செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து 55 வயது பாட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற அவர், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்ற பிரிட்டனின் மிக அதிக வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நான்கு குழந்தைகளுக்குப் பாட்டியான ஷரோன், செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இந்த 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் 42 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செயற்கைக் கருத்தரிப்பு சேவைகளை வழங்கி வருவதால், தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. குழந்தை பிறக்கும்போது மிகவும் வயதான தோற்றம் இருக்கக் கூடாது என்பதற்காக, வயதைக் குறைத்து காட்டுவதற்…
-
- 1 reply
- 571 views
-
-
கணவர் தேவை எனக் கோரி பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்த நடிகை தாய்லாந்தைச் சேர்ந்த நடிகையொருவர் தனக்கு கணவன் தேவை எனத் தெரிவித்து பாரிய பதாதையொன்றின் மூலம் விளம்பரம் செய்துள்ளார். ஆரண்யா பூய் பதும்தோங் எனும் இப் பெண் தொலைக்காட்சி நடிகையாவார். 45 வயதாகியும் இன்னும் இவர் கன்னியாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அவர், மணமகனை தேடுவதற்காக பேங்கொங் நகரில் பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்துள்ளார். இப் பதாதையில் தாய் மொழியில், “40, கன்னி: பூய் ஆரண்யாவுக்கு கணவர் தேவை. நான் இறப்பதற்கு முன் அதை அடைய விடுங்கள்” என எழுதப்பட்டுள்ளத…
-
- 14 replies
- 1.3k views
-
-
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார். இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது... நான் இது வரை உயிருடன் இருந்தது…
-
- 8 replies
- 763 views
-
-
பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உ…
-
- 0 replies
- 196 views
-
-
கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண் 2016-04-05 14:55:06 எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால், அண்மையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி இப் பெண் நீதிமன்றத்தை நாடினார். தனது கணவர் மிக கம்பீரமானவராக, வசீகரமானவராக இருப்பதால் அவரை தான் நம்பவில்லை என அப் பெண் தெரிவித்துள்ளார். தனது கணவரை எந்நேரமும் வேறு பெண்கள் பார்ப்பதாகவும் வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அப் பெண் தெரிவித்த…
-
- 0 replies
- 372 views
-
-
என் கணவர் குளிப்பதே இல்லை : மனைவி புகார் தன் கணவர் குளிப்பதே இல்லை. தீபாவளி, ஹோலிக்கு மட்டுமே குளிக்கிறார் என்று பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளமை உத்தரபிரதேசத்தில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் நகரை சேர்ந்த ஒரு பெண் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் இது தொடர்பில் அளித்துள்ள முறைப்பாட்டில், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதா மாதம் கூட குளிப்பது இல்லை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு குளித்தனர். பின்னர் 5 மாதம் கழித்து தற்போது ஹோலி பண்டிகைக்கு குளித்துள்ளனர். சுத்தமாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட பொலிஸ் அதிகாரி ரவி சங்கர் இது குறித்து வழக்குப்பதிவு செய…
-
- 28 replies
- 1.8k views
-
-
ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் சகோதரரின் நண்பர் பழகுகிறார் என்பதை அறிந்த பெண்ணின் சகோதரர் தடுத்தார். (இருவரும் அராபியர்கள்) அவர் பழகுவதை நிறுத்த மறுத்தார். ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் தனது நண்பனைப்பார்த்து உன் வாழ்வில் மறக்கமுடியாதது போல் உன் முகத்தில் தளும்பு வைப்பேன் என்று எச்சரித்தார். எச்சரித்தது போல் அடுத்த நாள் வீதியில் வைத்து.......... பாருங்கள்.
-
- 3 replies
- 481 views
-
-
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் ! சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன் செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவரின் நிர்வாண புகைப்படங்கள் அ…
-
- 4 replies
- 416 views
-
-
கீமோதெரபி செய்துகொண்டதால், தனது தலைமுடியை இழந்த மார்லி, தன் மொட்டை தலையைக் கண்டு தனது நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்களோ என்ற கவலையுடன் பள்ளிக்குத் திரும்பினாள்.ஆனால், அவர்களின் செயலோ, மார்லியை ஆச்ர்யத்தில் ஆழ்த்தியது. தனது நண்பர்களும், ஆசிரியர்களும் தன்னை கிண்டல் செய்யாமல், ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவர்களில் பலர் தன்னைப் போலவே தலையை மொட்டை அடிக்க முடிவு செய்ததைக் கண்ட மார்லியுடைய மகிழ்ச்சியின் முன், புற்றுநோய் தோற்றே விட்டது. அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் உள்ள ப்ரூம்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்லியின், இடது கால் பாதத்தில், சிறிய வீக்கத்தினை கண்ட மார்லியின் தாய், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அது புற்றுநோய் என தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 196 views
-
-
ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன் ; அர்ஷி கான் (வீடியோ இணைப்பு) இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை தவறவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று இந்திய மொடல் அழகி ஒருவர் மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ–20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து பல மொடல் அழகிகள் விளம்பரம் தேட பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். இந்தியா, அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு மொடல் அழகி பூனம் பாண்டே டுவிட்டரில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றி அதை கோஹ்லிக்கும், இந்திய வீரர்களுக்கும் பரிசளிப்பதாக கூறினார். இதேபோன்று தற்போது புதிய பாணியில் களமிறங்கியுள்ளார் மும்பை மொடல் அ…
-
- 8 replies
- 699 views
-
-
அமெரிக்காவில் ஒரு மனிதர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் தன்னை தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 31 வயதான அவர் வெஸ்ட் எங்கிள்வுட் பகுதியில் நின்று கொண்டு தான் தற்கலை செய்து கொள்வதற்கு முன் கேமராவை பார்த்து பேசுகிறார், பின்னர் திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் லைவ் ஸ்ட்ரீமிங்கில் வீடியோ வெளியிட வேறு யாராவது உதவியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/m…
-
- 0 replies
