All Activity
- Past hour
-
கருத்து படங்கள்
- Today
- காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
ஹிஸ்புல்லாவுக்கு ஹிஸ்புல்லாக்கள் அனுப்பியிருப்பாங்க.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
அமெரிக்காவுக்கு வடை சுட தெரியவில்லை🤣😂, யாராவது அமெரிக்காவில் இருப்பவர்கள் சுட கற்று கொடுங்கள்,- இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
ஏற்கெனவே நாட்டில் இந்த புத்தரால் மத, இந நல்லிணக்கம் குலைந்து போயிருக்கு, இதற்கு எண்ணெய் ஊற்ற இந்த தாய்லாந்து பிக்குகள் வேற துடிக்குதுகள். சிலை வழங்கி இருக்கிற பிரச்சனையை இன்னும் பெருப்பித்து மக்களை அழிப்பதே இவர்களின் புண்ணிய கருத்திட்டம். வறுமை கூடிய நாடுகளிலேயே மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். சிலை அளிப்பதைவிட புத்தரின் அமைதிக்கான போதனையை பரப்புங்கள், அதுதான் புண்ணியம்! எல்லோரையும் சமமாக ஏற்று நடத்தச்சொல்லுங்கள். இங்கு கொதிக்கிற பிக்குகளுக்கு ஆதரவு கொடுக்க வில்லங்கத்திற்கு வருகுதுகள் வேலையில்லாத கூட்டம்.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
மனிசன் தனது நாட்டு சபைகளிடமே மூச்சுவிடலை.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல. இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு.... யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள். தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது. அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!? என்ன செய்வது... உங்களுக்கு பொழுது போக்கு பசி..... எங்களுக்கோ இன விடுதலை பசி.... அவ்வளவுதான் வித்தியாசம்.😎- Yesterday
- இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
ஒரு 50 - 75 வடக்கு கிழக்குக்கு போகுமோ....- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
முகபுத்தகம் இப்போ வயசாளிகளின் கூடாரம் ஆகி விட்டது. அங்கே அங்கிள் ஆண்டி, தாத்தா பாட்டிகளின் ரோதனை தாங்கமுடியாமல் 2014 வாக்கிகேயே அதை நிறுத்தி விட்டேன். தவிர யாழை பொறுத்தவரை - முகபுத்தகம் யாழில் தர்க்கத்தில் தோத்து போனவர்களின் புகலிடமாக இருக்கிறது என்பதும் என் எண்ணம். எனவே இங்கேயே தொடரலாம். தமிழ் நாடு முன்னேற்றத்துக்காக, குடும்ப ஆட்சியை எதிர்க்க என்ற உங்கள் வாதம் - திசை திருப்பல். இங்கே நீங்கள் பேச எடுத்து கொண்ட விடயம்… காளி அம்மாள் தலைவர் படம் போட்ட புத்தகத்துடன் எடப்பாடியிடம் சரண் அடைந்திருக்க கூடாது என்பது. ஜெயாவிடம் சரண் அடைந்த சீமானை ஊக்குவித்த நீங்கள் இதை பேசுவது முரண் என்பது என்வாதம். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
முழுக்க உண்மை- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்ற வெறித்தனமான இரசிகர்கள் கூட்டம் மாறாது- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
அவர் தனக்குத்தானே தீ வைத்தார் என்று சுவிஸ்லாந்து அரச வழக்கறிஞரும் பொலிஸ்சும் சொன்னதாக செய்திகள் வந்தன. ஓம் தீயில் இறந்த வயது குறைந்தவருக்கு 16 வயது 😢- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
