Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. தகவலுக்கு நன்றி ஏராளன் இந்தத் தொகை நிதியைக் கொண்டு நாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவின்படி அராலியிலும் பொன்னாலையிலும் வேலைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா இந்த உதவி அவர்களுக்கு மிகவும் வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் அனுப்பிவைத்த உறவிற்கு கோடி நன்றிகள்
  3. Newbalance, விராட் கோலி இந்திய அணியில் இல்லை. 76, 84 வினாக்களுக்கான உங்கள் தெரிவுகளை மாற்றவும்!
  4. Today
  5. சாத்தான் அவர்களே! இப்படியெல்லாம் தலைவர்களை விமர்ச்சிக்கக் கூடாது!!. அதுவும் கருனாநிதியோடு ஒப்பிடக்கூடாது. பாவம் விமல்.😩 கருனாநிதிக்கு தலைமாட்டில் ஒன்று, கால்மாட்டில் ஒன்று.🥰
  6. கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, மதுபான விற்பனை குறைந்து வருவதும் மற்றுமொரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. முன்பு மதுபான விற்பனை உணவகங்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டி தந்ததால் செலவுகளை ஈடுகட்ட முடியுமாக இருந்தது. ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும் மக்கள் இப்போது குறைவாகவே மதுபானம் அருந்துகின்றனர். இதனால், உணவகங்கள் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்கின்றன. இந்நிலையில், உள்ளூர் சமூகங்களுக்கு தனித்துவமான உணவுகளை வழங்கும் சிறு உணவகங்கள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருந்தொகையான உணவகங்கள் மூடப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகளவான தமிழர்கள் உணவகங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கனடாவில்-தமிழர்கள்-வேலைவாய்ப்பை-இழக்கும்-அபாயம்/50-371011
  7. 🌾 திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம் adminJanuary 14, 2026 தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், வியாபார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைப்பதற்குத் தேவையான விதவிதமான அளவுகளில் மண்பானைகள் மற்றும் அடுப்புகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பொங்கல் பண்டிகையின் அடையாளமான கரும்புகள் மற்றும் மஞ்சள், இஞ்சிக் கொத்துக்கள் சந்தையின் ஓரங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விற்பனையாகின்றன. வீடுகளை அலங்கரிக்கத் தேவையான மாவிலை, தோரணங்கள் மற்றும் கதம்பப் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் வகையில் விற்பனை நடைபெறுகிறது. பொங்கல் படையலுக்கான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து காணப்பட்டாலும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். https://globaltamilnews.net/2026/226481/
  8. தைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில் ஜனாதிபதி அறிவிப்பாரா? adminJanuary 14, 2026 தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பில் சாதகமான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன், வடக்கு மாகாணம் முழுவதும் காணி உரிமையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். “மக்களின் காணிகள் மக்களுக்கே” என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், அந்த வார்த்தைகள் நடைமுறையில் எப்போது பிரதிபலிக்கும் என்ற கேள்வியே இன்றைய யாழின் மையப் பிரச்சினையாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டி துறை தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றன. இக்காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், பற்றைக்காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பயன்பாடற்ற இக்காணிகளை விடுவிப்பதில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தடைகள் இல்லை எனத் தெரிந்தும், அவை தொடர்ச்சியாக கையகப்படுத்தி வைக்கப்படுவது காணி உரிமையாளர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. பலாலி கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் காணியும் இதேபோன்று எந்தவிதமான பயன்பாடும் இன்றி பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளது. அதேவேளை, வசாவிளான் சந்திக்கு அருகிலுள்ள மானம்பிராய் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களை விடுவிக்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை இன்னமும் உரிமையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் கையளிக்கப்படவில்லை என்பது அரசின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. குரும்பசிட்டி, கட்டுவான் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தனியார் காணிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றில் இராணுவ விவசாய பண்ணைகள் நடாத்தப்படுவது, “பாதுகாப்பு” என்ற சொல்லின் உண்மையான பொருளை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதேபோன்று தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக 16 பேரின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாக ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் கூறிவந்த போதிலும், நடைமுறை ரீதியான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. அண்மையில் தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், விகாராதிபதி உள்ளிட்ட தரப்பினரை அழைத்த அதிகாரிகள், காணி உரிமையாளர்களை அழைக்காதமை, ஒரு தலைப்பட்டசமான தீர்மானங்களை நோக்கிய அரசின் அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. விகாரைக்காக கைப்பற்றப்பட்ட காணியில் முதல் கட்டமாக இரண்டு ஏக்கரை விடுவிக்க இணக்கம் எட்டப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இவ்வாறான நிலைமைகளுக்கிடையில், பலாலி வீதி காலை முதல் மாலை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதும், வல்லை–அராலி வீதி இன்னமும் மூடப்பட்டிருப்பதும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், குறிப்பாக வடமராட்சி மக்களின் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கான அணுகலையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வீதிகள் முழுமையாகவும், 24 மணி நேரமும் கட்டுப்பாடுகள் இன்றி திறந்து விடப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கடந்த காலங்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணி விடுவிப்பு தொடர்பான சாதகமான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், எந்தவிதமான அறிவிப்புகளும் இன்றி அவர் திரும்பிச் செல்வதே வழமையாகியுள்ளது. இந்நிலையில், இம்முறை தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, வடக்கு மக்களின் நீண்டநாள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையே, எழுவை தீவில் கடற்படையினருக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை, காணி விடுவிப்புக்கான நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவிப்புகளே, “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற வாக்கியம் உண்மையா, அல்லது வெறும் அரசியல் முழக்கமா என்பதை தீர்மானிக்கும் தருணமாக அமையவுள்ளது. Global Tamil Newsதைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில்...தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள…
  9. இலங்கையில்தான் வேறெங்கு போக முடியும்.🤣 பொதுவாக போட்டிகளினிடையே பயணம் பாதகமானது, அந்த வகையில் பங்களாதேசமும் பாகிஸ்தானுக்கும் சாதகம் எதிரணிகளுக்கேதிராக இருக்கும்.
  10. புலிகள் இருந்த போது அரசியல் ரீதியான ஏக பிரநிதிகள், இராணுவ பாதுகாப்பு, பேரம் பேசும் ஆற்றல், புலம் பெயர்ந்தோரை ஒரு குடையின் கீழ் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு என ஒரு மைய அதிகாரபுள்ளி ஒரே திசையில் பயணிக்கும் நிலை இருந்தது. அது ஒரு பலமான நிலையாக காணப்பட்டது, புலிகளுக்கு பின்னர் புலம்பெயர் தரப்பு ஒரு கோணத்தில் பயணிக்க (அங்கும் பல திசையில் பயணிக்கின்ற நிலையே காணப்படுகிறது) இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் அரசியல் பிரதிநித்துவம் நிலையில் இருந்து பல கட்சிகளாக பிரிந்து பலவீனமான நிலையில் உள்ளார்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் கூட அனைவரும் ஒன்றாக வாருங்கள் என அரசியல் பாலபாடம் போதிக்கும் நிலையில் இலங்கையில் அரசியல் நிலை உள்ளது, பேரம் பேசும் ஆற்றல் எனும் பேச்சிற்கே தற்போது இடமில்லை என்றாகிவிட்டது. இயற்கை நியதியான வெறுமையே எம்மை பொறுத்தவரை பொறுமையாக காத்திருக்கிறது. இந்த நிலை யாரால் உருவாக்கப்பட்டது என ஒரு தரப்பினை மட்டுமே கைகாட்டும் நிலை உள்ளது, இலங்கை நேரடியாக போரில் இருந்தாலும் பிராந்திய வல்லரசான இந்தியா ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை வழங்கியது, அமெரிக்கா ஆயுத, உளவு, பயிற்சி, ஆலோசனைகளுடன் தார்மீக ஆதரவினை வழங்கியது, காசாவில் மக்கள் படுகொலைகளை கண்துடைப்பு கண்டிப்பினை கூறியவாறே போரை முடிக்க ஆதரவுகளை வெளிநாடுகள் வழங்கியது. இந்த அழிவிற்கு காரணமானவர்களிடம் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் இன்னமும் புலம்பெயர்ந்தோர் இயங்குகின்றனர். 