All Activity
- Past hour
-
பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் யாழில் போராட்டம்
யாழில் போராட்டம் Published By: Digital Desk 3 31 Mar, 2026 | 01:33 PM ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/242395
-
-
ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்
ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம் Mar 31, 2026 - 05:57 PM ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் விமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும், அதேவேளை ஈரான் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு ஒரு கேலியான ஆலோசனையை முன்வைத்து, அவர் சமூக ஊடகங்களில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: "உங்களிடம் கூற என்னிடம் இரண்டு யோசனைகள் உள்ளன. முதலாவது, அமெரிக்காவிடம் இருந்து எரிபொருளை விலைக்கு வாங்குங்கள், எங்களிடம் தாராளமாக உள்ளது. இரண்டாவது, இப்போதாவது தாமதமாகவோ அல்லது தைரியத்தை வரவழைத்துக்கொண்டோ ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று உங்களுக்குத் தேவையானதை பலவந்தமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்." இதன்போது பிரான்ஸ் குறித்து பிரத்யேகமாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், "பொருட்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானங்களுக்கு பிரான்ஸ் தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்காதது மிகவும் மோசமானது" என்றும் குற்றம் சாட்டினார். ஹோர்முஸ் நீரிணையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமின்மை தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் தலைவர்களும் ஜனாதிபதி ட்ரம்பின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmnela0qu0008356p543tz2z6
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப்
மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப் March 30, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2025 ஜனவரியில் இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்த பிறகு பத்து மாதகாலப் பகுதிக்குள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதாக பெருமையுடன் உரிமை கோரிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தன்னைத் தவிர, வேறு எவரினால் அவ்வாறு போர்களை நிறுத்த முடியும் என்று கேள்வியெழுப்பி கர்வம் காட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தான் தொடுத்த போரை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். போரைத் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மூன்று குறிக்கோள்கள் இருந்தன. அணுத் திட்டத்தை மூடுவதற்கு ஈரானை நிர்ப்பந்திப்பது, உயர்ந்தளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரானில் இருந்து வெளியே கொண்டு போக வைப்பது, மேற்காசியாவில் அரசு அல்லாத திரட்டல் படைகளுக்கு ஈரான் வழங்கிவரும் ஆதரவைத் துண்டிப்பதுடன் அதன் ஏவுகணை ஆற்றல்களை நிர்மூலம் செய்வது. ஆனால், சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டியிருப்பதே ட்ரம்பின் முக்கியமான முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. போர் வெடித்த பின்னர் ஈரான் மூடிய அந்த நீரிணையை திறப்பதற்கு அவருக்கு எளிதான தெரிவுகள் இல்லை. ஒன்றில் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி உடன்பாடொன்றுக்கு வேண்டியிருக்கிறது அல்லது தரையில் இராணுவ நடவடிக்கைக்கு அதிகாரமளிக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான துருப்புகளை ஏற்கெனவே அமெரிக்கா வளைகுடாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஈரானின் எரிசக்திவள உட்கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப அறிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் நாட்டம் இருப்பதாக உலகிற்கு காண்பித்துக்கொண்டு மறுபுறத்தில் ஈரான் மீதான தாக்குதல்களை கடுமையாக தீவிரப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு காலஅவகாசத்தைப் பெறும் ஒரு