All Activity
- Past hour
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
"புலிகள் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி நாடாக தமிழீழம் கேட்டார்கள் அதை அவர்கள் தமிழ் தேசியம் என்றால் அது மிகச் சரியானது" - இங்கே ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் கருத்து இது. அதற்கான எனது எதிர்வினை தவறான அல்லது பகுதியளவில் மட்டுமே பார்க்கப்படுகின்ற ஆனால் இன்று பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தின் ஒருபகுதி மட்டுமே இது. ஐந்து குருடர்கள் யானையினை எப்படி விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். யானையின் தும்பிக்கையினை மட்டுமே பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் தும்பிக்கை மட்டுமே. அவ்வாறு யானையின் வாலைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் அதன் வால் மட்டுமே, அவ்வாறே யானையின் காதினைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் காது மட்டுமே. யானையின் கால்களில் ஒன்றைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் மொத்தமான கால் மட்டுமே. யானையின் வயிற்றைப் பிடித்துப் பார்த்தவனுக்கு யானை என்றால் வெறும் வயிறு மட்டும்தான். அவ்வாறே இதுவும், தமிழ்த்தேசியம் என்றால்ப் புலி, புலி என்றால் தமிழ்த்தேசியம் - ஏன், புலிகளின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ்த்தேசியம் என்று ஒன்று இருக்கவில்லையோ??? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. இது புரியாமையினால் கூறப்படுகின்றதா அல்லது வேண்டுமென்றே சொருகப்படுகின்றதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஈழத்தமிழர்களின் தேசியம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள உண்மையாகவே விழைகின்றவர்களுக்கு சிறு உதவி, இலங்கை தமிழ்த் தேசியவாதத்தின் ஐந்து முக்கிய கூறுகள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கென தனித்துவமான மொழி (தமிழ்), பண்பாடு, மத மரபுகள் மற்றும் சமூக வழக்கங்கள் கொண்ட ஒரு சமூகமாக இருப்பதாக வலியுறுத்துவது. வரலாற்றுப் பாரம்பரிய தாயகம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன என்ற கோட்பாடு. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் கொள்கைகளுக்கு எதிரான எதிர்வினை சிங்களம் மட்டுமே அரச மொழியாக்கம், கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பாகுபாடு போன்ற சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுக் கொள்கைகளால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்ற உணர்விலிருந்து உருவான இயக்கம். அரசியல் தன்னாட்சி / சுயநிர்ணய உரிமை தமிழர்கள் தங்களுடைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் தாங்களே தீர்மானிக்கும் உரிமை பெற வேண்டும் என்ற கோரிக்கை (மத்தியிலான கூட்டாட்சியிலிருந்து தனி அரசியல் அதிகாரம் வரை). பல்வேறு வெளிப்பாடுகள் மற்றும் பாதைகள் தமிழ்த் தேசியவாதம் ஒரே வடிவில் இல்லாமல், அமைதியான அரசியல் இயக்கங்களிலிருந்து ஆயுதப் போராட்டங்கள் வரை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தமிழ்த்தேசியம். வெறுமனே புலிகள் கோரிய தமிழரின் தாயகம் மட்டும் அல்ல. உங்களின் தவறான திரிபுகளைத் திருத்துங்கள்.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
செபஸ்டியான் என்றால் சீமான?
-
முகாமுகம் நூல் முன்னுரை
வருடத்தின் முதற் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் ஏமாற்றங்களை அளிக்கவில்லை என்பதே நிறைவானது. நட்சத்திரன் செவ்விந்தியன் தனது ஒரு சிறுகதையை கனலிக்கு முன்பே அனுப்பியிருந்தார். அச்சிறுகதையில் விரவிப் படர்ந்திருந்த பாலியல் சொல்லாடல்களும் அதன் போக்குகளும் எனக்கு நிறைவைத் தரவில்லை என்பதால் அதை கனலியில் வெளியிடவில்லை. பின்னர் அச்சிறுகதை மற்றொரு தளத்தில் வெளியாகி அவருக்குக் கணிசமான கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றுத் தந்தது. வே.நி.