stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை Jan 2, 2026 - 05:35 PM இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 12,803,174.35 ரூபாவை நன்கொடையாக வழங்கியது. அதற்கான காசோலையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் (நிர்வாகம்) விங் கமாண்டர் சேனக ருவன்பத்திரண (ஓய்வு) மற்றும் பணிப்பாளர் (நிதி) எம்.கே. ஜயந்த ஆகியோர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://adaderanatamil.lk/news/cmjwtulls03fzo29n2iqzqgew
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
'3 ஆண்டுகள் தாமதம்' – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,@vhouseofficial கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2026, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை எனவும் இம்மாதிரி திரைப்படங்களுக்கு திரையரங்குகளைத் தர உரிமையாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம்சாட்டியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? நடிகர் கருணாசும் பி. கரிகாலன் என்பவரும் இணைந்து 'சல்லியர்கள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். கருணாஸ், சத்யாதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தி. கிட்டு என்பவர் இயக்கியிருக்கிறார். சல்லியர்கள் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இந்தப் படம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் பணியாற்றிய மருத்துவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தை வெளியிட திரையரங்குகளை அணுகியபோது, பெரும்பாலான திரையரங்குகள் முன்வரவில்லையெனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்தப் பிரச்னையின் பின்னணியை விளக்கினார். பட மூலாதாரம்,@vhouseofficial 'படம் எடுத்து 3 ஆண்டுகள்' "சல்லியர்கள் படத்தை எடுத்து முடித்து மூன்றாண்டுகளாகிவிட்டன. படம் எனக்குப் பிடித்திருந்ததால் அதனை வெளியிட முடிவுசெய்தேன். இதற்கு முன்பு, இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு என மூன்று, நான்கு முறை தேதி குறித்தோம். ஆனால், திரையரங்குகள் போதுமான அளவுக்குக் கிடைக்காததால் வெளியிடும் தேதிகளை மாற்றிக்கொண்டே வந்தோம். '' என்றார் சுரேஷ் காமாட்சி. மேலும் ''அடுத்த வாரம் 'பராசக்தி'யும் 'ஜனநாயகனு'ம் வருவதால் இந்த வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆகவே இந்த வாரத்தைத் தேர்வுசெய்து, சல்லியர்கள் படத்தை வெளியிட முடிவுசெய்தோம். ஆனால், இந்த வாரமும் படத்தை வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாகவே 27 காட்சிகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை இயக்கிவரும் ஒருபெரிய திரையரங்க நிறுவனம், சல்லியர்கள் படத்திற்கு என ஒரு காட்சியைக்கூட கொடுக்கவில்லை. இந்தப் படத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு மாநிலங்களில் இதைச் செய்ய முடியுமா? தயாரிப்பாளர் சங்கங்கள் எதுவும் செய்வதில்லை. சின்னப் படங்கள் வந்தால்தானே புதிய நடிகர்கள் வருவார்கள்? புதிய இயக்குநர்கள் வெளியில் வருவார்கள்? தவிர இந்தப் படம் ஈழப் போராட்டம் குறித்த திரைப்படம். அப்படியிருந்தும் இந்த நிலை" என்கிறார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து இந்தப் படத்தை, வியாழக்கிழமையன்று (ஜனவரி 1) ஓடிடியில் வெளியிட முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய சுரேஷ் காமாட்சி, "சிறிய திரைப்படம் என்றாலே ஓடாது என முடிவுகட்டி, திரையரங்குகளைத் தர மறுக்கிறார்கள். படத்தைத் திரையிடுங்கள். ஆட்கள் வராவிட்டால் தூக்கிவிடுங்கள். தரவே முடியாது என்றால் எப்படி? படம் வெளியாகும் முன்பே, படம் ஓடவே ஓடாது என முடிவுசெய்வதற்கு இவர்கள் யார்? பெரிய