stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இங்கிலாந்து முழுவதும் கடும் பனி; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை
இங்கிலாந்து முழுவதும் கடும் பனி ; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை 10 Jan, 2026 | 10:17 AM இங்கிலாந்து உட்பட மேலும் பல நாடுகளில் பனி மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் கனமான பனி, மற்றும் பலத்த காற்று வீசியுள்ள நிலையில், மேலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலுள்ள பகுதிக்கு பனி மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (11) வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு இங்கிலாந்தில் மட்டும் 34,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்தடை தொடர்கிறது. மேற்கு மிட்லாண்ட்ஸில் சுமார் 2,000 இடங்களிலும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேல்ஸில் 130 இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (09) காலை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெரும்பாலானவை குறுகிய தூரப் பயண விமானங்களாகும். தேசிய ரயில்வே நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (11) வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்து, பயணிகள் முன்கூட்டியே பயண விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு பிற்பகலில் தென் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 12°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமைக்குள் மிதமான வானிலை நாடு முழுவதும் பரவும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235653
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. Jan 10, 2026 - 07:00 AM தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480
-
இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்
இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு Jan 9, 2026 - 11:35 PM இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி, தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார். இதன்போது இந்திய இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தின் முக்கிய நிறுவனங்கள் சிலவற்றிற்கு விஜயம் செய்ததுடன், இலங்கை இராணுவத்திற்கு 20 நவீன கெப் ரக வாகனங்கள், நான்கு நோயாளர் காவு வண்டிகள் மற்றும் சில பயிற்சி உருவகப்படுத்திகளை நன்கொடையாக வழங்கினார். அத்துடன், புத்தல இலங்கை இராணுவ போர் கல்லூரியின் பயன்பாட்டிற்காக இந்திய உதவியின் கீழ் முழுமையான விளையாட்டு வளாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இதன்போது நட்டி வைக்கப்பட்டது. இது இந்திய - இலங்கை இராணுவ நட்புறவின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்ததுடன், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இந்திய இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk76t3r603qjo29nvfspwfk2
-
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம்
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம் 10 Jan, 2026 | 09:09 AM மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குப்பை மேடையில் பணியாற்றிய தொழிலாளர்களே எனத் தெரிவிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனரா என்பது தெளிவாக தெரியவரவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்களில் பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன் வரலாற்றில் இதுவரை நடந்த மிக மோசமான இத்தகைய விபத்து, திறந்த குப்பை மேடைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235651
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
டென்மார்க்குக்கு வேற வழி இல்லை. புட்டினிடம் பேசி - கிரின்லாந்தை தொட்டால் மாஸ்கோ சிறார் வீடியோ வெளிவரும் என மிரட்ட சொல்வதே ஒரே வழி. அல்லது கிரீன்லாந்தை எப்ஸ்டீன் ஐலண்ட் என பெயர்மாற்றினாலும் தம்பர் அதை பற்றி கதைக்க மாட்டார்😉.
-
ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார்.
ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா களத்துக்கு வந்தால் சந்தம் கேட்காதுதான். டிரம்ப் தேர்தலில் வெல்ல 2 வருடம் முன்பே வந்த மிட்டேர்ம் எலக்சனின் போதே டிரம்ப் அடுத்த தேர்தலில் வென்றால் இது நடக்கும் என எதிர்வுகூறப்பட்டது. அதன்படியேதான் நடக்கிறது. கிரின்லாந்து முதல், நேட்டோ உடைப்பு வரை, புட்டின் வீடியோக்களுக்கு பயந்து, டிரம்ப் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஐரோப்பா-அமெரிக்கா உறவை சீர்குலைப்பனவாகவே அமைகிறன. இதை எதிர்கொள்ள ஈயூ அமரிக்காவில் இருந்து விலகி கொஞ்சம் ரஸ்யா பக்கம் நகர்வது தவிர்க்க முடியாதது. இதுதான் டிரம்பினதும் அவரின் முதலாளி புட்டினதும் நோக்கமும். அதாவது ஐரோப்பாவில் அமெரிக்காவை விட ரஸ்யாவை பலமான நாடாக்குவது. செத்த கிளிக்கு இராணுவ பலம் சொல்லி கொள்ளும்படி இல்லை எனிலும், டிரம்ப், அவர் மஸ்கோவில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் அணுகுண்டை விட கூடிய பலத்தை கொடுக்கிறன. அந்தவகையில் இது செத்த கிளிக்கு வெற்றிதான். ஆனால் இதை யாழ்களத்தில் எவரும் கதைக்கவில்லை என்பது போல் அடி முட்டாள்தனமான கருத்து வரக்கூடாது. ஏன் எனில் டிரம்ப் வென்றால் அச்சொட்டாக இப்படித்தான் நடக்கும் என 3 வருடம் முன்பே யாழில் எழுதபட்டு விட்டது.
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு அருகில் Jan 9, 2026 - 11:10 PM தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) இரவு 10.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இது நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய நாளை (10) வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk75w0jp03qio29n4dni5s5x
- Today
-
இறைவனிடம் கையேந்துங்கள்
🏝️ புயல் வந்து போன பின்னும் 🏡 🏝️
-
கதைப்படங்கள்
-
ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார்.
ரசியா தரமான அடி ஒன்று முதன் முதலாக கொடுத்திருக்கு யாழ் களத்தில் ஒரு செய்தியையும் காணோம்.
