Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Today
  2. இனி வரும் தமிழ் சார்ந்த சமுதாயம் தமிழ் பெயருக்காக போராடுமா என தெரியவில்லை? எனது பெயர் பெயர் சுத்த தமிழ் பெயர். கொஞ்சம் நீளமான பெயர். புலம் பெயர் நாடுகளில் என் பெயரை சொல்லி கூப்பிடவே கொஞ்சம் சிரமப்படுவார்கள்😄. உதாரணத்திற்கு கதிர்காமலிங்கம் சிவயோகபரமானந்தன். இப்படி ஒருவனுக்கு ஐந்து பெயர்களை ஒண்டடி மண்டடியாய் சூட்டினால் யார்தான் என்ன பண்ண முடியும்?😂
  3. சிங்கன்..🦁 என் தலைவன் எதுக்கு வந்தானோ .. அந்த வேலையில் கவனமாக இருக்கின்றான். நீ கலக்கு தல...... உன் மூன்று மீற்றர் கையெழுத்து .. நாட்டின் வரலாற்று தலையெழுத்து.. நீ கலக்கு தல.. அமெரிக்காவின்.. ரோயல் பமிலி எண்டால்.. நீதான் தலை😂
  4. Yesterday
  5. ஒரு நீதிமன்ற வழக்கில் குற்றவாளிக்கும் சட்டத்தரணி வேண்டும் என நினைக்கின்றேன். எனது விண்ணப்பம் என்னவெனில் குற்றவாளி கூட்டில் நிற்பவர்களுக்காக பிரபல சட்டத்தரணிகளும் ஸ்டார் சட்டத்தரணிகளும் காவலாக/ஆஜராக நிற்கக்கூடாது என்பது என் கருத்து. ஏனென்றால் இலங்கையில் பொய்யானவர்கள் கைதாவது குறைவு. அல்லது இல்லை.
  6. யாழ்ப்பாண பக்கத்திலை இப்ப மனித உரிமைமீறல் ஒண்டும் இல்லையே? சிறித்தம்பி இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?🤣 வாள்வெட்டு,கத்திக்குத்து எல்லாம் இப்ப நோர்மல். வேறை என்ன மனித உரிமை மீறலாய் இருக்கும்? ஒரு வேளை எம்பி அர்ச்சுனா?😂
  7. தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு. இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு. அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.
  8. கோவை என்ற ஊரில் ஒரு மாணவி பாலியல் கூட்டு வன்கொடுமை செய்பட்டதிற்கு அந்த மாணவியும் தான் பொறுப்பு என்று பாஜக பெண்நிர்வாகி நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
  9. நானும் ஒளவையார் பற்றி அறிந்தது சாதிகள் இல்லை உதவிகள் செய்வோர் உதவி செய்யாதோர் என்று இருவகை தான் உண்டு என்பதை சொன்னவர்
  10. 🤣 நல்ல கருத்து.👍 மாற்றங்கள் விரும்பத்தக்கது. காலத்திற்கேற்ப மனிதர்கள் மாறவேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உடை நாகரீகத்தில் மாற்றம் வேண்டும் என்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்க தயாரா என்பதையும் தெரிவித்தால் நல்லது. அதாவது இன்றைய அரைகுறை உடையுடன்......
  11. எனக்கு டெக்சஸ் போன ஜேசுதாஸ் பற்றி தெரியாது புலம்பெயர் வாழ்வை கொண்ட ஈழ தமிழர்கள் பற்றி அறிந்து கொண்டதை வைத்து சொல்வதானால் டெக்சஸ் ஜேசுதாசும் அமெரிக்காவில் தனது வீட்டவர்கள் விரும்பிய ஆடைகள் அணிந்தாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் சீலை கட்டி அடக்க ஒடுக்கமாக தான் வெளியே வரவேண்டும் என்று விரும்புபவராக இருப்பார்
  12. அனுதாபம் எப்படி பெற வேண்டும் என்பதை இனவாத சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இஸ்ரேல் அமைப்பு என்பதை நான் அறிந்துள்ளேன். உதாரணத்திற்கு ஈழத்தில் எமக்கு எதிராக நடந்த கொடுமைகளும் அழிவுகளும் நன்கு தெரியும். அதை யார் செய்தார்கள் என்பதும் நன்றாக எமக்கு தெரியும். ஏனெனில் நாம் அந்த நாட்டவர்கள்.நாம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம்.அதே விடுதலை இயக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.ஏன் எப்படி எதனால் என நம்மவர்கள் ஆராய தயாரில்லை.செய்யாத குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்ததுதான் எமது விடுதலைப்போராட்டம். சர்வதேச ரீதியில் எமது விடுதலை போராட்ட இயக்கத்தை முதலில் பிள்ளையார் சுழி போட்டு தடை செய்தது அமெரிக்காதான்.அதே அமெரிக்காவை இன்று இங்கே எல்லோரும் ஆதரிக்கின்றோம். கால சுழற்சி வேகமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட...
