Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பூக்குழியில் இறங்குதல் =தீமிதிப்பு கொசுறுச் செய்தியும் ஒன்றிருக்கு....என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் ...எமது ஆலயத்தில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இந்த தீ மிதிப்பை செய்திருக்கின்றேன்....இப்போது நினைத்தாலும் பெரும் அதிசயமாகவே தெரியும் இந்த பூக்குழி இறக்கம்... புகழ் பெற்றது ...உடப்பும் ...பாண்டிருப்பு திரொபதை அம்மன் கோவிலும் ... ஆர்வ பக்தி...மிகுதியிலும் ...இந்த இரண்டு கோவில் தரிசனமும் செய்திருக்கின்றேன்....
  3. உண்மை தான்,மதங்கள் தான் இனி தாயகத்தை காப்பாற்ற வேண்டும்...பெளத்தமும் ,இஸ்லாமும் அதை செய்யப்போவதில்லை... சைவமும் கிறிஸ்தவமும் தமிழ்மொழி ஊடாக தாக்கு பிடிக்கும் சந்தர்ப்பம் உண்டு...காலம் பதில் சொல்லும் 50 வருடங்களின் பின் சிங்களவர்களே இந்தியாவிடம் தங்கள் நிலப்பரப்பை இழந்து விடுவார்கள் , சிறிலங்காட‌ ஜெயவேவா என்று சொல்வதற்கு பதிலாக ,ஜெய்ஹிந்த் சொல்லவேண்டிய நிலை வருமோ தெரியாது
  4. அமெரிக்க கடன் 39 ரில்லியன்!!! --- --- --- *சீன யுவான் சர்வதேச சந்தையில் 30 சதவீதமாகும் வாய்ப்பு *சீன யுவானில் எரிசக்தியை கொள்வனவு செய்த இந்தியா! *ஈழத்தமிழர்கள் சீன அபிவிருத்தி திட்டங்களை ஏன் எதிர்த்தனர்? --- --- --- ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர், அமெரிக்க டொலரை (Us Dollar) காப்பாற்றும் நோக்கில் சீன யுவானுக்கு (Chinese Yuan) எதிராக நடத்தப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் காலம் காலமாக அமெரிக்க டொலர் ஒற்றை நாணயமாக செல்வாக்குச் செலுத்தி வந்தது. எண்ணெய் வர்த்தகத்தில் கூட அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. தற்போதும் சர்வதேசச் சந்தையில் சுமார் 80 வீதம் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில், சீனாவின் யுவான் நாணயம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரண - காரியமாக ரசியாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, மோடிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்தியா, ரசியாவிடம் இருந்து சீன யுவானில் 10.2 வீதமான கச்சா எண்ணெய்யை கொள்வனவு செய்ததாக ரொய்டர்ஸ் (reuters) செய்தி நிறுவனம் சென்ற 19 ஆம் திகதி தெரிவித்திருந்தது. ஆனால் இது பிரத்தியேகமான கட்டண முறை அல்ல, ஏனெனில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நெகிழ்வான கட்டண விதிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரசிய எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சொரோகின் (Pavel Sorokin) தெரிவித்துள்ளார். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஈரான் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், இந்தியா வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை யுவானில் கொள்வனவு செய்தால், அமெரிக்காவுக்கு மிகப் பெரும் தலையிடியாக அது இருக்கும் என்று எக்கனாமிக் ரைமஸ் (economictimes) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 120 பில்லியனுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய உள்ளடக்கிய வளைகுடா நாடுகள், சீன- ரசிய மற்றும் இந்தியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இணைந்த பின்னர், உலக எரிசக்தி விற்பனை 80 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைவடைந்துள்ளது. சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் நுழைவது பற்றி அல்ஜசீரா ஊடகம், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி என வர்ணித்துள்ளது. ரசியா - ஈரான் ஆகிய நாடுகள் தமது சர்வதேச வர்த்தக செயற்பாடுகளை யுவானுக்கு மாற்றியுள்ளதாக அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் ஆகக் குறைந்தது 30 சதவீதத்தை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான ஈரான் போன்ற நாடுகள் சீன யுவானில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. தற்போது ஆயுத உற்பத்திக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சீனா, ஈரானுக்கு வழங்குகிறது. ஆகவே, இப்பின்னணியில் ”பிறிக்ஸ்” (BRICS) பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சியும் வளைகுடாவை மையப்படுத்திய மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் எல்லாமே பிறிக்ஸில் இணைந்துள்ள பின்னணியில், தற்போது அமெரிக்காவின் தேசியக் கடன் $38.5 ட்ரில்லியனாக உயர்ந்து, வட்டிச் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 இன் பிற்பகுதியில், மாதாந்த வட்டி செலுத்துதல்கள் மட்டும் $276 பில்லியனைத் தொட்டன, இது இப்போது சில கூட்டாட்சி நிறுவனங்களின் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் போட்டியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் விகிதம், ஏறத்தாள 126% இருப்பதால், "நிதி ஆபத்து மண்டலம்" (Financial risk zone) என்று அழைக்கும் பகுதிக்குள் அமெரிக்கா நுழைவதாக எக்கனமிக் ரைம்ஸின் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரச் சரிவுகளின் போது அது ஒரு நாட்டின் முன்னோடித் திறனை வரலாற்று ரீதியாக வரம்புக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் $8 பில்லியன் கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைமையை அடைகிறது. $38.5 ட்ரில்லியன் கடன் என்பது உடனடிக் கணிப்பீடு. ஆனால், இத் தொகை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மிக நீண்ட வட்டி விகிதத்தை அமெரிக்கா செலுத்தியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு எக்கனமிக் ரைம்ஸ் விளக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்புகள் 1.5% இற்கு கீழ்நோக்கி அமைந்துள்ளன. இது அமெரிக்கா சேர்த்து வைத்த உறுதியான நிதிக் கட்டமைப்பை அடித்துச் செல்லும் சுனாமி போன்றது என எக்கனமிக் ரைம்ஸ் வர்ணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளும் சர்வதேச சந்தையில், பல்வகை நாணய பயன்பாட்டுக்கு ((Multi currency) இணங்கி வரும் சூழலில், ஒற்றை நாணயச் செயற்பாடு (Single currency) என பிடிவாதமாக நின்ற அமெரிக்காவும் அதன் டொலரும் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளது. ஆனால், இந்த விடயங்கள் தொடர்பாக ட்ரம்ப் ஆராய்வதாக இல்லை. ட்ரம்பினுடைய உடனடிக் கவனம் என்பது ஈரான் அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கைப்பற்றி அதன் ஊடாக எண்ணெய் வருவாய்களை அதிகரிப்பது மாத்திரமே. சர்வதேச சந்தையில் ஒற்றை நாணய பயன்பாட்டை தொடர முடியும் என ட்ரம்ப் நம்புகிறார். