Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு! 2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில் 216 பேர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் 490 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார். விபத்துக்களில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் ஆவார் (45), அதேநேரம் மோட்டார் சைக்களின் பின் இருக்கையில் இருந்து பயணித்த 07 பேரும் உயிரழந்துள்ளனர். இது தவிர விபத்துக்களில் பாதசாரிகளும் அதிகளவில் (33 பேர்) உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்க, சாலைப் பாதுகாப்பு அமுலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1460762
  3. கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் மோகத்தால் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது புதன்கிழமை (21) 4,800 அமெரிக்க டொலர்களையும் விஞ்சியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கிரீன்லாந்து மீதான நாட்டம் ஐரோப்பாவுடன் மீண்டும் ஒரு வர்த்தகப் போர் அச்சுறுத்தலை தூண்டியுள்ள நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை காலை GMT நேரப்படி 02.26 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 1.2% உயர்ந்து 4,821.26 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநரேம், பெப்ரவரி மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,813.50 ஆக இருந்தது. பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் போது பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் 64% உயர்ந்தது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மேலும் 10% அதிகரித்துள்ளது. அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகளும் இந்த உலோகத்தின் ஏற்றத்திற்கு துணைபுரிந்துள்ளன. அதேநேரம்,செவ்வாய்க்கிழமை 95.87 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர் ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் புதன்கிழமை (21) 1% குறைந்து 93.59 அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஸ்பாட் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7% குறைந்து $2,445.96 ஆகவும், பல்லேடியம் 0.5% குறைந்து $1,857.19 ஆகவும் பதிவானது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 380,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 351,500 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460802
  4. படம்: இருவர் உள்ளம் (1963) இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: TMS வரிகள்: கண்ணதாசன் கண்ணேதிரே தோன்றினாள்..
  5. Today
  6. படிக்க ஆர்வம் உள்ள பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் ... ஏகலைவன் தூர நின்று துரோணரின் கலையை பயின்றதும், ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்ததும் போல இந்த பிள்ளை எதோ செய்ய ட்ரை பண்ணி இருக்கு போல. இங்கு எந்த ஒரு பல்கலை கழக விரிவுரையிலும் யாரும் போய் உட்கார்ந்து இருந்து படிப்பிப்பதை கேட்டுக் கொண்டு இருக்கலாம். ஈத் கார்டு பார்த்து உள்ளே அனுப்புவதில்லை. மாணவ விடுதிக்கு எப்படி போனார் என்பது தான் பெரிய கேள்வி?
  7. இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
  8. இன்றைய திகதிக்கு உலக அரங்கின் நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியான உரையை நான் வாக்களித்த கட்சியின் பிரதமர் ஒருவர் உரையாற்றினார் என்ற பெருமையோடு...
  9. ம், அவ அனுமதி பெறாமல் கற்றிருக்கிறார், இவர்கள் அனுமதி கொடுக்காமல் அவரின் பெயரை சரி பார்க்காமல் கற்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் மாணவர் தொகை, வருகை சரிபார்க்காமல் கற்பிப்பார்களோ? அது இருக்க, இப்போ மருத்துவ கற்கை சித்தியெய்திய சான்றிதழ் இல்லாமற்கூட தனியார் மருத்துவ நிலையம் நடத்துகிறார்களாம், அவர்கள் பிடிபட்டவுடன் போலி வைத்தியர் என்கிறார்கள்.
  10. Yesterday
  11. என்னைப் பொறுத்த மட்டில் உங்கள் செயல்பாடுகள் எதற்கும் நான் தடங்கலாக இருக்க போவதில்லை.என்னால் முடியும் போது ஏதாவது செய்வேன் அவ்வளவு தான்.பயளாளிகளை கஸ்ரப்படுத்தாமல் இருந்தால் சரி.நன்றி.
  12. நான் பார்த்த செய்தியைத்தான் பதிவேன் ...தேவையில்லாமல் அலட்டமாட்டேன் ... அவ்வளவுதான் ...டொட்
  13. சிறியர் கழுவுறமீனில நழுவுறமீன் தமழரசுக்கட்சியையும் வீட்டுச்சின்னத்தையும் விட்டு வரமாட்டார்..ஏனெ;றால் அந்தக்கட்சியில்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடவாவது முடிந்தது. இப்ப தமிழரசுக்கட்சி உட்பட எல்லாக்கட்சிகளும் வண்மான் ஆர்மிதான். சனம் வெறுப்படைந்து என்பிபிக்கு வாக்களிச்சு என்பிபி வேட்பாளர் மாகாணசபை முதலமைச்சராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  14. ஏராளன் - செயல்கள் அத்தனைக்கும் நன்றி. கட்டப்பட்ட பின்னான படங்கள் ஒரு உத்தேகத்தை தருகிறது.
  15. இதையும் நாமே செய்து கொடுக்கலாம் என்பது என் அபிபிராயம். வாத்தியார் அண்ணா, குசா அண்ணா, யாயினி அக்கா இவர்களோடு ஏனையவர்களும் உங்கள் கருத்தை சொல்லவும். பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு புலரிடம் இருந்து எடுக்க தேவையில்லை. கீழே வாத்தியார் அண்ணா சொன்னது போல், இவ்விரண்டு வேலைகளையும் pilot ஆக செய்வது என்பது நாம் கூடி எடுத்த முடிவுதான். அதை அப்படியே செய்வோம். குசா அண்ணை கேட்டது நாம் தொடர்ந்தும் திருத்தபணிகளையா அல்லது புதிய கட்டுமான பணிகளையா செய்யப்போகிறோம் என்பதையே. தொடர்ந்து புதிய கட்டுமானப்பணிகளைத்தான் செய்ய போகிறோம். வேறு யாரும் இதுபோல் திருத்த பணி உதவி கோரின், அதை அப்போது பரிசீலிப்போம்.
  16. பார் சிறிக்கு ஒரு ஐடியா. இவர் ஏன் உதுக்க கிடந்து மாளுவான்? தனியா கட்சி தொடங்கி, கிளிநொச்சியில் ஒத்தை ரோசாவாக (உங்கள் தலைவர் போல்) வலம் வரலாமே?
  17. முதலில் அராலியில் ஒரு வீட்டுத்திட்டத்துடன் பூரணப்படுத்தாத வகையில் இருக்கும் கழிவறையைப் பூரணப்படுத்திக் கொடுப்பதற்கான ஆலோசனையை ஏராளன் முன்வைத்த பொது கு சா அண்ணை தானே அதற்கு எவ்வளவு செலவாகும் என அறியாத தரவும் எனவும் கேட்டிருந்தார். அதன் அடிப்படையிலும் நாங்கள் முன்னோடியினூடாக நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக இந்த அராலி உறவின் தேவையையும் அதன் பின்னர் பொன்னாலையில் வாழும் இயலாத சகோதரர்களுடைய தேவைகளையும் செய்து பார்க்கலாம் என்ற கோஷானின் ஆலோசனைப்படி எல்லோருமே ஏற்றுக் கொண்டு தானே ஏராளன் இவற்றை செய்து வருகின்றார். கு சா அண்ணை அதைக் கவனிக்காமல் இப்படி எழுதியிருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்.
  18. ஹொலிடே முக்கியம் குமாரு😂 குட் மோனிங் சேர்…. எண்டு நல்லா குழையல் புக்கை எல்லோ கொடுத்திருக்கினம் யாழ் மக்கள். தமிழ் புக்கையை சொன்னேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.