Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய நிலங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வரும் வயல்வெளிகள் உப்பளமாக மாற்றப்படுமானால், எதிர்காலத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர். மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். https://web.facebook.com/share/v/19Qg4Wn8oP/ விவசாய நிலத்தில் உப்பளம் அமைக்க அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது?
  3. Today
  4. சினிமா பாடல் இலக்கியமா அல்லது இலக்கியம் இல்லையா என்பதை கேட்பதைவிடுத்து யார் யாருக்கு ஞானபீடம் வேண்டும் என வினவுங்கள். அவர்களுக்கு வைரமுத்து ஞானபீடத்தை பெற்றதனால் ஏற்பட்ட கடி, சொறி, சிரங்கு உட்பட எல்லா உபாதைகளும் பறந்துவிடும்.
  5. இல்லை கோஷான். பாரதியின் எழுத்தும், இவருடைய எழுத்தும் ஒன்றில்லை. அருகில் கூட இல்லை. பாரதியின் ஆன்மாவிலேயே இசையும், தமிழும் இருந்தது. மிகவும் இலகுவான, எல்லோருக்கும் தெரிந்த காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்ற வரிகளுக்கு எந்த இசையும் தேவையில்லை. இந்த வரிகளின் அர்த்தம் புரிவதே ஒரு கவிதையான தருணம். பாரதியாரோ, புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ கவனிக்கப்படாமல் போனதே வரலாற்றில் வந்து போன வைரமுத்துகள் போன்றவர்களாலேயே. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இருந்த பிணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். அன்று புதுமைப்பித்தனை தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலத்தால் அழியாமல் நிற்பவர் அவரே. அவருடைய 'சாப விமோசனம்' சிறுகதைக்கு ஈடாக தமிழில் ஒன்று கிடையவே கிடையாது. அசோகமித்திரன் ஏழைப் பிராமணன் ஆகவே இறந்துபோனார். அவருடைய 'புலிக்கலைஞன்' உலக கிளாசிக். ஆனாலும் அவர் வாழும் காலத்தில் இயக்குனர் ஷங்கரும், பாக்யராஜும், ஏ ஆர் முருகதாஸுமே எழுத்தாளர்களாக தமிழ் மக்களுக்கு தெரிந்தார்கள். அதை தாண்டினால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றோர். இதுவே தமிழ் சமுதாயம் அன்றும், இன்றும். வைரமுத்துவின் திகட்டும் வர்ணனைகளுடனான வானம்பாடிப் பாடல்கள் இன்னும் சில வருடங்களிலேயே மறைந்துவிடும். எம் ஜிஆரின் நடிப்பு போல, ரஜனியின் ஸ்டைல் போல, விஜய்யின் டான்ஸ் போல. இந்த உலகம் இருக்கும் வரை நவீன தமிழின் தலைமகனாக பாரதி இருப்பார். வைரமுத்துவோ அவருடைய பாடல்களோ இருக்காது. சரஸ்வதியே இறங்கி வந்து தான் இதை எழுதியிருக்க வேண்டும்: காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே! சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே! பாரதிக்கு ஈடு இணையே கிடையாது, கோஷான்...................
  6. துவிச்சக்கர வண்டியில் மட்டும் அல்ல வீதி ஓரமாக நடந்து சென்ற வயோதிபர் ஒருவரை இருமுறை வேகமாக சென்ற இருசக்கர இயந்திர வாகனங்கள் இடித்ததை நண்பர் ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன். வெளிநாட்டு பணம், என்னத்தை சொல்ல? வெள்ளி அல்லது திங்கள் விடுமுறை என்றால் கொழும்பில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் சிலவேளை 3 நாள் விடுமுறைக்கு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்ல முயல்வார்கள். இவர்களால் எரிபொருள் பயன்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.
  7. தம்பர் சமாதான விரும்பி என நம்மில் சிலர் தலைகுத்தனமாக கணித்தது போல்… ஈரான் அடித்தவுடன் அடங்கி விடும் என தம்பர் தப்பாக கணித்துள்ளார்.
