செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
எனக்கென்னவோ இதைப்பார்க்க என் தலைவன் தான் ஞாபகம் வந்தார் https://www.facebook.com/ankavai/videos/10158406607179506
-
- 1 reply
- 400 views
-
-
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை மக்களிடம் உள்ள வாசிப்பு பழக்கத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ‘அவான்ஸ் பீல்டு அண்டு பிராண்டு சொலூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட…
-
- 0 replies
- 400 views
-
-
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வழிபடும் சிவன் கோவிலிலுக்குள் புகுந்து சிங்கள ராணுவ வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருகின்றனர். இலங்கை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான தமிழர்கள் வருவார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அந்த கோவிலுக்குள் அதிரடியாகப் புகுந்து கருவரை அருகே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ஆண், பெண் பக்தர்களை அடித்து விரட்டினர். பிறகு அர்ச்சகரிடம் சென்று கோவிலுக்குள் பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது, அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கோவிலை இடித்து தர…
-
- 0 replies
- 399 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு அபுதாபி அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் மிக பிரபலம்.வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.அந்த வகையில், கடந்த ஜனவரி 26 - ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை அவர் பரிசாக வென்றுள்ளார். தற்போது, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள…
-
- 0 replies
- 399 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காபி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இந்த வார இறுதியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த காபி தயாரிக்கும் கருவியை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முதல் இத்தாலிய பெண் விண்வெளி வீராங்கனையான, சமாந்தா க்ரிஸ்டொஃபொரெட்டியால், இந்த இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் எஸ்பிரஸ்ஸோ காபியை முதன் முதலாக விண்வெளியில் சுற்றுப்பாதையில் அனுபவிக்க முடியும். சமாந்தா கிரிஸ்டொஃபொரெட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராக்கெட் ஒன்றின் மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மூன்று விண்வெளிவீரர்களில் ஒருவர். இந்த 20 கிலோகிராம் எடையுள்ள காபி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள எஃகுப் பாகங்கள் பெரும் அழுத்தங்களைச் சமாளிக்க வல்லவை. அதில…
-
- 0 replies
- 399 views
-
-
ஜேர்மனியில் பேய் ஓட்டும் நடவடிக்கை : பெண் உயிரிழப்பு ஜேர்மனிய பிராங்போட் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இடம்பெற்ற பேய் ஓட்டும் நடவடிக்கையின் போது கொரிய பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து அவரது 15 வயது மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிராங்போட் நகரிலுள்ள இன்டர்கொன்ரினென்டல் ஹோட்டலில் இரவொன்றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாடகைக்கு அறையொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்கிரமத்தின் போது குறிப்பிட்ட பெண் கட்டிலில் கட்டி வைக்கப்பட்டு மோசமாக அடித்து உதைக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியி…
-
- 1 reply
- 399 views
-
-
http://www.liveleak.com/view?i=049_1425261519 வீடற்ற மனிதன், பொலிஸாரால் சுட்டுக்கொலை: வீடியோ அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற வாய்தர்க்கம் ஒன்றின்போது, வீடற்ற நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸின் ஸ்கிட் றோ பகுதியில், வன்முறையை அடுத்து நபரொருவர், சில பொலிஸ் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன. நபரொருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பிடிக்க முயன்றதையடுத்து, மூன்று அதிகாரிகள் குறித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட நபர், ஆபிரிக்காவை சேர்ந்தவர் எனவும் மனநோய் சிகிச…
-
- 0 replies
- 399 views
-
-
