Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஜூன், 2012 - 15:35 ஜிஎம்டி வீனஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெள்ளி கோளானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் அபூர்வ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இரவு நடக்க இருக்கிறது. பிரிட்டிஷ் நேர கணக்குப்படி செவ்வாய்க்கிழமை (5-6-2012) இரவு பதினோறு மணிக்கு துவங்கி அடுத்த ஆறரை மணி நேரம் வெள்ளியானது சூரியனை கடக்கப் போகிறது. வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு. எனவெ இந்த நிகழ்வை இன்று பார்ப்பவர்கள் தங்களின் வாழ்நாளில் இது அடுத்த முறை நடப்பதை பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று கரு…

    • 13 replies
    • 2.2k views
  2. எமது சூரியத் தொகுதியை உள்ளடக்கிய பால்வழி விண்மீன் பேரடை(Galaxy)யும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள அன்ரோமீடா விண்மீன் பேரடையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளதாக நாசா எதிர்வு கூறியுள்ளது. நீண்ட காலமாக இவ்விரு விண்மீன் பேரடைகள் மோதவுள்ளதாக வானியலாளர்களிடமிருந்து வந்த ஐயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மோதலைத் தொடர்ந்து இவை இரண்டும் சேர்ந்ததான புதிய விண்மீன் பேரடை ஒன்று உருவாகவுள்ளது. இது பால்வழியைப் போன்று சூழல் வடிவில் இல்லாது நீள்வட்ட வடிவிலேயே உருவாகும் என நாசா தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 3.75 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும் இவ்விரு விண்மீன் பேரடைகளிற்குடையேயான இம்மோதல் 3 பில்லியன் ஆண்டுகளிற்கு மேலாக நீடித்த பின்னரேயே புதிய விண்மீன் போரடையின் உரு…

  3. கூகிழின் தன்னிச்சையாக இயங்கும் வாகனம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதைவிட சற்று வித்தியாசமாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் சாரதிகள் அற்ற வாகனத்தொடரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னால் செல்லும் சாரதியுள்ள வாகனம் பின்னால் வரும் வானகங்களை wireless மூலம் தொடர்புகொண்டு கட்டுப்படுத்தும். முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தில் மாத்திரமே சாரதி செயற்படுவார். பின்னால் தொடர்கின்ற வாகனங்கள் சுயமாக முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தின் கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப இயங்கும். பின்னால் செல்லும் வாகனங்களில் சாரதி இருக்கையில் உள்ளவர்கள் வாகனத்தை ஓடாது வேறு தொழிற்பாடுகளில் ஈடுபடமுடியும் (தூங்குதல், படம் பார்த்தல், உண்ணுதல் போன்றவை).…

  4. உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமி…

  5. சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் அசத்தலான புதிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளது. 'ஆடி இ-பைக் வொர்த்தர்சீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பன்முக பயன்பாட்டு வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் மிதித்தும் ஓட்டவும், சோர்வடைந்தால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி ஹாயாக பறக்க முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 5 விதமான பட்டன் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ப்யூர் என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டலாம். எலக்ட்ரிக் மோட்டார் வேலை செய்யாது. 'பெடலெக்' என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டும்போது, எலக்ட்ரிக் …

  6. * பகலில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை ஒளிர விடுவது தவறு. அபாயகரமானஅல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ ஒளிர விடவேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் ஒளிர விடக்கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்ட…

    • 0 replies
    • 1.4k views
  7. சாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்கு அமெரிக்காவின் நெவடா மாநில போக்குவரத்துத் துறை அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. http://youtu.be/VAiH1LX8guk இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும் ஏனைய பல கார் தயாரிப்பு நி…

  8. விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், "உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்" என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது. நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் கா…