தந்திரோபாயமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் ஊடாக 15 அம்ச சமாதான யோசனையை கடந்த வாரம் ஈரானுக்கு அனுப்பியது. அதை நிராகரித்த தெஹ்ரான் அதன் சொந்த நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஈரான் அதன் அணுத் திட்டத்தைக் கைவிட்டு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால் அதற்கு பிரதியுபகாரமாக 30 நாட் களுக்கு போர்நிறுத்தம் செய்து தடைகளில் தளர்வுகளைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், பெப்ரவரி 28 அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனியையும் வேறுபல தலைவர்களையும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் படுகொலை செய்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஆக்கிரமிப்பையும் படுகொலைகளையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்; எதிர்காலத் தாக்குதல்களை தடுப்பதற்கு உறுதியான செயற்பாட்டு முறைகள் வகுக்கப்படவேண்டும்; போரின் விளைவான அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்; சகல முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ஹேரர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகள். அதியுயர் தலைவர் உட்பட தலைவர்களும் படைத்தளபதிகளும் கொல்லப்பட்ட பின்னரும் கூட தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாக நிலைகுலையாமல் இஸ்ரேலுக்கும் அமெரிக்கப் படைத் தளங்களைக் கொண்டிருக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மிலேச்சத்தனமான ஒரு மாதகாலக் குண்டு வீச்சுகளின் விளைவான முன்னென்றுமில்லாத அழிவுகளுக்கு மத்தியிலும் கூட அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்ற உறுதிப்பாட்டுடன் ஈரான் அடிபணியாமல் நிற்பது உலகை வியக்க வைக்கிறது. எந்த நேரத்தில் எந்த விதமாக நடந்து கொள்வார் என்றோ அல்லது பேசுவார் என்றோ கூறமுடியாத, தான்தோன்றித்தனமான பேர்வழியான ட்ரம்ப் போர் நிலைவரம் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை உலகினால் நம்ப முடியாமல் இருக்கிறது. போரில் அமெரிக்கா ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது என்று ஒரு தடவை கூறிய அவர் சில நாட்கள் கழித்து ஹோர்முஸ் நீரிணையைத் மீண்டும் திறப்பதற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு மற்றைய நாடுகளை குறிப்பாக, வட அத்திலாந்திக் ஒப்பந்த இராணுவக் கூட்டணியின் (நேட்டோ) உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் போரில் இணைந்து கொள்வதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டன. போர் தொடங்கியதற்கு பிறகு முதற்தடவையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்ப் தனது வேண்டுகோளை நிராகரித்தமைக்காக நேட்டோ நாடுகளை கடுமையாகக் கண்டனம் செய்தார். திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே போரில் அமெரிக்கா வெற்றியை நோக்கிச் செல்வதாக அமைச்சரவையில் கூறிய அவர் உடன்பாடொன்றுக்கு வருவதற்கு ஈரான் தன்னைக் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் . இதனிடையே, ஈரானுக்கு எதிரான போர் மாதங்களில் அல்ல வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அதன் இராஜாங்க அமைச்சர் மக்றோ ரூபியோ கடந்த வெள்ளக்கிழமை பிரான்சில் ஜி- 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின்போது கூறியிருக்கிறார். ஹோர்முஸ் நீரிணைபை் பயன்படுத்துவதற்கு கப்பல்களுக்கு கட்டணம் அறவிடும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஈரான் தீர்மானிக்கக்கூடும் என்று அவர் அங்கு செய்த எச்சரிக்கை அந்த நீரிணையை திறப்பதற்கு மற்றைய நாடுகளின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதை உண்ர்த்துகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது இன்னொரு பின்னடைவுப் போராக அமையப் போகிறது என்பதையே இதுவரையான நிகழ்வுப்போக்குகள் கட்டியம் கூறுகின்றன. அதனால், ஈரானை மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்காக அதன் இராணுவ மற்றும் பொருளாதாரக் கடமைப்புக்களை இயன்றவரை