100 வருடங்கள் போராடிய குர்திஸ்களுக்கு நியாயம் கிடைத்ததிற்கான காரணம் அவர்கள் நலனை அதிகாரங்களின் நலனிற்கு ஏற்ப மாறியமை ஆனால் பலஸ்தீனியர்களுக்கு வெறும் அனுதாபம் கிடைத்தது. இந்த அழிவிற்கு காரணமான இலங்கை மற்றும் மேற்குடன் இணைந்த் பயணிக்க தயாராகவே உள்ள நிலை காணப்படுகிறது, இலங்கையில் இன்னமும் இனவாதத்திற்கு முகம் கொடுக்கும் நிலையில் கூட இலங்கையுடன் இணைந்து பயணிக்கின்ற நிலை காணப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதன் மூலம் எமக்கான நலனை பெறமுடியுமாயின் ஏன் அதனை தவிர்க்க வேண்டும்? தற்போதய நிலையில் இந்தியாதான் எமது பேரம் பேசும் வாய்ப்பு, மேற்கு அதனுடனான மேலதிக பலம். இந்தியாவினை கடந்து ஒரு தீர்வு எட்டப்பட முடியாத ஒன்று புலிகள் கூட உணர்ந்த நிலையே காணப்பட்டது என கருதுகிறேன். தார்மீக உண்மை ஒரு நீதியினை கொடுக்காது என்பதற்கு அண்மைய மற்றய உதாரணம் பலஸ்தீனம், பலஸ்தீனத்தினை அனைவரும் அங்கீகரிக்க போட்டி போட்டாலும் அவர்களை துடைத்தழிப்பதற்கு எதிராக எந்த காத்திரமான முயற்சியினை எந்த நாடும் எடுக்கவில்லை, தமிழர்களுக்கி இழைக்கப்பட்ட அநிதீகளுக்கு நீதி முக்கியமா? அல்லது அதிகார முக்கியமா? இரண்டும் முக்கியம், ஆனால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகளை யாரிடம் கோருகிறோம்? வெளியே கண்டனத்தினை தெரிவித்துக்கொண்டு அதே நேரம் அழிப்பிற்கு உதவிய தரப்பிடமிருந்தே! அவ்வாறாயின் அந்த நீதி கிடைப்பதற்கான சாத்திய கூறு எவ்வாறிருக்கும்? அதற்காக முயற்சிக்க கூடாது என கூறவில்லை, ஆனால் இலங்கையி அடக்குமுறைக்குள் இன்னமும் இருக்கும் மக்களுக்கு ஒரு சாதகமான சூழலினை தோற்றுவிப்பதற்கு இடையூறாக எமது செயற்பாடு தற்செயலாக கூட ஏற்பட்டுவிடக்கூடாது.
  11. உங்கப்பரும், சித்தப்பருமா இந்தச் சட்டத்தைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தேக்க என்ன கோமாவிலா இவர் இருந்தவர். உங்கடை கையாளான சவீந்திர சில்வா தையிட்டியிலை விகாரை கட்டேக்கை, குருந்தூர்மலை... கிண்ணியா... சிவபுரமென உங்களாட்சிக்காலத்தில் அடாவடிகள் செய்து இனஅழிப்பையும் இனவெறுப்பையும் அதியுச்சமாகச் செய்தபோது எங்கே போனது எங்கபோனது அந்த சட்டம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. லால்காந்த ICCPR சட்டத்தை மீறியுள்ளார்; நாமல் குற்றச்சாட்டு Jan 13, 2026 - 10:12 PM விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரரை அண்மையில் 'காட்டுமிராண்டி' என விளித்து அவமதித்துள்ளதாகவும், இவ்வாறு பௌத்த மதத் தலைவரொருவரை அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார். ICCPR சட்டத்தில், "யாரும் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், லால்காந்த இதில் மதத் துவேஷத்தைப் பரப்பியிருப்பது புலப்படுவதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மதத் துவேஷத்தைப் பரப்புவது தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் லால்காந்தவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால்காந்த மதத் துவேஷத்தைப் பரப்பியது மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்தது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்நாட்டு வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் இம்முறையில் மகா சங்கத்தினரை அவமதித்தது இல்லை என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkctlctj03w5o29nitxivp24
  13. 3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள். மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.
  14. அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் வாயிலில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி வைத்துவிட்டு தீயைப்பற்ற வைத்தகாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1459863
  15. யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1459867
  16. தெரியும், ஒரு தொழில் கூட மிச்சமில்லை, எல்லாமே அவர்கள்தான். தனியார் தொழிற்சாலை, அதில் எப்படி திருட முடிந்தது என்பதே எனது கேள்வி. அதுவும் ஒரு வருடத்தில் ஐம்பது மில்லியன், எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள்? அரசாங்க நிறுவனத்தில் அரச ஊழியர், அரசியல்வாதிகள் செய்வதுதான் இதுவரைக்கால வழமை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
  17. பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கும் இந்தியா விசா மறுத்துள்ளது. அமெரிக்க வீரர் அலி கானுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அலி இப்பொழுது கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பங்காளதேசமும் உறுதியாக உள்ளது போல்தான் உள்ளது. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.
