Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. மதத்திற்காக வாழையை வெட்டும் பார்ப்பனியம் மனிதரை வெட்டுவதில் ஆச்சரியம் இல்லை.
  3. Today
  4. என்னப்பு அடிப்படை சுகாதார வசதி திட்டம் என்று போய் இப்போ வீட்டோடு வாறியள்.திட்டம் ஒரு நிலைப்பாட்டில் இல்லைப் போலும்.தொடரட்டும்.🤭
  5. உந்த இந்தியன் பிக்கினி லீக் குக்கு போட்டி நடத்தாட்டியும் ஒண்டும் குறையப்போறேல்ல😂. ஆனால் கந்தப்புவ டிஸ்டேர்ப் பண்ண வேண்டாம்😂. அவருக்கு உலக கோப்பையை வெண்ட கோப்பைக்கான போட்டியை நடத்தும் பொறுப்பு உண்டு😂
  6. ஆம் இந்த பத்திரிகைகளில் சகல கோணங்களிலும் கட்டுரை வரும் இல்லையா வசி….(நீங்கள் எப்போ மேற்கு ஊடகங்களை நம்ப ஆரம்பித்தீர்கள்😂) ஆனால்….ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை மட்டும்தான் நாம் தேடி, தேடி இணைப்போம் இல்லையா😂. இதன் பெயர் தகவல் வழங்கல் இல்லை வசி….பிரச்சாரம். செய்வதைத்தான் செய்கிறீர்கள்…அண்மையில் ஒரு உதாரணத்தில் சுட்டி காட்டியது போல் “டமண, கரண மரண” என்பது போல் கூகிள் டிரான்சிலேட்களை வெட்டி அப்படியே ஒட்டாமல்…கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை புரியும் தமிழில் மொழி பெயர்த்தாவது ஒட்டுங்கள். இல்லை என்றாலும் உங்கள் இஸ்டம்.
  7. இந்த கட்டுரைகள் ரியூட்டர், பைனான்சியல் ரைம்ஸ் போன்ற மேற்கு நாட்டு பத்திரிகளில் வந்த கட்டுரையே! , மற்றவர்கள் வாசிக்க மாட்டார்கள் என கூறுகிறீர்கள் (ஏனென்றால் அது இரஸ்சிய சார்பாக இருப்பதாலா), இந்த பத்திரிகைகளுக்கு இந்த விடயம் புரியாமல் இருக்கின்றது. தகவல் தடைகள் மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுக்கும்.
  8. ஈரான் மட்டுமல்ல இன்னும் பிற நாடுகளும் Nuclear threshold states எனும் நிலையில் அணு நீர் மூழ்கி இல்லாமலே இருக்கின்றன, உண்மையில் அணுவாயுதம் செய்வதற்கு ஈரான் விரும்பியிருந்தால் 2021 இலேயே 60% யுரேனிய செறிவூட்டல் தகமை கொண்ட நாடு எதற்காக 5 வருடங்கள் பொறுக்க வேண்டும்? இங்கு நீங்கள் ஈரான் அணுவாயுதம்தான் செய்யப்போக்கிறது என எதனை கொண்டு கருதுகிறீர்கள்? உலகிலே ஈரான் போல வேறு நாடுகள் இருக்கும் போது ஈரான் மட்டும் அணுவாயுதத்தினை தயாரிக்க போவதாக எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் (IAEA கூட ஆதாரம் எதுவும் இல்லை எனும் நிலையில்?) இந்த 60% செறிவூட்டல் தகமை ஈரானுக்கு 5 வருடங்களுக்கு முன்னரே இருந்துள்ள நிலையில் இது வரை அது எந்த அணுகுண்டினையும் செய்யவில்லையே? உங்களது சந்தோசத்திற்காக ஈரான் அணுகுண்டிற்காகவே 60% யுரேனிய செறிவூட்டல் செய்துள்ளது என கூறி சம்பாசனையினை நிறுத்த நான் தயாராகவே உள்ளேன் ஆனால் கேள்விகள் புதிய புரிதல்களை உருவாக்கும், எனது நோக்கம் யாருடனும் தேவையற்று முரண்படுவதில்லை, ஆனால் ஆரோக்கியமான சம்பாசனைகள் எனது புரிதலையும் மற்றவர்களது புரிதலையும் அதிகரிக்கும், உங்களுக்கு தர்ம சங்கடத்தினை ஏற்படுத்துவது எனது உண்மையான நோக்கம் அல்ல. நீங்கள் விரும்பினால் ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்காகவே 60% செறிவூட்டல் யுரேனியத்தினை தயாரித்த காரணத்தினை வெளிக்கொணரலாம் (நீங்கள் இரகசியமாக வைத்திருக்கும் காரணத்தினை), இல்லாவிட்ட்டால் சந்தேகத்தினடிப்படையில் என்னை போன்றவர்கள் இதனை ஒரு சதிக்கோட்பாடாகவே நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
  9. இது கேள்விக்கொத்தை தயாரிப்பதில் சிக்கலை உருவாக்கும்! எனக்கு இன்னோர் ஹொலிடே அடுத்த மாதம் இருக்கு! @கந்தப்பு , ஒரு short form போட்டியை இந்தப் வருடம் நீங்கள் நடாத்தினால் நல்லது!
