stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Today
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
உங்கள் நண்பர்கள், அண்ணன் இருவரின் முயற்சியும் கைகூட பிரார்திக்கிறேன்.
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
புலம்பெயர் சில்லறைகள் திமுக மீது செய்த அத்தனை எதிர்வினைகளையும், திருமாவின் இலண்டன் கூட்டத்தில் நடந்த அவமானம், பெரியார் மீதான அவதூறுகள், கஞ்சா கோஸ்டிகள் புத்த வட்டத்தில் செய்த அநாகரீகம்… இப்படி பலதும் நடந்த போது அதை மெளனமாக வேடிக்கை பார்த்தனத் கஜன் போன்றோர்… இதன் பின்பும்… கஜனை ஒரு மனிசனாக மதித்து வரவேற்றது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. வழமை போல்… புலம்பெயர் காவாலிகள் முகத்தில் கரி.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
உங்களுக்கும், உங்கள் தலைவர் பொன்னருக்கும் இந்த அரசியல் விளக்கம் வர 16 ஆண்டுகள் தேவைபட்டது என எடுத்து கொள்ளலாமா? 16 வருடமாக, ஓங்கோல் கருணாநிதி, இனத்துரோகி, சுடலை ஸ்டாலின், திருட்டு திமுக என தேவையில்லாத ஆணிகளை எல்லாம் புடுங்கி விட்டு…. இப்போ பேச்சுவார்த்தை என்றால் செல்வபெருந்தகையோடு கூட பேசவேண்டும், எதிரியோடு கூட பேச வேண்டும் என்கிறீர்கள். இதைத்தான் ஐயா 16 வருடமாக சொல்லிவாறோம், இப்ப நித்திரையால எழும்பி வாறியள்😂.
-
அமெரிக்க இந்திய போட்டிக்குள் இலங்கை.
அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை. மேலும் அழுத்திச் சொல்வதானால், அநுரகுமார திஸாநாயக்கவின் இடத்தில் இப்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும். ஆகவே -- டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளிநாடுகள் உதவியளிப்பதை அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் நுட்பம் அல்லது ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் மிகைப்படுத்திப் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும். ஆனால், அவ்வப்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் சமகால புவிசார் அரசியல் போட்டிச் சூழலை இனம்காணக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருப்பது அவசியம். குறிப்பாக -- மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய புவிசார் அரசியல் பின்னணிகளை சரியாகப் பயன்படுத்தினார். அதாவது, விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா தான் பொருத்தமான நாடு என்பதை மகிந்த தெரிந்து கொண்டார். இதனால் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது. 2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது. 2020 கோட்டாபய எடுத்த நகர்வும் 2022 இல் ரணில் ஜனாதிபதியாக வந்த போது மேற்கொண்ட நகர்வுகளும், அமெரிக்க - இந்திய அரசுகளை சமாந்தரமாக கையாளும் அணுகுமுறைக்கு வழி வகுத்தது. அதேநேரம் -- சீனாவுக்குரிய இடமும் இலங்கையில் சுதந்திரமாக உண்டு. இந்த அரசியல் தேவை, சிறிமா - ஜேஆர் காலம் முதல் உண்டு. இது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு புரியாத புதிரும் அல்ல. இதையே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவும் கையாளுகிறார். ஆகவே இது ஒன்றும் பெரிய இராஜதந்திரம் அல்ல. குறிப்பாக இலங்கையின் சிஸ்ரம் (System) என்பது எப்போதும் அமெரிக்கச் சார்புத் தன்மை கொண்டது தான்.. அதன் பின்னர் தான் இந்திய, சீன உறவு என்பது. ஆனாலும், ஈழத்தமிழர் விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்கா இன்றுவரை கூட இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டோடு ஒத்துழைக்கிறது. குறிப்பாக -- சீனா - ரசியாவை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் நிலவினாலும், தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டோடு அமெரிக்கா ஒத்துழைக்கிறது. அதாவது மோடி இருந்தால் என்ன ராகுல் காந்தி இருந்தால் என்ன 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவுக்குத் புரியும். வடக்கு கிழக்கில் உள்ள