நிர்மூலம் செய்வதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைப்புக் காட்டக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதற்கு பதிலடியாக வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்ததில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளமே அழியப் போகிறது. போருக்காக இதுவரையில் அமெரிக்காவுக்கு 30 — 40 பில்லியன் டொலர்களும் இஸ்ரேலுக்கு 300 மில்லியன் டொலர்களும் நாளொன்றுக்கு செலவாகுவதாக ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு ஈரான் எந்தவிதமான உடனடி ஆபத்தையும் தோற்றுவித்திருக்கவில்லை என்றும் இன்றைய போர். இஸ்ரேலின் தயாரிப்பு என்றும் கூறி போர் தொடங்கிய மூன்று வாரங்களில் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு நிலையத்தின் பணிப்பாளரான ஜோ கென்ற் தனது பதவியை இராஜினாமா செய்தமை போரை தொடங்கியமைக்காக ட்ரம்ப் தனது நிருவாகத்திற்குள் எந்தளவுக்கு அதிருப்தியை எதிர்நோக்குகிறார் என்பதைக் காட்டுகிறது. 2025 ஜூலையில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட குடியரசு கட்சிக்காரரான கென்ற், “இஸ்ரேலிடமிருந்தும் அதற்கு ஆதரவான செல்வாக்குமிக்க யூத ஆதரவுக் குழுக்களிடமிருந்தும் வந்த நெருக்குதலின் விளைவாகவே இந்தப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவானது. இதை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் படைகளை தரைப் போரில் இறக்கியதன் விளைவாக அதன் வரலாற்றில் பெற்ற படுமோசமான அனுபவங்களில் இருந்து அமெரிக்கா இன்னமும் படிப்பினை எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாகுவை அவர் அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். https://arangamnews.com/?p=12792
-
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம் Mar 31, 2026 - 04:51 PM அரசாங்கத்தினால் முறையான இடமாற்ற நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் குறித்து இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த முறையான இடமாற்றச் செயல்பாட்டின் மூலம், குறிப்பிட்ட சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல வைத்தியர்களுக்கு நீதி கிடைத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: "மே 10ஆம் திகதியாகும் போது சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 13 வருடங்களாக இவ்வாறான முறையான நடைமுறை ஒன்று இடம்பெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்ததாகக் கூறிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் 13 முதல் 17 வருடங்கள் வரை தங்கியிருந்தனர். கண் வைத்தியசாலையில் இருந்தவர்கள் தமக்குரிய தேசிய வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் வீதியைக் கடக்கக் கூடத் தயங்கினர். இவ்வாறான அனைத்து முறைகேடுகளையும் நிறுத்தி, வருடாந்த இடமாற்ற நடைமுறையை நாம் முன்னெடுத்து வருகிறோம். இதனால் நீண்டகாலமாக அநீதிக்குள்ளாகியிருந்த பெரும்பான்மையான வைத்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகளை தமக்கு விருப்பமான இடங்களில் பல வருடங்களாகத் தங்க வைத்திருந்தவர்களே இதனை எதிர்க்கின்றனர். எனவே, இந்த இடமாற்ற நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். 2018ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விசேட பட்டியல் ஒன்று இருந்தது. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் அந்தப் பகுதிகளுக்கு வைத்தியர்களை அனுப்புவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்து 8-9 வருடங்கள் ஆகியும் அதனை நிறுத்த யாரும் முயற்சிக்கவில்லை. 2020இல் இது 'கஷ்டப் பிரதேசப் பட்டியல்' என மாற்றப்பட்டது. சுகாதார அமைச்சு இதற்காக 7 பிரதான அளவுகோல்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தச் சங்கத்தின் அழுத்தத்தினால் அந்தப் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன. இம்முறை சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களை இணைத்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அந்த 7 அளவுகோல்களின் அடிப்படையில் புதிய கஷ்டப் பிரதேசப் பட்டியலைத் தயாரித்துள்ளோம். இந்தப் பட்டியலைத் தயாரிக்க சுகாதார அமைச்சுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை. அது தொழிற்சங்கங்களின் வேலை அல்ல, சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதன்படி 265 இடங்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சங்கங்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை." https://adaderanatamil.lk/news/cmneivj6q0005356pmhh7gmgd