நிறுவனங்களின் படங்களைத் தவிர வேறு யாருமே படங்களை திரையிட முடியாத சூழல் வந்துவிட்டது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், திரையரங்குகளில் அந்தப் படமே வெளியாகவே முடியாது என்றால், என்ன செய்வது? அதனால்தான் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட்டுவிட்டேன்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial 'அரங்குகளைத் தர மறுக்கிறார்கள்' 'சல்லியர்கள்' படத்தைத் தயாரித்த கருணாசும் இதே கருத்தையே சொல்கிறார். "ஒரு காலத்தில் திரையரங்குகள் தனித்தனியாக இயங்கிவந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறிய சிறிய திரையரங்குகள், தனி திரையரங்குகள் எல்லாவற்றையும் ஒப்பந்தங்களின் மூலம் தங்கள் பெயரில் இயக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு சிறிய தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அரங்குகளைத் தர மறுக்கிறார்கள். அப்படியானால், சிறிய திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது? இப்போது முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதுமுக நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தவர்கள்தானே? அவர்களது திரைப்படங்களுக்கு அந்த காலகட்டத்தில் திரையரங்குகள் கிடைத்ததால்தானே அவர்கள் வளர முடிந்தது?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர். தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வலுவாக இல்லாததுதான் பிரச்னை என்கிறார் சுரேஷ் காமாட்சி. "தயாரிப்பாளர் சங்கங்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்கள், விநியோகிஸ்தர்களின் சங்கங்கள் ஆகியவை அவரவர் நலன்களைக் காக்கும் வகையில் தீவிரமாக இயங்குகின்றன" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial ஆனால், இதில் வேறு சில கோணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இயங்குபவர்கள். "சிறிய திரைப்படங்களை வெளியிடுவது என்பது இப்போது எல்லாத் தரப்பிற்குமே கடினமான காரியமாகிவிட்டது. சற்று முகம் தெரிந்த நடிகர்கள் இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கே வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை, நல்ல படமா, மோசமான படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்றுதான் பார்ப்பார்கள்.'' என்கிறார் இயக்குநரும் விநியோகிஸ்தரும் 'OTTPLUS' ஓடிடியின் சிஇஓவுமான கேபிள் சங்கர். ''ஒரு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் யாரெனத் தெரியவில்லையென்றால் மிகக் குறைவான ஆட்களே வருவார்கள். இதில் திரையிடும் செலவுகூட திரையரங்கிற்கு கிடைக்காது. ஒரு காட்சிக்கு நான்கைந்து பேர் மட்டுமே வந்தால் ஏசிக்கான செலவு, மின்சாரச் செலவு, சுத்தம் செய்யும் ஆட்களுக்கான செலவு போன்றவற்றில் பாதிகூட கிடைக்காது. அப்படியிருக்கும் நிலையில், யார் சிறிய படங்களைத் திரையிட வருவார்கள்?'' என்கிறார் கேபிள் சங்கர் ''ஆனால், சில சிறிய திரைப்படங்கள் ஆச்சரியம் தருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக பேச்சி என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்திற்கு சென்னையிலும் செங்கல்பட்டிலும் சேர்த்து மொத்தமே 12 காட்சிகள்தான் கொடுக்கப்பட்டன. ஆனால், வரவேற்பு இருந்ததால் அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இதற்கு அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது. அந்தப் படம் சுமார் 80 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது. ஆனால் எல்லாப் படங்களுக்கும் இதுபோல நடப்பதில்லை என்பதுதான் பிரச்சனை" என்கிறார் அவர் ஆனால், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிறார் கேபிள் சங்கர். "சல்லியர்கள் படத்திற்கு நடந்தது அநியாயம். சிறிய திரைப்படங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மிகப் பெரிய திரையரங்கு குழுமம், ஒன்றிரண்டு திரையரங்குகளைக்கூட தரவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அதுபோன்ற நிலை இங்கும் வரவேண்டும்" என்கிறார் கேபிள் சங்கர். 