இயங்கைத் துறைமுகங்களை பங்கு போடுவதிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. இதனை அநுரகுமார திஸாநாயக்க நன்கு விளங்கிக் கொண்டு காய்நகர்த்துகிறார். அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும். அதேநேரம்-- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமெரிக்க பின்புலம் கொண்ட கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கஜேந்திரகுமார் எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ம் அவசியமான ஒன்று. இது கஜேந்திரகுமாருக்கும் நன்கு தெரியும். இப்போது இவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றிருப்பது கூட அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் தேவையின் அடிப்படைகளை மையம் கொண்டதாகக் கூட இருக்கலாம். தற்போது குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலையில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த அடிப்படையில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா முரண்பாட்டில் உடன்பாடாக பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு. இந்தியாவின் ரசிய - சீன கூட்டு அமெரிக்காவுக்கு ஒத்துவராத சூழலிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நிற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆகவே, இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய உறவு இருக்க வேண்டுமானால், முதலில் வடக்கு கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இதனால் புலிகள் இயக்கமும் அழிக்கப்பட்டது. ஆனாலும் -- 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அந்த அமைதி நிலவாத ஒரு பின்னணியில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி ஏற்கனவே அமெரிக்க இந்திய அரசுகளின் கொள்கைக்கு ஏற்ப இணங்கிச் செல்லக் கூடிய பக்குவத்துக்குள் நுழைந்துவிட்டது . கஜேந்திரகுமார் சற்று வித்தியாசமாக செயற்பட்டு வருவதால், அமெரிக்க - இந்திய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன. ஆனாலும் தோ்தல் அரசியலை மையமாக் கொண்டு தூய தமிழ்த் தேசியம் பேசுவது போன்ற தோற்றத்தை கஜேந்திரகுமார் காண்பித்து வருகிறார். இதன் பின்னணியில் கஜேந்திரகுமாருக்கும் அவரது கட்சிக்கும் நோகாமல் நகர்த்தப்படும் அரசியல் தான், இந்த தமிழ் நாட்டுப் பயண ஏற்பாடு. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த அணுகுமுறைக்குள் கஜேந்திரகுமார் சென்றிருக்கத் தான் வேண்டும். ஆகவே -- அமெரிக்க இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் போட்டிக்குள் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த காய் நகர்த்தல்களை செய்கிறார்கள் என்பது புரிகிறது. தமிழ் நாட்டில் ஸ்ராலின் ஆட்சியில் இருந்தால் என்ன விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன, ஈழத்தமிழர் விவகாரத்தில் 13 என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்வாக்கியே கஜேந்திரகுமார் சென்னைக்குச் சென்றிருக்கிறார். அதேநேரம் -- அமெரிக்க - இந்திய அரசுகள் தயாரிக்கும் தமிழர் விவகார ஏற்பாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் ஒரு கட்டத்தில் அடங்கிச் செல்லவில்லை என்றால், அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இல்லாமில்லை. பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தமக்கு ஏற்றமாதிரியான அரசியலைத்தான் அமெரிக்க - இந்திய அரசுகள் தற்போது கையாண்டு வருகின்றன. அதேநேரம் -- ரசிய - சீன கூட்டை இந்தியா வளர்த்து வருகின்றது என அமெரிக்கா ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மையமாக் கொண்டு அநுர அரசாங்கம் கையாளும் அணுகுமுறை, ரணில் என்ற தற்காப்பு அரசியல் சாணக்கியனால் மடைமாற்றப்படக் கூடிய ஆபத்துகளும் இல்லாமலில்லை. ஆகவே -- சரியான உத்தியுடன் வகுப்படாத அரசியல் வியூகத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதால், கையாளப்படும் சக்தியாக மாத்திரமே