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர், குறிப்பாக ஈரானின் மூளையாக செயற்படும் சீனாவினால் ட்ரம்பின் இந்தக் கனவுக்கு இடமளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், அமெரிக்க கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் கூட ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒத்துழைப்பதாக இல்லை. இந்தியாவும் ரசிய - சீன கூட்டு என்ற நிலைமக்குள் தற்போது வந்துள்ளது போல் தெரிகிறது. ஆகவே, ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது பட்டவர்த்தனம். ஆனாலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள்- அமெரிக்க தீர்மானம் எடுப்போர் அது பற்றி தீவிரமாக ஆராய்கின்றனர். இருந்தாலும் சர்வதேச சந்தையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் தாக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்த முடியாது என விஞ்ஞானியும் பசிபிக் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனருமான பீட்டர் க்ளீக் (Pacific Institute co-founder Peter Gleik) குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் கடன் (loan) என்பது நேரடியானது அல்ல. அமெரிக்க மக்கள் (individual investors) வங்கிகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள் (mutual funds - pension funds) அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அரசு அமைப்புகள் (Social Security fund) ஆகியவற்றிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. அமெரிக்க அரசின் அரச பத்திரங்கள் எனப்படும் பிணைமுறி (Treasury bonds / bills / notes) ஆகியவற்றை அமெரிக்கா விற்பனை செய்தும் நிதியை பெறுகிறது. அமெரிக்க மக்கள் மற்றும் ஏனைய நாடுகள் அந்த பிணை முறிகளை கொள்வனவு செய்கின்றன. இதுவே அமெரிக்க கடனாகவும் மாறுவதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. சுமார் 70%–75% கடன் அமெரிக்க உள்ளக முதலீட்டாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் சுமார் 80 சதவீதம் டொலரின் ஆதிக்கம் உண்டு என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்ட இக் கடன்கள், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்ற தொனியை அல்ஜசீரா ஊடகம் வெளிப்படுத்துகிறது. ஆகவே, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது 2025 ஆம் ஆண்டு மையப் பகுதியில் அமெரிக்காவுக்கு குறிப்பாக ட்ரம்புக்கு இவை தெளிவாக தெரிந்த பின்னணியில் தான், இறக்குமதி ஏற்றுமதிகளில் அதிக வரியை (tariff tax) ஏனைய நாடுகள் மீது சுமத்தியுள்ளார் என்பது கண்கூடு. இந்தப் பின்புலத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுடன் இருந்த பொருளாதார உறவை மாற்றி ரசிய - சீன உறவு முறைமை ஒன்றுக்குள் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. இதனை இலங்கையும் சாதகமாக பயன்படுத்தி வந்தது. ஏனெனில், இலங்கை ஏற்கனவே சீன உறவை வைத்திருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க - இந்திய தயவை நாடியிருந்தது. ஆனால் ஈரான் போர் மற்றும் அமெரிக்க நிதி நெருக்கடிகள் காரணமாகவும் சீன யுவானில், இந்திய எரிசக்தியை கொள்வனவு செய்ய ஆரம்பித்தமையும் இலங்கைக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே, புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலுக்குள் எந்த ஒரு வல்லரசு நாடுகளையும் நேரடியாக ஆதரிப்பதை விட, தமது நாடு என்ற கொள்கையோடு செயற்பட்டால், நிலைமையை சமாளிக்க முடியும். குறிப்பாக அரசு அற்ற தேசிய இனங்கள் இக்கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குர்திஸ் இன போராளிகள் காலத்துக்கு காலம் அமெரிக்காவை ஆதரித்து பின்னர் அமெரிக்காவினால் தூக்கி எறியப்படுவது போன்ற காரணத்தால் இன்று வரை அவர்கள் தமது அரசியல் விடுதலையை அடைய முடியாத சிக்கல் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனநாயக சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகள், அமெரிக்க - இந்திய அரசுகள் என்ற இரண்டு அரசுகளைத் தவிர வேறெந்த அரசுகளுடனும் உறவை பேணவில்லை. ஏனைய நாடுகளுடன் ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய விடயங்கள் பற்றிப் பேசியதும் இல்லை. குறிப்பாக சீனா, வடக்கு கிழக்கில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை செய்ய முற்பட்டால் உடனடியாக எதிர்த்து, இந்திய விசுவாசத்தை காண்பிப்பது போன்ற உத்திகளை மாத்திரமே கையாண்டனர். ஆனால் அந்த உத்திகள் மிகத் தவறானது என ஏலவே, இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஈரான் போருக்குப் பின்னர் மாறவுள்ள உலக அரசியல் ஒழுங்கில் இந்திய - சீன உறவு, இந்திய - ரசிய உறவு வலுவடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக பொருளாதார முறைமைகளில் இந்திய - சீன உறவு மேலோங்கவுள்ள பின்னணியில், சீனாவுக்கு எதிரான இந்தோ - பசுபிக் பிராந்திய இராணுவ செயற்பாடுகளிலும் அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. பாதுகாப்பு விடயத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்பின்னணியில், ஈழத்தமிழர் தரப்பு இனிமேலாவது தமக்குரிய வெளியுறவுக் கொள்கையை வகுத்து சார்புத் தன்மை அற்ற உத்திகளை கையாள வேண்டும். ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்படுகின்றனர். அதேபோன்று அமெரிக்கா - இந்தியா - சீனா ஆகிய மூன்று நாடுகளையும், ஒரு புள்ளியில் நின்று கட்சி அரசியலுக்கு அப்பால் கையாளுகின்றனர். இந்திய வெளியுறவுக் கொள்கையோடு ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு அனுசரித்துச் செல்கிறது. ஆகவே, ஈழத்தமிழர் ”அரசியல் விடுதலை” என்பதை இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குள் முற்றாக மாற்றக் கூடிய ஏற்பாடுகளை அநுர அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள பின்னணியில். ஈரான் போரின் பின்னரான உலக அரசியல் ஒழுங்கில் கூட, ஈழத்தமிழர் பக்கம் நியாயம் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான வழிமுறைகளை தேட வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. இன்னமும் காலம் சென்றுவிடவில்லை. ஆனால், எந்த வகையான தயாரிப்புகளும் ஈழத்தமிழர் தரப்பில் இருப்பதாக அல்லது அதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0AenR8ViQdroSpnMHwMygXRdHfGGHBV82LF1u9JzQ2DFNn3ktrDVcsPov1qztvp92l/?mibextid=wwXIfr
  5. இருக்கலாம்.. சைபிரஸ் மீது ஏவப்பட்ட ஏவுகணை கூட ஈரானில் இருந்து வரவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு முன்னர் அறிவித்தது. முதலில் இதை ஈரான் உரிமை கோரியதாக சொன்னார்கள் 4000 கிமி போக கூடிய ஏவுகணை ஈரானிடம் உள்ளது என இதுவரை அறியப்படவில்லை ஒன்று வரும் வழியில் வெடித்தது, இன்னொன்று சுட்டு வீழ்தப்பட்டது என்றார்கள். ஆனால் சுட்டோர் யார் என்ற உரிமை கோரல் இல்லை. பிரித்தானியா அதீத மெளனம்
  6. அடபாவிகளா எரிபொருள் விலையை உயர்த்திவிட்டு வாங்கோ வாங்கோ என்றால் யார் வருவான்? பழைய அளவுக்கே எவரும் எரிபொருளை வாங்க மாட்டார்கள்.