  10. உங்களுக்கு எனது கேள்விகள் புரியவில்லை என்பது உறுதியாகிறது. ஈரான் பெண்களை அடக்கியாள்வது போல வத்திகானும் பெண்களை அடக்கியாள்கிறதா என்று கேட்டால், "ஈரானின் மீது மட்டுமே பழியைப் போட முடியாது" என்கிறீர்கள். எனது கேள்விக்குப் பதில் இதுவல்லவே? ஒன்றில், "ஆம் , வத்திகானும் பெண்களை அடிமைப்படுத்துகிறது", அல்லது, "இல்லை, வத்திக்கான் பெண்களை அடிமைப்படுத்தவில்லை" என்றுதான் உங்கள் பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், வழமைபோல் இங்கும் குழப்பி விட்டிருக்கிறீர்கள். மறுபடியும் அதே பித்தலாட்டமான பதில். ஈரானைப் போல் வத்திக்கானும் தனது நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளி கொடுங்கோலாட்சி புரிகிறதா என்று கேட்டால், "மேற்குத்தான் இதெல்லாவற்றையும் செய்கிறது" என்று பிதற்றுகிறீர்கள். ஒன்று செய்யுங்கள். முதலில் நான் உங்களிடம் என்ன கேட்டேன் என்பதை கவனமாகப் படியுங்கள். பின்னர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள். முடியவில்லையென்றால், சிரமத்தைத் தவிருங்கள்.
  11. மறுபடியும் அதே மாடும் மரமும். வத்திக்கான் பற்றிப் பேசினால், அமெரிக்காவும், பிரான்ஸும், ஜேர்மனியும் ஆயுதம் விற்கின்றனவே என்கிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்ட கேள்விகள் புரியவில்லையா, அல்லது உங்களின் பதில்களுக்கு ஏற்ற வகையில் எனது கேள்விகள் அமையவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. சரி, பரவாயில்லை, நீங்கள் கூறுவது இதுவாகத்தான் இருக்கும் என்று குத்துமதிப்பில் பதிலளிக்கிறேன். வத்திகான் என்பது தனியான ஒரு நாடு. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரும் அவரது உதவிக் குருக்களும் வசிக்கும் ஒரு சிறிய நாடு. இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் வெறும் 0.5 சதுரக் கிலோமீட்டரே கொண்ட சின்னஞ்சிறிய இறையாண்மையுள்ள ஒரு நாடு. அவரது பாதுகாப்பிற்கென்று ஒரு சிறிய பொலீஸ் படையினை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வத்திக்கான் ஆயுதங்களைத் தயார் செய்வதில்லை. அவற்றை ஏற்றுமதி செய்வதில்லை. ஆயுதங்களையோ குண்டுகளையோ மக்கள் மீது தூவுவதும் இல்லை. நீங்கள் வத்திகான் நாடு, அமெரிக்கா ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஆள்வதாக நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை என்னவென்றால் இந்நாடுகளை வத்திக்கான் கட்டுப்படுத்துவதுமில்லை, இந்நாடுகள் வத்திக்கானைக் கட்டுப்படுத்துவதுமில்லை. உங்களுக்கு உண்மையாகவே மரை கழன்றுவிட்டது என்று நினைக்கிறேன். ஈரானிய அடக்குமுறையாளர்கள் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், இஸ்ரேலினை சின்னச் சாத்தான் என்றும் அழைப்பது பற்றியே எனது கேள்வி அமைந்திருந்தது. அதாவது ஈரான் இப்படி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அழைப்பது போல வத்திக்கானும் எந்த நாட்டையாவது "சாத்தான்" என்று அழைக்கிறதா என்று கேட்டால், "சாத்தான் எனும் சொல் கிறீஸ்த்தவத்தில் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்டது விளங்கவில்லை போலும், பரவாயில்லை, அதிகம் சிரமப்படாதீர்கள்.
