Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 68 வருடங்களின் பின்னர் சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார். இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது. இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும். இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த சந்…

  2. டெல்லி மோன்கோல்புரி ( Mongolpuri in north-west Delhi ) என்ற இடத்தில் நேற்று 7 வயது பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் தொடர்பாக 2 ஆசிரியர்கள் மற்றும் காவலாளி ஒருவரைப் பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13013:new-delhi-minor-girl-raped-inside&catid=37:india&Itemid=103

    • 0 replies
    • 471 views
  3. எஸ்.மாறன் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டியெடுத்து அதிலிருந்து அவயங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சடலங்களைத் தோண்டி எடுத்த இனந்தெரியாதோர் அந்த சடலங்களிலிருந்து அவயங்களை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் பாண்டிருப்பு அன்புவெளிபுரம் கடற்கரை வீதியில் உள்ள இந்து மயானத்தின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற பொதுமக்கள் புதைகுழிகள் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த மயானத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் ஆரம்பக்கட்ட…

  4. யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/

  5. பிரான்ஸின் தென்பகுதியில் பிறந்த மேனியாக திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த கன்னிகாஸ்திரிகளுக்கு சங்கடத்தைத் தந்த ஐரிஷ்காரர் ஒருவரை பொலிசார் கண்டித்துள்ளனர். ப்ரொவான்ஸ் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள கன்னிகாஸ்திரி மடம் ஒன்றுக்கு அருகே ஒரு ஆண் நிர்வாணமாக அலைகிறார் என்று பலமுறை பொலிசாருக்கு ஒரு கன்னிகாஸ்திரி புகார் கூறியிருந்ததாக அந்த மடம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார். காற்றாட நடப்பதற்காக தான் அவ்விடத்துக்குச் சென்றதாகக் கூறும் இந்த நாற்பத்து ஆறு வயது ஆண், தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மலைச்சாரலில் இருந்து இயற்கையை ரசிப்பது நான் மட்டும் அல்ல, அங்கு மற்றவர்களும் இருந்தார்கள் என்பதை அந்நேரம் தான் உணர்ந்திருக்கவில்லை என பொல…

  6. கருணா மீது தாக்குதல்….?? March 12, 201511:49 am கருணா என்கின்ற முரளிதரன் மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியுள்ளது. இவர் கொள்ளுப்பிட்டி க்கு அண்மையில் உள்ள இரவு விடுதிக்கு சென்றதாகவும் இவரை பின் தொடர்ந்தவர்கள் திடீரென்று இவரை தள்ளி விழுத்தி இவரின் தலையிலும் முகத்திலும் தாக்கி விட்டு இரண்டு மோட்டார் சயிக்கில்களில் தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவரின் பாதுகாப்பு பொலிசார் இவரின் பிரத்தியோக வாகனத்திலேயே இருந்ததாகவும், கத்திய சத்தத்தினை கேட்டு இறங்கி ஓடி வருவதுக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இப்படி ஒரு செய்தி முகநூலில் பரவுவதுடன் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. http://www.jvpnews.com/srilanka/100817.html

  7. புது வருடம் 02 - 04 - 2012 பொதுவாக தைமாதம் முதாலம் திகதியே ஆங்கில புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. தமிழர்கள் தை மாதம் 14 ஆம் திகதியை இல்லை சித்திரை 14 ஆம் திகதியை புதுவருடமாக பார்க்கின்றோம். ஆனால், வர்த்தக ரீதியில் 02 -04 -2012 அன்றே புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. அன்று நாலாவது காலாண்டு முடிவடைந்தது. நிறுவனங்கள் தமது கணக்குப்புத்தகத்தை மூடி புதிய ஆண்டினை திறக்கின்றன. பல நிறுவனங்கள் தமக்குள் உள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக பலரை இன்றுடன் வேலையால் நிறுத்தியுள்ளன. அதேவேளை பல நிறுவனங்கள் பலரை புதிதாக வேலைக்கு அன்று அமர்த்தவுள்ளன.