சூர்யாவின் வழியாகவே எனக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் அறிமுகமானார் என்று நினைக்கிறேன். அவரது ஆரம்பகாலக் கவிதைகள் தமிழ்ச் சூழலில் ஓரளவு கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றிருந்தன என்றே நம்புகிறேன். அதற்குப் பிறகு அவர் கவிதை எழுதுவதை விட்டுவிட்டார். தற்போது புனைவுகள் வழியாகத் தனக்குள் அமர்ந்திருக்கும் கவிஞனின் எல்லைகளை அவர் விரிவாக்கியிருக்கிறார். ‘முகாமுகம்’ அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. மேலோட்டமாகப் பார்க்கும்போது தொகுப்பின் அனைத்துக் கதைகளும் புலிகளின் அரசியல், அவர்களின் விடுதலைப் போராட்டம், அதில் வெளிப்பட்ட பாசிசப் போக்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உரையாடுவது போலத் தோன்றினாலும், அதை மீறி ஒவ்வொரு கதையிலும் வெளிப்படும் வரம்புக்குள் அடங்க மறுக்கும் கலைத்தன்மைதான் தொகுப்பைக் கவனமாக வாசிக்க வைக்கிறது. நட்சத்திரன் செவ்விந்தியன் தான் புலிகளின் கூண்டில் வாழாதவன் என்று கூறுகிறார். ஆனால் அக்கூண்டில் வாழாத ஒருவரால் எப்படி அச்சூழலில் வாழ்ந்து மடிந்த போராளிகளின் துயரங்களையும், சில சமயங்களில் அச்சூழல் வெளிப்படுத்தும் பாசிசப் போக்குகளையும் இவ்வளவு ஆழமாகவும் நுண்ணியமாகவும் எழுத முடிந்துள்ளது என்பது வியப்பூட்டும் விடயமாகவே உள்ளது. தொகுப்பிலிருந்து மேலோட்டமாகப் படர்ந்திருக்கும் புலித்தோலை உரித்துவிட்டு, அதை இன்னும் கூர்ந்து வாசிக்கும்போது நமக்கு வெளிப்படுவது பல்வேறு மனிதர்களின் இயலாமைகள், போதை மீதும் காமம் மீதும் அவர்கள் கொள்ளும் மையல், தாங்களாகவே தேடிக்கொள்ளும் தனிமை, அதன் வழியே அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் போன்றவைதான். இன வேறுபாட்டு அரசியலும் ஆயுதப் போராட்ட அரசியலும் மனிதர்களிடமிருந்து நிலத்தை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வியல் மீதான நம்பிக்கைகளையும் சிதைக்கின்றன. அச்சிதைவுகள் முதலில் அவர்களின் நம்பிக்கைகளை மறுக்கச் செய்கின்றன; பின்னர் உலகின் அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் ஒருவிதத் துண்டிப்பை ஏற்படுத்தி, அவர்களை இவ்வுலகின் அன்பிலிருந்தும் அரவணைப்பிலிருந்தும் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ அல்லது சிக்கலான மனிதர்களாகவோ மாற்றிவிடுகின்றன. இத்தொகுப்பில் வெளிப்படும் அனைத்து மனிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ அல்லது சிக்கலான மனிதர்களாகவோதான் உள்ளனர். தாங்கள் நேசித்த அமைப்பையும் அதன் தலைவர்களையும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் மறக்க அவர்களால் இயலவில்லை; அதே சமயம் இத்துன்பத்திலிருந்து தப்பித்து, பிழைத்து, வாழ்வை முன்னோக்கி நகர்த்தவும் அவர்களால் முடியவில்லை. உண்மையில் இத்தொகுப்பு தன் முழுமையான கலைத்தன்மையைப் பூர்த்தி செய்து நிவர்த்தி அடையும் இடங்கள் இவையே. இவ்விடங்களில் வெளிப்படும் பகடியும், துயரமும், கயமையும் தொகுப்பைத் தொய்வின்றி எடுத்துச் செல்கின்றன. சில குறைகளும் தொகுப்பில் ஆங்காங்கே தென்படுகின்றன. தேவையற்ற சில வார்த்தைகள் அல்லது காட்சி மீறல்கள் (உதாரணமாக “வேறு லெவல்” போன்ற சொற்கள்), கால அளவில் கதைகள் சிக்கிக்கொள்ளும் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. நல்லொரு எடிட்டர் இருந்திருந்தால் தொகுப்பு இன்னும் மெருகேறியிருக்கும் என்றே தோன்றுகிறது. இரண்டாவது குறை — நட்சத்திரன் செவ்விந்தியன் தன் ஆக்கங்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பாலியல் சொற்களும் அதற்கு அவர் அளிக்கும் உருவங்களும் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டதாகவோ அல்லது கதையின் போக்குக்கு எவ்விதப் பயன்பாடும் இல்லாதவையாகவோ தோன்றுகின்றன. இது என் மற்றொரு விமரிசனம். ஆயினும், தனக்குள் உலவும் கவிஞனை அவர் இன்னும் மறக்கவில்லை என்பதற்கு ஒவ்வொரு கதையிலும் சில கணங்கள் சாட்சியாக உள்ளன. அந்தக் கணங்கள் வழியாகவே இத்தொகுப்பு தன் இலக்கியத் தடத்தை இன்னும் கூர்மையாகத் தேடிக் கண்டடைகிறது. க. விக்னேஸ்வரன் (ஆசிரியர், கனலி இலக்கிய இதழ்)
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, சின்ன சின்ன வேலைகள் செய்து விட்டே பனர் அடித்து விளம்பரம் செய்கிறார்கள். நான் விளம்பரத்தை விட பலருக்கு அடிப்படைச் சுகாதார வசதி கிடைக்கலாம் என்ற விருப்பத்திலும் நன்கொடையாளர்களை ஈர்க்கலாம் என்ற கருதுகோளிலும் இதனை முன்வைத்தேன். படங்களை விட காணொளிக் காட்சிகளின் தாக்கம் கூடவாக இருக்கும். சதுர அடி 100 - 120 ரூபாவிற்குள் வரும் அண்ணா. (3*4=12*120=1440 ரூபா) ஆனால் எல்லோரும் சம்மதித்தால் செய்வோம். இருப்பு 200,970.67-33225=167,745.67 சதம் இன்று 23/01/2026 ரூபா 33200 வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. வங்கி மீதி சரி முன்னாலுள்ள கணக்கு பிழையாக இருந்தது, திருத்தி விட்டேன்.
