Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (09)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும், அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை | Virakesari.lk
  3. கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம் --- --- --- *அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்! *டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்... *மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை... --- --- --- மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார். கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அத்துடன் --- தென்னிந்தியாவின் பெருங்கற்கால (Megalithic) வரலாறுகளை மேற்கோள் காண்பித்து ஆயிரம் ஆண்டு காலம் என்று கூறி, வரலாறுகளை திரிபுபடுத்தி சிங்களவர்கள் - ஆரியர்கள் என்ற இரு இனமும் இரடடையர்கள் (Twin civilization) அதாவது ”இரட்டை நாகரிகம்” என வரலாற்றை மாற்றியவர், இந்த மிலிந்த மொறகொட. 2009 இல் இறுதிப் போர் நடைபெற்ற போது இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல், மிலிந்த மொறகொட உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவை உருவாக்கி, போரில் தமிழர்களைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான பணிகள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்ததாக, மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இவை பற்றி எல்லாம் எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் நான் பல தடவை சுட்டிக்காட்டி வருகிறேன். அக் கட்டுரைகள் இப்போதும் பொருந்துகின்றன. கூர்மை இணையத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்களிலும் உண்டு. எனது முகநூலிலும் பார்க்கலாம். அன்று மிலிந்த கையாண்ட அதை அணுகுமுறையை இன்று அநுர அரசாங்கமும் கையாளுகின்றது. அதன் காரண - காரியத்தோடு தான் இப் படத்தை இன்று மீள்பதிவு செய்தேன். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், சிங்கள தலைவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று தான் செயற்படுவர் என பல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கிய பல நேர்காணல்களிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். ஆனால் -- தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள், தேர்தல் அரசியல் நோக்கில் மாத்திரமே ஒன்றினைவது அல்லது அப்படியான தோற்றத்தைக் காண்ப்பிக்கின்றனர். ஆனால், இந்தியாவை எப்படி கையாள்வது, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தான் பிரச்சினைக்குரியது. ஆனாலும், பாஜாக அரசாங்கத்தை அணுகுவது பற்றிய உத்தி ஒன்றை வகுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் பொருத்தமான பரிசோதனை செய்யப்படதாக தெரியவில்லையே? இப்போது காலம் கடந்து விட்டதே? ஆனால் சிங்கள தலைவர்கள், ஜேஆர் காலத்தில் இருந்து, இன்றைய அநுர வரையும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமதித்த குரலாகக் கையாண்டு வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு துணிவோடு நேர்காணல் வழங்கிய பின்னர் தான், டில்லியில் மிலிந்த தூதுவராக பதவியேற்றிருந்தார். மிலிந்த எடுத்து வைத்த அதே அடியைத் தான், ரில்வின் சில்வா சென்ற மாதம் இந்தியாவுக்கு சென்று இன்னும் ஒருபடி மேலே காய் நகர்த்தியிருக்கிறார். அதேவேளை, இதே மிலிந்ததான், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சு நடைபெற்றபோது, உலகம் எல்லாம் சென்று, தமிழர்களின் போராட்டம் ”இனவாதம்” ”பயங்கரவாதம்” என்று கூறி இராஜதந்திரப் பிரச்சாரம் செய்தவர். ஆகவே -- 2009 ஆம் ஆண்டு புவிசார் அரசியலும், 20026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றமான சூழலும், இலங்கைக்குச் சாதகம் தான். ஈரான் கப்பல் விவகாரத்தை அநுர கையாண்ட விதம் முட்டாள் தனமானது என சில விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் -- இந்திரா காந்தி காலத்தில் இருந்து புதுடில்லி, கையாளும், இரட்டைத் தன்மையான சர்வதேசக் கொள்கைக்குள் (Dual International Policy) புகுந்து கொண்டு தான், இலங்கை சீவியம் நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இரட்டை சர்வதேசக் கொள்கை என்பது புவிசார் அரசியல் சூழலைப் பொறுத்து) இந்திரா காந்தி காலத்தில் இருந்து, டில்லி முழு மனதோடு தமிழர் பக்கம் இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மலையகத் தமிழர் விடத்திலும் இந்தியா ஒப்பாசாரமான தலையசைப்புத் தான். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b7rQtxsCbX5VCgouPij4QhUnKt2yo2fq96hhFXneu86dcJ3PDkxKTmUpPXjVPgYbl&id=1457391262&mibextid=wwXIfr
  4. லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது?] அமெரிக்கா லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கியதா ஈராக்கில் சதாம் என்ற சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் யுகே அவுஸ்ரேலியா போன்ற மேற்கு நாடுகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து பங்குபற்றின
  5. Today
  6. சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையில் அந்த மக்கள் இப்போது. சுதந்திரம் என்று கூவிக்கொண்டு போனவர்கள், அந்த மக்களை அந்தர வழியில் அம்மோ என்று விட்டு வெளியேறிவிட்டார்கள் தங்கள் வேலை முடிந்தவுடன். ட்ரம்பும் நெதன்யாகுவும் பதவி விலக வேண்டுமென அவர்களது மக்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
  7. இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!
