செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து …
-
-
- 7 replies
- 486 views
-
-
கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…
-
- 0 replies
- 486 views
-
-
ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி. இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தான் …
-
- 0 replies
- 486 views
-
-
மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..! மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500. நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங…
-
- 0 replies
- 486 views
-
-
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…
-
- 0 replies
- 486 views
-
-
நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை சிறையை உடைத்து, வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பலாத்கார சம்பவம் தொட…
-
- 2 replies
- 485 views
-
-
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி நாஸி படைகள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள தங்கம், வைரம், கரன்சி புதையலை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார். ஜெர்மனியில் நாஸி படைகள் எதிரிகளிடம் இருந்து கொள்ளையடித்த பணம், தங்கம், வைரம் போன்றவை ஜெர்மனியின் பல இடங்களில் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன. இவை பல கோடி டொலர்கள் மதிப்புள்ளவை. இந்த புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி டொலர்கள் மதிப்புள்ள புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார் லியோன். ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் இந்த …
-
- 0 replies
- 485 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம்: சித்தரிப்புக்காக. அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது. பிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர். …
-
- 0 replies
- 485 views
-
-
மெக்ஸிகோவில் திருமணமான காதலி வீட்டுக்குச் செல்ல சுரங்கப்பாதை! கணவரிடம் சிக்கிய காதலன் ஹரீஷ் ம மெக்ஸிகோ - சுரங்கம் இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டைவிட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு, அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவிலுள்ள பிரபல பாலத்தை அடைவதற்கான பாதையைக் …
-
- 3 replies
- 485 views
-
-
-எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
- 1 reply
- 485 views
-
-
நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர் ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 06:06 மிச்சிகன் : "இப்படியும் நடக்கலாம்' என நாம் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் விரைவாக அரங்கேறிவிடும். ஒருசில நிகழ்வுகள் எதிர்பாராமல் நடந்தாலும், பல நிகழ்வுகள் உள்நோக்கம் காரணமாக நடக்கின்றன என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வும் இப்படிப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது, "மவுன்ட் கிளமென்ஸ் பப்ளிக் லைப்ரரி!' கடந்த 1934ம் ஆண்டு இந்த நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதிக்கு வந்த மெக்கி என்ற 13 வயது சிறுவன், "எ டாக் ஆப் ப்ளான்டர்ஸ்' எனும் பெயரில் மேரி லூயிஸ் என்பவர் எழுதிய கதை புத்தகத்தை எடுத்து சென்றான். வீட்டுக்கு சென்று ப…
-
- 0 replies
- 485 views
-
-
ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர் தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள். இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்யக் கூடாத ஒன்றை துணிந்து செய்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரிய…
-
- 8 replies
- 484 views
-
-
இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..!!! இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக ஆபாசப் பட நடிகை ரினி கிரேஸ் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 10:45 AM சிட்னி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர் ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். குறிப்பாக 2015-ல் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது. கொரோனா ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இன்றி தவித்து உள்ளார். அப்போது அவருக்கு ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன. முதலில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கினாலும், அதிக வருமானம் வரும் என்பதால் சில படங்களில் நடித்து முடித்…
-
- 0 replies
- 484 views
-
-
இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂
-
- 0 replies
- 484 views
-
-
Published By: VISHNU 12 FEB, 2024 | 09:36 PM கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்திலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. கால்பந்துபோட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்தில் நின்ற 35 வயதான வீரர் மேல் மின்னல் தாக்கியுள்ள நிலையில் குறித்த வீரர் மைதானத்திற்குள் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கால்பந்துபோட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 484 views
- 1 follower
-
-
கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை வரிக்குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை வரிக்குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது நான் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரிகளுக்கு பதில் வரிக்குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வ…
-
- 1 reply
- 484 views
-
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்! 22 Jan, 2026 | 11:10 AM அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப் (Sabina Yusuf) என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சபீனா யூசப் என்ற பெண் நேற்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமானார். 41வது திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் உலகில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர். சபீனா யூசப் என்ற பெண் “திருமதி இலங்கை உலக அழகி 2025” பட்டத்தை முடிசூட்டி…
-
-
- 5 replies
- 484 views
- 1 follower
-
-
உயரமான முன்னாள் போராளிக்கு- பதிவுத் திருமணம்!! புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையிலேயே இன்று சட்டப்பூர்வம…
-
- 0 replies
- 484 views
-
-
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரம் தண்டம் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வானம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவும் இருக்கவில்லை. மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரம் இல்லாமல் வீதியில் வாகனம் செலுத்திச் சென்றமை, வாகன வரிப் பத்திரம் இல்லாமல் வாகனத்தை எடுத்துச் செ…
-
- 1 reply
- 484 views
-
-
உடுப்பிட்டியில் மோதல் -இராணுவப் பாதுகாப்பு September 8, 2021 உடுப்பிட்டியில் கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து காவல்துறையினரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை காவல்துறையினரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக…
-
- 0 replies
- 484 views
-
-
ரூ.21 லட்சம் பணத்துடன் சீனரின் சடலம் எரிப்பு: மகன்கள் கைவிட்டதால் கடைசி ஆசை சீனாவில், ஒரு மனிதரின் கடைசி ஆசைப்படி அவர் சேமித்து வைத் திருந்த சுமார் ரூ.21 லட்சம் அவரின் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் பட்டது. அவரின் இரு மகன்கள் அவரைப் புறக்கணித்ததால், பணத்தையும் தன்னுடன் சேர்த்து எரிக்க வேண்டும் என அவர் தனது கடைசி ஆசையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி தாவோ. இவர் தனது சேமிப்பான ரூ.21 லட்சத்தை தனது மகன் களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. அவரின் இறுதிக்காலத் தில் இரு மகன்களும் அவரைக் கவனித்துக் கொள்ளாதது அவ ருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் விவசாய நிலத்ததை இரு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவ…
-
- 3 replies
- 484 views
-
-
ஆபாச வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் கிம் கதர்ஷியனுடன் ட்ரம்ப் மனைவி ஆபாச வலைத்தளம் ஒன்றில் கடந்த ஆண்டு மிக அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மொடல் அழகி கிம் கதர்ஷி யன் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்பின் மனைவி மெலானியா 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மிக பிரபலமான ஆபாச வலைத்தளம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் அல் லது காட்சிகள் எதுவும் இணையத்தில் பதிவேற்றப்பட் டுள்ளனவா என்ற தேடலின் ஒருபகுதியாக குறித்த வலைத்தளம் இந்த பிரபலங்களின் பெயர்களை பட்டிய லிட்டுள்ளது. இதில் அமெரிக…
-
- 3 replies
- 483 views
- 1 follower
-
-
ஹிட்லர் - மர்மங்களின் புதையல்! ஹிட்லர் என்ற தனிமனிதனை ஆராய்வது சுவாரசியமானது. காரணம், ஹிட்லரைச் சுற்றி இப்படி பல சர்ச்சைகள் சூழ்ந்திருப்பதால் தான். இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க 00:00 00:00 வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் Advertisement: 0:15 Close Player 'மகனே. இதுவரை உன் தந்தை யார் என்று ஒருபோதும் உன்னிடத்தில் நான் சொல்லியது இல்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நான் இன்று ஒரு உண்மையை உனக்கு சொல்கிறேன். எனது இளமை காலத்தில் ஒர…
-
- 0 replies
- 483 views
-
-
வறுமை எனக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்வது மூடத்தனமாகும் - அச்சாறு விற்கும் மொஹமட் சாஜகான் சிலாபம் திண்ணனூரான் பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத்தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது. இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்…
-
- 0 replies
- 483 views
-
-
ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன் ஜேர்மனிய ரயிலொன்றின் கழிவறைத் தொகுதியில் இளைஞன் ஒருவன் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்டதால் பொலிஸார் அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நிர்வாணமாக கத்தியுடன் திரிவதை ரயில் அதிகாரி ஒருவர் கண்டதையடுத்து அவர் உடனடியாக பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தார். டுவெசெல்டோர்வ் ரயில் நிலையத்தில் மேற்படி ரயில் நின்றபோது, பொலிஸார் ரயிலுக்குள் புகுந்தனர். அப்போது மேற்படி இளைஞன் தனது அந்தரங்கப் பகுதியை “ஷேவ்” செய்துகொண்டிருந்தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்…
-
- 4 replies
- 483 views
-