stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
கதாநாயகன் ரேஞ்சில் இருந்தவர் கடந்த 15 வருடத்தில் பாதி சிங்களவருக்கு ஊழல் வாதி ஆகிட்டார் இன்னும் கொஞ்ச வருடங்களில் உயிருடன் இருந்து மிகுதி சிங்களவரிடமும் சாபம் பெற்று இத்தாலி முசோலினி போல் போய் தொலையட்டுக்கும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப் பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா போறார் போறார் என்றார்களே பொய்யா கோப்பாலு. சாது ஓதியே ஆளைப் பிழைக்க வைத்துவிடும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் ; மூதூரில் 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கி வைப்பு 26 Dec, 2025 | 03:43 PM மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், பரக்கா நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி முஜீப் அவர்களால் கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கல்விப் பொருட்கள், அவர்களின் கல்வி பயணத்திற்கு ஓர் ஊக்கமாகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234476
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இது அநியாயம். சிறிலங்கா அரசின் யாழ்க்காவலனும் அரசுகளுக்காகவும் தனது பழிதீர்ப்பாகவும் பலகொலைகளைச்செய்து சிறிலங்கா சிங்கள அரசுகளுக்கு உதவியவரை கைது செய்யலாமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
லிவர் சிரோசிஸ் கடைசி கட்டம் என்கிறார்கள் ஆழ்ந்த அனுதாபம்கள் . புலம்பெயர் கொஞ்சம் லிவர் மக்கர் பண்ண தொடங்கி குடியை விடாமல் தொடர திடீர் திடீர் என்று காணாமல் போகின்றனர் .
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
மெல்பர்ன் அரங்கில் 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் சரிவு ; இங்கிலாந்தை விட 46 ஓட்டங்களால் ஆஸி. முன்னிலை 26 Dec, 2025 | 03:27 PM (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 'பொக்சிங் டே' டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 124 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆரம்ப நாளன்று ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 20 விக்கெட்கள் சரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த விளையாட்டரங்கில் 1902இல் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப நாளன்று 25 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. மேலும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 94,119 ரசிகர்கள் ஆரம்ப நாளன்று கண்டுகளித்தனர். 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டு களித்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்ட இப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக ஜொஷ் டங் 5 விக்கெட் குவியலையும் அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் நேசர் 4 விக்கெட் குவியலையும் பதிவு செய்தனர். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளாலும் 160 ஓட்டங்களை எட்டமுடியாமல் போனது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க அவுஸ்திரேலியா 46 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் மைக்கல் நேசர் அதிகப்பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரும் கெமரன் க்றீனும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 52 ஓட்டங்களே இன்றைய ஆட்டத்தில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. அவுஸ்திரேலியாவின் முதல் 6 விக்கெட்கள் 91 ஓட்டங்களுக்கும் கடைசி 4 விக்கெட்கள் 9 ஓட்டங்களுக்கும் சரிந்தன. மைக்கல் நேசரைவிட உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட நால்வரும் குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஜொஷ் டங் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அவரை விட கஸ் அட்கின்சன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 29.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. மிச்செல் ஸ்டார்க், மைக்கல் நேசர் ஆகியோரின் பந்துவீச்சுக்களில் திணறிப்போன இங்கிலாந்து அதன் முதல் 4 விக்கெட்களை முதல் 8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்குள் இழந்தது. ஹெரி ப்றூக், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இங்கிலாந்து சிறிய அளவில் மீட்சி பெற்றது. ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. ஹெரி ப்றூக் பெற்ற 41 ஓட்டங்களே இரண்டு அணிகளிலும் இன்றைய தினம் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவானது. அவரை விட கஸ் அட்கின்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (17) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நேசர் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 5 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 42 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/234474
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது Published By: Vishnu 26 Dec, 2025 | 06:39 PM தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/234494
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
அமைதியாக கழிக்க வேண்டிய கிறிஸ்மஸ் விடுமுறையில் ஒரு கிறிஸ்தவ உறவு இப்படி பதட்டப்படுவதை பார்க்க எனக்கே மனம் கேட்கவில்லை😂. சரி ஒரே ஒரு கேள்வி? புத்தசாசன அமைச்சு ஜனாதிபதி அனுரவுக்கு கீழேதான் வருகிறது. இந்த பிரச்சனையில் இவர்களுக்கு இனவாத எண்ணம் இல்லை எனில், மொட்டு கட்சி காலத்தில், ரணில் காலத்தில் கூட செய்யாத அரச அங்கீகாரம், பதவிநிலைகளை இந்த விகாரைக்கும், தேரருக்கும் ஏன் அனுரா இப்போ கொடுத்தார்? சும்மா இருந்திருக்கலாமே?
-
அமெரிக்காவில் லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?