'முன்பே கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும்' ஆனால், திரையரங்க உரிமையாளர்களின் பார்வை வேறாக இருக்கிறது. குறைந்த செலவில் தயாராகும் திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் பெரும் எண்ணிக்கையில் வெளியாகும் நிலையில், பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே ஆள் வருவதில்லை என்கிறார்கள் அவர்கள். ஆனால், சல்லியர்கள் திரைப்படத்தைப் பொறுத்தவரை முன்பே தங்களிடம் கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். "ஒவ்வொரு வாரமும் ஐந்து - ஆறு சிறிய திரைப்படங்கள் வருகின்றன. பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே 4 -5 பேர்கூட வருவதில்லை. ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருப்பதைப் போல பேசுகிறார்கள். எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. வியாழக்கிழமை படத்தை வெளியிட முடிவுசெய்துவிட்டு, புதன்கிழமையன்று என்னிடம் சொன்னால் என்ன செய்ய முடியும்?'' என்கிறார் அவர் ''மூன்று - நான்கு நாட்கள் முன்னதாகச் சொல்லியிருந்தால்கூட ஏதாவது செய்திருக்க முடியும். ஒவ்வொரு வாரமும் 6 படங்கள் வரும் நிலையில், எத்தனை படங்களுக்கு திரையரங்குகளைத் தர முடியும்? இன்று நாளிதழைத் திறந்து பாருங்கள். எத்தனை படங்களின் வெளியீடு குறித்த விளம்பரங்கள் வந்திருக்கின்றன? இதில் ஏதாவது நாம் அறிந்த படமாக இருக்கிறதா? வரும் படங்களை திரையிடுங்கள், ஓடினால் தொடருங்கள் இல்லாவிட்டால் தூக்கிவிடுங்கள் என்கிறார்கள். காட்சிகளை திரையிடும் செலவுகூட வராத படங்களை போட்டால், அதில் வரும் இழப்பை எப்படி எதிர்கொள்வது? ஆனால், சல்லியர்கள் படத்தைப் பொறுத்தவரை என்னிடம் முன்பே கூறியிருந்தால், சம்பந்தப்பட்ட தொடர் திரையரங்கு நிறுவனத்திடம் பேசி சில திரையரங்குகளைப் பெற்றுத் தந்திருக்க முடியும்" என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். தற்போது சல்லியர்கள் திரைப்படம், 'ஓடிடிபிளஸ்' ஓடிடியில் வெளியாகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgdlzy7edro
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
நம்ம விளம்பரத்துக்கு எதிர் விளம்பரம்போட நாமல் ,சஜித் போன்றோர் முன்னிற்பர் ..அவர்களுக்கு தேவை அதிகம் ...காசுமிருக்கு
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
கனடாவில் தட்டி தவறிகைபட்டாலே காசு பறிப்புத்தான்.. முதல் நடந்த வழ்க்கு பிரபல்மாகவிருந்தது ...ஆங்கிலப் பத்திரிகைகளும் முன்னுரிமை கொடுத்தன..
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கனவே நீங்கள் எமது அமைப்பிற்கு நன்கொடை வழங்கி இருந்தீர்கள் அண்ணா. கடந்த வருடத்தில் இருந்து தான் காரைநகரில் 2 குடும்பங்களுக்கு மாதாந்த உதவி, குடிநீர் விநியோகம்(பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள்) செய்கிறோம். பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஒவ்வொரு கட்ட பணி முடிவடையும்போதும் அவர்கள் பணத்தை மீளப்பெற்று பயன்படுத்தும்படியும் செய்யலாம். (அரசின் வீட்டுத் திட்ட நிதி தொழிநுட்ப உத்தியோகத்தரின் சிபார்சின் பின்னரே வங்கியில் இருந்து மீளப்பெற முடியும்.) அல்லது பகுதி பகுதியாக ஒப்பந்தகாரர் கட்ட கட்ட அவருக்கு பணம் அனுப்பலாம். இது இரண்டும் சரிவரவில்லை என்றால் எனது பெயரில் வங்கியில் கதைத்து இன்ன நோக்கத்திற்காக என புதிய வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன். எல்லோருடைய கருத்துகளையும் பெற்று செயற்படுத்துவோம்.