  13. வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
  14. ட்ரம்ப் ஈரானுக்கு மூன்று நாள் கெடு விதித்தார், பின் பத்து நாள் என்கிறார். அவ்வளவு வீரமுள்ளவர், நடந்து கொண்டிருக்கும் போர், தானே தன்னிச்சையாக தொடங்கிய போருக்கு, இன்னும் களத்துக்கு வீரரை அனுப்பிக்கொண்டிருப்பவர், சவால் விடுபவர், எதற்காக கெடு விதிக்கிறார், கெடுவை நீட்டிக்கிறார் என்பதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக, காரணமின்றி போரை தொடங்கினார், தன்னிச்சையாக பேசுகிறாராம், அதேபோல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகிறார். இதென்ன நோய் என்று தெரியவில்லை?
  15. ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, அது ஏன் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்? தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக அந்த நாட்டுக்குள் போரை திணித்து, அழித்து விட்டு சும்மா தெனாவட்டாக செல்ல முடியுமா? எத்தனை பேரின், எத்தனை கால கனவு, உழைப்பை அழித்திருக்கிறார்கள் தமது வீம்புக்காக. ஆனால் அமெரிக்காவின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல. அவர்களின் நாட்டில், அவர்களின் வளங்களை எப்படி கையாள வேண்டுமென்று அமெரிக்கா கட்டளையிட முடியாது. அவர்களை கட்டிப்போட்டு சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? அதைவிட ட்ரம்ப், நேரம் ஒரு மாறாட்டப் பேச்சு பேசுகிறார். ஈரானில் பேசுவதற்கு தகுந்த ஆட்கள் யாருமில்லை எல்லோரையும் அழித்து விட்டோம் யாரோடு பேசுவது என்பதே பிரச்சனை என்றார். அப்படியென்றால் போர் எப்படி தொடர்கிறது? யாரோடு பேசுகிறேன் என்கிறார்? இப்போது தகுந்த நபர்களோடு பேசுகிறோம் என்கிறார். இரான் தனக்கு சிறந்த பரிசு தந்திருக்கிறது என்கிறார். தனக்கு அதியுயர் பதவியை இரான் அளித்ததாகவும் தான் மிக்க நன்றி ஆனால் வேண்டாம் என்றாராம். ஈரானோ இவை எல்லாவற்றையும் மறுக்கிறது. அதுவே உண்மை. போர் தொடர்கிறது, அமெரிக்க படைகள் ஈரானை நோக்கி விரைக்கின்றன. இப்படியான மாறாட்ட நோயாளியை நம்பி தம் பிள்ளைகளை, பிரஜைகளை அமெரிக்கர் பலி கொடுக்கின்றனர், மற்ற நாடுகளையும் அழிக்கின்றனர்.
  16. 2022 ஆம் ஆண்டு உக்ரெய்னின் நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் ரஸ்யா சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. இதில் ஒன்றுதான் டொன்பாஸ். இந்த 4 வருடத்தில் ரஷ்யா குறைந்தபட்சம் டொன்பாசையாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை ? மாறாக ஏன் உக்ரெய்னிடம் அப் பகுதியைத் தருமாறு அமெரிக்கா மூலமாகக் கேட்கிறது ? ரஸ்யா போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை என்பதே காரணம்.😂
  17. ஈரானின் இரண்டு அணுமின் நிலையங்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இன்னும் இரண்டு வாரங்களில் தனது இலக்கை எட்டும் என்று மார்க்கோ ருபியோ கூறியுள்ளார். பார்க்கலாம்.