அமெரிக்க பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டு - 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெற்றி! 26 Dec, 2025 | 11:02 AM அமெரிக்காவின் பிரபலமான பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டில், நேற்று வியாழக்கிழமை (25) ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இந்த வெற்றி, அமெரிக்க அதிர்ஷட இலாபச் சீட்டு வரலாற்றில் ஒரு தனிநபர் பெற்ற இரண்டாவது பெரிய பரிசாகக் கருதப்படுகிறது. 2 டொலர் விலையில் விற்கப்படும் குறித்த அதிர்ஷட இலாபச் சீட்டு 4, 25, 31, 52, 59 மற்றும் சிவப்பு எண் 19 ஆகிய எண்களுடன் பொருந்தி காணப்பட்டுள்ளன. வெற்றியாளர், இந்த பரிசுத்தொகையை ஒரே நேரத்தில் முழுத் தொகையாகவோ அல்லது 29 ஆண்டுகளுக்குள் தவணை முறையிலோ பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். எனினும், பெரும்பாலான வெற்றியாளர்கள் பரிசுத் தொகையை ஒரே நேரத்தில் பெறும் விருப்பத்தையே தேர்வு செய்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க லொத்தர் வரலாற்றில், ஒரே சீட்டிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகையாக 2022 ஆம் ஆண்டு ஒருவர் வென்ற 2.04 பில்லியன் டொலர் இதுவரை பதிவாகியுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டு, தற்போது அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 45 மாநிலங்களில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234450
- Today
-
இஸ்ரேல் அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'கத்தார்கேட்' விவகாரம் - முழு பின்னணி
இஸ்ரேல் அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'கத்தார்கேட்' விவகாரம் - முழு பின்னணி பட மூலாதாரம்,AFP via Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் அமிச்சாய் சிக்லி, 'கத்தார்கேட்' (Qatargate) விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். தற்போதைய இஸ்ரேல் அரசாங்கத்தில் இத்தகைய கோரிக்கையை முன்வைத்த முதல் அமைச்சர் இவர். சிக்லி, 'கான் ரெஷெட் பெட்' (Kan Reshet Bet) வானொலிக்கு அளித்த பேட்டியில், 'கத்தார்கேட் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது' என்று விவரித்ததுடன், 'அதில் முழுமையான விசாரணை அவசியம்' என்றும் கூறினார். அப்போது அவர், "இதை நியாயப்படுத்த வழியே இல்லை. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்குகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார். கத்தார்கேட் ஊழலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் கத்தாரின் நலன்களை மேம்படுத்துவதில் பங்கு வகித்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இஸ்ரேல் கடுமையான ராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களுடன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில், ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இதில் அடங்கும். பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் கத்தாருக்கு ஆதரவு திரட்டுபவர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது அரசியல் மற்றும் பொது மட்டத்தில் பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தார் குறித்துப் பேசும்போது, சிக்லி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். "என் பார்வையில், அது ஒரு எதிரி நாடு மற்றும் மோசமான நாடு. கத்தார்கேட் தொடர்பான குற்றச்சாட்டுகளை என்னால் நியாயப்படுத்த முடியாது. இது அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில ஊடக நிறுவனங்கள் நிதி ரீதியாகப் பலன் அடைந்திருக்கலாம் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். முன்னதாக திங்கள்கிழமையன்று, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தாலி பென்னட், கத்தார்கேட் ஊழல் தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில் பென்னட் ஒரு முக்கிய வேட்பாளராகக் கருதப்படுகிறார். நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு கத்தார் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, அவரது நிர்வாகம் 'துரோகம்' இழைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் பென்னட் குற்றம் சாட்டினார். பென்னட் தனது சமூக ஊடக பதிவில், "போரின்போது, நெதன்யாகுவின் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் அதன் ராணுவ வீரர்களுக்கும் துரோகம் இழைத்ததுடன், பேராசையால் கத்தாரின் நலன்களுக்காகச் செயல்பட்டது" என்று குற்றம் சாட்டினார். நெதன்யாகுவே இந்த வழக்கை முடக்க முயல்வதாகக் குறிப்பிட்ட பென்னட், "இது இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக மோசமான துரோகச் செயல்" என்றும் குறிப்பிட்டார். கத்தார்கேட் என்றால் என்ன? இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தாரின் நலன்களை ஊக்குவிப்பதற்காக நெதன்யாகுவின் ஊடக ஆலோசகர்களுக்கு கத்தார் பிரதிநிதி ஒருவர் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த 'கத்தார்கேட்' வழக்கு அமைந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பல இஸ்ரேலியர்களை கோபமடையச் செய்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பிரச்னைகள் இன்னமும் தீர்ந்தபாடில்லை கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளதுடன், ஹமாஸுக்கு நிதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷின் பெட் (Shin Bet) என்ற இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை பதவியிலிருந்து நீக்க நெதன்யாகு சமீபத்தில் மேற்கொண்ட முயற்சிகள் இந்த சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. உண்மையில், நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முதலில் தொடங்கியதே ஷின் பெட் அமைப்புதான். நெதன்யாகு இந்த வழக்கை, "தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளார். கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, நெதன்யாகுவின் உதவியாளர்களான