நீங்கள் தந்த இணைப்பில் Iran is considering என்றே உள்ளது. அதாவது இப்படி அனுமதிப்பதை பரிசீலிக்கிறது. ஆனால் சீனா-ஈரான் வர்த்தகத்தை தவிர வேறு பெற்றோல் விற்கும், வாங்கும் நாடுகள் இதற்கு இணங்குமா? குறிப்பாக இந்தியா, அரபு மத்திய கிழக்கு நாடுகள்? இன்னொரு விடயம் - ஈரானின் 90% பெற்றோல் வரும் தீவை அமெரிக்கா முடக்கினால் என்ன ஆகும்? ஈரான் தன் வான் பரப்பின் முழு கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் அந்த தீவில் இருந்து ஈரானின் shadow fleet மூலம் கூட பெற்றோல் செல்ல முடியாது போகும். மேலும் ஒரு விடயம் - இந்த நீரிணையை ஓமனோ, அமெரிக்காவோ கூட மூடலாம். ஒன்றில் சகல கப்பல்களும் போக வேண்டும் இல்லை எனில் எவரும் போக முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினால் - சீனா போன்றவை இதில் தலையிட வேண்டி வரும். இதை நோக்கித்தான் டிரம்பின் இந்த அறிக்கை இருக்கிறது. ஈரானின் நட்பு நாடுகளுக்கு மட்டும், சீன யுவானில் எண்ணை போகலாம் என்பதை ஐநாவின் தவிர உலகின் பல நாடுகள் ரசிக்காது. நிச்சயமாக மேற்கு நாடுகள். மேலும் ஒரு விடயம் - இதில் உலகின் 20% ஒயில் தேவைதான் தங்கி உள்ளது. அதுவும் பெரிதும் ஆசிய நாடுகளுக்கு போகும் ஒயில். சவுதி கணிசமான அளவை - பைப் மூலம் செங்கடலுக்கு திருப்புகிறது. இதனால் அமெரிக்காவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. சந்தை விலைகூடினாலும் அவர்களே அதிலும் இலாபம் அடைவர். ஐரோப்பாவில் கூட எரிவாயுவுக்குத்தான் கணிசமான பாதிப்பு. ஆனால் இந்தியா, சீனா ஜப்பான் இந்த வழியால் வரும் ஒயிலை 50% அளவில் தங்கி இருக்கிறன. ஈரானின் இந்த யுவான் யோசனை - கோதாவில் சீனாவை இழுத்து விடும் முயற்சி. அமெரிக்கா பெற்ரோடொலரை எப்படி பாதுகாக்கும் என நாம் அறிவோம். இதற்கு சீனா உடன்பட்டால் - அது கிட்டதட்ட ஒரு பொருளாதார போரின் அறிவிப்பாகவே அமெரிகாவால் பார்க்கப்படும். இந்த ரிஸ்குக்கு சீனா தயாரா? அதன் பணத்தின் liquidity இதை தாங்குமா என்பதெல்லாம் பெரிய கேள்விகள். பெற்றோடொலரின் பின்னால் அமெரிக்காவின் ஆயுத பலம் மட்டும் அல்ல, இன்னும் பல காரணிகளும் உள்ளன. இவை எல்லாமும் இல்லாமல் சீனா இந்த ரிஸ்கில் இறங்குமா என்பது கேள்வி குறியே. அமெரிக்காவும்… ஈரானும்…. சீனாவுக்கு இரு வேறு பட்ட பொறிகளை வைக்கிறன. சீனா என்ன செய்யும்? என்பது பில்லியன் யுவான் கேள்வி.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
நான் தமிழ்நாடு முன்னேறவில்லை என பல இடங்களில் எழுதுவதற்கு அந்த குடும்ப அரசியலும் முக்கிய காரணம்.எனது இன்னொரு முகநூல் பக்கத்தில் குடும்ப அரசியலுக்கு எதிரான உக்கிரம் இருந்து கொண்டே இருக்கும்.அதில் சீமானுக்கு இடமில்லை.விரும்பினால் சொல்லுங்கள் முகவரியை தருகின்றேன்.🤣 ஓம் நீங்கள் சொல்வது சரிதான்.👍- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
தம்பர் நெத்தனியாகுவின் கதையை கேட்டு, இரானில் ஆழம் தெரியாமல் காலை விட்டுள்ளார். ஈரான், ஈராக் மற்றும் லெபனானில் இரண்டு புதிய போர் முனைகளை துவங்கியுள்ளது. அமெரிக்காவின் நேசநாடுகள் ஒன்றும் கடந்த கால பட்டறிவில் இருந்தும், தம்பரை நம்பியும் யுத்த களத்தில் இறங்க தயாராக இல்லை. மற்ற நாடுகள் ஏற்கனவே ஈரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்களின் சுமூகமான பயணத்தை உறுதி செய்து வருகின்றன. இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு , இரண்டு கப்பல்களை விடுவிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