- Today
-
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு – முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம்.. ஆனால் மன்னிக்க முடியாது; ரவூப் ஹக்கீம் Photo of Madawala News Madawala News
தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் முரணாக இல்லை யாழ் முஸ்லிம்கள் பற்றிய நூல் வெளியீட்டில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு “ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்” என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருகின்ற விடயம். இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் அன்றிருந்த ஒஸ்மானியா கல்லூரியின் இன்றைய நிலையை பார்த்தால் அதைவிடவும் கூட வருத்தப்படுகிற ஒரு நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.” என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற,கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய “முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் ” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, ஒஸ்மானியா கல்லூரி என்பது இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் கலங்கரைவிளக்கம் என்று சொல்லுகிற அளவிற்கு புகழ்பெற்ற ஒரு கலைக்கூடமாக இருந்த இடம்,இன்று குறுகிப்போய் இருக்கிற ஒரு நிலைமையை பார்க்கிறோம். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் ஜின்னாஹ் மைதானம் என்று ஒன்று இருக்கிறது. ஜின்னாஹ் மைதானம் சாமான்யமான இடமல்ல, முஹம்மது அலி ஜின்னாஹ் வந்துபோன இடம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த சூழலில் கடந்தகால விடயங்களைப் பற்றி பேசுவது மனதிற்கு ஒரு சுமையான விடயம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 திகதி வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இங்கு தலைமை வகிக்கிற சகோதரர் என்.எம் அமீன் , விடுதலைப் புலிகளின் தலைவரிடம், அவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த சூழலில் அன்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒரு பிரபலமான கேள்வியை யெழுப்பினார். அந்த கேள்வி எழுப்பப்பட்டபோது விடுதலைப் புலிகளின் தலைவர் அங்குமிங்குமாக பார்த்துவிட்டு, அவருடைய மதியுரைஞர் அண்டன் பாலசிங்கத்திடம்கூட எதையும் பேசவில்லை,எடுத்ததெடுப்பில் சொன்ன விடயம் “அது ஒரு துன்பியல் சம்பவம்,அதைப்பற்றி நாங்கள் இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை” என்பது இன்று ஒரு வரலாற்று பதிவாக மாறிவிட்டது. அன்றிலிருந்தது இன்றுவரை யாழ் முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம் ; ஆனால் மன்னிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இதை மாறிமாறி வருகிற தற்கால அரசியல் தலைமைகளும் ஆங்காங்கே ஏதாவது சொல்லப்போனால் ஏட்டிக்குபோட்டியாக அவர்கள் மீதும் சீறிப்பாய்கிற ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது என்பதுதான் கவலைகுரிய விடயம் . இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நான் உங்களிடத்தில் சொல்லவேண்டும், வேறு எந்த பொதுமேடையிலும் இதை சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை, தனிப்பட்டமுறையில் பலரிடம் இதை நான் சொல்லியிருக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலைவரை நான் சமரசப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் சார்பில் அவரையும்,அவருடைய குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் செய்த சமயத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஒரு சாமான்யமான வரவேற்பு அல்ல. ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்கிறமாதிரி எங்களுக்கு வீதியெங்கிலும் இரு புறத்திலும் புலிகளுடைய பெண் போராளிகள் அவர்களுடைய மரியாதை நிமித்தம் ,எல்லோரும் அடிக்கிற சலியூட் அல்ல வலது கையை நெஞ்சுக்கு நேராக செங்குத்தாக வைத்து சலியூட் தெரிவித்தார்கள்.