Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.
  3. தமிழ்நாட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று IANS நடத்திய கருத்து கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 % வரை பெற்று வெற்றி பெறும் என்றும் திமுக 38 % விஜய் கட்சி 15 % வரை என்றும் தெரிவித்துள்ளது. https://www.oneindia.com/chennai/tamil-nadu-election-poll-pre-poll-survey-who-will-win-the-elections-matrize-predictions-out-8028131.html
  4. நீங்களும் முன்னைய நிலையில் தற்போது இல்லை🤣. நான் எப்போதும் ஒரே நிலையில் தான் (பந்தய விடயத்தில்)🙃
  5. இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது. அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது. டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
  6. ஆனால் பந்தயம் கட்ட கேட்டால் மட்டும் முடியாது ஆங்😂
  7. அது தான் புதினுக்காக NATO உடைக்கவும் செய்வார். ஐரோப்பிய ஒன்றியம் சொல்லிவிட்டது இது எங்கட போர் இல்லை என்று அவரது அழைப்பை நிராகரித்துள்ளனர் ஆதரவு அளிக்காவிட்டால் மிகவும் கெட்ட எதிர்காலம் NATO வுக்கு என்று ரம் எச்சரித்திருக்கின்றார்
  8. நேற்று பிரான்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்றிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஒரு பிரெஞ்சுக்காரர் வாக்களிப்பதற்காக கையில் தாங்கும் பொல்லுடன் நின்றிருந்தார். மறைவான இடத்தில் வாக்கை உறையுள் வைக்கும் அறைக்குள் சென்றவர் பொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும் படார் என்று விழும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்து போது வெளிப் பக்கமாக உள்ள சுவரில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வருவது தெரிந்தது. உடனடியாக அங்கு நின்ற அதிகாரிகளால் அவசரப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதானவருக்கு இதுவே கடைசி விழுதலாக இருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் வீட்டுக்கு வந்து எனது உறவினர் நண்பர்கள் சிலருடன் பேசியபோது யாரும் வாக்களிக்க செல்லாதது தெரிந்தது. ஒரு வயதானவர் தனது வயதான, இயலாத நிலையிலும் தனது நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக வாக்களிக்க வருவதும் எனது இனம் தனது நாட்டின் மீதும் பற்றற்று தனக்கு உயிர் பாதுகாப்பு தந்து அரவணைத்த நாட்டின் மீதும் பற்றற்று மிக மிக சுயநலமாக வாழ்தல் என்பது எங்கே சென்று முடியப் போகிறது??? 😭
  9. மழைக்காலங்களில் உயர்வான பகுதிகளிலில் இருந்து வெள்ளம் வழிந்தோடி தாழ்வான குளத்தை நோக்கி வரும் போது மேல்மண்ணையும் அரித்துக்கொண்டு வந்து வந்து குளத்திற்குள் சேர்க்கும். இது மிகவும் வளமான வண்டல் மண் ஆகும். இந்த மண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மிகவும் மேலாக அள்ளி விவசாய நிலங்களுக்குப் போட்டால் பயிர்கள் நன்றாக வளரும்.மேற்படை மட்டுமே அள்ளப்பட வேண்டும். கீழே தண்ணீர்வடிய விடாமல் தாங்கி நிற்கும் களிமண்படை பாதிக்காமல் அள்ளப்பட வேண்டும்.தூர்வாருதல் என்பது பொதுவாக கிணற்றுக்குள் உள்ள சேற்றை(மக்கி அள்ளுதல்) அள்ளி ஊற்றுக்கண் அடைப்புகளை நீக்குவதாகும். கிணற்றில் தூர்வாருவதைப் போன்று குளத்தை தூர்வாரக்கூடாது.
  10. Today
  11. என் பார்வையில்.., கள்ளன் யார்? காவல்காரன் யார் என்பதை முன்பிருந்ததைவிட தமிழக மக்களுக்கு விஜய் வந்து தனது செயல்களால் உணர்த்தியன் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒழுக்கம் போற்றப்படும் அளவுக்கு புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது இத்தேர்தலில் உணரப்படும்.
