுவனத் தோல்விகளில் ஒன்றாகும். இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் நவம்பர் 24ஆம் திகதி முதல் பொதுவான மழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டது. ஆனால், தேவையான அவசரமும், துல்லியமும் அதில் இல்லை. IMD போன்ற சர்வதேச நிறுவனங்கள் ‘சூறாவளி’ மற்றும் “ஆழமான தாழ்வு” பற்றிய விசேட எச்சரிக்கைகள் மற்றும் முக்கியமான முந்தைய நாள் அப்டேட்களை வெளியிட்டுக்கொண்டிருந்தபோது, இலங்கையில் அவை தாமதமாயின அல்லது முழுவதுமாக குறிப்பிடப்படவில்லை. “அதிக மழை எச்சரிக்கை” மற்றும் “சூறாவளி எச்சரிக்கை” ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு முக்கியமானது, ஏனெனில், அது மக்கள் தஞ்சம் அடைவதா அல்லது அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்வதா என்பதைத் தீர்மானிக்கிறது. இரு மொழியின் கதை: அனர்த்தத்தில் பாகுபாடு முன்னறிவிப்புத் தோல்வியின் மிகவும் கடுமையான குற்றத்தை உறுதிப்படுத்தும் அம்சம், எச்சரிக்கைகளைப் பரப்புவதில் உள்ள மொழிப் பாகுபாடு ஆகும். சில சமயங்களில் பல மொழிகளில் தொடர்புகொள்வது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கக்கூடிய ஒரு நாட்டில், முக்கியமான எச்சரிக்கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் அல்லது சில சமயங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டன. தமிழ் பேசும் சமூகங்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நியாயமற்ற தகவல் இடைவெளியை எதிர்கொண்டன. பெரும்பாலும் சிங்களம் (மற்றும் சில சமயங்களில் ஆங்கிலம்) மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்ட முக்கியமான, அவசர எச்சரிக்கைகள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் சமூகங்களுக்கு பல மணித்தியாலங்கள் தாமதமாகக் கிடைத்தன அல்லது தமிழில் முழுவதுமாக இருக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பத் தவறு அல்ல. மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில், ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதி மக்களுக்கு உயிர்காக்கும் தகவல்களை வழங்காத ஒரு அமைப்பு ரீதியான தோல்வி அது. ஒரு சூறாவளி நெருங்கும்போது, நிமிடங்கள் மற்றும் மணிநேரங்கள் எண்ணப்படுகின்றன. தமிழில் எச்சரிக்கைகள் தாமதமானதும் அல்லது இல்லாததும், உயிரிழப்பு விளைவுகளை ஏற்படுத்திய தகவல் சமச்சீரற்ற தன்மையை உருவாக்கியது. மக்கள் தொகையில் சிலர் அவசர எச்சரிக்கைகளைப் பெற்றனர், மற்றவர்கள் முற்றிலும் அறியாத நிலையில் சிக்கினர். இது வெறும் செயல்பாட்டுத் தோல்வி மட்டுமல்ல; அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்கள் பேசும் மொழியைப் பொருட்படுத்தாமல், சமமான பாதுகாப்பையும், உயிர்காக்கும் தகவல்களுக்கான சமமான அணுகலையும் வழங்குவதற்கான அடிப்படைக் கொள்கையின் மீதான மீறலாகும். அரசாங்கத்தின் மிகவும் தாமதமான பதிலளிப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், நெருக்கடி விரிவடைந்து கொண்டிருந்தபோது, விவரிக்க முடியாத மந்தநிலையுடன் செயல்பட்டனர். சில குடியிருப்பாளர்கள் எந்த உத்தியோகபூர்வ எச்சரிக்கையும் பெறவில்லை என்று தெரிவித்தனர். பல பகுதிகளில், எல்லாம் மிக வேகமாக நிகழ்ந்தன, மேலும் அவர்களுக்கு விரைவான வெள்ளம் பற்றிய எந்த முன் எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. தலைநகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் கூட, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உத்தியோகபூர்வ வெளியேற்ற உத்தரவுகள் ஒருபோதும் கிடைக்கவில்லை என்ற விடயம் பயங்கரமானது. சூறாவளி நாடு முழுவதும் பாரிய அழிவை ஏற்படுத்திய பின்னர், நவம்பர் 29 அன்று அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகள் கிடைத்திருந்தால், சூறாவளியின் பாதை உள்ளூர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டிருந்தால், பேரழிவு ஏற்கனவே நடந்துகொண்டிருந்த பின்னரே உத்தியோகபூர்வ அவசரகால அறிவிப்புகள் ஏன் வந்தன? வானிலை ஆய்வு நிறுவனங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லாமலிருந்ததாலா அல்லது அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டதாலா அல்லது இரண்டும் சேர்ந்ததாலா இந்தத் தாமதம் ஏற்பட்டது? உண்மையான அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுதல் முன்னறிவிப்பு தோல்விக்கான மற்றொரு முக்கியமான காரணி, முதன்மை அச்சுறுத்தலைப் பிழையாகப் புரிந்துகொண்டது ஆகும். IMD ஒரு தாழ்வு அழுத்த அமைப்பை ஒரு சூறாவளியாகக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையில் சுழற்காற்றுப் புயல்களை விட அசாதாரண மழைப்பொழிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளாலேயே முதன்மையான தாக்கம் ஏற்பட்டது. முன்னெப்போதும் இல்லாத மழைப்பொழிவு ஆறுகள் மற்றும் வடிகால் அமைப்புகளை தாங்க முடியாத வேகத்தில் நிரப்பியது. நிலச்சரிவுகள் சமூகங்களை முழுவதுமாகப் புதைத்தன. ஆனால், ஆரம்ப உள்ளூர் தகவல்தொடர்புகள் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டு, மிகவும் பொதுவான சூறாவளி எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது. இது வானிலை முன்னறிவிப்புகளை, இடம்சார்ந்த அபாய மதிப்பீடுகளாக மாற்றுவதில் உள்ள இடைவெளியைக் குறிக்கிறது. சூறாவளி வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்று; அது நிலச்சரிவு அபாயமுள்ள, ஏற்கனவே உயரமான நிலங்களில் சாதனைகளை முறியடிக்கும் மழையைப் பொழியும் என்பதைப் புரிந்துகொள்வது வேறு. பிந்தையதற்கு வானிலை ஆய்வு மட்டுமல்ல, நிலவியல், நீரியல் மற்றும் உள்ளூர் பாதிப்பு நிலைமைகள் பற்றிய நெருக்கமான அறிவும் தேவை. அதிக மழையில் இருந்து பேரழிவு தரும் வெள்ளத்திற்கு விரைவான மாற்றம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. பல நூற்றாண்டுகள் பழமையான ஆறுகள் திடீரென வீடுகளையும், பாலங்களையும், உயிர்களையும் அடித்துச் செல்லும் நீரோட்டங்களாக மாறின. பல தலைமுறைகளாக இருந்த மலைச்சரிவுகளில் உள்ள சமூகங்கள் புதைக்கப்பட்டன. அமைப்பு ரீதியான தோல்விகள் மற்றும் அமைப்பு ரீதியான தீர்வுகள் டித்வா சூறாவளியை போதுமான அளவு முன்னறிவித்து எச்சரிக்கத் தவறியமை, இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை உள்கட்டமைப்பில் உள்ள ஆழமான அமைப்பு ரீதியான சிக்கல்களை அம்பலப்படுத்துகிறது. இருப்பினும், வானிலை முன்னறிவிப்பு என்பது தொழில்நுட்ப சவால்கள் நிறைந்தது. சூறாவளிப் பாதைகளைக் கண்காணிக்க முடிந்தாலும், குறிப்பாக மழை மற்றும் நிலச்சரிவுகளால் மிக மோசமாக பாதிக்கப்படும் இடங்களைத் துல்லியமாக முன்னறிவிப்பது சிக்கலாகவே உள்ளது. இலங்கைக்கு வானிலை முன்னறிவிப்புகளை நிலவியல் அபாய மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைக்கும் மேம்படுத்தப்பட்ட மாதிரி திறன்கள் தேவைப்படுகின்றன. தகவல் தொடர்பு உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, எச்சரிக்கை அமைப்புகள் இயல்பு நிலையிலேயே பல மொழிகளில் இருக்க வேண்டும், பின்னர் வந்த சிந்தனையாக இருக்கக்கூடாது. தொலைக்காட்சி, வானொலி, கையடக்கத் தொலைபேசி எச்சரிக்கைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள் மூலம் தகவல்கள் ஒரே நேரத்தில் மற்றும் அனைத்து மொழிகளிலும் பகிரப்பட வேண்டும். தேவையான தொழில்நுட்பம் உள்ளது; தேவைப்படுவது, அந்தத் தொழில்நுட்பத்தை பாரபட்சமின்றிப் பயன்படுத்த நிறுவன விருப்பமும் செயல்பாட்டு கட்டமைப்பும் ஆகும். பின்னர் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வருகிறது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும், எச்சரிக்கைகளை அதிகரிப்பதற்கும் அவசரகால பதிலளிப்பைத் தொடங்குவதற்கும் தெளிவான நெறிமுறைகளுடன் (protocols) செயல்பட வேண்டும். இறுதியாக, மிக முக்கியமாக, எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் விதத்தில் ஒரு கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும். அனர்த்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் சாதாரணமாகக் கருதப்படுகின்றன. உண்மையான அவசரநிலை ஏற்படும்போது, மக்கள் தாங்கள் பெறும் தகவல்களை நம்பிச் செயல்படக்கூடிய ஒரு தயார்நிலைக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு காலப்போக்கில் நிலைத்திருக்கும், தெளிவான மற்றும் நம்பகமான தொடர்பு தேவைப்படுகிறது. தோல்வியின் விலை 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அழிவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்தத் தோல்விக்கு நாடு கொடுக்கும் பெரும் விலையாகும். கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன அல்லது புதைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைகள் சிதைந்துள்ளன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவர்கள் அப்பாக்கள் மற்றும் அம்மாக்கள், மகன்கள் மற்றும் மகள்கள், இழப்பைக் குறைத்திருக்கக்கூடிய சமூகங்கள். பேரழிவின் அளவைக் கணிக்கத் தவறியதற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது. சங்கடமாக இருந்தாலும், சமூகங்கள் கற்றுக்கொள்வதும், அமைப்புகள் மேம்படுவதும், எதிர்கால துயரங்களைத் தடுப்பதும் அவ்வாறுதான் என்பதால் நேர்மறையான மற்றும் கட்டமைப்பு ரீதியான விமர்சனம் அவசியம். பொதுவான வானிலை தரவுகள் பிராந்திய அளவில் கிடைக்கப்பெற்றன. சூறாவளி கண்காணிக்கப்பட்டது. அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் அறியப்பட்டது. இருப்பினும், துல்லியமாக முன்னறிவிப்பது, அதிகரித்து வரும் அபாயத்தை தெளிவாகத் தொடர்புகொள்வது மற்றும் இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை வழங்குவது தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியின் பாசாங்குத்தனம் எதிர்க்கட்சியின் செயல்பாட்டை பார்க்கும்போது, ஒரு காலத்தில் நாடு நன்கு நிர்வகிக்கப்பட்டது, பொறுப்புடனும் ஊழல் இல்லாமலும் இருந்தது என்ற உணர்வு ஒருவருக்கு வரலாம். இயற்கையாகவே, இதில் எந்த உண்மையும் இல்லை. முன்னர் இருந்த அரசாங்கங்கள், அதாவது இப்போதுள்ள எதிர்க்கட்சிகள், அனர்த்தங்களை எவ்வாறு கையாண்டன என்பதில் இலங்கைக்கு மோசமான அனுபவங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது நல்லது. தற்போதைய அரசாங்கத்தின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகும். ஆனால், 25 மாவட்டங்களில் குறைந்தது 25 ஆண்டுகளாக இத்தகைய பேரிடருக்கு தேவையான நிலைமைகள் உருவாகி வந்துள்ளன. உள்நாட்டுப் புவியியலாளர்களும் அனர்த்த நிபுணர்களும் மத்திய மலைப்பகுதிகளின் அபாயங்கள் குறித்து பல ஆண்டுகளாக விவாதித்துள்ளனர். காடழிப்பு, பலவீனமான விவசாயம் மற்றும் கட்டுமான நடைமுறைகள், மாறுபடும் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மண்ணின் கலவை ஆகிய அனைத்தும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அபாயத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக, அபாயகரமான சரிவுகளை சுட்டிக்காட்டியும், உடனடியாக வெளியேறுமாறு கோரியும் நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை (சமீபத்தியது நவம்பர் மாத இறுதியில்) வெளியிட்டுள்ளனர். உண்மையில், அரசாங்கம் செயல்படுவதில் மெதுவாகவே இருந்தது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல தசாப்தங்கள் கால அவகாசம் இருந்தபோதிலும், அவர்கள் அதைச் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். முன்னோக்கி செல்லும் வழி டித்வா சூறாவளியை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. இது பரந்த உலகளாவிய காலநிலை வடிவத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. சீனா முதல் தமிழ்நாடு வரையிலும், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இலங்கை வரையிலும் கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் தயாராக இருக்க வேண்டிய காலநிலை அனர்த்தங்களின் அளவு குறித்த ஒரு கூர்மையான எச்சரிக்கையாக அமைகின்றன. எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனமான கோபம், நாம் தற்போது செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பக்கூடாது. இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்போது, டித்வா சூறாவளியின் படிப்பினைகளைக் கற்று, ஒவ்வொரு மட்டத்திலும் பேணப்படும் ஒரு அனர்த்தத் தயார்நிலையை இணைக்க வேண்டும். காலநிலை மாற்றம் மேலும் தீவிரமான வானிலை, கடுமையான மழைப்பொழிவு மற்றும் அடிக்கடி ஏற்படும் அனர்த்தங்களை முன்னறிவிக்கிறது. இலங்கைக்கு மற்றொரு டித்வா எதிர்கொள்ள நேரிடுமா என்பது கேள்வி அல்ல. கேள்வி என்னவென்றால், அது நிகழும்போது, எங்கள் பன்முக சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் சென்றடையுமா; உயிர்களைக் காப்பாற்றும் வகையில், இருக்கும் முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப, அரசாங்க நிறுவனங்கள் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுமா என்பதாகும். டித்வா