- 268 views
-
-
இப்படியும் அச்சுறுத்தலா ? எச்சரிக்கை !! அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்கு உட்பட்ட ஒரு நாள். மாலைதீவின் பிரபல கோடீஸ்வரர் ஹசீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இலங்கையின் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார். அவரின் அழைப்புக்கு பதிலளித்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்களம்" என தம்மை அறிமுகம் செய்யவே ஹசீமும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்சினையை கூறியுள்ளார். ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்பாடளிக்கவே தடுமாறுகிறார் என்பதை புரிந்துகொண்ட பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உதவிப்…
-
- 0 replies
- 315 views
-
-
கோழி சிறுநீர் கழிக்குமா…? கோழி சிறுநீர் கழிக்குமா…? என நண்பரொருவர் என்னிடம் கேட்டிருந்தார். கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. ஊரில் கோழி உரித்தவர்கள் இதைக் கண்டிருப்பார்கள். (கோழி மாங்காயை நான் சொல்லவில்லை) பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும் (சிறுநீர், மலம்), முட்டையும் வெளியேறும். சிறுநீர்க்குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், (இட்ட) முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக(குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண…
-
- 1 reply
- 934 views
-
-
இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 751 views
-
-
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாேவன் (Anja Ringgren Loven) என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால், தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும் நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு கண் கலங்கியுள்ளார். குழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை ஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால், அதனை தவிக்க …
-
- 2 replies
- 491 views
-
-
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார். இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன. லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gold-car-saudi-arabia-rich-prince-turki-bin-abdullah-…
-
- 0 replies
- 277 views
-
-
இராவணனை நினைவு திரும்பச் செய்ய சென்ற மந்திரவாதிப்பெண் எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருந்ததனால் பாதுகாப்புக்…
-
- 4 replies
- 390 views
-
-
அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர், சாப்பாடு வழங்கப்படும் நேரத்தில் திடீரென இருக்கையைவிட்டு எழுந்து விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று யோகாசனம் மற்றும் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதனை அவரது மனைவியும், விமான ஊழியர்களும் தடுத்து அவரது இருக்கையில் அமரும்படி கூறியதால் கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அதே விமானத்தில் பயணம் செ…
-
- 1 reply
- 291 views
-
-
துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html
-
- 0 replies
- 255 views
-
-
கொலம்பியாவில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், உடலின் பின்னழகை அதிகரித்துக் கொள்வதற்காக செய்துகொண்ட சட்டவிரோத சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். 25 வயதான யெசிக்கா ஹில்டன் எனும் இவர், தனது உடலின் பிருஷ்டப் பகுதியை பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கிக்கொள்ள விரும்பினார். இதற்காக அவரின் பிருஷ்டப் பகுதியில், பொலிமர் வகைப் பொருட்களை வைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத சத்திரசிகிச்சை வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மேற்படி பொலிமர் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் கசிந்து அவரின் உடலில் பரவ ஆரம்பித்தன. இப் பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். …
-
- 7 replies
- 667 views
-
-
கோலிக்கு புகைப்படத்தை பரிசளித்த பூணம் பாண்டே மொடல் அழகியும், நடிகையுமான பூணம் பாண்டே இந்திய வீரர்களுக்கு பரிசளிப்பதாக கூறி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உலகக்கிண்ண டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. அப்போது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் பூணம் பாண்டே. இதேபோன்று நேற்று மொகாலியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி அதிரடி காட்ட இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் டுவிட்டரில் பூணம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு…
-
- 5 replies
- 711 views
- 1 follower
-
-
இப்படம்.. தற்கொலை குண்டுதாரின்னு டம்மி பாமை வைச்சு விளையாட்டுக்காடியவருடன் பயணி ஒருவர் (பெயர் Ben Innes.. ஸ்காட்லாந்தில் வசிப்பவர்... இங்கிலாந்தைச் சேர்ந்தவர்) எடுத்துக் கொண்ட செல்பி. செல்பி எடுத்தவர் விமானப் பணியாளராம். பார்க்க எல்லாருமே சேர்ந்து போட்ட நாடகம் போல் தெரிகிறது. ஒருவேளை எகிப்த் விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை இனங்காட்ட கூட இது நடத்தப்பட்டிருக்கலாம். என்ன நாடகமோ..?! A man who posed for a picture with an alleged hijacker wearing a suspected suicide belt has said he was trying to get a better look at the device. The image of Ben Innes, grinning next to his captor on the Egyptair flight, has gone viral on social media. Mr Inn…
-
- 1 reply
- 371 views
-
-
‘குண்டு யானை’ என்று மனைவி திட்டியதால் விவாகரத்து - டில்லி மேல்நீதிமன்றம் தீர்ப்பு கணவனை, ‘குண்டு யானை’ என்று சொல்லி மனைவி இழிவுபடுத்தியுள்ளார். எனவே, அவர்களுக்கு விவாகரத்து அளித்தது செல்லும் என டில்லி மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப்பில் டில்லி மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மனைவியால் அடக்குமுறைக்கு ஆளானதாகவும், தன்னால் தாம்பத்ய உறவில் திருப்தியளிக்க முடியவில்லை என மனைவி குற்றம்சாட்டுவதாகவும் கணவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 5 replies
- 572 views
-
-
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த தந்தைக்கு, 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி நபர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தர…
-
- 0 replies
- 257 views
-
-
மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 302 views
-