  18. 20 பேருடன் தொடங்கிய உண்ணாவிரதம், அடுத்த நாள் 7 பேருடன் முடித்து வைக்கப் பட்டது. இன்னும் ஒரு நாள் இருந்திருந்தால் எல்லோரும் நைசாக கழண்டு போயிருப்பார்கள். 😂
  19. நாங்கள் மகிந்த மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் விடுதலை கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடினோம். நாங்கள் சோனியா மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடினோம் அதனை ஏவிவிட்டு எம்மில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று எமது பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கக் காரணமான ரஜீவைக் கொன்றோம், ஜே ஆர், பிரேமதாச, சந்திரிக்கா, ரணில், டிங்கிரி பண்டா, சிறிமா, பண்டாரநாயக்க, கோத்தாபய என்று எவரையுமே குற்றம் சாட்ட முடியாது, ஏனென்றால் நாங்கள்தான் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினோம். எங்களுக்கெதிராக எம்மை அழித்தவர்கள் எல்லோருமே உள்நாட்டிலும் சர்வதேச‌த்திலும் வழக்குகள் போட்டுப் பயங்கரவாதிகள் என்று நாமமும் இட்டு அழித்து, அடக்கி விட்டார்கள். ஆனால் நாம் மட்டும் எதுவுமே பேசக் கூடாது, ஏனென்றால் நாம்தான் எமக்கு நடந்த அனைத்து அழிவுகளுக்கும் காரணம் ! இவ்வளவு கேவலமான உணர்வு தமிழரில் இல்லாமல் வேறு எந்த இனத்திலும் இருக்கமுடியாது.
  20. சின்னம் பற்றி எனக்கும் எந்த மாறுபாடும் இல்லை.
  21. உங்களுக்கும் எனக்கும் நல்ல வழி பிறக்கட்டும் .
  22. Yesterday
  23. நீங்கள் கூறியது போல் ஈழத்தமிழர் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நான் கூறினேனா? நடக்காததை கூற எனக்கு என்ன விசரா? எப்படி ஈழத்தமிழர் அரசியல் நேர்மையாக இல்லையோ அதே போல் உலக அரசியலும் நேர்மையாக இல்லை என்ற உண்மையை மட்டுமே கூறினேன். பொறுப்ப ற்று நடந்துவிட்டு அதன் விளைவாக குத்துது குடையுது என்று கத்துவதிலோ அடுத்தவனை திட்டுவதுலோ பிரயோசனம் இல்லை, என்று மட்டுமே கூறினேன். தீதும் நன்றும் பிறர் தர வரா
  24. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 88 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 88 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை துட்டகாமினிக்கும் அவரது தம்பி சத்தாதிச்சனுக்கும் இடையே ஒரு சண்டை நடக்கிறது, அது ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருந்தது. துட்டகாமினி, தந்தை காவன்தீசன் அல்லது காகவண்ண தீசனுடன் சண்டையிட்டு மலாயாவுக்கு தப்பி ஓடினார். மலாயாப் பகுதி பொதுவாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகள் உட்பட இன்றைய இலங்கையின் மத்திய மலைநாட்டுடன் தொடர்புடையது. இது இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது, குறிப்பாக பல்வேறு மோதல்களின் போது அடைக்கலம் மற்றும் எதிர்ப்பின் இடமாக இருந்தது. எனவே அத்தருணத்தில், குறைந்தது நான்கு இராச்சியங்கள் இருந்ததற்கான அறிகுறியாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அனுராதபுரத்தில், இன்னொன்று ரோஹனாவில் [Rohana அல்லது உருகுணை / Ruhuna], இன்னொன்று கல்யாணி மற்றது மலாயா ஆகும். வவுனியா மற்றும் வடக்கே எந்த குறிப்பும் இல்லை. எனவே, அநேகமாக குறைந்தது ஐந்து இராச்சியங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம். துட்டகாமினிக்கும் அவரது சகோதரர் சத்தாதீசனுக்கும் இடையில் பிக்குகள் மலையை உருவாக்கினர். இவை போன்ற பல நிகழ்வுகள் இந்து புராணங்களிலும் இந்தியா இதிகாசங்களிலும் மற்றும் பண்டைய தமிழ் இலக்கியத்திலும் இருந்து நகல் எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். எனவே வரலாறு என்ற வகையில் எந்த தீவிர விவாதத்திற்கும் தகுதியற்றது. துட்டகாமினி தனது ஈட்டியில் ஒரு புத்தரின் நினைவுச்சின்னத்தை [தாதுவை] வைத்தார். புத்தரின் நினைவுச்சின்னத்தை