  12. மறுபடியும் அதே மரக் கேள்வி. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுதான் தனது ஒரே நோக்கம் என்று ஈரான் சொல்கிறது, ஆனால் வத்திக்கானுக்கு அப்படி எந்த நாட்டையும் அழிக்கும் நோக்கம் இல்லையென்று நான் கூறினால், பலஸ்த்தீனம் அரிக்கப்படுவது எனது கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறீர்கள். உங்களால் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லையென்றால் விட்டு விடுங்கள். பலஸ்த்தீனம் பற்றி வேறு ஒரு திரியில் நீட்டி விளக்கலாம். ஆக, வத்திக்கான் கிறீஸ்த்தவப் பயங்கரவாதிகளுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அயலில் உள்ள நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அந்நாடுகளை உலக வரைபடத்திலிருந்து நீக்கக் கோரி உசுப்பேற்றி வருகிறது என்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு உறுதியாகச் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம், ஆகவே தயவுசெய்து வத்திக்கான் பணம் அனுப்பி, அயல் நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நாடுகளை இங்கே பட்டியலிட்டு விடுங்கள். இங்குள்ள அனைவருக்கும் அது பேருதவியாக இருக்கும்.
  13. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி! சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனித்து வந்தனர். தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து வருகிறது திமுக. அந்த வகையில் மதிமுகவுக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று (மார்ச் 11) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில் எதிர்வரும் தேர்தலில் மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது. இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்திலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி!
  14. ஆம் , இது உண்மைதான். இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னரான காலத்தில் பல காலணித்துவ நாடுகள் விடுதலை பெற, அதுவரை ஆட்சிசெய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆகவே இச்செயற்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லை. ஆனால் ஈரான் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை அடக்கியாளும் நடைமுறை இன்னமும் நடந்தே வருகிறது. மாட்டைப் பற்றி பேசலாம் என்றால், மாட்டை மரத்தில் கொண்டுவந்து கட்டிவிட்டு, சம்பந்தமேயில்லாமல் மரத்தைப்பற்றி பேசுகிறீர்கள். பரவாயில்லை, என்னால் முடிந்தளவில் பதில் தர முயல்கிறேன். நான் கேட்ட கேள்விகள் வத்திக்கான் பற்றியது. வத்திக்கான் அணுவாயுதம் வைத்திருக்கிறதா என்று கேட்டால், கிறீஸ்த்தவ நாடுகளிடம் இல்லையா என்று கேட்கிறீர்கள். வத்திக்கானும் கிறீஸ்த்தவ நாடுகள் ஒன்று என்று உங்களிடம் சொன்னது யார்? அடுத்ததாக, கிறீஸ்த்தவ நாடுகள் என்று நீங்கள் குறிப்பிடும் நாடுகள் எவை? அவற்றிற்கும் வத்திக்கானிற்கும் என்ன சம்பந்தம்? வத்திக்கான் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது இந்த நாடுகள் தான் வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா? அமெரிக்கா கிறீஸ்த்தவ நாடென்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யமுடியும்? பெரும்பாலான அமெரிக்கர்கள் நாத்திகர்கள். இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவையும் அப்படித்தான். ரஸ்ஸியா வத்திகானினால் கட்டுப்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும். சீனாவோ இந்தியாவோ வடகொரியாவோ வத்திகானின் கட்டுப்பாட்டில் இல்லையென்று எனக்குத் தெரியும்.