ஜோனாதன் யூரிச், எலி ஃபெல்ட்ஸ்டைன் ஆகியோர் இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தார் குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயன்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் பெயர் குறிப்பிடப்படாத மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காஸாவில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியப் பங்கு வகித்தார். எகிப்து மற்றும் கத்தாரின் பங்கு எகிப்து, கத்தார் ஆகிய இரு நாடுகளுமே 2023 இறுதி முதல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இருப்பினும், மத்தியஸ்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு இல்லை. காஸா போர் நிறுத்தம் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளில் எகிப்தைவிட கத்தார் முக்கியப் பங்காற்றியது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க இந்த மூவரும் முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. கத்தார் அரசாங்கம் ஓர் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், எகிப்தின் 'தீர்க்கமான பங்கை' பாராட்டியது. மேலும், "இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும்" கூறியது. யூரிச் மற்றும் ஃபெல்ட்ஸ்டைன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் பல கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் இறுதி வாரத்தில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஜோனாதன் யூரிச் ஒரு முன்னாள் இஸ்ரேலிய ராணுவ ஊடக அதிகாரி மற்றும் நெதன்யாகுவின் மிகவும் நம்பகமான வியூக வகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்திய தேர்தல்களில் பிரதமரின் தகவல் தொடர்பு வியூகத்தை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். நெதன்யாகு தனது சுயசரிதையில் அவரை 'கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர் போன்றவர்' என்று விவரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளானது, காஸாவில் போர் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், கத்தாருக்காக பணியாற்றும் அமெரிக்க ஆதரவு திரட்டுபவர் (lobbyist) ஒருவர் சார்பாக ஃபெல்ட்ஸ்டைனுக்கு நிதி அனுப்பியதாக ஒரு தொழிலதிபர் கூறுவதன் ஆடியோ பதிவை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன. அந்த நேரத்தில், அந்த நிதி கத்தாருக்காக அல்ல, பிரதமர் அலுவலகத்திற்கு ஃபெல்ட்ஸ்டைன் வழங்கிய தகவல் தொடர்பு சேவைகளுக்காக வழங்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலதிபருக்கும் கத்தார் உள்ளிட்ட பிற தரப்பினருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பது குறித்து ஃபெல்ட்ஸ்டைனுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறினர். மறுபுறம், கத்தாரிலிருந்து வந்த செய்திகளை, அவை மூத்த இஸ்ரேலிய அரசியல் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து வந்ததைப் போல செய்தியாளர்களுக்கு யூரிச் வழங்கினார் என்ற சந்தேகம் இருப்பதாக போலீஸ் பிரதிநிதி ஒருவர் நீதிபதி மிஸ்ராஹியிடம் தெரிவித்தார். கத்தார் தரப்பு கூறுவது என்ன? கத்தார் அதிகாரி ஒருவர் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' நாளிதழிடம் பேசுகையில், "நாங்கள் இத்தகைய அவதூறு பிரசாரத்தால் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. காஸா போர் முடிவுக்கு வருவதையோ அல்லது எஞ்சியிருக்கும் பிணைக் கைதிகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்புவதையோ விரும்பாத நபர்கள்தான் இதைச் செய்கிறார்கள்" என்றார். டிசம்பர் 25 அன்று, இஸ்ரேலின் முன்னணி நாளிதழான 'ஜெருசலேம் போஸ்ட்' கத்தார்கேட் குறித்து ஒரு தலையங்கம் எழுதியது. அதில், "கத்தாரின் பிராந்திய பங்கு ரகசியமானது அல்ல. பல ஆண்டுகளாக, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்துடன் இணைந்த அமைப்புகள் உள்பட மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கான கத்தாரின் அரசியல் மற்றும் நிதி ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளன. அல் ஜசீராவின் உரிமை மற்றும் நிதி ஆதாரம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை சிறிய அல்லது மறைக்கப்பட்ட உண்மைகள் அல்ல. எனவே எந்தவொரு தொடர்பும் அல்லது செல்வாக்கும் இந்தச் சூழலின் அடிப்படையிலேயே ஆராயப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது. "அதே நேரத்தில், இஸ்ரேல் கத்தாருடன் வரம்புக்கு உட்பட்ட மற்றும் நடைமுறை ரீதியான தொடர்புகளை, குறிப்பாக பிணைக் கைதிகள் மீட்பு மற்றும் போர் நிறுத்த முயற்சிகளில், பேணி வருகிறது. அதிகாரிகள் இந்த ஈடுபாட்டை மூலோபாய ரீதியானதாக அல்லாமல், ஒரு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கையாக என்றே விவரிக்கின்றனர்" என்று ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட தலையங்கம் குறிப்பிட்டது. அதோடு, "ஒரு சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கத்தார் உதவியாக இருப்பது, பெரும் மூலோபாய கவலைகளைவிட முக்கியமானது அல்ல. அதனால்தான் இந்த விசாரணைகளை வெறும் அரசியல் அசௌகரியங்களாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தொடர்புகள் மற்றும் செய்திகள் குறித்த நடவடிக்கைகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்" என்றும் ஜெருசலேம் போஸ்ட் எழுதியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g616jwn48o
-
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவத்தால் வழங்கப்பட்ட பிஸ்டலை அமைப்பு முறை குற்றவாளி மகந்துரே மதுஷுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், சிஐடியினால் கைது செய்யப்பட்டார். - Arun Hemachandrea ( Deputy foreign minister)
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார். இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjmvpnmk035so29nsghseyvc