அவர் எப்படிப் பெற்றார்? அமைதியை விரும்பும் புத்தர், ஒரு சிறந்த நீதி தவறாத மன்னன் எல்லாளனுக்கு எதிராக துட்டகாமினிக்கு மகிழ்ச்சியுடன் உதவினார்! அப்படியானால், புத்தருக்கு என்ன மாதிரியான ஞானம் கிடைத்தது! நீங்களே சொல்லுங்கள்? வரலாற்று ரீதியாக அகிம்சை மற்றும் இரக்கத்தின் போதகரான புத்தர், மகாவம்சத்தில் துட்டகாமினியின் எல்லாளனுக்கு எதிரான போரை மறைமுகமாக ஆதரிப்பதாக சித்தரிக்கப்படுகிறார். இந்த முரண்பாடு குறிப்பிடத்தக்க நெறிமுறை மற்றும் தத்துவ கவலைகளை, உண்மையில் புத்தரைப் பற்றி அறிந்தவர்கள் மனதில் எழுப்புகிறது என்பதே உண்மை. மகாவம்சம் போரை நியாயப்படுத்த முயற்சிக்கிறது, இது பௌத்தத்திற்கும் (துட்டகாமினியால் பிரதிநிதித்துவம் செய்யும்) பௌத்தர் அல்லாதவர்களுக்கும் (எல்லாளனும் தமிழர்களும்) இடையிலான போராகக் காட்டுகிறது. இருப்பினும், வரலாற்று ஆதாரங்கள் எல்லாளன் ஒரு நீதியுள்ள மற்றும் மரியாதைக்குரிய மன்னராக இருந்தார். அவர் சிங்களவர்கள் மற்றும் தமிழ் குடிமக்கள் இருவரையும் நியாயமாக ஆட்சி செய்தார் என்பதைக் குறிக்கிறது. இந்த முரண்பாட்டை சரிசெய்ய, மகாவம்ச பௌத்த துறவிகள் துட்டகாமினிக்கு, போரில் பௌத்தர் அல்லாதவர்களைக் கொல்வது தீய கர்மாவுக்கு வழிவகுக்காது, ஏனெனில் அவர்களில் சிலர் மட்டுமே உண்மையிலேயே தர்மத்தை ஏற்றுக்கொண்டனர் என்று உறுதியளிக்கும் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இந்த நியாயப்படுத்தல் சிக்கலானது மற்றும் அகிம்சை பற்றிய முக்கிய பௌத்த போதனைகளுக்கு முரணானதும் ஆகும். சுருக்கமாக புத்தரை நெஞ்சில் குத்தி ஞாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது? எனவே, மகாவம்சம் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாக இருந்தாலும், வரலாறு, புராணக்கதை மற்றும் மத பிரச்சாரம் ஆகியவற்றைக் கலக்கும் ஒரு ஆழமான சார்புடைய உரையாகவும் இருக்கிறது. புத்தர் போருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது, போரில் ஏமாற்றுதலைப் பயன்படுத்துவது மற்றும் துட்டகாமினியின் செயல்களை மகிமைப்படுத்துவது போன்ற முரண்பாடுகள் போன்றவற்றை வெளிப்படையாக காண்கிறோம். இலங்கையின் கடந்த காலத்தைப் பற்றிய மிகவும் சமநிலையான புரிதலைப் பெற, மகாவம்சத்தை விமர்சன ரீதியாகப் படித்து, மற்ற வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று நம்புகிறேன். துட்டகாமினி தித்தம்பன் [Titthamba] என்ற தமிழனை எதிர்த்து நான்கு மாத காலம் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் தித்தம்பனை தோற்கடிப்பது கடினமாக இருந்தது. பின்னர் பலமுள்ள எதிரியை அவனால் சூழ்ச்சியால் தான் வெற்றிகொள்ள முடிந்தது. தாயாரைக் காட்டி அவனை வெற்றி கொண்டான். மகாவம்சத்தில் இது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், மொழிபெயர்ப்பில் உள்ள அடிக்குறிப்புப்படி, டிகா [Tika, மகாவம்சம் பற்றிய விளக்கங்கள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் முக்கிய உரை பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க பின்னர் எழுதப்பட்ட ஒரு வர்ணனை அல்லது விளக்கக் குறிப்பைக் இது குறிக்கிறது.] என்ற விளக்கத்தில் இது கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் தித்தம்பன் கொல்லப்பட்டார். காமனி என்ன விதமான சூழ்ச்சிசெய்தான்? தாயாரைக் காட்டி எப்படி வெற்றி கொண்டான் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, எந்த நிலைக்கும், ஒருவரின் சொந்த தாயை எதிராளிக்குக் கொடுக்கும் அளவிற்கு கூட, குனியத் தயாராக இருந்தார் என்பது இங்கு தெரிகிறது. தனது தாயின் ஆலோசனையின் பேரில் கசகலவில் [Kasagala] இருந்து தொலைவில் ஒரு கோட்டையைக் கட்டி, எதிரிப் படைகளைத் தவறாக வழிநடத்தி, மற்றும் எதிரித் தளபதியான