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அந்த குட்டி தீவில் முழுசா வளர்ந்த ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு .......... தனியா சந்திச்சு? ஒரு விதத்தில் அந்த பெண் ஒரு சமூக சேவைதான் செய்து இருக்கிறார். இனி கள்ளகாதலியுடன் தனியா சந்திக்க எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்
-
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
தமிழரின் இழிநிலை தெரியாமல் தமிழருக்கு தாயகம் வேண்டும் என்று போராடி உயிர்நீத்த மாவீர்ர்கள், பொதுமக்களை நினைத்தால் கவலையாக உள்ளது. இப்படியான கயவர்கள். அவர்களின் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் இவர்களை உளரீதியாக, சட்டம் தண்டிக்கமுதல் கனடாவாழ் மக்கள் தண்டிக்க வேண்டும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
- குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு
டாக்குத்தர்மார், வைத்தியசாலைகள் தங்கட சுகத்துக்கும் வசதிக்கும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பிக்கின்றார்கள் இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் என்றாலும். பிறகு ஆபரேசன் செய்தால் இரண்டு வருடங்களுக்கு குழந்தைக்கு முயற்சி செய்யக்கூடாது என்று சொல்வார்கள். வயிற்றை வெட்டித்தான் எடுப்பது வழமை என்றால் பிறகு எப்படி பிறப்பு விகிதம் கூடும்? சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறுவதை ஊக்குவித்தால் நல்ல காசு பார்க்கலாம். தங்களுக்கு காசு வரும் வழியைத்தானே ஊக்குவிப்பார்கள்!- Yesterday
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி அண்ணை சட்டதிட்டம் என்றில்லை. நிதி சேகரிப்பில் நீங்கள் கில்லி என அறிவேன். முன்னோடிக்கு இப்படி ஒருவர் இன்றியமையாத சொத்து 😎.- ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று கனடா, தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையி, இவர்கள் அதிகாரத்திற்காக கொலை செய்யும் போது அவர்களும் தங்கள் கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும். அதெல்லாம் நமக்கு கவலையில்லை, நமக்கு வேண்டியது; அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். நாடு கடந்து சென்றாலும் எங்கள் சுயநலத்தையும் எங்களோடு கொண்டே செல்கிறோம். "தலைவனாய் இருக்க விரும்புகிறவர், சுயநலம் களைந்து, தன்னை தாழ்த்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களாய் இருக்கவேண்டும்." அதுவே உண்மையான தலைமைத்துவம். ஒருவரை கொலை செய்து அல்லது நற்பெயரை கொலை செய்து பதவியை கைப்பற்றுவது நல்ல தமைமைத்துவ பண்பு கிடையாது. இவரது சுயநலம், பணபலம் இப்போது இவரை சிறைக்கு கொண்டு செல்லப்போகிறது, அனிஞாயமாக நாட்டில் வாழும் இருவரையும் சேர்த்து விட்டிருக்கிறது.- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நாங்களும் தான் கொக்குவிலில் வசித்து வந்த நாங்கள் சங்கானைக்குத்தான் சென்றோம் முதலில்- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒரு பிரச்சனையுமில்லை. ஏராளன், இந்த திட்டம் சம்பந்தமாக முதல் ஒரு மலசல கூடம் கட்டும் நிர்மாண செய்தியை தந்திருந்தார். அதில் குறிப்பிட்ட தொகையையும் தெரிவித்திருந்தார். அதை நான் பொறுப்பெடுத்திருந்தேன். அதை மீறி எதையும் புதிதாக எதையும் தனிப்பட செய்ய மாட்டேன். ஏனைய பங்களிப்புகளும் திட்டங்களும் முன்னோடியின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்.- ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
எங்கும், எதிலும் அதிகாரப்போட்டி நாடுகடந்தும் கொலை செய்யுமளவிற்கு போயிருக்கிறது. எப்போதும் தாங்களே தலைமைப்பீடத்தில் இருக்கவேண்டும் என்கிற அதிகார வெறி. கோயிலிலுமா? இதென்ன மனநிலை?- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முதலில் விசேட தேவை உள்ளவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யலாம் அதே வேளை எங்களால் பயன்பெறும் பயனாளர்கள் வேறு அமைக்களிடம் இருந்து பெரிய அளவில் உதவியையும் பெறாதவர்களாக இருக்க வேண்டும். சிலர் பல இடங்களில் உதவிகளை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஒன்றுமில்லாதவர்கள் போல இருப்பார்கள் இவர்களை எல்லாம் அந்தப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அல்லது கிராம சேவை அலுவலர்கள் மூலம் அறிந்து உண்மையான வறுமை உள்ள குடும்பங்களைத் தெரிவு செய்யலாம்- EU-Mercosur மெகா வர்த்தக ஒப்பந்தம்: வெற்றியாளர்களும் தோல்வியுற்றவர்களும்
உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்தின் பின்னர் உலகமயமாதலில் இருந்து நாடுகளின் தொகுதிகள் கொண்ட அமைப்பு நோக்கி உலகு நகர்வதாக ஐ எம் எப் கூறியது (பல்துருவ உலக ஒழுங்கு). அந்த நிலை 2024 உலக பொருளாதாரத்தில் 7% அழித்துவிட்டதாக கூறியதாக நினைவுள்ளது (ஆண்டு, புள்ளிவிபரத்தில் மாற்றம் இருக்கலாம்) ஆனால் தற்போது உலகம் அதன் இடைவெளியினை குறைக்கும் முயற்சியாக இந்த ஒப்பந்தத்தினை கருதுகிறேன். இந்த ஒப்பந்தங்களால் அதிக நன்மை பெற போகும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட தென்னமரிக்க நாடுகளாகும், அவாஇ பிரிக்ஸ் இலும் உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு மேலதிக நன்மையினை வழங்குகிறது. அதிக நலனை பெறும் வகையில் தம்மை தகவமைத்த (Repositioning) தென்னமரிக்க நாடுகள் பொருளாதார பிராந்திய அரசியலில் ஒரு மாற்றீட்டினை உருவாக்க முடியும் அதற்கு இந்த ஒப்பந்தம் தடையின்றி நிறைவேற்றப்படவேண்டும். கால மாற்றத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று முன்னோக்கி செல்வது நல்ல முயற்சி. CNBCIMF says fragmentation could cost global economy up to 7%...Fragmentation across the world could cost the global economy up to 7% of GDP, according to a new report by the IMF.ஆண்டு 2023- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இது ஒரு முன்னுரிமை கருதுபொருள் என்பதை தாண்டி, உதவி கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் means testing (வருவாய் சோதனை) யாக இருக்க வேண்டும். வசதி இருந்தால் அவர்களே கட்டி கொள்ள வேண்டும்.- EU-Mercosur மெகா வர்த்தக ஒப்பந்தம்: வெற்றியாளர்களும் தோல்வியுற்றவர்களும்
EU-Mercosur மெகா வர்த்தக ஒப்பந்தம்: வெற்றியாளர்களும் தோல்வியுற்றவர்களும் மால்பெக்கை யார் அவிழ்க்கிறார்கள் - யார் அவர்களின் போர்டியாக்ஸில் அழுகிறார்கள் (இருமல், இம்மானுவேல் மக்ரோன், இருமல்) என்று POLITICO பகுப்பாய்வு செய்கிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீதான 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை நீக்கும். | நடாலியா டெல்கடோவின் புகைப்படம்-விளக்கப்படம். ஜனவரி 9, 2026 மாலை 4:57 CET கார்லோ மார்டஸ்செல்லி , கோயன் வெர்ஹெல்ஸ்ட் மற்றும் டக்ளஸ் புஸ்வின் மூலம் 25 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் கிடைத்தது . அங்கு செல்வதற்கு இரத்தம், வியர்வை, கண்ணீர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட விவாதங்கள் தேவைப்பட்டன, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதியாக மெர்கோசூர் கூட்டணியுடனான ஒப்பந்தத்தை ஆதரித்தன - ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்க வழி வகுத்தன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீதான 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை நீக்கும். ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் அர்ஜென்டினாவின் பம்பாக்களில் இருந்து புல் மேய்க்கப்பட்ட மாட்டிறைச்சியை சாப்பிட முடியும். பிரேசிலிய ஓட்டுநர்கள் ஜெர்மன் மோட்டார்கள் மீதான இறக்குமதி வரிகள் குறைவதைக் காண்பார்கள். இந்த ஒப்பந்தத்தின் பொருளாதார தாக்கத்தைப் பொறுத்தவரை, அதன் மீதான காவியப் போர்களுடன் ஒப்பிடுகையில் அது மங்கிவிட்டது: ஐரோப்பிய ஆணையம் 2040 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தில் €77.6 பில்லியன் (அல்லது 0.05 சதவீதம்) சேர்க்கும் என்று மதிப்பிடுகிறது. எந்த ஒப்பந்தத்திலும் இருப்பது போல, வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் உள்ளனர். POLITICO, யார் தங்கள் மால்பெக்கை அவிழ்க்கிறார்கள், மறுபுறம், போர்டியாக்ஸில் யார் அழுகிறார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுகிறது. வெற்றியாளர்கள் ஜார்ஜியா மெலோனி இத்தாலிய பிரதமர் அதை மீண்டும் செய்துள்ளார். அரசியல் காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைக் கண்ட ஜியோர்ஜியா மெலோனி, ஒப்பந்தத்திற்கு எதிரான பிரெஞ்சு எதிர்ப்பின் பின்னால் தனது பலத்தை செலுத்துவதாக அச்சுறுத்திய பின்னர், இத்தாலிய விவசாயிகளுக்கு கடைசி நிமிட சலுகைகளை திறமையாகப் பெற்றார். இறுதி முடிவு? அதன் ஆதரவிற்கு ஈடாக, ரோம் விவசாய சந்தை பாதுகாப்புகளையும் ஐரோப்பிய ஆணையத்திடமிருந்து புதிய விவசாய நிதியுதவிக்கான வாக்குறுதிகளையும் பெற முடிந்தது - அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டில் வாக்காளர்கள் முன் எக்காளம் முழங்கக்கூடிய வெற்றிகள். கடைசி நிமிட இழுபறி இருந்தபோதிலும், மெலோனி மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்ற அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதையும் இது குறிக்கிறது. மொத்தத்தில், ரோமின் கிரீடத்தில் மற்றொரு பதக்கம். ஜெர்மன் கார் தொழில் தாஸ் ஆட்டோ சமீபத்தில் ஆரவாரம் செய்ய அதிக காரணம் இல்லை, ஆனால் மெர்கோசூர் இறுதியாக கொண்டாட ஒரு காரணத்தைக் கொடுக்கிறது. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆட்டோமொடிவ் துறை, லாட்ஆமில் நுகர்வோரை எளிதாக அணுகும். குறைந்த கட்டணங்கள் என்பது, எல்லாம் சமமாக இருந்தால், அதிக விற்பனை மற்றும் வோக்ஸ்வாகன் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டும். சில சிக்கல்கள் உள்ளன. தற்போது 35 சதவீதமாக உள்ள கட்டணங்கள் உடனடியாகக் குறையவில்லை. சொந்தமாக ஒரு ஆட்டோமொபைல் துறையை நடத்தும் பிரேசிலின் உத்தரவின் பேரில், வர்த்தகத் தடைகள் நீக்கம் செய்யப்படும். ஐரோப்பா பின்தங்கியிருக்கும் ஒரு பகுதியான மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு மெர்கோசூர் ஒரு கசப்பான, இனிப்பு நிறைந்த வெற்றியாகும். ஒரு வருடத்திற்கு முன்பு மெர்கோசூர் தலைவர்களுடன் ஒப்பந்தத்தில் கைகுலுக்கியதிலிருந்து , அவரது குழு சந்தேக நபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், வெள்ளிக்கிழமை இறுதியாக நிறைவேறிய அனைத்து முக்கியமான தகுதிவாய்ந்த பெரும்பான்மையை உருவாக்கவும் பின்னோக்கி சாய்ந்துள்ளது. அடுத்த வாரம் பெர்லேமாண்ட் முதலாளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பராகுவேவுக்குச் செல்லும்போது, வெற்றிச் சுற்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைக் கண்ட ஜியோர்ஜியா மெலோனி, ஒப்பந்தத்திற்கு எதிரான பிரெஞ்சு எதிர்ப்பிற்கு ஆதரவாக தனது பலத்தை செலுத்துவதாக அச்சுறுத்திய பின்னர், இத்தாலிய விவசாயிகளுக்கு கடைசி நிமிட சலுகைகளை திறமையாகப் பெற்றார். | எட்டோர் ஃபெராரி/EPA சர்வதேச அரங்கில், அமெரிக்கா மற்றும் சீனாவால் தொடர்ந்து சூழ்ச்சி செய்யப்பட்டு, ஒரு மரத்துப்போன டைனோசரைப் போல தோற்றமளிக்கும் நேரத்தில், பிரஸ்ஸல்ஸின் நிலையை இது மெருகூட்ட உதவுகிறது. ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் போற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது, அமெரிக்கா ஒரு தென் அமெரிக்கத் தலைவரை சங்கிலிகளால் பிணைத்து விரட்டியடித்தாலும் கூட. ஆனால் இந்த ஒப்பந்தம் மிக அதிக செலவில் வந்தது . ஐரோப்பிய ஒன்றிய விவசாயிகளை ஈர்க்க வான் டெர் லேயன் €45 பில்லியன் மானியங்களை உறுதியளிக்க வேண்டியிருந்தது, ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டில் விவசாய ஆதரவைக் கட்டுப்படுத்தவும், புதுமை மற்றும் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்யவும் எடுத்த முயற்சிகளில் இருந்து பின்வாங்கினார். ஐரோப்பிய விவசாயிகள் விவசாயிகளைப் பற்றிப் பேசுகையில், தலைப்புச் செய்திகளைப் பார்க்கும்போது, மெர்கோசர் ஒரு தவிர்க்க முடியாத பேரழிவு என்று நீங்கள் நினைத்ததற்கு மன்னிக்கப்படலாம். மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் எண்ணற்ற டன் தென் அமெரிக்க விளைபொருள்கள், கடின உழைப்பாளி பிரெஞ்சு அல்லது போலந்து உழவரை அவரது நிலத்திலிருந்து விரட்டப் போகிறது, இல்லையா? யதார்த்தம் சற்று சிக்கலானது. இந்த ஒப்பந்தம் மாட்டிறைச்சி முதல் கோழி வரையிலான வகைகளுக்கு கடுமையான ஒதுக்கீடுகளுடன் வருகிறது . இதன் விளைவாக, லத்தீன் அமெரிக்க விவசாயிகள் ஒரு ஐரோப்பிய நபருக்கு ஆண்டுக்கு இரண்டு கோழி மார்பகங்களை ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். இதற்கிடையில், விரிவாக்கப்பட்ட சந்தையிலிருந்து பயனடையவிருக்கும் இத்தாலிய பார்மேசன் அல்லது பிரெஞ்சு ஒயின் போன்ற சிறப்பு தயாரிப்புகளுக்கான ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கான சிறப்புப் பாதுகாப்புகளை இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது. இப்போது வேளாண்-போகல்பைஸுக்கு இவ்வளவு. மெர்கோசூர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு ஒரு கசப்பான வெற்றியாகும். | ஆலிவர் மேத்திஸ்/இபிஏ பின்னர் €45 பில்லியன் மானியங்கள் விவசாயிகளின் பைகளுக்குள் செல்லும் விஷயம் உள்ளது, மேலும் பிரஸ்ஸல்ஸ் நகர மையத்தில் டிராக்டர் போராட்டங்கள் மற்றும் உரச் சண்டைகள் அனைத்தையும் மீறி, இந்த ஒப்பந்தம் அவ்வளவு மோசமாக இல்லை என்று முடிவு செய்யாமல் இருப்பது கடினம். தோற்றவர்கள் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை விட வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தும் உயர்மட்ட அரசியல்வாதி வேறு யாரும் இல்லை, அவர் மிகப்பெரிய உள்நாட்டு அரசியல் அழுத்தத்தின் கீழ், இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்தார். எனவே பிரான்ஸ் போலந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து மற்றும் ஹங்கேரியுடன் இணைந்து மெர்கோசூருக்கு எதிராக வாக்களித்ததில் ஆச்சரியமில்லை. முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மனதளவில் ஒரு சுதந்திர வர்த்தக முதலாளியாக இருக்கலாம், ஆனால் உள்நாட்டில், இந்த ஒப்பந்தம் நீண்டகாலமாக பொறுமையாக இருக்கும் காலிக் விவசாயிகளின் முதுகில் ஒரு கத்தியாகக் கருதப்படுகிறது என்பதை அவர் நன்கு அறிவார். இத்தாலி போன்ற அரசியல் கூடை வழக்குகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட விகிதங்களில் பிரதமர்களை எரித்து வரும் மக்ரோன், சமீபத்தில் விலைமதிப்பற்ற சில வெற்றிகளைப் பெற்றுள்ளார். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை டார்பிடோ செய்வது அல்லது குறைந்தபட்சம் அதை மேலும் தாமதப்படுத்துவது, பிரெஞ்சு ஜனாதிபதிக்கு ஐரோப்பிய அரங்கில் இன்னும் சில ஆதிக்கங்கள் உள்ளன என்பதற்கான சான்றாக இருந்திருக்கும். தென் அமெரிக்க விளைபொருட்களில் எண்ணற்ற டன்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவது, கடின உழைப்பாளி பிரெஞ்சு அல்லது போலந்து உழவரை அவரது நிலத்திலிருந்து விரட்டப் போகிறது, இல்லையா? | டேரெக் டெல்மானோவிச்/இபிஏ கடைசி நிமிட எதிர் தாக்குதலுக்கு துருப்புக்களை அணிதிரட்ட மக்ரோன் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார், ஒரு கட்டத்தில் இத்தாலியின் மெலோனியை கவர்ந்த பிறகு, வேலையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததாகத் தோன்றியது. அதெல்லாம் வீணானது. இந்த சமீபத்திய தோல்விக்குப் பிறகு, எலிசே அரண்மனையின் ஒலிம்பிக் உயரங்களிலிருந்து மக்ரோன் மெதுவாக கீழே விழுவதைத் தொடரும்போது, தேசிய ஊடகங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியைப் பற்றி மேலும் கடுமையாக விமர்சிக்க எதிர்பார்க்கலாம். டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் வலிமைமிக்க தலைவர் நிக்கோலஸ் மதுரோவைப் பிடித்து நியூயார்க்கில் விசாரணைக்கு உட்படுத்தும் அமெரிக்கப் பணியின் சில நாட்களுக்குள் வந்த மெர்கோசூர் ஒப்பந்தம், ஐரோப்பாவிற்கு ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதற்கான மென்மையான சக்திக்கு பஞ்சமில்லை என்பதைக் காட்டுகிறது - உண்மையில் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவு இருந்தால். எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு தரப்பினருக்கும் வெற்றி-வெற்றி என்ற கருத்தாகக் கருதப்பட வேண்டும், மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது புவிசார் அரசியல் குலுக்கலின் கலையும் செயல்படும் விதம் அதுவல்ல. இது அவரது எதிரிகளை வலுப்படுத்தும் தற்செயலான நன்மையையும் கொண்டுள்ளது - பிரேசில் ஜனாதிபதி மற்றும் மெர்கோசூர் தலைவர் ஹான்ச்சோ லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உட்பட - ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் செயலை ஒன்றிணைக்கும் வரை காத்திருந்தபோது அசாதாரண பொறுமையைக் காட்டினார் (மேலும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையாக இருந்தபோதும் மக்ரோனுடன் ஒரு பொது நட்பை வளர்த்துக் கொண்டார் ). சீனா ஐரோப்பிய ஒன்றியம் மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வந்த பல தசாப்தங்களில், சீனா லத்தீன் அமெரிக்காவிற்கு, குறிப்பாக பிரேசிலுக்கு ஏற்றுமதிகளை விரிவுபடுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-மெர்கோசூர் ஒப்பந்தம் ஐரோப்பாவிற்கு சில சந்தைப் பங்கை மீண்டும் பெற ஒரு வாய்ப்பாகும், குறிப்பாக ஆட்டோமொபைல், இயந்திரங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற போட்டித் துறைகளில். இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் சீனப் போட்டியாளர்களை இன்னும் மிஞ்சும் நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தில் இருப்பதற்கான அதன் கையை வலுப்படுத்துகிறது. கடைசி நிமிட எதிர் தாக்குதலுக்கு துருப்புக்களை அணிதிரட்ட இம்மானுவேல் மக்ரோன் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார், ஒரு கட்டத்தில் இத்தாலியின் மெலோனியை கவர்ந்த பிறகு, அவர் வேலைகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததாகத் தோன்றியது. | லுடோவிக் மரின்/EPA எடுத்த பூல் புகைப்படம். அரசியல் ரீதியாக, பிரேசில் போன்ற நாடுகளை மேற்கத்தியக் கண்ணோட்டங்களிலிருந்து விலக்குவதில் சீனா ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, எடுத்துக்காட்டாக, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட BRICS குழு மூலம். இந்த ஒப்பந்தம் வர்த்தகம் பற்றியது மட்டுமல்ல, ஆழமான அரசியல் ஒத்துழைப்பையும் உருவாக்குவதால், லூலாவும் அவரது மெர்கோசூர் சகாக்களும் ஐரோப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளனர். அமேசான் மழைக்காடுகள் துரதிர்ஷ்டவசமாக, உலக சுற்றுச்சூழல் அமைப்பைப் பொறுத்தவரை, மெர்கோசூர் என்பது ஒரு பொருளைக் குறிக்கிறது: எரி, குழந்தை, எரி. பிரேசிலின் மந்தைகளுக்கு உணவளிக்கும் மேய்ச்சல் நிலங்கள், ஒரு காலத்தில் பரந்து விரிந்து, இப்போது சுருங்கி வரும் வெப்பமண்டல மழைக்காடுகளின் இழப்பில் வருகின்றன. எளிமையாகச் சொன்னால், ஐரோப்பாவிற்கு அதிக மாட்டிறைச்சி என்பது உலகிற்கு குறைவான மரங்களைக் குறிக்கிறது. காலநிலைக்கு இது எல்லாம் மோசமான செய்தி அல்ல. சட்டவிரோத காடழிப்புக்கு எதிரான கட்டாய பாதுகாப்புகள் மற்றும் அதன் கையொப்பமிட்டவர்களுக்கான பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கான உறுதிப்பாடு ஆகிய இரண்டும் வர்த்தக ஒப்பந்தத்தில் அடங்கும். https://www.politico.eu/article/eu-mercosur-trade-deal-the-winners-and-losers/- ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார்.
ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார். மாஸ்கோவுடனான கலந்துரையாடல்களுக்கு ஒரு சிறப்பு தூதரை நியமிக்க இத்தாலிய பிரதமர் பரிந்துரைக்கிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்," என்று ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை ரோமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். | எட்டோர் ஃபெராரி/EPA ஜனவரி 9, 2026 மாலை 5:41 CET ஹன்னா ராபர்ட்ஸ் எழுதியது ரோம் - உக்ரைனில் கிரெம்ளினின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரஷ்யாவுடன் பேச ஒரு சிறப்புத் தூதரை நியமிக்குமாறு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார். கடந்த மாதம் கிரெம்ளினுடன் புதிய உரையாடலுக்கு அழைப்பு விடுத்த பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தான் உடன்படுவதாக மெலோனி கூறினார் . ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்ரோனுடன் "உரையாடலில் ஈடுபடத் தயாராக இருப்பதாக" மாஸ்கோ பதிலளித்தது. "ஐரோப்பா ரஷ்யாவுடன் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்," என்று மெலோனி வெள்ளிக்கிழமை ரோமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "ஐரோப்பா களத்தில் இரு தரப்பினரில் ஒருவருடன் மட்டுமே பேசினால், அது செய்யக்கூடிய பங்களிப்பு குறைவாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்." ஐரோப்பாவிற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை அல்லது "புடினுக்கு ஒரு உதவி செய்யும் அபாயம் உள்ளது" என்று மெலோனி எச்சரித்தார். உக்ரைனில் ஒரு சாத்தியமான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்து, "பல குரல்கள் குரல் கொடுத்து வருகின்றன, அதனால்தான் உக்ரைன் பிரச்சினையில் ஒரு ஐரோப்பிய சிறப்புத் தூதரை நியமிப்பதற்கு நான் எப்போதும் ஆதரவாக இருக்கிறேன்" என்று மெலோனி கூறினார். பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய முழுமையான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்தவுடன் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் மாஸ்கோ விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடவில்லை. ஏழு முன்னணி நாடுகளின் குழுவில் ரஷ்யாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று நவம்பர் மாதம் அமெரிக்கா முன்மொழிந்தது. ஆனால் ரஷ்யாவை மீண்டும் G7 குழுவிற்கு வரவேற்பது பற்றிப் பேசுவது "முற்றிலும் முன்கூட்டியே" என்று மெலோனி கூறினார். நேட்டோவின் பிரிவு 5 கூட்டு-பாதுகாப்பு விதியின் மாதிரியாக மேற்கத்திய நட்பு நாடுகளுடன் உக்ரைன் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அது "தேவையில்லை" என்பதால், சாத்தியமான சமாதான ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் இத்தாலி சேராது என்றும் மெலோனி வலியுறுத்தினார். மிகப் பெரிய ரஷ்ய படைக்கு எதிராக வெளிநாட்டு துருப்புக்களின் ஒரு சிறிய குழு கடுமையான தடையாக இருக்காது என்று அவர் பரிந்துரைத்தார். கிரீன்லாந்து மீதான டிரம்பின் சமீபத்திய ஆக்ரோஷமான சொல்லாடல்களுக்கு பதிலளித்த மெலோனி, பரந்த ஆர்க்டிக் தீவை அமெரிக்க இராணுவம் கையகப்படுத்துவதை "ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார். "கிரீன்லாந்து மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்பவில்லை, அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், யாருக்கும் எந்த நன்மையும் செய்ய மாட்டேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க நலன்கள் மற்றும் பாதுகாப்பிற்காக கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ள டிரம்ப் நிர்வாகம் "மிகவும் உறுதியான முறைகளை" பயன்படுத்துவதாக மெலோனி நம்புவதாகக் கூறினார். "பல வெளிநாட்டு நடிகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு பகுதி இது, மேலும் வெளிநாட்டு நடிகர்களின் அதிகப்படியான தலையீட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே அமெரிக்காவின் செய்தி என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். சர்வதேச சட்டம் தேவையில்லை என்ற டிரம்பின் வியாழக்கிழமை கருத்துக்களுக்கு மெலோனி பதிலளித்தார் , "சர்வதேச சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆனால் "தேசிய நலன்கள் சரியாக ஒத்துப்போகாததால்" கூட்டாளிகளுடன் உடன்படாதது இயல்பானது என்றும் அவர் மேலும் கூறினார். "நான் டிரம்புடன் உடன்படாதபோது, நான் அப்படிச் சொல்கிறேன் - நான் அதை அவரிடம் சொல்கிறேன்." https://www.politico.eu/article/italy-giorgia-meloni-calls-for-europe-to-talk-to-russia/- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 85 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 85 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 22 முதல் 32 வரையிலான