இப்படி ஒவ்வொரு 50 அடி தூரத்திலும் ஒருவராக நின்று எங்களுக்கு பெரியதொரு மரியாதையளிக்கப்பட்டது. கைலாகு கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை தொடங்கி கிட்டத்தட்ட நான்கு-ஐந்து மணித்தியாலங்கள் நாங்கள் கதைத்திருப்போம். யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய ஒரு விருந்துபசாரமும் நடந்தது. பேச்சுவார்த்தை நடுவில் இன்னுமொரு முக்கியமான விடயமும் நடந்தது. நண்பகல் 12.20 மட்டில் பேச்சுவார்த்தையின் இடை நடுவில் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார் “இப்பொழுது நாங்கள் பேச்சுவார்த்தையை கொஞ்சம் இடைநிறுத்தி உங்களுடைய தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது, நீங்கள் தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், தொழுதுவிட்டு வாருங்கள்” என்று சொன்னார். நாங்களும் ஆச்சரியப்பட்டுப்போனோம். எங்களுக்கு தூரபயணம் என்ற காரணத்தினால் கஸ்ர்,ஜம்மு அதாவது சேர்த்தும்,சுருக்கியும் செய்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்த எங்களுக்கு உரிய (வக்து )நேரத்தில் தொழுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களிடம் சொல்லுகிறாரே என்று நாங்களும் கொஞ்சம் பிரமித்துப்போனோம். தொழுகை முடிந்த பிறகு எங்களுக்கு விமர்சையான ஒரு விருந்துபசாரம் நடந்தது.அதில் எல்லாவிதமான மாமிசங்களும் இருந்தன. எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்: “யோசிக்கவேண்டாம் ,அது உங்களுடைய மார்க்கப்படி நாங்கள் அதை தயார் பண்ணியிருக்கிறோம் ” என்றாலும் கொஞ்சம் தயங்கினோம்,”கொஞ்சம் இருங்கள் அவரைகூப்பிடுங்கோ” என்றதும், நீண்ட தாடி,வெள்ளை சேர்ட்டோடு ஒருவர் வந்தார், கொஞ்சம் சந்தேகமாக இருந்ததால் நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றதும் வலைக்கும் ஸலாம் சேர்’ என்றார். அத்துடன், “நான்தான் சேர், தலைவருடைய சமையல்வேலையெல்லாம் பார்க்கிறேன், இவ்வளவு காலமும் அவரோடுதான் இருக்கிறேன்”என்றார். பிரபாகரனும் “அவர்தான் எனக்கு சமைப்பவர், அவருடைய கைகளால்தான் உங்களுக்கும் சாப்பாடு என்றார். எங்களுடைய வன்னி அமைச்சராக இருந்த நூர்தீன் மஷூரும் வந்திருந்தார்,அதாவுல்லாஹ் வந்திருந்தார்,மசூர் மௌலானா போன்றவர்கள் இருந்தார்கள். நாங்கள் ஐந்து,ஆறு பேர் போயிருந்தோம். இவற்றையெல்லாம் நான் சொல்கிறேன் . இன்னுமொரு விடயத்தையும் விடுதலைப் புலிகளின் தலைவர் எனக்கு சொன்னார், தான் இந்தியப் படையினரிடம் தப்பி ஓடி ஒழிந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறபோது சிலாபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தன்னை பாதுகாப்பாக ஒழித்துவைத்திருந்ததாகவும்,அதைத் தான் வாழ்வில் ஒரு போதும் மறக்கப் போவதில்லை என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் பார்கிறபோது ஏன் இந்த விதமாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள் என்பதிலும் எங்களுக்கும் கொஞ்சம் சந்தேகம்தான். அதையெல்லாம் கேட்கிற நிலைமையில் இல்லை,நாங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக எங்களுடைய பேச்சுவார்த்தையில் மிக அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்ன விடயம், வடபுலத்து முஸ்லிம்கள் எல்லோரையும் மீளக்குடியமர்வதற்கு விடுதலைப் புலிகள் எல்லாவற்றையும் செய்யவேண்டும்,அது மாத்திரமல்ல அந்த நேரம் நடந்துகொண்டிருந்த இன்னுமொரு மிக கஷ்டமான ஒரு விடயத்தை நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சொன்னோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம் வியாபாரிகளிடம் வரி விதிக்கிற ஒரு நடைமுறை இருந்தது.ஏனென்றால், புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் எல்லா தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய ஆதிக்கம் இயல்பாகவே வந்துவிட்டது என்றொரு நிலையில் ,எல்லா இடத்திலும் வரி வசூலிக்கிற மாதிரி முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கிற ஒரு நிலைவரம் இருந்தது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. அதை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம் ,அதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்.”