  12. விஜை பிஜேபி கூட்டணிக்கு போனால் - திமுகவிடம் இன்னும் அதிகமாக ஸ்வீட் பாக்ஸ் எடுக்கலாம் எண்ட அண்ணன், தூ துரைமுருகன் ஆசையில் மண்😂
  13. கோழிக்கும், ஆட்டுக்கும், மாட்டுக்கும் மட்டும் அல்ல…. புண்ணாக்கு பரிமாறப்பட்டுள்ளது😂 புரிஞ்சவன் பிஸ்தா😂
  14. அப்பாடா இவ்வளவு குளங்களா? இவ்வளவு குளங்களையும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி மழை நீரை சேகரித்தாலே நிலம் செழிப்பாக இருக்கும்.
  15. ஓ......அப்ப ரஷ்ய காஸ் அடுப்ப இடப்பக்கம் வைச்சு சமைக்கிறம். சீன காஸ் அடுப்ப வலப்பக்கம் வைச்சு சமைக்கிறம்.😂 வேண்டாம்....அது கொஞ்சம் அகோர காரமாய் இருக்கும் 🤣
  16. வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் குழு : ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன் ஆண் : டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன் ஆண் : நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல ஆண் : கால நேரம் பாத்து காத்து வீசவில்ல கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல குழு : { கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2) ஆண் : சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க குழு : மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம் அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம் ஆண் : கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம் கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம் ஆண் : வேசம் போடாம பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம் கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம் கும்பலா நாங்க டப்பு அடிப்போம் குழு : சிட்டு போல தறி கெட்டு தர மேல தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள ஆண் : மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம் ......! --- கொக்கரக்கோ கோழி கூவ ---
  17. இங்கேயும் தேர்தல் நடக்கின்றது . ....நானும் நேற்று காலையில்தான் வாக்களித்து விட்டு வந்தேன் இனி அடுத்த ஞாயிறு வாக்களிக்க வேண்டும் . .....! இவர் அசப்பில் நம்ம பிரதமர் ஹரிணி அம்மையார் போல் இருக்கிறார் முடி இழந்தபின் காவி ஒன்று மிஸ்ஸிங்........!
  18. நான் ஒரு மாதம் 2500 மைல் (கிமி அல்ல) ஓடுபவன். யூகே போல் ஒரு சின்னம் சிறிய நாட்டில் இது மிக பெரிய தூரம். மின்சார ரேஞ், உள்கட்டுமானம் இன்னும் வளரட்டும் என காத்திருக்கிறேன். ஆனால் போர் நீண்டால் கார் உற்பத்தி பாதிக்கப்படின், அடுத்து சில வருடங்கள் காரின் விலை கூடும் (கொவிட் பின் காலம் போல) எனவே இப்போ வேண்டுவது அதிகம் பிழை இல்லை என எண்ணுகிறேன். அண்மையில் அவுஸின் அவுட்பாக்கில் ஒரு மாதம் செலவழித்தேன். அங்கே எல்லாம் பெற்றோல் டீசல் இல்லாவிட்டால் வாழ்க்கை அடியோடு படுத்து விடும்.
  19. ஓம் மற்றைய திரியில் உங்கள் இந்த கருத்தை வாசித்தேன். ஆனால் இதை இப்போதைக்கு அமெரிக்கா ஒரு மட்டுப்பட்ட யுத்தமாகவே நடத்துகிறது. ஈரானின் எண்ணை ஏற்றுமதி, உணவு இறக்குமதி கட்டுமானத்தில் கைவைக்கவில்லை. ஹோர்மூசை திறக்காவிடில் அப்படி செய்வோம் என மிரட்ட கூட இல்லை. ஜப்பான் அருகே இருந்து தரையிறக்க கப்பலை விலக்கி ஈரானுக்கு நகர்த்த, தைவானை சீனா சுற்றுகிறது. கிரீன்லாந்து, நேட்டோ துருப்புகளின் தியாகத்தை கொச்சை படுத்தியது, என சண்டைக்கு போக முன் நட்புநாடுகளை சீண்டியது. இப்போ பெட்டிரோடொலருக்கு ஆபத்து என சொல்லப்படும் போதும் கைகட்டி நிற்பது…. நான் எங்கே வருகிறேன் என்பது புரியும் என நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தனி மனிதனால், ஜனாதிபதியே ஆனாலும் உள்ளடி வேலையை செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறேன். உங்களுக்கு வாத்தியார் சொன்னது விளங்கவில்லை. எனக்கு அவர் சொன்னதும், நீங்கள் சொல்ல வருவதும் கூட விளங்கவில்லை😂
  20. செய்தி நிறுவனங்கள் எதுவும் இதனை உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன் (இணையத்தில் தேடிப்பார்த்ததில்).