  8. ஆம்…ஆனால் நோபல் கமிட்டி விருதை கொடுத்தது. சொல்லப்பட்ட காரணம் இசையை நீக்கி விட்டு பார்த்தாலும் ஒரு song writer ஆக அவரின் எழுத்துக்கள் இலக்கிய தரத்தை எட்டின என்பதே. எனக்கு பட்டுகோட்டையின் பாட்டு இந்த வகை. ஞானபீடத்துக்கு வைரமுத்துவின் பாடல்கள். இங்கே பொயிண்ட் என்னவென்றால் - 5 முட்டை, அரை கிலோ மா, 250 கிராம் சீனி போட்டு நன்றாக அடித்து, 20 நிமிடம், 175 பாகை போறணையில் வெந்து வருவது மட்டுமே உணவு (இலக்கியம்) என யாரும் சொல்ல முடியாது. வயிற்று பசி ஆற்றுவது எல்லாமும் உணவே. ஆன்மாவின் பசி ஆற்றுவது எல்லாமும் இலக்கியமே. பவுடர் டப்பாவை சின்மயி சர்ச்சை நேரம் நான் போட்டு தாக்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இவர் ஒரு பழத்தட்டு மனிதர் என்பதை யாழில் இவர் முள்ளிவாய்க்கால் கவிதை எழுதியதற்கு பதிலாக நானே கவிதை போல ஒன்றை எழுதி சொல்லி இருந்தேன். இவர் இதை “பெரும்பாடு” பட்டு வாங்கி இருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அதுதான் இந்தியா - எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா, ரஜனிக்கு தாதா சாகேப், இளையராஜாவுக்கு பதம் விருது, சொல்லி கொண்டே போகலாம். இல்லை டிலனுக்கு எழுத்துக்குத்தான் கிடைத்தது இசைக்கு அல்ல என நினைக்கிறேன். அவர் இறந்து பலகாலமாக பாரதி எழுதியதை கூட அன்றைய புளித்த மாவுகள் இலக்கியம் என ஏற்கவில்லை. பாரதி உண்மையில் ஒரு singer-song writer தான். அவரின் புத்தகத்தை, கைஎழுத்து பிரதியை பார்த்தால் தெரியும், ஒவ்வொரு கவிதைக்கும் அவரே தாளம் என்ன, ராகம் என்ன என மெட்டும் போட்டிருப்பார். பவுடர் டப்பாவுடன் பாரதியை ஒப்பிடவில்லை. ஆனால் எழுத்து வகை என பார்த்தால் இரண்டும் ஒன்றே. பாரதி இசையையும் தானே அமைத்தார். பவுடர் டப்பா - இன்னொருவர் இசைக்கு எழுதினார்.
  9. Yesterday
  10. இதை மேற்கோள் காட்டப் போகின்றவர் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்............🤣. சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நோபல் இலக்கிய விருதுகளில் இரண்டு மிக விமர்சனத்திற்கு உட்பட்டன. ஒன்று இது, மற்றொன்று ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வந்த விமர்சனங்களின் சாரம் ஞாபகம் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக Bob Dylon நோபல் விருதை வாங்கப் போகக் கூடவில்லை.................. பழத்தட்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்................... Bob Dylon சமனாக தமிழில் ஒருவருக்கு அதி உயர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும்...................🫣............ இது கூட அடுத்ததாக நடக்கும்............... பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது பகவான் வந்து காத்தார்................. தமிழ்த்தாயை காக்க பாரதியும், புதுமைப்பித்தனும், சி சு செல்லப்பாவும், ப சிங்காரமும், அசோகமித்திரனும், இன்னும் சிலரும் மீண்டும் மீண்டும் பிறந்து, ஏழ்மையில் உழன்று, வாழும் நாட்களில் எவருக்கும் தெரியாமல் இருந்து, பின்னர் அப்படியே இறந்து போக வேண்டும்.........................😌.
  11. ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல. ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது. சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள் Published:26th Oct, 2025 at 11:08 AM தமிழகம் Updated:26th Oct, 2025 at 11:08 AM தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது. ‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான். தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார். https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar இனி என்ன? இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂
  12. சினிமா பாடல் இலக்கியம் அல்ல என்பதை தக்க ஆதாரத்தோடு (அவ்ஶ்ரீ சொன்னார், இவர் சொன்னார் அல்ல) நிறுவுமாறு @கிருபன் ஜி அழைக்கப்படுகிறார். Bob Dylon க்கு ஏன் 2016 க்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது எமது இலக்கிய மேட்டு குடி ஜமீன்களுக்கு தெரியுமா?