  9. பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…

    • 11 replies
    • 2.7k views
  10. மெத்தொட்ரெக்ஸேட் (Methotrexate) உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.இந்த மருந்து எப்படிப்பட்டது? மெத்தொட்ரெக்ஸேட் என்பது புற்றுநோய்க்கு சிகிச்சை செய்வதற்காக உபயோகிக்கப்படும் ஒரு மருந்து. ஆனால் இரு புற்றுநோயல்லாத நிலைமைகளுக்கும் உபயோகிக்கப்படலாம். இது உயிரணுக்கள் பிளப்பதை மற்றும் புதிய உயிரணுக்கள் உண்டாவதையும் தடுக்கிறது. மெத்தொட்ரெக்ஸேட் மருந்து , எலும்பு மச்சை அல்லது மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்…

    • 0 replies
    • 867 views
  11. இரு நூற்றாண்டுகளின் அதிசயிக்கத் தக்க மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியை ஒரு ஒளிப்படமாக விளக்குகிறது இந்த நியூ இங்கிலண்ட் மருத்துவ இதழின் வெளியீடு. ஆர்வமுள்ளவர்கள், மாணவர்கள் பார்த்துப் பயன் பெறுங்கள்! http://nejm200.nejm.org/explore/medical-documentary-video/ நன்றி: நியூ இங்கிலண்ட் மருத்துவ ஆய்விதழ் (இணையப் பதிப்பு)

  12. 1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது. கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது. கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத…

  13. 01. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன. 02. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும். 03. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும். 04. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா. 05. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும். 06. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ. 07. சூரியனில் ஆ…

  14. கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது. ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது தூங்கினால் ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த கருவி டிரைவர் தூங்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கும். மேலும், காரின் வேகம், ஆக்சிலேட்டர் உள்ளிட்டவற்றின் மாற்றங்களையும…

  15. அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார். இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம். 1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகு…

    • 5 replies
    • 2.1k views
  16. மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர். வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம். இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இர…

  17. கணனியை Format செய்யாமல் Partitionகளை உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்? Format செய்து பின் hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை. இதற்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய Partition ஒன்றை SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம். 01) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்…

  18. சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும், அபூர்வ நிகழ்வு வரும், ஜூன் மாதம் 6 தேதி நடக்கவுள்ளது. சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது. இதை, வெள்ளி இடை மறிப்பு எனவும் கூறுகின்றனர். சூரிய கிரகணம்: பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு அமைந்தால், அது சூரிய கிரணம் அல்லது சூரிய மறைப்பு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு மட்டுமல்லாமல் புதன் மற்றும் வெள்ளி ஆகிய, இரண்டு கோள்களும் வர இயலும். அவை உட்கோள்கள். சூரியனுக்கும், பூமிக்கும் ஒரே நேர்க்கோட்டில் அவை வரும்போது, கோள் மறைவு ஏற்படுகிறது. ஆனால், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே சுற்றி வருகின்றன. கோள் மறைவு: சூரியன…

  19. இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியான செம்சுங் கெலக்ஸி SIII இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசியாகத் இது தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இதன் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. செம்சுங் கெலக்ஸி வரிசையின் SII கடந்த வருடத்தில் வெளியாகி சிறந்த கையடக்கத்தொலைபேசிக்கான விருதைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இதேவரிசையில் இன்று வெளியாகவுள்ள கெலக்ஸி SIII யும் விற்பனையில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குவாட் கோர் புரசசர், 12 மெகா பிக்ஸல் கெமரா ஆகியவற்றுடன் 4.8 அங்குல திரையையும் இப்புதிய கையடக்கத்தொலைபேசி கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றபோதி…

    • 2 replies
    • 1.2k views
  20. மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி [LED] மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இது வென்றது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன்விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வில…

    • 3 replies
    • 1.2k views
  21. அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள். பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர். அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் ச…

  22. Started by akootha,

    கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'கூகுள் ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியை கூகுள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'. இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் பலர் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும். தற்போது 5GB இலவச நினைவக வசதியுடன் இது வெளியாகியுள்ளது.. http://www.virakesari.lk/news/head_view.…

  23. கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும். சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும். <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1D3bEz938V" frameborder="0" allowfullscreen></iframe> நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும். உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வே…

  24. உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ்(sticky notes) வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ்(fax) அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.