    • 0 replies
    • 470 views
  8. பாலங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா தீவுகள் விற்பனை, நகரங்கள் மற்றும் கிராமங்கள் விற்பனை செய்வதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாட்டின் பாலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிவீர்களா? அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள 11 பாலங்கள் விற்பனை செய்ய அம்மாநிலத்தின் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. பென்சில்வேனியாவில் வரலாற்று முக்கியத்துவமிக்க பழைமையான பாலங்களே விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நவீன போக்குவரத்துக்கு இப்பாலங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதே இதற்கு காரணம். 100 வருடங்களுக்கு முற்பட்ட 252 அடி நீளமும் 16 அடி அகலமான பாலம் உள்ளிட்ட ஏனைய பழைமையான பாலங்களும் இவற்றில் அடங்குகின்றன. இதனால் இப்பாலங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கு விரும்ப…

  9. இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர். இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது. உதவும் விருப்பம்…

  10. சாக்கடையில் மோதிரத்தை தவறவிட்ட காதல் ஜோடியை கண்டுபிடித்த நியுயோர்க் பொலிஸ்! நியூயார்க்கில் காதல் ஜோடியொன்று நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொள்வதற்கு வைத்திருந்த மோதிரம் ரைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சாக்கடையில் தவறிவிழுந்தது. இந்தநிலையில் நியூயார்க் பொலிஸ்துறை முதலில் மோதிரத்தை கண்டுபிடித்தது. பிறகு அதைத்தவற விட்ட ஜோடியையும் கண்டுபிடித்து அவர்களிடம் மோதிரத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ரைம்ஸ் சதுக்கத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மோதிரத்தை மாற்றிக்கொண்டு திருமண நிச்சயம் செய்து கொள்ள முடிவெடுத்து மோதிரத்தை பயணப் பையில் இருந்து எடுத்த போது அதைத்தவறவிட்டது. சிசிடிவி காணொளியின் ஊடாக அந்த ஜோடியானது மோதிரத்தை எடுக்க பல முறை …

    • 1 reply
    • 470 views
  11. கனடா செய்தி பொலிஸ் அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்து "எஸ்கேப்" ஆன இளம்பெண்கள் சுற்றிவளைப்பு (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 01:07.32 பி.ப GMT ] கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இரு இளம்பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள பிரம்டன்(Brampton) நகரில் உள்ள பள்ளி ஒன்றின் தடை செய்யப்பட்ட இடத்தினுள், நேற்று முன் தினம் இளம்பெண்கள் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்களை கைது செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதை கவனித்த அவ்விரு பெ…

    • 3 replies
    • 470 views
  12. ஹுங்­கம ரன்னப் பகுதி கிரா­ம­மொன்றில் 15வயது சிறு­வ­னுடன் தன்­னின சேர்க்­கையில் ஈடு­பட்­டி­ருந்த 59வயது குடும்­பஸ்தர் உட்­பட நால்­வரை ஹுங்­கம பொலிஸார் வியா­ழக்­கி­ழமை கைது செய்­துள்ளார். பாதிக்­கப்­பட்ட சிறு­வனை பிர­தேச மக்கள் மீட்டு ­பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­த­தை­ய­டுத்து சிறு­வ­ன் தக­வலின் பேரில் நால்வர் கைது செய்­யப்­பட்டார். சந்­தேக நபர்­களை அங்குணுகொல­பெ­ல­ஸ்­ஸ நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கி­றார்கள். பாதிக்­கப்­பட்ட சிறுவன் அம்­பாந்­தோட்டை ஆஸ்­பத்­தி­ரியில் சிகிச்சை பெற்று வருகின்றான். பொலிஸார் விசாரணை தொடர்கின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5185

  13. திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…

  14. கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை மையப்படுத்தி செயல்படும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சீனாவில் உருவானகொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை …

  15. வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…

  16. இலங்கையில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை எகிப்திய தலைநகர் கெய்றோவில் 2012 ஆண்டுக்குரிய அறிக்கையினை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை தருகின்றோம் : கடந்த வருடத்தில் இலங்கை அரசு, நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் த…

