செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
து நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரி சகோதரியொருவரை அடையாளம் கண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இரு சகோதரிகளும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயர்தரப் பரீட்சையின் நடனம் பாடப் பரீட்சையின் போதே இவர்கள் ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78099-20…
-
- 1 reply
- 336 views
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது. இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது சான்றிதழில், ''2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான ஆந்திராவின் தாபேஸ்…
-
- 1 reply
- 336 views
-
-
புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..! (காணொளி இணைப்பு) தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்த…
-
- 0 replies
- 336 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன் டாலரை பங்கிட்டுக்கொள்ள விரும்பிய அந்த சகோதரிகளுக்கு அவர்களது தந்தை எழுதி வைத்திருந்த உயிலில் அதிர்ச்சி காத்திருந்தது. விக்டோரியா லபோஸ்(17) மற்றும் மர்லினா லபோஸ்(21) என்ற அந்தப் பெண்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பின் அல்லது அவர்களது தாயாரை நன்கு கவனித்துக் கொண்டால் மட்டுமே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என்று அவர்களின் தந்தை அவரது இறப்பிற்கு ஒன்பது மாதங்கள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். இன்னொரு விதத்தில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றால், ஏழு…
-
- 0 replies
- 336 views
-
-
மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பதிவு: ஜூலை 09, 2020 14:39 PM மதுரை, மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ண…
-
- 1 reply
- 336 views
-
-
திருமணமாகாத கில்லாடி ஜோடி சிக்கியது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார். கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 336 views
-
-
இளசுகள் தாலிக் கட்டுவதற்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்தார் ஆப்பு. August 09, 20152:33 pm கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார். இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருமண வயதை எட்டாத சிறுமியொருவர் இவ்வ…
-
- 0 replies
- 335 views
-
-
அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர…
-
- 1 reply
- 335 views
- 1 follower
-
-
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூதாட்டி ஒருவர் பெயர்பெற்றுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 108 வயதான பாத்திமா நெக்ரினி என்ற மூதாட்டியே இவராவார். மிலனில் உள்ள அன்னி அஸ்ஸுரி சான் ஃபாஸ்டினோ பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதன்போதே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தப்பிய சில மாதங்களுக்குப் பிறகு, கொவிட்-19 தடுப்பூசி பெற்ற உலகின் மிகப் பழமையான நபர்களில் ஒருவராக இத்தாலிய நூற்றாண்டு வீரர் ஒருவர் ஆனார் என்று அவரது ஓய்வூதிய இல்லம் தெரிவி…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார். ஆனால், பிரசவ தேதி நெருங்கும் போது பெரும் துயரம் அவரை ஆட்கொண்டது. காரணம் மற்ற பெண்களால், பிரசவம் முடிந்து தன் குழந்தையை பார்க்க முடியும், பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார். இப்படி ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக குழந்தையைப் …
-
- 0 replies
- 335 views
-
-
யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3, 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1358479
-
- 0 replies
- 335 views
-
-
-
சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார். தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார். மகிந்தவி…
-
- 0 replies
- 334 views
-
-
பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்ச…
-
- 0 replies
- 334 views
-
-
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…
-
- 0 replies
- 334 views
-
-
மூக்கின் உதவியோடு காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பது எப்படி.? ஐரோப்பியர்களின் மூக்குகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வருடிய வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் பணியை 3 ஆண்டு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது ஒரு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த கலைஞர் லியனார்டோ டா வின்சி. இவரது ஓவியங்களில் மிகுந்த புகழ் பெற்றது புன்முறுவல் பூக்கும் 'மோனாலிசா' என்ற பெண் ஓவியம். அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ள இது போன்ற பழங்கால ஓவியங்களைப் பார்ப்பதற்கென்றே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். ஒரு கற்பனை செய்து பாருங்கள். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 16ம் நூற்றாண்டை…
-
- 0 replies
- 334 views
-
-
சுவிட்ஸர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சியில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007-ல் கசியவிட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வங்கியில் 2006-2007 காலகட்டத்தில், கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த புலனாய்வு மூலம், தனிநபர் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி அந்த வங்…
-
- 1 reply
- 334 views
-
-
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் அப்போது நினைக்கவிலை. அவருக்கு ஏற்பட்டது ‘ஏரோடாக்சிக் சிண்ட்ரோம்’ என்ற நோய். தொடக்கத்தில் இந்த நோயின் பாதிப்பால் கை விரல்கள் மற்றும் கால்களில் உணர்ச்ச…
-
- 1 reply
- 334 views
-
-
விஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பை கையில் வைத்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றிய பாதிரியாரை பாம்பு கடித்தும் முறையான வைத்திய சிகிச்சையை மறுத்தமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 125 தேவாலயங்களில் கடவுள் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வித்திடும் நோக்கில் பாதிரியார்கள் விஷப்பாம்பை கையில் வைத்து சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜேமி கோட்ஸ் என்ற பாதிரியார் பாம்பை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய சந்தர்ப்பத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது. இருந்தும் ஜேமி கோட்ஸ் வைத்திய சிகிச்சையை மறுத்து மலையுச்சியி…
-
- 0 replies
- 333 views
-
-
ரோமானியாவில்.... அறுவை சிகிச்சையின் போது, நோயாளி மீது பற்றி ஏரிந்த.. தீ! ரோமானியாவில் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரியாஸ்கா அவசர சிகிச்சை மருத்துவமனையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்னொருவருக்கு, அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன்போது மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டு பின்னர், அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்…
-
- 1 reply
- 333 views
-
-
டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயோர்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இணையதளமானது அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கம் ஆகும். அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…
-
- 0 replies
- 333 views
-
-
கையடக்கதொலைபேசியால் வந்த வினை : திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்த கணவர்.! அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஹொட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் கையடக்கதொலைபேசியில் (சாட்) உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. கையடக்கதொலைபேசியில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த த…
-
- 0 replies
- 333 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு முக்கியமான மாதங்களாக இருக்கப்போகின்றன. அதாவது பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இம்முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போது சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையே சிறீலங்கா அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நிரூபிப்பதுபோன்றே சிறீலங்கா அரசினதும் அதனைச் சார்ந்த அமைச்சுக்களினத…
-
- 1 reply
- 333 views
-
-
நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன் போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்திய…
-
- 0 replies
- 333 views
-