  13. உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்க கூடாது என்பதை ஈரான் மரண அடி கொடுத்து நிறைவேற்றிவிட்டது இன்ஷாஅல்லாஹ்
  14. சினிமா பாடல்கள் இலக்கியத்தினுள் வருகின்றது என்பது தெரியாதபடியால் கேட்டு குத்தாட்டம் போட்டுவிட்டார்கள்.
  15. சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.
  16. எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.
  17. சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி
  18. அப்படி என்றால் மூன்று சக்கரவர்த்திகள் உலா போயிருக்கின்றார்கள் போல..............🤣. அது நான் இல்லை, கோஷான்...............
  19. rtonepodSsetg4à1636 6L1 1m 8u1:0tg7s63u2grm1ca1m a80tl89ic3h · 2026 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே (CSK) அணி உண்மையிலேயே மிரட்டலாகத்தான் தெரிகிறது! ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிஎஸ்கே இந்த முறை கையில் எடுத்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பலம் மற்றும் 🏏"பேட்டிங் மற்றும் எக்ஸ்-ஃபேக்டர் (X-Factor) * சஞ்சு சாம்சன் & ஆயுஷ் மத்ரே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டிரேட் (Trade) செய்தது இந்த ஆண்டின் மிகப்பெரிய திருப்புமுனை. டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடி ஃபார்ம், சிஎஸ்கே-வின் டாப் ஆர்டருக்கு ஒரு பெரிய பலம். இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால், ருதுராஜ் உடன் அவர் தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்புள்ளது. * ருதுராஜ் கேப்டன் ருதுராஜின் நிதானமும், ஷிவம் துபே சிதறடிக்கும் அதிரடியும் சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருக்கும். * டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis): 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழியக் காத்திருக்கிறார். ⚡பந்துவீச்சு கூட்டணி * மட் ஹென்றி & நைதன் எல்லிஸ்: டி20 உலகக்கோப்பையில் மட் ஹென்றி காட்டிய வேகம் மற்றும் நைதன் எல்லிஸின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம். * கலீல் அகமது & நூர் அகமது: பவர்பிளே ஓவர்களில் கலீல் அகமதுவின் இடதுகை வேகப்பந்து வீச்சும், நூர் அகமதுவின் மாயாஜால சுழலும் எதிரணிகளைத் திணறடிக்கும். 🔥" இளம் திறமைகள் மற்றும் அனுபவம் * பிரசாந்த் வீர் & கார்த்திக் சர்மா: இந்த இரு இளம் வீரர்களையும் தலா ₹14.20 கோடி கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள இவர்கள் ஜடேஜா மற்றும் தோனியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'பியூச்சர் ஸ்டார்ஸ்' ஆகப் பார்க்கப்படுகிறார்கள். * MS தோனி: 'தல' தோனி இந்த முறையும் ஃபினிஷராக கடைசி 2-3 ஓவர்களில் களமிறங்கி ஆட்டத்தை முடிக்கத் தயாராக இருக்கிறார். நிச்சயமாக, அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு என சிஎஸ்கே இந்த முறை ஒரு "ஸ்பெஷல்" கலவையை உருவாக்கி இருக்கிறது. ஜடேஜா போன்ற ஒரு ஜாம்பவான் இல்லாதது குறையாகத் தெரிந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் புதிய இளம் வீரர்களின் வருகை அந்த இடத்தை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பு சரியாக இருந்தால், 6-வது ஐபிஎல் கோப்பையைச் சென்னை ஏந்துவது உறுதி! #WhistlePodu சிஎஸ்கே-வின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மார்ச் 30-ம் தேதி நடைபெற உள்ளது. Voir la traduction......!
  20. ஒட்டக்கூத்தரா ரசோதரன் என்ர பெயரில் எழுதுவது 😂 😂 ஒரு பவுடர் டப்பாவே, பழதட்டை தூக்கியது😂
  21. அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.