  17. எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக் கூடாது. கண் முன்னே உட்கார்ந்து கொண்டிருக்கும் மகளைப் பார்த்து நீ என் மகளா எனக் கேட்கிறார் ஒரு தாய் . காரணம், அவரை பீடித்துள்ள ஒரு அரிய வகை ஞாபக மறதி நோய். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. . 7 வருடங்களாக இந்தக் கொடுமையான ஞாபகமறதி நோயுடன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார் விர்ஜினியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. வீட்டில் இருக்கும் கணவரையும் , தான் பெற்றெடுத்த மகளையும் கூட பெண்மணியினால் அடையாளம் காணமுடியவில்லை. அந்த பெண்மணியின் பெயர் ஷான்டா ரஷ். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கம் போல் ஒருநாள் காலையில் அவர் விழித்தெழுந்தபோது அவருக்கு மனதில் எந்த நினைவுமில்லை. தான் யார், தான் எங்கிருக்கிறோம், தன்னுடன் உள்ளவர்கள் யார் என்பது கூட அவருக…

  18. சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html

  19. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MqxIS-s-9k8

  20. யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594

  21. மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர். இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

  22. காமிரா கைத்தொலைபேசிகளை வைத்து தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிபவர்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த மாதிரி சுய படங்களை ஆங்கிலத்தில் செல்பீ ( selifie) என்கிறார்கள். நீங்கள் உங்களை எடுத்துகொண்ட செல்பீ படத்துக்கான காப்புரிமை உங்களிடம்தான் இருக்கும். ஆனால் ஒரு குரங்கு தன்னைத்தானே எடுத்துகொண்ட படத்துக்கு சொந்தம் கொண்டாட யாருக்கு உரிமை இருக்கிறது? காமிரா போனின் உரிமையாளருக்கா, குரங்குக்கா ? இந்த விசித்திரமான வழக்கை விக்கிப்பீடியா சந்திக்கிறது. விக்கிப்பீடியா பக்கங்களில் உள்ள அபூர்வமான கறுப்பு மக்காக் இன குரங்கு பிரிட்டிஷ் புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டரின் காமிராவைப் பறித்து தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டதாம். இது இந்தோனேசியாவில் 2011ல் நடந்த…

  23. அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது. காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவர…

  24. சீனாவின் தொழில்­நுட்ப பாது­காப்பு நிறு­வ­ன­மொன்று தம்மிடம் பணி­யாற்றும் ஊழியர் ஒரு­வ­ருக்கு வித்­தி­யா­ச­மான போனஸை வழங்க முன்­வந்­துள்­ளது. இந்­நி­று­வனம் ஒவ்­வொரு வருடமும் தனது ஊழி­யர்­க­ளுக்கு போனஸ் வழங்­கு­வதை வழக்­க­மாக கொண்­டுள்­ளது. கடின உழைப்பை வழங்கும் தமது ஊழி­யர்­க­ளுக்கு பொது­வாக பண வெகு­ம­தி­க­ளையே அந்­நி­று­வனம் வழங்கும். ஆனால், இம் முறை சீனப் புத்­தாண்டு பிறப்பை முன்­னிட்டு, வரு­டத்தின் மிகச் சிறந்த ஊழி­ய­ராக தெரி­வு­செய்­யப்­படும் ஒரு­வ­ருக்கு ஒரு வித்­தி­யா­ச­மான முறையில் ஆபாச நடி­கை­யொ­ரு­வ­ருடன் மாலைப்­பொ­ழுதை கழிக்கும் வாய்ப்பை வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­துள்­ளது. இந்த ஊழியர் மாலைப் பொழுதை கழிப்­ப­தற்­காக சீனாவில் பிர­ப­ல­மான …

  25. உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள்; சிரிக்கும் கன்னியாஸ்திரி; அதிசயிக்கும் மக்கள் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கன்னியாஸ்திரி உடல் கெடாமல் அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர். இவர் தனது 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க தோண்டி எடுத்துள்ளனர். அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.