அத்தியாயங்கள் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியைப் பற்றியவை ஆகும். எனவே, முழு அத்தியாயமும் ஒன்றாக இங்கு விவாதிக்கப்படுகின்றன: மகாவம்சத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 271, இதில் 81 பக்கங்கள் அல்லது சுமார் 30% பக்கங்கள், துட்டகாமினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காமனி இருபத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார், ஆனால் மன்னர்களின் மொத்த ஆட்சிக்காலம் சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள். எனவே, காமனி மொத்த ஆட்சிக் காலத்தில் 3% க்கும் குறைவாகவே ஆட்சி செய்தார். என்றாலும், 3% காலம் மட்டுமே ஆட்சி செய்த மன்னனுக்கு 30% பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தலைகீழ் நடத்தை மகாவம்சம் எவ்வளவு நம்பகத்தன்மையற்றது என்பதையும், ஆசிரியரான மகாநாமாவின் மனநிலையையும் சுட்டிக் காட்டுகிறது. மகாநாகன் [Mahanaga] தேவநம்பிய தீசனின் ஆட்சிக் காலத்தில் துணை ஆட்சியாளராக இருந்தார். அரியணைக்கு அடுத்தபடியாக இருந்தார். என்றாலும், தேவநம்பியதீசனின் மனைவியால் கொல்லப்படுவதைத் தவிர்க்க ரோஹனாவுக்கு [Rohana, "ரோஹண" என்ற பெயர் வரலாற்று ரீதியாக இலங்கையின் தெற்குப் பகுதியைக் குறிக்கிறது, இது தற்போதைய தெற்கு மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. பண்டைய காலங்களில், ரோஹண (அல்லது ருஹுணா / Ruhuna) இலங்கையின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருந்தது, அதனுடன் ராஜரட்ட (வடக்கு-மத்திய பகுதி / Rajarata ) மற்றும் மலாயா ரட்ட (மத்திய மலைப்பகுதிகள் / Malaya Rata) ஆகியவையும் இருந்தன.] ஓடிவிட்டார், அங்கு தனது சொந்த இராச்சியத்தை நிறுவினார். அதாவது, ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு இராச்சியங்கள் அப்பொழுது இருந்தன; ஒன்று அனுராதபுரத்தில் தேவநம்பிய தீசனால் ஆளப்பட்டது, மற்றொன்று ரோஹனத்தில் மகாநாகனால் ஆளப்பட்டது. அரண்மனை சூழ்ச்சியின் காரணமாக, தனக்கென ஒரு ராஜ்யத்தை நிறுவ அவர் ரோஹனத்திற்குச் சென்றார். மேலும், மகாநாகன் தனது குடும்பத்தினர், ஆண்கள் மற்றும் குதிரைகளுடன் மன்னரின் அறிவிப்பு இல்லாமல் நகரத்தை விட்டு வெளியேறினார் என்று நம்புவது அபத்தமானது. கல்யாணியில் நாகர்கள் ஆட்சி செய்த மற்றொரு ராஜ்யம் இருந்ததாகத் தெரிகிறது. தற்செயலாக, இந்த மன்னரின் பெயரும் தீசன். எனவே, அவ்வேளையில், குறைந்தது மூன்று இராச்சியங்கள் இருந்துள்ளன என்று ஊகிக்கலாம். . மகாநாகனின் மகன் யாத்தலயக்திஸ்ஸன், அவர் தனது தந்தைக்குப் பிறகு ரோஹணவில் [உருகுணை இராச்சியம் / Kingdom of Ruhuna] அரியணை ஏறினார். அவரது மகன் கோதாபயனும் அவரது தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்தார். கோதாபயனின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் காகவண்ண தீசன் ஆட்சி செய்தார். மகாநாகன், அட்டாலய திச்சன் அல்லது யாத்தலயக்திஸ்ஸன் [Yatala Tissa or Yatthalayaktissa], கோதாபயன் [Gothabhaya] மற்றும் காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் [Kavan Tissa] ஆகிய இந்த நான்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் காலத்தை மகாவம்சம் தரவில்லை. முழு அத்தியாயமும் தீபவம்சத்திற்குப் பிறகு, செருகப்பட்டிருக்க வேண்டும்? மகாவம்சத்தின் நாயகன் வெளிப்படையாக துட்டகாமினி ஆகும். இவனின் தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுத்தாத்தா ஆகியோரின் ஆட்சிக்காலம் இராசாவலியவில் கூட கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்றவைப் போல, அவர்களின் பெயர்களை மட்டும் பட்டியலிடுகிறது. இப்படி எந்த விவரங்களும் இல்லாமல் ஒரு வரலாறு இருக்கமுடியாது. ஆகவே இதன் வரலாற்றில் ஒரு ஐயப்பாடு உண்டு? அதுமட்டும் அல்ல, துட்டகாமினியின் கதை அமைப்பை உற்றுநோக்கும் பொழுது ஜோடிக்கப்பட்ட கதையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று இயல்பாகவே எவருக்கும் தோன்றும்? துட்டகாமினியின் தாய் விகாரமகாதேவி, அவர் கல்யாணி மன்னரின் மகள். தீபவம்சத்தில் விகார தேவி பற்றி எந்த குறிப்பும் இல்லை. புத்தர், கல்யாணி நாக மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்றாவது முறையாக விஜயம் செய்ததாகக் இலங்கை நாளாகமம்கள் கூறுகின்றன. எனவே விகார தேவி ஒரு நாக இளவரசியாக இருக்க வேண்டும்? மேலும் விகாரமகாதேவி பிறந்த களனி இராச்சியம், நாகர் இராச்சியமாக இருந்ததுடன், அது தென்னிந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. அத்துடன் மேற்கு இலங்கையில் ஆட்சி செய்தவர்கள் தமிழ் வணிகர்களுடனும் தென்னிந்திய தாக்கங்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூட சில புராணக்கதைகள் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, ருஹுணா [Ruhuna] பிரதேசம், பல நூற்றாண்டுகளாக சிங்களவர்களும் தமிழர்களும் தொடர்பு