தமிழ்த்தரப்பு கையாளப்பட்டு வருகிறது. பொறிமுறை ஒன்றின் கீழ் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்சி அரசியலுக்கு அப்பால், உரிய முறைப்படி இயங்கியிருந்தால், தற்போதைய புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் ஒரு அரசு அற்ற சமூகமாக குறைந்தபட்ச அரசியல் லாபங்களை பெற்றிருக்கலாம். இப்போது கூட சஜித்,ரணில், அநுர என்று உள்ளக அரசியல் முரண்பாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்கள் சிங்கள அரசியல் பரப்பில் ஆழமாக வேரூன்றி வருகின்றன. அது சாத்தியமா இல்லையா என்பது வேறு. ஆனால் அந்த அரசியல் பின்னணிகளைக் கூட தமக்குச் சாதகமாக மாற்றும் நுட்பங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லையே! வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறையில் ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமை அங்கீகரிக்கப்படாது. ஏனெனில் சமஸ்டிக் கோட்பாடு பல வகைப்பட்டது. அமெரிக்காவின் உள்ள முழுமையான சம்ஸ்டி ஆட்சியை முறை கஜேந்திரகுமார் கோருகிறாரா அல்லது இந்திய சமஸ்டி முறைமையை கேட்கிறாரா? எதுவானலும் -- “ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை“ என்ற கோட்பாட்டில் இருந்து கஜேந்திரகுமார் விலகிவிட்டார் என்பதும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை தவிர்த்துள்ளார் என்பதும் இங்கே பட்டவர்த்தனம். இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஆகவே “முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்” என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் ஏற்றுள்ளார் என்பது இங்கே பகிரங்கமான உண்மை. குறிப்பாக -- தமிழக சட்ட சபையில் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தை முன்கொண்டு சொல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் ஸ்ராலினிடம் கேட்கவில்லை. கட்சி வேறாக இருந்தாலும் தீர்மானம் என்பது தமிழக அரசினுடையது. அத் தீர்மாதை அப்போது ஸ்ராலின் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0XuH6gpXsJhGgEjPcLdTfwb9gPDv5o4sFxA7PNHT4rfSnL5hgxd21uvQqUKXqzngjl/?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு தரவுகளுக்கு பிறழ்விளக்கம் கொடுப்பது அழகல்ல என்பதும்… சுமன் சொன்னார் என்பதால் ஒரு கருத்தை எதிர்ப்பதும் … ஒரே போன்ற விடயங்கள் அல்ல. இதை நீங்களும் அறிந்தபடியால்தான் விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள் 😂.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால்தான்… பல மடைமாற்றுகளை செய்து இந்த கொள்கையை தவறு என அடம் பிடிக்கிறார்கள்.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
ஓம் தெரியும்…ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தட்டு தடுமாறினாலும்…சிலோன்கார அடையாளம் இருந்தாலும், அடுத்தடுத்த சந்ததிகள் இந்தியரால ஏற்கப்பட்டு விட்டனர். இன்னும் 10,20 வருடத்தில் இந்த வேறுபாடு அறவே அற்றுவிடும். போகும் வழியில் மன்னாரில் ரயிலில் இருந்து இறங்கி வன்னிக்குள் போனர்வர்கள் இன்னொரு சிறிய தொகை. மலையக தோட்டங்களில் தங்கியோரை விட இவ்விரு குழுக்களும் ஒப்பீட்டளவில் மேம்பட்டே உளர். உங்களுக்கு புத்தி கொஞ்சம் மந்தமா? எவ்வளவு விளக்கி சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள்? யாரும் வராமல் இருக்க காரணம் உங்களை போன்றவர்கள் இந்த திரியில் காட்டிய உங்கள் இந்த மையவாத குணத்தின் மீதான பயம், அருவருப்பு. அதை தூக்கி எறிந்து விட்டு சக தமிழராக அவர்களை நடத்துவோம் என்ற நம்பிகை வரும் படி அழையுங்கள். மடைமாற்று
-
நில உயிர்கள்
மிக்க நன்றி கவிஞரே. இந்தப் படத்தை ஏஐ வரைந்தவுடன் இது ஒரு பிரபலமான படத்தின் பிரதி போல இருக்கின்றது என்றே நினைத்தேன். இப்பொழுது நீங்கள் சொன்னவுடன் அந்தப் பிரபலமான படம் ஞாபகம் வந்தது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நாம் தமிழ்நாட்டு சீமான் பெரும் கட்சிகள் மீது தெலுங்கர் என்று இனவெறுப்பை கக்கினால் நாமும் சேர்ந்து கக்குவோம்