  8. சரியான காசு தான்.... ஆதலால் தான், கை பொருத்தினாக்கள் குறைவோ, என்ன?
  9. சந்தேகம் சின்னதாக இருந்தாலும் தொகை பெரிது. 35,000 யூரோ
  10. பகிர்வுக்கு நன்றி... சின்ன சந்தேகம்: ஒரு கை செய்ய 30,000-35,000 யூரோ வா இல்ல 35000 ரூபாய் ஆ ஐயனே
  11. நன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்
  12. repSodsntofafclg325il477h 29hh2f4fith621m0umm1f2titihml0fi1l · தோனி என்னடா பண்ணினார் தோனி என்னடா செஞ்சார் என்று எல்லோரும் கேட்கிறார்கள் இன்னிக்கி தோனி இல்லனா இந்தியா உலகத்துல இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளில் தோல்வியே பெற்று வந்த இந்திய அணி கபில்தேவ் க்கு பிறகு முதன்முதலாக உலக கோப்பையில் முத்தமிட வைத்தவன் அவன் அதன்பின் ரோகித் சர்மாவும் இறுதிவரை சென்று கடைசி கட்டத்தில் தவறவிட்டார் ஆனாலும் அதற்கு இணையான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 என்ற இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் தோனிக்கு பிறகு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இப்படி இரண்டு சாம்ராஜ்யத்தின் கீழ் உருவான இந்த இந்திய அணி இப்போது இன்னொரு கோப்பையை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது தோனி இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டி ஜெயிக்கும் அதற்கு அவர் களத்தில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கிடையாது. மைதானத்தில் இருந்தாலே போதும் தோனி என்பது வெறும் பெயரல்ல அது ஒரு மந்திரம் ஆனால் தோனி மற்றும் ரோகித் என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கும் மிகப் பெரிய ஜாம்பவான் என்றால் அது ஹரியானாவின் சூறாவளி கப்பில் தேவ் அவர் விளையாடிய காலத்தில் நாம் கிரிக்கெட் பார்க்கவில்லை நான் பிறக்கவில்லை என்பதால் அவரின் புகழ் எனக்கு அந்த அளவுக்கு தெரியாமல் போய்விட்டது மூன்று ஜாம்பவான்களுக்கும் வெற்றி வணக்கத்தை இந்திய அணி இந்த கோப்பையை வென்று கொடுக்கும் MS Dhoni.....!
  13. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும். பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
  14. வெற்றிபெற்றநியூபலன்சுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை திறம்படநடத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.நான் கோசானின் வீட்டை ஆட்டையைப்போடுவன் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். @goshan_che
  15. காதல் என்பது எதுவரை ....... ஜெமினி & சந்திரபாபு ......படம் : பாதகாணிக்கை .......! 😂
  16. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்......! --- ஆத்தாடி பாவாட காத்தாட ---
  17. முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!
  18. வெற்றியாளர் நியூபலன்ஸ்சுக்கும் 2வது இடத்தைப்பிடித்த கந்தப்புவுக்கும் வாழ்த்துகள்.போட்டியைத்திறம்பட நடத்திய கிருபன்ஜீக்கும் திரியைத் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.
  19. தமிழ்நாட்டில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விஷயம் ஒரு குடும்பப் பிரச்சினை. இதைப் பற்றி கருத்து சொல்லும்போது சில சமநிலைப் பார்வைகள் இருக்க வேண்டும். நேரடியாக சட்டம் அல்லது வன்முறை போன்ற பெரிய பிரச்சினையாக இல்லையெனில், ஒரு கணவன்,மனைவி இடையேயான பிரச்சினை பொதுவாக தனிப்பட்ட விஷயம். பொதுமக்கள் முன்னால் அதை வெளிப்படுத்துவது அழகல்ல.. அதனால் பலர்,குடும்ப விஷயம் தனிப்பட்டதாக இருக்க வேண்டும், என்று நினைப்பது இயல்பானது. விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கலாம். விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். அதனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசியல் விவாதமாக மாறுகிறது அல்லது அவரது எதிரிகளால் மாற்றப்படுகிறது. பொதுவாக மக்கள், தலைவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயம் இல்லை. பல தலைவர்களுக்கும் இது நடந்திருக்கிறது. உண்மையில் சங்கீதாவுக்குப் பிரச்சினை இருந்தால் அதை வெளிப்படுத்த அவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரம் போன்ற அரசியல் சூழலில் பொது வெளியில் இதை கொண்டுவருவது அரசியல் தாக்கமா? அல்லது ஒரு பழிவாங்கலா? இன்றைய காலத்தில், சமூக வலைத்தளங்கள் ஒரு விஷயத்தை விரைவாக பெரிதாக்கிவிடும். உண்மை, வதந்தி, ஊகம் எல்லாம் இரண்டரக் கலந்து போய்விடும்.