மகேலவைப் [Mahela] பிடிக்க ஒற்றர்களைப் பயன்படுத்தி, தனது காரியத்தை துட்டகாமினி நிறைவேற்றினான். ஐரோப்பிய உலகிற்கு மகாவம்சத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய காலனித்துவ அரசு ஊழியரான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843), மேலே கூறிய எல்லாவற்றையும் "ராஜதந்திர உத்தி மூலம்" என்று விளக்கினார். ஜோர்ஜ் டேனர் மகாவம்சத்தை தனது சொந்த குழந்தையாகவோ அல்லது தனது கண்டுபிடிப்பாகவோ கருதியதால் மகாவம்சத்திற்கு மிகவும் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தார் என்று எண்ணுகிறேன். Part: 88 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 There is a quarrel between Duttha Gamni and his younger brother Tissa, and it had a happy ending. Duttha Gamani fell out with the father, Kakkavanna Tissa, and fled to Malaya. This is an indication that there were at least four kingdoms, One in Anuradhapura, another one in Rohana, another one in Kalyani and a fourth in Malaya. There is no reference to Vavuniya and further north. Most probably there must have been at least five kingdoms, with another one to the North of Vavuniya. Bikkhus created mountain between Dutthagamani and his brother Tissa. This is nonsense and merits no serious discussion as history. Dutthagamani put a relic onto his spear. How did he come into possess the Buddha’s relic? The peace loving Buddha happily assisted Duttha Gamani against an excellent monarch Elara! What kind of enlightenment the Buddha had! Dutthagamani fought with Damila Titthamba for four months. Duttha Gamni found it difficult to defeat Titthamba. Then Duttha Gamni in a sly manner indirectly indicated that he would give his mother in marriage by placing his mother along with him in the battlefield. It is not explicitly stated so in the Mahavamsa, but it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation. In the ensuing confusion, Titthamba was killed. The Mahanama, the author of Mahavamsa, prepared to stoop to any level, even to the extent of giving one’s own mother to the opponent. In another battle with Elara’s commander Mahela, Duttha Gamni cunningly defeated Mahela. George Turnour, the Colonial Civil Servant who first introduced Mahavamsa to the European world, glossed this as “by diplomatic Stratagem”. George Turnour took a very favourable stand with Mahavamsa as he considered the Mahavamsa his own baby, or his discovery. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 89 தொடரும் / Will follow துளி/DROP: 1992 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 88] https://www.facebook.com/groups/978753388866632/posts/33269433679371851/?
  25. இந்த சின்னத்திற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆகவே இதையே முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் எங்கள் முன்னோடி சின்னமாகப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன் சிறு துளிகள் சேரும் பொது தான் பெரும் வெள்ளம் என்பார்கள் அதற்கேற்ப உறவுகளே உங்கள் உதவிகளை இயலுமான வரையில் அனுப்பி வைத்தால் எங்கள் முன்னோடி அடிப்படை சுகாதார வசதித் திட்டம் யாழ் இனூடாக எங்கள் மக்கள் நன்மை அடைவார்கள் நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு கோடி நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.