Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்த…

  2. சிங்கள தமிழ் புதுவருடகாலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட புதுவருட விளையாட்டு விழா, வென்னப்புவ வைக்கால் பிரதேசத்திலுள்ள உல்லாசப் பயண ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல், தலையணை அடித்தல், கிடுகு இழைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இந்த உல்லாசப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனைத்துப் போட்டிகளிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரண்வெளி உல்லாசப் பயணிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. http://metronews.lk/article.php?ca…

    • 0 replies
    • 515 views
  3. 12 வயது சிறுமியொருவர் சிசுவொன்றை பிரசவித்த சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சிசுவின் தந்தை, 13 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரசவமானது, அந்நாட்டு மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 12 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை 7 எல்.பீ அதாவது 3.175 கிலோ கிராமை கொண்டதாக இருக்கின்றதாம். இந்த குழந்தையின் பெற்றோரே பிரித்தானியாவின் இளம் பெற்றோர் என அந்நாடு அறிவித்துள்ளது. 12 வருடமும் 3 மாதமும் உடைய சிறுமியும், குறித்த சிறுமியின் வீட்டின் அயல் வீட்டில் இருக்கும் 13 வயதுடைய சிறுவனும் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமி 11 வயதாக இருக்கும் போதே அவர் கர்ப்பம் தரி…

  4. இலங்கை கிளிநொச்சியில் ஈழத்தமிழனும், சிங்களவனும் சேர்ந்து சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடிட்டு இருக்காங்க மகிழ்ச்சியாக!! உண்மையாகவே இப்படி நடந்ததா?

  5. பிரித்தானியாவின் லண்டன் நகரில் மர்மப் பெண்ணொருவர் நாய் போன்று பட்டி அணிவித்து, ஆணொருவருடன் உலா வந்த சம்பவமொன்று கடந்த வாரம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த இணையத்தளங்களில் மாறுபட்ட தகவல்கள் உலாவந்தது. ஆனால் தற்போது அதன் உண்மை நிலைவரம் வெளியாகியுள்ளது. மக்களின் வெளிப்பாடுகளை அறியும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடிப்புத் திட்டம் இதுவென குறித்த மர்மப் பெண் தெரிவித்துள்ளார். இந்த மர்மப் பெண்ணின் பெயர் ஈடன் அவிடல் அலெக்ஸாண்டர். இவர் 20 வருடங்களாக மேடை நாடக நடிகையாக உள்ளார். இது தொடர்பில் அலெக்ஸாண்டர் கூறுகையில், மக்கள் வெளிப்பாடுகளை படமாக்கி அவற்றில் சிறந்தவற்றை 3 நிமிடங்களாக வெட்டப்பட்டுள்ளது. ஒருவர் எனது நாயை கெமராவுக்கு சிரிக்க சொல்லுமாறு கேட்டா…

  6. வயாகரா ஐஸ் கிரீம் தயாரிக்கும் இங்கிலாந்து நிறுவனம் - பணக்கார வாடிக்கையாளருக்கு மட்டுமே விற்குமாம்! [Thursday, 2014-04-17 10:50:06] ‘ஐஸ் கிரீம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நெஞ்சங்களில் ஒருவித ஆனந்த கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கையானது. அந்த ஐஸ் கிரீமில் ஆண்மை குறைப்பாட்டை சமன் செய்யும் ‘வயாகரா’வும் சேர்ந்தால்… இந்த நினைப்பே குடுகுடு கிழவரையும் கிளுகிளுப்புகுள்ளாக்கி விடுமல்லவா? இவ்வகையிலான இன்ப கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ’லிக் மி- ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட…

    • 5 replies
    • 436 views
  7. -எஸ்.ரவீந்திரன் தேங்காய்க்கு 3 கண்கள்தான். ஆனால் வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை மரம் ஒன்றிலிருந்து இவ்வாறான தேங்காய்கள் பறிக்கப்பட்டன. இரு தேங்காய்களில் ஒன்றில் 2 கண்களும், மற்றையதில் 4 கண்களும் காணப்பட்டன. உரிமையாளர் இரு தேங்காய்களையும் கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106834-2014-04-15-05-01-57.html

    • 7 replies
    • 1.7k views
  8. 100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…

  9. வாட்டிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் சமாதானப் புறாக்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற பருந்தை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலய நிர்வாகம் முடுவு செய்துள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக, ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன. இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக, இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப…

  10. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நபரொருவர் டுபாயில் நடைபெற்ற விரைவாக தோசை உண்ணும் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். இப்போட்டியில் பெண்ணொருவர் உட்பட 25 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 1.25 மீற்றர் நீளமான தோசை ஏனையோரை விட விரைவாக உண்டு இந்தியாவைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவர் வெற்றிபெற்றார். இவர் இந்தியாவின் சமயல்காரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். போட்டியில் பங்குபற்றிவர்களில் ஷாஜஹான் உட்பட 5 பேர் மாத்திரமே விரைவாக உண்ணுவதில் போட்டியாக இருந்துள்ளனர். ஏனையோர் தோசையை ஆறுதலாக உண்டு மகிழந்தனர். தோசை பிளாஷாவில் நடைபெற்ற இப்போட்டியை சுப்பர் எப்.எம். என்ற மலையாள வானொலி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. போட்டியின் நடுவே நீர் அருந்த அனுமதிக்கப்பட்டமையினால் யாருக்கும…