-
அரசாங்கத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிக நஷ்டம்: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது
அரசாங்கத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிக நஷ்டம்: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது Published By: Digital Desk 1 31 Mar, 2026 | 10:07 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர், அதிக வருமானம் ஈட்டும் நபர் ஒருவருக்கு விவசாயி என்ற தகுதியின் கீழ் போலியான வருமானச் சான்றிதழை வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 10,625,000 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளித்தரப்பு நபர் ஒருவருக்கு நிதி ஆதாயங்களையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஊழல் நடவடிக்கையை அவர் முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (30) மதியம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது. https://www.virakesari.lk/article/242368
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்ன பிரதிவாதத்தை வைத்தார்கள்.................... அது தூய்மையா அல்லது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமா................ அந்த 15 கோடி தனியே நடந்த ஒரு ஒற்றைத் தவறு அல்ல............ ஒவ்வொரு படத்துக்கும் இவர்கள் இப்படியே செய்கின்றார்கள்............... வாங்கிய சொத்துகளின் பத்திரப் பதிவுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அங்கேயும் சீமான் போன்றே இவர்கள் எல்லோரும் நடந்து கொண்டிருப்பார்கள்.............. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்கும் ஒரு விடயம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கின்றாரா, விஜய்.................. தூய்மை, நேர்மை என்றால் அங்கிருந்தும் ஆரம்பிக்கலாம் தானே............... லெஜண்ட் சரவணன் இந்த தேர்தலில் நின்றால், அவர் தன் சொத்துகளை காட்டியே ஆகவேண்டும். அவருக்கு வேறு வழியே கிடையாது. இதையே தான் விஜய்யும் செய்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு பினாமிகள் ஆரம்ப நாட்களில் இருந்தே இருக்கின்றார்கள். சாமியார்கள், பெரிய சாமிகள் கூட அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கின்றார்கள். ஆனால் விஜய்க்கும், லெஜண்ட் சரவணனுக்கும் இதுவரை பினாமிகள் இல்லை. ஆனால் இவர்கள் அரசியலில் சம்பாதிக்கும் போது இவர்களும் பினாமிகளை உருவாக்கிக் கொள்வார்கள். 'அவர்கள் காசாக கொடுத்தால், நாங்கள் மாஸாக கொடுப்போம்.................' என்று விஜய் நிற்கும் தொகுதிகளில் தவெகவினர் பெண்களுக்கு மூக்குத்தி கொடுக்கப் போகின்றார்கள். கூவம் ஆற்றின் நடுவில் தான் விஜய்யும் குளித்துக் கொண்டு நிற்கின்றார். விஜய் போன்று புதிதாக அரசியலுக்கும் வருபவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான விடயம் என்னவென்றால் ஊழலை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே, ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, மிகவும் பரிச்சயமான அவர்களின் துறைகளில் இருக்கும் ஊழல், அநீதிகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். கமல் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சுருக்கமாகச் சொன்னால், விஜய் ஒரு மாற்றுச் சக்தியே கிடையாது. இவரும் அவர்களில் ஒருவரே. அதைவிட இவர் அறிமுகப்படுத்தும் 'வொர்த்தே இல்லை.................' போன்ற முன்னுதாரணங்கள் இவரது ரசிகர்களை சீரழிக்கவே போகின்றது. ஸ்டாலின் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு.................. 2001ம் ஆண்டில் இவரது நண்பர் ரமேஷும், அவரது குடும்பமும் தற்கொலை செய்து கொண்டார்கள்............... அரசியல்வாதிகளின் ஈவிரக்கம் அற்ற பினாமி உலகம்........... ஜெயலலிதாவுக்கும், சங்கராச்சாரியாருக்கும் கூட இதுவே தான் தகராறு என்று அன்று பேசப்பட்டது............