  15. அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை இராக் போர் சென்ற திசையும், ‘மறக்காத’ பாடமும்! பாரதி ஆனந்த் Updated on: 11 Mar 2026, 8:48 pm 4 min read “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!” - இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து... “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.” - இதுதான் போரின் சாராம்சம். வரலாற்றில் அன்றும் இன்றும் போர்கள் நடக்கும்போது பலமான ராஜ்ஜியங்கள் / அரசாங்கங்கள் எதிரியை தோற்கடிக்க இயலாமல் இருந்ததில்லை. ஆனால் அழிவும், அரசு நிர்வாகமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதைக் குழுப்பிக் கொண்டுதான் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் சோர்ந்து போகின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் அரசை அப்புறப்படுத்த முடியும். ஆனால், அதனால் உருவாக்கப்படும் அதிகார வெற்றிடத்தை எது நிரப்பும், எப்போது நிரப்பப்படும் என்பதே கேள்வி. 2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தான் நினைத்ததை எல்லாம் செய்தது. சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு தூக்கிலடப்பட்டார். அங்கிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. எல்லாமே வெறும் 21 நாட்களில் முடிந்தது. ஆனால், இராக் - அமெரிக்கா போர் முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இராக்கில் இன்றும் சர்வாதிகார அரசுதான் இருக்கிறது. அந்த அரசு இப்போது ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள், இராக் மண்ணில் வெளிப்படையாகவே இயங்குகின்றன. சதாம் ஹுசைன் புதிய இராக்கை தன் இஷ்டத்துக்கு உருவாக்க, கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், 4,400+ அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்கா இழந்தது. ஆனால், இராக் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள்தான் இருக்கிறது” என்று ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் ஃபரா. இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குரல் என்னவாக இருக்கிறது, சர்வதேச நிபுணர்களின் பார்வை என்ன, உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விரைவுப் பார்வை இது. மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இன்று (மார்ச் 11) பன்னிரெண்டாவது நாள். இந்த 12 நாட்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பியா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்கள் போர்க் கப்பல்களை இங்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ட்ரம்ப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவரது படை வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஏற்கெனவே வெனிசுலா மிஷனில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘2 நாட்கள் தானே சொன்னீர்கள், விடுப்பில் அனுப்புங்கள்’ என்று நிர்பந்திக்கின்றனர். இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும். கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டாலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டாலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் ராணுவ மூத்த கமாண்டர். அவருடைய இந்தக் கருத்துகள், ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல் வீழ்ந்துவிட்டது என்பதுபோல இருக்கிறது அல்லவா? ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது. ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன. “ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்தது போலவே ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக தெஹ்ரானிலும், தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டுகள் வீச்சு இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ரஷ்ய எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி உள்ளிட்ட பல்வேறு கரிசனங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவும், வட கொரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. போரில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆகியனவையும் போரின் போக்கில் கவனிக்கத்தக்கது. ஈரானுடன் எப்போதுமே நட்பில் இருந்துவரும் சீனாவும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் களத்தில் பல உதவிகளை செய்து கொடுத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல்களுக்கு இடையே அமெரிக்கா, இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் இந்தியா தங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் போரின் பக்கவாட்டு சேதாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வளைகுடா ஒதுழைப்பு நாடுகளோ புதின் உதவியை நாடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது உலகமும் முழுவதையும் இழுத்துவிடும் சூழலுக்கு வந்து நிற்கிறது. காசா போர், லெபனான், ஏமன் மீதான தாக்குதல் என அடுத்தடுத்து போரில் சிக்கியுள்ள இஸ்ரேல், இப்போது ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்தப் பேச்சில் ஒருவித அயர்ச்சி தெரிவதாக சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர். எங்கே சறுக்கியது அமெரிக்கா? ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவின் அந்தக் கணிப்பு தவறானது. இருக்கும் தலைமையை வீழ்த்தினால் அமெரிக்க விரும்பிய மாற்று களம் உருவாவதைவிட, ஈரானில் ஏற்கெனவே எந்தக் குழு / அமைப்பு / கட்சி வலுவாக இருக்கிறதோ, எதனிடம் ஆயுதக் குவியல் உள்ளதோ அதுவே அதிகாரத்துக்கு வரும். அப்படியாக இராக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈரான் நிரப்பிக் கொண்டது. இப்போது ஈரானில் ஏற்பட்டுள்ளதை யார் நிரப்புவார்கள் என்பதே கேள்வி. இப்போதைக்கு அங்கு, பலம் பொருந்திய இஸ்லாமிய புரட்சிகர படைகள் அமைப்பு ரீதியாக வலுவாக, ஆயுத பலம் கொண்டதாக இருப்பதோடு, ஈரான் பொருளாதாஅரத்தின் 30 முதல் 40 சதவீதத்தின் மீது தனது அதிகாரித்தையும் கொண்டுள்ளது. அதனால்தான் புதிய உச்ச தலைவர் நியமனமும் சாத்தியமானது. ஒருவேளை உச்ச தலைவரே அப்புறப்படுத்தப்பட்டாலும் ஐஆர்ஜிசி அதிகாரத்தில் இருக்கும். இப்போது உச்ச தலைவராகியுள்ள மோஜ்தபா காமேனியும் இந்தப் படையுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவரே. எனவே, அயதுல்லா காமேனி உருவாக்கிய இந்தப் படையின் பேராதரவோடு மோஜ்தபா பதவிக்கு வந்துள்ளார். இன்றைய சூழலில் ஈரானில் ஏதும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஒருவகையில் மணி மகுடம் தலைமாறியுள்ளது. பதில் கிடைக்குமா? இராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், இராக் ராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ராணுவத்தில் இருந்த 4 லட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம். டொனால்டு ட்ரம்ப் இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன? அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை. ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்? அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா? அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
  16. பாருங்கவன் இந்த வாள்வெட்டுக் கலாசாரம் அய்யர்மாரையும் ஸ்பொயில் பண்ணியிருக்கு!