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
முட்டி மோதாமலேயே வென்றான் காளமாடன்! Ko.Ragupathi திரையில் நீலச் சுவாலை கலை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை ‘மதிப்பிடு’கின்றனர். தனக்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர் ‘பைச’னை வரவேற்றதால் அப்படத்தைச் சந்தேகத்துடன் பார்க்கச் சென்றதாக ‘உன்குழலர்’ ஒருவர் கூறியுள்ளார். ஜாதியக் கட்டமைப்பையும் தென்மாவட்டங்களின் ஜாதிய மோதல்களின் பின்னணியை மட்டுமன்றி, கபடியின் விதிகளைக்கூட அறியாதோர்தான் ‘பைச’னை ‘மதிப்பிட்டுள்ளனர்’. ‘விளையாட்டு வடிவம்’ (sports formula) திரைப்படத்துக்கு வெற்றியைத் தருமென்ற நம்பிக்கையில் ‘பைசன்’ உருவாக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். திரைப்படங்கள் அரசியல் பொருளாதார ஆதாயத்துக்கான கலைத் தொழிலாக இருப்பதை மறுக்க இயலாதுதான். ஆனால் அதேசமயம், ‘சார்பட்டா பரம்பரை’ (2021), ‘ப்ளூ ஸ்டார்’ (2024), ‘லப்பர் பந்து’ (2024), ‘பைசன்’ (2025) போன்ற சமகால திரைப்படங்களை வெறும் வணிகச் செயலாகவும் குறுக்க இயலாது. ஜாதிய முரண்கள் விளையாட்டுகளிலும் விளையாடுவதை அத்திரைப்படங்கள் உரையாடுகின்றன. அவை வணிகச் செயலாக இருந்தாலும்கூட நமக்குச் சிக்கல் இல்லை. ஆர்ய ப்ராமண, ஜாதிதிராவிட இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி பெரும் முதலாளிகளாக மாறுகிறபோது ஆதிதிராவிட இயக்குநர்களும் அவ்வாறு மாறுவதில் எந்தத் தவறும் இருக்க இயலாது. தலித் இயக்குநர்கள் அவர்களின் சமூகத்தைப் படமாக்கிப் பணமாக்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துவதே தலித் வெறுப்பு மனநிலைதான். பொதுவாகத் திரைப்படங்களின் ரசனைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் எதிர்பார்ப்பு இருக்கும்; தலித் இயக்குநர்களின் திரைப்படங்கள்தான் ‘ஜாதி அரசியலுடன்கூடிய’ ரசனைக்காக எதிர்பார்க்கப்படுகின்றன; அவை சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்குகின்றன. அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வீரியமாக எழுந்த தலித் இலக்கியங்களும் பனுவல்களும் விளைவித்த விவாதம் முனை மழுங்கிய இக்காலத்தில் அது திரைத்துறையில் சுடர்விட்டு எரிகிறது. இதைப் பற்ற வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தும், அவருடைய நீலம் நிறுவனமும் என்ற கூற்று மிகை மதிப்பீடு அல்ல. ‘நான் யார்’ எனத் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியதும், ‘இதைப் பேசுவது எதற்காக’ எனத் தன் அம்பேத்கரிய அரசியலைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறிவித்ததும் ஜாதிய சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. நீலம் அறிமுகம் செய்த மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ வழி ஜாதி உரையாடலைத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் வலியை, வேதனையைத் தொடர்ந்து திரைப்படமாக்குவேன் என அப்பட்டமாக அறிவிக்கிறார். அவர் பிறந்த சமூகத்துக்குள் ஒரு பிரிவினர் தலித் என்ற சொல்லையும், ஒடுக்கப்பட்டோர் என்ற சமகால எதார்த்த நிலையையும் மறுக்கின்றனர். தாங்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் என்ற ‘அரசாண்டப் பரம்பரை’யினர் உரிமையைக் கோருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக அரசின் ‘பட்டியல் வகைமை’யிலிருந்தே வெளியேற வேண்டுமென்ற இயக்கத்தையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக மாரி செல்வராஜ் தானும் தன் சமூகத்தினரும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற அவலத்தைப் பேசுகிறார். ஒடுக்கப்படுகிற மக்களின் எந்தச் சிக்கல்களையும் எந்த வடிவங்களில் பேசினாலும் அவர்களைச் சுரண்டுகிற, ஏமாற்றுகிற, தாக்குகிற ஆதிக்க ஜாதிகளையும் பேசுவது தவிர்க்க இயலாது. இதனால் சுயஜாதியும், ஆதிக்க ஜாதிகளும் அவரைக் கண்டிக்கின்றனர். எழுகின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதார்த்தங்களை எடுத்துரைப்பேன் என அறிவிக்கும் மாரி செல்வராஜின் பெருங்கோபமும் அரசியலும் திரைப்படங்களாய் வெளிப்படுகின்றன. அவருடைய ‘பரியேறும் பெருமாள்’ (2018), ‘கர்ணன்’ (2021), ‘மாமன்னன்’ (2023), ‘வாழை’ (2024), ‘பைசன்’ (2025) ஆகிய ஐந்து திரைப்படங்களும் ஒடுக்குமுறைகளின் வெவ்வேறு வடிவங்களையும் அவற்றுக்கெதிராகப் போராடுவதையும் கருவாகக் கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இயக்கம், 1920 – 2000’ என்ற தலைப்பில் கா.அ.மணிக்குமார் நெறியாள்கையில் மேற்கொண்ட ஆராய்ச்சியால் முனைவர் பட்டம் பெற்ற நான், மாரி செல்வராஜின் திரைப்படங்களைத் தென்மாவட்டங்களின் ஜாதிய எதார்த்தத்தின் பின்புலத்தில்தான் மதிப்பிடுகிறேன். ‘பரியேறும் பெருமா’ளில் உரையாடலை முன்வைத்த மாரி செல்வராஜ், ‘கர்ண’னில் உரசலைத் தூண்டுகிறாரோ எனச் சிலர் விமர்சித்தபோது, “அத்திரைப்படம் சமூக எதார்த்தத்தை, வரலாற்றை, உண்மையைப் பேசுகிறது” என இடதுசாரி தோழர்கள் சிலரிடம் வாதித்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் மதுசூதனன் ஏற்பாடு செய்த இணையக் கூட்டத்திலும் அவ்விவாதத்தை வலுப்படுத்தினேன். ‘கர்ண’னின் கருப்பொருள்தான் ‘மண்டேலா’ (2021) திரைப்படத்திலும் பேசப்பட்டிருப்பதால் ‘கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்’ என்ற கட்டுரையைக் காலச்சுவடு (ஜூன் 2021) இதழில் எழுதினேன். ‘பைசன் என்ற காளமாடன்’ என்னுள் உணர்ச்சிவய மனநிலையையும் ஏற்படுத்தியது. காளமாடனை உருவாக்கிய தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் பள்ளியில்தான் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நானும் பயின்றேன். அப்பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றேன். மர்காஷியஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தபோதும் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து