நாங்கள் இந்த போராட்டத்திற்கு வரி வசூலிக்கிற ஒரு நடைமுறை இருக்கிறது. வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கிற பிரதானமான நகரங்களில் நான்கு,ஐந்து தமிழ் கடை இருந்தால் இன்னுமொரு முஸ்லிம் கடை இடையில் இன்னுமொரு முஸ்லிம் கடை அப்படி இருக்கும் போது தனிய தமிழ் கடைகளுக்கு போய் நாங்கள் வரி வசூலிப்பது எங்களுக்கு கொஞ்சம் சங்கடமான விடயம், எனவே அதை நீங்கள் கொஞ்சம் பொருந்திக்கொள்ளவேண்டும்” என்றார். அதற்கு நான் அவரிடத்தில் சொன்ன விடயம், “முஸ்லிம்களை பொறுத்தமட்டில், உங்களுடைய போராட்டம் முஸ்லிம்களுக்காகவும் சேர்த்து செய்யப்படுகிறது என்ற உணர்வு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது, இந்த சூழலில் நீங்கள் அவ்வாறு வரி வசூலிப்பது வரியாக இல்லாமல் கப்பமாக பார்க்கப்படுகிற ஒரு நிலைவரம் இருக்கிறது ” என்பதையும் நான் கொஞ்சம் தயக்கத்தோடாவது சுட்டிக்காட்டவேண்டிய ஒரு நிலைவரம் இருந்தது. சொன்ன மாத்திரத்திலேயே “நீங்கள் சொன்னது சரிதான். நாளையிலிருந்து எந்த முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கப்படமாட்டாது” என்றார். அப்பொழுது பக்கத்திலிருந்த கிழக்கு தளபதிகள் கொஞ்சம் அதில் விருப்பக்குறைவுமாதிரி தென்பட்டாலும் கூட, தலைவர் சொல்லிவிட்டார் என்றவுடனே வேறு யாரும் மறுத்துப் பேசவில்லை. அதற்கு பிறகு தலைவருடைய கட்டளையை மீறி அவ்வாறு சில இடங்களில் நடந்தபோது, நான் அடிக்கடி தமிழ் செல்வனோடு தொலைபேசியில் உரையாடி முறையிடுகிற நிறைய நிகழ்வுகளும் நடந்தன .இவற்றையெல்லாம் நான் ஏன் நினைவுகூறுகிறேன் என்றால் இந்த பின்னணியில் நல்லதொரு உடன்பாடு முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையில் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக பல விடயங்களை கையாண்டோம் என்பதற்காகத்தான்.துரதிர்ஷ்ட வசமாக அந்த நிலையெல்லாம் தலைகீழாக மாறி ,இன்று வரலாறு வேறு விதமாக விடயங்களைத் தீர்மானித்துவிட்டது. இவையெல்லாம் நான் எதையும் நியாயப்படுத்துவதற்காக சொல்லுகிற விடயமல்ல, குறிப்பாக முஸ்லிம்களுடைய,வடமாகாணத்தின் வெளியேற்றம் என்பது புலிகளுடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய ஒரு வடு என்பதை புலிகளே உணர்ந்திருந்தார்கள் என்பது தெட்டத்தெளிவான விடயம் மாத்திரமல்ல ,அடிக்கடி நேர்மையான தமிழ் தலைமைகள் அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் இங்கு பெயர் சொல்லி எதையும் சொல்லவரவில்லை.ஆனால் இதுதான் இன்றிருக்கிற நிலைவரம், அதைத்தான் நான் சொன்னேன். முஸ்லிம்கள் மத்தியில் இது மறக்கப்பட்டாலும் மன்னிக்கப்படமுடியாத ஒரு விவகாரம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் என்னுடைய மறைந்த தலைவர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களுடைய போராட்டங்களின் அடிப்படை அம்சங்களில் எங்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் சில முரண்பாடுகள் வருகின்றனவோ நாங்கள் அதைப்பற்றி பேசுகிறபோதும் இவர்களுடைய அடிப்படை அபிலாஷைகளுக்கு முரணாக அது வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். எதிர்வரும் 24 ஆம் திகதி கனடாவில் இருக்கிற எல்லா ஈழத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நான் தைப்பொங்கள் விழாவில் பிரதம அதிதியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கு போனாலும் இந்த விவகாரங்களில் இருக்கிற சில துல்லியமான உண்மைகளை நாங்கள் மனம் விட்டுபேசாமல் இருப்பது என்பது நாங்கள் செய்கிற மிகப்பெரிய வரலாற்று தவறாகப் போய்விடும் என்பதற்காகத்தான் இந்த ஒருசில விடயங்களை நான் இங்கு சொல்லிவைக்கிறேன். இவற்றை சொன்ன பிறகும் விமர்சிப்பவர்கள் இரு புறத்திலும் இருப்பார்கள், இதுதான் இருக்கிற நடைமுறைச் சிக்கல், இனத்துவ அரசியலில் இப்படியான விவகாரங்களை ஜீரணித்துக்கொள்வது என்பது சில தரப்புகளுக்கு மிகவும் சங்கடமான, கஷ்டமான விவகாரமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மிகப்பெரும் ஆளுமைகளில் சிலரைப் பற்றிய விடயங்களை கொண்டாடுகிற விதமாக இந்த நூல் எழுப்பட்டிருக்கிறது. அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அடிக்கடி என்னுடைய நினைவுக்கு வருபவர்.அவரது புதல்வர் நண்பர் அலி அஸீஸ் ஒருமுறை என்னை ஏ.எம்.ஏ அஸீஸ் நினைவு பேருரையாற்றுவதற்கு அழைத்திருந்தார்.அந்த உரையை நான் கவனமாக தயார் செய்தபோது ,எனக்கு கைதந்த ஒரு நூல் அவருடைய மகன் வெளியிட்டுவைத்த “ஏ.எம்.