  7. ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி அவிக்கின்றார்கள். உண்மை, பொய்யை பிரித்தறிய முடியாத நிலை. எதுவரை செல்கின்றது என பார்ப்போம்.
  8. 😂 நல்ல கதை சொல்லவா, நல்லா இழுத்து சொருகவா.. கருணைகொலை கத்தரி இலை கத்தாரில் போட்டது ஈரான் வலை முன்பே எசுலிளுளேன்… சிறிமா வீட்டில் சித்தப்பு சிப்பந்தி மாமா மகிந்த வீட்டில் மருமகனோ மைத்திரி யோடு, எல்லாம் ஓரல் வழிதான், மீழவ ம்ன்னகுல கசட்ச் கவற எழுத்தில் எழுதுவது அமைச்சரவை வழக்கம் இல்லை, டுமீல் குப்பம் வெளவாலு…நலன்கு புகுபுடு தெரியாதவன் மொக்கு, தக்காளி தொக்கு. மேற்கு அவுஸ்ரேலியாவிலும் கிழக்கேதான் சூரியன் உதிக்கும், இது ராஜதந்திர ரகசியம் வெளிப்படையாக சொல்லமாட்டர்கள். முன்பே லொள்ச மரந்து டுட்பேன்.. சீனா தாய்லாந்து ஈரான் மேற்கு பெற்றொல் டாலர் யுவான் யங் சிகி உஆன் சுசிகி கவஆச்கி கர்தர் பெயரில் விபிலிய கிருமி.
  9. பால் குடிச்ச நன்றி தெரியாம பசு தோல் போர்த்திய புலி மாதிரி கஞ்சா குடிச்ச கதை சொல்லுறீங்க😁 ஆனா சாமி, கடை வாயில் பல்லுக்கு நீலம் பச்சை இருந்தா அதை ‘அமுதம்’ன்னு நம்புறவங்க இங்க யாரும் இல்ல😇. உளறுறது உளறட்டும். பூனை எட்டிப் பார்த்தா புலி ஆகுற காலம் போச்சு. இப்போ யாரு என்னன்னு தெரிச்சிடுச்சு😃
  10. Today
  11. உண்மையில் தமிழ்கூறு நல்லுலகில் எந்த துறையை எடுத்து கொண்டாலும், தமிழியலில் கருணாநிதிக்கு கிடைத்த தகுதிக்கு மேலான அங்கீகாரம் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என்பதே என் நிலைப்பாடு. நடிப்புக்கு பவர் ஸ்டார் எப்படியோ அப்படித்தான் தமிழுக்கு கருணாநிதி. பவர்ஸ்டாரின் கோமாளிதனம் சில படங்களில் சிரிப்பை வரவழைத்தது. அதேபோல் மு.க சில படங்களுக்கு நல்ல வசனம் எழுதியுள்ளார். சில நல்ல திரைகதைகள் எழுதியுள்ளார். ஆனால் இவர் எழுதிதள்ளிய பெரும்பாலானவை அறுவை ரகம். மேடை பேச்சு கூட, வை கோ வுக்கு எல்லாம் கிட்ட கூட நிற்கமுடியாது. ஆனால் சமயோசித பதில் (witty) சொல்லும் பாங்கில், அரசியலில், நரிக்குணத்தில் கருணாநிதி ஒரு பல்கலைகழகம். தமிழில் ரொம்ப சாதாரணம் கலைஞர் என்பதை கூட மன்னிக்கலாம்… முத்தமிழ் அறிஞர் எல்லாம்… வே டு மச் யா😂
  12. 2050 இல் நடக்கும் என்ற காட்சிகள் 2026 இலேயே நடக்கப் போகிறதோ? உலக ஒழுங்கு மாற்றத்தை கண்ணால் பார்த்துவிட்டுப் போகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறேன்.
  13. நீங்கள் களவு எடுத்தவன் என நான் எவரையோ சொன்னால் அதற்குள் வீணாக தலையை போட்டு… உங்கள் காசையா களவு எடுத்தார்? பொது பணத்தை தானே எடுத்தார் என எரிந்து கொண்டிருக்கும் தீச்சட்டியை நீங்களாகவே எடுத்து உங்கள் தலையில் கொட்டாதவரை எந்த தீக்குளிப்பும் தேவைபடுவதில்லை அண்ணா? எத்தனை தரம்தான் சொல்வது? பொது பணத்தை கையாடியவகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள் என? போலிக்கா குரூப், கனடா கள்ளர், சீமான் என திருட்டு கூட்டத்தையே தொடர்ந்து முட்டு கொடுத்து எழுதினால் - அடி முட்டு கொடுப்பவர் மீதும் விழுவது தவிர்க்கவியலாதது. இந்த திரியில் நீங்கள் இதுவரை ஜேர்மன் அரசியல் பற்றிய ல அண்ணை விவாதித்தீர்கள்? ஜேர்மனியிலும் விஜை என்று ஒரு நடிகர் உள்ளாரா?
  14. சத்தியமாக சொல்கிறேன் நீங்கள் மேலே கூறி உள்ளதை என்னால் என்ன என அறிய முடியவில்லை. ஏதோ டென்சன் ஆகி திட்டுகிறீர்கள் என்பது மட்டும் புரிந்தத்து. ஆனால் அதிகாரிகள் சிறிமா சொன்னதை உங்களிடம் சொன்னார்கள் என்பது சுத்தமான ஆனைக்கோட்டை உருட்டுத்தான். பால் கொடுத்த பசு தோல் போர்த்திய புலியினால் ஏற்பட்ட்ச் குடைச்சல் அமுதசுரபி ஆனானப்பட்ட கஞ்சா குடிக்கியையே, பலே பலே, என்ன சொன்னாலும், கடைவாய் பல்லில் ஒரே நீலம் பச்சை, உளறி கொட்டி, புனை எட்டிப்பார்த்தது.