சில மாதங்கள் விளையாடினேன். கால்பந்தாட்ட வீரர்கள் அனைவருக்கும் பூட் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் சில்வியா, அதை எனக்குத் தராதபோதுதான் பாகுபாட்டை உணர்ந்தேன். இதைக் கிறிஸ்துவ தேவேந்திர சமூகத்தைச் சேர்ந்த தேவா, தேவர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரிடம் கூறினேன். தேவா எனக்கு இலவசமாக பூட் தந்தார். பாகுபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர்களான அவர்கள் நட்சத்திர வீரர்களாகப் பிரகாசித்ததால் “வேலியிட இயலாது நிலையில் இருந்தனர்.” இச்சிக்கலைக் கல்லூரியின் கபடி வீரர்களும், தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்களுமான தேமாங்குளம் சுந்தர், செம்பூர் ஜூலியஸ் போன்றோரிடம் கூறினேன். கல்லூரியின் கபடி அணிக்குத் தேவேந்திரர் சமூக மாணவர்களே பலமானவர்கள் என்பதால் ஜாதிய பாகுபாடு இல்லை எனப் பதிலளித்தனர். நானும் அவ்வப்போது கபடி விளையாடினேன். மணத்தி கணேசனையும் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அறிந்தேன். ஜாதி பாகுபாட்டால் குழுவிலிருந்து வெளியேறி விளையாடுவதையே முற்றிலும் நிறுத்தினேன். விளையாடிய நேரத்தைத் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கச் சென்றேன். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் தலித் இலக்கிய எழுச்சியின் தாக்கத்தால் பள்ளி கல்லூரி அனுபவங்களுடன் வேறுசில பாகுபாட்டு அனுபவங்களையும் இணைத்து ‘அந்தப் பாவிகளைத் தண்டிப்பீராக!’ எனத் தலைப்பிட்டுக் குறுநாவல் எழுதினேன். அப்பிரதியைத் தொலைத்துவிட்டேன்! என் சுய அனுபவங்களால், பிற ஜாதியைச் சேர்ந்த அனைவருமே பாகுபாட்டைக் கடைபிடிப்பர்; பகையுடன் அணுகுவர் எனக் கூற இயலாது. ஏனென்றால், மர்காஷியஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (விலங்கியல்), ஃப்ரடெரிக் (இயற்பியல்), பியூலா (தமிழ்), ஜாஸ்மின் (வரலாறு), கிறிஸ்டோபர் (வரலாறு), பீட்டர் (வரலாறு) போன்றோர் படிப்பில் என் ஆர்வத்தைக் கண்டு என்னை ஊக்கப்படுத்தினர்; அரவணைத்தனர். ஆசிரியர்களில் ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டில் பாகுபாட்டையும், சிலர் படிப்பில் ஊக்கப்படுத்தலையும் பின்பற்றிய பின்னணியிலும், தேவேந்திரர் சமூக ஆராய்ச்சி அனுபவத்திலும்தான் காளமாடனை மதிப்பிடுகிறேன். மர்காஷியஸ் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வகுப்பறையில் பிறரின் சாப்பாடு பாத்திரங்களைத் திறந்து தன் பசியை அடக்கும் காளமாடனைக் கண்டிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ், அவனுடைய கபடி ஆர்வத்தைக் கண்டுணர்கிறார்; அவனை அரவணைத்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்துகிறார். சந்தனராஜின் உடல்மொழியும் வார்த்தைகளும்கூட கனக்கச்சிதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவரைப் போல் ‘கடா மீசை’யுடன் ஒர் உடற்பயிற்சி ஆசிரியர் நான் பயின்றபோது மர்காஷியஸ் பள்ளியில் இருந்தார். அவருடைய பெயர் மோகன் என்பது என் நினைவு. பிறர் உணவை உண்ணும் காட்சி இடம்பெற்றிருக்க வேண்டாம் எனச் சிலர் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் பிறரின் உணவை உண்ணுவது இயல்பாக நடைபெறும். அந்தப் பிறர் நண்பர்களாகவும் வகுப்புத் தோழர்களாகவும் இருப்பர். இச்செயலைத் ‘திருட்டு’ என எவரும் கருதவில்லை. விளையாடிய காலங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கொடும்பசியில் இருக்கும் விளையாட்டு வீரனுக்கு ஒருடிபன் பாக்ஸ் உணவு போதுமானது அல்ல; கூடுதலாகத் தேவைப்படுவது இயல்புதானே. அவனுடைய கொடும்பசிக்காகப் பச்சாதாபம் கொள்வதுதானே சரியாக இருக்க இயலும்! இதைப் போன்று, 300 பரோட்டாக்களைச் சாக்கு மூட்டையில் கொடுக்கும் காட்சியும் விமர்சிக்கப்படுகிறது. தென்மாவட்டக் கிறிஸ்துவ தேவாலயங்களில் வருடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாள் ‘அசனம்’ என்ற பெயரில் உணவு வழங்குவது இன்றுவரை பின்பற்றப்படுகிறது. இது சமத்துவத்துக்கான செயலாகத் தோன்றியிருக்கலாம். அதைப் புனிதமாகக் கருதுவர். அனைத்து ஜாதியினரும் வேறுபாடற்றுச் சமத்துவமாய் ‘அமர்ந்து’ உண்பதும், ‘அசனச் சோற்றைத்’ தோளிலிடும் துண்டுகளில் வாங்கி பொதிந்துச் செல்வதும் நடைபெறும். நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் டீ வாங்கும் பழக்கமுடைய இக்காலத்தில் சாக்கு மூட்டை பரோட்ட சிக்கலானது அல்ல. தென்மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களின் இரவு நேரங்களில் நடத்தப்படும் ‘மின்னொளி கபடி போட்டி’களைக் காண்பதற்கெனக் கூட்டம் கூடும். எங்கள் கிராமத்திலிருந்தும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் குழுக்களும் இதில் விளையாடினர். இது தனித்த ஜாதியாகவும், ஜாதிகள் கலந்தும் இருக்கும். சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் கபடிக் குழுக்களில் முக்கியமான காளமாடன்கள் சிலர் இருந்தனர். தனியார் கம்பெனிகளும் கபடி குழுக்களைக் கொண்டிருந்தன. விளையாட்டுத் திறமையால் கபடி அணியில் சேர்க்கப்பட்டு அக்கம்பெனிகள் வேலையும் கொடுத்தன. பல்கலைக்கழக, மாநில அளவிலான வீரர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்ததும் கால்பந்து, கபடி விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலைக்கு முன்னேறுவது எளிதானது அல்ல. ஜாதி மோதல் கூர்மைபெற்ற 1990களில் ஜாதிகளுக்குள் பகை புகைந்தது; மோதல் வெடித்தது. நட்பும் பகையும் மின்னலாய் வந்துசென்று ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டு வீரராகவும் நட்சத்திரமாகவும் உருமாறுவது கடினம். விளையாட்டில் பதுங்குதல், பாய்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட நுணுக்கங்களை வீரனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் அவசியம். அவனுக்கு உணவு, உடை உட்பட சில பொருட்கள் வேண்டும். அவற்றை வாங்கும் பொருளாதாரச் ‘சக்தி’ ஒடுக்கப்பட்டோருக்கு இல்லை. இவை புற ஜாதிகளிடமிருந்து