மாடுகள் கொல்லப்பட வேண்டும் “எங்கள் நாட்டு பட்டர் மிகவும் சுவயானவை. ஏனெனி்ல் எங்கள் மாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன” என்று ஐயர்லாண்ட், பட்டருக்காக விளம்பரம் செய்கிறது. ஆனால் 19.06.2023 ஐயர்லாண்ட் நாட்டால் இருந்து வந்த செய்தி அதற்கு நேர்மறையாக இருந்தது. மாடுகளுக்கு ஒருவேளை படிக்கத் தெரிந்திருந்தால் அந்தச் செய்தியை வாசித்து அவைகள் மகிழ்ச்சியைத் தொலைத்து கண்ணீர் வடிக்கும் . பட்டர்களும் கூட இனி சுவை குறைந்து போகும். காபனீர்ஒக்சைட் வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டை விட 2050 ஆம் ஆண்டளவில் 80 சதவிகிதத்தால் குறைக்கும் நோக்கை ஐயர்லாண்ட் நாடு அடைய வேண்டுமாயின் 200,000 மாடுகள் கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு மாடு ஆண்டுக்கு 100 கிலோக…
-
- 0 replies
- 399 views
-
-
மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்: வவுனியாவில் சம்பவம் வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52) ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில…
-
- 0 replies
- 399 views
-
-
திருட்டு சைக்கிளை... விளம்பரப்படுத்தி, விற்க முற்பட்ட... இளைஞன் கைது! பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி களவு போயிருந்தது. அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் …
-
- 4 replies
- 399 views
-
-
டோக்கியோ: வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி நிலவுவதாலேயே, பிரதமர் அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி வீட்டில் இன்னும் குடியேறாமல் இருக்கிறார் என கூறப்பட்ட வதந்தியை மறுத்துள்ளது ஜப்பான் அரசு. கடந்த 6 மாதக்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷின்சோ அபே. அரசு சார்பில் இவருக்கு தனி வீடு ஒதுக்கப்பட்டும், இன்னும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக நிலவும் அச்சமே பிரதமர் அங்கு குடியேறாதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் 'பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டு…
-
- 0 replies
- 399 views
-
-
சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…
-
- 0 replies
- 399 views
-
-
யுஎஸ்- ரெக்சசில் ஜோன் மில்க்கோவிஷ் என்பவர் 1968-ல் தனது தோட்டத்தை மீளமைப்பு செய்ய ஆரம்பித்த போது தனது வீட்டை 50,000 பியர் குவளைகளை கொண்டு அமைத்தார். 10-வருடங்களிற்கு முன்னர் ஒரு இலாப நோக்கற்ற உள் ஊர் அமைப்பொன்று இதனை புனரமைத்தது. இந்த வீடு தற்சமயம் பொதுமக்களிற்காக திறந்து வைக்கப்பட்டு ஹியுஸ்ரனின் மிகவும் வழக்கத்திற்கு மாறான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக வந்துள்ளது. ஹியுஸ்ரனில் ஒரு சாதாரண வீதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு அசாதாரண வீடாக எழுந்து நிற்கின்றது. வீட்டின் சுவர்களிற்கு 18-மாதங்களிற்கும் மேலாக பியர் குவளைகளை வெட்டியதாக திரு.மில்க்கோவிஷ் தெரிவித்தார். தான் தன் மனைவி மேரி மற்றும் அவர்களது நண்பர்கள் குடித்த பியர் கான்களையே பாவித்ததாகவும் கூறினார். …
-
- 1 reply
- 398 views
-
-
உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லின். கடந்த 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர். கடந்த 77ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இறந்தார். முதல் உலக போரின் போது, தனது பேசும் படங்கள் மூலம் பிரபலமானவர். சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்யும் வகையில் மீசை வைத்து கொண்டு நகைச் சுவையாக நடித்தவர். உலகம் முழுவதும் இன்றளவும் இவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு உள்ளது. இவர் லண்டனில் உள்ள வால்வொர்த் பகுதியில் பிறந்தார் என்று கூறி வந்தனர். எனினும், சாப்ளின் எங்கு பிறந்தார் என்பது சரியாக தெரியாமல் மர்மமாக உள்ளது. இங்கிலாந்தின் எம்15 என்கிற உளவு நிறுவனம், அமெரிக்காவின் சிஐஏவால் கூட சாப்ளின் பிறந்த இடம் குறித்த மர்மத்துக்கு விடை காண முடி…
-
- 0 replies
- 398 views
-
-
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார…
-
- 1 reply
- 398 views
-
-
கனடா- இந்த வார முற்பகுதியில் உலகில் மிக செலவை தாங்கிக்கொள்ள முடியாத நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது வன்கூவர் நகரம். இந்நிலையில் அதிகமான மக்கள் தாங்கத்தகு விலைகளில் வீட்டு வசதிகளை நாடுவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமில்லை. சிலர் புறநகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர வேறு சிலர் அறைகளை பகிர்ந்து கொள்பவர்களை தேடிச் செல்கின்றனர். வாடகை அதிகரிப்பால் சோர்வுற்ற 50-வயது பெண் இசபெல்லா மோரி என்பவர் பொறுப்புக்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சிறிய வீடுகள் கட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்டுநர் ஒருவரை கண்டுபிடித்தார். அவரின் உதவியுடன் 39,000-டொலர்களை செலவு செய்து 9-மாதங்களில் ஒரு 186 சதுர அடிகள் கொண்ட வீட்டின் பெருமைக்குரிய சொந்தக்காரரானார். பல செயல்பாட்டு இடைவெள…