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
நன்றி கவி ஐயா. பெயரும் மயூரன் என்று நினைவில் இருந்தது. மயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 - 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.[2] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
அதேநேரம் இப்போது பலதுறைகளிலும் இப்படியான குற்றச் சாட்டுக்களை வைத்து பணம் பண்ணுவதை குறிக்கோளாக கொண்டு களம் இறங்குகிறார்கள். தீர விசாரித்தாலே நடந்த உண்மைகள் தெரியவரும்.
- Today
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
பத்திரிகைகள் இப்போ காய்ந்து போய் கிடக்கின்றன. பணத்தைக் கொடுத்தால் போடுவார்கள். உண்மையில் சிங்கள பத்திரிகையாளர்கள் தாங்களாகவே முன்வந்து சிங்கள மக்களுக்கு தமது அரசுகள் செய்ததை விளம்பரப் படுத்தியிருக்க வேண்டும்.
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
கொட்டன் கொடுத்து அடிவாங்குவது போலத்தான் தெரியுது ....எதற்கும் இதனை அவர்கள் ..பிரசுரிக்க வேணுமே..
-
கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்!
எதற்கும் அஞ்சாத சிங்கன் போலத்தான் தெரியுது..
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
உண்மைதான்..பின்னர் மனநோய் சிகிச்சை பெற்றதை ஆதாரமாகக்காட்டி..வ்ழக்கில் இருந்து தப்பித்தார்...மனைவியும் இதே துறையில் வைத்தியராக உள்ளார்..இண்டுக்கு மேற்பட்ட மருத்துவ நிலையங்களை நடாத்துகின்றனர்..காசு பணம் கூடிவிட்டால்...
-
நியூயோர்க் நகரத்தின் முதல்வராக இந்திய ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த மம்டானி இன்று பதவியேற்கிறார்.
இங்கு இங்கிலாந்தில் முஸ்லிம்கள் அதிகார பதவிகளுக்கு வந்தார்கள் அவ்வளவுதான் கதை பேர்மிங்கம் லேச்ட்டேர் ஈஸ்ட்காம் போன்ற இடம்கள் தற்போதைய நிலை சொல்லும் கதை .
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
களத்தில் கேர்ணல் சங்கர் ஞாபகார்த்தமாக என இந்தத் திட்டம் பெயர் சூட்டப்பட்டாலும் அதே பெயரில் நாட்டில் இயங்க முடியாது என்றால் நாட்டில் அதை இன்னொரு பெயரால் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால் மட்டுமே யாழ்களத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் உறவினர்களிடம் இதற்கான நிதி உதவிகளைக் கோரலாம் என்று நினைக்கின்றேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி ஏராளன் தகவலுக்கு காரைநகரின் பெயரை வைத்துப் பல அமைப்புக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் நிலையிலே........ (ஆலயங்கள் கட்டுதல், புனரமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பன தான் அந்த அமைப்புக்களின் முதன்மையான திட்டங்கள்) உங்கள் அமைப்பு இப்படியான உதவிகளை பல காரைநகர் மக்களுக்காகச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. நாங்கள் குறுகிய காலம் அங்கே தங்கி நிற்கும் நிலையால் இப்படியானவர்களை அடையாளம் காண முடிவதில்லை பாடசாலை, மாணவர்கள், கல்வி, பரிசளிப்பு, என்ற நிலையிலே தான் பலருடைய தனிப்பட்ட உதவிகளும் செல்கின்றன. இனிமேலாவது சரியான வழியில் செல்வார்கள் என் நம்புவோம் 🙏 அடுத்த கட்டமாக எப்படி எந்த வகையில் எங்கள் பங்களிப்பினை செய்யலாம்? ஏராளன் உங்கள் அமைப்பின் வங்கி இலக்கத்தைப் பயன்படுத்தலாமா? அல்லது உங்களால் இதற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பிக்கலாமா ? அல்லது ஏதாவது மாற்று வழி உள்ளதா ?