- Today
-
முத்து என்கிற காட்டான்: மனிதம் பேசும் மர்மத் தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல்
தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'. ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ போன்ற முக்கிய படைப்புகளை தந்து ரசிக்க வைத்த இந்த கூட்டணி, முதன்முறையாக ஓடிடி களத்தில் இறங்கியிருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 10 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டெடுக்கும் புள்ளியில் தொடங்கி, அவனது மர்மமான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கிறது. தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள காவல் நிலையம், வழக்குகள் ஏதுமின்றி மூடப்படும் நிலையில் இருக்கிறது. அப்போது ஊரின் ஒதுக்குப்புறத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தலை கண்டெடுக்கப்படுகிறது. கூடவே, ஒரு பையில் கட்டுக் கட்டாக பணம், ஒரு கடிதமும் கிடைக்கிறது. அந்தத் தலைக்குச் சொந்தக்காரர் முத்து (விஜய் சேதுபதி) என்பது தெரியவருகிறது. தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல் ஹெட் கான்ஸ்டபிள் காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் தலைமையிலான குழு, முத்துவின் பின்னணியை விசாரிக்கத் தொடங்குகிறது. இந்தத் தேடலில் முத்துவின் வாழ்க்கை ஒரு ரோலர்-கோஸ்டர் பயணம் போல தமிழகம் தாண்டி கேரளம் வரை விரிகிறது. அவர் ஒரு டான்ஸ் குழுவில் டிரைவர், கடிகாரம் பழுதுபார்ப்பவர்ம், யானைப் பாகன், ஆட்டுப்புழுக்கை விற்பவர் எனப் பல முகம் கொண்டவராக பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார். உண்மையில் யார் இந்த முத்து என்கிற காட்டான்? அவர் ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த வெப் தொடர். இயக்குநர் மணிகண்டன் தன் வழக்கமான ஸ்லோ பர்னர் பாணியை இதிலும் கையில் எடுத்துள்ளார். ஆனாலும் எந்த இடத்திலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. கான்ஸ்டபிள் காளையாக வரும் வடிவேல் முருகனின் வாழ்க்கையிலிருந்து தொடங்கும் கதை, அடுத்தடுத்து பல அடுக்குகளாக விரிந்து நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. முத்துவின் வாழ்க்கையை அவசரமின்றி, ஒவ்வொரு பக்கமாக பிரித்துக் காட்டுவதில் திரைக்கதையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதல் ஐந்து எபிசோடுகள் முத்து யார் என்கிற மர்மத்தைத் தக்கவைப்பதில் செவ்வனே செயல்படுகின்றன. இருப்பினும், பிந்தைய எபிசோடுகளில் திரைக்கதை சற்றே தடம் மாறி, கேங்ஸ்டர் பாணிக்குள் நுழைவது பார்க்கும் நம்மை சடாரென வேறொரு மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுவது நெருடல். குறிப்பாக, கேரளாவில் நடக்கும் விசாரணை பகுதிகள் ஒரு புலனாய்வு தொடரைப் போல அல்லாமல், முத்துவை பற்றிய ஒரு ஆவணப்படத்தை நேர்காணல் செய்வது போலவே நீள்கின்றன. காவல் துறையினர் உண்மையான விசாரணை நடத்துவதை விட, முத்துவுடன் பழகியவர்களிடம் பேசுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவது திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கிறது. விஜய் சேதுபதி் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இன்றி, மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒருபுறம் காட்டான் என்று அழைக்கப்பட்டாலும், மறுபுறம் அவர் காட்டும் எல்லையற்ற மனிதாபிமானம் நெகிழ வைக்கிறது. அதற்காக தொடர் முழுக்க ஏராளமான உணர்வுபூர்வமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் முதியவரை அதே ஹோட்டலுக்கு முதலாளியாக்கும் காட்சியை சொல்லலாம். தொடர் முழுக்கவே அவரது அட்டகாசமான நடிப்பு கதையின் கனத்தைத் தாங்கி