  11. ஓவியர் ஒருவர் தனது உருவத்தை பிறரின் கண்ணுக்கு புலப்படாதவாறு தத்ரூபமாக வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்பவரே இவ்வாறு கண்ணுக்கு புலப்படாதவாறு தன்னை பல்வேறு தளங்களில் வரைந்துள்ளார். பல்பொருள் அங்காடி, புத்தகச்சாலை, புகையிரத நிலையம் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் இவர் புலக்காட்சிக்க தெரியாமல் நிற்கிறார். இவ் ஓவியங்களை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே நபர் ஒருவர் நிற்கும் காட்சி எமக்கு புலப்படும். ஒரு மனிதனால் எவ்வாறெல்லாம் தன்னை மறைத்து வைக்க முடியும் என்பதனை இவரது ஓவியங்கள் வலியுறுத்துகின்றன. http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106498-2014-04-10-05-41-13.html

  12. இந்தப் படத்தை... இணையத்தில் பார்த்த போது, அதிர்ச்சி ஏற்பட்டது. இப் பெண்ணின் மார்பகம், மார்பில் வளராமல்... வயிற்றில் வளர்ந்துள்ளது. இதனால்... இவர் எத்தனை, சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார் என்று உணரக் கூடியதாக உள்ளது. எனது சந்தேகம், என்னவென்றால்... இப்படம் உண்மையானதா? அல்லது படத்துக்காக ஏதாவது "கோல்மால்" செய்துள்ளார்களா... என்பதனை, உங்கள் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

  13. 3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார். இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது குழந்…

  14. பாரிஸ்: கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் க…

    • 1 reply
    • 636 views
  15. பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த போட்டியை கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபர்ட்டி பிளாஸா கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாரியளவான திரையில் பலரும் கண்டுகளித்துகொண்டிருந்துள்ளனர். அங்கு போதையிலிருந்த இளைஞன் ஒருவர், இலங்கை அணி வெற்றிப்பெற்றதையடுத்து ஆடைகளை களைந்து உடலில் ஒருதுண்டு துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத…

  16. 15 வயது மாணவியை காதல் விவகாரத்தில் கொலை செய்த இளைஞரை மக்கள் அடித்தே கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் சங்கீதா (15). நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்௧ படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் இளையான் என்பவது மகன் சின்ராஜ் (19). கட்டிட கூலி தொழிலாளியாவார். கடந்த ஆண்டு நவம்பரில் சங்கீதாவின் செல்போனுக்கு 50ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிடுமாறு சின்ராஜிடம் செல் நம்பரை கொடுத்துள்ளார். இதன் மூலம் அதன்பிறகு சங்கீதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய அவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் தந்தை கந்தசா…

    • 3 replies
    • 834 views
  17. கையில் மக்டொனால்ட் உணவக பற்றுச்சீட்டை பச்சை குத்திக்கொண்ட இளைஞர் நோர்வேயைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது கையில் மக்டொனால்ட் பற்றுச்சீட்டொன்றை நிரந்தரமாக பச்சை குத்திக்கொண்டுள்ளார். வடமேற்கு நோர்வேயிலுள்ள லோரன்ஸ்கொக் நகரைச் சேர்ந்த சிரியன் யட்டர் டஹ்ல் என்பவரே தனது நண்பர் ஒருவருடனான சவாலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தனது கையில் இவ்வாறு பச்சைக்குத்திக்கொண்டுள்ளார். மேற்படி இளைஞரின் இந்த பச்சைகுத்தும் நடவடிக்கையால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8…

  18. சென்னை: ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகை, கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகம…

  19. http://www.youtube.com/watch?v=DzepAjGaQ38#t=57

  20. -மு.இராமச்சந்திரன் டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும் காவலாளி உட்பட நான்கு பேரே குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய கோவேறு கழுதை பங்களாவை விட்டு வெளியில் ஓடியுள்ளது. அந்த கழுதை நேற்றுவரை பங்களாவுக்கு திரும்பவில்லை. இந்நிலையிலேயே அந்த கோவேறு கழுதை இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் முகாமையாளர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…

  21. பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பாரன்குல்லா, கொலம்பியா: கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மானுவல் சான்டோஸின் உடல் நலம் குறித்து அந்த நாட்டில் ஏற்கனவே பல வதந்திகள் உலா வரும் நிலையில் கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பேன்ட்டிலேயே சிறுநீர் போனது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 62 வயதாகும் சான்டோஸ், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரசாரக் கூட்டத்தில் பாரன்குல்லா என்ற நகரில் அவர் கலந்து கொண்டார். அப்போது திரளான மக்கள் முன்பு நின்றபடி அவர் பேசினார். பேசிக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டார். சி…

  22. லண்டன் சிறையில் படுக்கை வசதி இல்லையாம் - குண்டு வாலிபர் விடுதலையானாா்! [saturday, 2014-03-29 14:54:37] இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிக குண்டு மனிதரான அவர் 7 அடி 2 இஞ்ச் உயரம் இருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்த…

  23. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 இசை நிபுணர்களின் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி: ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump), பேக் டு த ஃப்யூச்சர் (Back to the Future), தி அவெஞ்சர்ஸ் (The Avengers) படங்களின் இசையமைப்பாளர். 24. வாஞ்சலிஸ் : ப்ளேட் ரன்னர் (Blade Runner), சேரியட்ஸ் ஆப் பையர் (Chariots Of Fire) போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர். 23. ஜேம்ஸ் நியூட்டன் - ஹோவர்ட் எட்டு முறை ஆஸ்கருக்கு…

  24. [saturday, 2014-03-29 14:42:34] சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று வல்லுறவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது இந்த பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் இவரக்கு ஜெயில் விதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=106703&category=WorldNews&language=tamil

  25. காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.