கிடைக்கின்றன. காளமாடன் கபடி வீரனாக உருவாவதிலும் அவனை அங்கீகரிப்பதிலும் ஜாதியின் உள்முரண்தான் முக்கியத் தடையாக இருக்கிறது. முந்தைய நான்கு படங்களிலும் ஜாதியின் புறமுரணைப் பேசிய மாரி செல்வராஜ், முதன்முதலாகக் காளமாடனில் அகமுரணைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் ஆதரவில் வயிறாற பரோட்டா உண்ணும்போதுதான், தன் முன்னே ஒருவர் அறுத்துக் கொல்லப்படுவதைக் கண்டு ‘காளமாடனே’ அஞ்சுகிறான்; பதறுகிறான். கொல்லப்பட்டது தன் ஜாதியைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அச்சம்பவத்தில் காளமாடன் சாட்சியாய் மாறி அவன் வாழ்க்கைத் திசை திரும்பாதிருக்க அந்த ஆசிரியர் காளமாடனைக் காப்பாற்றுகிறார். ஜாதி மோதலில் ஏதாவது ஒருவகையில் வழக்கில் சிக்கியவர்களின் வாழ்க்கை சீரழிந்ததைப் பார்த்தால் இக்காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். விளையாட்டும் வினையாவதை அனுபவத்தில் உணர்ந்த காளமாடனின் தந்தை பசுபதி, மகன் விளையாடுவதை மறுக்கிறார். அப்போதும் ஆசிரியர்தான் விளையாட உதவுகிறார். இக்காட்சிகள் ஒருவேளை ‘உண்மைச் சம்பவங்கள்’ என்றால், காளமாடனின் ஆசிரியருக்கு இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது! உள்ளூரின் உள்பகையால் ஊர்க் கபடிக் குழுவிலேயே காளமாடனை வீரனாக அங்கீகரித்துச் சேர்க்க மறுப்பதும் நிகழ்கிறது. ஒரேநேரத்தில் உள்பகையின் புறக்கணிப்பையும், புறஜாதியைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதரவையும் பெறுகிறான். வீரனின் திறமையைத்தான் பார்க்கிறார்; அவரின் ஜாதியை அல்ல. இதைப் புரிய வைக்க ஆசிரியரும் பண்ணையாரும் முயற்சிக்கின்றனர். இது காளமாடனின் தந்தைக்கு அச்சமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைக்குப் பின் ஏற்படும் ஜாதிய தாக்குதலால் காளமாடனைப் பண்ணையாரின் ஆட்கள் சந்தேகித்தாலும், ‘வீரன்’ துரோகம் செய்ய மாட்டான் எனப் பண்ணையார் நம்புகிறார்; அவனைப் பாதுகாப்பாக அனுப்புகிறார்; தொடர்ந்து விளையாட அறிவுறுத்துகிறார். அச்சமும் சந்தேகமும் ஜாதியம் உற்பத்தி செய்ததாகும். காளமாடன் கபடி நட்சத்திரமாகி இந்திய அணியில் சேர்வதற்குப் புறஜாதியினரின் ஆதரவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அவர்களைச் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர்களே உதவுவார்களா? ஜாதிய அமைப்பு, ஜாதிகளுக்கிடையே பாகுபாட்டையும் பகையையும் விளைவித்தாலும் திறமைக்கான ஆதரவைப் பிற ஜாதிகளின் ‘தனிநபர்கள்’ கொடுக்கச் செய்கிறது. நான் பிறந்துவளர்ந்த கிராமத்தை என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை புதிதாக உருவாக்கிய காலத்தில், எங்கள் உறவினர்களுக்குத் தன் நெருங்கிய நண்பரான டி.கே.செல்லத்துரை நாடார் செய்த உதவிகளுக்காக ‘டிகேசி நகர்’ என என் தந்தை பெயரிட்டார். எனக்கும் பிற ஜாதியினரின் உதவிகள் முக்கியமானவை. எனவே, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் பிற ஜாதி தனிநபர்களின் ஆதரவு கிடைப்பது இயல்பு. சுரண்டும் ஜாதிகளிலும் இரக்கமும் மனிதநேயமும் இருக்கின்றன. பண்ணையார் ‘திறமையை’ அங்கீகரிப்பதில் ஜாதியைப் புறக்கணிக்கும் வகையைச் சேர்ந்தவர். சுயஜாதித் தலைவரும் பண்ணையாரும் எதிரிகளாக இருந்தபோதிலும் காளமாடனின் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதில் ஒத்தச் சிந்தனையுடன் இருக்கின்றனர்! அத்திறமையை அவனுடைய ஜாதியினர் அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இழிவாகப் பேசுகின்றனர். இதைக் கண்டிக்கும் ஜாதித் தலைவர், காளமாடன் அவனுடைய திறமையால்தான் நிற்கிறான்; அதுவே சமூகத்தின் பெருமை எனக் கூறுகிறார். இத்தகைய தனிநபர்கள், திறமையை ஜாதியிலிருந்து மதிப்பிடவில்லை; திறமையைத் திறமையாகப் பார்க்கிறபோது ஜாதியைப் புறக்கணிக்கின்றனர். உடற்பயிற்சி ஆசிரியரும், பண்ணையாரும், விளையாட்டுத் தேர்வுக்குழு நபரும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திறமையைத் திறமையாகப் பார்த்ததால் அத்திறமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் காளமாடன் நட்சத்திரமானான். திறமைதான் திறமையை அங்கிகரீக்கும்; திறமை ஜாதியையும் புறக்கணிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியது மாரி செல்வராஜின் தனித்திறமை! அது இப்படத்தின் தனிச்சிறப்பு! “நான் அல்ல, கண்ணகிநகர்தான் பிராண்ட்” எனக் கார்த்திகா அறிவித்த விளையாட்டின் ‘திறமை’ அரசியல்தான் காளமாடனின் அரசியலும். ஏககாலத்தில் காளமாடன் நிழலாகவும், கண்ணகிநகர் கார்த்திகா நிஜமாகவும் ஒடுக்கப்பட்டோரின் திறமைகளை வெளிச்சமாக்கியுள்ளனர். ஒடுக்கப்படும் சமூகங்களின் வலியை அவர்களை வதைப்பவர்களால் புரிந்துகொள்ளவே இயலாது என முன்வைக்கப்படும் விவாதத்துக்கு எதிராக அதைப் புரிந்துகொள்ள இயலும் என்று காளமாடன் பறைசாற்றுகிறான். பகையின் பரிமாணம் பள்ளிக்கூடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்வரை காளமாடன் ஜாதிப் பாகுபாட்டை அனுபவித்ததாகக் காட்சிகள் இல்லை. காளமாடனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அவனைப் பாதிக்கின்றன; விளையாட்டுக்குத் தடைகளாக இல்லை. ஒருவன் தன்னைக் கட்டிப்பிடிப்பதாகவும் மற்றொருவன் கத்தியால் குத்துவதாகவும் இதனால் யாரிடம் பேசுவது, சிரிக்கிறது, பழகுவது என ஜாதியரசியல் தெரியாத வெள்ளந்தி அவன். கபடியில்தான் எவராலும் கட்டுப்படுத்த இயலாத காளமாடன், ஆட்டைப் பலியிட கோயிலுக்குச் செல்கிறபோது வேற்று ஜாதியைச் சேர்ந்தவராலும், கிராமத்தில் தன் காதலியின் அண்ணனாலும், இந்திய அணியில் விளையாடச் செல்கிறபோது காவலர்களாலும் தன் தந்தை தாக்கப்படுகிறபோது காளமாடன் சீறிப் பாய்ந்து எதிர்த்துத் தாக்குகிறான். தன் தந்தையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்; வேறு அரசியல் இல்லை. உண்மையில் காளமாடனுக்கு அரசியல் தெரியவில்லை; குழந்தைப் பருவத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்தவனுக்கு