நிற்கிறது. வடிவேல் முருகனுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இதில் நகைச்சுவையுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், வடிவேல் முருகனின் குடும்பம் தொடர்பாக வரும் காட்சிகள், எபிசோடுகளை நகர்த்த மட்டுமே உதவி இருக்கிறதே தவிர, அவற்றால் திரைக்கதைக்கு எந்தப் பயனும் இல்லை. அவரது மனைவியாக வரும் விஜே பார்வதிக்கும் அவரது மாமியாருக்கும் இடையிலான சில காட்சிகள் மட்டும் ஈர்க்கின்றன. இயக்குநர் பாலாஜி சக்திவேல் கிராமத்து சேட்டைக்கார பெருசுகளை கண்முன் நிறுத்துகிறார். அவர் பேசும் சில வசனங்கள் குபீர் ரகம். இவர்கள் தவிர மிலிந்த் சோமன், முத்துகுமார், சிங்கம் புலி, சுதேவ் நாயர், அயலி அபி நக்சத்ரா, ரிஷா ஜாகோப் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக, இந்தத் தொடரின் ஒளிப்பதிவு கிராமப்புற எழிலை மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. பின்னணி இசை குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கதையின் தீவிரத்தை உணர உதவுகிறது. எடிட்டிங் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 10 எபிசோடுகளாக நீண்டிருக்கும் இந்தக் கதையை 8 எபிசோடுகளுக்குள் சுருக்கியிருந்தால் அதன் தாக்கம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். வெறும் 26 நிமிடத்துக்கு ஒரு எபிசோட் ஓடுகிறது. கெட்டவார்த்தைகள் தேவையின்றி திணிக்கப்பட்டதாக தோன்றுகின்றன. ‘முத்து என்கிற காட்டான்’ சீரியசான காட்சிகள் கொண்ட வழக்கமான க்ரைம் த்ரில்லர் அல்ல. ஒவ்வொரு எபிசோடிலும் முத்துவின் வாழ்க்கையை ஆடியன்ஸுக்கு புரிய வைத்து, நெகிழ்வான தருணங்கள் கொண்ட ஒரு ஸ்லோ பர்னர் முயற்சி. மணிகண்டனின் முந்தைய படங்களின் தரத்தோடு ஒப்பிடும்போது சில சறுக்கல்கள் இருந்தாலும், இந்தத் தொடரை தாராளமாகப் பார்க்கலாம். மணிகண்டனின் முந்தைய படங்களின் ரசிகர்களுக்கு இது ஒரு திருப்திகரமான அனுபவமாக அமையும். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. https://www.hindutamil.in/news/ott-platform/ott-review/muthu-alias-kaattaan-review
-
நீளீரா - Trailer
‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது என பலர் நடித்துள்ள படம், 'நீளிரா'. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன், தன் வலியை, தன் நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படம் வெறுப்பை பேசவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படமல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. இந்தப் படம் யாரையும் நேரடியாக விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்புக்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களைத் தான் பதிலாக சொல்ல முடியும்" என்றார். ‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஓ...உக்ரேன் திரியிலா? அது பிராந்திய அரசியல் ஆதிக்கம் பற்றி வரும் போது ஒரு ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டதே தவிர இந்தியா செய்தது சரி எனும் தொனியில் எழுதவில்லை. பிராந்திய அரசியல் ஆதிக்கம் ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு கோணங்களில் இருக்கும். எல்லா நாட்டு ஆதிக்கங்களையும்/ஆக்கிரமிப்புகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. இதையும் அந்த உக்ரேன் திரிகளில் எழுதியிருந்தேன். அண்ணாக்கள் வாசிக்கல போல ஈழத்தமிழருக்கென இன்றிருக்கும் ஒரு தமிழ் அரசியல் தலைவர் பெயரை சொல்லுங்கள்.அதன் பின்னர் அனுர பற்றி விவாதிக்கலாம். இலங்கையின் வட பகுதியில் அனுரவை தேர்ந்தெடுத்தது வாக்களித்தது அந்த பகுதி மக்களே ஒழிய நீங்களோ நானோ அல்ல. புலம்பெயர் மக்களும் அல்ல. அல்லது வாக்குக்கு பணம் செலுத்தி வந்தவரும் அல்ல அனுர. எல்லாம் பல இன்னல்களையும் அனுபவித்தவர்களும் தமிழ் அரசியல்வாதிகளின் உண்மை முகம் தெரிந்தவர்களாலும் தேர்தெடுக்கப்பட்டவர் தான் அனுர.அனுரவிற்கும் ஒரு அவகாசம் கொடுக்கலாம் என்று சொன்னேனே தவிர அனுரவிற்கு ஆதரவு என நான் எங்கும் எழுதியதில்லை. உங்கள் அடுத்த உருட்ட சந்திக்கும் வரை.....