ஏ அஸீஸ் செனட் உரைகள்” என்ற ஒரு தொகுப்பு. இலங்கையின் செனட் சபையின் உறுப்பினராக10,12 ஆண்டுகள் இருந்தவர். ஸாஹிராவின் அதிபராக, இலங்கையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட நிருவாக சேவை அங்கத்தவராக என்றெல்லாம் இருந்தவர். அதுவும் நிருவாக சேவை அங்கத்தவர் என்ற பதவியை ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவியை எடுப்பதற்காக இராஜினாமா செய்தவர், அப்படியான ஒரு மிகப் பெரிய தியாகத்தை யாரும் செய்யமுடியாது.ஸாஸாஹிராவுடைய பொற்காலம் அஸீஸுடைய காலம் என்று அடிக்கடி நாங்கள் கேள்விப்படுகிறோம்; பேசுகிறோம். அவருடைய நினைவு பேருரைக்காக அவருடைய செனட் உரைகளுடைய தொகுப்பை நான் இன்றும் கூட என்னுடைய கைநூல் போன்று வைத்துக்கொண்டிருக்கிறேன்.அவர் செனட் சபையில் கதைத்த பேச்சுக்களுடைய கனதி என்பது என்னைப்பொறுத்தவரையில் அவருக்கு முன்பும்,பின்பும் எவருடைய பேச்சுக்களுக்கும் எந்தத்தரத்திலும் குறைவில்லாததாக, தரமான ஆய்வின் அடிப்படையிலான உரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். அவர் இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்துடைய ஸ்தாபகர் .அவர் மடவளைக்கு வந்து அந்த காலத்தில் ,50 களில் என நினைக்கிறேன். அதன் கிளையை அங்கு ஆரம்பித்தபோது என்னுடைய தகப்பனாரும் அதனுடைய செயலாளராக இருந்திருக்கிறார் என்பது எனக்கு பெருமைக்குரிய விடயம். அதேபோன்று, நான் இன்னும் பெருமைப்படுகிற விடயம் அதாவது யாழ் மக்கள் பெருமைப்பட்டுக்கொள்கிற விடயம் அடுத்த நிருவாக சேவை உத்தியோகத்தர் மறைந்த மக்பூல் . மக்பூல் அவர்கள் நான் கல்வி கற்ற கலகெதர ஜப்பார் மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் எனக்கு பெருமை தருகிற அடுத்தவிடயம். ஏன் இவர்களையெல்லாம் நாங்கள் கொண்டாடுகிறோம். இப்படி கொண்டாடப்படக்கூடிய அந்தஸ்தில் இருக்கிற மிகப் பெரிய ஆளுமைகளை உருவாக்கிய ஒரு மண் இன்று வெறிச்சோடிப்போய் இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்கு எப்படி உயிரோட்டம் அளிப்பது? அன்று யாழ் முஸ்லிம்கள் வியாபாரத்தில் உச்சநிலையில் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல ,சில துறைகளில் அவர்கள்தான் அங்கு யாழ்ப்பாணத்தில் தையல் கடை என்றால் எல்லாம் முஸ்லிம்கள்தான்.இரும்பு வியாபாரிகள் என்றால் முஸ்லிம்கள்தான். இப்படியாக அவர்களுக்கென்றே தனித்துவமான வியாபார நோக்கங்கள் இருந்தன. செயல்பாடுகளும் இருந்தன. இவற்றையெல்லாம் பெருமையாகப் பேசுகிறபோது, நாங்கள் யாழ்ப்பாணம் போகிறபோது பொம்மைவெளிக்கு போனால் மூர் வீதிக்குபோனால் அங்கிருக்கிற கட்டிடங்கள் மீண்டும் உயிரோட்டமாகத் தென்பட்டாலும் இடைக்கிடையில் பாலடைந்த இல்லங்களைப் பார்க்கிறபோது அவை ஒரு தனியான வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அந்த வலியைச் சுமந்த உணர்வு மற்றும் அந்த கொடூரமான ஓக்டோபர் 1990 இன் நினைவுகள் இன்றும் வருகிறமாதிரிதான் நாங்க மூர் வீதிக்கு போனால்,பொம்மைவெளிக்கு போனால் எங்களுக்கு வருகிறது என்பது ஒரு விடயம். அனால் இவற்றையெல்லாம் அந்த விவகாரங்களைக்கூட இங்கு எவற்றையும் நண்பர் பரீட் இக்பால் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் சொல்லியாகவேண்டும்.ஏ,னென்றால் அதை தவிர்த்து நாங்கள் யாழ் முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசமுடியாது. அந்த மண் முஸ்லிம்கள் வாழ்ந்த மண் மீண்டும் உயிர்த்தெழவேண்டும் .அதற்கு இன்றும் கூட பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டிருக்கின்றன. அவை நிருவாக ரீதியாக இருந்தாலும் சரி, அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி சிக்கல்கள் இல்லாமலில்லை. மீள்குடியேற்றம் என்று பேசுகிறபோது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு விசேடமான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைக்கிற பொறுப்பும்,கடமையும் எங்கள் தரப்பிலிருந்து மாத்திரமல்ல ,தமிழர் தரப்பிலிருந்தும் வரவேண்டும். அவற்றையெல்லாம் தாண்டிப்போய், சந்ததிகள் பல கடந்து விட்ட நிலையில் யாழ் முஸ்லிம்கள் அங்குமிங்குமாக சில்லாங்கொட்டை சிதறின மாதிரி வாழுகின்ற ஒரு நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடைவு எதிலும் பெரிதாக குறைந்துபோய்விடவில்லை என்றார். https://madawalaenews.com/35691.html
-