கொண்ட ஒரு கலப்புப் பகுதியாக அறியப்பட்டதும் ஆகும். இன்னும் ஒன்றும் சொல்லவேண்டும், வரலாற்று மற்றும் தொல்பொருள் சான்றுகள், தீவில் திராவிட (தமிழ்) மற்றும் இந்தோ-ஆரிய கூறுகள் உள்ளிட்ட இன மற்றும் கலாச்சார தாக்கங்கள் மிக ஆரம்ப காலத்திலிருந்தே, இருந்ததாகத் தெரிவிக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக்கு முன்பே, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையில் இருந்ததுடன் திராவிட செல்வாக்கு மற்ற பகுதிகளுக்கும் பரவியதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன! மகாவம்சம் போன்ற நாளாகமம் ஆதாரங்களின்படி, அவரது தந்தை மன்னர் களணி தீசன் [Kelani Tissa / Tissa of Kelaniya], ஒரு அப்பாவி புத்த துறவியைக் கொன்றதன் மூலம் பெரும் அநீதியைச் செய்தார். இதன் விளைவாக, கடல் பொங்கி எழுந்து அவரது இராச்சியத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததாகக் கூறப்படுகிறது. கடவுள்களை திருப்திப்படுத்தவும், கடலை அமைதிப்படுத்தவும், அவர் தனது மகள் விகாரமகாதேவியை ஒரு படகில் ஏற்றி, அவளைத் தத்தளிக்கச் செய்தார். இறுதியில் அவள் தெற்கு இலங்கையில் உள்ள ருஹுணாவில் தரையிறங்கினாள், அங்கு மன்னர் காகவண்ண தீசன் (துட்டகாமினியின் தந்தை) அவளை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த கதையும் இந்தியாவின் பண்டைய இதிகாசத்தின் ஒரு சாயலை வெளிப்டையாகக் காட்டுகிறது. மற்றும் கட்டாயம் இதுவும் எந்த ஒரு உண்மையான வரலாறும் அல்ல, ஒரு புராணக் கதையாகவே தோன்றுகிறது. Part: 85 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapters 22 to 32 are about Gamani and, therefore, discussed together: The total number of pages of the Mahavamsa is 271 and 81 pages are allotted to Gamani: about 30% of the pages are allotted to Gamani. Gamani ruled only for twenty-four years, but the total lengths of the reigns of kings is about eight hundred and thirty five years. Gamani ruled, therefore, less than 3% of the total reigns. The king who ruled only for 3% of the time is allotted 30% of the pages. This lopsided treatment shows how untrustworthy the Mahavamsa is and the mindset of the author, Mahanama. Mahanaga was the vice-regent during the reign of Devanampiya Tissa, being next in line to the throne, fled to Rohana to avoid being killed by the wife of Devanampiyatissa, and founded his own kingdom there. This means that there were at least two kingdoms at the same time; one in Anuradhapura ruled by Devanampiya Tissa and another in Rohana ruled by Mahanaga. He went to Rohana to establish a kingdom for himself because of the palace intrigue. It is, furthermore, ridiculous to believe that the vice-regent left the city with his family, men and horses without the notice of the king. It seems that there was another kingdom at Kalyani ruled by Nagas. Coincidently, the name of this king also Tissa. There were at least three kingdoms. Mahanaga’s son was Yatthalayaktissa, and succeeded his father to the Rohana throne. His son Gothabhaya also ruled after his father. His son Kakavannatissa reigned after Gothabhaya’s death. Mahavamsa is not giving the lengths of the reigns of these four kings; Mahanaga, Yatthalayaktissa, Gothabhaya and Kakavannatissa. The whole episode must have been later insertion, after the Dipavamsa. The hero of Mahavamsa is obviously Duttha Gamani, and even the length of the reigns of his father, grandfather, and the great-grandfather were not given. Rajavaliya lists their names but without any specifics for the lengths of their reigns. Culavamsa also does not list the lengths of their reigns. It must have been a fabricated story, not history, without any details. Duttha Gamni’s mother is Vihara Devi, and she was the daughter of the king of Kalyani. There is no mention of Vihara Devi in the Dipavamsa. The alleged third visit of Buddha to Lanka was to Kalyani, on the invitation of the Naga king of Kalyani. Therefore, the Vihara Devi should be a Naga princess. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 86 தொடரும் / Will follow துளி/DROP: 1983 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 85] https://www.facebook.com/groups/978753388866632/posts/33210382945276925/? - குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.