-
மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது
மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல். Published By: Digital Desk 3 31 Mar, 2026 | 05:04 PM மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளை இட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் தனக்கு நடந்த அவலத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, சம்பவ தினத்தன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்புக்கு செல்வதற்காக வவுணதீவு சந்தியில் என் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வயோதிபப் பெண்ணொருவரும் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். நான் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது, 100 ரூபாய் என்ற கட்டணத்தில் ஏறுமாறு கூறினர். நான் குழந்தையுடன் ஏறினேன்; அங்கு இருந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார். முச்சக்கரவண்டி நகரை நோக்கி சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கினார். பின்னர், “நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது, நான் புடவைக்கடை வீதியில் இறக்குமாறு கூறினேன். அங்கு சென்றபின், முச்சக்கரவண்டியில் இருந்த பெண் தானும் சாறி வாங்கச் செல்ல இருப்பதாகவும், தனது வேலை முடிந்ததும் மீண்டும் அதே வண்டியில் சேர்ந்து செல்லலாம் என்றும் கூறினார். மேலும், “சத்தர் கடையடியில் காத்திருப்பேன்” என்றும் தெரிவித்தார். அதன்படி, நான் குழந்தையுடன் நகைக்கடைக்கு சென்று ஈடு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபாய் செலுத்தி மீட்டுக்கொண்டேன். பின்னர் அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றபோது, அவர் முச்சக்கரவண்டி சாரதியை தொலைபேசியில் அழைத்து, மணிக்கூட்டு கோபுரம் பகுதியில் வருமாறு கூறினார். நானும் அந்த பெண்ணும் அங்கு சென்று மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏறினோம். அதன் பின்னர் பொதுசந்தை வீதியில் சென்று வண்டியை நிறுத்திய சாரதி, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வவுணதீவு நோக்கி பயணித்தார். வலையிறவு பாலம் அருகே சென்றபோது, அந்த பெண் மூன்று ஜூஸ் பாட்டில்களை எடுத்தார். எனக்கும் என் குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, எனக்கு விளாம்பழ ஜூஸ் வழங்கினார். அதை நான் குடித்தேன். அதன் பின்னர் வவுணதீவு சந்தியில் அந்த பெண் இறங்கினார். அதன்பின், தாள் கத்தியுடன் ஒரு இளைஞன் முச்சக்கரவண்டியில் ஏறினார். நான் இதைப் பற்றி கேட்டபோது, “மாட்டுக்கு புல் வெட்டச் செல்கிறார்” என்று கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்குமாறு தெரிவித்தேன். ஆனால், முச்சக்கரவண்டி வேறு பாதையில் பாவற்கொடிச்சேனை நோக்கி சென்றது. நான் காரணம் கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாக கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன். நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?" என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன். இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், "அம்மா, அம்மா" என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?" என்று கத்தினேன். அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் | Virakesari.lk
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இவர்களை வைத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலுக்கு கீழால் சரங்கப்பாதை அமைக்கலாமே.
-
புலவர் started following நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
அங்கிள்கள் மாறி..மாறி முதுகு சொறிந்து கொண்டு இருக்கும் போது… இதென்ன…இப்படி லொஜிக்கலா கேள்வி கேக்கிறியள்😂. நீங்கள் சொன்னது மட்டும் அல்ல, உக்ரேன்- MBS பேச்சு, ஒப்பந்தத்தை தம்பர் ரசிக்கவில்லையாம். ஆனால் எமது பாதுகாப்பு எமது முடிவு என சவுதி கறாராக சொன்னதாம். அதுதான் தம்பர் சவுதி இளவரசர் என் பின் பக்கத்தை முத்தமிட வேண்டும் என பகிரங்கமாக உளறியவர். அதேபோல் அண்மைய நாட்களில் உக்ரேன் இன்னும் சில பகுதிகளை விட்டு ரஸ்யாவை விரட்டி வேறு உள்ளது. ஒரு சின்னச் சமன்பாடு மேற்கின் ஆயுதத்தை மட்டும் வைத்து உக்ரேன் 4 வருசமா செத்த கிளிக்கு சோறு தீத்துது. ஆனால் அதே ஆயுதங்களின் 100 மடங்கை கொண்டு அமெரிக்காவால், ஈரானை வெல்ல முடியவில்லை. முடிவு: கொள்கை பிடிப்புள்ள மக்கள் + சமயோசிதமான, கொள்கைக்கு நேர்மையான தலைமை இருந்தால் - எந்த கொம்பன் வந்தாலும், வீழ்த்துவத் கடினம். ஆனால் இதை எல்லாம் சொன்னால் யாழில் அங்கிள் மாருக்கு பிபி ஏறிடும். உக்ரேன் ஓவர்…செலனஸ்கி க்கு பீவர் எண்டு எழுதினால், நல்லா முதுகு சொறிந்து விடுவார்கள்😂
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார். நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில். இப்போ யாழில் முன்பை போல் விடயங்களை search பண்ண முடிவதில்லை. இதே பலருக்கு வசதியாய் போய் விட்டது. அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.- அதிசயக்குதிரை