-
- 0 replies
- 398 views
-
-
யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…
-
- 0 replies
- 398 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் தென் பகுதியில் சில இடங்களில் குடி தண்ணீரில் கொக்கெயின் உட்பட்ட பல சட்ட விரோத போதை மருந்துகள் காணப்படுவதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிரான்ட் றிவர் நீர்வடிநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் இருந்து குடி நீரை மாசுபடுத்த சாத்தியமான மார்பின், கொகெயின் மற்றும் ஒக்சிகோடோன் போன்ற போதை மருந்துகள் காணப்படுவதாக McGill-பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆற்று நீரில் குறிப்பிட்ட போதை மருந்துகள் ஒப்பீட்டளவில் ஒரு குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்படும் கழிவு-நீர் சிகிச்சை செயற்பாடுகள் குடிநீரை சுத்தப்படுத்த உதவும் என கூறப்பட்ட…
-
- 0 replies
- 398 views
-
-
கள்ளக் காதலிக்கு, மனைவியின் ஆடையை திருடி கொடுத்த... கில்லாடி கணவர். என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க! கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.ஆனால் வாழ்வதற்கு தேவையான …
-
- 0 replies
- 397 views
-
-
இன்னும் ஒரு வரலாற்றுத் துரோகம் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைக்காகச் சிந்திய இரத்தமும், செலுத்திய உயிர்க் கொடைகளும் விலை கூறி விற்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் ஊண் உறக்கமின்றி, வீதிகளில் தவம் இயற்றி, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்துப் பேசாத நாடுகளையெல்லாம் தமிழீழ மக்களுக்காய்ப் பேச வைத்த பெருமுயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவுப் பிரதிநிதியான சுமந்திரனின் ஏற்பாட்டில் சம்பந்தன் அவர்களால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழினத்தின்மீது நடாத்திய இன அழிப்புப் போரை, குறைந்த பட்சம் போர்க் குற்ற விசாரணையின் அடிப்படையிலாவது உலக நாடுகள் நீதி வழங்கும் என்ற ஈழத் தமிழர்களது அ…
-
- 0 replies
- 397 views
-
-
விசித்திரமான ஒரு இனத்தைச் சேர்ந்த 300 கிலோகிராம் மீன்களை மணமகன் பிடித்துக் கொண்டுவந்தால்தான் அவரை திருமணம் செய்துகொள்வேன் என பெண்ணொருவர் கூறிய சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கத்தீவ் மாகாணத்தைச் சேர்;ந்த இப்பெண், திருமணத்துக்கான 'மஹராக' (இஸ்லாமிய முறைப்படி மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படும் கொடை) இம்மீன்களை கேட்டார் என சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மணமகன் சுயமாக இம்மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் அப்பெண் நிபந்தனை விதித்தாராம். இந்த நிபந்தனையை நிறைவேற்றுவது சாத்தியமில்லாதது எனக் கருதிய மணமகன் திரும்பிச் சென்றுவிட்டார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. - See more at: http://www.metrone…
-
- 1 reply
- 397 views
-
-
சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுவதுடன், மேலும் வதைபடும் நிலைக்க…
-
- 0 replies
- 397 views
-
-
கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
-
-
- 2 replies
- 397 views
- 1 follower
-
-
லக்னோ: உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதிக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர். மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயி…
-
- 0 replies
- 397 views
-
-
சுமை' தாங்கி! - விநோத நோயுடன் வாழும் நினா பார்சன்ஸ் Posted Date : 13:42 (05/01/2015)Last updated : 13:54 (05/01/2015) அமெரிக்காவைச் சேர்ந்த நினா பார்சன்ஸ் (Nina Parsons) என்ற பெண்ணுக்கு 'ஈயிலேர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம்' (Ehlers-Danlos Syndrome) என்ற நோய் தாக்கி உள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களால் அவர்களது தலையைச் சுமக்க முடியாது. கழுத்து எலும்புகள் சக்தியற்று அவர்களது தலையைத் தாங்க முடியாமல் போய்விடும். அது மட்டுமின்றி, மண்டை ஓடு அதிக அளவு அழுத்தம் கொடுத்து மூளையை நசுக்கிவிடும். இதற்குத் தீர்வு என்று ஒன்று இல்லவே இல்லை. பாதிக்கப்பட்ட நினா பார்சன்ஸ் இதுபற்றிப் பேசுகையில், "எனக்கு வந்திருக்கும் நோய்க்கு இதுவரை தீர்வு கண்ட…
-
- 0 replies
- 397 views
-