  15. என்ன. பலன். ? ஏதுவுமில்லை. நான். ஜேர்மனி. பற்றி. கேள்வி. கேட்பதில்லை. அது. எனது. விருப்பம். இல்லையா. ? மற்றும். பொழுதுபோக்கு என்னுடைய. கருத்துகள். மட்டுமல்ல. இங்கே. எழுதும். எவராது. கருத்துகளும். நடைமுறையில். வரப்போவதில்லை. குறிப்பாக. உங்களுடைய. கருத்தும். தான். உங்கள். கருத்துகள். நீங்கள். எழுதும். கருத்துகள். நடைமுறையில். உள்ளதா. ? ,
  16. Yesterday
  17. 😂அடுத்த "ஞானபீட" விருது யாருக்கு? ஜெமினி, சுனோ??
  18. அன்று தொடக்கம் தேன் கூடுகளில் கை வைக்காத்தால் என்ன நடக்கும் என கூறி வந்தோம்.😎 அதன் ஒட்டுமொத்த பலனும் இன்று கண்ணெதிரிலேயே தெரிகின்றது.🌟 முதல் படியாக அந்த தேன் கூடுகளை கலைத்ததின் விளைவாக ஐரோப்பா அகதிகளால் நிரம்பி வழிகிறது. இரண்டாம் படியாக தேவையில்லாமல் எரிசக்தி விண்ணைத்தொடும் அளவிற்கு எகிறிவிட்டது. இயற்கை அழிவுகளை விட மனித அழிப்புகள் மிக கொடுமையாக இருக்கின்றது. அதிலும் மேற்கத்தையவர்களின் போர் மூர்க்க குணம் நியாயமற்றது. செய்தியின் பிரகாரம் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் திருவாளர் புட்டின் அவர்கள் கொடுப்புக்குள் சிரிக்கிறார். 😋 ரஷ்யாவை உடைத்த பின்னர் அதனுடன் நட்புடன் இருந்திருந்தால்.....இந்த உலகும் ஐரோப்பிய ஒன்றியமும் அவல நிலைக்கு வந்திருக்காது.
  19. நாங்கள் இருக்கிறோம். பணம் பார்க்கிறோம். புகழ் சேர்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எங்களால் தான் வாழ்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறோம்.
  20. நானும் கண்டேன். காட்சியில் அவள் நடந்து வர, ஆடை சற்று நகர, காட்சி மீண்டும் ஆரம்பத்துக்கு வரும் அந்த நொடியில் அவள் முகம் ஆடை நகர்ந்த இடத்தில் தோன்றுவது அருமை. பாடகர் சிறீநிவாசனை நினைவுட்டும் குரல். நன்றாக வந்திருக்கிறது. இந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கிறது. ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை அரங்கராசன் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் இருந்ததுதான் இந்தக் கவிதை “பிரம்மனை கஞ்சன் என்றுதான் நினைத்தேன் உன் இடையைப் பார்த்தபோது சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது அவன் வள்ளலாகவும் இருக்கிறான்?…” கவிப்பேரரசு சுட்டதுதான் ஜீன்ஸ் படத்தில் வந்தது. எல்லாப் புகழும் வைரமுத்துவுக்கே. இப்படியான விளக்கங்கள் நல்ல உதவியாக இருக்கும். பலர் இந்த வழியில் ஈடுபட தூண்டுதலாக இருக்கும். நன்றி! உங்கள் காலத்துப் பாடல். அதுதான் உங்களுக்குப் மிடித்திருக்கிறது. என் காலத்துப் பாடல் என்பதால், “மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி…”😜
  21. எப்போதும் மூலவர் கற்பகிரகத்துக்குள்தான் இருப்பார் வெளியே வருவதில்லை . .......உற்சவ மூர்த்திகள்தான் உலா வருவார்கள் .......! அப்படியே எமக்கு முன் எவ்வளவு அறிஞர்கள் வாழ்ந்து மறைந்து விட்டார்கள்......... நீங்கள் குறிப்பிட்ட இந்த எட்டு , பத்து அறிஞர்களைப் பற்றிய செய்திகளே இதயத்தை என்னவோ செய்கிறது என்றால் ........ ஏனையவர்களிடம் நாம் அறிந்து கொள்வதற்கு எவ்வளவு விடயங்கள் இருந்திருக்கும் . ........ தொகுத்திருந்தால் எல்லாமே ஒரு பொக்கிஷம் அல்லவா .......ம் . ... நெஞ்சம் கனக்கின்றது .........! மறவோம் என்பதில் மறந்ததுதான் அதிகம் ..........நன்றி ரசோதரன் . .......!
  22. இது 'அகழ்' இணைய இதழில் செல்வேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மறவோம்: செல்வேந்திரன் செல்வேந்திரன் திரு.வி.க முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்களை அவருடைய இறுதிக்காலத்தில் சந்திப்பதற்காகச் செல்கிறார். அப்போது திரு.வி.க மிகச்சிறிய இல்லமொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக்கொள்வதற்கு ஆட்கள் யாருமில்லை. திரு.வி.க-வை தன்னுடைய ஆசிரியராகக் கருதியதால், டாக்டர் மு. வரதராசனார் தினந்தோறும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறார். ஒருநாள் கி.ஆ.பெ. அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து, கூனிக் குறுகிச் சுருங்கிய நிலையில் கிடக்கிறார் திரு.வி.க. இவர் எங்கே இந்த வீட்டில் அனாதையாக இறந்து போய்விடுவாரோ என்று அஞ்சிய அந்த வீட்டின் உரிமையாளர், ‘நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று திரு.வி.க.விற்கு வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்து அவரை துன்புறுத்தத் துவங்குகிறார். இதைப் பார்த்து கி.ஆ.பெ மனம் கொந்தளித்து, “வாழ்நாளெல்லாம் தமிழைத் தூக்கிச் சுமந்த இந்தத் தமிழ் அறிஞருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாதா? இவருக்கு நாம் நிதி திரட்ட வேண்டும்” என்று தமிழ்நாட்டினுடைய முக்கியமான புரவலர்களுக்கு, அவரும் மு.வ.வும் இணைந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். அதற்கு, உடனடியாக மதுரையில் உள்ள தொழிலதிபரான கருமுத்து தியாகராஜன் செட்டியாரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்துடன் மற்றொரு உறையும் உள்ளது. அந்த உறையைத் திறந்தால், ஒரு பெரிய தொகைக்குக் கருமுத்து தியாகராஜன் அவர்கள், திரு.வி.க அவர்களுக்கு அனுப்பிய காசோலை. அனுப்பிய சில நாட்களிலேயே மீண்டும் தியாகராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் வருகிறது, கூடவே ஒரு குறிப்பும் உள்ளது. அதில், “நான் வாழ்நாளெல்லாம் கௌரவமாக வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் நான் எதைச் செய்யவில்லையோ, அந்த ஒரு காரியத்தை என்னுடைய மரணத் தருவாயில் செய்யும்படி என்னைப் பணித்துவிடாதீர்கள்” என்கின்ற குறிப்போடு, தியாகராஜன் செட்டியார் அனுப்பிய அந்தக் காசோலையை அவருக்கே திரு.வி.