  18. சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு கண்ட இடத்தில் அழைப்பு விடுவது வழமை, அதற்காக அதிகார பூர்வ அழைப்பில்லாமல், நாட்டின் இன்றைய இக்கட்டு நிலையை மனதிற் கொள்ளாமல், யாரும் வந்த வழியில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று செல்வதற்கு அவர்கள் ஒன்றும் வழிப்போக்கர்கள் அல்ல. இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது பின் அவர்கள் இசைக்கலைஞர்கள் என்கிறார்கள். இப்போ அதுவல்ல பிரச்சினை, இரானே இலங்கையின் மனிதாபிமான செயலை பாராட்டியிருக்கிறது. அனுரா எதை செய்தாலும் அதை அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதே நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனை. இல்லையென்றால்; இவர்களது ஊழல்கள் வெளிவரும், மக்களிடம் இவர்களுக்கு இருந்த செல்வாக்கு சரியும், சிறை செல்ல வேண்டி வரும், அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும், சும்மா இருந்து மக்களை வதைத்து நாட்டை சூறையாடும் கலாச்சாரம் மாறும் என்கிற பயப்பீதியில் என்னென்னவோ தந்திரங்கள், குற்றச்சாட்டுக்கள். இவர்களின் எந்த தந்திரமும் பலிக்காது. எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எதையெதை நினைத்து பயப்படுகிறார்களோ அதுவெல்லாம் நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
  19. கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.
  20. வாழ்த்துக்கள் மகளே. பிரான்ஸில் இந்த ஊராட்சி தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட இளையோர்கள் வேட்பாளர்களாக பங்கு பற்றி அதில் அநேகமானவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்கான அத்திவாரம் தமிழ் தேசியத்திற்காக மட்டுமே கட்டியெழுப்பப்பட்டது. என்றாவது ஒரு நாள் ஒரே புள்ளியில்......
  21. றியாஸ் குரானாவின் விமர்சனங்களில் எந்த வகையான சமரசமும் என்றும் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையும் அப்படியான ஒன்றே. ஓரிரு வருடங்களின் முன்னர் இவருடைய இளையராஜாவின் இசை பற்றிய ஒரு விமர்சனத்தை நான் இங்கு களத்தில் பகிர்ந்தேன் என்று நினைக்கின்றேன். விமர்சனம் எவ்வளவு கறாராக எழுதப்பட்டாலும், றியாஸின் மொழியில் இருக்கும் பண்பாடு கவனிக்கத் தக்கதும், மெச்சத் தக்கதும் ஆகும். இவ்வாறான மொழிநடையில் எழுதப்படும் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நையாண்டிகள் இல்லாமல், மேம்போக்கான ஒற்றை வரி நிராகரிப்புகள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனப் போக்கை உருவாக்குகின்றன. ஜெயமோகன் இந்துத்வா அமைப்புகளின் ஒற்றைப்படையான அரசியலுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தாலும், அவரது ஆக்கங்கள் ஒரு ஒற்றை தன்மையுள்ள சமுதாயத்தை, ஒரே பண்பாட்டையே வலியுறுத்துகின்றன என்பது என் அனுபவமும், விமர்சனமும் ஆகும். இந்தியா, இந்தியர்கள் என்பதை ஒரு அலகாகக் காட்டும் அவரது நிலைப்பாடு அரசியலுக்காகவோ அல்லது ஆன்மீகத்துக்காகவோ அவரை ஒரு முன்னோடியாக கருதும் நோக்கங்களை ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் செய்தது. ஆனாலும், இவரது மொழிவளமும், அழகியலும், ஆக்கங்களில் வெளிப்படும் தனிமனித தவிப்புகளும் இவரை எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த தமிழ் படைப்பாளிகளில் ஒருவராக்கியது. விக்கி பக்கங்களுக்கு மாற்றாக தமிழ் விக்கி என்னும் ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்கியில் எவரும், எதுவும் எழுதலாம் என்னும் போக்கால், திட்டமிடப்பட்டே பல மோசடிகள் செய்யப்படுகின்றன என்பதை எதிர்த்தே தமிழ் விக்கி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தமிழ் விக்கி சரியான