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு - GMOA Jan 28, 2026 - 05:40 PM வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkxzhh7v04jlo29n50upxzrd
-
யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தின் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! Jan 28, 2026 - 02:31 PM யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியில் வசிக்கும் வைத்தியர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், யாழ்ப்பாணப் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதன் காரணமாக அப்பகுதியில் காற்று மாசடைவு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து காற்று மூலமாக அடித்து வரப்படும் கழிவுகள் காரணமாகவும் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவின் தன்மையைக் காட்டும் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி, இந்தக் காற்று மாசடைவு காரணமாக நோய் நிலைமைகள் தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் உத்தரவிட்டது. இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள யாழ்ப்பாண மாநகர சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து ஏன் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறான பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இவ்வாறான விடயங்களை வழக்குகள் மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkxsptxy04j8o29n1phy2xpz
-
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 28 Jan, 2026 | 03:24 PM உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்கள் பாடசாலை பாடத்திட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், அவை பிள்ளைகளின் நடத்தையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற "உணவுத் துறையில் சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் (2024-2027)" என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் 'குளோபல் கேட்வே' (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்: கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது 'சுழற்சி பொருளாதாரம்' (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும். இன்று நாம் 'Circular Economy' என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார். இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். 'எதனையும் வீணாக்காதிருத்தல்' என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது. இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும். சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸே (Dr. Johann Hesse), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் கார்மென் மொரேனோ (H. E. Carmen Moreno), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237251
-
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உயர் பதவிகளில் அமர்வது இன்னும் உங்கள் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரிவது தான் ஆச்சரியமான விடயம். இப்படியான பின்னணியில், ஒற்றை எஞ்சின் செஸ்னாவை ஓட்டி விட்டு "முதல் தமிழ் விமானி" என்பதும், உள்ளூராட்சி சபையில் தவிசாளர் பதவியைப் பெற்று விட்டு, "மாநில முதல்வர்" என்று பெருப்பிப்பதும் நகைப்பிற்குள்ளாக்கப் படுவது நடக்கும் தானே? தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த (உங்கள் பாசையில்) "மோட்டுச்" சிங்களவர்களும் வெளிநாடுகளில் உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல ஆய்வுப் பல்கலைக் கழகமான Caltech இன் அடுத்த தலைவர் ஒரு இலங்கை சிங்களவர்! California Institute of TechnologyRay Jayawardhana Appointed Caltech's Tenth PresidentThe Johns Hopkins University provost, renowned astrophysicist, and award-winning author will begin as the Institute's leader on July 1, 2026.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம். கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான். அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம். அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலி!!!