சூறாவளியின் முன்னறிவிப்புத் தோல்வி தவிர்க்க முடியாதது அல்ல. இது கடந்த நிர்வாகத்தால் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட, அடையாளம் காணக்கூடிய அமைப்புரீதியான பலவீனங்களின் விளைவாகும். அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்ய முடியும். அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சிகள், அரசாங்க அதிகாரிகள், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் அரசியல் சண்டைகள் மற்றும் குறை சொல்வதில் ஈடுபடுவதற்குப் பதிலாக, உண்மையில் முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, இந்த அனர்த்தத்தில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதும், எதிர்கால நெருக்கடிகளுக்காக ஒரு வலுவான அனர்த்தத் தயார்நிலையை உருவாக்குவதுமாகும். குற்றம்சாட்டும் காலம் கடந்துவிட்டது. இப்போது கூட்டு நடவடிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட தயார்நிலைக்கு நேரம் வந்துவிட்டது. லயனல் போபகே https://maatram.org/articles/12480- உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0 உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் நேற்று உரையாற்றிய போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம். ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது. ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/more-territory-will-be-seized-in-ukraine-putin-warns/- தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன 'மஞ்சள் அனகொண்டா' கண்டுபிடிப்பு.! Vhg டிசம்பர் 17, 2025 தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 'மஞ்சள் அனகொண்டா' குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன பூங்காவின் பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கடத்தி வரப்பட்ட மஞ்சள் அனகொண்டா உட்பட 4 வகையான 6 பாம்புகளைக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். இவை கடந்த (2025.09.15) அன்று பராமரிப்பிற்காகத் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் ஒரு வயதுடையதும், ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமானதுமான இந்த அனகொண்டா குட்டி, ஊர்வன பூங்காவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதே காணாமல் போனது. மிருகக்காட்சிசாலையிடம் இருந்த இலங்கையின் ஒரேயொரு மஞ்சள் அனகொண்டா இதுவாகும். இது குறித்து கடந்த 7 ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தவறுதலாகப் பெட்டியின் கதவை மூடாமல் விட்டதால் குட்டி வெளியே சென்றிருக்கலாம் எனப் பராமரிப்பு ஊழியர் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16.12.2025) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/12/blog-post_7638.html- மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் ! 18 Dec, 2025 | 11:17 AM நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233701- டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி! 18 December 2025 இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர். குறித்த தீவில் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமையால், இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். முன்னதாக உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றில், அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். எனினும், குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து, தீவுக்கான ஆணையாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது மேன்முறையீட்டின் நான்கு காரணங்களும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், 60இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை நீண்ட காலத்திற்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமைக்காக, பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக செலுத்த நேரிடும் என, பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/436351/the-detention-of-sri-lankan-tamils-on-diego-garcia-island-is-illegal-british-court-takes-action-again - “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.