  21. உலகின் பலம் வாய்ந்த நாட்டின் உச்ச பதவிக்கு வந்தாலும்..ஒரு பன்னாடை பன்னாடையாகவே தான் இருக்கும் என்பதற்கு தம்பு ஒரு உதாரணம்😂!
  22. சமச்சீரற்ற தேய்மான போர், ஈரானின் பூகோள கேந்திர முக்கியத்துவம் (ஒப்பீட்டளவில்) அதிக சாதகமாக உள்ளது. இந்த ஒப்பீட்டளவில் எனும் பதம் பாவிக்கும் போதெல்லாம் ஒரு கடந்த கால சம்பவம் நினைவில் வரும், ஒரு கணித ஆசிரியர் ஒரு கேள்வியினை கேட்டார், பெரியதாக உள்ள ஒன்று (அது போல ஏதோ ஒன்று) எப்போது சிறிதாகும் என்றார் (கேள்வி சரியாக நினைவில்லை) வகுப்பு முழுவதும் துள்ளிக்குதித்து கைகளை தூக்கியது எனக்கு தெரியவில்லை எனக்கு கேள்வியே ஒரு அசட்டுத்தனமாக இருப்பது போல இருந்ததால் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்து ஆசிரியர் சரியான ஆள் கிடைத்து விட்டான் என்று என்னை எழ்ப்பி பதில் சொல்லு என சொன்னார் (எனக்கு தெரியாது என தெரிந்து கொண்டே), நான் எனக்கு தெரியாது என சொல்ல ஆசிரியர் சொன்னார் ரெலோ அடிச்சால் ரெலோ புலி அடிச்சால் புலி என (ரெலோவினை புலிகள் அப்போதுதான் தடை செய்திருந்தார்கள்), அதன் பின்னர் (அதற்கு முன்னரும் பெரிதான அபிப்பிராயம் இல்லை) எனக்கு அந்த ஆசிரியரை பார்க்கும் போது ஒரு வித கலவையான உணர்வு ஏற்படும். நீண்ட காலமாக மின்சார கார் பற்றி சிந்தித்துக்கொண்டுள்ளேன் (உலகிற்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யகூடாது என) ஆனால் புதிதாக காரிற்கு செலவிடுவதா (பொருளாதார ரீதியான நெருக்கடி) என நினைத்துக்கொண்டிருக்கும் போது இது நிகழ்ந்துள்ளது.
  23. இந்த செய்தியின் உண்மைதன்மையை க்ரோக் ஏ ஐ மூலம் சோதித்ததில். யுவான் பரிவர்தனையை உறுதிபடுத்த முடியவில்லை ஆனால் பாகிஸ்தான் கப்பல்கள் முன்பும் ஈரானிடம் யுவானில் வாங்கின என்கிறது. ஆனால் அபுதாபியில் யுவானில் வாங்கியதா என்பது உறுதியாக தெரியவில்லை. இத்தோடு 2 கிரேக கப்பல்கள் உட்பட மேலும் 3 கப்பல்கள் ஈரான் அனுமதியோடு பயணித்ததாக தெரிகிறது.