அதற்குப் பின் காதலும் வரவில்லை. மர்காஷியஸ் பள்ளியின் விளையாட்டு காலரியில் அமர்ந்து சைட் அடித்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்த அனுபவங்கள்கூட காளமாடனுக்கு இல்லை போலும்! வயதுக்கு மூத்தப் பெண்களைத் திருமணம் செய்ததும், குழந்தைக் கணவர் வழக்கமும் சில சமூகங்களில் இருந்தன. இவற்றைச் சிக்கலாக மாற்றியிருக்க வேண்டாம். தேசிய வீரனாகச் செல்கிறபோது அவனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதும், காளமாடன் எதிர்த்துத் தாக்குவதும் அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற காட்சி. இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜாதிய மோதல் சூழலில் அரசின் உரிய ‘மரியாதையுடன்’ காவலர்களின் பாதுகாப்பிலேயே சென்றிருக்க முடியும். இவ்விடத்தில் காவல்துறையுடன் மோதலை ஏற்படுத்தியது அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற, பொருத்தமற்ற, அவசியமற்ற காட்சி. சில சண்டைக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காளமாடன் எப்போதுமே கோபத்துடனேயே இருக்கிறான். அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒடுக்கப்படுகிற சமூகங்களை மகிழ்ச்சியாக்கும் அவர்களுக்கு இடையேயான கேலியையும் கிண்டலையும் காட்சிப்படுத்தாமல் அவற்றை மாரி செல்வராஜ் விலக்குவது விளங்கவில்லை; அது வியப்பாகவும் இருக்கிறது. ‘பைச’னில் காட்டப்பட்ட இரு ஜாதிகளுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்காலத்தில் இருந்தனர். வாலிபர்களும் மாணவர்களும்கூட அவரவர் ஜாதி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். வெவ்வேறு ஜாதி நபர்களுடன் நட்பாகவும் பழகினர். என் நண்பன் கண்ணன் பண்ணையாரைப் பார்க்கச் சென்றதாக அவ்வப்போது கூறியது என் நினைவில் உள்ளது. தென்மாவட்ட ஜாதி மோதல்களின் பரிணாமமும் பரிமாணமும் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல; அவை பன்மையானவை. இந்தப் படத்தின் ‘பகை’, தாமிரபரணி பாசனத்தின் தென்கிழக்குக் கடைகோடிக்கு உரித்தானது. இத்தாக்கம் பிற பகுதிகளில் இல்லை. பிற்காலத்தில் இது வேறுவடிவம் பெற்றது. ஆனால், “நான், நீங்க, தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பகையும் பழியும் இருப்ப”தாகச் சித்திரிப்பது அவ்விரு ஜாதிகளுக்குமான பகை நிரந்தரமாக நீடிக்கிற தோற்றத்தைத் தருகிறது. இது சிக்கலுக்குரியது. பைசனின் கதைக்களம் நெல், வாழை என விவசாயமும் விற்பனையும் நிகழும் பகுதி. இவ்விரண்டும் வெவ்வேறு ஜாதியினரால் செய்யப்படுகின்றன. வியாபாரிகளும் விவசாயிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் இணக்கமும் பிணக்கமும் உண்டு. இங்கு நிலவுடைமையாளர்களாக இருந்த பிராமண, வெள்ளாள ஜாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலத்திலேயே குடிபெயர்ந்து நவீன வாழ்க்கைக்குள் சென்றதால், அந்நிலத்தில் விவசாயம் செய்த தேவேந்திரர்கள் நிலவுடைமையாளர்களாகினர். அங்குச் சில இடங்களில் நாடார்களில் சிலரும் பண்ணையார்களாக இருந்தனர். காளமாடனின் கந்தசாமி, பண்ணையார்களின் பிரதிநிதியே. அவருடைய ஆட்களின் பொருளாதார நிலை அவரைப் போன்றது அல்ல. அந்த “ஆட்களின்” வீடுகளையும், உடற்பயிற்சி ஆசிரியரின் வீட்டையும், கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்தால் ஜாதியின் உண்மை நிலை பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். பிற்காலத்தில்தான் பண்ணையார், ஜாதியின் பிரதிநிதியாக உருமாறுகிறார். அதற்கான அரசியல் பொருளாதார காரணிகள் வேறு. ஆராய்ச்சிக் காலத்தில் அப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு பண்ணையார், பண்ணையாள் என்ற ‘வர்க்க’ முரண் இருப்பதை அறிந்தேன். வர்க்க முரண்தான் சமத்துவ உரிமைக்கான போராளியாகப் பாண்டியராஜாவையும் உருவாக்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கியதால் பிற்காலங்களில் அது ஜாதிய மோதலாக உருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வர்க்க அணிதிரட்டலின் பலகீனத்தால் அது ஜாதிய மோதலாக உருமாறியது. இது மேலும் ஆய்வுக்கு உரியதுதான். இருப்பினும், மாரி செல்வராஜ் கூறுவதுபோல் அது முப்பாட்டன் காலத்துக்கும் முந்தைய பகை அல்ல. ஏனென்றால், பகை உருவாவதற்குப் பொருளாதார ஆதிக்கமும் (நிலவுடைமை, முதலாளித்துவம்) அல்லது இவ்வமைப்புகளின் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும், இவற்றால் ஆளப்படுகிற குழுக்கள் இருப்பதும் அவசியம். இவ்வமைப்பு முரண்களை உருவாக்கும். ‘பைச’னில் கந்தசாமியைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியினர் அடிப்படையில் ஜாதிய கிராம கட்டமைப்புக்குள் இல்லை. அவர்கள் தனித்த கிராமங்களில் சுயமாக, சுதந்திரமாக வசிக்கின்றனர். தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான உறவு ஆதிக்கமும் சார்பு நிலையையும் கொண்டிருக்கவில்லை. கந்தசாமி பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களில் நிலவுடைமையாளர்களும் ஒரு பிரிவினர்; இவர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான முரண் இயல்பானதே. இதுவும்கூட அந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது. இது சுதந்திர இந்தியாவில் தோன்றிய முரண்தான். அது பாண்டியராஜா கொல்லப்படுவதுவரை நீடித்தது. ஒரு மூலையில் தோன்றிய வர்க்க முரண், அதற்குத் தொடர்பற்ற ஜாதிகளின் பகையாக மாறியதில் சில காரணிகள் உண்டு; இதைத் தனித்து விவாதிக்க வேண்டும். கந்தசாமிக்கும் பாண்டிராஜாவுக்கும் இடையிலான மோதலுக்கான அடிப்படைக் காரணத்தைக் காட்சிப்படுத்தாமல் மோதலை மட்டுமே காட்சிப்படுத்தியது, இரு ஜாதிகளுக்குமான “முப்பாட்டன் காலத்துப் பகை”யாகக் கூறுவது ஜாதியச் சிக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. காளமாடனுக்கே ஜாதியச் சிக்கல் புரியாதபோது, இதன் அரிச்சுவட்டை அறியாதோர் அதை விளங்குவது கடினம். ‘பைசன்’ என்ற பெயரைப்போல் உள்ளடக்கமும் அனைவரும் உள்வாங்கும் விதமாகக் காட்சியமைத்தல் அவசியம். பாண்டியராஜா, கந்தசாமி ஆதரவாளர்களாலும், கந்தசாமி காவலர்களாலும் கொல்லப்படுகிற சம்பவங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டது ஜாதியின் பிரதிநிதிகள்தான் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை, சுய ஜாதியினர் நம்பிக்கையானவர்கள் அல்லர்; அவர்கள் துரோகிகளாகவும் மாறுவர் என்பதற்குச் சாட்சி. ஒவ்வொரு துறைகளிலும் காளமாடன்கள் இயல்பிலேயே திறமையானவர்களாக இருப்பினும் அவர்கள் முட்டி மோதிதான் வெல்கிறார்கள். ஆனால், பைசன் என்ற காளமாடன் இதைச் செய்யாமலேயே வெற்றிபெறுகிறான். அவனுக்காகப் ‘பிறர்’தான் முட்டிமோதுகின்றனர்; அவன் விளையாட்டில்தான் காளமாடன். காளமாடன் பொதுச் சமூகத்தில் முன்வைக்கும் முக்கியக் கேள்வி: “சுயஜாதி அடையாள அணிதிரட்டல் அவசியமா?” https://theneelam.com/bison-review/