இவர்,இன்னார் இப்படித்தான் இருப்பார் எனும் மனநிலையில் வந்து கருத்துக்களை வாசித்தால் இப்படித்தான் என பிழையாக விளங்கிக்கொள்ள நேரிடும். அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள மனநிலை. நான் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் சீமானின் ஈழ அரசியலை விடுத்து ....... சீமானின் தமிழ்நாட்டு அரசியல் பிடிக்கும் என பல இடங்களில் எழுதியுள்ளேன். அதை உங்கள் மூளை விளங்கிக்கொள்ள மறுக்கின்றது. எனவே இதற்கு மேல் என்னால் விளங்கப்படுத்த முடியாது. உங்கள் கருத்து வெற்றிக்காக தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
என்னதான் இருந்தாலும் உலக வல்லரசெல்லே…இப்படி சட் எண்டு காலில் விழ ஒரு மாரி லஜ்ஜையாத்தான் இருக்கும்😂 ஆனால் மறைமுகமாக மத்திய கிழக்கு நாடுகள் மூலம் உதவி கோரப்பட்டு, உக்ரேனியர்களும் அங்கு அனுப்ப பட்டுள்ளனராம். உக்ரேனும் தாக்குதலுக்கு உள்ளாகும் என ஈரான் மிரட்டி உள்ளதாம். உக்ரேன் பார்க்காத அடியா, மிரட்டலா. செத்த கிளிக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்திருந்தால் ஈரானுக்கு எதிராக உக்ரேன் இறங்கி இராது. ஈரானை தக்க நேரத்தில் செத்த கிளி கைவிட்டு விட்டது. தேவையில்லாமல் உக்ரேனை பகைத்ததே மிச்சம்.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்று எல்லோரையும் இந்தப் போருக்குள்ளே இழுத்து விடுவதே இந்த மனிசனின் நோக்கம். போர் தொடங்கும் போது இந்த நாடுகளிடம் விருப்பம் கேட்டு தொடங்கவில்லை .இப்போது வேணுமெண்டே எல்லாரையும் கொழுவுப்பட கொழுவுறான். கவனம். இந்த நாடுகளில் எங்கட சனங்கள் வாழுதுகள். ஏற்கனவே போர் வடுவைச் சுமந்து.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
யுவானில் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்தும் கப்பல்களை ஈரான் கோர்மூஸ் ஊடாக செல்ல அனுமதிக்கும் என கூறியுள்ளதாம். https://www.bernama.com/en/world/news.php?id=2534372 பெட்ரோடொலருக்கு மாற்றீடு.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
என்ன தம்பர்…. யூகே தேவையில்லை, நாம் வென்று விட்ட போரில் லேட்டா வந்து சேரமுடியாது எண்டு போன கிழமை சொன்னது என்னாச்சு? கொஞ்ச நாளைக்கு முதல் ஏனைய நேட்டோ வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் யுத்த முனைக்கு போகவில்லை, பின்னரங்கில் நின்றவர்கள் என நீங்களும், வான்சும் கூவினது மறந்து போச்சோ😂. நீ தான் பெரிய ரவுடியாச்சே தனியாவே ஹோர்மஸ் நீரிணையை திறக்க்கிறது😂.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ட்ரம்ப் உக்கிரேனின் உதவி தேவையில்லை என கூறியுள்ளார், அதற்கு செலன்ஸ்கியின் எதிர்வினை. https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025403/ https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025443/- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்த தீர்மானம் எந்த தாக்கமும் செலுத்தாத ஒரு தீர்மானமாக இருக்கும் என கருதுகிறேன்.- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
இதை நேற்றே சொல்லி இருந்தேன் நாடு - சவூதி அரேபியா. எண்ணிக்கை 4-7 க்கு இடையில் மாறுபடுகிறது.- வீதியோரம்.