க. திருப்பி அனுப்பிவிட்டார். இது ஒரு நிகழ்வு. மற்றொன்று, பாரதியாருடைய நண்பரும், அதே எட்டயபுரத்தில் பிறந்தவருமான நாவலர் சோமசுந்தர பாரதியார், கந்தசாமிக் கவிராயரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்கிறார். அவர் வீட்டுத் திண்ணையில், அழுக்கடைந்த வேட்டி ஒன்றை உடுத்திக்கொண்டு, பரட்டைத் தலையோடு, சட்டை இல்லாமல் பார்ப்பதற்குப் பிச்சைக்காரரைப் போல ஒருவர் படுத்திருக்கிறார். சோமசுந்தர பாரதியாரும் கந்தசாமிக் கவிராயரும் தொல்காப்பியத்தின் மிகச் சிக்கலான ஒரு பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, திண்ணையில் பிச்சைக்காரரைப் போல படுத்திருந்த அந்த நபர் எழுந்து அமர்ந்து, தர்க்க ரீதியாக ஒரு விளக்கத்தைச் சொல்கிறார். உயர்தரமானதொரு ஆய்வாளர் மட்டுமே சொல்லக்கூடிய விளக்கம் அது. அதைக் கேட்கும்போது அதிர்ந்துபோன நாவலர், “யார் இவர்?” என்று கேட்கிறார். இவர்தாம் தொல்காப்பியப் பேரறிஞர் என்றும், இலக்கணக் கடல் என்றும் போற்றப்படக்கூடிய ‘அரசன் சண்முகனார்’ என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அரசன் சண்முகனாரை ஒருமுறை தூத்துக்குடி சைவ சித்தாந்தக் கழகம் சிறப்புரையாற்றுவதற்காக அழைக்கிறது. அவரைத் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அழைத்து வருவதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் செல்கிறார்கள். அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. “யாரோ ஒரு பிச்சைக்காரன் இறங்கிப் போகிறான்” என்று அவரைப் பார்க்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளில், தமிழ் அறிஞர்களால் மிக மிக இழிவு செய்யப்பட்ட, மிக மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் இந்த மண்ணிலே வாழ்ந்திருந்தார் என்றால், அவர் சோழவந்தானில் வாழ்ந்த அரசன் சண்முகனார்தான். அப்படி அவர் என்ன குற்றம் செய்தார்? அவருடைய தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் ஆராய்ச்சி போன்ற நூல்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் அன்று வாழ்ந்த புலவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர் செய்த குற்றம் என்னவென்றால், நமக்கு முந்தைய உரையாசிரியர்கள் செய்த உரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த அறிவை, தன்னுடைய சொந்த வாசிப்பை, தன்னுடைய சொந்த ஆய்வுகளின் வழியாக அதற்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டின் புலவர் கூட்டம் அவரை வேட்டையாடியது. பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு 46 வயதில் அரசன் சண்முகனார் இறந்து போனார். சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்ப் பதிப்புத்துறையினுடைய தந்தை என்று அறியப்படக்கூடியவர். கலித்தொகையிலிருந்து, சூளாமணியிலிருந்து, நீதிநெறி விளக்கத்திலிருந்து, வீரசோழியம் வரை எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்தவர். உ.வே.சா.விற்குப் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவருக்குப் பத்து புதல்வர்கள். எட்டுப் பிள்ளைகள் இறந்துவிட்டார்கள். எஞ்சி இருந்த இரண்டு பிள்ளைகளில் ஒரு மகன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரே மகள்தான். சி.வை தாமோதரம் அவர்கள் தன்னுடைய மரணப் படுக்கையில், “என்னுடைய சொந்த சேகரிப்பிலுள்ள புத்தகங்களையும், என்னுடைய தனிப்பட்ட சேகரிப்புகளையும் விற்று என் மகளுடைய கல்விக்கு உதவுங்கள்” என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். சி.வை தாமோதரப்பிள்ளை இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் கலைக்களஞ்சியம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே, ஒவ்வொரு புத்தகமும் 750 பக்கங்கள் என பத்து புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவிநாசிலிங்கம் செட்டியார் ஒரு குழுவை அமைக்கிறார். அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றவர் ‘பெரியசாமித் தூரன்’. அந்த கலைக்களஞ்சியத்திற்காகப் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு அறிஞருக்குமே அரைச் சம்பளம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. உலக சாதனை என்று கருதத்தக்க அளவுக்கு அந்த கலைக்களஞ்சியத்தைத் தனி மனிதராகப் பெரியசாமித் தூரன் உருவாக்குகிறார். தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் ஏற்றிக் கேட்பதற்குக்கூட முடியவில்லையே என்று, அன்றைக்குத் தமிழில் வந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஆய்விதழ்களிலும் அவர் வருமானத்துக்காகக் கட்டுரைகள் எழுதுகிறார். அவருடைய நாட்குறிப்பில், “சற்று கூடுதல் சம்பளம் கொடுத்தால் இன்னும் நன்றாக வேலை பார்த்திருப்போமே” என்கிற ஆதங்கம் காணக்கிடைக்கிறது. பெரும்பாலான துறை சார்ந்த அறிஞர்கள் நம்முடைய தமிழ் கலைக்களஞ்சியத்துக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எந்தச் சன்மானமும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பெரியசாமித் தூரனுக்கு, அவருடைய குடும்பத்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். குறைந்தபட்சம் ஐநூறு பேர் வருவார்கள் என்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் வெறும் முப்பத்திரண்டு பேர். மீதமான அந்த உணவை என்ன செய்வது என்று தெரியாமல் தூரன் குடும்பத்தார் திகைத்து நின்றார்கள். அவரை இந்தப் பொதுச்சமூகத்தில் மீண்டும் நினைவுறுத்தும் பொருட்டு, எழுத்தாளர் ஜெயமோகனும் அவருடைய நண்பர்களும் ‘தமிழ் விக்கி தூரன் விருது’ என்றொரு விருதைத் தோற்றுவித்து, பண்பாட்டு ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழக்கூடிய ஆய்வாளர்களுக்கு ஈரோட்டில் வைத்து விருது வழங்குகிறார்கள். பெரியசாமித் தூரன் இதுவரை ஐந்து ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்குகிற நிகழ்வுகளுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தி, வலியுறுத்தி அழைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. ஒரு பத்திரிக்கைகூட தூரன் விருதைப் பற்றியோ, அந்த விருது பெறும் ஆய்வாளர்களைப் பற்றியோ ஒரு வரிகூட எழுதியதில்லை. இன்னொரு ஆளுமையை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஜி.யு. போப்; இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இந்திய மொழிகளுக்கான, அதிலும் குறிப்பாகத் தமிழ், தெலுங்குக்கான துறைத் தலைவராக இருக்கும்போது ஜி.யு. போப் அவர்களுக்கும், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுக்கும் இடையே நட்பு உருவாகிறது. இத்தனைக்கும் உ.வே. சாமிநாத ஐயரை விட 35 ஆண்டுகள் வயதில் மூத்தவர் ஜி.யு. போப். உ.வே.சா எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் தொகுக்கப்பட்டுத் தனி நூலாக வந்துள்ளது. தமிழ் இணைய நூலகத்தில் (Tamil Digital Library) இலவசமாகவே அதை நீங்கள் வாசிக்கலாம். அதில் ஜி.யு. போப் அவர்கள் உ.வே.சா.விற்கு எழுதிய முதல் கடிதத்தில் “மதிப்பிற்குரிய ஐயா” என்று தொடங்குகிறார். மூன்றாவது கடிதத்திலேயே “என் அன்பிற்கினிய நண்பா” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்குள்ளான உறவு மிகவும் வலுப்படுகிறது. ஜி.யு. போப் லண்டனில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை அவருக்கு அனுப்புகிறார். “என் புகைப்படம் அனுப்பினேனே உங்களுக்குக் கிடைத்ததா?” என்று கேட்கிறார். இருவரும் கடிதங்களில் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்த எண்ணற்ற விஷயங்கள் அந்தக் கடிதங்களில் உரையாடப்படுகின்றன. அதில் ஒரு கடிதத்தில், “அருமையும் பெருமையும் உடைய நம் தமிழ் மொழிக்கு, ஒரு முறையான தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பை உருவாக்க வேண்டும்” என்று உ.வே. சாமிநாத ஐயருக்கு ஜி.யு. போப் ஒரு கோரிக்கை வைக்கிறார். அடுத்த கடிதத்தில், “உலகத் தாய்மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தமிழ் மொழிக்குத் தகுதி வாய்ந்த ஒரு இடத்தை உருவாக்குவதற்கு நான் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்” என்று எழுதுகிறார் ஜி.யு. போப். இதைச் சொல்லக்கூடிய ஜி.யு. போப் கனடாவில் பிறந்தவர், ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எந்தத் தமிழச்சியின் முலைப்பாலும் குடித்து வளரவில்லை. ஆனால் நிச்சயம் ஜி.யு. போப் மறைந்த அன்று இரவு அந்தக் கல்லறையில், தமிழ்த்தாய் விழுந்து புரண்டு, அழுதிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஜி.யு.போப் அவர் இன்னோர் கடிதத்தில், “திருவாசகத்தில் 28 இடத்தில் தளை தட்டுகிறது” என்கிறார். மற்றொரு கடிதத்தில், “குறள் வெண்பா என்கின்ற இந்த இரண்டடி வெண்பா வடிவத்தை உருவாக்கியது வள்ளுவர்தான். வள்ளுவருடைய காலத்திற்கு முன்பு யாருமே அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போது சந்தையில் கிடைக்கிற இந்த இரண்டடி வெண்பாக்கள் எல்லாமே போலி. ஏனென்றால், திருக்குறளின் வைர வரிகளுக்கு இந்த போலி வரிகளை இணை வைக்கவே முடியாது” என்று சொல்கிறார். வைணவ இலக்கியங்களைப் படித்துவிட்டு “திருவாய்மொழியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு பெருங்கடலைப் போன்றிருக்கிறது” என்று தன்னுடைய பிரமிப்பைச் சொல்கிறார். இந்தக் கடிதங்களைப் பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால், 85 வயதில் ஜி.யு. போப் இந்த மொழி சார்ந்து கொண்டிருந்த கனவுகள் இருக்கிறதே, ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய கனவுகள் அனைத்தும் இமாலயப் பணிகள். அவர் பழந்தமிழ் இலக்கியத்துக்கான ஒரு அகரவரிசையை உருவாக்க வேண்டும், அத்தனையும் ஆக்ஸ்போர்டில் சேகரிக்க வேண்டும், அத்தனையும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும், அத்தனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் தன்னுடைய ஒவ்வொரு கனவையும் சொல்கிறார். கண்ணில் நீர் வராமல் அந்தக் கடிதங்களைப் படிக்க முடியாது. ஆனால், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு ஆளுநர், மரியாதைக்குரிய ஆர்.என். ரவி என்ன சொல்கிறார்? கால்டுவெல்லும், ஜி.யு. போப்பும் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாத அறிவிலிகளாம், அரைகுறைகளாம். மதம் மாற்றுகிற ஒரு நோக்கம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்தது என்கிறார். இதற்கெல்லாம் மேலே சென்று, திருக்குறளை ஜி.யு. போப் ஆன்மீக நீக்கம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் “நம் தாய்மொழி” என்று ஜி.யு. போப் எழுதுகிறார். ஒவ்வொன்றிலும் வைர வரிகள் என்கிறார், கம்பனைக் கொண்டாடுகிறார், திருவாசகத்தை மொழிபெயர்க்கிறார், திருக்குறளை மொழிபெயர்க்கிறார். இன்று உலக அறிஞர்களால் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதற்கு ஒரே காரணம் ஜி.யு. போப். சரி, அவரைப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர் என்று சொல்லக்கூடிய ஆளுநர் மாளிகை எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும் அல்லவா? ஆளுநர் மாளிகையில் நடந்த, மருத்துவர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட கேடயத்தில் போலியான திருக்குறள் பதிப்பிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ChatGPT) கொடுத்த, அதுவரை இல்லாத ஒரு திருக்குறளைப் பதிப்பித்துக் கையில் நினைவுப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், மற்றொரு அறிஞர், ‘எஸ்.டி.சாமிக்கண்ணு’. அவர் வானியல் சாஸ்திரத்தினுடைய அடிப்படையில், ஜோதிட நூல்களினுடைய அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிப்பு செய்தவர். நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா கல்வெட்டுகளையும் படித்து, இந்தக் கல்வெட்டில் இருக்கக்கூடிய செய்திகள் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஆண்டுகளை மிக மிகத் துல்லியமாக வகுத்துக் கொடுத்தவர். ஆங்கில அரசால் ‘ராவ் பகதூர்’ பட்டமும், ‘திவான் பகதூர்’ பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய செயலராக இருந்தவர். அவருடைய ஆய்வுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், “இந்த எஸ்.