- Yesterday
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
ஒரு தமிழ் தேசிகர் சொல்கின்றார் கஜேந்திரகுமார் தமிழீழக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் சவப்பெட்டியாக்கிவிட்டார் 😂
-
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
- கஜேந்திரகுமார்.png
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண். நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
1930-1940 களில் இருந்தே அப்பாவி தமிழனை சிங்களவன் கலவரங்கள் பல உருவாக்கி தாக்குவதும், அழிப்பதுமாகவே வாழ்க்கை ஓட... எங்கோ இருந்து வந்த வண்டுப்பையன் (மேதகு) 1983 இல் நின்று அடித்து சிங்களத்தை ஒரு கணம் நிலை குழையவைத்தான். அப்போ அந்த செயலை நித்திரையில் இருந்து எழும்பிய ஒருவரின் செயலாக பார்த்தோமா ? இல்லை தானே. சுமந்திரனின் அந்த "கருத்து" வெறும் ஆறுதல் படுத்தல் அவ்வளவே. நமக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் செத்தவீடு நடந்தால் அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஏதாவது உதவி வெண்டுமானால் தயங்காமல் அழையுங்கள் என்று சொல்லும் பார்மாலிட்டி போன்றது. ஆனாலும் அந்த சொல்லில் ஒரு ஆற்றுப்படுத்தல், நம்பிக்கையூட்டல், இப்படி பல அம்சங்கள் இருக்கும். இதில் பெரும் தலைவர் மேதகுவையும், சுமந்திரனையும் தொடர்பு படுத்தி பேசியதாக நினைக்க வேண்டாம்.
-
நில உயிர்கள்
நீங்கள் பதிவிட்டிருக்கும் படத்தைப் பார்த்தவுடன் 98இல் பிரபலமான Tank manநஆன் நினைவுக்கு வந்தது. அருமை. நல்ல கவிதை. அதிலும் கடைசி வரிகள் சுப்பர். சிலர் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்ற நிலையில் இருந்து மாறவே மாட்டார்கள். அதற்காக பேசாமல் இருக்க முடியாது. இன்னும் எழுதுங்கள். எங்கள் வீட்டுக்குள் ஒரு பலசாலி வந்தால் எழுந்து ஓடிவிடுவோம் தூரப் போய் நின்று வீரம் பேசுவோம் வெட்டி வீழ்த்திவிடுவோம்
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
-
கருத்துப்படம் 09.10.2025
-
கருத்துப்படம் 07.10.2025
-
கருத்துப்படம் 04.10.2025
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
-
ஒரு பயணமும் சில கதைகளும் 18.09.2025
-
கருத்துப்படம் 13.09.2025
-
கருத்துப்படம் 11.09.2025
-
கருத்துப்படம் 11.11.2025
-
கருத்துப்படம் 06.09.2025
- நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும் சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க....... அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள். கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂 சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅- இரசித்த.... புகைப்படங்கள்.
வெட்ட வெளி, பட்ட மரம், தகிக்கும் வெயில், ஒதுங்க இடமுமில்லை, நிழலுமில்லை, வயிற்றை நிரப்ப ஏதுமில்லை, கூடுகட்டி வாழ வசதியில்லை, என்ன செய்யலாமென கூடி ஆலோசிக்கின்றனவா? இருந்தாலும் கூடி சவாலை சமாளிக்க முயலும் பறவைகள்.- நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
அது சரி காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ...... சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு... மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............ சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂 சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣- திராவிடம் என்பதே பிராமணர்களை குறிக்கும் சொல் | சீமான் பேச்சால் அரண்டு போன திராவிடம் |கவிஞர் வைரபாரதி Saattai 1.86m subscribers
- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://www.youtube.com/watch?v=yw_K8C6C9BM&t=1533s- இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
டி கொக்குகாக தெ.ஆபிரிக்கா வென்றிருக்கலாம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு. - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.