வீதியோரம் . மலர் . .......... 8. ஓரிரு வாரங்களாகி விட்ட நிலையில் வழமைபோல் கடை வியாபாரம் மிக நன்றாக நடக்கின்றது. இப்போது கடையில் இறால் வடை, மாலுபணிஸ், கட்டைசம்பல்,ரோஸ்பாண், அப்பங்கள் போன்ற சில சிற்றூண்டிகள் புதிதாக கண்னாடிப் பெட்டிக்குள் தென்படுகின்றன. அவையெல்லாம் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வரும் யாத்திரீகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அது ஒரு மாலை நேரம் றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் ஒன்றில் நடுத்தர வயதிருக்கும் இருவர் வந்திறங்குகின்றனர்.அவர்கள் அன்றுதான் அந்தக் கடைக்கு முதன்முதலாக வருபவர்கள் போல் இருக்கிறது. அவர்களைக் கண்டதும் மது, போதைவஸ்து விற்பவனும் கூடவே அந்தத் தொழில் செய்யும் பெண்களும் அவர்களருகில் நடமாடுகின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவ் இருவரும் இவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் போகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவன் வந்து கடையில் இறைச்சிப் பொரியல், கணவாய் மற்றும் றால் பிரட்டல் போன்ற சைட்டிஸ் ஆயிட்டங்களாக வாங்கிக் கொண்டு போகிறான்.அவன் சென்ற சிறிது நேரத்தில் மற்றவன் வந்து தேவையான சாப்பாடு,சிகரெட், சுருட்டு என்று வாங்கிக் கொண்டு போகிறான். காட்டுக்குள் ஒரே பைலாப்பாடல்களும், குத்துப்பாடல்களுமாய் கொண்டாட்டம் நடக்கின்றது. இரவாக ஆக எங்கும் சத்தங்கள் அடங்கி விடுகின்றன. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்தப் பெண்களும், சாராயம் விற்பவனும் கடைக்கு வந்து வாங்கில் அமருகின்றனர். பெண்கள் இருவரும் மிகவும் தளர்ந்து போய் இருந்ததால் மேசையில் முகம் குப்புறப் படுத்து இருக்கின்றனர். அவர்களது ஜாக்கட்டுக்குள் பெருமளவு பணநோட்டுகள் செருகப் பட்டிருக்கின்றன. அவர்களில் ஒருத்தி சே….என்ன மனுசங்களடி அவங்கள்,பிசாசுகள் என்று சொல்ல மற்றவள் விடடி ஒரு மாதம் உழைக்கிற பணத்தை ஒரு நாளில் உருவியாச்சுது இப்ப இருக்கிற நிலைமையில அவங்கள் இரண்டு நாளைக்கு எழும்ப மாட்டாங்கள் போல் இருக்கின்றது, நிறைவெறில இருக்கினம் என்று சொல்கிறாள். அவள் மணிமேகலையைப் பார்த்து அக்கா தலை இடிக்குது இஞ்சி துருவிப் போட்டு நல்ல திக்காக டீ போட்டுத் தாக்கா என்று சொல்கிறாள். மற்றவர்களும் தங்களுக்கும் சேர்த்து சொல்கின்றார்கள். மணிமேகலையும் இரண்டு தேசிக்காயைப் பிழிந்து ஜுஸ் போட்டு பெரிய கிளாசில் ஊற்றி அதை பெண்களிடம் குடுத்து இதை இப்ப குடியுங்கோ என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஸ்ட்ராங்கா இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து பக்குவமாய் தருகிறாள். அவனும் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறான். அவன் சாராயம், போதைவஸ்து விற்பவனானாலும் அவற்றை விற்பதுடன் சரி. ஆனால் அவன் குடிப்பதுமில்லை “தம்” அடிப்பதுமில்லை. அவன் உடுத்தும் கந்தையில் அழுக்கு இருக்கும், அவன் சிந்தையில் துளியும் அழுக்கு இல்லை. ஏதோ அவன் பிழைப்பு இப்படியாகி விட்டது. என்பது மணிமேகலைக்குத் தெரிந்திருந்தது. அங்கே ஒரு மினிபஸ் வந்து கடைக்கு முன்னால் நிக்கிறது.அதில் இருந்து இறங்கியவர்கள் கடைக்குள் போகிறார்கள். சிலர் நேராக பின்னால் போகிறார்கள். அப்படிப் பின்னால் போனவர்கள் சில வினாடிகளில் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். என்னவென்று பார்க்க விநோதனும் வேறு சிலரும் டார்ச் லைட்டுடன் போகிறார்கள். சுஜிதாவும் ஒரு பெட்றோல்மாக்சை எடுத்துக் கொண்டு பின்னால் போகிறாள். போனவர்கள் எல்லோரும் அங்கே அந்தக் கோரமான காட்சியைப் பார்க்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருத்தனை குளத்தருகே முதலைகள் கடித்து இழுக்கின்றன. அவனோ ஈனஸ்வரத்தில் முனகுகிறான். நிறைவெறியில் இருந்தவனால் கத்தக்கூட முடியவில்லை. அந்நேரம் அவன் வெற்றுடலுடன் ஜட்டியோடு இருந்ததினால் முதலைகளும் அவனது முகம், தொடை, கை கால் என்று பிய்த்து புடுங்குகின்றன. வெளிச்சத்தையும் ஆட்களின் வருகையையும் சத்தத்தையும் தொடர்ந்து அவை வேகமாக குளத்தினுள் குதித்து மூழ்கிப் போய்விடுகின்றன. அவனது கை ஒன்று முழுதாக இல்லை, கால் எலும்புகளுடன் முறிந்திருக்கிறது,முகமெல்லாம் சிதைந்து கண் ஒன்றும் கிழிந்து போய் இருக்கு, ஆனாலும் உடலில் உயிர் இன்னமும் இருக்கு.