அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUSEUM OF LONDON படக்குறிப்பு, கருப்பு மரண வரலாறு: பிளேக் தொற்றின் பேரழிவு மனிதகுலத்தின் மீது நம்பமுடியாத மரபணு அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 1300களின் மத்திய பகுதியில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் பரவிய போது, பாதியளவு மக்கள் உயிரிழந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் மரபணுவை (டிஎன்ஏ) பகுப்பாய்வு செய்யும் முன்னோடியான ஒரு ஆய்வில், மக்கள் பிளேக் நோயிலிருந்த…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது. IMAGE_ALT மேவன் விண்கலம் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் ப…
-
- 0 replies
- 650 views
-
-
அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டிபடலம் கண்டு பிடிப்பு! விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்கலைகழகம், கலிபோர்னியா பல்கல…
-
- 0 replies
- 880 views
-
-
அலெக்சாண்ட்ரா மார்ட்டின்ஸ் பிபிசி உலக சேவை நம்முடைய உடல் தோரணையும் முக பாவனைகளும் மூளைக்கு முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அவற்றுக்கு ஏற்ப மூளை செயலாற்றுகிறது என, ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள கம்ப்லுடென்சே பல்கலைக்கழகத்தைச் (Complutense University of Madrid) சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கூறுகிறார். "நமது முகம் கோபமாக தோன்றினால், நாம் வழக்கமாக கோபமாகவே இருப்போம் எனக்கருதி கோபம் தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை தூண்டிவிடும்," என அவர் கூறுகிறார். அதேபோன்று தான், நம் உடல் தோரணை மற்றும் முக பாவனைகள் கவலையாக தோன்றினால் கவலை தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை ஊக்குவிக்கும். …
-
- 0 replies
- 396 views
-
-
ராமானுஜன் பிறந்தநாள்: டிசம்பர் 22 1887 அனந்தத்தை அறிந்திருந்த மாமனிதர் ராமானுஜன் கடவுளைக் கணிதத்தில் கண்டவர். நான்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதுகலை கணிதப் பாடத்திட்டங்களைப் பார்த்தபோது சீனிவாச ராமானுஜன் பெயர் எதிலும் காணப்படவில்லை. புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியைக் கேட்டபோது ராமானுஜன் பெயர் எங்கும் வருவதில்லை என்றார். ‘சார்புகள்’ பாடத்திட்டத்தில் இருந்தபோதிலும் ராமானுஜன் உறவாடிய ‘சார்புகள்’ முதுகலை மாணவர் கூட அறியாது இருப்பது புதிர்தான். விரிவாகக் கற்கா விட்டாலும் அவர் அந்தத் துறையில் கணித உலகம் போற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதுகூட அறியாது இருப்பது நமது கல்விமுறையின் பெருங்குறை. ராமானுஜதாசன் என்ற பெயருக்குப் பொருத்தமான பி.கே. சீனிவாசன் ஐம்பது ஆண்ட…
-
- 0 replies
- 472 views
-
-
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் கப்பலின் முகப்புப் பகுதி தெளிவாகத் தெரிகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல் மற்றும் அலிசான் ஃப்ரான்சிஸ் பதவி,பிபிசி பருவநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்கள் 17 மே 2023 கடலில் மூழ்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அட்லான்டிக் கடலில் 3,800 மீட்டர் (12,500 அடி) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்ந…
-
- 2 replies
- 500 views
- 1 follower
-
-
Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள் 22/12/2015 | 6:05 Samsung-Galaxy-A8ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது. இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080வு1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1…
-
- 0 replies
- 572 views
-
-
Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய Friday, September 7, 2012 தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். Cha - ச sa - ஸ sha - ஷ A - ஆ a- அ ro - ரொ roo - ரோ Roo -றோ Luu - ளூ luu - லூ za - ழ ZE - …
-
- 0 replies
- 645 views
-
-
UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .! விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து …
-
- 0 replies
- 415 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புவிக்கு சுமார் 27.000 கி.மீ தொலைவில் பறந்துபோன விண்கல்லின் பெறுமதி 1100 பில்லியன் குறோணர்கள் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். டி.ஏ.14 என்று பெயரிடப்பட்ட இக்கல் புவியில் காணப்படுவது போல ஒரு பிரமாண்டமான பாறாங்கல் அல்ல, இந்த உலகத்தில் இருக்கும் உலோகங்களுக்கான அசைவு அதில் காணப்படவில்லை. புவியில் உள்ள பாறாங்கல்லை அண்டவெளியில் பறக்கவிட்டால் அது அசையும் விதம்போல இது அசையவில்லை இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே டி.ஏ.14 தன்னுள் அசைந்து நகர்ந்தவிதம் உலகம் அறியாத புதுவகையான உலோகம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை உணர்த்துவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சுமார் 130.000 தொன் கொண்ட இந்த கல் உலோகம் என்றால் அதை…
-
- 5 replies
- 871 views
-
-
27 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு! மருத்துவ உலகில் புதிய சாதனை! அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா(Tina ),கிப்சன்(Gibson) தம்பதியர் கடந்த 2017ஆம் ஆண்டு குழந்தையின்மை காரணமாக அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3. இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இக் கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படகின்றது. இதன்மூலம் கடந்த ஒக்டோபர் மாதம…
-
- 0 replies
- 432 views
-
-