டி. சாமிக்கண்ணு, பஞ்சாங்கத்தைத் தொகுக்கத்தான் லாயக்கு” என்று விமர்சிக்கிறார் தீரர் சத்தியமூர்த்தி. அதாவது ஆக்ஸ்போர்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளூரில் இருக்கக்கூடிய தலைவர்கள் அவரை அவ்வளவு இழிவாக நடத்தினார்கள். அரசன் சண்முகனார் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’ மற்றும் ‘நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்’ பற்றி நாம் நன்று அறிவோம். அவர்கள் சிறைப்பட்டிருந்தபோது, சிறையில் அவர்களுக்கான சரியான உணவுக்காக தமிழ்நாட்டுப் புரவலர்கள் அவர்களுக்கு அனுப்பிய அந்தப் பணத்தைக் கொண்டு காகிதமும், புத்தகமும், பேனாவும் வாங்கி, சிறையில் பட்டினி கிடந்து இலக்கியங்கள் படைத்தவர்கள். திருக்குறள் நாமக்கல்லாருடைய உரை சிறைச்சாலையில் எழுதப்பட்டது. நம்முடைய தமிழ்நாட்டில் உருவான மூன்று அறிவு இயக்கங்களில் ஒன்று தனித்தமிழ் இயக்கம், இன்னொன்று திராவிட இயக்கம், மூன்றாவது தலித் சிந்தனை இயக்கம். இந்த திராவிட இயக்கத்திற்கும் தலித் சிந்தனை இயக்கத்திற்கும் இன்று வலுவான அரசியல் பின்புலம் இருக்கிற காரணத்தால், அதற்குப் பங்களிப்பாற்றிய அறிஞர்கள் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும் அடையாளத்தையும் பெறுகிறார்கள். ஆனால் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் ஒரு சாபக்கேடான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அதற்கு முந்தைய தமிழ் அறிஞர்களை ஆதரிப்பதற்கு மன்னர்கள் இருந்தார்கள், நிலவுடைமைச் சமூகம் இருந்தது. ஆனால், இவர்கள் முழுக்க முழுக்கக் கைக்காசைப் போட்டு ஆய்வு செய்ய வேண்டும், அல்லது மடங்களினுடைய உதவி தேவை. அப்படி இல்லையென்றால் கல்வி நிறுவனங்களுடைய உதவி வேண்டும். அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது. ஆகவே, தமிழுக்கு அரும்பணியாற்றிய 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்களில் 99 சதவிகிதம் பேர் ரத்தம் கக்கிச் செத்திருக்கிறார்கள். வாழ்ந்தபோது அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது, எந்த அங்கீகாரமும் கிடையாது. வாழ்ந்து மறைந்த பிறகும் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது. ஓர் ஆய்வுக்காக ‘அ.கா. பெருமாள்’ ஐயா அவர்கள் தோவாளைக்குப் பக்கத்தில் இருக்கிற பீமநகரி என்கிற ஊருக்குச் செல்கிறார். அங்கே ஒரு முப்பது வீடுகளே உள்ள சின்ன கிராமம் இருக்கிறது என்பதை கண்டறிகிறார். அந்த ஊர், நாடகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய ‘ஆண்டி சுப்பிரமணியம்’, மகா வித்வான் ‘கே.என். சிவராஜப் பிள்ளை’, பண்டிதர் ‘சண்முகம் பிள்ளை’ ஆகிய மூன்று தமிழ் அறிஞர்கள் அந்த முப்பது வீடுகளிலிருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தோவாளை சென்றபோது பார்க்கிறேன், அந்த பீமநகரியில் எல்லாத் திசையிலும், ‘ஒரு சென்ட் நிலம் விலை இவ்வளவுதான்’ என்று வீட்டுமனை விற்பனைப் பலகைகள் இருக்கின்றன. அந்த ஊர் முழுக்க அலைந்து திரிந்தாலும், மூன்று மகத்தான தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதற்கான எந்த ஒரு சிறிய அடையாளமும் அங்கே கிடையாது. கே.என்.சிவராஜ பிள்ளை ‘வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்’, தென்காசியில் பிறந்தவர், கால்நடை மருத்துவர். அவரை ஆங்கில அரசாங்கம் வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி பயில வைத்தார்கள். கால்நடை மருத்துவம் குறித்து ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு ராவ் பகதூர் பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய அகலிகை வெண்பா, அவருடைய கம்பராமாயண சாரம்… அதை, “அவருடைய கம்பராமாயண சாரத்தைப் படிக்காத யாருமே கம்பன் கழகத்தில் உரையாற்றியதில்லை” என்று வேடிக்கையாகக் கூடச் சொல்வார்கள், தமிழ்நாட்டு அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களாக இருந்தால் கண்டிப்பாக வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாருடைய புத்தகங்களை வாசித்திருப்பார்கள். மில்ட்டனைத் தமிழில் மொழிபெயர்த்தவர், கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். எண்ணற்ற நூல்கள் எழுதியிருக்கிறார். நான் இந்த மேடையில் குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் முப்பது நாற்பது புத்தகங்களை எழுதியவர்கள். தொண்ணூறு வயது வரை பாளையங்கோட்டையில் வாழ்ந்தவர். இந்த நகரத்தின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் பங்களித்தவர். பல்வேறு அமைப்புகளின் வழியே ஈடுபட்டிருக்கிறார். நம் ஊரில் எங்கேயாவது இந்த வெள்ளக்கால் முதலியாருக்கு ஒரு பெயர் இருக்குமா? நம் ஊர் நூலகத்தில் இந்த வெள்ளக்கால் முதலியாருடைய ஒரு படம் வைக்கப்பட்டிருக்குமா? மற்றொன்று, என்னுடைய ஊர் சாத்தான்குளம். ‘சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர்’ என்று அழைக்கப்பட்ட அ. ராகவன். சாத்தான்குளத்தில் பிறந்தவர், பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை தமிழ் பேசிக்கொண்டிருந்தவர். ஒரு மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து மரணமடைந்தவர். ஆதிச்சநல்லூரைப் பற்றியும், பொருநை நாகரிகத்தைப் பற்றியும் புத்தகம் எழுதியிருக்கிறார். ‘கோநகர் கொற்கை’, ‘தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’, ‘தமிழர் பண்பாட்டில் தாமரை’, தமிழர்களுடைய ஆடைகள், தமிழர்களுடைய வாழ்க்கை முறை பற்றி எண்ணற்ற பண்பாட்டு நூல்களை எழுதியவர். எங்கள் ஊரில் அவருக்கு ஒரு பெயர்ப்பலகை கூட கிடையாது. அவர் வாழ்ந்து மறைந்த இந்தப் பாளையங்கோட்டையிலும் ஒரு பெயர்ப்பலகை கிடையாது. அவருடைய புகைப்படத்தைக்கூட இன்றைக்கு நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவிற்கு, அவருடைய பெயர் வைப்பதற்கே நமக்கு அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுப்பப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அங்கே ‘புதுமைப்பித்தன் தெரு’ பெயர் வைக்கப்படுகிறது. 