இன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தால் அவனது உடல் முழுதாக குளத்தினுள் இழுத்து செல்லப் பட்டிருக்கும். பின்பு அங்கே போலீசும் அம்புலன்சும் வந்து அவனையும் சிதறிக் கிடந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு போக , போலீசார் மட்டும் அங்கிருந்து சில விசாரணைகளை செய்துவிட்டு இனிமேல் இங்கு இதுபோன்ற குடி, விபசாரம் மற்றும் தப்பான காரியங்கள் எதுவும் நடக்கக் கூடாது. ஏற்கனவே இங்கு தப்பான காரியங்கள் நடைபெறுவதாக புகார்கள் எங்களுக்கு கிடைத்திருக்கு, கவனம் என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். மற்றவன் இன்னும் வெறி முறியாமல் நினைவின்றி லொறிக்குள் கிடக்கிறான். வெளியே அவர்கள் ஓட்டிவந்த றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அனாதரவாய் நிக்குது...... அடுத்தநாள் அதிகாலை அந்த இடத்தை விநோதனும் மணிமேகலையும் போய் பார்க்கிறார்கள். அப்போது அங்கு நின்ற சில முயல்களும் பறவைகளும் பாய்ந்து ஓடுகின்றன. அங்கு போத்தல்கள் தட்டுகள் மிச்சமான உணவுகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. இரவு சில விலங்குகள்,பறவைகள் எல்லாம் வந்து சாப்பிட்ட அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுகுது. விநோதனும் அவைகளைக் கைகளால் தொடாமல் ஒரு தடியால் தள்ளித் தள்ளி ஒதுக்கிக் கொண்டு வருகிறான். மணிமேகலையும் ஆங்காங்கே தென்பட்ட ரூபாய் நோட்டுகள் சில்லறை காசுகள் என்று எடுத்துக் கொண்டு வரும்போது பெல்ட்டுடன் தோலுறை ஒன்றைக் கண்டு அதை எடுத்துப் பார்க்க அதனுள் ஒரு கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறது. கூடவே சில தோட்டாக்களும் ஒரு குழாயும் இருக்கின்றன. அதை அவள் அவனிடம் தருகிறாள். அதை வாங்கிய விநோதன்....ம் . ...இது ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு என்று சொல்லி மிக லாவகமாய் அதைப் பிரித்து தோட்டாக்களை அதில் போட்டு அந்தக் குழாயை அதன் முனையில் பொருத்தி விட்டு சுற்றுமுற்றும் பார்க்க தூரத்தில் பற்றைக்குள் இருந்து முயல் ஒன்று எட்டிப் பார்க்கிறது. அவன் அனாசயமாய் அந்தக் கைத்துப்பாக்கியால் அதை நோக்கி சுடுகிறான்…..சிறு சத்தமும் வெளியே வரவில்லை ஆனால் அந்த முயல் மட்டும் வெளியே துள்ளி விழுகின்றது. மேகலை ஓடிப்போய் அதை பார்க்க சரியாக அதன் நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் சூடு பட்டிருந்தது.அதன் கண்கள் திறந்தபடி இருக்க விநோதன் அருகில் வந்து அந்தக் கண்களை கைகளால் மூடி விடுகிறான். அவனது செய்கைகளை வியப்பு விலகாமல் அவள் பார்க்கிறாள். அவன் எழுந்து ஒன்றும் பேசாமல் ரிவால்வருடன் வீடு நோக்கிப் போகிறான். மேகலையும் அந்த முயலைத் தூக்கிக் கொண்டு பின்னால் போகிறாள்...........! மலர் ........ 🪻 8.- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல்: கொல்கத்தா அணியில் முசரபானி கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட முசரபானி, 2017-ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசரபானி, 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துளளார். முசரபானி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களான சிபிஎல், ஐஎல்டி20, பிஎஸ்எல், இங்கிலாந்தின் விட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றின் மூலம் நிரூபித்துள்ளார். முசரபானி ஐபிஎல் அணியுடன் இணைவது இது 2-வது முறையாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முசரபானி வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியுடன் இணைய உள்ளார். https://www.hindutamil.in/news/sports/musharrafani-in-kolkata-knight-riders
Important Information
By using this site, you agree to our Terms of Use.