Sdreopontsfi30323mg5i9a:1g s1m72cac1 021689cr6l82 te00à 72L7 · ரு I.T மேனேஜர் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?. நரகமா? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீட்டு கணிணியிலும் வைரஸை புகுத்தி விட்டு விட்டாய். அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன். உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். " "நல்லது கடவுளே! ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்!, வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்! " "அப்படியே செய்வோம் எமதர்மராஜா! வாருங்கள் போகலாம்" நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஐடி மேனேஜர். இதுவா நரகம்?. தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி. "ஆஹா! அருமை! " இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை. " என்று ஐடி மேனேஜர் சொன்னபோதும் "வா சொர்கத்தை பார்க்கலாம். " என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன். அங்கே, நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க. அருமை. ஆனால் மேனேஜருக்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை. நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் ஐடி மேனேஜர். "உன் விருப்பம்", எமன். இரண்டு வாரங்களுக்குப் பின், ஐடி மேனேஜர் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார். அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் ஐடி மேனேஜரை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். "எப்படி இருக்கே?" என்றான் எமன். ஐடி மேனேஜர் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில், "முடியல. நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?" எமன் சொன்னான், "அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !!!" 😂" All that glitters are not gold, How many of us are believing this >?? Voir la traduction.....!- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதே தான் உறுதியாக நடைபெறும் அந்த ஊழல் மோசடி அழுகிய வாசனை இலங்கைக்கும் வீசும். நாம் தழிழர் பாசறையில் இருந்து வந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் சீமான் வீட்டு மாத வாடகை 3 இலட்சம் / ஒரு மில்லியன் இலங்கை ரூபா / 3200 டொலர் என்று குற்றம் சாட்டுகின்றார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத சீமான் வேலைக்கு செல்லாத மனைவி. முன்பு நமது உறவு வீரபையன் தெரித்திருந்தார் சீமான் மனைவி செல்வந்தர் ஆனால் பல சொத்துக்கள் இப்போது செல்வம் வந்து தான் வாங்கபட்டுள்ளன என்பதை காண முடிகின்றது- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அருமை ஐயா. அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். குண்டர்களை ஏவி விட்டு கழுத்தை பிடிக்கவைத்த பின், அவரை கேள்வி கேட்க விடுங்கள் என சீமான் சொன்னது… கட்டுமரத்தின் உண்ணாவிரத டிராமாவின் தரத்துக்கு நிகரானது… இதை விளங்கி கொள்ளாதவர் போல் சிலர் இங்கே யாழில் நடிப்பது… கட்டுமரம், சீமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் ஆஸ்கார் நடிப்பு.- குட்டிக் கதைகள்.
tposrondeSia22 g0i65002u43lsLmu7à1 ef5r6hc4m :75326902haa16 · 🚗" ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. அற்புதம் என்றார் மேலாளர்.. இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்.. முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது.. காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. ஆஹா.. இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்.. காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் .. இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே.. இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்.. அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று.. ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு.. வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்.. அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி.. வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.. ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே.. Voir la traduction.....!- நீளீரா - Trailer
Trailerஐப் பார்க்கும் போதே படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. சோமிதரன் குழுவினருக்கு வாழ்த்துகள்👏🏽- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும். அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்? யார் குணா கமல்? ஓ கமலகாசன் நடித்த குணா திரைப்படத்தை சொல்ல வருகின்றீர்களா? அது நல்லபடமாச்சே? கண்மணி அன்போட காதலன் பாடலும் அருமையோ அருமை😎- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சீர்காழியார் போலவும் இருக்கின்றது . ..... அவருக்கு பல கிளைகள் கிடையாது......அவர் ரோல்ராய்ஸ்,ரோலெக்ஸ் மாதிரி...... ரி . எம் . எஸ் சுக்கு எம் . ஜி.ஆர் ......சிவாஜி என்று பல கிளைகள் உண்டு.....அதனால் அவர் சீர்காழி போலவும் ட்ரை பண்ணியிருக்கலாம் . .......! 🙂 உங்களை வரவேற்பதில் இந்தத் தளம் பெருமையடைகிறது ......... நன்றி கவி ......! நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ .........! 😍 பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்.....!- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 31.03.2026
-
கருத்துப்படம் 30.03.2026
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
- சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!
சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்! Published By: Digital Desk 1 31 Mar, 2026 | 09:42 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய மின்னணு கட்டமைப்பு, இன்று காலை 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/242364 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.