  17. தமிழினத்தின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்று, ஒருவர் இறந்துவிட்டால் பறை அடிப்போரை அழைத்து பறை அடித்து ஊரவர்களுக்கு அறிவிப்பார்கள். அந்தத் தமிழர்களின் பண்பாட்டை இன்று அமெரிக்க மக்களும் பின்பற்ற விரும்பி தங்கள் இறப்பை உலகத்துக்கு அறிவிக்கப் “பறையை” முன்னதாகவே அழைத்து வந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.😳
  18. “காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு திருச்சி: “ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் ஆகியவற்றைக் கேட்டு தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்த காங்கிரஸ் கட்சியிடம், கெஞ்சி, அதற்கு அடிமையாகி, அதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இதே திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சனம் செய்தார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தமிழகத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்திருக்கிறது. இது வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், பல்வேறு வார்த்தைப் போர்களுக்கு இடையில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் திமுக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்தது. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் கேட்டு காங்கிரஸ் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தது. அத்தனையும் தாண்டி கெஞ்சி காங்கிரஸுக்கு அடிமையாகி அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது திமுக. ஆனால், அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் அற்புதமான கூட்டணி. பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் எறும்பைப் போல, தேனிக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் தமிழகத்தில் ஓர் அற்புதமான ஆட்சியை அமைப்போம். மு.க.ஸ்டாலின் இனி எத்தனை இடங்களில் கூட்டம் போட்டாலும் நாட்டு மக்கள் அவரை நம்பப் போவதில்லை. கடந்த 2021-ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. இதில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்புகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய். கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சிகரமாக அறிக்கைவிட்டு ஆனால், சொன்ன அறிவிப்புகளை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசாங்கம்தான் திமுக அரசாங்கம், திமுக கட்சி. மக்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிக்கைகள் வரும். தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள். அதுதான் திமுகவின் கொள்கை. ஆனால், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக, நிறைவேற்றிய கூட்டணி எங்கள் கூட்டணி. ஏமாற்றி ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி வதைக்கிற அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கும்தான் போட்டி என ஸ்டாலின் கூறி வருகிறார். பாவம், அவருக்கு மறதி. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று மக்கள் முடிவு செய்யக் கூடிய தேர்தல் இந்த தேர்தல். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான், எங்களைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் அதிமுக அற்புதமான ஆட்சியைக் கொடுத்தது. அது பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டினார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்குமான அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. தங்கள் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் ஒரே கொள்கை என்று ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். திமுக கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கைகளும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளும் ஒன்றா? திமுக கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியாகிவிடலாம். தனித்தனி கட்சி தேவையில்லை. பல்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் சேர்ந்துதான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்துள்ள கூட்டணிதான் திமுக கூட்டணி என ஏமாற்றுகிற கட்சி திமுக. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்பது இயல்பு. திமுகவை அகற்ற வேண்டும், தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்கிற கூட்டத்தை அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பிரமாதமான கூட்டணியாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். “காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு
  19. யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://yarlvasal.lk/?p=92893
  20. தீடீரென பள்ளத்தில் விழுந்த கார்கள்! இந்தியாவில் 5 குட்டி போட்ட ஆபிரிக்க சிவிங்கிப்புலி.
  21. அமெரிக்காவின் ஏவுகடையால் ஈரான் பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதா?
  22. விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  23. இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு Published By: Vishnu 11 Mar, 2026 | 09:07 PM லாஃப்ஸ் Gas நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.300 அதிகரிக்கப்பட்டு ரூ.4,630 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.4,330 ஆக இருந்தது. மேலும், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.120 உயர்த்தப்பட்டு ரூ.1,862 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.1,742 ஆக இருந்தது. https://www.virakesari.lk/article/240750

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.