  24. மிஸ்டர் தம்பர், உம்மால முல்லாக்களையே தாக்கு பிடிக்க ஏலாமல் கிடக்கு - இதுக்க எங்களுக்கு வெருட்டு வேற😂. உம்மை விட ரஸ்யாவை எதிர்க நாங்கள் உக்ரேனை அதிகம் நம்பலாம்😂 இவ்வண், ஈயு, கனடா, யூகே
  25. இந்தச் சமையலுக்கு... "ஹிஸ்புல்லா" மசாலாவும் போட்டு சமைக்க, ஆஹா.... சொல்லி வேலையில்லை. 😂
  26. வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். written by admin December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது. இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில் நாவாந்துறைக்கு உட்பட்ட பகுதியின் நீர் ஓட்டத்திலே ஏற்படும் தடைக்கு சந்திரத்துச் சந்திக்கு மேற்கே 25 மீற்றர் பரப்பிற்குள் ஓர் அடுக்குமாடி கட்டிடம் கழிவு வாய்க்காலை முழுமையாக மூடியே அமைக்கப்பட்டுள்ளதோடு அப் பகுதியின் ஊடான நீர் ஓட்டம் முழுமையாகவே தடைப்பட்டுள்ளதோடு அந்த இடங்களில் இருந்த வாய்க்காலை காணவில்லை. அதேபோல் பொம்மை வெளியில் கடலிற்கு நீர் வெளியேறும் பகுதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து அரசியல் குடியேற்றமும் இடம்பெற்றது. அவ்வாறு இல்லை என மறுக்க முடியாத நிலமை ஏனெனில் தற்போது கொட்டடிச் சந்தியினையும் தொலைத் தொடர்பு நிலையத்தினையும் இணைக்கும் வீதியில் இதன் மிகுதி வாய்க்கால் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்தப் பெரிய மழைக்கும் அதனுள் ஒரு துளி நீரையும் காணவில்லை. இதேநேரம் நகரின் மத்தியில் 55 ற்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் 4 அல்லது 5 குளங்களை காணவில்லை. தற்போது 44 குளங்கள் உள்ளன. ஆனால் எந்தக் குளமும் இருந்த அளவில் இல்லை. எல்லாமே மெலிந்து விட்டது. அதாவது நான்கு பக்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவை ஆட்சியாளர்களின் அணைவின் மூலம் 15 ஆண்டுகளிற்கு முன்பு தமக்கு இசைவானவர்களிற்கு வீடு அமைக்கவும் கடைகளாகவும் மாற்றப்பட்டது ஒரு புறம் எனில் ஆலயங்களும் தமது பணி மறந்து குளங்கள், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளன. ஒருபுறம் இத்தனை இடர்பாடுகளும் ஏற்பட மறுபுறம் சுற்றுமதில்கள் வீதிகளின் அருகே கானப்படும் நிலத்திற்கும் நீர் ஓட இடமின்றி சீமேந்து. மிக நெருக்கமாக அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்பன எழுப்பும் அதே நேரம் வீதி அமைப்புக்களின்போது வீதிப் புனரமைப்பிற்கே போதாத நிதியில் வடிகால் எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியுடன் கூடிய பணிகளே இடம்பெறுகின்றன. நகரின் பல பகுதியிலும் நீர் தேங்குகின்றது. வடிகால் சரியில்லை மாநகர சபை தூங்குகின்றதா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசியல் நோக்கத்திற்காக சிலர் எழுப்பும் கேள்விகளும் இதில் உள்ளடக்கம் . ஏனெனில் இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியதுபோன்று மாநகர சபையில் மட்டும் பழி போடப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபையின் எல்லைக்கு வெளியே குடாநாட்டின் ஏனைய பகுதியில் நீர் தேங்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். அது தொடர்பில் வாய் திறக்க மாட்டார்கள். இவ்வாறெல்லாம் மாநகர