Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர். அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அத…

  2. அமேசன்: அமேசான் காடுகளில் பூனை முகம் கொண்ட, மகிழ்ச்சியில் பூனை போல் ஒலி எழுப்பும் குரங்கு வகை ஒன்று கண்டறியப் பட்டுள்ளாதாம். இந்த வகைக் குரங்குகள் பூனையை போன்ற வித்தியாசமான சத்தம் எழுப்புவதால் இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமேசான் காடுகளில் இதுவரை அறியப் படாத 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகையும் ஒன்றாகும். இதுகுறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவ…

  3. உலகின் மிகப்பெரிய டேட்டா செண்டர்களை தனக்கென உருவாக்கி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். இதுவரை நிலப்பரப்பின் மீதே அவை இரகசிய இடங்களில் நிறுவப்பட்டு சைபர் சட்டங்களில் குறைந்தளவு கெடுபிடிகளை கொண்ட நாடுகளில் உருவாக்கி வந்தது கூகிள். ஆனால் தற்போது உலகின் எந்தவொரு அரசினாலும் இலகுவில் நெருங்கமுடியாதபடி கடலில் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப உலகமே பரபரக்கின்றது. உலகின் மிகப்பெரியளவில் பாவனையளர்களது விபரங்களை கூகிள் நிறுவனமே டேட்டா செண்டர்களில் சேமித்து வைத்துள்ளது. தற்போது கடலில் நிறுவிவரும் டேட்டா சென்டர்கள் தொடர்பில் பிரபல தொழில்நுட்ப தளமான சிநெட் ஆய்வு செய்து படங்கள் வீடியோவுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. தரையில் நிறுவுவதை விட்டு ஏன் கடலிற…

  4. சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம் பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும். காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல. படத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும். பூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. …

    • 1 reply
    • 1k views
  5. எங்களது திட்ட குழுவுக்காக(Project Team) திறன்பேசிகளில் உள்ள உணர்வீகளை வைத்து எதாவது மென்பொருள் செய்ய முடியுமா என்று ஒரு ஆய்வு செய்தோம். அதில் என்னென உணர்வீகள் திறன்பேசிகளில் உள்ளன? அதன் செயல்பாடுகள் என்ன? இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக அலசினோம். அதைப் பற்றி ஒரு சின்னப் பதிவு. யாருக்கேனும் உதவக் கூடும். தமிழாக்கத்தில் எனக்கு தெரிந்த வார்த்தைகளை எடுத்தாண்டுள்ளேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும். திறன்பேசிகளின் உதவியால் இன்று இணையம் உங்களது சட்டைப்பையில் வந்துவிட்டது.ஆடம்பரத் தேவையாயிருந்த தொலைபேசிகள் இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. நீங்கள் தொலைபேசியில் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பல உணர்வீகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாக தொலைபேசிய…

  6. செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95526&category=IndianNews&language=tamil

  7. ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது. மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி …

  8. சூரியக் குடும்பத்தில் உள்ள எம் பூமியில் நீர் மழை... நீர் பனி.. பொழிவது போல.. அதே குடும்பத்தில் பூமிக்கு அப்பால் உள்ள.. வியாழன் மற்றும் சனிக் கிரகங்களில் வைர மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலங்களை ஆராய்ந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்.. கருத்துத் தெரிவித்துள்ளனர். மேற்படி இரண்டு கோள்களின் வளிமண்டலத்திலும் மிதேன் என்ற காபன் சார்ந்த இரசாயன வாயு அதிகம் உள்ளதால் அதில் இருந்து கிரபைட் மற்றும் வைரம் போன்ற காபன் சார்ந்த கூறுகள் உருவாகச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பாக.. கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது ஆபரணங்களில் அணியக் கூடிய அளவுடைய வைரம் மழையாகப் பொழிய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரம் பின்னர் அக்கிரங்…

  9. மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்... ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் 'ஆஸ்கர்'. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின…

  10. "கடவுளின் துகளை" கண்டறிந்த Prof Peter Higgs இடம் ஒரு மொபைல் போன் கூட இல்லை..! "கடவுளின் துகளை" (ஹிக்ஸ் போசான் -The Higgs Boson ) கண்டறிந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 84 வயதுடைய.. Prof Peter Higgs ஒரு கையடக்கத் தொலைபேசி கூட வைத்திருப்பதில்லையாம். இவர் எடிபரோ பல்கலைக்கழப் பேராசிரியரும் கூட. இருந்தும் தான் நோபல் பரிசை வென்றதை கூட இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் முன்னாள் அயலவரான ஒரு பெண்மணி இவரை பரிசுபெற்றதற்காக வாழ்த்தப் போகத்தான் இவருக்கு சங்கதியே தெரிய வந்துள்ளது. 2013 ம் ஆண்டுக்கான பெளதீகவியல் அல்லது இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பேராசிரியர் ஹிக்ஸ், கடவுளின் துகள் என்ற இந்த பிரபஞ்சத்தில் உள்ள திணிவுக் கூறுகளை ஆக்கியுள்ள மிக அடிப்படைத் துணிக்கை பற்…

  11. மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள் 14 மணி நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில் செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல் பொறிமுறை மூலம் உடலுறவுக்கான ஆசை அடங்குவது இந்த விலங்குகளில் இல்லை என்பதால்.. ஆண் ஓமோனின் செக்ஸ் தூண்டலின்.. தொடர் செயற்பாட்டால்.. தொடர்ந்து செக்ஸ் வைச்சே இறுதியில் செத்துப் போகின்றனவாம்... இந்த வகை விலங்குகள். பெண் பல ஆண்களோடு ஒரே இனப்பெருக்கக் காலத்தில் உறவு வைத்துக் கொள்வதன் மூலம்.. பலவீனமான ஆணின் விந்து தனது முட்டையோடு கருக்கட்டுவதை தடு…