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
இது வேறு இருக்கா நீங்கள் இவை எல்லாம் கற்று தெளிந்து தான் வத்திருக்கிறீர் 😂 நாங்கள் இப்போ இருக்கின்ற கேள்வி பதில்களை படித்து தான் அறிந்து கொள்கின்றோம்
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
அதனால் தான் புத்தரை தமிழர்கள் போட்டி போட்டு கும்பிட தொடங்க வேண்டும் தமிழர்கள் பகுதிகள் எங்குமே விகாரைகள் வைத்து கொண்டு போவதை தையிட்டியோடு நிறுத்திவிடுவார்கள். எற்கெனவே தமிழர்களின் கடவுளாக இருந்தவர் தானே புத்தர். ஐயப்பனாரையும் அனுமாரையும் கும்பிட தொடங்கியவர்கள் அதே ஆவேசத்துடன் இதை ஆரம்பிக்க வேண்டும்
-
பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்
ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள். ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்! வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள். உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது. யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர். வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள். அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள். இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள். நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும். https://www.facebook.com/share/1DZd5Dn3j9/?mibextid=wwXIfr
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தையிட்டியில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எங்குமே விகாரைகள் வரப்போவது உறுதி. “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் இலங்கைத் தமிழருக்காகவே பாடப்பட்டதுபோல் உள்ளது.
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
இந்த விகாரை மொட்டுக்கட்சியினருக்கு கௌரவப்பிரச்சனை. அவர்களே இதை பின்னின்று நடத்துகிறார்கள். இவர்களது கட்சியை சேர்ந்த 02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியே இதன் பின்னால் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டால் பொறுமையாய் இருக்க மாட்டோம் என சரத் வீர சேகர எச்சரிக்கிறார், அனுரா புலம்பெயர்ந்தவர்களுடன் உடன்பாடு செய்து இராணுவ முகாம்களை அகற்றுகிறார், திஸ்ஸ விகாரையை அகற்றப்போகிறார், நாட்டில் பௌத்தத்துக்கு சுதந்திரமில்லை, கொழும்பில் சைவ ஆலயங்கள் இருக்கின்றன, வடக்கில் பௌத்தத்திற்கு சுதந்திரமில்லை என இன்னொரு மொட்டுக்கட்சி அமைச்சர் அப்பட்டமான பொய் கூறுகிறார். சஜித்தும், அரசும் சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாராதிபதிக்கு உயரிய அதிகாரங்களை வழங்கும் தலைமைச்சங்க நாயகராக தெரிவு செய்கின்றனர். கொழும்பில் சைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தங்கள் காசில் நிலம் வேண்டி உரிய அனுமதி பெற்று ஆலயங்களை அமைக்கிறார்கள் வழிபடுகிறார்கள். வடக்கில் எழும் விகாரைகள் அப்படியா? தையிட்டியில் நிலைமை அப்படியா? அங்கு பௌத்தர்கள் வாழ்கிறார்களா? எதற்காக மக்கள் காணியில் விகாரை, யாருக்காக? இராணுவ நிலங்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள நிலங்கள் சரத் வீரசேகரவுடையதா? அல்லது மொட்டுக்கட்சியுடையதா? அதைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி புலம்பெயர் தமிழரை சொன்னால் அனுரா கேட்டுக்கொண்டு அடாவடியாக நடக்கமுடியுமா? சட்டம், நீதி சொல்வதை செய்வதற்கு புலம்பெயர் தமிழர் கதை எதற்கு? பயங்கரவாதச் சட்டம் எதற்கு இன்னும் அமுலில் இருக்கிறது? அது தமிழருக்கு, உரிமையை கேட்பவருக்கு எதிராகவா? இப்படி ஒற்றுமையை அழிக்கும் பேச்சுக்களை பேசும் நபர்களுக்கு எதிராக ஏன் பாவிக்கவில்லை? அப்போ திஸ்ஸ விகாரை அகற்றப்படாதென்றால், இன்னும் பல விகாரைகள் வடக்கில் எழும். அனுரவுக்கெதிராக எல்லா அரசியல் கட்சிகளும் செயற்படுவதால், இவர் பயந்து விட்டாரா? அல்லது தமிழருக்கெதிராக இவரும் மற்றைய கட்சிகளோடு இணைந்துவிட்டாரா? ஒரு இனத்தை அடக்கி, அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு எப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ முடியும் என அனுராதான் விளக்க வேண்டும். ஒரு இனத்தின் உரிமைகளை, நிலங்களை பறிப்பது நல்லிணக்கத்திற்கு குந்தகமா? அல்லது அடாத்தாக பறித்ததை திருப்பி கேட்பதால் நல்லிணக்கம் கெடுகிறதா என இவர்களது ஆசிரியர்கள், சட்டம், நீதி இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களது மதமோ, இனமோ, சட்டமோ, நீதியோ எதற்குமே எது சரி என தெரியாது.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
மகிந்தவுக்கு.... "விஸ்கி" ஊத்திக் குடுத்த ஆள் மாதிரி கிடக்கு. 😂
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
என்ன இது? கருணாநிதியின் முரசொலி கேள்வி பதில் போல் உள்ளது 😂
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தேரர் சொன்னத கேட்டனியளே? இது மக்கள் காணியில் உள்ளதாம். நாகவிகாரைக்குரிய காணி, உண்மையான திஸ்ஸ விகாரை இருந்த காணி அருகே உள்ளதாம். தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.