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
ஏராளன், இருக்கின்றது என்றல்ல அதேதான். எனக்கும் அவனைத் தெரியும். அவன் பெயர் மயூரன். இதை வாசித்தபோது,மயூரன் சுகுமாரன், மொட்டடையடித்தபடி இருந்த புகைப்படம் நினைவுக்குள் வந்தது. தமிழன், சிட்னி, ஓவியங்கள் என்று எலாமே ஒத்துப் போகின்றது. மிகுதி நிச்சயம் கற்பனையாகத்தான் இருக்கும். அந்தத் தாயின் வலி புரிகிறது. சர்வதேசமட்டுமல்ல உலகின் பல மனிதநேய அமைப்புகள் கேட்டும் இந்தனேசியா மரணதண்டனையை விடாப்பிடியாக நின்று எட்டுப் பேருக்கும் நிறைவேற்றியது. அவர்களுடைய சட்டம் அப்படி.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி கு சா அண்ணா வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அவரின் ஊடாக இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவோம் 🙏
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
நீங்கள் சொல்வது சரிதான், டக்ளஸ்மேல யாரும் கை வைத்தால் பொங்கியெழும் நிலையில்தான் வடபகுதி மக்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் என்பிபி மட்டுமல்ல ஏனைய தமிழ்கட்சிகளும் ஈபிடிபியிடம் தோற்றுபோவது உறுதி. 90 களிலிருந்து மக்களின் அமோக ஆதரவுடன் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வென்று வடமாகாணத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டக்ளசின் வாக்குவங்கி வலிமை பற்றி தெரியாமல் என்பிபி நடந்து கொள்கிறது. ஏதோ போன தேர்தலில்தான் அநுர அலை கொஞ்சம் ஓவராக அடித்ததால் டக்ளசின் வாக்கு வங்கிக்குள்ள கொஞ்சம் தண்ணி போயிரிச்சு, அடுத்த தேர்தலில் அந்த நிலை வராது.
-
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய கந்தலில் மறைந்து இருந்த பாலகன் கருணை காட்டி உலகை அணைத்து களவு இல்லா மனிதம் காட்டினான்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................................. 'வன்னியில் குண்டுகள் ... ' வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள் கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18" https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
-
கருத்து படங்கள்
- நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்பட்டுள்ளன. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458027- பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்! 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக, 2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொடரும். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. தரம் 06 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடசாலை வேளைகளின் எண்ணிக்கை 07 ஆகும். ஒரு பாடசாலை வேளைக்காக ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் 45. 2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும். கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகப்பூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தரங்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 02 ஆம் திகதி வெளியிடப்படும். https://athavannews.com/2026/1458060- 🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்து; 40 பேர் உயிரிழப்பு, 115 பேர் காயம்! சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மேலும் 115 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பரலது நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் என்ற மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 01:30 மணியளவில் (GMT 00:30) இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் விபத்துக்கான உறுதியான காரணத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், இது திட்டவட்டமான தாக்குதல் அல்ல என்பதை உறுதிபடுத்தினர். விபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் நாட்களில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை அதிகாரி பிரடெரிக் கிஸ்லர் கூறினார். இதனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைவாக அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும். தீ விபத்தின் பின்னர் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வாலாய்ஸ் பகுதிக்கு 13 ஹெலிகொப்டர்கள், 42 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 150 அவசரகால உதவியாளர்கள் இரவு முழுவதும் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அழகிய சுவிஸ் ஆல்ப்ஸின் மையத்தில் அமைந்துள்ள கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். https://athavannews.com/2026/1458068 - நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.