புது வகை எரிபொருள்: செளதி அரேபியாவில் இருந்து வரவுள்ள பசுமை ஹைட்ரஜன் பாதுகாப்பா? ஆபத்தா? பட மூலாதாரம், ALAMY பசுமை ஹைட்ரஜன் உலகெங்கும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்பன் உற்பத்தியைத் தவிர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதன் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சாத்தியம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். செளதி அரேபியாவின் பாலைவனத்தின் எல்லையில் செங்கடலை ஒட்டி, நியோம் என்ற எதிர்கால நகரம் உருவாகி வருகிறது. 500 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்த நகரம், பறக்கும் டாக்சிகள், வீடுகளில் ரோபோ உதவியாளர்கள் என நவீன வசதிகளுடன் உருவாகிறது. பல மில்லியன் பேர் இந்த நகரத்தில…
-
- 0 replies
- 431 views
-
-
ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத திறமை இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூகத்தில் ஏனையவர்களுடன் ஊடாட்டம் செய்வதில், தொடர்புகளைக் கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். ஆனால், மாறாக மிகச் சில துறைகளில், அல்லது விடயங்களில் மாத்திரம் அவர்கள் அளவுக்கு அதிகமான, அதீத திறமையைக் கொண்டு காணப்படுவார்கள். அதாவது இந்த ஆட்டிசம் குறைப்பாட்டையுடைய குழந்தைகள் ஏனையவர்களுடன் பேசமாட்டார்கள், ஏனையவர்கள…
-
- 0 replies
- 465 views
-
-
மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பிபிசி நியூஸ் முண்டோ மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டைன் தனது மகனின் மனநல கோளாறுடன் ஈடுகொடுக்க சிரமப்பட்டார் என்று நான் நினைக்கிறேன், "என்று ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டத்தின் ஆசிரியரும் துணை இயக்குநருமான ஃஜீவ் ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார். 'டெட்' என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இளைய குழந்தை. சிறு பையனாக அவனது உடல் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவனது மனநல பிரச்னைகள் அவன் பெரியவனாகும் வரை வெளியே தெரியவில்லை…
-
- 0 replies
- 825 views
-
-
அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன் கால்டெரா என்ற எரிமலை அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது. இந்த எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்படி வெடிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு, மனிதர்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீ ஆழத்துக்கு துளையிட்டு அதில் தண்ணீரை பாய்ச்ச தி…
-
- 0 replies
- 276 views
-
-
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழில் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கலை இலக்கியம் இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை…
-
- 0 replies
- 14.7k views
-
-
“It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக. மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது …
-
- 1 reply
- 917 views
-
-
எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப் பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங். இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்.. ஹிக்ஸ் பொசொன்..Higgs boson.. தான் அணுக்கள் என்ற கட்டமைப்பினூடு.. திடப்பொருட்கள் உருவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை பரிசோதனை ரீதியில் நிரூபிக்க என்று.. 27 கிலோமீற்றர்கள் சுற்றளவைக் கொண்ட துணிக்கைகள் மோதும் மொத்துகைக் கூடம் (LHC) சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை ஒட்டி சுமார் 10 பில்லியன் அமெரிக்க ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்…
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC) படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன் கட்டுரை தகவல் ஜார்ஜினா ரன்னார்ட் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம். இந்த அறிகுறிகள், ஆல்ஃப…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
குழந்தை கடவுளின் கிருபை என்று கூறித் திரிந்த காலம் மலையேறிவிட்டது. இப்போ குழந்தைகளை நாம் விரும்பும் வடிவில் சோதனைக் குழாய்களில் அல்லது தட்டுக்களில் உருவாக்கிவிட முடியும். இந்த முறைக்கு சுருக்கமாக IVF (விரிவாக.. In vitro fertilisation) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஐ வி எவ்(F) முறையில் பெண்ணின் ஒரு தனி முட்டையை ஆணின் விந்துக் கலத்துடன் கருக்கட்ட வைத்து அதனை தாயின் கருப்பையுள் செலுத்திவிட முடியாது. மாறாக பல முளையங்கள் உருவாக்கப்பட்டு அதில் சூழலை வென்று குழந்தையாக வளரக் கூடியவற்றை தேர்வு செய்து கருப்பையுள் புதைத்து விடுகின்றனர். உருவாக்கப்படும் முளையங்களில் ஐந்தில் ஒன்றுக்கே இந்த வாய்ப்புக் கிட்டுகிறது. இதன் போது பல முளையங்கள் கருப்பையில் தரித்து Multiple pregnancy அதாவது …
-
- 0 replies
- 651 views
-
-
புகையிரத தண்டவாளத்தை எப்படி அமைக்கிறார்கள் ? 9e9e0cf7b305454b5bd2cce5353a2ea0
-
- 6 replies
- 810 views
-
-
நாம் பிராணிகளைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன! பரதன் என்கிற யானை, செயலில் மனிதர்களை மிஞ்ச கற்றுக்கொண்டுவிட்டது. யானைகளின் போக்கில் காணப்படும் மாறுதல்களை டார்வினின் கொள்கைப்படி அறிவதைவிட கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும். பரதன் என்பது தந்தமில்லாத ஆண் யானை. மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளிப் பகுதியில் இப்போது அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் முதுமலை காப்புக்காட்டின் ஓரத்தில் இருக்கும் சின்ன கிராமம்தான் தொரப்பள்ளி. பரதனைப் பார்த்தாலே உள்ளுக்குள் உதறல் எடுக்கும் அளவுக்கு பெரிய மேனி. நல்ல புத்திசாலி. தன்னைச் ச…
-
- 18 replies
- 10.4k views
-