1900-இல் ‘பரிதிமாற் கலைஞர்’, நச்சினார்க்கினியருக்கு மதுரையிலே ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கிறார். நூற்றி இருபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன நண்பர்களே, இன்னமும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இங்கே திருநெல்வேலி மாநகராட்சியில் புதுமைப்பித்தனுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று? இது எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டுமா? ஒரு ஊரில் எத்தனை அரிமா சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை ரோட்டரி சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன? அவர்கள் நினைத்தால் அந்த ஊருடைய எல்லையில் ஒரு பலகை வைக்க முடியாதா?சமீபத்தில் நெல்லைக்கு வரும்போது காருக்குறிச்சி வழியாக வந்தேன். அப்போது, என் மகளிடம், “காருகுறிச்சி அருணாசலம் என்கின்ற ஒரு மேதை இருந்தார். திருவாவடுதுறை ‘ராஜரத்தினம் பிள்ளை’ திருநெல்வேலிக்குக் கச்சேரி செய்ய வரும்போது, ஒத்து ஊதுவதற்கு ஆள் இல்லாமல் காருகுறிச்சியைக் கொண்டு வந்து விட்டார்கள். இருபத்திரண்டு வருடம் அந்த ஆசிரியரைப் பின்தொடர்ந்தார். உலகம் போற்றுகின்ற ஒப்பற்ற மாமேதையான காருக்குறிச்சியின் ஊரை நாம் தாண்டிப் போகிறோம்” என்று சொன்னேன். அந்த ஊர் எல்லையில் ஓர் ஐநூறு ரூபாய் செலவில் ஒரு பலகை வைக்க முடியாதா? நம்ம ஊர் நூலகங்களில் இந்த அறிஞர்களுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் இருக்கக்கூடிய நூலகங்களில் ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்க முடியாதா நம்மால்? அந்த அறிஞர்கள் பெயரில் ஒரு சிறிய போட்டியை நடத்தி இந்தப் பிள்ளைகளுக்கு நான்கு திருக்குறள் புத்தகம் கூட நம்மால் வாங்கிக் கொடுக்க முடியாதா? இதை எது செய்யவிடாமல் தடுக்கிறது? புத்தகக் கண்காட்சிக்கு ஈரோடு மகேஷ் வந்தால் நூறு பேர் அவரோடு செல்ஃபி எடுப்பார்கள். அது தவறு கிடையாது. ஏனென்றால் ஒரு பிரபலத்தைப் பார்த்தால் அவரோடு போய்ப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பொதுச்சமூகம் விரும்புவது இயல்பு. ஆனால், 80 நூல்களுக்கு மேல் எழுதிய அ.கா. பெருமாள் அதே சபைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய, ‘ஆலயக் கலையின் ரகசியங்கள்’ அனைத்தையும் தமிழ்ச்சமூகத்துக்கு வகுப்பெடுத்த ‘குடவாயில் பாலசுப்பிரமணியம்’ அதே அவைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய பண்பாட்டு ஆய்வாளர் ‘பக்தவத்சல பாரதி’ வந்தால், தமிழ் இலக்கியத்தினுடைய இருள் மண்டிய பக்கங்களில் தன்னுடைய ஆய்வுகளால் ஒளிப்பாய்ச்சிய ‘ஆ.இரா. வேங்கடாசலபதி’ இந்தச் சபைக்கு வந்தால், ஒருவருக்குக்கூட அவர்களை யாரென்றே நமக்குத் தெரியாது. அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுகூட இல்லை. ‘ஐயா நலமாக இருக்கீங்களா?’ என்று நாம் கேட்கக்கூட மாட்டோம். ஏன் இப்படி நிகழ்கிறது என்றால், நம்முடைய அறியாமை. நமக்கு அவர்களைத் தெரியாது. நாம் இங்கே வந்தால் கதைப் புத்தகம் வாங்குவோம், கவிதைப் புத்தகம் வாங்குவோம். புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்களின் வாசகர்களாவது கொஞ்சம் நன்றியோடு இருப்பார்கள். ஆனால் இந்தத் தமிழ் அறிஞர்களுக்கு? அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது, அவர்கள் செய்த ஆய்வு நூல்களை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றி நமக்குத் தெரியவும் தெரியாது. இது ஒரு காரணம்தான். ஆனால் இது முழுக் காரணம் அல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த அமைப்பிடம் போய் “இவர் நம் ஊரில் பிறந்து வளர்ந்தவர், நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர், தமிழ்ப் பண்பாட்டில் தமிழ் என்னும் தேரின் வடம் பிடித்து இழுத்தவர், ரத்தம் கக்கிச் செத்தவர், இவருக்கு நம் ஊரில் ஒரு பலகை வைக்க வேண்டும், அல்லது இவருடைய படத்தை நம் ஊர் நூலகத்தில் திறக்க வேண்டும்” என்று சொன்னீர்களென்றால், “அவர் என்ன ஆளு?” என்ற கேள்விதான் முதலில் எழும். அவர் ஜாதி தெரியாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது. அது ஓர் உண்மையான காரணம், இல்லையா? முன்னோர்கள் மரணிக்கையில் அவர்களுடைய வாழ்க்கையின் செய்தியாக ஒன்றைக் கேட்போம் அல்லவா? அதுபோல், திரு.வி.க மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரிடம், “ஐயா! நம் மொழிக்கு, நம் நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கி.ஆ.பெ. விசுவநாதம் கேட்கிறார். அதற்கு கி.ஆ.பெ.வின் கையைப் பிடித்து, தன்னுடைய முகத்துக்கு அருகில் கொண்டு வந்து, தனது இறுதி மூச்சின் எஞ்சிய ஆற்றலைத் திரட்டி திரு.வி.க சொல்கிறார்: “நாடு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், மொழி இருக்கிறது, நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துக்கொள்வீர்கள்”. இதுதான் திரு.வி.க.வுடைய இறுதி வாசகம். “நாம் பார்த்துக்கொண்டோமா?” https://akazhonline.com/?p=11664
  23. சிறிய மரத்தில் பழுத்த முதல் பழம் ........! 😂
  24. நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகள் நீங்கள் சொன்னவை போன்று மாறி, இப்பொழுது ஏறக்குறைய முற்றாகவே மாறிவிட்டன என்று நினைக்கின்றேன். அப்படியே மேலே வந்தால் உடப்பு.............. இன்றைய சனத்தொகையையும், இனப் பரம்பலையும் பார்த்தால், ஒரு ஐம்பது வருடங்களில் இந்திய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கே இப்படியான ஒரு நோக்கத்திற்காக வர வேண்டும் போல.......................
  25. அகப்பட்ட ஆள் வேற என்னைப் போலவே இருக்கின்றார்...................🤣. சில மாதங்களின் முன்னர் என்று நினைக்கின்றேன். தமிழ்நாட்டில் ஒருவர் தீ/பூ மிதிக்கும் போது, அப்படியே நெருப்பில் கால் தடுக்கி விழுந்துவிட்டார்............... அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.