  12. மிதக்கும் அணு மின்சார நிலையம் ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும். விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள். மகாராஷ்டிர மான…

  13. 1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#* 2. IMEI Number – *#06# 3. Enter Service Menu On NewerPhones – *#0*# 4. Detailed Camera Information –*#*#34971539#*#* 5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service –*#*#197328640#*#* 8. Back-light Test – *#*#0842#*#* 9. Test the Touchscreen –*#*#2664#*#* 10. Vibration Test – *#*#0842#*#* 11. FTA Software Version –*#*#1111#*#* 12. Complete Software andHardware Info – *#12580*369# 13. Diagnostic Configuration –*#9090# 14. USB Logging Control –*#872564# 15. System Dump Mode – *#9900# 16. HSDPA/HSUPA Control Menu –*#301279…

  14. வாகன விபத்துக்களின்போது பாதசாரிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் முகமாக ஹொண்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பாதசாரிகள் தம்முடம் கொண்டு செல்லும் ஸ்மார்ட் போனின் மூலம் சிக்னலை பெற்று சுயமாகவே வாகனங்கள் தாமாகவே பிரேக் போட முடியும். 1000 மீற்றர் தூரத்திற்கு செயற்திறன் கொண்ட இந்த தொழில்நுட்பத்திற்கென வாகனங்களிலும் விசேட சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=94352&category=CommonNews&language=tamil

  15. கடலில் திடீரென முளைத்த தீவு அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும். கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலட…

  16. தொழில்நுட்பம்.. தொழில்நுட்பம்... எங்கும் எதிலும் தொழில்நுட்பம்.. இனி கடுகளவிற்கு சுருங்கிவிடும் போலிருக்கிறது தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள். கையளவு தொலைப்பேசி.... ஒரு ஸ்மார்ட் வாட்சாக மாறியுள்ளது.. சிறிய மூக்கு கண்ணாடி பட்டையளவே உள்ள கூகிள் கண்ணாடியில் அசத்தலான அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. இது வெறும் கண்ணாடி அல்ல.. ஒரு மினி ஸ்மார்ட்போன், ஒரு மினி கம்ப்யூட்டர்.. ஒரு மினி லேப்டாப்.. ஒரு மினி டேப்ளட்... இப்படி எதைச்சொன்னாலும் இதற்கு ஒப்பாகாது... ஏனென்றால் இவைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது கூகிள் கண்ணாடி (Google Glass). மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்று கூட இதைச் சொல்லலாம். அப்படி என்னதான் இந்த கூகிள் கண்ணாடியில் உள…

  17. ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார். மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதுடன் இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்து ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளதுடன் எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து …

  18. வாயேஜர் என்கிற டீன் ஏஜர் ராமன் ராஜா ஒரு வருஷத்துப் பழசான செய்தி ஒன்றுதான் இன்றைக்கு விஞ்ஞான உலகத்தில் சுடச் சுட நியூஸ்! சென்ற ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் வாயேஜர் என்ற நாசா விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டது. (டெக்னிக்கலாகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹீலியோபாஸ் என்ற விண்வெளி எல்லைக் கல்லைத் தொட்டுவிட்டது). மனிதன் செய்த பொருள் ஒன்று சூரிய குடும்பத்துக்கு வெளியே காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை. போன வருடம் நடந்த விஷயத்தை ஏன் இப்போது மெல்லச் சொல்லுகிறார்கள் ? இப்போதுதான் டேட்டா கிடைத்திருக்கிறது ! 1977-ல் ஏவிவிடப்பட்ட விண்கலம் வாயேஜர். சின்னப் பையன்கள் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். கே.ஆர்.விஜயாதான் அப்போது ஹாட் ஹீரோயின் என்றால…

  19. வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் . இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை . /intl/en_ALL/images/logo.gif]

    • 24 replies
    • 2.6k views
  20. அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும் ராஜ்சிவா இந்தக் கட்டுரையில் நான் சொல்லவரும் தகவல்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் (Quantum Physics) அடிப்படை யிலானது. 1935ஆம் ஆண்டளவில் பிறந்த பிரபலமான சி ந்தனை யொன்றைப் பற்றியது இது. புரிவதற்கு மிகவும் கடினமானது. இருந் தாலும், தமிழில் இலகு வில் புரியவைப்பதற்காக என்னாலான ஒரு முயற்சியாகவே இதைக் கருதுகிறேன். "இயற்பியலில் எனக்கு நாட்டமில்லை. அதனால் நான் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று நினைத்து, நீங்கள் இதை ஒதுக்கிவிட்டுச் செல்ல வேண்டாம். நவீன அறிவியல், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில், அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகவே இதை நான…

  21. பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும். மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது: பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்…

  22. 5S மற்றும் மலிவு விலை என்று கூறி 5c மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடலில் நேற்று மொபைலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கவில்லை. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேல் தகடு 24 கேராட் தங்கம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் நியூ யார்க்கில் அறிமுகமான இந்த மொபைலுக்கு காத…

  23. தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்? 06/09/2013 by KALAKUMARAN in அறிவியல், மனிதன் with 0 COMMENTS தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS – National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது. முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி. img98371 ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்தி…

  24. பிரமிட்டுகளின் வரலாற்று ஐதீகம் by noelnadesan எகிப்தில் சில நாட்கள் 7 ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்ற…

  25. பொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம். Bojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார்! ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்! Bojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது! சேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.