திசையில் செல்வதாகவே எனக்குப்படுகின்றது. ஞானபீடம் விருது போன்றவற்றை வழங்கும் அமைப்புகள் தமிழ் மொழிக்கு நியாயம் செய்யவில்லை என்பதே என் எண்ணமும் ஆகும். தகுதியற்ற வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு முன்னர் பல வருடங்களாக தமிழுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் தமிழர்களும் கண்டு கொள்ளவில்லை, உலகமும் கண்டு கொள்ளவில்லை. நாமே நமக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்வது சரியான ஒரு மாற்றுவழியாகவே தோன்றுகின்றது. பணத்துக்காக, இலாபங்களுக்காக சமரசம் செய்து கொள்ளும் படைப்பாளிகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். அதே போலவே, எந்த சமரசமும் இன்றி, தங்கள் அழகியலை, தங்கள் அரசியலை முன்வைப்பவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். இன்னொரு புதிய விருதால், அது எவ்வளவு தான் பணப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தாலும், இலட்சியவாதிகள் மாறப் போவதில்லை. ஈழத்து இன்றைய படைப்பாளிகளான சயந்தனையும், அனோஜனையும், அகரமுதல்வனையும் நான் அறிந்து கொண்டது ஜெயமோகனின் கட்டுரைகளில் இருந்தே. பேராசிரியர் சிவத்தம்பி, மு. தளையசிங்கம் என்று பல முன்னோர்கள் பற்றிக் கூட இவர் எழுதிய கட்டுரைகளே அவர்கள் மேல் பார்வையை திருப்பியது. அது போலவே இந்த விருதும் அமையும் என்று நம்புகின்றேன். ஜெயமோகன் முன்னிறுத்தும் ஒற்றை பண்பாட்டை, ஒரு தேசத்தை, அவரது ஆன்மீகத்தை என்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. விதி என்றும், கர்மா என்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
  22. எனக்கு அடக்க முடியாமல் ஒண்டுக்கு அடிக்க வருது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜிப்பை கழற்றி ஒரு ஓரமாக ஒண்டுக்கு அடிக்க நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?
  23. 20 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் கோயில் ஒன்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாங்கள் கதைக்கும்போது இடையில் பிரெஞ்சில் ஏதோ கதைத்துவிட்டேன். அங்கிருந்த தாய்லாந்துக்காரர் எம்மருகில் வந்து நீங்கள் பிரான்சிலிருந்து வந்துள்ளீர்களா என்று பேசுக் கொடுத்தார். நாமும் பிரெஞ்சு பேசும் ஒருவரைச் சந்தித்த ஆவலில் அவரிடம் பேசினோம். அப் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறினார். கடைசியாக, இங்கு கல் பதித்த தங்க நகைகளை மிகவும் மலிவாக ஒரு இடத்தில் வாங்கலாம் என்றார். போதாக்குறைக்கு எமது ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதோ அவர்கள் மொழியில் கூறி அனுப்பி வைத்தார். நாங்களும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இறுதியாக ஓட்டுனரிடம் நகைக்கடைக்குப் போகலாம் என்றோம். அது ஒரு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் மிகப் பெரிய கடை. ஏராளமானவர்கள் நகை வாங்குவதைப் பார்க்க முடிந்தது. நாமும் இரண்டு கல் வைத்த நகைகளை வாங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். அன்று இரவு அடுத்தநாள் உலாத்தலைத் திட்டமிடுவதற்காக வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டியபோது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சற்றும் பிசகாமல் அப்படியே அதில் எழுதப்பட்டிருந்தது. அன்று முழுவதும் நித்திரையில்லை. அடுத்தநாள் முதல் வேலையாகக் காலையில் நகைகளை மதிப்பிடும் அலுவலகம் ஒன்றைக் கண்டு பிடித்து நகைகளைப் பரிசோதித்தோம். நல்ல வேளை அவை உண்மையான தங்கமும் கற்களும் என்று அத்தாட்சிப் பத்திரம் தந்தார்கள். ஆனாலும் எதிர்பார்த்த இலாபம் இல்லை.
  24. 'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.