சபையில் பழிச் சொல் சொல்லப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபை என்னதான் செய்கின்றது என அதன் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எமது பொறியியல் வல்லுநர்களிடம் கோரினால், மாநகர சபையின் வாய்க்கால் இரு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் ஆனாலும் அந்த நீர் தற்போது வேறு மார்க்கமாக திருப்பப்படுகின்றது. இதேபோன்று பல இடங்களில் கிளை வாய்க்கால், பிரதான வாய்க்காளிற்கு மேலாக கட்டித்திற்கான பாதை, வாகனத் தரிப்பிடம் என்பவை அனுமதி இன்றி அரசியல் செல்வாக்கின் மூலம் முன்பு கட்டியதோடு அந்த அரசியல்வாதிகள் மூலமே திறப்பு விழாவும் நடாத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்றது எல்லாம் இந்த சபை உருவாக்கத்தின் பின்பு அல்ல. 2010ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஒரு தவறு இடம்பெறும்போது அதனை தடுப்பது சுலபம். அது விருட்சமாக மாறிவிட்ட பின்பு தடுப்பதில் பல சட்ட நெருக்கடிகள் உண்டு. அதேநேரம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடந்த ஆட்சியில் வதிவிடச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே குளங்கள், ஏரிகளை சூழ இருந்த நிலங்கள் தூர்வாரப்பட வேண்டியதே அதன் சீரமைப்பு அதற்கு மாறாக அந்த இடங்களை கட்சிக்காக நோட்டீஸ் ஒட்டியவர்களிற்கும், கட்சிப் பணியாற்றியவர்களிற்கும் வழங்கி குளத்தின் அரைவாசிப் பங்கு ஆக்கிரமித்தாள் மிகுதி இடத்தில் மட்டும் நீர் தேங்க அதன் கொள் அளவு போதாது. தற்போது அவர்களை எழுப்பி வீதியில் நிறுத்தவும் முடியாத நிலமையே உள்ளது. இவைகளுடன் யாழ்ப்பாணக் குடாநாடு ஆண்டிற்கு சராசரியாக ஆயிரத்து 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் பிரதேசம் . ஐந்து நாட்களில் மட்டும் 624 மில்லி மீற்றர் மழை பொழிந்துள்ளது அதாவது அரைப் பங்கு மழை வீழ்ச்சி 5 நாள் இடைவெளியில் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு நாளில் அதனை வடிந்தோட வைத்தமையானதும் ஓர் இலகுவான பணி கிடையாது. அந்த நீர் ஓட்டத்தில் நெஞ்சளவு தண்ணீரில் இரு மணித்தியாளத்திற்கு ஒரு தடவை தொழிலாளர்கள் வாய்க்காளில் தேங்கும் கழிவுகளை அகற்றினர். அந்தப் பணியானது இலகுவில் கூறிவிட முடியாது. இதேநேரம் மாநகர சபை எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான் அண்மை மழையில் நீர் தேங்கி நின்று ஏனைய இடத்தில் அவ்வாறான நிலமை காணப்படவில்லை எனில் அதுதான் மாநகர சபையின் தவறாக இருக்க முடியும்.” எனப் பதிலளித்த மாநகர முதல்வரிடம் திட்டமிடப்படாத வடிகால் பணியின் காரணமாகவே வைத்தியசாலையின் இரு விடுதிகளிற்குள் நீர் புகுந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி முகநூல் வாயிலாக கருத்து பகிர்ந்துள்ளமை தொடர்பில் கேட்டபோது, “இந்தக் கருத்து நகைப்பி்கிடமானது, ஏனெனில் அவர் ஓர் நிர்வாக அதிகாரி அரசியல் நோக்கம் கொண்ட பதிலை நிர்வாக ரீதியில் கூறக்கூடாது. அதாவது சைவத்தில் கூறுவார்கள் யமதர்மராயாவின் மந்திரியான சிப்திரகுப்தன் ஒவ்வொருவர் தொடர்பிலும் எழுதி வைக்கும் பிரம்மச் சுவடி அவரை தவிர வேறு யாருக்கும் புரியாது என. அதுபோன்றுதான் உள்ளது யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அமைப்பு