Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459972
  3. கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம். கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர் https://athavannews.com/2026/1460010
  4. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மதிப்பீட்டின்படி, இநத் விடயத்தில் ட்ரம்ப் தலையிட முடிவு செய்துள்ளார், ஆனால் இந்த நடவடிக்கையின் நோக்கம் மற்றும் நேரம் தெளிவாக இல்லை என்று டெல் அவிவ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் வொஷிங்டன் ஈரானை தாக்குவதைத் தடுக்க” பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை தெஹ்ரான் கேட்டுக் கொண்டதாகக் பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானை குறிவைத்தால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் துருக்கி வரையிலான பிராந்திய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்றும் தெஹ்ரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிக்கும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது அதிகரித்து வரும் பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். https://athavannews.com/2026/1459954
  5. திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்! 14 Jan, 2026 | 07:02 PM திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து இந்த மரத்தாலான அமைப்பினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236051
  6. 2026இல் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 14 Jan, 2026 | 06:52 PM இலங்கை மின்சார சபையானது உரிய நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த போவதில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த காலத்திற்குள் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியமை, முதன்மை முன்மொழிவின் குறைபாடு காரணமாக இந்த காலாண்டிற்கு மின்சாரசபை ஒரு புதிய முன்மொழிவை முன்வைத்திருப்பினும், காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்திற்கு ஒரு திருத்தத்தை செயல்படுத்துவதன் மூலம் அதிக சதவீதத்தில் கட்டணங்களை மாற்றுவதன் தீமைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்தது. குறித்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது. திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என்று மின்சாரசபை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைகுழுவிற்கு தெரிவித்தது. இன்றுவரை ஆணைகுழுவிற்கு திருத்தப்பட்ட கட்டண திருத்த முன்மொழி திட்டம் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் கட்டண திருத்த முன்மொழி திட்டம் பெறப்பட்டவுடன், மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடையும் காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாண்டில் குறுகிய காலத்திற்கு வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்வதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பொருளாதாரத்தில் அதிக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சரியான காலப்பகுதியில் செல்லுபடியாகும் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்காததாலும், காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டண திருத்தத்தை செயல்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் செய்தது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/236050
  7. யாழ். போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் ஒருவர் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து! 14 Jan, 2026 | 05:13 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் இலக்க விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாடு, பொருத்தமற்ற வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அச்சுறுத்தியுள்ளார். அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலை நடாத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236045
  8. "இவங்க மட்டும்தான் Jallikattu-ல் பங்கேற்க முடியும்" - 2026 Rules என்னென்ன? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உள்ள விதிகள் என்னென்ன என்பதை விழா ஏற்பாட்டாளர் விளக்குகிறார். #Jallikattu2026 #AlanganallurJallikattu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 10-ஆம் வகுப்பு மாணவியிடம் அடங்கும் 'சின்ன Style'… Jallikattu-ல் தோல்வியே காணாத காளை மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அழகுபேச்சி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக 2 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் இவர், காளைகளை போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். இவருக்கும் காளைகளுக்கும் இடையிலான பிணைப்பு பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. #AvaniyapuramJallikattu #Madurai #Jallikattu Producer - Vijayanand Arumugam Shoot Edit - Sam Daniel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  9. Today
  10. திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்த தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! 14 Jan, 2026 | 04:02 PM திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு தேரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 தேரர்கள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236031
  11. அத தெரண கருத்துப்படங்கள்.
  12. மனைவியின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும் அம்மாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
  13. நீங்கள் இங்கே சொன்னவற்றில் இருந்து தான் தமிழீழ மீட்பாளர் சீமான் கோடீஸ்வரர் சிறிதரன் மற்றும் விஜய் எல்லாம் கிழட்டு கிழவர்கள் என்பதையும் விளங்கி கொள்ள முடிந்தது.
  14. யாழ்பாணத்தில் தமிழர்களின் தலைவராக அர்ச்சுனா அல்லது அநுரகுமார திசாநாயக்க தான் வருவார்கள் என்றும் சொல்கின்றார்கள்
  15. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
  16. மனையாளின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 💐
  17. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
  18. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
  19. அன்னாரை இழந்து தவிக்கும் மோகன் மற்றும் அவரது சக குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.