Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது! இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடியை தாண்டி விட்டது . உலகின் இரண்டாம் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாவாகும். இப்படத்தில் இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையோடு அதே அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளை ஒப்பிட்டு அந்த நாடுகளின் பெயர்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது பிரேசில் நாடு உலகில் 5 ஆவது பெரிய நாடாகும். ஆனால் மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்திற்கு அது சமமானது. அதே போல் தமிழகமும் தாய்லாந்து மக்கள் தொகைக்கு சமமானது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அளவுள்ள நாடுகள் எல்லாம் தங்கள் மொழியை , பண்பாட்டை, இ…

  2. சிட்னி: சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டாஸ் விமானம் குவான்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர். திடீர் வயிற்றுப் போக்கு சான்டியாகோவிலிருந்து கிளம்பிய விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. பயண நேரம் 14 மணி நேரமாகும். சிட்னியை நெருங்கியபோது வயிற்றுப் போக்கு விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வா…

  3. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண…

  4. சென்னை: ஆங்கிலத்தின் தொடர் பயன்பாட்டால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதில் 17 மொழிகள் பழங்குடி மொழிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மொழி ஆய்வு என்றஅமைப்பு நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான புத்தகத் தொகுப்பையும் இந்த அமைப்பு வெளியிட ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலத்தையே பயன்படுத்தி வருவதால் இந்த மொழி பேசுவோர் தங்களது சொந்த பாஷையை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதை இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. செளராஷ்டிரா... இந்த மொழி அழிவுப் பட்டியலில் தஞ்சாவூர் மராத்தி, செளராஷ்டிரா, பெட்டகுரும்பா, எரவுல்லா, இருளா, காடர், கல்ராயன், மலையாளி, கனிகாரன், காட்டுநாயக்கா, கொலிமலா, கோட்…

  5. யார் வியாபாரி? டாட்டா பரம்பரையை பற்றி எல்லோருக்கும் தெரியும். ரட்டன் டாட்டா, அவர் முன்னோர்கள் என அனைவரும் நாட்டிற்காக நிறைய நல்லது செய்திருக்கிறார்கள். இப்போது பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து வந்த பல கோடி ரூபாய்க்கான வர்த்தக உடன்பாட்டை டாட்டா அவர்கள் நிராகரித்திருக்கிறார். அதற்க்கான காரணம் அவர் சொன்னது " இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் எந்த நாட்டுடனும் நாங்கள் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்" என்று. ஆனால் நம் தமிழ் நாட்டிலும் வர்த்தக குடும்பம் (பரம்பரை அல்ல) இருக்கிறது. தமிழர்களை அடித்து கொன்ற இலங்கை நாட்டுடன் விமான சேவை வர்த்தகம் புரிகிறது, கிரிக்கெட் வர்த்தகம் புரிகிறது. இன்னும் என்னென்ன வர்த்தகங்கள் இருக்கிறதென்று அவர்கள் குடும்பதிற்க்கே…

  6. புனே: அழகான சினிமா படம் போலத்தான் இருக்கிறது அந்த இளைஞரின் கதை. பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது ஃபேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார். அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கிவிட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை …

    • 1 reply
    • 391 views
  7. முதலமைச்சரை முட்டியது குட்டியானை :அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால் நிலை குலைந்தார் ஜெயலலிதா ( படங்கள் ) முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி. இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர். உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொண்டனர்…

  8. சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள…

  9. தமிழால் இணைவோம் • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும். • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை. • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. • கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். • ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ். • யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர். • கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி. • இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.ச…

  10. இது கதையில்லை நிஜம் எந்த கற்பனையும் கலக்கபடவில்லை... வன்னியில் உள்ள கிராமம் ஒன்றிற்கு மருத்துவமுகாமொன்றிற்கு சென்றபோது பத்து வயது நிறம்பிய சிறுவன் தாயருடன் வந்திருந்தான். சிகிச்சைக்காக மெலிந்த தோற்றமாக இருந்தாலும் நோயுற்றவன் போலன்றி கம்பிரமாக சிரித்தபடியே இருந்தான்.நீா் நிறைந்து குழமாகிய கண்களை கட்டுபடுத்தியபடியே சொல்ல தொடங்கினாள் அம்மா......... தனது ”மகன் அதிகளவு நித்திரை செய்கின்றான் “இப்பதான் ”கொஞ்ச நாளாத்தான் பள்ளிக்கூடத்தில வீட்டிலயும் காலையிலையே தொடங்கிருவான் இம் முறை ஆண்டு 5 புலமை பரீட்சை எடுக்கவுள்ளான் இதற்கு முதளேல்லாம் பாடசாலை மட்டத்தில் முதலிடத்தில் தான் நிண்டான் .அதிபர் ஆசிரியரும் முறையிடுகினம். வகுப்பில் நித்திரை எண்டு கொஸ்பிரல்லகாட்டியபோது சத்துகாணதெண…

  11. மனைவியை கொலை செய்த சீனர் தூக்கு தண்டனைக்கு முன்பு ...... http://youtu.be/EE5UCqpmZag