முறமை அந்த 13 ஏக்கர் நிலப் பரப்பு காணிக்குள் போனால் வெளியில் வர பாதை தெரியாத காட்டில் விட்ட நிலமை. அதனை அமைத்தவர்களிற்கே விளங்குமோ புரியாது. இதேநேரம் 2010ற்கு பின்பு 10 வரையான கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது எதற்குமே மாநகர சபையின் அனுமதியே கிடையாது என்பதல்ல எதற்கும் விண்ணப்பிப்பதே கிடையாது. அங்கே நெருப்பு பெட்டி போன்று அருகருகே அமைத்து ஒரு கட்டிடத்தின் நீர் மறு கட்டிடத்திற்குள் செல்லும் நிலமையும் நீர் ஓடுவதற்கு பாதையின்றி சகல திசையும் கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது. இவை அனைத்தும் அவர்கள் நிர்வாகம் அதற்கும் அப்பால் வைத்தியசாலையின் மதில் ஓரம் எமது பிரதான வாய்க்கால. உள்ளது. அந்த நீரை கொண்டு வந்து வாய்க்காலில் விழ வைப்பது ஒரு சாதாரணமான பணி வேண்டுமானால் நோயாளர்களின் நலன் கருதி அதனையும் நாமே செய்து வழங்கவும் தயாராகவே உள்ளோம்.” என்றார். இதேநேரம் குடாநாட்டில் நீண்ட காலம் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது , நீர், குப்பை, சுகாதார ஏற்பாடு என்றால் மக்களிற்கு உள்ளூராட்சி மன்றங்களே பொறுப்பு எனத் தெரியும் ஆனால் நகரின் மத்தியில் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, காங்கேசன்துறை வீதிகளில் நீர் வடிந்து ஓடவில்லை என்றால் அதற்கு முதல் பதில் அளிக்க வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் இரு மருங்கும் இருந்த வாய்க்காலை அழித்தே வீதி அகட்டப்பட்டது. அதன் பின்பு வாய்க்காலை அமைக்காது வீதி அபிவிருத்தி அதிகார சபை தலை மறைவாகினர், அப்போது எவருமே கேட்கவில்லையே. இதுதான் இன்றைய நகரின் மத்தியில் அதிக இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதற்கு காரணம். இதனை யாரும் கூறுவதில்லை என்றார். பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள பெண்கள் விடுதிக் கட்டிடம் உள்ள இடம் 1980ஆம் ஆண்டுவரை குளம். அந்த குளத்தை மூடி அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டிப்போட்டு அதை கட்டிய அதே அறிவாளிகளே இன்று கூறுகின்றனர் மாநகர சபை சரியாக வடிகாலமைப்பு செய்யவில்லை என்று. இவை அனைத்திற்கும் மத்தியில் யாழ் நகர் முழுமையாக தேடியபோது வீதி அபிவிருத்தி அதிகார சபை உண்மையில் அழிவிருத்தியாகவே செயல்பட்டுள்ளமை பட்ட வெளிச்சமாக தெரிகின்றது. அதாவது பலாலி வீதியில் இருந்த வாய்க்காலை மூடி வீதி அமைத்துள்ளது, அதேபோன்று பல்கலைக் கழகம் முதல் பரமேஸ்வராச் சந்தியின் ஊடாக வீதியின் இரு பக்கமும் வாய்க்காலை அமைத்து வந்து எந்தவொரு பொறுப்பற்றதனமாக பழம்றோட், மணல்தறை வீதிகள் ஊடாக அந்த வெள்ள நீரை பாயவிட்டு அதற்கு அப்பால் வாய்க்காலே அமைக்காது தலைமறைவாகியுள்ளமை, ஒஸ்மாணியாக் கல்லூரி முன்பாக சிறிது தூரம் உள்ள வாய்க்கால் மிகுதி இடத்தில் வாய்க்காலே அமைக்கப்படாமை என 6 இடங்களில் இவ்வாறு பொறுப்பற்ற பணி ஆற்றியுள்ளது வீதி அபிவிருத்தி அதிகார சபை. இதனையாருமே கேட்கவோ அல்லது பேசாமல் இருப்பதன் மூலம் யாருக்கு லாபமோ அவர்களே மாநகர சபை மீது பழியை போடுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2020/154326/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.