-
அறிமுகம்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
-
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
உள்ளேன் ஐயா😂
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் 19 வயது தலைமை மாணவ தலைவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு ஆசிரியர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள வீடியோ கடந்த வாரம் கசிந்துள்ளது, இதனால் நான்கு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அதே நேரம் அந்த மாணவனது மாணவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அவரது நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடசாலையின் Head Prefect. படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டில் வீரன், ஆசிரியர்களுக்குப் பிடித்தமான கீழ்ப்படிதலுள்ள மாணவன். சுருக்கமாகச் சொன்னால் "Perfect Gentleman". 2025-2026 ஆம் ஆண்டின் அந்தத் தலைமைப் பதவியை அவன் ஏற்கும் போது முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டியது. ஆனால் அந்தப் புனிதமான சீருடைக்குள்ளே ஒளிந்திருந்த மற்றொரு முகம் யாருக்கும் தெரியாது. அது அவனுடைய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எப்படி காலம் மாறிவிட்டது என்று பாருங்கள், புனிதமான ஆசிரியர்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு ஆசிரியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துயுள்ளார்கள். Crimenews
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 3 நண்பர்கள் இதுவரைக்கும் எனக்கு இவ் வீடியோக்களை அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துக் கொள்கின்றேன். அதில் ஒருவர் இந்த சம்பவம் நிகழ்ந்த நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் (சிங்கள நண்பன்).
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
இப்போதைக்கு இலங்கை கடவுச்சீட்டு.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
- அறிமுகம்
வணக்கம்.- பராசக்தி - சுப.சோமசுந்தரம்
பொதுவாக வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவது சவாலானதாகவே இருந்து வருகிறது. கப்பலோட்டிய தமிழன், சிவகங்கைச் சீமை போன்ற படங்களை இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தனித்துவமான இடத்தைப் பெற்றது. பந்துலுவின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, சக்தி கிருஷ்ணசாமியின் காலம் கடந்தும் நிலைக்கும் வசனங்கள், சிவாஜி கணேசனின் மேன்மையான நடிப்பும் வசன உச்சரிப்பும், மேலும் அந்தப் படம் வர்ணத்தில் வெளியானதும் அதன் வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தன. தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எடுத்துக்கொண்ட கருவைத் தெளிவாக முன்னிறுத்தாமல் கதை திசைமாறி எங்கெங்கோ பயணிக்கிறது. மேலும், நடிகர்கள் பாத்திரங்களாக மாறாமல், நடிகர்களாகவே திரையில் தோன்றுகிறார்கள். சில இடங்களில் நாங்கள் இப்பொழுது ‘மாஸ்’ சினிமாதான் பார்ககிறோம் என்ற நிலைக்கு எங்களைத் தள்ளி விடுகின்றது. உதாரணமாக, சிவகார்த்திகேயனை அடித்து வீழ்த்திய பிறகு “அவனை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரவி மோகன் கூறிவிட்டு ரயிலில் பயணிக்கிறார். ஆனால் அடுத்த கணமே அதே ரயிலில் சிவகார்த்திகேயன் தோன்றி சண்டை போடுவதைச் சொல்லலாம் “இப்போதைய தலைமுறைக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த தகவலை இந்தப் படம் வழங்கியுள்ளது” என்று பேராசிரியர் சு.ப. சோமசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனவரி 13ஆம் தேதி கொழும்பு Havelock Cityஇல் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது திரையரங்கின் நிலை அதற்கே சாட்சியாக இருந்தது. பத்தோடு பதினொன்றாக வந்துள்ள ஒரு திரைப்படமாகவே பத்தோடு பதினோராவது ஆளாக பராசக்தியைப் பார்த்துவிட்டு திரும்பினேன். எனக்குப் படம் பிடிக்கவில்லை. நான் சங்கியும் இல்லை நடிகனை தலைவனாக, கடவுளாக கொண்டாடுபவனும் இல்லை. ஆனால் ஒரு நடிகனை முன்னிறுத்தி அவர் மூலமாக ஆட்சிக்கு வந்ததுதான் திமுக. 67இல் திமுக வென்றபோது அமைச்சர்களது பட்டியலை எம்ஜிஆரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தவர்தான் அறிஞர் அண்ணா. எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளதாததால் ஆதித்தனாருக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போனதும் வரலாறு. பேராசிரியர் திமுக அபிமானி என்பது ஏற்கனவே நான் தெரிந்து வைத்திருக்கிறேன். சுபவீ வரிசையில் சுபசோ வையும் சேர்த்துக் கொள்ளலாம்.- IMG_9447.jpeg
- IMG_9458.jpeg
- IMG_9459.jpeg
- IMG_9460.jpeg
- அறிமுகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.