அதனால் வெளியில் வரும் தகவல்களை முழுமையாக உண்மை என்று உடனே நம்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது.குடும்பப் பிரச்சினைகள் பொதுவாக தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படுவதுதான் சிறந்தது. ஆனால், ஒருவர் பெரிய பொது நபராக இருந்தால் அது பொதுவாக பேசப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இப்படி இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒருவரை மட்டும் குற்றம் சொல்லாமல் இரு தரப்பையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை. விஜய் சினிமாவில் இருந்தபோது அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமே. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. கமலஹாசனைப் பார்த்தால், அவரது குடும்பப் பிரச்சினை எப்படி என்பது பலருக்குத் தெரியும். அரசியலில் அவர் ஈடுபட்ட போது அவை பேசப்பட்டன. ஆனால் இன்று அது பேசு பொருளாக இல்லை. அவரது அரசியல் ஒரு மையத்துக்குள்ளே அடங்கி விட்டதும் ஒரு காரணம். மற்றது அவர் திமுகவின் கைப்பிள்ளை. விஜய் இன்று அரசியலில் பலமான ஒரு இடத்திலேயே இருக்கிறார். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் இல்லை. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பேசப்பட்டது. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நட்சத்திரம். பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரது திருமணம், குடும்ப வாழ்க்கை, மலயாளி போன்றவை பல காலங்களில் அரசியல் விவாதமாக பேசப்பட்டன. அவர் முதலமைச்சர் ஆன பிறகு எல்லாமே காணாமல் போய்விட்டது. இதுவேதான் ஜெயலலிதாவுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சோபன்பாபுவுடனான உறவு எல்லாம் பேசினார்கள். அவர் ஆட்சிக்கு வந்தபின் அவரை ‘இரும்பு மனுசி’ என்றார்கள். ‘அம்மா’ என்று காலிலும் விழுந்தார்கள். பெண்களுக்கான உரிமை இருக்கிறது. அவர்கள் No என்று சொன்னால் அது Noதான் என்ற நிலை இன்றிருக்கிறது. தனது உரிமைக்காகப் போராடுவது சங்கீதாவின் உரிமை. அவர், தனது மன உளைச்சலுக்கோ, விவாகரத்துக்கோ எப்போதே நீதி மன்றம் போயிருக்கலாம். ஆனால் காத்திருந்து, விஜயை வீழ்த்துவதற்கு எதிரிகளிடம் தேர்தல் நேரத்தில் ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொடுத்திருக்கின்றார். நிழலி குறிப்பிட்டது போல் 8% வாக்குகள்தான் விஜய்க்கு கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு அதைவிட மேலதிகமாகக் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.
  20. இன்று, ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக போர் புரியும் இஸ்ரேல், அமெரிக்கா அன்று, எம்மினம் அழியும் போது தடுக்க வேண்டாம் குரலாவது கொடுத்ததா? எங்களை அழிப்பதற்கு ஆயுதம், ஆலோசனை, கடன் அளித்து, இலங்கை புலனாய்வுப்பிரிவினருடன் ஒத்துழைத்து, தகவல்களை அளித்து, நம் விடுதலை இயக்கம் அழிக்கப்படும்வரை உதவியது எவ்வாறு? ஏன் எமது சுதந்திரத்தை தடுத்தார்கள்? அப்போ அவர்களுக்கு தேவையான வளங்கள் நம்மண்ணில் இல்லை, இனிவருங்காலத்தில் இந்துசமுத்திரத்தில் தமது போர்கப்பல்களை நிறுத்த வேண்டுமெனில் அதற்கு இலங்கையரசு அனுமதி மறுத்தால் நமது ஜனநாயகம் பற்றியும் பேசுவார்கள். கடந்த காலங்களில் அரேபிய நாடுகளோடு கூடிக்குலாவும்போது அமெரிக்காவுக்கு இது தெரியவில்லையோ? இப்போ திடீரென்று என்ன கரிசனை வந்தது? அமெரிக்காவின் உண்மை நோக்கம் கண்டு, அவர்கள் விலகிக்கொள்வதால் இல்லாத பொய்களை பரப்புகிறார்கள். லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது? ஒசாமா பின்லேடனை வளர்த்ததே அமெரிக்கா, பின் எப்படி மாறியது? ஏன், அமெரிக்கா, இஸ்ரேலிடம் அணுஆயுதம் இல்லையா? அதையும் அழிக்கவேண்டியதுதானே. வெனிசுலாவை ஏன் இரண்டாக்கியது அமெரிக்கா? அவர்கள் தங்கள் புற்றுக்குள் இருந்தார்கள், அவர்களை வெளியே இழுத்து விட்டதே அமெரிக்காதான். இப்போ ட்ரம்ப் சொல்கிறார், ஈரானில் மத ஆட்சி நடந்தாலென்ன, ஜனநாயக ஆட்சி நடந்தாலென்ன அதுபற்றி கவலையில்லை, ஈரான் எங்களோடு இணைந்து செயற்படவேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். இங்கே எங்கேயும் அவர் ஜனநாயத்தை பற்றியோ அணு ஆலை பற்றியோ குறிப்பிடவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.