  12. டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக 30 வயது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பாதுகாப்புப் படையினர் வந்து காப்பாற்றட்டும் என அலட்சியமாக இராமல், உடனடியாக் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியுள்ளனர் சக பயணிகள். யோசனை... மஞ்சி வாண்டு தான்... ரயிலை லேசாக சாய்த்தால், அப்பெண்ணை உடனடியாக மீட்டு விடலாம் என அங்கிருந்த சிலர் ஐடியா கொட…

    • 8 replies
    • 731 views
  13. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்சுக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவில் ஜான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது மகன் பாட்ரிக் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்த கொடிய நோய் தாக்குதலால் சிறுவனுடைய தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது. இவனுக்கு தனது ஆறுதலை தெரிவிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது தலை முடியை தியாகம் செய்து, மொட்டை போட்டுக்கொண்டார். அவரை போலவே பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மொட்டையடித்துக் கொண்டார்கள். இந்த ரத்த புற்றுநோயானது 4 விதமான புற்று நோய்களில் ஒன்றாகும். புஷ்-லாரா தம்பதியரின் 2வது மகன் 4 வயது இருக்கும் போது இதே புற்றுநோய் தாக்…

  14. டோபோர்ச்சி மரம்-Toborochi Tree. இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை... அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள் Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம். இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து வந்து விடுகிறதாம். பிறகு டோபோர்ச்சி…

  15. இந்தியாவில் இருந்து 1941ம் ஆண்டு ஏராளமாக செல்வங்களை அள்ளிச் சென்றபோது, அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிய இங்கிலாந்து சரக்கு கப்பலில் இருந்து தற்போது 61 டன் வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளையரின் ஆளுமைக்கு உட்பட்ட அடிமை நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து ஏராளமான செல்வத்தை வெள்ளையர்கள் கவர்ந்து சென்றனர். அவ்வகையில், 1941ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து வெள்ளி, இரும்பு தாது, தேயிலை ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு எஸ்.எஸ்.கய்ர்சோப்பா என்ற சரக்கு கப்பல் இங்கிலாந்து நோக்கி சென்றது. அட்லாண்டிக் கடல் பகுதியில் 17-2-1941 அன்று சென்றபோது எரிபொருள் தீர்ந்த நிலையில் கப்பல் கடற்புயலில் சிக்கி 20 நிமிடங்களுக்குள் மூழ்கியது. சுமார் 400 அடி நீளம் கொண்ட இந்த…

    • 11 replies
    • 1k views
  16. காஷ்மீரில் வசிக்கும், பிரோஜ்-உன்-திர்-மீர், உலகிலேயே மிகவும் வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், விரைவில் இடம் பெறவுள்ளார். கடந்த, 1872 மார்ச், 10ம் தேதி பிறந்த, இவரின் தற்போதைய வயது, 141. மிகவும் குறைந்த பார்வைத் திறன் கொண்ட மீர், தன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், தன் வேலைகளை செய்கிறார். தன்னுடைய வாழ்க்கை குறித்து, காஷ்மீர் லைப் பத்திரிகையில், அவர் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடையும் முன், கராச்சியில், என் தந்தையுடன் இணைந்து, பழங்கள் மற்றும் அக்ரூட் கொட்டைகள் விற்பனை செய்தேன். 1890ல், முதல் திருமணம் நடைபெற்றது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் மனைவி இறந்துவிட்டார். அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்படவில்லை. முஷாபராபாத்தில…

    • 2 replies
    • 330 views
  17. கரூர் மாவட்டம், ஒட்டையூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், வயது-50. இவர் அந்தப்பகுதியில், ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் தன்னுடைய ஜாதகத்தை பார்க்கப்போன கரூர் ராவலூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி மணி என்ற வளர்மதி, வயது-45, இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதையடுத்து, கணவனை விட்டு பிரிந்து வந்த வளர்மதி, ரங்கநாதனுடன், நாமக்கல் மாவட்டம், மோக னூரை அடுத்த ஒருவந்தூரில் பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்கள், கடந்த ஜூன், 26-ம் தேதி, அவர்களுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து, மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., சுகுமாரன் முன்னிலையில…

  18. http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

  19. மாஸ்கோ: வயாகரா மாத்திரைகளை பயன் படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர். 155 தங்கப் பதக்கங்களை வென்று, ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்த போதும், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் விமர்சித்தன. இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் தலைமை தாங்கிப் பே…

  20. சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது. இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழ…

  21. திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார…

    • 26 replies
    • 1.9k views
  22. ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் கழிவறைகளை சுத்தம் செய்தும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பச்சாமா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி ரஜினி பன்சால்(38). அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு கன மழை பெய்தால் தாங்காது. பஞ்சாயத்து தலைவியாகிய அவர் பிழைப்பு நடத்த உள்ளூரில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்கிறார். மேலும் கிராமத்தில் பிச்சையும் எடுக்கிறார். அவருக்கு வர வேண்டிய சம்பளம் பல மாதங்களாக வரவில்லையாம். அவரது மூத்த மகன் அனில் எழுதப்படிக்கத் தெரியாத ரஜினிக்கு அவரது பெயரை எழுத கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து அ…

  23. யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949

  24. இலங்கையில் குடும்ப சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார். பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. 1966ல், கண்ணையா இறக்க, செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரண…

  25. http://www.youtube.com/watch?v=gK6KxAqzU3U

    • 0 replies
    • 492 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.